Tuesday, 1 July 2014

ஸூராவின் பெயர்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

எண்ஸூராவின் பெயர்மக்கீ-
மதனீ
வசனங்கள்
1அல்ஃபாத்திஹா(தோற்றுவாய்)மக்கீ7
2ஸூரத்துல் பகரா 
(பசு மாடு)
மதனீ286
3ஸூரத்துல்ஆல இம்ரான் 
(இம்ரானின் சந்ததிகள்)
மதனீ200
4ஸூரத்துன்னிஸாவு
(பெண்கள்)
மதனீ176
5ஸூரத்துல் மாயிதா
(ஆகாரம்) (உணவு மரவை)
மதனீ
120
6ஸூரத்துல் அன்ஆம்
(ஆடு, மாடு, ஒட்டகம்)
மக்கீ165
7ஸூரத்துல் அஃராஃப்
(சிகரங்கள்)
மக்கீ
206
8ஸூரத்துல் அன்ஃபால்
(போரில் கிடைத்த வெற்றிப்பொருள்கள்)
மதனீ
75
9ஸூரத்துத் தவ்பா(மனவருந்தி மன்னிப்பு தேடுதல்)
மதனீ
129
10ஸூரத்து யூனுஸ் (நபி)
மக்கீ
109
11ஸூரத்து ஹூது
மக்கீ
123
12ஸூரத்து யூஸுஃப்
மக்கீ
111
13ஸூரத்துர் ரஃது (இடி)
மதனீ
43
14ஸூரத்து இப்ராஹீம்;
மக்கீ
52
15ஸூரத்துல் ஹிஜ்ர்(மலைப்பாறை)மக்கீ99
16ஸூரத்துந் நஹ்ல்
(தேனி)
மக்கீ
மதனீ
128
17பனீ இஸ்ராயீல்
(இஸ்ராயீலின் சந்ததிகள்)
மக்கீ111
18ஸூரத்துல் கஹ்ஃபு (குகை)மக்கீ110
19ஸூரத்து மர்யம்மக்கீ98
20ஸூரத்து தாஹாமக்கீ135
21ஸூரத்துல் அன்பியா(நபிமார்கள்)மக்கீ112
22ஸூரத்துல் ஹஜ்மதனீ78
23ஸூரத்துல் முஃமினூன்(விசுவாசிகள்)மக்கீ118
24ஸூரத்துந் நூர்
(பேரொளி)
மதனீ64
25ஸூரத்துல் ஃபுர்ஃகான்
(பிரித்தறிவித்தல்)
மக்கீ77
26ஸூரத்துஷ்ஷுஃரா
(கவிஞர்கள்)
மக்கீ227
27ஸூரத்துந் நம்லி(எறும்புகள்)மக்கீ93
28ஸூரத்துல் கஸஸ்(வரலாறுகள்)மக்கீ88
29ஸூரத்துல் அன்கபூத்
(சிலந்திப் பூச்சி)
மக்கீ69
30ஸூரத்துர் ரூம் 
(ரோமானியப் பேரரசு)
மக்கீ60
31ஸூரத்து லுக்மான்மக்கீ34
32ஸூரத்துஸ் ஸஜ்தா
(சிரம் பணிதல்)
மக்கீ
30
33ஸூரத்துல் அஹ்ஜாப 
(சதிகார அணியினர்)
மதனீ73
34ஸூரத்துஸ் ஸபாமக்கீ54
35ஸூரத்து ஃபாத்திர்
(படைப்பவன்)
மக்கீ45
36ஸூரத்து யாஸீன்மக்கீ83
37ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்
(அணிவகுப்புகள்)
மக்கீ182
38ஸூரத்து ஸாத்மக்கீ88
39ஸூரத்துஜ்ஜுமர் 
(கூட்டங்கள்)
மக்கீ75
40ஸூரத்துல் முஃமின்
(ஈமான் கொண்டவர்)
மக்கீ85
41ஸூரத்து ஹாமீம் ஸஜ்தாமக்கீ54
42ஸூரத்துஷ் ஷூறா 
(கலந்தாலோசித்தல்)
மக்கீ53
43ஸூரத்துஜ் ஜுக்ருஃப் 
(பொன் அலங்காரம்)
மக்கீ89
44ஸூரத்துத் துகான் (புகை)மக்கீ59
45ஸூரத்துல் ஜாஸியா(முழந்தாளிடுதல்)மக்கீ37
46ஸூரத்துல் அஹ்காஃப்
(மணல் திட்டுகள்)
மக்கீ35
47ஸூரத்து முஹம்மது(ஸல்)மதனீ38
48ஸூரத்துல் ஃபத்ஹ் 
(வெற்றி)
மதனீ29
49ஸூரத்துல் ஹுஜுராத்(அறைகள்)மதனீ18
50ஸூரத்து ஃகாஃப்மக்கீ45
51ஸூரத்துத் தாரியாத் 
(புழுதியைக் கிளப்பும் காற்றுகள்)
மக்கீ60
52ஸூரத்துத் தூர் (மலை)மக்கீ49
53ஸூரத்துந்நஜ்ம் 
(நட்சத்திரம்)
மக்கீ
62
54ஸூரத்துல் கமர் (சந்திரன்)மக்கீ55
55ஸூரத்துர் ரஹ்மான்(அளவற்ற அருளாளன்)மதனீ78
56ஸூரத்துல் வாகிஆ 
(மாபெரும் நிகழ்ச்சி)
மக்கீ96
57ஸூரத்துல் ஹதீத்(இரும்பு)மதனீ29
58ஸூரத்துல் முஜாதலா
(தர்க்கித்தல்)
மதனீ22
59ஸூரத்துல் ஹஷ்ர் 
(ஒன்று கூட்டுதல்)
மதனீ24
60ஸூரத்துல் மும்தஹினா 
(பரிசோதித்தல்)
மதனீ
13
61ஸூரத்துஸ் ஸஃப்ஃபு 
(அணிவகுப்பு)
மதனீ
14
62ஸூரத்துல் ஜுமுஆ 
(வெள்ளிக் கிழமை)
மதனீ11
63ஸூரத்துல் முனாஃபிஃகூன் 
(நயவஞ்சகர்கள்)
மதனீ11
64ஸூரத்துத் தஃகாபுன் 
(நஷ்டம்)
மதனீ18
65ஸூரத்துத் தலாஃக் 
(விவாகரத்து)
மதனீ
12
66ஸூரத்துத் தஹ்ரீம் 
(விலக்குதல்)
மதனீ
12
67ஸூரத்துல் முல்க் (ஆட்சி)மக்கீ30
68ஸூரத்துல் கலம்;
(எழுதுகோல்)
மக்கீ
52
69ஸூரத்துல் ஹாஃக்ஃகா 
(நிச்சயமானது)
மக்கீ52
70ஸூரத்துல் மஆரிஜ் 
(உயர்வழிகள்)
மக்கீ
44
71ஸூரத்து நூஹ்மக்கீ28
72ஸூரத்துல் ஜின்னு (ஜின்கள்)
மக்கீ
28
73ஸூரத்துல் முஸ்ஸம்மில் 
(போர்வை போர்த்தியவர்)
மக்கீ
20
74ஸூரத்துல் முத்தஸ்ஸிர் 
(போர்த்திக்கொண்டிருப்பவர்)
மக்கீ56
75ஸூரத்துல் கியாமா 
(மறுமை நாள்)
மக்கீ40
76ஸூரத்துத் தஹ்ர் (காலம்)மதனீ31
77ஸூரத்துல் முர்ஸலாத்
(அனுப்பப்படுபவை)
மக்கீ
50
78ஸூரத்துந் நபா 
(பெரும் செய்தி)
மக்கீ40
79ஸூரத்துந் நாஜிஆத்(பறிப்பவர்கள்)
மக்கீ
46
80ஸூரத்து அபஸ 
(கடு கடுத்தார்)
மக்கீ42
81ஸூரத்துத் தக்வீர்(சுருட்டுதல்)மக்கீ29
82ஸூரத்துல் இன்ஃபிதார்(வெடித்துப் போதல்)மக்கீ19
83ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்(அளவு நிறுவையில் மோசம் செய்தல்)மக்கீ36
84ஸூரத்துல் இன்ஷிகாக்(பிளந்து போதல்)
மக்கீ
25
85ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்)மக்கீ22
86ஸூரத்துத் தாரிஃக்(விடிவெள்ளி)மக்கீ17
87ஸூரத்துல் அஃலா 
(மிக்க மேலானவன்)
மக்கீ19
88ஸூரத்துல் காஷியா 
(மூடிக் கொள்ளுதல்)
மக்கீ26
89ஸூரத்துல் ஃபஜ்ரி(விடியற்காலை)மக்கீ30
90ஸூரத்துல் பலத்(நகரம்)மக்கீ20
91ஸூரத்துஷ் ஷம்ஸ் (சூரியன்)மக்கீ15
92ஸூரத்துல் லைல்(இரவு)மக்கீ21
93ஸூரத்துள் ளுஹா (முற்பகல்)மக்கீ11
94ஸூரத்து அலம் நஷ்ரஹ்(விரிவாக்கல்)
மக்கீ
8
95ஸூரத்துத் தீன் (அத்தி)மக்கீ8
96ஸூரத்துல் அலஃக்(இரத்தக்கட்டி)  
மக்கீ
19
97ஸூரத்துல் கத்ரி(கண்ணியமிக்க இரவு)மக்கீ5
98ஸூரத்துல் பய்யினா(தெளிவான ஆதாரம்)மதனீ8
99ஸூரத்துஜ் ஜில்ஜால்(அதிர்ச்சி)மக்கீ8
100ஸூரத்துல் ஆதியாத்தி(வேகமாகச் செல்லுபவை)மக்கீ11
101ஸூரத்து அல்காரிஆ(திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி)மக்கீ11
102ஸூரத்துத் தகாஸுர்(பேராசை)மக்கீ8
103ஸூரத்துல் அஸ்ரி (காலம்)மக்கீ3
104ஸூரத்துல் ஹுமஜா(புறங்கூறல்)மக்கீ9
105ஸூரத்துல் ஃபீல் (யானை)மக்கீ5
106ஸூரத்து குறைஷின்(குறைஷிகள்)மக்கீ4
107ஸூரத்துல் மாஊன் 
(அற்பப் பொருட்கள்)
மக்கீ
7
108ஸூரத்துல் கவ்ஸர் 
(மிகுந்த நன்மைகள்)
மக்கீ3
109ஸூரத்துல் காஃபிரூன்(காஃபிர்கள்)மக்கீ6
110ஸூரத்துந் நஸ்ர் (உதவி)மதனீ3
111ஸூரத்துல் லஹப்(ஜுவாலை)மக்கீ5
112ஸூரத்துல் இஃக்லாஸ்(ஏகத்துவம்)மக்கீ4
113ஸூரத்துல் ஃபலக்(அதிகாலை)மக்கீ5
114ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்)மக்கீ6

http://www.tamililquran.com/suraindex.asp 

Monday, 30 June 2014

அல்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

திருக்குர்ஆனை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சுயமாகத் தயாரிக்கவில்லை; இறைவன்தான் வழங்கினான் என்றால் எந்த வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்ற கேள்விக்கான விடையையும் அறிந்து கொள்வது அவசியம்.

நபிகள் நாயகத்துக்கு முன் ஏராளமான இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டனர். இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் வரிசையில் இறுதியானவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்பது தான் இஸ்லாமிய நம்பிக்கை.

முதல் மனிதராகிய ஆதம் முதல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வரை எத்தனை தூதர்கள் வந்துள்ளனர் என்று குர்ஆன் கூறாவிட்டாலும் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டதாகக் கூறுகிறது.

நபிகள் நாயகத்துக்கு முன் அனுப்பப்பட்ட தூதர்கள் குறிப்பிட்ட மொழியினருக்கோ, குலத்தினருக்கோ, சமுதாயத்தினருக்கோ அனுப்பப்பட்டனர். அவரவர் மொழியில் மக்களை நல்வழிப்படுத்த அவர்களுக்கு இறைவன் வழங்கிய செய்தியே வேதம் எனப்படும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன் இருந்த எல்லா மொழிகளிலும் இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன் 14:4.

இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்களில் இறுதியானவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அவர்களுக்குப் பின் உலகம் அழியும் காலம் வரை இறைத் தூதர்கள் அனுப்பப்பட மாட்டார்கள். (பார்க்க அல்குர்ஆன் 4:794:1707:1589:3310:5710:10814:5221:10722:4925:133:4034:2862:3)

மற்ற இறைத் தூதர்கள் போல் குறிப்பிட்ட சமுதாயத்துக்கோ, குறிப்பிட்ட மொழியினருக்கோ அன்றி அகில உலகுக்கும் இறைத் தூதராக அனுப்பப்பட்டவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.

அவர்களுக்கு வழங்கப்பட்ட குர்ஆன் எனும் வேதத்துக்குப் பின் உலகில் வேறு வேதம் ஏதும் அருளப்படாது என்பதால் குர்ஆன் இறுதி வேதம் எனப்படுகிறது.

உலகம் முழுவதற்கும் வழிகாட்ட அருளப்படும் வேதம் அரபு மொழியில் ஏன் அருளப்பட வேண்டும் என்று சிலர் கருதலாம்.

அரபு மொழிதான் தேவமொழி என்பதோ அதுதான் உலகிலேயே உயர்ந்த மொழி என்பதோ இதற்குக் காரணம் அல்ல. எல்லா மொழிகளும் சமமானவை என்றே இஸ்லாம் கூறுகிறது மொழியின் அடிப்படையில் எவரும் உயர்வு தாழ்வு கற்பிக்கக் கூடாது என்பதும் இஸ்லாத்தின் கொள்கை.

இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும். பல்வேறு மொழி பேசும் மக்களுக்கு ஒரு வழிகாட்டு நெறியைக் கொடுத்து ஒரு வழிகாட்டியை அனுப்பும் போது ஏதாவது ஒரு மொழியில் தான் கொடுத்தனுப்ப முடியும் எந்த மொழியில் அந்த வழிகாட்டு நெறி இருந்நாலும் மற்ற மொழியைப் பேசுவோர் இது குறித்து கேள்வி எழுப்புவார்கள்.

யாராலும் எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாதவாறு இதற்கு ஒரு ஏற்பாடு செய்ய முடியாது. அரபு மொழிக்குப் பதிலாக தமிழ் மொழியில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டிருந்தால் இதே கேள்வியை மற்ற மொழி பேசும் மக்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள்.

எனவே உலக ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு செய்யப்படும் காரியங்களில் மொழி உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து உலக ஒருமைப்பாட்டைச் சிதைத்து விடக் கூடாது.

நாம் வாழ்கின்ற இந்திய நாட்டில் பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் நமது நாட்டிற்கு ஒரு தேசிய கீதத்தை வங்காள மொழியில் உருவாக்கி அதை அனைத்து மொழியினரும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு ஏற்றுக் கொண்டிருப்பதால் இந்தியாவிலேயே முதன்மையான மொழி வங்காள மொழி தான் என்றோ மற்ற மொழிகள் தரம் குறைந்தவை என்றோ ஆகாது.

நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக மொழி உணர்வை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, அந்நிய மொழியை ஏற்றுக் கொள்ளும்போது உலக ஒருமைப்பாட்டுக்காகவும் உலக மக்கள் அனைவரும் ஒரே நல்வழியை நோக்கி திரும்ப வேண்டும் என்பதற்காகவும் மிகச் சில விசயங்களில் மொழி உணர்வை ஒதுக்கி வைப்பதால் மனிதகுலத்துக்கு எந்தக் கேடும் ஏற்படாது மாறாக உலகளாவிய ஒற்றுமை எனும் மாபெரும் நன்மை தான் ஏற்படும்.

ஏதாவது ஒரு மொழியில் தான் உலகளாவிய ஒரு தலைவரை அனுப்ப முடியும் என்ற அடிப்படையில் தான் நபிகள் நாயத்திற்குத் தெரிந்த அவர்களுடைய தாய் மொழியான அரபு மொழியில் குர்ஆன் அருளப்பட்டது. உலகிலேலே அரபு மொழி தான் சிறந்த மொழி என்பதற்காக அரபு மொழியில் குர்ஆன் அருளப்படவில்லை.

குர்ஆன் எவ்வாறு அருளப்பட்டது?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போது எவ்வாறு இறைத் தூதராக நியமிக்கப்பட்டார்கள்? என்பதையும் எவ்வாறு குர்ஆன் அருளப்பட்டது என்பதையும் நாம்தெரிந்து கொள்வது அதிகம் பயனளிக்கும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இயற்பெயர் முஹம்மத். இவர்கள் இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மக்கா எனும் நகரத்தில் கி.பி. 570ம் ஆண்டு பிறந்தார்கள்.

தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தையை இழந்து, சிறு வயதிலேயே தாயையும் இழந்தார்கள். பெற்றோரை இழந்த பின் அவர்களின் தந்தை வழி பாட்டனார் அப்துல் முத்தலிப் என்பார் தமது பொறுப்பில் அவர்களை எடுத்து வளர்த்து வந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு அவர்களின் பெரிய தந்தை அபூதாலிபுடைய பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வளர்ந்து இளமைப் பருவத்தை அடைந்தார்கள்.

சிறுவராக இருந்த போது ஆடு மேய்த்திருக்கிறார்கள். ஓரளவு விபரம் தெரியவந்த பிறகு தமது பெரிய தந்தையோடு சேர்ந்து வியாபாரமும் செய்திருக்கிறார்கள்.
இந்த வியாபாரத்தின் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல வெளியூர் பயணங்களை மேற்கொண்டார்கள்.

25-வது வயதில் தம்மை விட மூத்தவரான கதீஜா என்ற விதவையை மணந்தார்கள். அவரும் அன்றைய சமுதாயத்தில் பெரிய வசதி படைத்தவராக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது 25ம் வயதிலேயே மிகவும் வசதி படைத்தவராக மாறினார்கள்.

குர்ஆன் அருளப்பட்ட காலகட்டம் 
 
  • நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள் பல கடவுள் நம்பிக்கையுடையோராக இருந்தார்கள். ஏராளமான மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்தனர்!
  • கடவுளை நிர்வணமாக வழிபட்டனர்!
  • பெண் குழந்தைகள் பிறப்பதைக் கேவலமாகக் கருதியதுடன் பெண் குழந்தை பிறந்தால் அதை உயிருடன் புதைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்!
  • குடம் குடமாக மது பானங்கள் அருந்தினார்கள்!
  • காமக் களியாட்டத்தில் மூழ்கித் திளைத்தனர்!
  • பெண்களை ஆடு மாடுகளைப் போன்று கருதினார்கள்!
  • தந்தை இறந்துவிட்டால் தந்தையின் மனைவியை மகன் பயன்படுத்திக் கொள்வது சர்வ சாதராணமாக இருந்தது!
  • சாதி வேற்றுமையும் தலை விரித்தாடியது!
  • நபிகள் நாயகம் எந்தக் குலத்தில் பிறந்தார்களோ அந்தக் குலம் - குறைஷிக் குலம் - மிகவும் உயர்ந்த குலம் எனவும் மற்றவர்கள் அற்பமானவர்கள் எனவும் விதி செய்திருந்தனர்!
  • அரபு மொழிதான் ஒரே மொழி என்றும், மற்ற மொழி பேசுவோர் அஜமிகள்(கால்நடைகள்) என்று கூறும் அளவுக்கு அவர்களிடம் அரபு மொழி வெறி மிகைத்திருந்தது.
  • மனித உயிர்களைக் கொன்று குவிப்பது மிகச் சிறிய குற்றமாகக் கூட அவர்களுக்குத் தோன்றவில்லை. அற்பமான சண்டைகளுக்காகக் கூட கொலை செய்வார்கள்.!
  • தமது குடும்பத்தில் ஒருவர் கொல்லப்பட்டால் கொலையாளியைப் பழி வாங்காது விட மாட்டார்கள். அவரைத் தம்மால் பழிவாங்க முடியாவிட்டால் தமது வாரிசுகளுக்கு வலியுறுத்திச் செய்வார்கள். பத்து தலைமுறைக்குப் பிறகாவது கொலையாளியின் குடும்பத்தில் ஒருவனைக் கொன்று கணக்குத் தீர்ப்பார்கள்.
இத்தகைய நிலையைக் கண்டு மனம் வெறுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சமுதாயத்தின் நடவடிக்கைகள் சரியானவை அல்ல என்று திட்டவட்டமாக உணர்ந்தார்கள்.

எனவே தமது நாற்பதாம் வயதில் மக்காவிற்கு வெளியே உள்ள ‘ஹிரா’ எனும் குகைக்குச் சென்று தனிமையில் சிந்திப்பதை வழக்கமாகக் கொள்ளலானார்கள்.

பல நாட்களுக்குத் தேவையான உணவைத் தயார் செய்து கொண்டு குகையிலேயே தங்கி விடுவார்கள். உணவு முடிந்ததும் வீட்டுக்கு வந்து உணவு தயாரித்துக் கொண்டு மறுபடியும் குகைக்குச் சென்று விடுவார்கள்.

இவ்வாறு குகையில் இருந்த போது தான் வானத்தையும், பூமியையும் தொட்டுக் கொண்டிருக்கும் அளவுக்கு பிரம்மாண்டமான தோற்றத்தில் ஒருவர் நிற்பதைக் காண்டார்கள்.

அவர் நபிகள் நாயகத்தை இறுகக் கட்டியணைத்து ‘ஓது’ எனக் கூறிய போது தமக்கு ஓதத் தெரியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மீண்டும் அவர் ‘ஓது’ எனக் கூற அப்போதும் தெரியாது என்று பதிலளித்தார்கள். பின்னர் அவர் நபிகள் நாயகத்தை இறுகக் கட்டியணைத்து “படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக” என்று தொடங்கும் சில வார்த்தைகளைக் கூறினார். (இது 96வது அத்தியாயத்தில் முதல் ஐந்து வசனங்களாக இடம் பெற்றுள்ளது. பார்க்க அல்குர்ஆன் 96:1-5)

இப்படித் தான் நபிகள் நாயகம் இறைத் தூதராக நியமிக்கப்பட்டு முதல் செய்தியும் அருளப்பட்டது. ஆனாலும் நபிகள் நாயகம் அவர்கள் அதிர்ச்சியடைந்து அச்சம் கொண்டார்கள். தமது மனைவியிடம் வந்து இதைக் கூறினார்கள்.

“இறைவன் உங்களைக் கைவிட மாட்டான்; மக்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள்; ஏழைகளுக்கு வாரி வழங்குகிறீர்கள்; உறவினர்களை உபசரிக்கிறீர்கள்; எனவே அல்லாஹ் உங்களைக் கைவிட மாட்டான்” என்றெல்லாம் அவர்களின் மனைவி கதீஜா அவர்கள் ஆறுதல் படுத்தினார்கள்.

ஆயினும் தமது ஆறுதல் போதிய பயனளிக்காததைக் கண்டு தமது உறவினர் வரகாவிடம் நபிகள் நாயகத்தை அழைத்துச் சென்றார்கள். இவர் முந்தைய வேதங்களைக் கற்றறிந்து, கிறித்தவ மார்க்கத்தையும் தழுவியிருந்தார்.

“நீர் இறைவனின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளீர்” உம்மை உமது சமுதாயத்தினர் ஊரை விட்டே வெளியேற்றும் நிலையை அடைவீர்; ஏனெனில் இறைத் தூதர்கள் பிரச்சாரம் செய்யும் போது இது தான் நடந்துள்ளது என்றெல்லாம் அவர் கூறி நம்பிக்கையூட்டினார். (நூல்: புகாரி-2)

இப்படி ஆரம்பித்த இறைச் செய்தியின் வருகை சிறிது சிறிதாக சந்தர்ப்பத்துக்கு ஏற்ப 23 ஆண்டுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. 23 ஆண்டுகளில் சிறிது சிறிதாக அருளப்பட்ட இறைச் செய்தியின் தொகுப்பே திருக்குர்ஆன்.

ரமலானை வரவேற்போம் நிகழ்ச்சியில் சகோதரர் A.S.இப்ராஹிம் அவர்களின் உரை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் பரமக்குடி A.S.இப்ராஹிம் அவர்கள் நபிவழியை பின்பற்றுவோம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்,
நபி [ஸல்] அவர்களை நபித் தோழர்கள் எவ்வாறு பின் பற்றினார்களோ அதைபோன்று நாமும் பின்பற்ற வேண்டும் என்றும், நபி [ஸல்] அவர்களின் வழி நடந்தால் நரகமில்லை என்றும் தனது உரையில் சகோதரர் இப்ராஹிம் அவர்கள் உபதேசம் செய்தார்,

Please press button   ctrl+click 

Sunday, 29 June 2014

இறை அடியார்களின் பண்புகளும், அவர்களுக்கு கிடைக்க இருக்கும் சிறப்புகளும்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா) முற்பட்டால்ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.(அல் குர் ஆன் 25:63)

 இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள்.(அல் குர் ஆன் 25:64)

எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்என்று கூறுவார்கள்.(அல் குர் ஆன் 25:65)

 நிச்சயமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும்.(அல் குர் ஆன் 25:66)

இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.(அல் குர் ஆன் 25:67)

அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் - ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.(அல் குர் ஆன் 25:68)

கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.(அல் குர் ஆன் 25:69)

ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.(அல் குர் ஆன் 25:70)

இன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியவராவார்.(அல் குர் ஆன் 25:71)

அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.
(அல் குர் ஆன் 25:72)

இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள்.) (அல் குர் ஆன் 25:73)
மேலும் அவர்கள்: “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள்.(அல் குர் ஆன் 25:74)

பொறுமையுடனிருந்த காரணத்தால், இவர்களுக்கு(ச் சுவனபதியில்) உன்னதமான மாளிகை நற்கூலியாக அளிக்கப்படும்; வாழ்த்தும், ஸலாமும் கொண்டு அவர்கள் எதிர்கொண்டழைக்கப் படுவார்கள்.(அல் குர் ஆன் 25:75)

அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்; அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் அழகிய இடமாகும்.(அல் குர் ஆன் 25:76)

குர் ஆனை கற்றுக் கொள்ள அறிய வாய்ப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தமுமுக துபாய் மண்டலத்தின் சார்பாக திருக் குர் ஆனை கற்றுக் கொடுக்கும் வகுப்புகள் வாரம் தோறும் சனி ஞாயிறு திங்கள் ஆகிய நாள்களில் இரவு 8:30 மணியளவில் ஏற்பாடு செய்யப் பட்டு நடைபெற்று வருகிறது,திருக்குரானை கற்றுக் கொள்ள விரும்பும் சகோதரர்கள் வகுப்பிலே கலந்துக் கொள்ளலாம்,
வயது வரம்பு கிடையாது
(தகுதி - இறைவேதத்தை கற்றுக் கொள்ளும் ஆர்வம் மட்டுமே)
நீங்கள் தயாரா?
அன்புடன்
முஹைதீன்
0503762170, 0503792167,0509431980.