Sunday, 3 April 2011

ரயிலில் தவறவிட்ட 30 ஆயிரம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தார்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கீழக்கரை இளைஞருக்கு பாராட்டு!!

கீழக்கரை பிப்.14. கீழக்கரை பச்சிலை தெருவை சேர்ந்தவர் சித்தீக் ரஹ்மான்(வயது 34) இவர் ரயிலில் சென்னையிலிருந்து குடும்பத்துடன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார் . ரயில் பரமக்குடியை கடந்த சிறிது நேரத்தில், ரயிலின் நடைபாதையில் பர்ஸ் ஒன்று அநாதையாக கிடந்தது. பர்சை கண்டெடுத்த சித்தீக் ரஹ்மான் அதில் ரூ. 30 ஆயிரம்பணமும் , ஓட்டுநர் உரிமமும் இருப்பதை அறிந்தார். உடனடியாக அதில் உள்ள முகவரி மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.பின்னர் அது இளையாங்குடியை சேர்ந்த கருப்பசாமி(வயது 33) என்பவரின் பர்ஸ் என்பதும்,அவர் சென்னையில் இருந்து பரமக்குடியில் இறங்கும் போது பர்சை தவற விட்டதாகவும்தெரிய வந்தது .

அன்றே கீழக்கரைக்கு தனது உறவினருடன் வந்த கருப்பசாமி சித்தீக் ரஹ்மான் வீட்டிற்க்கு சென்று கண்ணீர் மல்க பணத்தை பெற்றுக் கொண்டார்.
பரமக்குடி ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரை கருப்பசாமி வாபஸ் பெற்றார்.
சித்திக்கிற்க்கு நன்றி தெரிவித்த கருப்பசாமி கூறியதாவது, நேர்மை தவறாதவர்கள் வாழந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் ஊர் கீழக்கரை என்பதில் சந்தேகமில்லை என்பதை சித்தீக் ரஹ்மான் நிரூபித்து விட்டார்.அவரின் நேர்மை என்னை கண் கலங்க செய்து விட்ட்து என்றார்.


பொதுமக்கள் சித்திக் ரஹ்மானின் நேர்மையான் செயலை பாரட்டினர்

Saturday, 2 April 2011

ஜிமெயில் மோஸன் என்ற புதிய வகை தகவல் தொடர்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
நேற்று முதல் ஜிமெயில் மோஸன் என்ற புதிய வகை தகவல் தொடர்பு அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.
வீடியோ கேமரா பொருத்தப்பட்ட கம்பியுட்டரிலிருந்து சைகையின் மூலம் தகவல் அனுப்பி அதை ஜமெயிலில் உங்கள் பணிகளை தொடரலாம்.
உதராணத்திற்கு ஜிமெயிலில் புதிய இமெயில் அனுப்ப வேண்டும் என்றால் ஒரு கையை எல் வடிவில் காட்டியும் மற்ற கையை தொல்பட்டையிலிருந்து நீட்டி காட்டினால் போதும் கீபோர்டை உபயோகம் செய்யாமல் புதிய மெயில் செய்ய பாக்ஸ் திறந்து கொடுக்கும். இதை போல் நிறைய உள்ளது. வாய்பேச முடியாதவர்கள் பயன்படுத்தும் பொதுவான சைகை பயன்பாடுகளும் இதில் உபயோகம் செய்யலாம். அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் சைன் லாங்க்வேஜ் சைகைகளும் இந்த ஜிமெயில் மோஸன் புரிந்து கொண்டு தேவைகளை செய்து கொடுக்கும்.
முயற்சி செய்து பாருங்கள். மேலும் விபரங்களுக்கு..
http://www.google.com/mail/help/motion.html#utm_source=en-et-na-us&utm_medium=new-features-link&utm_campaign=en

அன்புடன் தோப்புத்துறை அ.முஹம்மது நூர்தீன்

weekend Islamic learning program for children - Dubai

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

Thursday, 31 March 2011

கோட்டார் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நாகர்கோவில், 22/03/2011  நாகர்கோவில் சவுராஷ்டிரா தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(23). இவர் சென்னையில் உள்ள ஒரு சூப்பர் மார்கெட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரும் இடலாக்குடி சந்திதெருவை சேர்ந்த ஷப்னா(23) என்பவரும் கடந்த 3 வருடமாக காதலித்து வந்தனர்.
இந்த விவகாரம் ஷப்னாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. ஷப்னாவிற்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில் காதலர்கள் இருவரும் நேற்று வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் மாலையில் கோட்டார் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இருவரது பெற்றோரையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஷப்னா காதலனுடன் தான் செல்வேன் என ஒரே முடிவில் இருந்தார்.
இதையடுத்து இருவரும் காவல் நிலையத்தில் வைத்தே மாலைமாற்றிக் கொண்டனர். பின்னர் இருவரையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.

வெற்றியின் இரகசியம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

  உலகில் எத்தனையோ பேர் தோன்றி மறைகிறார்கள். ஆனால் அதில் சிலர் மட்டுமே வெற்றி பெற்று பிறந்ததன் பெருமையை அடைகிறார்கள்.
  நம்மில் பலருக்கு வெற்றியை அடைய வேண்டும் என்று ஆசை கொள்கிறோம். ஆனால் ஏன் நம்மால் மட்டும் அடைய முடியவில்லை? பலமுறை முயன்றும் கூட !
  காரணம் நம்மிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மை, எப்பொழுது இந்தத் தாழ்வு மனப்பான்மையை தாழ்த்துகிறோமோ ! அப்போது தான் நாம் வெற்றி வாகையைச் சூட முடியும்.
  தன்னம்பிக்கை என்பது வெற்றி தோல்வி கருதாது தன் மீதும் தான் செய்து கொண்டிருக்கும் செயல்பாட்டின் மீதும் முழுமையாக நம்பிக்கை கொண்டு, தொடங்கிய காரியத்தை முழுமையாக நிறை வேற்றுவது ஆகும்.
  தோல்வியைக் கண்டு அச்சம் கொள்ளாது தான் செய்த செயலைத் தொடர்ந்து செய்து தன்னம்பிக்கையின் மூலம் வெற்றி கண்டவர்களுள் ஒருவர் மாபெரும் தலைவரான ஆப்ரகாம் லிங்கன்.
  இவர் அடையாத தோல்விகளே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்குத் தோல்வி அடைந்தவர். ஆப்ரகாம் லிங்கன் சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து சாதனையின் உச்சியை அடைந்தவர் ஆவார்.
 1831 – வியாபாரத்தில் தோல்வி  
 1832 – சட்டமன்றத் தேர்தலில் தோல்வி
 1833 – மறுபடியும் வியாபாரத்தில் தோல்வி
 1835 – காதலியின் மறைவு
 1836 – நரம்பு கோளாறு காரணமாக உடல்நலம் பாதிப்பு
 1838 – சட்ட மன்றத் தலைவர் தேர்தலில் தோல்வி
 1840 – எலக்டர் தேர்தலில் தோல்வி
 1843 – காங்கிரஸ் தேர்தலில் தோல்வி
 1855 – செனட் தேர்தலில் தோல்வி
 1856 – துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் தோல்வி
 1858 – மறுபடியும் சென்ட் தேர்தலில் தோல்வி
  இத்தனை தோல்விகளையும் கண்டு அஞ்சாமல் அடுத்ததாக நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 1860 – ஆம் ஆண்டு அவரின் தன்னம்பிக்கைக்கு பரிசாக அமெரிக்க அதிபர் பதவி கிடைத்தது.
      விடா முயற்சியுடன் கூடிய கடின உழைப்பு
  நாமெல்லாம் அறிந்த மிகப்பெரிய அறிவியல் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன். தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருக்கிறார்.
  அவர் மின்விளக்கை கண்டுபிடிக்கும் போது பலமுறை முயன்றும் தோல்வியைத் தழுவினார். சுமார் ஆயிரம் முறை ஆயிரம் இழைகளை (மின்) பொருத்தினார். ஆனால் அத்துனை முறையிலும் தோல்வியைத் தழுவி இறுதியாக சரியான டங்ஸ்டன் என்னும் இழையைப் பொருத்தி 40 மணி நேரம் எரியும் விளக்கை கண்டறிந்து சாதனை படைத்தார். அந்த நேரத்தில் ஒரு பத்திரிகையாளர் அவரிடம், ’நீங்கள் ஆயிரத்திற்கு மேற்பட்ட இழைகளை பொருத்தி தோல்வி அடைந்த பிறகு இறுதியாக தானே வெற்றி அடைந்தீர்கள்என்றார்.
  அதற்கு எடிசன், ’அப்படியல்ல நண்பரே ! நான் ஆயிரம் பொருள்கள் அதாவது ஆயிரம் இழைகள் இதற்கு பொருந்தாது என்று கண்டு பிடித்தேன்என்று கூறித் தன் தோல்வியையும் தன்னுடைய விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் காரணத்தினால் வெற்றிக் கொண்டார்.
  ஆகவே, நண்பர்களே ! இவ்வாறாகத் தான் தன்னம்பிக்கை விடாமுயற்சியுடன் கூடிய உழைப்பு, கனவு காணும் திறன் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். சரி, இந்த திறன்களை வளர்த்துக் கொண்டால் வெற்றியைப் பெற முடியுமா? என்று நீங்கள் கேட்டால்.. வளர்த்துப் பாருங்கள், தெரியும் உங்களுக்கு நண்பர்களே !
-சு . சாஜாத் ஜுல்கிப்ளி

நன்றி : சமவுரிமை ( டிசம்பர் 2009 )

தவணை முறை தற்கொலை

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கே.எம்.முஹம்மத்

கொடியது கொடியது மதுவின் கேடு - அதில்
மடியுது மடியுது மனிதப் பண்பாடு

பழம்பெரும் பாரதம் ஓர் ஆன்மீக நாடு அதில்
பாழும் மது இங்கு ஆறாய் ஓடுது

தெருவெங்கும் மதுக்கடைகள்
தேசமெங்கும் குற்றசெயல்கள்
மதுவின் கேடால் மனிதன் விலங்கினும் கீழாய்...

அழிவை நோக்கி தலைமுறைகள் பயணம்
இழிவை நோக்கி தேசத்தின் பயணம்

தற்கொலைக்குத் தூண்டுதல் சட்டப்படி குற்றம் - இங்கு
தவணைமுறைத் தற்கொலைக்குத் தூண்டுவதுதான் 
அரசின் வருவாய்த் திட்டம்
அதனால் - 
எந்தக் கட்சி ஆட்சியிலும் எப்போதுமிங்கே
டாஸ்மார்க் மசோதா நிறைவேற
பாஸ்மார்க் ஓட்டு விழும்
குவார்ட்டருக்கு பணம் கொடுத்தால்
'குடி' மக்கள் ஓட்டு விழும்

கொஞ்ச நேர போதைக்கு நஞ்சைக் குடிக்கும்
குடும்பததலைவன் - தன்
நெஞ்சில் கிடக்கும் தாலியை
கண்ணீரில் ஒற்றும் சுமங்கலிகள்

குடிகாரக் கணவன் குடல்வெந்து செத்தபோது
அமங்கலியான ஒருத்தியின் புலம்பல் கேளீர்!

"மதுக்க்டைக்குப்போகாதேன்னு ஒன்ன
மன்றாடித் தடுத்துவந்தேன்

"மார்வாடிக் கடைக்குப் போன தாலியை 
போராடி மீட்டு வந்தேன் 
"இப்போ எம் மார்மேல தாலி இருந்தும்
மச்சான் நீ போயிட்டீயே..,

"எப்பவுமே தாலியில்லாம இருக்கிற ஒரு நேரம்
வருமின்னு நினைச்சுதான்
அப்பப்போ அத அடமானம் வெச்சியோ!"

குழந்தைத்தொழிலை ஒழிப்போம்!
இது அரசின் முழக்கம்

குடிப்பதை நிறுத்தாமல் செத்துப்போகும்
அப்பனின் பிள்ளைகள் படிப்பதை நிறுத்தி
வேலைக்குப் போகும் இதுதான் இங்கே நடைமுறை வழக்கம்

'டாஸ்மார்க்' எனும் சாவுத்திட்டம் - அதன்
வருமானத்தில்தான் இங்கு வாழ்வுத்திட்டம்!

கஜனாவுக்கு சில நூறு கோடிகளை டாஸ்மாக் தருது
மதுவின் தீங்கால் பல நூறு கோடி நாசமாகுது.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு,
சாலை விபத்தில் உயிரிழப்பு
குற்றங்களின் அணிவகுப்பு இத்தனையும் மதுவென்னும் 
சாத்தானின் அன்பளிப்பு

மது குடித்த நண்பா!
குடல்கறி உனக்கு சைடு டிஷ் :
நீ குடித்த மதுவுக்கோ உன் குடலே சைடு டிஷ் !

தலைக்ககவசம் விபத்தின்போது தலையையும் மூளையையும்
சிதறாமல் காக்கும் டாஸ்மாக் சகவாசம்
விபத்தின்றியே மூளையைச் சிதைக்கும்

மனிதனைச் சாகடிக்கும் மரணத்தைவிட
மனிதாபிமானத்தைச் சாகடிக்கும் மதுவே கொடியது
மனிதா உணர்ந்திடு!

  நன்றி;      சமரசம்

வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

Perugia, Italia

உலகம் பசுமைப் போர்த்திய சொர்க்கம் என்ற நிலையில் இருந்து இரைச்சல் மிகுந்த நரகமாய் மாறிவிட்டது, மேன்மேலும் மாறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நகரத்தின் வளர்ச்சியும் சந்தடிகள் மிகுந்தத்தாகவும், வாகனங்கள் பெருகியதாகவும் இருக்கின்றது. ஆனால் இத்தாலி நாட்டில் உள்ள பெருகியா என்னும் நகரம் வாகனங்களை குறைத்துக் கொண்டே வருகிறது. இந்நகரம் பசுமை நகரமாக மாறிவருவதை நேசனல் ஜியோகிராபிக் அண்மையில் ஒரு தொடர்க் நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பியது. எரிசக்தி குறைந்து வருவதையும், மக்கள் தொகையுடன் வாகனத் தொகையும் அதிகரித்து வருவதும் பெரும் சிக்கல்களை உண்டாக்கி உள்ளது. ஒவ்வொரு நகர வாசியின் வாழ்க்கையை நெருக்கடி மிகுந்தத்தாக மாற்றியுள்ளது.
ஆனால் பெருகியாவின் கதையோ வேறுவிதமாக அமைகிறது. இங்கு வாகனங்களை பெரிதும் காண முடியாது. வேலை முடித்து வீடு திரும்புவர்களும், பள்ளி கல்லூரிகளில் இருந்து வீடு திரும்புபவர்களும், மாலை நேர அங்காடிகளுக்கு செல்பவர்களும் வாகனத்தை செலுத்தவோ, ட்ராஃபிக்கில் மாட்டிக் கொண்டு சுச்சுக் கொட்டவோ, வாகனங்களைத் தறிக்க இடம் தேடி அலைவதோ இல்லை. கவலை இல்லாமல் அவரவர் சென்று வருகின்றனர்.
மொத்தத்தில் ட்ராபிக் என்பதே இல்லை என்பது ஆச்சரியத்தை தருகிறது.
ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் இந்த நகரமும் மற்றா நகரங்களைப் போல கார், பேருந்து, ட்ரக் என பெருகி வழிந்துக் கொண்டிருந்ததாம். ஒவ்வொரு தெருமுனையும் வாகன நெருக்கடியில் முட்டிக் கொண்டு நிற்குமாம். இதனால் அங்கு வசித்த பலர் எரிச்சல் அடைந்தனராம். பெருகும் வாகன நெருக்கடி ஒரு நகரத்தின் வாழ்க்கைத் தரத்தையே குலைத்துவிடும். ஆனால் பெருகியா வேறுவிதமாக திரும்பியது எப்படி?
1980களின் பின்னரே பெருகியா வாகன நெருக்கடியை விலக்க ஆரம்பித்தது. இதன் பின்னால் உள்ள கதை மிகவும் சுவாரசியமானது. அக்காலக்கட்டத்தில் தொல்பொருள் ஆய்வாளர்கள் பழங்கால நகர எச்சங்களைக் கண்டுபிடித்தனர். அதாவது பழங்காலத்தில் அதன் நகர நிலத்தில் இருந்து தாழ்மையான பகுதியில் இருந்தது தான். மலைகள் சூழந்த பெருகியாவின் அழகிய தெரு அமைப்புகளை மிகவும் பழங்காலம் தொட்டே அந்நகர் கொண்டிருப்பதை உணார்ந்த உள்ளாட்சி நிர்வாகத்தினர், புதிய நகரத்தை தாழ்வாக கட்ட திட்டமிட்டனர். ஆனால் சாலைகளை மேல்தட்டில் ஒரு மிதக்கும் அல்லது நகரும் படிக்கட்டுகளைப் போலக் கட்டினார்கள். அதனை நகரின் பிறப்பகுதிகளோடு பாலங்கள் கொண்டு இணைத்தார்கள்.
பிறகு மினிமெட்ரோ என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார்கள். இது சப்வே என்னும் தாழ்தள/உயர்தள இரயில்களைக்காட்டிலும், பேருந்துகளைக் காட்டிலும் மிகவும் எளிமையானதாக அமைத்தனர். பெரும்பாலான கார்களை பயன்படுத்த தடை விதித்தனர். இதனால் பசுமை பெருகும் பெருகியாவின் நகரங்கள் வாகன நெருக்கடி குறைந்ததாக இன்றுக் காட்சித் தருகிறது.
இது தான் பெருகியா என்றார் அந்நகரின் மேயர் விலாடிமிரோ பொக்காலி. எங்கள் நகரம் கலைகளிலும், வரலாற்றிலும் பெருமை வாய்ந்த நகரம். அவற்றை பேணுவதற்கு முயற்சி செய்ததன் பயனே மினி மெட்ரோக்கள்என்றார்.
மேற்கண்ட படத்தில் காண்பவையே மினி மெட்ரோக்கள் இவை சப்வே போலவே சிறிய கார்கள் ஆகும். தண்டவாளத்தில் ஓடும் இவைகள் ஒவ்வொரு நிமிடமும் ஒரு மினிமெட்ரோ ஓடிக்கொண்டே இருக்கும். ஒரு முறை பயணிக்க 2 டாலர்கள் மட்டுமே செலவாகும். இது நகரின் அனைத்து சாலைகளையும் இணைக்கின்றன. நகரம் என்பது கீழே இருப்பதால், எதோ மாடிப்படியில் ஏறி செல்வதைப் போன்ற அனுபவமே ஏற்படுகிறது. கீழ இருக்கும் சாலைகள் பெரும்பாலும் மிதிவண்டிப் பயணிகளாலும், நடைப்பயணிகளாலுமே பயன்படுத்தப்படுவதால், வாகனப் புகையோ, ஹாரன் சத்தங்களோ, வாகன நெருக்கடியோ எதுவும் இல்லை. மரங்கள் சூழந்த பெருகியா அழகின் சொர்க்கமாய் இருக்கின்றது. இங்கு வசிப்போருக்கு பெற்ரோல் விலையைப் பற்றியெல்லாம் கூட கவலையே இல்லை. இப்படியான நகர வடிவமைப்பு நம் தமிழ்நாட்டில் உள்ள நகரில் வரவேண்டும் என்பதே எனது ஆசை !!!

ஜப்பானிய கதிர்வீச்சு இங்கிலாந்துக்கு பரவல்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

Wednesday, 30 March 2011

இந்திய வங்கிகளில் முஸ்லிம்கள் நிராகரித்த 75 ஆயிரம் கோடி வட்டிப் பணம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ஒரு அரசு சட்டங்கள் இயற்றும் போதும் திட்டங்கள் தீட்டும் போதும் எந்த மக்களின் நலனிற்காக இவற்றை இயற்றுகிறதோ அந்த மக்களின் இயல்போடு ஒத்துப் போகின்ற வகையில் அந்த சட்டங்களும், திட்டங்களும் இயற்றினால் தான் அது வெற்றி பெறும். இல்லையென்றால் அது வெற்றி பெறாது என்பதற்கு நமது நாட்டில் பல உதாரணங்கள் இருக்கின்றன.
அதுவும் இந்தியாவைப் போல மத ரீதியாக, சாதி ரீதியாக, இன ரீதியாக, மாநில ரீதியாக, மொழி ரீதியாக, கொள்கை ரீதியாக வேறுபாடுகளை அதிகம் கொண்டுள்ள மக்கள் வாழும் நாட்டில் சட்டங்களும் திட்டங்களும் மிகவும் கவனமாக பல ஆய்வுகளின் அடிப்படையில்   தீட்டப்பட்டு நடைமுறைப்படுத்தினால் மட்டும் தான் அது வெற்றி பெறும்.

கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவில் சிறுபான்மை மக்களில் பெரும்பான்மையாக வாழும் மதச்சிறுபான்மை மக்களான முஸ்லிம்களின் இயல்போடு ஒத்துவராத, அந்த மக்களோடு ஒன்றிப்போக இயலாத வங்கியியல் பரிவர்த்தனை இந்தியாவில் நடைமுறையில் இருந்த காரணத்தால் வேண்டா வெறுப்பாக வேறு வழியில்லாமல் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் வங்கிகளோடு பண பரிவர்த்தனை செய்ததின் காரணமாக இந்தியா முழுவதும் ஏறக்குறைய 75 ஆயிரம் கோடி ரூபாய் வட்டிப் பணம் கேட்பாரற்று, முஸ்லிம்களால் நிராகரிக்கப்பட்டு வங்கிகளில் முடங்கிக் கிடக்கிறது.
கேரளாவில் மட்டும் 45,000 கோடி ரூபாய் முடங்கிக் கிடப்பதாக 2005ல் மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட – RBI Legal News and Views என்ற ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
2005ஆம் ஆண்டே 75 ஆயிரம் கோடி முடங்கிக் கிடந்தது என்றால், கேரளாவில் மட்டும் 45,000 கோடி ரூபாய் முடங்கி கிடந்தது என்றால் இப்போது இந்த தொகையின் அளவு என்னவாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஆக, முஸ்லிம்களின் மார்க்கம் மிகக் கடுமையாக தடை செய்துள்ள, பெரும்பாவங்களில் ஒன்று என்று எச்சரிக்கை செய்துள்ள, வட்டி அடிப்படையிலான இந்திய வங்கியியல் நடைமுறைதான் இவ்வளவு பெரிய தொகையை முஸ்லிம் சமூகம் நிராகரித்ததற்கான அடிப்படைக் காரணம்.
வட்டி வாங்குவது, வட்டி கொடுப்பது, வட்டி கணக்கு எழுதுவது, அதற்கு சாட்சியாக கையெழுத்திடுவது அனைத்தும் பெரும் பாவம் என்று இஸ்லாமிய மார்க்கம் தெள்ளத் தெளிவாக்குகிறது. முழுவதும் வட்டி அடிப்படையிலான வங்கியியல் நடைமுறை காரணமாக முஸ்லிம்கள் வங்கிகளில் கணக்கு தொடங்குவதில் கூட பிற எல்லா சமூகங்களைக் காட்டிலும் மிகவும் பின்னுக்கு இருக்கிறார்கள்.
இதனால் இந்த சமூகம் பொருளாதார ரீதியாகமுன்னேறிய சமூகமாக மாறுவதற்கு, முஸ்லிம் சமூகத்தவர் பெரிய பெரிய தொழிற்சாலை தொடங்குவதற்கு, பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு, பங்குகள் மூலம் பெரிய அளவிலான நிதியைத் திரட்டி பெரும்தொழில் செய்வதற்குஏழைமாணவர்கள் கல்வி கடன் பெறுவதற்கு என்று பிற சமூகங்களைப் போல  நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தங்கு தடையின்றி செயல்பட இயலாத நிலையில் உள்ளது. மொத்தத்தில் இந்திய முஸ்லிம்களின் பொருளாதார பின்னடைவிற்கு இன்றைய வங்கியியல் நடைமுறையும் ஒரு முக்கியக் காரணமாக உள்ளது.
முஸ்லிம்களின் சமூக பொருளாதார கல்வி நிலையைப் பற்றி ஆய்வு செய்த நீதியரசர் ராஜிந்தர் சச்சார் அவர்களின் அறிக்கையில் வங்கி பரிவர்த்தனையில் முஸ்லிம்களின் பங்களிப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை படம் பிடித்துக் காட்டியுள்ளார். நாட்டில் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களில் வெறும் 12 விழுக்காடு தான் முஸ்லிம்கள். மக்கள் தொகையில் 6 விழுக்காடு உள்ள ஏனைய சிறுபான்மை மக்கள் 8 விழுக்காடு அளவிற்கு வங்கி பரிவர்த்தனை செய்கின்றனர்.
நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களில் உள்ள வங்கிகளின் கிளைகளை ஙிலிகிசிரி லிமிஷிஜிணிஞி கிளைகளாக அந்த வங்கிகளின் தலைமையகம் வைத்துள்ளது. முஸ்லிம்கள் இன்றைய வங்கிகளோடு நெருங்கி பரிவர்த்தனை செய்யாதது தான் இதற்குக் காரணம் என்று நீதியரசர் ராஜிந்தர் சச்சர் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முன்னேற்றம் என்பது நாட்டு மக்கள் அனைவரது சமூக பொருளாதார கல்வி முன்னேற்றத்தில் தான் அடங்கியுள்ளது. 110 கோடி இந்திய மக்களில் ஏறக்குறைய 25 கோடிமக்களை புறக்கணித்து விட்டுஅல்லது அவர்களின் முன்னேற்றத்தை கவனத்தில் கொள்ளாமல் நாட்டின் முன்னேற்றம் என்பது சாத்தியமில்லை.
இதை உணர்ந்த டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இன்றைய வங்கியியல் நடைமுறைக்கு மாற்றாக இருக்கக்கூடிய வட்டியில்லா வங்கியின் நடைமுறை குறித்து ஆய்வு செய்திட மத்திய ரிசர்வ் வங்கியை கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் ஆனந்த் சின்ஹா அவர்களது தலைமையில் ஒரு குழுவை அமைத்தது ரிசர்வ் வங்கி. இந்தக் குழு 2006ல் தந்த அறிக்கையில் இன்றைய சூழலில் தற்போதைய ரிசர்வ் வங்கியின் சட்டதிட்டங்களுக்குட்பட்ட வட்டியில்லா வங்கி இந்தியாவில் அமைப்பது சாத்தியமில்லை என்று அறிக்கை தந்தது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் அறிஞர் பெருமக்களும் பொதுவுடமை கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் சமூகஇயக்கங்களின் இடைவிடாத பெரும் முயற்சியின் காரணமாக இரண்டாவது முறையாக பதவி ஏற்றுள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் இதில் சிறப்புக் கவனம் எடுத்துள்ளார்கள்.
தற்போதைய பொருளாதார சிக்கல்களிலும் உலகளவில் வட்டியில்லா வங்கிகளின் வெற்றியைத் தொடர்ந்து மத்தியரிசர்வ் வங்கியும் இந்த வட்டியில்லா வங்கியை இந்தியாவில் தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளது. இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் தலைவர் வி.ஙி.ழி  ராவ் அவர்கள் நாங்கள் வட்டியில்லா வங்கியின் செயல்பாட்டினை ஆய்வு செய்து வருகிறோம் ரிசர்வ் வங்கியின் வரைவு செயல் திட்டத்திற்காக காத்திருக்கிறோம்என்று கூறியுள்ளார்.
நேரடியாக இந்தியாவில் வட்டியில்லா வங்கிகளை அனுமதிப்பதா அல்லது தற்போதைய பொதுத்துறை வங்கிகளிலேயே ஒரு வட்டியில்லா வங்கி கவுண்டரை திறப்பதா என்ற விவாதங்கள் நடந்து வரும் வேளையில் மாநிலங்களவைத் துணைத்தலைவர் ரஹ்மான்கான் அவர்கள் ஒரு அருமையான திட்டத்தை பிரதமர் அவர்களிடம் அளித்துள்ளார்.
மலேசியாவில் 1963ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தாபுங் ஹாஜி என்ற நிறுவனம் மிகப் பெரிய அளவிற்கு வளர்ந்துள்ளது. அதாவது ஹஜ்ஜுக்கு செல்ல நிய்யத் செய்தோர் இந்த வங்கியில் பணம் சேமிப்பதற்கான திட்டம் இது முழுக்க ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
மலேசியாவில் வெற்றிகரமாக செயல்படும் தாபுங் ஹஜ் என்ற இந்த நிறுவனம் ஹஜ் செல்வோர் சேமிக்கும் பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்கிறது. முழுக்க முழுக்க இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் இந்த தொழில் முதலீடு நடக்கிறது.
மிகப்பெரிய நிறுவனமாக இன்று வளர்ந்துள்ளது. இதே போன்ற ஒரு நிறுவனத்தை இந்தியாவில் தொடங்கி முஸ்லிம்களின் பணத்தை சேமிப்பதற்கு அதை லாப நட்டத்தை பகிர்ந்து கொள்ளுதல்என்ற அடிப்படையில் பல்வேறு தொழில்களில் ஷரியத் சட்டத்திற்குட்பட்டு முதலீடு செய்தால் மிகப்பெரிய பொருளாதார புரட்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ற ஆய்வறிக்கையை பிரதமரிடம் அளித்துள்ளார் ரஹ்மான்கான். பிரதமர் அவர்களும் அமைச்சரவைச் செயலாளரிடம் இந்தத் திட்டத்தை ஆய்வு செய்யுமாறு பணித்துள்ளார்.

இது குறித்து ரஹ்மான் கான் கூறுகின்ற போது இந்த திட்டம் குறித்து பல அறிஞர்களிடமும் உலமாக்களிடமும் கலந்து பேசியதில் அனைவருமே ஆதரவு தெரிவிக்கின்றனர். இது போன்ற நிறுவனத்தை தொடங்கி சோதனை செய்த பிறகு முழுமையான இஸ்லாமிய வங்கியை தொடங்கலாம்என்றார்.
அமெரிக்க வங்கிகளில் கோடிக்கணக்கான டாலர்களை போட்டு வைத்திருந்த அரபு நாடுகள், அந்த நாடுகளின் தொழிலதிபர்கள்; செப்.11 தாக்குதலுக்கு பிறகான அரசியல் போக்கின் காரணமாக பெருமளவு பணத்தை திருப்பி எடுத்ததும் அமெரிக்க வங்கிகளின் வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்களில் ஒன்று. இப்படி திருப்பி கொண்டு வரப்பட்ட டிரில்லியன் கணக்கான டாலர்களை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பைத் தேடி வருகின்றார்கள் என்ற செய்தி மத்திய கிழக்கிலிருந்து வரும் பத்திரிகைகள் மூலம் அறிய முடிகிறது.
இந்த நேரத்தில் இந்தியா வட்டி இல்லாத வங்கியை தொடங்கினால் இந்த அன்னிய முதலீடு   பெருமளவு இந்தியாவில் முதலீடு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நமது ட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். கேரள மாநில அரசு இதற்கான வேலையைத் தொடங்கிவிட்டதை நாம் சென்ற இதழிலேயே செய்தி வெளியிட்டிருந்தோம். மனிதனுக்கு எது சரி எது தவறு எது நல்லது எது கெட்டது என்பதை மனிதனால் முடிவு செய்ய இயலாது. மனிதனை படைத்த இறைவனால் தான் முடியும்.

- CMN.Saleem - Samooga Neethi Murasu

Tamilnadu government funds schemes - ஏழைப் பெண்களின் உதவிகளுக்கு தமிழக அரசு நல திட்டங்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோ ஜாபர் சாதிக் அவர்கள்  Rural Development Department ல் பணியாற்றுகிறார்கள். தமிழக அரசு, வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பத்தினர்களுக்கு பல உதவி திட்டங்களை வழங்கி வருகிறது. அவற்றில் முக்கியமானது Dr. மூவாளூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் மணப்பெண்ணின் தாயாருக்கு          Rs 25000/- உதவி வழங்குகிறது (10th pass செய்திருக்கு வேண்டும்).  10 ஆம் வகுப்புக்கு கீழே படித்தவர்களுக்கு மேலும் பல திட்டங்கள் உள்ளன.

இதுபோன்ற திட்டங்களில் பல சமுதாயத்தினர்கள் பலன் அடைந்து வருகின்றனர்.   இதுபோன்ற உதவிகளை விட்டுவிட்டுநம் சமூகத்தினர்ஜூம்ஆ தொழுகைக்குப்பிறகு, உதவி வேண்டி வருவதை பார்க்கும்போதுகஷ்டமாக இருப்பதாக சகோ உணர்கிறார்கள்.

ஆகையால் நம் சமூகத்தினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இதுபோன்ற நல திட்டங்களை பயன்படுத்திக்கொள்ளவும்.  மேலதிக விளக்கங்களுக்கு சகோ ஜாபர் சாதிக் அவர்களை ajsadiq@yahoo.com  இந்த மெயிலில் தொடர்பு கொள்ளலாம். 

 Dear All,

I am working in a government Department( Rural Development Department) as computer assistant.  Tamilnadu government has so many funds  schemes  that are available for the below poverty line girls and families.  The main one is Dr.Moovaloor Ramamirtham ammaiyar thirmana nidhi udhavi thittam. The goverment is giving Rs. 25,000 to the mother of the bride( bride should be 10th Pass). There are other schemes also for below 10th.
    
I am seeing that he other community people are benefiting more than our community. I have very hard feeling to see our brother coming in the juma prayer and ask for the money help.

Please inform as many muslims as you can so that our community can benefit this. This is our money we are paying more tax than any other community. They can approach the Panchayat Union office. Taluk Office  or their panchayat cleark for any help.

If any questions, please contact me

Regards

Jaffar Sadiq
Panruti