Sunday, 3 April 2011

ரயிலில் தவறவிட்ட 30 ஆயிரம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தார்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கீழக்கரை இளைஞருக்கு பாராட்டு!!

கீழக்கரை பிப்.14. கீழக்கரை பச்சிலை தெருவை சேர்ந்தவர் சித்தீக் ரஹ்மான்(வயது 34) இவர் ரயிலில் சென்னையிலிருந்து குடும்பத்துடன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார் . ரயில் பரமக்குடியை கடந்த சிறிது நேரத்தில், ரயிலின் நடைபாதையில் பர்ஸ் ஒன்று அநாதையாக கிடந்தது. பர்சை கண்டெடுத்த சித்தீக் ரஹ்மான் அதில் ரூ. 30 ஆயிரம்பணமும் , ஓட்டுநர் உரிமமும் இருப்பதை அறிந்தார். உடனடியாக அதில் உள்ள முகவரி மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.பின்னர் அது இளையாங்குடியை சேர்ந்த கருப்பசாமி(வயது 33) என்பவரின் பர்ஸ் என்பதும்,அவர் சென்னையில் இருந்து பரமக்குடியில் இறங்கும் போது பர்சை தவற விட்டதாகவும்தெரிய வந்தது .

அன்றே கீழக்கரைக்கு தனது உறவினருடன் வந்த கருப்பசாமி சித்தீக் ரஹ்மான் வீட்டிற்க்கு சென்று கண்ணீர் மல்க பணத்தை பெற்றுக் கொண்டார்.
பரமக்குடி ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரை கருப்பசாமி வாபஸ் பெற்றார்.
சித்திக்கிற்க்கு நன்றி தெரிவித்த கருப்பசாமி கூறியதாவது, நேர்மை தவறாதவர்கள் வாழந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் ஊர் கீழக்கரை என்பதில் சந்தேகமில்லை என்பதை சித்தீக் ரஹ்மான் நிரூபித்து விட்டார்.அவரின் நேர்மை என்னை கண் கலங்க செய்து விட்ட்து என்றார்.


பொதுமக்கள் சித்திக் ரஹ்மானின் நேர்மையான் செயலை பாரட்டினர்

No comments:

Post a Comment