Sunday, 20 March 2011

இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல் - April - Fool

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்

அஸ்ஸலாமு அலைக்கும்,

ப்ரல் மாதம் துவங்கியவுடன் முஸ்லிம்களில் சிலர் பிறரை மதிக்காமல், உரிய கவுரவத்தைக் கொடுக்காமல், அவர்களிடம் பொய் சொல்லி, அதற்குச் சத்தியமும் செய்து நம்ப வைத்து பிறகு ஏமாற்றுவது, ஏளனமாகச் சிரிப்பது, மேலும் அவர்களுக்கு இழிவை ஏற்படுத்துவது போன்ற செயல்களை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள். இவர்கள் பிறரை ஏப்ரல் ஃபூல் - முட்டாளாக்கி அற்ப சந்தோஷத்தை அனுபவிப்பதை பார்க்கிறோம்.

எனவே நாம், நமக்கு வழிகாட்டியாக வந்த குர்ஆனையும், ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீமையைப் பற்றி அறிந்து, அதிலிருந்து விலகவும், நேர்வழி பெறவும் முயற்சிக்க வேண்டும்.


ஹோலி கலாச்சாரம்
பொதுவாக மாணவர்கள் ஏப்ரல் மாதத்தில் பிறருடைய மேலாடைகள் மீது மையைத் தெளித்து அசிங்கப் படுத்துகின்றார்கள். இதை ஏப்ரல் ஃபூலின் ஓர் அடையாளமாக நினைத்து செய்கின்றனர். மையைத் தெளிக்கும் இந்த நடைமுறையானது
ஹோலி பண்டிகையின் போது நிறங்களை பரஸ்பரம் வீசிக் கொள்ளும் இந்துக்களின் ஒரு பிரிவினருடைய கலாச்சாரத்துடன் ஒத்துப் போகின்றது. எனவே மாற்று மதக் கலாச்சாரம் என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் இதைக் கைவிட வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பிற சமுதாயத்தின் சம்பிரதாயங்களை (கலாச்சாரத்தை) ஏற்படுத்திக் கொள்கிறானோ அவனும் அவர்களைச் சார்ந்தவனே! (நூல்: அபூதாவூத் 3512)

இந்த நபிமொழியின் படி பிறர் மீது மையை வீசக் கூடியவனும் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடும் இந்துக் களைச் சார்ந்தவனாகவே கருதப்படுவான்.


பொய்க் கலாச்சாரம்
இதைத் தவிர மக்களில் பலர் மற்றவர்களை ஏப்ரல் ஃபூல் (முட்டாள்) ஆக்குவதற்காக பொய் பேசுகின்றார்கள். இது பெருங்குற்றம் ஆகும். பொய் சொல்லி தீமை செய்து கொண்டிருப்பதன் காரணமாக அல்லாஹ்வின் அருளும் அன்பும் இழந்து அவனது கோபத்திற்கு ஆளாகி விடுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழி வகுக்கும். தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டே இருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் பெரும் பொய்யன் என்று பதிவு செய்யப்பட்டு விடுவார். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி) நூல்: புகாரி 6094

ஆக இந்தப் பொய்யர்கள் அதிகமான தீமைகளைச் செய்து நரகத்தை அடைகின்றனர். எனவே நாம் பொய் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.


பொய்ச் சத்தியம் செய்தல்
இன்னும் சிலர் பிறரை முட்டாளாக்குவதற்கு முயற்சி செய்யும் போது அவர் நம்ப மறுத்து விட்டால் உடனே பொய்ச் சத்தியம் செய்து நம்ப வைக்கின்றனர்.

இவர்களைப் பற்றி வல்ல அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்: அதிகம் சத்தியம் செய்யும் இழிந்தவன் எவனுக்கும் நீர் கட்டுப்படாதீர்! (அல்குர்ஆன் 68:10)

மேலும் இப்படிப் பொய்ச் சத்தியம் செய்வது யாருடைய குணம் என்றால் அல்லாஹ்விற்குப் பிடிக்காத நயவஞ்சகர்களின் குணமாகும்.

இவர்களுடைய இந்தச் சுபாவத்தைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்: அறிந்து கொண்டே பொய் சத்தியம் செய்கின்றனர். துன்புறுத்தும் வேதனையை அல்லாஹ் அவர்களுக் குத் தயாரித்துள்ளான். அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 58:14,15)

எனவே நாம் ஒரு போதும் பொய்ச் சத்தியம் செய்யக் கூடாது.


பொய் சாட்சி கூறல்
ஏப்ரல் மாதத்தில் பிற மக்களை முட்டாளாக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் போது அந்த இடத்திற்கு அருகில் இருக்கும் சிலர் அந்தப் பொய்யர்களுக்கு ஆதரவு அளித்து, உதவி செய்யும் முகமாக பொய் சாட்சி பகர்கின்றனர். இதுவும் பெரும் பாவமான காரியமாகும்.

அபூபக்ரா (ரலி) கூறியதாவது: ''பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். ''ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள்'' என்று நபித் தோழர்கள் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ்விற்கு இணை வைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் தான்'' என்று கூறினார்கள். சாய்ந்து கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் பிறகு எழுந்து அமர்ந்து, ''அறிந்து கொள்ளுங்கள். பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்). பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்)'' என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே இருந்தார்கள். (நூல்: புகாரி 5976, முஸ்லிம் 126)


ஏமாற்றுதல்
இன்னும் சிலர் உண்மையுடன் பொய்யும் புரட்டும் சேர்த்துப் பேசுவார்கள். இதற்குப் பெயர் ஏமாற்றுதல், மோசடி ஆகும். உதாரணமாக ஏப்ரல் மாதத்தில் ஏமாற்றுவதற்காக, விபத்து நடந்து விட்டது என்றோ, இன்னார் அபாயகரமான (சீரியஸான) நிலையில் இருக்கிறார் என்றோ, மரணித்து விட்டார் என்றோ தொலைபேசி அல்லது தந்தி மூலமாகத் தகவல் அனுப்பி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஏமாற்றுகின்றானோ அவன் என்னைச் சார்ந்தவன் அல்ல. (நூல்கள்: முஸ்லிம் 147, திர்மிதீ 1236)

''
மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக் கொடி ஒன்று நட்டப்படும். 'இது இன்னாரின் மகன் இன்னாரின் மோசடி' என்று கூறப்படும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 6178)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: மோசடி செய்யும் ஒவ்வொருவனுக்கும் ஒரு அடையாளக் கொடி உண்டு. அது மறுமையில் அவனது புட்டத்திடம் நட்டப்படும். (நூல்: முஸ்லிம் 3271)

முஸ்லிமின் அடுத்த அறிவிப்பில் அவனுடைய மோசடிகளுக்குத் தக்கவாறு அது உயர்த்தப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

எனவே வல்ல அல்லாஹ்வுக்குப் பயந்து ஏமாற்றுதல், மோசடி செய்தல் ஆகியவற்றிலிருந்து முழுவதுமாக விலகி உண்மையாளராக நாம் திகழ வேண்டும்.


கேலி செய்தல்
மக்களில் சிலர் சிலரை ஏப்ரல் ஃபூல் ஆக்கிய பிறகு ஏளனமாகச் சிரிப்பது, கிண்டல் செய்வது, ஆர்ப்பரிப்பது என்று எப்படியெல்லாம் அவமரியாதை செய்ய முடியுமோ அனைத்தையும் கையாளுகின்றனர். இந்தக் கெட்ட குணத்திற்குச் சொந்தக்காரர்கள் யார் என்றால் இறை நிராகரிப்பாளர்கள் தாம்.

(
ஏக இறைவனை) மறுப்போருக்கு இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப் பட்டுள்ளது. அவர்கள் நம்பிக்கை கொண்டோரைக் கேலி செய்கின்றனர். (இறைவனை) அஞ்சியோர் கியாமத் நாளில் அவர்களுக்கு மேலே இருப்பார்கள். அல்லாஹ், நாடியோருக்கு கணக்கின்றி வழங்குகிறான். (அல்குர்ஆன் 2:212)

தாராளமாக (நல் வழியில்) செலவிடும் நம்பிக்கை கொண் டோரையும், தமது உழைப்பைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளாதவர்களையும் அவர்கள் குறை கூறி கேலி செய்கின்றனர். அல்லாஹ் அவர்களைக் கேலி செய்கிறான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 9:79)

இந்த வசனங்களில் அல்லாஹ், நயவஞ்சகர்களின் பண்பைப் பற்றிக் கூறி விட்டு அவர்களுக்குரிய தண்டனையைப் பற்றியும் கூறுகின்றான். எனவே நாம் இந்தத் தீய பழக்கத்தைக் கைவிட வேண்டும்.


இழிவாகக் கருதுவது
இறுதியாக ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறரை ஏப்ரல் ஃபூல் (முட்டாள்) ஆக்கியவர்கள் ஏன் அவர்களைப் பார்த்து, கை கொட்டி ஏளனமாகச் சிரிக்கின்றார்கள்? ஏன் கேலி, கிண்டல் செய்து அற்ப சந்தோஷம் அடைகின்றார்கள்? என்று சிந்தித்தால் ஓர் உண்மை விளங்கும்.

அதாவது அவர்கள் தம்மைப் புத்திசாலியாகவும், உயர்ந்தவர்களாகவும் கற்பனை செய்து கொள்கின்றார்கள். எனவே ஆணவம் தலைக்கேறிய பிறகு மற்றவர்களை, தம்மை விட அறிவில் குறைந்தவர்கள், இழிவானவர்கள் என்று முடிவு செய்வதன் காரணத்தால் தான் அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தாமல், அனாவசியமாகக் கருதி, கேவலமாக நடத்தி இழிவு படுத்துகின்றனர்.

இதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பரிபூரண முஸ்லிம் யாரென்றால், எவரது நாவிலிருந்தும், கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்று இருக்கின்றார்களோ அவர் தான். (நூல்: புகாரி 10, 6484)

வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் குர்ஆன், ஹதீஸிற்குக் கட்டுப்பட்டு உண்மை விசுவாசிகளாக வாழ அருள் புரிவானாக!

கே. முஹம்மத் நாஸிர் உமரீ

Saturday, 19 March 2011

பரமக்குடி இஸ்லாமிய சமூக நல அறகட்டளை சார்பாக இலவச TNPSC குரூப்-II பயிற்சி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழக அரசு அறிவித்துள்ள உயர் பதவிக்கான TNPSC குரூப்-II தேர்வுக்கான  பயிற்சி வகுப்பு பரமக்குடி இஸ்லாமிய சமூக நல அறகட்டளை சார்பாக முற்றிலும் இலவசமாக நடத்த உள்ளது. இன்ஷா அல்லாஹ் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அனைவரும் இந்த பயிற்சி வகுப்பில் பயன் பெற அன்புடன் அழைக்கின்றோம்.
  • அனுபவமிக்க ஆசிரியர்கள்
  • இலவச கையேடுகள்
  • வாராந்திர தேர்வு
  • மாதிரி தேர்வு
இந்த பயிற்சி வகுப்புக்கான தொடக்க விழா இன்ஷா அல்லாஹ் (19 3 2011 ) அன்று மாலை 5 30 மணி அளவில் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல் நிலைப் பள்ளி இல் நடைபெற உள்ளது. இன்ஷா அல்லாஹ் அனைவரும் கலந்து கொள்ளவும்.  

தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அனைவரும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும்படி தங்கள் தங்களுடைய நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கின்றோம்.

பயிற்சி தொடங்கும் நாள் : 21 03 2011 
பயிற்சி நேரம் :  நாள்தோறும் மாலை 5 30 மணி முதல் 7 30  மணி வரை
இடம் : பரமக்குடி கீழ முஸ்லிம் மேல் நிலைப் பள்ளி

தொடர்புக்கு : 9965889823

 

Wednesday, 16 March 2011

ஹஜ் புனிதப் பயணம் விண்ணப்பங்கள் 16.03.2011 முதல் வழங்கப்படும்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,

@±ØLm
BvXôj§u Bߧd LPûUVôL aw @ûUkÕs[Õ.
SôÓ, ùUô¯, B]m, ¨\m, úLôj§Wm, ùNpYm, ùNpYôdÏ A¡V @û]jÕ úYßTôÓLû[Ùm U\kÕ ""DXL UdLs @û]YÚm IÚ Rôn UdLs'' Fu\ DQoÜPu áÓm DXL ULô UôSôÓ aw.
úYtßûULû[ U\kÕ ItßûUûVl Tû\ Nôt\ úYi¥V ײR ªdL AXVj§p áP £Xo @±VôûU«u LôWQUôL úYßThÓ ¨tÏm ùLôÓûUûVd Lôi¡ú\ôm. Uja×L°u ùTVWôp IqùYôÚYÚm IqùYôÚ ®RUôL aw ùNnÙm ¨ûXûVÙm Lôi¡ú\ôm.
@¦¡u\ AûPLs áP IúW Uô§¬VôL BÚdL úYi¥V BPj§p YQdL Y¯TôÓL°p ®j§VôNlTÓTYûR ®Pd ùLôÓûU Fu] BÚdL Ø¥Ùm?
S©Ls SôVLm (^p) @YoLs ""FqYôß aw ùNnYÕ FuTûR Fu²PªÚkÕ Ltßd ùLôsÞeLs'' (Øv-m 2286) Fuß á±VÕPu ùNnÕ Lôh¥ ®hÓm ùNußs[]o.
S©Ls SôVLm (^p) @YoLs BWiÓ êuß RPûY aw ùNnÕ IqùYôÚ RPûYÙm IqùYôÚ ®RUôL SPk§ÚkRôp ®j§VôNeLs GtTP £±R[YôYÕ ¨VôVm BÚdLXôm.
@YoLú[ô IÚ RPûY Rôu aw ùNnR]o. @kR awû_ @YoLs FqYôß ùNnRôoLú[ô @kR IúW ®RUôLj Rôu Sôm @û]YÚm ùNnRôL úYiÓm. @kRl ×i¦V 骫XôYÕ IúW ®RUôL YQdLeLs ׬V úYiÓm.

சென்னை
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ் நாட்டில் வசிக்கும் முஸ்லிம் பெருமக்களில், ஹஜ்-2011-ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது.
ஹஜ் 2011-ற்கான விண்ணப்பப் படிவங்கள் சென்னை-34, புதிய எண்.13 (பழைய எண்.7), மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர்மூன்றாம் தளத்தில் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து 16-3-2011 முதல் பெற்றுக் கொள்ளலாம் அல்லது விண்ணப்பங்களை http://www.hajcommittee.com/ என்ற இணையதளம் மூலமாகவும் அச்சு எடுத்துக் கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
ஹஜ் குழுவின் விதிமுறைகளின் அடிப்படையில் ஒரு குழு/உறையில் ரத்த-உறவுமுறையுள்ள குடும்ப நபர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் முதலானோர் ஐந்து நபர்களுக்கு மிகாமல் உள்ளடங்கியதாக இருக்கவேண்டும்.  இவ்வுறையில் அந்நிய நபர் எவரையும் சேர்க்கக்கூடாது.
விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநில ஹஜ் குழுவிடம் விண்ணப்பித்தாலோ அல்லது ஒரு மாநில ஹஜ் குழுவில் பலமுறை விண்ணப்பித்தாலோ, அவ்வாறான விண்ணப்பங்கள் முற்றிலுமாக நிராகரிக்கப்படுவதுடன் எந்தவொரு மாநில ஹஜ் குழுவாலும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
பாஸ்போர்ட்டில் மட்டுமே ஹஜ் பயணத்திற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், கடவுச் சீட்டின் நகலை இணைத்து விண்ணப்பப் படிவங்களை 30 ஏப்ரல் 2011-ற்குள் மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 
தங்கள் வசம் பாஸ்போர்ட் இல்லாதவர்கள், முதலில் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்து மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திடமிருந்து பெற்ற ரசீதின் நகலை விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்கவேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.200/- (ரூபாய் இருநூறு மட்டும்)-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவிற்கான நடப்புக் கணக்கு எண்.31634038682-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகல் மற்றும் பன்னாட்டு கடவுச் சீட்டு இருப்பின் அதன் நகலை அல்லது பாஸ்போர்ட்டிற்காக விண்ணப்பித்திருந்தால் மண்டல     பாஸ்போர்ட் அலுவலக ரசீதின் நகலை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்கவேண்டும்.  
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30-4-2011 ஆகும்.
ஹஜ் 2008, 2009 மற்றும் 2010-ல், கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து விண்ணப்பித்து தெரிவு செய்யப்படாதவர்களின் விண்ணப்பங்களை நேரடியாக தெரிவு செய்யும் திட்டத்தைத் தொடர்வது என மத்திய ஹஜ் குழு முடிவெடுத்துள்ளது.
ஹஜ் 2011-ல் இச்சலுகையை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் மற்றும் சக பயணிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கான உறை எண் விபரங்களை விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட வேண்டும். (புதிய விண்ணப்பதாரர்கள் எவரையும் சேர்க்கக்கூடாது).
இவ்விண்ணப்பதாரர்கள் குலுக்கல் இன்றி தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் என்ற தகுதியைப் பெறுவார்கள். இவ்வாறு சிறப்பு வகையில் நேரடியாக தேர்வு செய்யப்படவுள்ளவர்கள் பாஸ்போர்ட்டை தங்கள் வசம் வைத்திருக்கவேண்டும் மற்றும் ஹஜ் 2011-ற்கு விண்ணப்பிக்கவேண்டும். 
விண்ணப்பங்களை பெறும் கடைசி நாள் வரையில், சிறப்பு வகை விண்ணப்பங்கள் ஒதுக்கீட்டை விடக் குறைவாக இருந்தால், மீதமுள்ள இருக்கைகள் பொதுவகையில் அளிக்கப்பட்டு, அவ்விருக்கைகளுக்கு மாநில ஹஜ் குழு குலுக்கல் நடத்தி தேர்வு செய்யும்.  
மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட ஒதுக்கீட்டை விட அதிகமாக சிறப்பு வகையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால் மாநில ஹஜ் குழு, சிறப்பு வகை விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் குலுக்கலை நடத்தும்; பொது வகையில் புதியதாக விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.  
மத்திய ஹஜ் குழுவால் நிர்ணயிக்கப்படும் ஒதுக்கீட்டின் அடிப்படையில், கணினி மூலமாக குலுக்கலை நடத்தி தேர்வு செய்யப்பட்ட புனிதப் பயணிகளுக்கு தமிழ்நாடு மாநில ஹஜ் குழு தெரிவிக்கும். குலுக்கல் மூலமாக பயணிகள் தேர்வு செய்யப்படுவது முற்றிலும் தற்காலிகமானது.
குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட புனிதப் பயணிகள், பாஸ்போர்ட்டின் முதல் பக்கத்தில் புகைப்படத்தை இணைத்து, அந்த பாஸ்போர்ட்டுடன் ரூ.31,000/- செலுத்தியதற்கான வங்கி ரசீதின் நகலை இணைத்து 15.6.2011-க்குள் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.    
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

@§p ùR°Yô] NôußLÞm, ULôúU BlWôÍØm Ds[]. @§p ÖûZkRYo @TVm ùTt\YWôYôo. @kR AXVj§p @pXôyÜdLôL aw ùNnYÕ, ùNuß YW Nd§ ùTt\ U²RoLÞdÏd LPûU. VôúWàm (GL Bû\Yû]) UßjRôp @pXôy @¡XjRôûW ®hÓm úRûYVt\Yu.
(§ÚdÏoAu 3:97)
aw LhPôVd LPûUVôL BÚlTÕPu @ûR ¨û\úYtßYRtÏ GWô[Uô] SuûULÞm ¡ûPd¡u\]. BÕ Tt± TX a¾vLû[ Sôm LôQ Ø¥¡u\Õ.
""@UpL°p £\kRÕ FÕ?'' Fuß S©Ls SôVLm (^p) @YoL°Pm úLhLlThPÕ. @RtÏ S©Ls SôVLm (^p) @YoLs ""@pXôyûYÙm @Y]Õ çRûWÙm Sm×YÕ'' Fuß ®ûPV°jRôoLs. ""@RtÏ @ÓjRT¥VôL FÕ?'' Fuß úLhLlThPÕ. ""@pXôy®u TôûR«p ´aôj ùNnYÕ'' Fu\ôoLs. ""@RtÏ @ÓjRT¥VôL FÕ?'' Fuß úLhLlThPÕ. @RtÏ S©Ls SôVLm (^p) @YoLs ""Il×d ùLôs[lThP aw'' Fuß ®ûPV°jRôoLs.
@±®lTYo: @é aýûWWô (W-)
èp : ×Lô¬ 26, 1519

ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்வுக்காக நிறைவேற்றுங்கள். (அல்குர்ஆன் 2:196)
என்று அல்லாஹ் கூறுகின்றான். எனவே ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் விளம்பரங்கள் செய்யாமல் உளத் தூய்மையுடனும் இணைவைத்தல் மற்றும் பித்அத் போன்ற காரியங்களில் ஈடுபடாமலும் இருப்பது மிகவும் அவசியம்.

ஹஜ்ஜை நிறைவேற்றியவர்கள் பாவங்களிலிருந்து முழுமையாக நீங்கி அன்று பிறந்த பாலகனைப் போன்று ஆகி விடுகின்றார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே ஹஜ்ஜை முடித்துவிட்டு, ஊர் திரும்பியவுடன் மவ்லிது, தர்கா வழிபாடு, அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுதல் போன்ற ஷிர்க்கான காரியங்களில் ஈடுபடாமல் இருப்பதோடு ஹராமான செயல்களிலும் ஈடுபடக் கூடாது.
 
, மார்ச் 15- ஹஜ் புனிதப் பயணம் செல்வதற்கான விண்ணப்பங்கள் 16.03.2011 முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு ஹஜ் குழு தெரிவித்துள்ளது.

இந்து யாத்திரிகர்களுக்கு பொருளாதர சலுகை வழங்கும் மத்திய மாநில அரசுகள்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்

அஸ்ஸலாமு அலைக்கும்,

அளவற்ற அருளாலனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...


இந்து யாத்திரிகர்களுக்கு பொருளாதர சலுகை வழங்கும் மத்திய மாநில அரசுகள்.

பிரபுல் கொராடிய என்ற இந்துதுவாவின் ஊதுகோல் உச்ச நீதி மன்றத்தில் முஸ்லீம்களுக்கு ஹஜ் மானியம் தருவதை தடை செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்தான், இதை விசாரித்த உச்ச நீதி மன்ற நீதிபதிகள் மர்க்கன்டேய கட்சு மற்றும் G.S.  மிஸ்ராமுட்டாள் தனமாக தாக்கல் செய்த இந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.   இந்த இந்துவா துரோகிகள் மக்களின் அறியாமையை பயன்படுத்தி, என்னவோ ஹஜ் யாத்திரிகர்களுக்கு மட்டும்தான் மானியம் வழங்கப்படுவாதாக பொய் பிரசாரம் செய்கின்றனர். ஆனால் இந்துக்களுக்கும் இது போல் அவர்களின் புனித ஸ்தலத்திற்க்கு செல்ல மத்திய மாநில அரசுகள் பல்வேறு பொருளாதார உதவிகள் செய்கின்றன.

இந்து யாத்திரிகர்களுக்கு கர்நாடகா மாநில 2010 பட்ஜெட்டில் ரூ 13 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் விபரம்
1. மானசரோவர் செல்லும் பக்த்தர்களுக்காக ரூ.3கோடி

2. திருப்பதி செல்லும் பக்த்தர்களுக்காக ரூ.5 கோடி

3.  சபரிமலை செல்லும் பக்த்தர்களுக்காக ரூ.5 கோடி 

இது போல பல மாநிலங்களிலும் பல கோடி ருபாய்கள் இந்து யாத்திரிகர்களுக்கு வழங்கப்படுகின்றது. தமிழக அரசு இந்த ஆண்டு 2011 பட்ஜெட்டில் இந்து கோயில்களுக்கு ரூ. 100 கோடி ஒதுக்கி உள்ளது. ஆனால் முஸ்லீம்களுக்கு சொத்த பணத்தில் பள்ளிவாசல் கட்ட கூட அனுமதி தருவதில்லை தமிழக அரசு.

இந்து யாத்திரிகர்களுக்கு இந்தியன் ரயில்வே  துறையின் சலுகைகள்

மத்திய அரசின் இந்தியன் ரயில்வே துறை இந்துக்கள் தங்களின் புனித ஸ்தலத்திற்க்கு செல்ல பல்வேறு வகையான சலுகைகளை அறிவிக்கின்றது. நாம் ஆராய்ந்த வரை முஸ்லீம்களுக்கோ, கிறித்தவர்களுக்கோ  இப்படி  இந்தியன் ரயில்வே சலுகைகள் அறிவிப்பது கிடையாது.

இந்துக்களின் புன்னிய ஸ்தலங்களுக்கு செல்ல பல் வேறு வகையான திட்டங்களில் மொத்த ரயில் கட்டணத்தில் 20 % வரை சலுகை அளிக்கின்றது. 

உதாரணத்திற்க்கு " "Bharat Darshan Special Tourist Train" இது  HYDERABAD - HARIDWAR - RISHIKESH - VARANASI - KOLKOTTA - PURI - KONARK - BHUBANESHWAR . ஆகிய இடங்களில் உள்ள 12 கோயில்களுக்கு செல்கின்றது.  14 நாள்களுக்கு  ஒரு நபருக்கு ரூ.7695 வாங்குகின்றனர். இரயில் கட்டணம், உணவு , தங்கும் வசதி, இரயில் அல்லாமல் கோயில்களுக்கு சென்றுவர  பேருந்து போக்குவரத்து உட்பட அனைத்தும் சேர்த்து இந்த தொகை.  இதை ஆராய்ந்தால் இரயில் கட்டணத்தில் 20 % சலுகை வருகின்றது

தற்போது இந்துக்களின் புன்னிய ஸ்லத்திற்க்கு செல்ல 4 திட்டங்களை இந்தியன் ரயில்வே துறை அறிவித்துள்ளது.   ஆனால் முஸ்லீம்களுக்கோ, கிருத்துவர்களுக்கோ  எந்த சலுகை திட்டமும் இல்லை. இன்னும் கோயில்களின் பக்தர்களுக்கு பல்வேரு சலுகைகளை அரசு வழங்கிவருகின்றது. நிலைமை இப்படி இருக்க ஹஜ் பயனிகளுக்கு மட்டுமே அரசு மானியம் தருவதாக கூறுவது வடிகட்டிய பொய் என்பதை முஸ்லீம் அல்லாதோர்களுக்கு நான் சொல்ல வேண்டும்.

S.சித்தீக்.M.Tech

Monday, 14 March 2011

இளைஞர்களே! விழித்தெழுங்கள் - கிரிக்கெட்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்டிலே, மக்களால் குறிப்பாக இளைஞர்களால் அதிகமாக உச்சரிக்கப்படுகிற ஐந்து எழுத்து மந்திரச் சொல் எது என்று கேட்டால், கிரிக்கெட் என்று அடுத்த வினாடியே சொல்லிவிடுவார்கள். கிரிக்கெட் சம்பந்தமாக எழுதப்படாத பத்திரிக்கைள், காட்டப்படாத தொலைக்காட்சிகள், சொல்லப்படாத வானொலிகள் பாவம் செய்தவையாக மக்களால் எண்ணப்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி, சாதி மத பேதமின்றி ஒன்றை ரசிக்கிறார்கள் என்றால் அது கிரிக்கெட் ஒன்றாகத்தான் இருக்கும். நாட்டு நடப்புகள் உலக விஷயங்கள் அரசியல் மற்றும் இஸ்லாம் பற்றிய விபரங்கள் பற்றி தெரியவில்லையா பரவாயில்லை! ஆனால் கிரிக்கெட் பற்றி புள்ளி விபரங்கள் ஒருவருக்குத் தெரியவில்லையெனில் அவர் அறிவீனராக கருதப்படுகிறார். அந்த அளவிற்கு கிரிக்கெட் எனும் போதை தலைவிரித்தாடுகிறது.

இப்படிப்பட்ட அதி முக்கியத்துவம்? வாய்ந்த கிரிக்கெட்டைப் பற்றி இஸ்லாமியப் பார்வை என்ன என்று ஆதாரத்துடன் பார்ப்போம். முதலில் இஸ்லாம் ஆரோக்கியமான மற்றும் பயனுள்ள எந்த ஒரு விளையாட்டுக்கும் எதிரி அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்கள் அபிசீனியர்கள் நபி(ஸல்) அவர்கள் முன்னே தங்கள் ஈட்டிகளால் விளையாடிக் கொண்டிருந்தார்கள் அப்போது உமர்(ரலி) அவர்கள் வந்து (கோபமடைந்து) குனிந்து சிறு கற்களை எடுத்து அவற்றால் அவர்களை அடித்தார்கள் நபி(ஸல்) அவர்கள் உமரே! அவர்களை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள் (புஹாரி: பாகம் 3, அத்தியாயம் 56, எண்: 2901)
ஆனால் எந்த வித பலனுமில்லாத நேரத்தை வீணடிக்கிற, அறிவுக்கு சம்பந்தமில்லாத, சூதாட்டத்தை ஊக்குவிக்கிற, நாட்டின் முன்னேற்றப்பாதையில் வளர்ச்சியில் தடை போடுகிற, ஆபாசத்தை தூண்டுகிற (Cheer Girls), ஆரோக்கியத்துக்கு அப்பாற்பட்ட எந்த ஒரு விளையாட்டையும் இஸ்லாம் ஒரு போதும் ஆதரிக்கவில்லை. ஆங்கிலேயர்களால் திட்டமிட்டு விட்டுச் செல்லப்பட்ட ஆபத்துதான் இந்த கிரிக்கெட் என்று சொன்னால் மிகையாகாது. கிரிக்கெட் எனும் மாயப்பேயினால் நிகழக்கூடிய ஆபத்துக்களை ஆதாரத்துடன் ஒவ்வொன்றாக பார்ப்போம்.
தொழுகையை விடக்கூடிய நிலை:
கிரிக்கெட் விளையாடக்கூடிய, பார்க்கக்கூடிய ஒருவர், (அது பகல் ஆட்டமாகவோ அல்லது இரவு ஆட்டமாக இருந்தாலும் சரியே) தொழுகையை விடுபவராக இருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் ஒரு முஸ்லிம் ஐந்து நேரத் தொழுகையை கண்டிப்பாக ஐமாஅத்தோடு தொழக் கூடியவராக இருக்க முடியாது.
அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப்படும்போது தொழுகையைப் பற்றித்தான் முதன்முதலாக விசாரிக்கப்படும் (அபூதாவூது)
தொழுகையை விட்டுவிட்டு கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு இருக்கும் ஒருவர் மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் இந்த கேள்விக்கு என்ன பதில் தயாரித்து வைத்து இருக்கிறார்? தொழுகையை விடுவதால் இஸ்லாமிய வட்டத்தில் இருந்து வெளியே செல்லக்கூடிய நிலை இருக்கும்போது அப்படிப்பட்ட விளையாட்டு நமக்குத் தேவைதானா? இளைஞர்களே சிந்திக்கக் கடமைப்பட்டு உள்ளீர்கள்!
வீண் செலவுகள் பண விரயம்:

இந்த விளையாட்டைப் போன்று எந்த ஒரு விளையாட்டிலும் பணம் வீணடிக்கப்படுவதில்லை. போட்டிகளைக் காண டிக்கெட் வாங்குவது, டிஷ் (குடை) வைப்பது, பணம் கொடுத்து கட்டண சேனல்களை (Pay Channel) பெறுவது, எல்லாமே வீண்செலவுகள். தான தர்மங்கள் செய்வதில் இருந்து விலகி நிற்கும் இவர்கள், போட்டிகளை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்வது ஆச்சரியமாக உள்ளது. அத்தியாவசிய செலவுகள் செய்வதற்கு ஆயிரம் முறை யோசிக்கக்கூடியவர்கள் கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்யத் தயங்குவதில்லை.
இவர்கள் திர்மிதியில் இடம் பெற்ற ஒரு ஹதீதை வசதியாக மறந்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. 'முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் மறுமை நாளில், நான்கு கேள்விகளுக்கு பதில் சொல்லாத வரையில் ஒரு அடிகூட முன்னால் எடுத்து வைக்க முடியாது. அவற்றில் ஒன்றுதான் சம்பாதித்த பணத்தை எவ்வாறு செலவு செய்தாய்... (திர்மிதி)
மேலும் இளைஞர்களே! இறைவன் கூறுவதுபோல் வீண் செலவுகள் செய்து ஷைத்தானின் சகோதரர்களாகி விடாதீர்கள். நிச்சயமாக வீண்விரயம் செய்வோர் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ தன் இரட்சகனுக்கு நன்றி செலுத்தாது மாறு செய்தவனாக இருக்கின்றான். (17:27)
பணம் புகழ் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை:

கிரிக்கெட் வீரர்கள் போன்று பணம் புகழ் ஈட்ட வேண்டும் என்ற பேராசை காரணமாக மார்க்கம், படிப்பு எல்லாவற்றையும் விட்டுவிட்டு கிரிக்கெட் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் செல்வச்செழிப்பில் மிதப்பதை பார்த்துவிட்டு இந்திய அணிக்காக விளையாடினால் கோடீஸ்வரனாகி விடலாம் என்ற எண்ணத்தில் அதிகமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு பதிலாக கிரிக்கெட் விளையாடுவதற்கு பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.
பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளை இஸ்லாமிய முறைப்படி வளர்க்க வேண்டிய பொறுப்பு உங்கள் மீது சாட்டப்பட்டுள்ளது.
இறைவன் திருமறையில் கூறுகிறான் (செல்வத்தையும், மக்களையும்) ஒருவருக்கொருவர் அதிகமாகத் தேடிக்கொள்வது உங்களைப் பராக்காக்கிவிட்டது. (102:1).
இறைவன் கூறுவது போல செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை பராக்காக்கி விடவேண்டாம் மறுமைநாளில் இறைவன் முன்னிலையில் என்னுடைய குழந்தைகயை இஸ்லாமிய முறைப்படி வளர்த்தேன் என்று பயமில்லாமல் சொல்லக்கூடிய ஒருவராக அனைத்து பெற்றோர்களையும் ஆக்கி வைப்பானாக!
பொழுதுபோக்கு:
மிகப்பெரும் அறிஞர்கள் கூட இந்த விஷயத்தில் மூளை மழுங்கடிக்கப்படுகிறார்கள் என்பது நிதர்சனமாக உண்மை. ஒரு உண்மையான இறைவிசுவாசிக்கு வணக்கவழிபாடுகள் மற்றும் நியாயமான அன்றைய தேவைகளுக்கு 24 மணி நேரம் போதாமல் இன்னும் ஒரு சில மணி நேரங்கள் இருந்தால் இபாதத்துகள் செய்வதற்கு நன்றாக இருக்குமே என்று நினைப்பான், நிலைமை இப்படி இருக்கும்போது, பொழுது போக்குவதற்கு என்று எங்கே நேரம் ஒதுக்க முடியும். இளைஞர்களே! உங்களுக்கென்று, இறைவன் பொறுப்புகளை ஒப்படைத்துள்ளான் பொழுது போக்குவதற்கு என்று நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலையில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். மறுமையில் இறைவன் முன்னிலையில் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாய நிலையில் இருக்கிறோம்.
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுமை நாளில் இறைவன் முன்னிலையில் நேரத்தை எவ்வாறு செலவழித்தாய் என்ற கேள்விக்கு பதில் சொல்லாத வரை ஒரு அடிகூட முன்னால் எடுத்து வைக்க முடியாது. (திர்மிதி)
விலைமதிப்பற்ற நேரத்தை கிரிக்கெட் பார்ப்பதில் கழித்துவிட்டு மறுமைநாளில் நஷ்டமடைந்தோரில் ஒருவராக நம்மை ஆக்கிவிடாமல் அல்லாஹ் அருள்புரிவானாக!.
உடல் ஆரோக்கியம்:
இந்த விளையாட்டை நியாயப்படுத்துவோர் கூறும் அநியாயமான காரணம்தான் இந்த உடல் ஆரோக்கியம். பகல் முழுக்க அல்லது இரவிலோ வெயில் மற்றும் குளிரில் உடலை வருத்திக் கொண்டு விளையாடுவது தான் ஆரோக்கியமான விளையாட்டு எனில் ஆரோக்கியமாக விளையாடக்கூடிய மற்ற விளையாட்டுக்களை என்னவென்று கூறுவார்கள். கிரிக்கெட் விளையாடுபவர்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும் நேரத்தை விட ஆரோக்கியமில்லாமல் இருக்கும் நேரம்தான் அதிகம். Unfit, Cramp, Injury, Back pain, Wounds, Shoulder Operation போன்ற வார்த்தைகள் எல்லாம் கிரிக்கெட் விளையாடுபவர்களுக்காக உருவாக்கப்பட்ட வார்த்தைகள் என்பது மறுக்கமுடியாத உண்மை. இதுதான் ஆரோக்கியம் என்றால், அந்த ஆரோக்கியம், இஸ்லாமிய இளைஞர்களே, நமக்குத் தேவையில்லை.
இறைவன் திருமறையில் இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள் (2:185) என்று கூறுகிறான். ஆகையால் கிரிக்கெட்டை விட்டு விலகி நில்லுங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள்.
சூதாட்டம்:
கிரிக்கெட்டும், சூதாட்டமும் பிரிக்க முடியாததாக ஆகிவிட்டதோ என்று எண்ணும் அளவிற்கு நிலமை மோசமாகிவிட்டது. நாளுக்கு நாள் புதிய புதிய சட்டங்களை உண்டாக்குவதன் மூலம், சூதாட்டம் அதிகமாகிக் கொண்டு இருப்பதையே காட்டுகிறது. சூதாட்டத்தில் ஈடுபடாத பிரபல கிரிக்கெட் வீரர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். Match fixing, Bookies இவைகள் எல்லாம் கிரிக்கெட்டும், சூதாட்டமும் இரண்டறக் கலந்து விட்டதையே காட்டுகிறது. இறைவன் திருமறையில் கூறுகிறான்.
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதல் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும். (5:90)
கிரிக்கெட் விளையாடுவதன் மூலமாகவோ அல்லது கண்டுகளிப்பதன் மூலமாகவோ ஏதோ ஒரு வகையில் சூதாட்டத்தை ஊக்குவிப்பவர்களாகவே இருக்கின்றோம். ஆகையால் இளைஞர்களே! ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ள இந்த கிரிக்கெட்டில் சூதாட்டத்தில் இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள அல்லாஹ் போதுமானவன்.
ஆடைகுறைப்பு அழகிகள்:
மேற்கத்திய நாடுகளில் பிரபலமான, ஆட்டத்தின் நடுவே ரசிகர்களை மகிழ்விக்க இந்த அரைகுறை அழகிகள்? நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆடை குறைப்பு, புயல் இந்தியாவையும் மையம் கொண்டு விட்டது. இந்த ஆடைகுறைப்பு அழகிகளின்? (Cheer Girls) ஆட்டம், இந்திய போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என்றே கூறலாம். ஆட்டத்தின் நடுவே காட்டப்படும் அழகிகளில் ஆட்டம் விபச்சாரத்தின் பக்கம் இட்டுச் செல்ல காரணமாக அமைகிறது.
கண்கள் செய்யும் விபச்சாரம் பார்ப்பது என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள். (புஹாரி 609)
இறைவன் திருமறையில் '(நபியே) முஃமினான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் (24:30)
கிரிக்கெட் போட்டிகளைக் காண்பதன் மூலம் நாம் கண்களால் விபச்சாரம் செய்தவர்களாக ஆகிவிடுகிறோம் மேற்கண்ட குர்ஆன் ஹதீதை கண்ணியப்படுத்தும் வகையிலும் விபச்சாரத்தின் பக்கமும் நம்மை இட்டுச் செல்லாமலும் இருக்க கிரிக்கெட் போட்டிகளை காண்பதில் இருந்து தடுத்துக் கொள்ளுமாய் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
தனிநபர் வாரியங்களின் வளர்ச்சி:
தீமைகளுக்கு துணை போகிற நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிற கிரிக்கெட் விளையாட்டால் தனி நபர்கள் BCCI போன்ற வாரியங்கள்தான் செல்வச் செழிப்புடன் திளைக்கின்றன. ஒரு கிரிக்கெட் வீரரின் 2 வருடத்திற்கு முந்திய சொத்து மதிப்பு 200 கோடிகளுக்கு மேல். இப்படி பல கிரிக்கெட் வீரர்களின் சொத்துக்களை முடக்கினால் ஒரு மாநிலத்தின் பட்ஜெட்டையே சமாளித்துவிடலாம். உலகத்தில் கிரிக்கெட் அதிகம் பார்க்கும் நாடு கிரிக்கெட் விளையாட்டால் அதிக வருமானம் பெறும் வாரியம், இவற்றால் ஒரு நாட்டின் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு என்ன பயன்? நாட்டுக்காக உழைத்த எத்தனையோ தியாகிகள் பட்டினியால் வாடிக் கொண்டிருக்க நாட்டின் வளர்ச்சியில் ஒரு துளி பங்களிப்புக்கூட இல்லாத இவர்கள் கோடிகளில் புரண்டு கொண்டிருக்கிறார்கள் இது ஒரு வெட்கக்கேடு! ஆகையால் தனி நபர்கள் வாரியங்கள் மட்டுமே பயனடைகிற ஒரு நாட்டுக்கு எந்த விதத்திலும் பலனில்லாத இந்த விளையாட்டுக்களை அரசாங்கம் தடை செய்தால்கூட பொருத்தமாக இருக்கும். இளைஞர்களே! நீங்கள் செலவழிக்கின்ற ஒவ்வொரு பைசாவும் வீணாக அவர்களை சென்றடைகிறது என்பதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இளைஞர்களே! விழித்தெழுங்கள் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பஜர் மற்றும் இஷா தொழுகையை ஜமாஅத்தோடு தொழாதவர்களை முனாபிக் என்று அடையாளம் காட்டியுள்ளார்கள். காலை நேரத்தில் கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்காக விழித்தெழும் நாம் பஜ்ர் தொழுகைக்கு தூங்கிக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது.
இளைஞர்களே! உங்கள் கால்கள் விளையாட்டு மைதானங்கள் (Stadium) பக்கம் செல்வதில் இருந்தும் தவிர்த்து பள்ளிவாசல்கள் பக்கம் செல்வதற்கு முயற்சி செய்யுங்கள்.
இளைஞர்களே! உங்கள் முன் இந்த சமுதாயத்தை தட்டி எழுப்பக்கூடிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது மறுமையில் உங்கள் பொறுப்புகளைப்பற்றி கண்டிப்பாக வினவப்படுவீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்
இளைஞர்களே! கிரிக்கெட் வீரர்களை Roll Modelலாக ஆக்காமல் திருக்குர்ஆனில் 85வது அத்தியாயத்தில் சொல்லப்படுகிற ஓரிறைக் கொள்கையை மக்கள் முன்னியைலில் எடுத்து வைப்பதற்காக தன்னுயிரை மாய்த்துக் கொண்டு பல்லாயிரக் கணக்கான மக்களை ஈமானின் பக்கம் திரும்ப வைத்த இளைஞரை உங்களுடைய முன்மாதிரியாக (Roll Model) ஆக்கிக் கொள்ளுங்கள்.

இறைவன் இந்த சமுதாயத்தை கிரிக்கெட் என்ற படுகுழியில் விழுவதில் இருந்தும் காப்பாற்றி கரை சேர்ப்பானாக ஆமீன்.
 
ABU AHMED ANWAR ALI

Sunday, 13 March 2011

பலன் எதிர்பாரா நற்செயல் பலன் தரும்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


ஒரு முறை ஒரு மன்னரும் அவர் அமைச்சரும் மாறுவேடத்தில் நகரை வலம் வந்தனர்.

அப்போது வயதான முதியவர் ஒருவர் பழச்செடி ஒன்றை நடுவதைக் கண்டனர்

மன்னர் முதியவரை நெருங்கி “தாங்கள் மரணத்தை நெருங்கும் முதியவராக இருக்கிறீர்.  இந்த செடி மரமாய் வளர்ந்து பழத்தை நீங்கள் உண்ணவா போகிறீர்கள் ...... இச்செடியின் பழத்தை உண்ணும் அளவுக்கு வாழ பேராசை ஏன்? என்றார்

அம்முதியவரோ ” இப்படி ஒவ்வொருவரும் பல ஆண்டு கழித்து விளையும் கனியை நாம் உண்ணவாப் போகிறோம் என்று எண்ணி செடிகளை நடாமல் இருந்தால் பூமியில் பழ மரங்கள் உண்டாகுமா என்றார்

அதைக் கேட்டு மகிழ்ந்த மன்னர் அவருக்கு ஒரு பொன்முடிப்பு தந்தார்

அப்போது அந்த முதியவர் ” என் செடி எனக்கு பலனளிக்குமா என்றீர்களோ இதோ பாருங்கள் உடனே பலன் தந்துவிட்டதே” என்றார்

அதைக் கேட்டு மகிழ்ந்த மன்னர் அவருக்கு மீண்டும் ஒரு பொன்முடிப்பு தந்தார்

அப்போது அந்த முதியவர் ” ஒரு மரம் வருடத்தில் ஒரு முறை தான் கனி தரும் ஆனால் நான்  நட்ட இந்த செடியோ ஒரே நேரத்தில் இரண்டு முறை பலன் அளித்து விட்டதே என்றார்

அதைக் கேட்டு மகிழ்ந்த மன்னர் மூன்றாம் முறையாக அவருக்கு ஒரு பொன்முடிப்பு தந்தார்

பிறகு தன் அமைச்சரிடம் இந்த இடத்தில் நாம் இருந்தால் இந்த முதியவர் இப்படி புத்திசாலித்தனமாகப் பேசிப் பேசியே நம் மொத்த கஜானாவையும் காலி செய்திடுவார் என்று சொல்ல இருவரும் அந்த இடத்தை விட்டு அகன்றனர்

இக்கதையிலிருந்து  ”பலன் எதிர்பாராமல்  செயல் நற்செயல் உடனே பலன் தரும் ” என்பதாகும்


With best regards
உண்மைச் சம்பவத்தை கதை வடிவில் எழுதியவர்கமால் Kamal