Tuesday, 23 November 2010

செல்போன்கள்... ஜாக்கிரதை



செல்போன்கள்... ஜாக்கிரதை! 

எப்போதும் செல்போனும் கையுமாக இருந்த கல்லூரி மாணவியான தனது மகளை கண்டித்தார் அப்பா. மகளிடமிருந்து செல்போனை பிடுங்கிக் கொண்டார். அவ்வளவுதான், செல்போன் போனதால் சகலமும் போனதாக நினைத்த அந்தப் பெண் தற்கொலை செய்துக் கொண்டார். சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் நடந்த துயரச் சம்பவம் இது. செல்போனின் தாக்கம் சமூகத்தில் அதிர்ச்சியான சம்பவங்களை ஏற்படுத்தி வருகிறது.
வறுமையோ, வளமையோ நிலைமை எப்படி இருந்தாலும் இந்த காலத்தில் தவிர்க்க முடியாத உபகரணமாக  மாறியிருக்கிறது செல்போன். எந்த தகவலையும் இருந்த இடத்தில் இருந்து உடனுக்குடன் பெறவும், தரவும் உள்ள வசதி அசாதாரமானது. பல தேவைகள் உடனுக்குடன் நிறைவேறுவதுடன், சில பிரச்னைகளை தீர்க்கவும் உதவுகிறது.
அதனால் உலகில் 500 கோடி பேர் செல்போன் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 67 கோடியை தாண்டி விட்டது. ஒவ்வொரு மாதமும் சுமார் 1.8 கோடி இணைப்புகள் விற்பனையாகின்றன. நாட்டில் 100க்கு 59 பேரிடம் செல்போன் உள்ளன. செல்போன் சேவை நாட்டில் தொடங்கிய காலத்தில் ஒரு அழைப்புக்கு நிமிடத்திற்கு 24 ரூபாய் கட்டணம். இப்போது 10 காசுகளுக்கு பேசிக் கொள்ளலாம்.
நாளெல்லாம் இலவசமாக பேசிக் கொள்ளும் சேவைகள் பலவும் அறிமுகமாகியுள்ளன. பலன் தரும் செல்போன்களின் பயன்பாடு, இப்போது பாதகமாகவும் மாறியுள்ளது.
செல்போனை கையில் வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாமல் எப்போதும் யாருடனாவது பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஏங்குகின்றனர். வருகின்ற அழைப்புகளில் எதிர்முனையில் எதிர் பாலினமாக இருந்தால் மணிக் கணக்கில் பேச ஆரம்பித்து விடுகின்றனர். அது முகம் தெரியாதவர்களாக இருந்தாலும், அவர்கள் பின்னணி என்னவாக இருந்தாலும் யாரும் கவலைப்படுவதில்லை. இப்படி பேசியே காதல் கோட்டை கட்டியவர்களும் இருக்கிறார்கள். கம்பி எண்ணியவர்களும் இருக்கிறார்கள்.
செல் போதையில் சிக்கி பல குடும்ப உறவுகள் சீரழிந்து இருக்கின்றன. இன்னொரு பக்கம் உடலும் கெடுகிறது. செல்போனில் இருந்து வெளியேறும் மின்காந்த கதிர்களால் உடல் நலம் பாதிப்பதாக பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. புற்றுநோய், கண்புரை, காது கேளாமை, கருச்சிதைவு, மனநோய், மலட்டுத்தன்மை என பாதிப்புகளின் பட்டியல் நீளுகின்றன. செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன.  விஞ்ஞானத்தின் அரிய வளர்ச்சி செல்போன். அதை உடல், உள்ளம், உறவுகளை பாதிக்காமல் பயன்படுத்தும் பக்குவம் அவசியம்.
கோபுரங்களால் கோடி தொல்லை
செல்போன் டவரால் மனிதர் மட்டுமின்றி உயிரினங்களும், தாவரங்கள் கூட பாதிக்கப்படுவதாக  ஆய்வுகள் சொல்கின்றன. செல்போன் கோபுரங்களுக்கு முதலில் பலியானது சிட்டுக்குருவிகள்தான்.  கோபுரங்களில் வெளியாகும் கதிர் வீச்சால் மனிதர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக கருவுற்றிருக்கும் பெண்களுக்கு குறை பிரசவம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
ஓரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் செல்போன்களின் கோபுரங்கள் அமைப்பதால் ஏற்படும் பாதிப்பின் வீச்சு அதிகம் என்று அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களும் சொல்கிறார்கள். வெளிநாடுகளில் பள்ளிகள், குழந்தை காப்பகங்கள், மருத்துவமனைகள் உள்ள இடங்களில் செல்போன் கோபுரங்கள் அமைக்க தடை உள்ளது. அதேபோல் குடியிருப்பு பகுதிகளிலும் கோபுரங்கள் அமைக்க கூடாது. குறைந்தது 100 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. நம் நாட்டில் எந்த விதிமுறைகளும் கிடையாது.
கழிவறைகளில்...
யார் கேட்டாலும் சிலர் தங்கள் மொபைல் எண்களை தந்து விடுகின்றனர். இந்த விஷயத்தில் பெண்கள் கொஞ்சம் அசட்டையாக இருக்கின்றனர். ரயில் சினேகிதர்கள் கூட செல்போன் எண்களை பெற்று விடுகின்றனர். பேச்சு வளர்ந்து பெரும்பாலும் திசை மாறி போய் விடுகிறது.   தவிர்க்க முயலும்போது கோபமடைபவர்கள், அதே ரயிலின் கழிவறைகளில் அந்த செல்போன் எண்களை எழுதி வைத்து விடுகின்றனர்.
இதேபோல் காதலிக்க மறுத்த பெண்களின் எண்களை, பகையுள்ள குடும்பத்தின் பெண்களின் எண்களையும் எழுதி விடுகின்றனர். ரயில் கழிவறைகள் என்றில்லை, பேருந்து நிலையம்மருத்துவமனை என பல இடங்களில் பொது கழிவறைகளிலும் பெண்ணின் பெயருடன் எண்ணை எழுதி வைத்து விடுகின்றனர். பாலியல் தொழில் செய்யும் பெண்களாக சித்தரித்து விடுகின்றனர். இப்படி கண்ட எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை பார்த்து பெண்கள் மனநோயாளிகள் ஆவதுதான் மிச்சம்.
காவல்துறை சொல்வதென்ன?
செல்போனில் வீடியோ கேமரா, இன்டெர்நெட் வசதி வந்த பிறகு புகார்களின் எண்ணிக்கை  உயர்ந்துள்ளது. முழு சுகம் வேண்டுமா? தொடர்பு கொள்ளவும் என்று பெண்களின் செல்போன் எண்ணை குறிப்பிட்டு எஸ்எம்எஸ் அனுப்பி விடுவார்கள். இதேபோல் ரியல் எஸ்டேட் தரகர் ஒருவர்உரிமையாளர் எண்ணை குறிப்பிட்டு, தொடர்பு கொள்ளவும் நிலம் விற்பனைக்கு உள்ளது என்று பலருக்கு எஸ்எம்எஸ் அனுப்பி விட்டார். உரிமையாளர் விற்பதற்கில்லை என்று பதில் சொல்லி சொல்லி ஓய்ந்து விட்டார். அப்புறமென்ன இந்த சம்பவங்கள் குறித்து வந்த புகார்களின் அடிப்படையில் விசாரித்து நடவடிக்கை எடுத்தோம். தொடர்ந்து மிஸ்டு கால் கொடுப்பதும் குற்றம்தான் என்கிறார் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் டி.தங்கராஜ்.
வெறும் 2 நிமிடங்கள்தான்
சென்னை மருத்துவக் கல்லூரியின் காது மூக்கு தொண்டை மருத்துவப் பிரிவு முன்னாள் தலைவர் கே.பாலகுமார், Ô‘செல்போனில் நீண்ட நேரம் பேசுவதால் செவித்திறன் குறையும். கவனிக்காமல் விட்டால் காது கேட்காது. அதுமட்டுமின்றி காதில், மூளையில் கட்டிகள் ஏற்படும். இது கேன்சர் கட்டியாகவும் இருக்கலாம். சிந்தனைத் திறன் குறையும். நினைவாற்றல் குறையும். நரம்பு மண்டலம் பாதிக்கும். காதில் முதலில் வலி தோன்றுவதுதான் முதல் எச்சரிக்கை. அடுத்து கேட்கிற தன்மை குறையும். பின்னர் காதில் இரைச்சல் கேட்கும். இது இறுதியான எச்சரிக்கை. அதற்கு பிறகும் செல்போனில் பேசுவதை குறைத்து டாக்டரை அணுகாவிட்டால் பிரச்னைதான்.
யாராக இருந்தாலும் 2 நிமிடங்களுக்கு மேல் செல்போனில் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அவசியம் என்றால் வீட்டுக்குப் போய் நிதானமாக சாதாரண தொலைபேசியில் பேசிக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு பல மணி நேரம் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தால் காது கேளாதவர்கள் பட்டியலில் சேர வேண்டியதுதான். செல்போனை அப்படியே காதில் வைத்தோ அல்லது புளூடூத் பயன்படுத்தி பேசுவதை விட ஹெட்போன்(ஹாண்ட்ஸ் ஃப்ரீ) பயன்படுத்தி பேசுவது ஓரளவுக்கு பாதுகாப்பானது. அதேபோல் சார்ஜ் செய்துக் கொண்டிருக்கும போது பேசுவதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்றார்.
எச்சரிக்கை அவசியம்
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் டாக்டர் சுதாகர் கூறுகையில், ‘‘செல்போன் வாங்கும்போது உத்திரவாத அட்டை, ரசீதுடன் வாங்க வேண்டும். ஐஈஎம்ஐ எண்ணை குறித்து வைத்துக் கொள்வது நல்லது. காணாமல் போனால், எண்ணை செயலிழக்கச் செய்வது நல்லது. இல்லாவிட்டால் போனை எடுத்தவர்கள் தவறாக பயன்படுத்தினால், சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். தெரியாத நபர்களிடம் செல்போனை கொடுக்கவே கூடாது. செல்போனை பழுது பார்க்க தரும் போது சிம்கார்டு, மெமரி கார்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். செல்போன் குற்றங்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 506(1), 507 ஆகிய பிரிவுகளின் கீழ் 2 ஆண்டுகள் வரை தண்டனை உண்டு. அபராதமும் வசூலிக்கப்படும். பாதிக்கப்படுவது பெண்ணாக இருந்தால் 509 பிரிவு கூடுதலாக சேர்க்கப்படும்Õ’ என்றார்.

செல்போனில் பேச்சு; ரகசியம் போச்சு
செல்போனில் பேசினால் யாருக்கும் தெரியாது என்று சகலத்தையும் செல்போனில் கொட்டுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். நாம் பேசும் அனைத்தும் டேப் செய்யப்படும்.  ஒவ்வொரு செல்போன் நிறுவனமும் ஒவ்வொரு மாதமும் இணைப்பு பெறும் வாடிக்கையாளர் விவரங்களையும், எண்ணையும் மத்திய, மாநில உளவு துறைகள் உட்பட 7 நிறுவனங்களுக்கு தனித்தனி குறுந்தகடில் தருவார்கள். அவர்கள் சந்தேகப்படும எண்களை கவனிப்பார்கள்.
செல்போனில் நீலம்
செல்போன் வந்து விட்டபிறகு ஸ்டில் கேமரா, வீடியோ கேமரா எல்லாம் கைக்குள் வந்து விட்டன. சிலர் தங்கள் உறவு காட்சிகளை கூட படம் பிடித்துக் கொள்கிறார்கள். த்ரில்லுக்காக எடுக்கும் தம்பதிகளை விட திருட்டுத்தனமாக எடுத்துக் கொள்ளும் கள்ளக் காதலர்கள் அதிகம். தெரிந்தோ, தெரியாமலோ எடுக்கப்படும் படங்களை நண்பர்களுக்கு பகிர்ந்துக் கொள்ளவும் செய்கின்றனர். அங்கிருந்து பல நூறு பேர்களுக்கு பரவி, இன்டர்நெட் மூலம் மாநிலம், தேசம் கடந்து விடுகிறது. ஒரு சிலர் இதனை இணையதளங்களுக்கு விற்று காசாக்கி விடுகின்றனர். இந்த விஷயம் வீட்டில் தெரியும் போது பிரச்னையாகி விடுகிறது. இப்படி குடும்பங்கள் சீர்குலைவது தொடர்கதையாகி வருகிறது. அதுமட்டுமல்ல நீலப்படம் பார்க்க ஊருக்கு ஒதுக்குபுறமான திரையரங்குகளை தேடிச் செல்வார்கள். செல்போனில் பரவும் செக்ஸ் வீடியோக்களால் இந்த பிட் திரையரங்குகள் நலிந்து விட்டன. 
ஆண்மைக்கும் ஆபத்தா...
பாலியல் மருத்துவ நிபுணர் டாக்டர்.டி.காமராஜ், செல்போனை இடுப்பு பெல்ட்டில் சொருகி வைத்திருப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து குழந்தை பேறு இல்லாமல் போவது குறித்து பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அதேபோல் மடிக் கணினிகளை மடியில் வைத்துக் கொண்டு நீண்ட நேரம் பயன்படுத்துவதும் இதே பிரச்னையை ஏற்படுத்துகிறது. செல்போனை வெறுமனே (பேசாத போதும்) சொருகி வைத்திருந்தாலும் இந்த பிரச்னை ஏற்படும். தொடர்ந்து 4 மணி நேரம் செல்போனில் பேசினாலும் பாதிப்புதான். செக்சில் ஆர்வத்தைஏற்படுத்தும் டெஸ்டோடிரான் என்ற ஹார்மோன்களின் எண்ணிக்கை குறைகிறது. இதனால் ஆண்மை குறைகிறது. செல்போன்களை பயன்படுத்துவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த ஆய்வு முடிவுகளும் வெளியாகவில்லை’’ என்றார்.
செல்போன் போதை
வீட்டுக்கு தெரியாமல் விவகாரங்களில் ஈடுபடுபவர்கள் ஆளுக்கு ஒரு சிம் கார்டு பயன்படுத்துகிறார்கள். வீட்டை விட்டு வெளியில் வந்ததும் வரிசையாக மிஸ்டு கால் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். யார் முதலில் சிக்குகிறார்களோ அவர்களிடம்  கல்லூரி, அலுவலகம், தொழிற்சாலை போய் சேரும் வரை பேசிக்கொண்டே இருப்பார்கள். மிஸ்டு கால் கிடைத்த மற்றவர்களுக்கு இணைப்பு கிடைக்காது. இப்படி 24 மணி நேரமும் செல்போன் போதையில் வீழ்ந்துக் கிடப்பவர்களுக்கு மனநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கிறார் மனநல மருத்துவர் டாக்டர் விஜயகுமார்.
Thanks  (S.Abdul Rahuman)

மேல் சபை வாக்காளார் பட்டியல் சேர மீண்டும் ஒரு வாய்ப்பு- கடைசி தேதி நீட்டிப்பு- டிசம்பர் - 7

தமிழக அரசின் மேல் சபைக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதை மாநகாரட்சி மண்டல அலுவலகங்கள், வட்டாச்சியர் அலுவலகங்களில் சென்று சரிபார்த்துகொள்ளலாம். இதில் விடுபட்டவர்கள், மேலும் புதிதாக விண்ணப்பிக்க விரும்புவோர் டிசம்பர் 7 வரை விண்ணப்பிக்களாம். இறுதி வாக்காளர்பட்டியல் டிசம்பர் 29- ஆம் தேதி வெளியிடப்படும்.  எனவே இதுவரை விண்ணப்பிக்காத முஸ்லீம் பட்டதாரிகள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கவும்.
மேல்சபை வாக்காளர்  பட்டியலில் சேர்வதற்க்கான விபரம்

தமிழக மேல் சபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதில் இரண்டு பிரிவில் உள்ளவர்களே வாக்களிக்க முடியும். ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள்.
ஓட்டுக்காக அரசியல் நடத்தும் இந்த ஆட்சியாளர்களிடம் இருந்து நாம் நம் உரிமைகளை பெற இந்த வாக்காளர் பட்டியலில்  சேர வேண்டும். வாக்காளர் பட்டியலில் கணிசமான அளவு முஸ்லீம்கள் இருந்தால்தான் ஆட்சியாளர்கள் நம்முடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பார்கள். குறைந்த சதவீத்தில் இருந்தால் முஸ்லீம்கள் மீது ஆட்சியாளர்களின் அடக்குமுறை அதிகரித்துவிடும். நம் சமுதாயாத்தில் பட்டதாரிகளே குறைவு, அதிலும் சமூக அக்கரை உள்ள பட்டதாரிகள் மிக குறைவு, எனவே இந்த வாய்ப்பை விட்டுவிடாமல் சமுதாய நலன் கருதியாவது பட்டதாரி வாக்காளர் பட்டியலில் சேர வேண்டும்.
உங்களுக்கு தெரிந்த முஸ்லீம் பட்டதாரிகள், ஆசிரியர்கள் இருந்தால் இந்த தகவலை தெரியப்படுத்தலாம்.
யார் விண்ணப்பிக்கலாம்?
இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலை கழகத்தில் 2007-ல் பட்ட படிப்பு முடித்தவர்கள் மற்றும் 2007-க்கு முன்பாக பட்ட படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பகுதி நேரம் (Part Time) மற்றும் தொலைதூர கல்வியில் பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம்
எங்கு விண்ணப்பிப்பது?
மாநகராட்சி பகுதிகளில் : மாநகராட்சி மண்டல அலுவலகங்கள்
பிற ப்குதிகளில் : வட்டாட்சியர் அலுவலகங்கள்
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பங்கள் விணியோகிப்படும் மையங்களில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இணையதளத்திலும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் (Download) செய்யலாம் http://www.elections.tn.gov.in/tnmlc.html இந்த இணையத்தில் உள்ள படிவத்தை Download செய்து சான்றிதழ்களுடன் தபால் மூலமும் விண்ணப்பிகளாம்.
உடன் சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்
கீழ்காணும் சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை விண்ணப்ப படிவத்துடன் சமர்பிக்க வேண்டும்.
1.பட்ட சான்றிதழ் (Degree Certificate or provisional Certificate )
2. மதிப்பெண் சான்றிதழ்,
3. கல்லூரி முதல்வர் அல்லது துறை தலைவர் (Deen) கையொப்பமிட்ட சான்றிதழ்
3. அரசு துறையில் வேலைசெய்தால் அந்த துறையில் பெறப்பட்ட சான்றிதழ்.
மூல சான்றிதழை (ஒரிஜினல் சர்டிபிகேட்) சமர்பிக்க வேண்டாம். சான்றிதழை நகல் (Zerox copy) எடுத்து அரசுக் கல்லூரி முதல்வர், நகராட்சி கமிஷனர், யூனியன் பி.டி.ஓ., தாசில்தார்கள் இதில் ஒருவரிடம் கையொப்பம் வாங்கி சமர்பித்தால் போதும்.
மேலும் விபரங்கள் மாநகராட்சி / வட்டாட்சியர் அலுவலகங்களில் கிடைக்கும் அல்லது இந்த இணையத்திலும் http://www.elections.tn.gov.in/tnmlc.html தெரிந்துகொள்ளலாம்.
மேலும் விபரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிகும் போது ஏதேனும் பிரச்சனை இருந்தால் இந்த sithiqu.mtech@gmail.com மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்
Thanks  - (S.சித்தீக்.M.Tech)

Saturday, 20 November 2010

Dubai Sonapur - Izithima தியாகம் செய்வோம் வாருங்கள் !!!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

 தியாகம் செய்வோம் வாருங்கள் !!!

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் தமுமுக துபை மண்டலம் சோனாப்பூர் கிளையின் சார்பாக தியாகம் செய்வோம் வாருங்கள் என்ற தலைப்பில் பல்தியா கேம்பில் இஸ்லாமிய செய்பொழிவு நடைபெற்றது. அமர்வு சரியாக மாலை 4.00 மணிக்கு ஆரம்பமானது. முதல் அமர்விற்கு சகோ. கடையநல்லூர் அப்துல் ஹமீது தலைமை தாங்கினார்.நிகழ்ச்சின் ஆரம்பமாக சகோ.கொடுங்கையூர் முஹைதீன் அவர்கள் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார்.முதல் அமர்வின் துவக்கத்தில் சகோ. A.S. இப்ராஹிம் அவர்கள் நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்வு தரும் படிப்பிமை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.அவரது உரையில் நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் தனது தந்தை மற்றும் தனது சமூக மக்களிடத்தில் மார்க்கப்பிரச்சாரம் செய்த போது நடந்த சோதனைகளையும் இப்ராஹிம் (அலை) அவர்களின் குடும்பத்தார்கள் எல்லாவிதத்திலும் அல்லாஹ்வின் திருப்பொருத்திற்காக வேண்டி எந்த அளவிற்கு தியாகம் செய்ய முன்வந்தார்கள் என்பதையும் ஓரிறை கொள்கை விஷயத்தில் யாரிடத்திலும் எந்த சூழ்நிலையிலும் சமரசம் பேராமல் கொள்கை உறுதி கொண்டார்கள் என்பதையும் எடுத்துரைத்தார்கள்.
பிறகு சகோ.சென்னை முஹம்மது பிலால் அவர்கள் நபித்தோழர்களின் வாழ்வினிலே... என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அவரது உரையில் நபித்தோழர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை இந்த பூமியல் நிலைநாட்டுவதற்காக எப்படியெல்லாம் தன்னை அர்ப்பணித்து தியாகம் செய்தார்கள் என்பதையும் அதன்மூலம் அல்லாஹ்வின் திருப்பொருத்தைப்பெற்று சுவனம் செல்ல இருப்பதையும் அல்லாஹ் அவர்களைப் பற்றி குர்ஆனில் சிலாகித்து கூறியதை எடுத்துரைத்தார்கள்.உரையிலே குபைப் (ரலி) வாழ்க்கையில் நடந்த சம்பவத்தைப் பற்றி எடுத்துரைத்து அல்லாஹ்வின் தூதரை எந்த அளவிற்கு அவர் நேசித்தார் என்பதைப் பற்றியும் நினைவூட்டினார்கள்.
முதல் அமர்வின் இறுதியாக சகோ.நாஸர் அலி கான் அவர்கள் குர்பானியின் சட்டங்கள் என்ற தலைப்பில் உரையாற்றி சட்டங்களை எடுத்துரைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் குர்பானி கொடுத்த விதத்தையும் நமது காலத்தில் பிற சகோதரர்கள் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் குர்பானி கொடுப்பதையும் சுட்டிக்காட்டி சிந்திக்க வைத்தார்கள். அவரது உரை குர்பானியின் சட்டங்களை அறிந்திட மக்களுக்கு பயனுள்ள விதத்தில் இருந்தது. நாஸர் அலி கான் அவர்களின் உரைக்குப் பிறகு மஃக்ரிப் தொழுகைக்காக இடைவேளி விடப்பட்டது.மஃக்ரிப் தொழுகைக்குப் பின் சரியாக மாலை 6.00 மணியளவில்
இரண்டாம் அமர்வு நடைபெற்றது.இரண்டாம் அமர்வில் சகோ.ஜாஹிர் தலைமை தாங்கினார். தொடக்கமாக சகோ. அமீர் சுல்தான் அவர்கள் நேசமின்றி ஈமானில்லை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். தனது உரையில் நாம் யாருக்காக (அல்லாஹ்விற்காக) பிற சகோதரர்களை நேசிக்க வேண்டும் என்பதையும், நாம் சார்ந்து இருக்கின்ற ஜமாஅத்துகளுக்காக நாம் நேசம் கொள்ளக்கூடாது என்பதையும் எடுத்துரைத்தார்கள்.அல்லாஹ்விற்காக நேசிக்கக்கூடிய மக்களின் சிறப்புகளை குர்ஆனின் வசனங்களைக் கொண்டும் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளைக் கொண்டும் எடுத்துரைத்து அனைவரையும் சிந்திக்க வைத்தார்கள்.அதன்
பிறகு சகோ.கொடுங்கையூர் முஹைதீன் அவர்கள் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் அவாழ்வினிலே... என்ற தலைப்பில் இறுதியாக உரையாற்றினாhக்ள். அல்லாஹ்வின் தூதராக முஹம்மது (ஸல்) அவர்கள் பணியாற்றிய போது அவர்கள் சந்தித்த சோதனைகளை எடுத்துரைத்தார். தனது குடும்பத்தை இஸ்லாமிய வாழ்வியல் நெறியை கடைபிடிக்கக் கூடிய குடும்பமாக அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் உருவாக்கியதையும், இன்று நமது நிலை எப்படி இருக்கிறது என்பதையும் எடுத்துரைத்தார்கள். கண்களங்கக்கூடிய விதத்தில் அவரது உரை இருந்தது.
நிகழ்ச்சியின் இறுதியாக கறம்பகுடி ஃபக்ருதீன் அவர்கள் நன்றியுரைக் கூறி நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
அல்லாஹ்வின் கிருபையால் சகோதரர்கள் செய்யதலி, முஹைத்தீன், நஸ்ருதீன், நிஜாமுத்தீன், அப்துல் ஹகீம் ஆகியோர் சிறந்த ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். சோனாப்பூர் மற்றும் துபையின் பல பகுதிகளில் இருந்தும் திரளான சகோதரர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலைநாட்டுவதற்காக தங்களை எல்லாவிதத்திலும் அர்ப்பணிப்போம் என்ற ஈமானிய உணர்வோடு கலைந்து சென்றார்கள்.
(
அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே)




Tuesday, 9 November 2010

அபுதாபியில் ரமலான் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி

மேலப்பாளையம் MMCC WINNER OF RAMADAN CUP ABUDHABI- 2010!



அபுதாபியில் இரண்டாவது முறையாக நடைபெற்ற RAMADAN CUP-2010 இறுதிப்போட்டியில் மிகவும்எதிர்பார்க்கப்பட்ட மேலப்பாளையம் MMCC அணியினர் இறுதிப் போட்டியில் ETA-Melco அணியை மிக எளிதாகவென்று கோப்பையை கைப்பற்றினர்.
அந்த அணியின் காஜா (கேப்டன்), பாசில், ஞானியார் மற்றும் அருண்குமார் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றிபெறுவதற்கு உறுதுணையாக இருந்தனர்.
கடந்த ஒருமாத காலமாக நடைபெற்ற இந்த தொடரில் மேலப்பாளையம் MMCC, ETA- Melco, Emco மற்றும் Prime Tech ஆகிய அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற மேலப்பாளையம் MMCC மற்றும் ETA- Melco,இரு அணிகளும் கடந்த 29-10-2010 வெள்ளிக்கிழைமையன்று மோதின.
டாசில் வெற்றிபெற்ற மேலப்பாளையம் MMCC அணி முதலில் களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவரில்104 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பாக ஞானியார் 27 ரன்களும் அருண்குமார் 18 ரன்களும் எடுத்தனர். ETA- Melco அணியின் பந்துவீச்சாளர்கள் ரிபாய் 3 விக்கட்களும், ஜலீல் 2 விக்கட்களும் கைப்பற்றினர்.
105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கில் களமிறங்கிய ETA- Melco அணி நிர்ணயிக்கப்பட்ட 16ஓவரில் அனைத்து விக்கட்களையும் இழந்து வெறும் 84 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் சார்பாகரிபாய் 20 ரன்களும் ஷேக் 15 ரன்களும் எடுத்தனர். மேலப்பாளையம் MMCC அணியின் பந்துவீச்சாளர்கள் காஜா(கேப்டன்) 2 விக்கட்களும், பாசில் 2 விக்கட்களும் கைப்பற்றினர்.
இதன்மூலம் மேலப்பாளையம் MMCC அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மிக எளிதாக ETA- Melco அணியைதோற்கடித்து RAMADAN CUP- 2010 கோப்பையை கைப்பற்றியது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு ஜனாப் செய்யத் ஹமீத் அவர்கள், General Manager, ETA-Melco மற்றும் ஜனாப் இம்தியாஸ் அஹமத் அவர்கள், Manager, ETA-Melco ஆகிய இருவரும் சிறப்பு பார்வையாளர்களாக கலந்துகொண்டு பரிசுகளை அளித்தனர். பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்ததற்க்காக நிகழ்ச்சியின்இறுதியில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Monday, 8 November 2010

தியாகம் செய்வோம் வாருங்கள் - இஸ்லாமிய சொற்ப்பொழிவு

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்,
இன்ஷாஅல்லாஹ் வரும் வெள்ளிக் கிழமை
12 -11 -2010 , அன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் துபாய் மண்டலம் சோனப்பூர் கிளையின் சார்பாக மாலை 4 ;00 மணிமுதல் இஷா வரை பலுதிய கேம்பில் தியாகம் செய்வோம் வாருங்கள் என்ற அழைப்போடு இஸ்லாமிய சொற்ப்பொழிவு நடைப்பெற உள்ளது இந்நிகழ்வில் அனைவரும் கலந்துக் கொண்டு பயன் பெற அன்புடன் அழைக்கிறோம்,
வாருங்கள்   தியாகம் செய்வோம் !!!
jiyik
rNfh.filaey;Y}h; mg;Jy; `kPJ
ciufs;

rNfh.A.S.,g;uh`pk; : ,g;uh`pk; (miy) mth;fspd;tho;T jUk; gbg;gpid
rNfh.mkPh; Ry;j;jhd;: Nerk; ,d;wp <khd; ,y;iy
rNfh.kJf;$h; mg;Jy; fhjh;: egpj;Njhoh;fspd; tho;tpdpNy...
rNfh.eh]h; mypfhd; : Fh;ghdpapd; rl;lq;fs;
nksytp `]d; k];y`p : egp(]y;) mth;fspd; tho;tpdpNy

ed;wpAiu
rNfh./gf;UjPd;