Saturday, 20 November 2010

Dubai Sonapur - Izithima தியாகம் செய்வோம் வாருங்கள் !!!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

 தியாகம் செய்வோம் வாருங்கள் !!!

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் தமுமுக துபை மண்டலம் சோனாப்பூர் கிளையின் சார்பாக தியாகம் செய்வோம் வாருங்கள் என்ற தலைப்பில் பல்தியா கேம்பில் இஸ்லாமிய செய்பொழிவு நடைபெற்றது. அமர்வு சரியாக மாலை 4.00 மணிக்கு ஆரம்பமானது. முதல் அமர்விற்கு சகோ. கடையநல்லூர் அப்துல் ஹமீது தலைமை தாங்கினார்.நிகழ்ச்சின் ஆரம்பமாக சகோ.கொடுங்கையூர் முஹைதீன் அவர்கள் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார்.முதல் அமர்வின் துவக்கத்தில் சகோ. A.S. இப்ராஹிம் அவர்கள் நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்வு தரும் படிப்பிமை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.அவரது உரையில் நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் தனது தந்தை மற்றும் தனது சமூக மக்களிடத்தில் மார்க்கப்பிரச்சாரம் செய்த போது நடந்த சோதனைகளையும் இப்ராஹிம் (அலை) அவர்களின் குடும்பத்தார்கள் எல்லாவிதத்திலும் அல்லாஹ்வின் திருப்பொருத்திற்காக வேண்டி எந்த அளவிற்கு தியாகம் செய்ய முன்வந்தார்கள் என்பதையும் ஓரிறை கொள்கை விஷயத்தில் யாரிடத்திலும் எந்த சூழ்நிலையிலும் சமரசம் பேராமல் கொள்கை உறுதி கொண்டார்கள் என்பதையும் எடுத்துரைத்தார்கள்.
பிறகு சகோ.சென்னை முஹம்மது பிலால் அவர்கள் நபித்தோழர்களின் வாழ்வினிலே... என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அவரது உரையில் நபித்தோழர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை இந்த பூமியல் நிலைநாட்டுவதற்காக எப்படியெல்லாம் தன்னை அர்ப்பணித்து தியாகம் செய்தார்கள் என்பதையும் அதன்மூலம் அல்லாஹ்வின் திருப்பொருத்தைப்பெற்று சுவனம் செல்ல இருப்பதையும் அல்லாஹ் அவர்களைப் பற்றி குர்ஆனில் சிலாகித்து கூறியதை எடுத்துரைத்தார்கள்.உரையிலே குபைப் (ரலி) வாழ்க்கையில் நடந்த சம்பவத்தைப் பற்றி எடுத்துரைத்து அல்லாஹ்வின் தூதரை எந்த அளவிற்கு அவர் நேசித்தார் என்பதைப் பற்றியும் நினைவூட்டினார்கள்.
முதல் அமர்வின் இறுதியாக சகோ.நாஸர் அலி கான் அவர்கள் குர்பானியின் சட்டங்கள் என்ற தலைப்பில் உரையாற்றி சட்டங்களை எடுத்துரைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் குர்பானி கொடுத்த விதத்தையும் நமது காலத்தில் பிற சகோதரர்கள் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் குர்பானி கொடுப்பதையும் சுட்டிக்காட்டி சிந்திக்க வைத்தார்கள். அவரது உரை குர்பானியின் சட்டங்களை அறிந்திட மக்களுக்கு பயனுள்ள விதத்தில் இருந்தது. நாஸர் அலி கான் அவர்களின் உரைக்குப் பிறகு மஃக்ரிப் தொழுகைக்காக இடைவேளி விடப்பட்டது.மஃக்ரிப் தொழுகைக்குப் பின் சரியாக மாலை 6.00 மணியளவில்
இரண்டாம் அமர்வு நடைபெற்றது.இரண்டாம் அமர்வில் சகோ.ஜாஹிர் தலைமை தாங்கினார். தொடக்கமாக சகோ. அமீர் சுல்தான் அவர்கள் நேசமின்றி ஈமானில்லை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். தனது உரையில் நாம் யாருக்காக (அல்லாஹ்விற்காக) பிற சகோதரர்களை நேசிக்க வேண்டும் என்பதையும், நாம் சார்ந்து இருக்கின்ற ஜமாஅத்துகளுக்காக நாம் நேசம் கொள்ளக்கூடாது என்பதையும் எடுத்துரைத்தார்கள்.அல்லாஹ்விற்காக நேசிக்கக்கூடிய மக்களின் சிறப்புகளை குர்ஆனின் வசனங்களைக் கொண்டும் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளைக் கொண்டும் எடுத்துரைத்து அனைவரையும் சிந்திக்க வைத்தார்கள்.அதன்
பிறகு சகோ.கொடுங்கையூர் முஹைதீன் அவர்கள் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் அவாழ்வினிலே... என்ற தலைப்பில் இறுதியாக உரையாற்றினாhக்ள். அல்லாஹ்வின் தூதராக முஹம்மது (ஸல்) அவர்கள் பணியாற்றிய போது அவர்கள் சந்தித்த சோதனைகளை எடுத்துரைத்தார். தனது குடும்பத்தை இஸ்லாமிய வாழ்வியல் நெறியை கடைபிடிக்கக் கூடிய குடும்பமாக அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் உருவாக்கியதையும், இன்று நமது நிலை எப்படி இருக்கிறது என்பதையும் எடுத்துரைத்தார்கள். கண்களங்கக்கூடிய விதத்தில் அவரது உரை இருந்தது.
நிகழ்ச்சியின் இறுதியாக கறம்பகுடி ஃபக்ருதீன் அவர்கள் நன்றியுரைக் கூறி நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
அல்லாஹ்வின் கிருபையால் சகோதரர்கள் செய்யதலி, முஹைத்தீன், நஸ்ருதீன், நிஜாமுத்தீன், அப்துல் ஹகீம் ஆகியோர் சிறந்த ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். சோனாப்பூர் மற்றும் துபையின் பல பகுதிகளில் இருந்தும் திரளான சகோதரர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலைநாட்டுவதற்காக தங்களை எல்லாவிதத்திலும் அர்ப்பணிப்போம் என்ற ஈமானிய உணர்வோடு கலைந்து சென்றார்கள்.
(
அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே)




No comments:

Post a Comment