Saturday 12 February 2022

ஒரு வதந்தி எப்படி நாட்டையே அழிக்கும் என்பதற்கான ஒரு உதாரணம்

ஒரு வதந்தி எப்படி நாட்டையே அழிக்கும் என்பதற்கான ஒரு உதாரணம் .....

7 ஆண்டுகளுக்கு முன்பு ....
நபர்-1 வினோத் ராய் எனும் ஒரு நபர் 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் @ 2G ஊழல் என்ற வதந்தியைப் பரப்புகிறார்.

நபர்-2 அண்ணா ஹசாரே எனும் ஒரு நபர் இந்த மோசடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறார்.

நபர்-3 கிரண் பேடி எனும் நபர் இந்த போராட்டத்தில்  தீவிரமாக கலந்து கொள்கிறார்.

நபர்-4 அரவிந்த் கெஜ்ரிவால் எனும் ஒரு நபர் இந்த போராட்டத்தில் அண்ணா ஹசாரேவை பின்நிலைப்படுத்தி தன்னை முன்னிலைப்படுத்தி கொள்கிறார்.

நபர்-5 ராம்தேவ் எனும் நபர் கருப்புப்பணத்தை பற்றி பேசி இந்தப் போராட்டத்தைப் பெரிதாக்குகிறார்.

நபர்-6 சுப்ரமணியம் ஸ்வாமி எனும் ஒரு நபர் இந்த போராட்டத்தை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்கிறார்.

நபர்-7 மோடி எனும் ஒரு நபர் இந்த போராட்டத்தின் உதவியுடன்
வாக்குகளை அறுவடை செய்து ஆட்சியை பிடிக்கிறார்.

7 வருடங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டனர்.
2 G ஊழல் இல்லை என்பது நிரூபணமானது.

இப்போது
நபர்-1 (வினோத் ராய்) பத்ம விபூஷன் பெறுகிறார், வங்கி போர்டுகளின் தலைவராக இருந்து கொழுத்த சம்பளம் பெறுகிறார்.

நபர்-2 (அண்ணா ஹசாரே) இசட் பிளஸ் பாதுகாப்பு மற்றும் பல அரசு வசதிகளைப் பெறுகிறார்.

நபர்-3 (கிரண் பேடி) பாஜக அரசால் டெல்லி லெப்டிணட் கவர்னர்  பதவியைப் பெறுகிறார்.

நபர்-4 (அரவிந்த் கெஜ்ரிவால்) டெல்லி முதல்வர் ஆகிறார்.

நபர்-5 (ராம்தேவ்) கோடீஸ்வர தொழிலதிபர் ஆகிறார்.

நபர்-6 (சுப்பிரமணியம் சுவாமி) இப்போது எம்.பி.

நபர்-7 (மோடி) இப்போது நாட்டின் பிரதமர்.

உண்மையில் ஒரு வதந்தி எப்படி பல விஷயங்களை மாற்றி நாட்டை அழிக்கும் என்பதற்கான ஒரு சிறிய உதாரணம்தான் இது ....!!!!

No comments:

Post a Comment