Thursday 5 March 2020

Shocking

#Shocking

இந்தியா மிகப் பெரும் இன அழிப்புக்குத் தயாராகி வருகிறது என்ற அதிர்ச்சிகரமான தகவலை டாக்டர் கிரிகரி ஸ்டான்டன் என்பவர் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் இந்தியாவில் கஷ்மீர் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் உள்ள நிலைமைகளைக் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

இவர் இனப்படுகொலை கண்காணிப்பு என்ற பெயரில் ஒரு அமைப்பை நிறுவி உலகில் பல்வேறு நாடுகளில் நடந்த இனப்படுகொலைகள் பற்றிய விபரங்களை ஆதாரங்களுடன் உலகுக்கு வெளிப்படுத்தியவர்.

இந்தியாவில் முஸ்லிம்களின் இன அழிப்புக்கான பத்து படிகளை முன்வைத்துள்ளார். அவை:

1. வகைப்படுத்துதல் - மக்களை நாம் மற்றும் அவர்கள் என வகைப்படுத்துதல்.

2. அடையாளப்படுத்துதல் - பாதிக்கப்பட்டவர்களை அந்நியர்கள் என அடையாளப்படுத்துதல்.

3. பாகுபாடு காணுதல் - குடியுரிமை வழங்குவதில் பாகுபாடு பார்த்து நாடற்றவர்களாக ஆக்கி அவர்களுக்கு குடிமக்களுக்கான எந்த வித உரிமையும் கிடைக்காமல் செய்வதன் மூலம் மக்களிடையே பாகுபாடு காணுதல்.

4. மனிதத்தன்மையற்றவர்களாக சித்தரித்தல் - அவர்களை தீவிரவாதி என்றும் மனித சமூகத்தைப் பீடித்த நோய்க் கிருமிகள் எனவும் வசைபாடுவதன் மூலம் சமூக வெறுப்பை அவர்கள் மீது ஏற்படுத்தி அவர்களை மனிதத்தன்மையற்றவர்களாக சித்தரித்தல்.

5. இன அழிப்பை செய்வதற்காக நிறுவனம் ஒன்றை ஏற்படுத்துதல் - உதாரணம் கஷ்மீரில் ராணுவம் அஸ்ஸாமில் தேசிய குடியுரிமைப் பதிவேடு அதிகாரிகள்.

6. ஒன்றுகுவித்தல் - பிரச்சாரங்களின் மூலம் மக்களை ஒருபக்கமாக ஒன்று குவிப்பதன் மூலம் குறிப்பிட்ட மக்களை தனிமைப்படுத்துதல்.

7. தயாரிப்பில் ஈடுபடுதல்.

8. துன்புறுத்துதல் - கஷ்மீர் மற்றும் அஸ்ஸாமில் தற்போது நடந்து கொண்டிருப்பது.

9. ஒட்டுமொத்தமாக மக்களை அழித்தொழித்தல்.

10. மறுப்பு - செய்த படுபாதக செயலை மறுத்தல்.

டாக்டர் ஸ்டான்டன் ஏற்கனவே ருவாண்டா, புருண்டி, கம்போடியா மற்றும் ரோஹிங்யா இனப்படுகொலைகள் தொடர்பான உலக குற்றவியல் தீர்ப்பாயத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு சபை சார்பில் தீர்மானங்களை வரைவு செய்தவர்.

தற்போது இந்தியா இன அழிப்பை நோக்கி நகர்கிறது என இவர் அறிக்கை அளித்திருப்பது உலக அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செய்தியை சுப்ரமணியன் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கவலையுடன் பகிர்ந்துள்ளது இதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது...
Ahamed Meeran

No comments:

Post a Comment