Friday 27 March 2020

தயவுசெய்து தனித்து இருங்கள், விழிப்புணர்வோடு இருங்கள், தைரியமாக தன்னம்பிக்கையோடு வீட்டிலேயே இருங்கள்.

1. இத்தாலி நகரத்தில் மக்கள் சாலையில் சுருண்டு விழுந்து செத்த புகைப்படம்... உண்மை இல்லை.. அது வெப்சீரிசில் வரும் ஒரு காட்சி.

2. எத்தியோபியா செல்லும் விமானத்தில் corona நோயாளியால் மக்கள் பீதி அடைந்து வெளியே குதிக்க, போலீஸ் துப்பாக்கியால் சுட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாக வரும் வீடியோ.. உண்மை இல்லை. அது rescue operation drill பயிற்சி.

3. Jio வின் lifetime free recharge. உண்மையில்லை. நல்ல கற்பனை. மேலும் விவரங்களுக்கு அலையுது பார் அல்பம் என்ற வலைதளம் சென்று பார்க்கலாம்.

4. பிணங்களை புதைக்க இடம் இல்லாமல் இத்தாலியின் அதிபர் அழுகின்ற புகைப்படம்... உண்மை இல்லை. படத்தில் இருப்பவர் முதலில் இத்தாலியின் அதிபரே இல்லை.

5. தென்னாப்பிரிக்க பாதிரியார் Corona அழிக்க அனைவரின் வாயிலும் Dettol ஊற்றிய புகைப்படம்.. உண்மை இல்லை. அது 4 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த புகைப்படம். Coronaவிற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

6. இந்தியாவைத் திட்டி UNESCO போட்ட ட்வீட்.. உண்மை இல்லை. இப்படி fake அக்கவுண்ட் உருவாக்கியவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாய உள்ளது.

7. ரஷ்ய மக்கள் வெளிவரக் கூடாது என அதிபர் புடின் 500 சிங்கங்களை வெளியில் சுற்ற விட்டுள்ளார்... உண்மை இல்லை. அந்த புகைப்படம் வேறொரு சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட பழைய படம். அந்த புகைப்படத்தில் இருக்கும் சாலை ரஷ்யாவே இல்லை.

8.இத்தாலி basilica மீது மனித பறவை ஒன்று ஏறுவது போல் உள்ள காட்சி உண்மை இல்லை,அது ஒரு திரைப்படத்திற்கான graphics காட்சி....

9. எல்லாமே பொய் என்றால் எதுதான் உண்மை? சரியான காரணம் இன்றி வெளியே சுற்றி திரியும் இளைஞர்களை போலீஸ் தர்ம அடி அடிக்கும் வீடியோ.. உண்மைதான். வீம்புக்கு ஊர் சுற்றினால் உம்மாவா கொடுக்க முடியும்?

பொண்டாட்டி புள்ள குட்டிய வீட்டுல விட்டுட்டு உசுர பணயம் வச்சி இரவு பகல் பார்க்காம வேலை செய்து கொண்டிருக்கும் காவல்துறையும் மனிதர்கள்தான். அடி வேண்டாம் என்றால் அமைதியாக வீட்டில் இருங்கள்.

Stage 2 வில் இருந்து மிக மிக முக்கியமான கட்டத்தை நாடு தாண்டி கொண்டு இருக்கின்றது. தயவுசெய்து தனித்து இருங்கள், விழிப்புணர்வோடு இருங்கள், தைரியமாக தன்னம்பிக்கையோடு வீட்டிலேயே இருங்கள்.

Courtesy- Putchutney Rajmohan👍


உங்கள் நன்பனான AS

No comments:

Post a Comment