Wednesday, 9 July 2014

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்பணிகள் பல செய்துகொண்டு இருக்கிறது.

1. அல் குர் ஆன் இலவசமாகக்விநியோகிக்கபடுகிறது

2. இஸ்லாமிய புத்தகங்கள் இலவசமாக விநியோகிக்கபடுகிறது

3. ரமலான் 27 அன்று பித்ரா விநியோகிக்கபடுகிறது 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைகிறது.  

4. கல்வி உதவி அளிக்கப்படுகிறது

5. ஷிர்க்க்கு எதிரான பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு

6. அல் குர் ஆன் மற்றும் நபி வழிப்படி பிரச்சாரம்

7. பெண்களுக்கான சிறப்பு இஸ்லாமிய பிரச்சாரம் 

8.பெண்களுக்கான சிறப்பு இஸ்லாமிய நிகழ்ச்சி 'அகமும் புறமும்'

8. உணர்வாய் உன்னைஎன்ற ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

10. TIME MANAGEMENT

12. ART OF PARENTING  குழந்தை வளர்ப்பு கலை பயிற்சி முகாம்

13. பேச்சுப்பயிற்சி வகுப்பு  ( 6 மாதம் )

அன்பிற்கினிய சகோதரர்களே நபி(ஸல்) அவர்கள் ஸகாத் குறித்துக் கூறும் போது,
‘அது அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து எடுக்கப்பட்டு அவர்களிலுள்ள ஏழைகளுக்கு வழங்கப்படும்’ எனக் கூறியுள்ளார்கள்’                   அறிவிப்பவர்: முஆத் (ரலி). நூல்: முஸ்லிம்


இந்த நபிமொழி ஸகாத் என்பது வசதியுள்ளவர்கள் தாமாக நேரடியாக ஏழைகளுக்கு வழங்குவதன்று. வசதியுள்ளவர்களிடமிருந்து பெற்று ஏழைகளுக்கு வழங்கும் ஒரு மூன்றாம் தரப்பு இதில் ஈடுபடவேண்டும் என்பதை உணர்த்துகின்றது. ஸகாத் பெற தகுதியான எட்டு கூட்டம் பற்றி குர்ஆன் குறிப்பிடும் போது 

‘(ஸகாத் என்னும்) தானங்கள் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அதனை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படு வதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை,..’ (Quran 9:60).


என்று கூறுகின்றது. இதுவும் ஸக்காத்தைச் சேகரிக்க ஒரு கூட்டம் இருக்கவேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இந்த அடிப்படையில் ஸகாத்தை ஒரு குழு சேகரித்து திட்டமிட்டு அது பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதனால் பல நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளன.

 ‘(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக,..’ (Quran 9:103).

மேலும் பரமக்குடி  நகரில் அன்னை ஆயிஷா அறக்கட்டளை மூலமாக முஸ்லிம்களுக்கு பித்ரா கடந்த 10 வருடங்களாக
விநியோகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. எனவே தங்களுடைய பித்ரா மற்றும் ஸக்காத்தை கொடுத்து ஏழைகளுக்கு உதவுமாறு கேட்டு கொள்கிறோம் 


A.S.Ibrahim

050-2933713




No comments:

Post a Comment