Monday, 15 August 2011

கன்ஸ்யூமரை ஏமாற்றும் கண்'கட்டிங்' வித்தை!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அதாவது ஒரு பிரச்சனை என்றால் இரு நிலையிலும் சிந்திக்க வேண்டும். மக்கள் நலம் மக்கள் நலம் என்று முழக்கிமிட்டால் போதாது, அதில் உள்ள பிரச்சனைகளையும் ஆழமாக சிந்திக்கவேண்டும், மக்கள் நலன் என்று சொல்லிக்கொண்டு எதையாவது கூப்பாடுபோடக்கூடாது.
மூலப்பொருட்களின் விலையேற்றம் என்றால் அது எல்லாவற்றிலும் பிரதிபலிக்கும். அது வணிகத்தில்தான் முதன்மையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை யாருக்கும் சொல்லித்தரவேண்டியதில்லை. ஆகையால் மூலப்பொருட்களின் விலையேற்றம் நடக்கும்போது வணிகத்தில் மாற்றம் செய்யப்படும் நிர்ப்பந்தம் நிலவும். அப்போது அதை ஈடு செய்வதற்காக சில மாற்றங்களை எடுக்க வேண்டிய நிலையில் உற்பத்தியாளர்கள் தள்ளப்படுவார்கள். அதன் பொருட்டே விலையேற்றம், அளவில் குறைப்பு போன்ற செயல்பாடுகள். விலையேற்றத்தினாலோ அல்லது அளவு குறைப்பினாலோ ஆரோக்கியத்துக்கு ஆபத்து இல்லை, ஆனால் கலப்படம் என வரும்போதுதான் நிலவரம் கலவரமாகிவிடுகிறது.
இவர்கள் கலப்படம் செய்யவில்லை எனவே உயிர் பிழைத்தோம், விலையேற்றவில்லை எனவே இன்றும் இன்றும் அப்பொருட்களை வாங்குவதில் சிக்கல் இல்லை. ஒரே பிரச்சனை அளவு சற்றுக்குறைவு. அதனால் தனிமனித வாழ்வில் ஒன்னும் குடி முழுகிவிடப்போவதில்லை. கலப்படம், நியாயமற்ற விலையேற்றம், நியாயமற்ற அளவு குறைப்பு என்றால் உதைக்கவேண்டியதுதான்
பெரும்பாலும் சென்னை சிட்டியில்பல பழக்கடையில் நம்மவர்கள் 1/2 (ஒன் பை டூ ) ஜூஸ் போட சொல்வதை நாம் கவனித்திருக்ககூடும். அதாவது ஒரு ஜூஸ் போட்டு அப்படியே ரெண்டு க்ளாஸ்ல ஊத்து கொடுத்திருங்கனு கோரிக்கை வைப்பார்கள். இங்கே அளவு குறைப்பு வேண்டப்படுகிறது. 4 புரோட்டா ஒரு சிக்கன் மசாலா என்று ஒரு ஆர்டர் வந்தால், ஆளுக்கு ரெண்டு புரோட்டா, சிக்கன் மசாலா ஆளுக்குப்பாதி அங்கிட்டு போயி பங்கு வச்சுக்குவோம் என்று அர்த்தம். இங்கேயும் அளவு குறைப்பு ஒரு தீர்வாக கருதப்படுகிறது.
அப்ப்றம் எதாவது குடிமகனைப்பிடித்து அவன் நிதானத்துல இருக்கும்போது கேட்டுபாருங்க, நேத்து எவ்வளவு போட்டேனு, ரெண்டு கட்டிங் அல்லது மூனு போட்டேனு சில்லரைத்தனமாத்தான் சொல்வான். காரணம் ஃபுல் வாங்க அமௌண்ட் நஹி பாபா. அதுனாலதான் ஒரு அட்ஜெஸ்ட்மெண்டுல ஓடிகிட்டு இருக்கார் அந்த குடியார் சமுதாய மக்கள்.
விலையேற்றினால் தற்போது வாங்கிக்கொண்டிருப்பவர்கள் அணைவரும் வாங்க இயலயாது, அது நுகர்வோருக்கும் பிரச்சனை, வியாபாரிக்கும் பிரச்சனை. அளவு குறைத்தால் ரெண்டுபேருக்கும் பெருசா பிரச்சனை இல்லை.  கலப்படம் செய்தால் ஆஸ்பத்திரிக்குதான் போகனும். அதுனாலதான் அளவில் லேசா கிள்ளிப்பாத்திருக்காங்க.
ஒன்னாருவா கொடுத்து தேயிலை பாக்கெட் வாங்குற நீ இவ்வளவு புலம்புனா கோடி கணக்குல முதல் போட்டு வியாவாரம் பன்றவன் எவ்வளவு அழுவான்? அவனுடைய அழுகையும் பாக்கனுமா இல்லையா?இதே நீ முதல் போட்டு யாவாரம் பன்னுனா இப்படி பேசுவியா? ம்? சொல்லும் ஓய்!
சும்ம களம் இறங்கினோம், கன்மாய் வெட்டுனோம்னு பிலடப் கொடுக்ககூடாது.
250
கிராம்ல 5 கிராம் குறைஞ்சா என்ன பிரளயம் நடந்துவிடப்போகிறதுன்றேன்? மக்கள் நலனை சிந்திக்க வேண்டியதுதான், வேண்டாம்னு சொல்லல. ஆனா சிந்திச்சு சிந்திக்கனும் :-). பணம் கொடுத்து வாங்கிறோங்கிறதுக்காக என்னவேனும்னாலும் பேசாலாம்னு இல்லை.
குறிப்பு:  நான் வியாபாரி இல்லை, நானும் ஒரு நுகர்வோ
அப்பறம் எதோ கமிஷன் வாங்கிட்டு கத்துறேனு என் மேல கத்திய வச்சிராதீங்கய்யா! அயம் பாவம்.

-
பஹ்ருதீன்



மீபகாலமாக நுகர்பொருள் துறையில் நடக்கும் தில்லாலங்கடி வேலையன்றை நண்பரொருவர் பகிர்ந்து கொண்டார். அவர் சொன்னது கொஞ்சம் புதுமையாகத்தான் இருந்தது. கடைக்குப் போனவர் வழக்கமாக வாங்கும் டூத் பேஸ்ட்டை வாங்கி வந்திருக்கிறார். அதில் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தவர், என்னவென்று பார்த்திருக்கிறார். ஆனால் பளிச்சென்று எந்த வித்தியாசமும் தெரியவில்லை. இருந்தும் விடாமல் துருவித் துருவி பார்த்திருக்கிறார். கடைசியில்தான் தெரிந்திருக்கிறது வழக்கமாக 50 கிராம் இருக்கும் அந்த பேஸ்ட் இப்போது 40 கிராம்தான் இருந்திருக்கிறது. இதனையடுத்து வழக்கமாக வாங்கும் எல்லா பொருட்களையும் நோட்டம்விட ஆரம்பித்திருக்கிறார். அதிலும் அவருக்கு கிடைத்தது அதிர்ச்சிதான். கிட்டத்தட்ட பெரும்பாலான பொருட்களின் விலையில் இந்த கண்கட்டு வித்தை நடந்திருக்கிறது!
இதையடுத்து நாமும் களமிறங்கி விசாரித்தபோது சோப்பு, பேஸ்ட், டீ தூள், முதற்கொண்டு மசாலா பொருட்கள் வரை அனைத் திலும் இந்த எடை 'கட்டிங்வேலை ஓசையில்லாமல் நடந்திருப்பது தெரியவந்தது. இந்த நிறுவனம், அந்த நிறுவனம் என்றில்லாமல் எல்லா நிறுவனங்களுமே இந்த உத்தியைக் கையாண்டிருக் கின்றன. விலையை ஏற்றினால் விற்பனை குறைந்துவிடும் என்பதால், அளவு அல்லது எடையைக் குறைப்பதன் மூலம் தங்களின் பிஸினஸை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன இந்த நிறுவனங்கள். ஆனால், எந்த நிறுவனமும் நேர்மையாக நுகர்வோரிடத்தில் இதைச் சொல்லவில்லை.  
''எந்த அறிவிப்பும் இல்லாமல் இப்படிச் செய்வது வாடிக்கையாளர்களை ஏமாற்று கிற மாதிரி ஆகிவிடாதா?'' என ஒரு முன்னணி பிராண்டின் விற்பனை உயரதிகாரியிடம் கேட்டோம்.
''எடை குறைப்பு செய்ததன் மூலம் வாடிக்கையாளரை நாங்கள் ஏமாற்றுவதாக எப்படிச் சொல்கிறீர்கள்? ஒரு பொருள் எவ்வளவு எடை கொண்டது, விலை என்ன என்பது போன்ற விஷயங்களைத் தெளிவாக அச்சடித்துதானே தருகிறோம்? வாடிக்கையாளர்கள் அதைப் பார்த்து விட்டுத்தானே வாங்கு கிறார்கள்? அவர்களுக்கு அந்த பொருள் தேவை. விலையும் அவர்களுக்கு சகாயமாக இருக்க வேண்டும். ஆனால், எடை கொஞ்சம் குறைந்தாலும் பராவாயில்லை என்றுதான் அவர்கள் வாங்குகிறார்கள். எனவே, ஏமாற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லவே இல்லை'' என்றார்.
சில பிராண்டு பொருட்களில் எடை குறைத்ததோடு விலையையும் உயர்த்தி இருக்கிறார்கள். உதாரணமாக, மேனியை மிருதுவாக வைத்திருக்க உதவும் ஒரு சோப் முன்பு 100 கிராம் அளவில் கிடைத்தது. இன்று வெறும் 90 கிராம்தான் உள்ளது. ஆனால், விலை முன்பிருந்ததைவிட அதிகம். இதேபோல பாதுகாப்பு வளையத்தைத் தரும் ஒரு பற்பசை முன்பு 50 கிராம் 10 ரூபாய். ஆனால், இன்றைக்கு அதே 10 ரூபாய்க்கு வெறும் 40 கிராம் மட்டுமே தருகிறார்கள். நூடுல்ஸுக்கு பெயர் போன அந்த பிராண்ட் முன்பு 100 கிராமுக்கு கொடுத்த விலையில், இப்போது 87 கிராம் மட்டுமே உள்ளது. 250 கிராம் என நினைத்து வாங்கும் மலரின் பெயர் கொண்ட டீ பாக்கெட் இப்போது 245 கிராம்தான் இருக்கிறது.  
''வழக்கமாக வாங்கும் பொருள், பழக்கப்பட்ட பிராண்ட் என்பதால், கண்ணை மூடிக்கொண்டு மக்கள் வாங்குகிறார்கள். தவிர சோப்பு, ஷாம்பு போன்றவற்றில் குறிப்பிட்ட பிராண்டுகளுக்கு பழகிவிடுவதால் இந்த பொருட்கள் விலையேறினாலும் வாங்கத்தான் செய்கிறார்கள். கலப்படப் பொருட்கள் மற்றும் தரமற்ற பொருட்கள் பற்றிய நுகர்வோர் விழிப்புணர்வு அதிகரிக்கத்தான் செய்திருக்கிறது. ஆனாலும், இந்த மாதிரியான எடை குறைப்பு சமாசாரங்களை மக்கள் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை.'' என்கிறார் தஞ்சை இ.பி. காலனி ஸ்ரீஹரி மளிகை செல்வகுமார்.
மூலப் பொருட்களின் விலை ஏறியதால், தாங்கள் தயார் செய்யும் பொருட் களின் விலையை உயர்த்தி யாக வேண்டிய கட்டாயம் நிறுவனங்களுக்கு இருக்கிறது தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் யாருக்கும் இல்லை. ஆனால், ஐந்து கிராம் ஆஃபர் கொடுத்தாலே டமாரம் அடிக்கும் இந்த நிறுவனங்கள், இதையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டியதுதானே!

No comments:

Post a Comment