முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்! 3:200
Tuesday, 24 September 2013
Annai Ayeisha Trust has been able to perform Qurbani
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
It is neither their blood nor their meat that reaches Allah, but it is piety from you that reaches Him...” (Al-Quran 22:37)
Dear Brothers,
Assalaamu Alaikum Wa Rahmatullaahi Wa Barakkaatuhu
For over 10 years, Annai Ayeisha Trust has been able to perform Qurbani and share the sacrifice amongst 200 Hundreds family hundreds of needy people.
Presently we are working on 4 Areas & 2 Villages for their Hidaya and welfare. As usual this year also performing Qurbani in these villages.
For your kind information this year Qurbani amount has been fixed as follow:
For Goat : Rs.8000/-
For Goat : Rs.8000/-
Requesting you to send your Qurbani request as early as possible. While sending your Qurbani request , Please furnish names of person to whom Qurbani to be given. Your early Qurbani request will allow us to make timely arrangements for the needy.
May Almighty Allah accept our Qurbani and reward immensely in this world and hereafter and shower his gracious blessings on you and your family.
If you required any clarification or more details, please contact
S.Abdul Gafoor
Annai Ayeisha Trust
Paramakudi
Mob. 09444468448
00971502933713
மதக்கலவரத்தைத் தூண்ட முயலும் பா.ஜ.க வினருக்கு எதிராக முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி வழக்குரைஞர்கள் 200 பேர் ஆட்சியரிடம் மனு
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
திருச்சி மாவட்டம்,
திருச்சி
ஐயா,
பொருள் : திருச்சியில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான மதக் கலவரத்தை தூண்டும் முயற்சிகளை முன் கூட்டியே தடுத்து நிறுத்தக் கோரி-
திரு. நரேந்திர மோடி வருகையை ஒட்டி திருச்சி நகரில் பாரதிய ஜனதா கட்சியினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பொது அமைதிக்கு கேடு விளைவிக்கும் விதத்தில் அமைந்திருக்கின்றன. தங்களுடைய விளம்பர பானர்களை ம.க.இ.க வினரும் முஸ்லிம்களும் கிழித்து சேதப்படுத்தி விட்டதாக கூறி நேற்று காலை திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பொய்க்குற்றச்சாட்டு என்றும், பாரதிய ஜனதா கட்சியினரே தமது பானர்களை கிழித்து விட்டு தங்கள் மீதும், முஸ்லிம் மக்கள் மீதும் பொய்க்குற்றம் சுமத்துவதாக ம.க.இ.க வினர் மறுப்பு அறிக்கை வெளியிட்டிருந்தனர். மறியல் நடத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் அபாண்டமாக தங்கள் மீது பழி சுமத்தப்படுவதாகவும் தாங்கள் மிரட்டப்படுவதாகவும் கூறுகின்றனர்.
இவ்வாறு பொய்க்குற்றம் சாட்டுவதும், வதந்திகளைப் பரப்பி பதட்டத்தையும் கலவரத்தையும் உருவாக்குவதும் பாரதிய ஜனதா கட்சியினருக்கு புதிதல்ல. சமீபத்தில் திண்டுக்கல் பா.ஜ.க நிர்வாகி வீட்டின் மீது முஸ்லிம்கள் வெடிகுண்டு வீசியதாக குற்றம் சாட்டினர். காவல் துறையின் விசாரணைக்குப் பின்னர் அவர்களே வெடி குண்டை வீசி, பழியை முஸ்லிம்கள் மீது போட்டது தெரிய வந்தது. அதே போன்று கோவையில் அனுமன் சேனா என்ற அமைப்பின் நிர்வாகியை முஸ்லிம்கள் கடத்தி விட்டதாக செய்தி பரப்பினர். அவரை யாரும் கடத்தவில்லை என்பதும், அவரே கன்னியாகுமரிக்கு சென்று விட்டு, கடத்தல் என்று நாடகமாடியிருக்கிறார் என்பதும் காவல் துறையின் விசாரணைக்குப் பின் தெரியவந்தது.
ரியல் எஸ்டேட், கந்து வட்டி, பெண்கள் தொடர்பான தனிப்பட்ட விவகாரங்களின் காரணமாக சில இந்து முன்னணியினர் மற்றும் பாரதிய ஜனதாவினர் சமீபத்தில் கொல்லப்பட்டதை, முஸ்லிம் தீவிரவாதிகளின் தாக்குதல் என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும் பாஜக நிர்வாகிகள் தமிழக அரசை குற்றம் சாட்டினர். இத்தாக்குதல்களுக்கும் முஸ்லிம் தீவிரவாதிகளுக்கும் தொடர்பில்லை என்றும் இவை தனிப்பட்ட விவகாரங்கள் என்றும் தமிழக டிஜிபி இவற்றை மறுத்திருந்தார்.
பொய்யான வீடியோக்களை பரப்பி அதன் அடிப்படையில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக வினர் தூண்டிய கலவரம் பல உயிர்களைக் காவு கொண்டு பல்லாயிரம் முஸ்லிம் மக்களை அகதிகளாக்கியிருக்கிறது. மோசடி வீடியோக்களை காட்டி கலவரத்தை தூண்டிய குற்றத்துக்காக பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் அங்கு கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
தற்போது மோடியின் வருகையை ஒட்டி திருச்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு கலவரத்தை தூண்டி அதன் மூலம் கூட்டம் சேர்க்கவும், இந்து ஓட்டுக்களை அறுவடை செய்து அரசியல் ஆதாயம் அடையவும் பாஜக முயல்கிறது. இசுலாமிய மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஒலிபெருக்கியை அலற விட்டுக் கொண்டு வேனில் செல்வது, பெண்களை நோக்கி வக்கிரமான முறையில் சைகைகள் செய்வது போன்ற நடவடிக்கையில் பாஜக வினர் ஈடுபடுவதாகவும், தங்களை அச்சுறுத்துவதாகவும் முஸ்லிம் மக்கள் கூறுகின்றனர். இந்திய அரசியல் சட்டம் கூறும் மதச்சார்பின்மைக் கொள்கையில் நம்பிக்கையற்றவர்களான பாரதிய ஜனதா கட்சியினரின் இத்தகைய முயற்சிகளை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் சிறுபான்மை மக்கள் வசிக்கும் பகுதிகளில் பாஜகவினர் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி மறுப்பதன் மூலம், சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும். மேலும் திருச்சியில் தேநீர்க்கடைகளில் நிற்கும் முஸ்லிம்களைப் புகைப்படம் எடுப்பது, வீடுகளுக்கு வரும் உறவினர்கள் பற்றி தகவல் தர வேண்டும் என்று முஸ்லிம் மக்களை நிர்ப்பந்திப்பது என்பன போன்ற சட்டவிரோதமான, மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் காவல் துறையினர் ஈடுபடுவதையும் நிறுத்த வேண்டும்.
26 செப்டம்பர் அன்று நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் சிறுபான்மை மக்களை இழிவு படுத்தும் வகையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ யாரும் பேசக்கூடாது என்பதற்கும், மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் முழக்கங்களை எழுப்பக்கூடாது என்பதற்குமான உத்திரவாதத்தை மாநிலத் தலைவர் பொன். இராதாகிருஷ்ணன் எழுத்து பூர்வமாக வழங்க வேண்டும்.
பாஜக வின் மாநிலத்தலைவர் பொன் இராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் எச். ராஜா, திருச்சி மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆகியோரிடம், கு.வி.ந.ச பிரிவு 110 (e) மற்றும் (g) இன் கீழ் நன்னடத்தைப் பத்திரங்களை திருச்சி மாவட்ட நிர்வாகம் எழுதிப் பெற வேண்டும் என்று கோருகிறோம்.
மேற்கூறிய நடவடிக்கைகளின் மூலம் சிறுபான்மை மக்களின் அச்சத்தைப் போக்குவதுடன், திருச்சி நகரில் மதக்கலவரத்தை தூண்டுவதற்கான முயற்சிகளையும் முன் கூட்டியே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கீழே கையொப்பமிட்டுள்ள வழக்குரைஞர்களாகிய நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
ஒப்பம் – வழக்கறிஞர்கள்
இந்த மனுவை திருச்சி நீதிமன்றங்களைச் சேர்ந்த 200 வழக்கறிஞர்கள் கையொப்பமிட்டு மாவட்ட ஆட்சியரிடம் அளித்திருக்கிறார்கள்.
நன்றி ----- வினவு
24.9.2013
பெறுநர்மாவட்ட ஆட்சியர் அவர்கள்,

Sunday, 22 September 2013
துபாயில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு இஸ்லாமிய நிகழ்ச்சி 'அகமும் புறமும்'
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
துபாயில் பெண்களுக்காக பெண் பயிற்சியாளரால் நடத்தப்பட்ட இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி நிகழ்ச்சி 20.09.2013 அன்று மாலை 6.30 மணிக்கு துபாய் தேரா சலாஹூதீன் மெட்ரோ ஸ்டேஷன் அருகில் உள்ள யுனைடெட் டிரேடர்ஸ் கம்பெனி பில்டிங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியினை சகோதரி பெனசீர் MBA, Mphil தலைமையில் சகோதரி எம். ஷாமிலா BE சிறப்பான முறையில் நடத்தினார். பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளை ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆண்- பெண் புரிதல், அறிவியல், உளவியல் மற்றும் இஸ்லாமிய பார்வை, இறைவன் நம்மைப் படைத்த நோக்கத்தை உணருதல், ஆண்,பெண் மன, உடல் ரீதியான தன்மைகளைப் பொறுத்து அமையும் நம் கடமைகள், திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழும் வழிமுறைகள், தன்னம்பிக்கையூட்டும் தகவல்கள் உள்ளிட்ட பயிற்சிகள் இடம்பெற்றன.
ஏராளமான பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.

Sunday, 15 September 2013
பெண்களுக்கான சிறப்பு இஸ்லாமிய நிகழ்ச்சி "அகமும் புறமும்" - துபாய்
அளவற்ற அருளாளனும்
நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
இன்ஷாஅல்லாஹ் துபாய் சலாகுதீன் சாலை உள்ள United Traders Company UTC Bldg 20.09.2013, வெள்ளிக் கிழமை அன்று மக்ரிப்லிருந்து இஷா வரை பெண்களுக்கான சிறப்பு இஸ்லாமிய நிகழ்ச்சி "அகமும் புறமும்" நடைபெறும். பெண் பொறியாளர் ஷாமிலா அவர்களால் இந்நிகழ்ச்சி நடத்த இருக்கிறார்கள் இதில் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டு கொள்கிறோம்
பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளை.

Wednesday, 11 September 2013
jobs- Walk In Interview at Dubai | Bhatia Group:
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
Walk In Interview at Dubai | Bhatia Group - Sales Executives, Merchandisers, Van Salesman | Please note details in the ad and proceed as requested.. all the best
Kindly share this information with your friends and bring them along with you.

துபாய் அல் கூஸ் பகுதியில் காலிதா மெடிக்கல் சென்டர்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
Ahamed Meeran - Executive Director E.T.A Melco தலைமையில் மருத்துவ நிலையத்தை ஸ்பான்சர் ஹூசைன் அப்துல் ஜப்பார் தாவூத் சல்மான் திறந்து வைத்தார்.
ஈ.டி.ஏ மெல்கோ டைரக்டர் A.S.A. பஷீர், முன்னிலை வகித்தார். பல முக்கிய காப்பீட்டு நிறுவன மருத்துவர்கள், ஈடிஏ மெல்கோ ஊழியர்கள் மற்றும் பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். விழா நிகழ்ச்சிகளை சகோ முகைதீன் பிச்சை, சகோ கான் முஹம்மது , சகோ முத்துகனி ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தார்கள்.
டாக்டர் காலிதா கானம் திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்தவர். பொது மற்றும் மகப்பேறு மருத்துவத்தில் சிறந்த அனுபவம் பெற்றவர்.லண்டனில் மருத்துவ மேற்படிப்பு படித்தவர்.
துபாய் அல் கூஸ் பகுதியில் வாழ்ந்து வரும் மக்களுக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு இம்மருத்துவ நிலையம் குறைந்த கட்டணத்தில் சிறப்பானதொரு மருத்துவ சேவையினை வழங்கும் என தெரிவித்துள்ளார். மேலும் இரவு உணவு வழங்கப்பட்டது
தொலைபேசி : 04 338 1947மின்னஞ்சல் : kmc202020@gmail.comFirst Floor103 & 104Al Adeem BuildingAl Quoz Industrial Area 3
முதுவை ஹிதாயத்
Tuesday, 10 September 2013
உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா ! ! !
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
உங்கள் மொபைல் எண் திரையில் தோன்ற அழுத்துங்கள்...
How to Find Mobile Number of a Sim Card for Indian Mobile Networks.
Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#
Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#
Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#
Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#
Tata DoComo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580#

your mobile Phone number or have no balance in phone and don't know your phone number, such condition will probably let you google the same that "How to find my Mobile Phone Number". or If you found a sim card and want to know its Phone number, here is the Post explaing how to find mobile number is seconds for various mobile networks like Airtel, Vodafone,Reliance, Tata Docomo,Reliance GSM etc.
Reqirement : Insert Sim card in the slot of your mobile.
1. Tata Docomo :
You can get Phone number easily from a Tata Docomo sim card.
Simply dial *580# and you will get the number displayed on your phone same way you check your prepaid balance.
2. Airtel:
If you want to know Phone number of an Airtel sim card, simply dial *140*1600# on your mobile and wait for few seconds. You will receive Phone call from that number only.
Also you can Use *121*9# for Airtel
3. Reliance GSM:
It is very easy to find mobile number from a reliance sim card. Simply dial *1# or *#1# and you will see mobile number displayed of that particular Sim Card.
Note : Number *1# is found to be working for BSNL, Videocon, Idea and Aircel
4. Vodafone IN:
Dial *111*2# from your Vodafone mobile and you will get to know Phone Number.
It is Displayed as:
Balance for 9********(Mobile Number) is Rs. xyz
5. Uninor:
Dial Number *555# , you will see mobile number and offers available for that number.
6. BSNL:
Numbers *1# , *888# and *8888# has been reported to work for BSNL. I ahve not tried above bsnl numbers and searched it online.
Like https://www.facebook.com/kilakaraiclassifiedgroupto get such updates daily.

திருக் குர்ஆனில் கூறப்பெற்றுள்ள நபிமார்களின் பெயர்கள்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
எண் நபிமார்களின் பெயர்கள் வசன எண்
1 ஆதம் அலைஹிஸ் ஸலாம் 2:30
2 நூஹ் அலைஹிஸ் ஸலாம் 11:25
3 இத்ரீஸ் அலைஹிஸ் ஸலாம் 19:56
4 இப்ராஹீம் அலைஹிஸ் ஸலாம் 21:51
5 இஸ்மாயீல் அலைஹிஸ் ஸலாம் 19:54
6 இஸ்ஹாக் அலைஹிஸ் ஸலாம் 37:112
7 யஃகூப் அலைஹிஸ் ஸலாம் 12:4
8 யூஸுப்அலைஹிஸ் ஸலாம் 12:4
9 லூத் அலைஹிஸ் ஸலாம் 26:160
10 ஹுத் அலைஹிஸ் ஸலாம் 26:124
11 ஸாலிஹ் அலைஹிஸ் ஸலாம் 26:142
12 ஷுஐப் அலைஹிஸ் ஸலாம் 26:177
13 மூஸா அலைஹிஸ் ஸலாம் 28:7
14 ஹாருன் அலைஹிஸ் ஸலாம் 19:53
15 தாவூத் அலைஹிஸ் ஸலாம் 38:17
16 ஸுலைமான் அலைஹிஸ் ஸலாம் 27:15
17 ஐயூப் அலைஹிஸ் ஸலாம் 38:41
18 துல்கிப்லு அலைஹிஸ் ஸலாம் 38:48
19 யூனுஸ் அலைஹிஸ் ஸலாம் 37:139
20 இல்யாஸ் அலைஹிஸ் ஸலாம் 37:123
21 அல்யஸவு அலைஹிஸ் ஸலாம் 38:48
22 ஜகரிய்யா அலைஹிஸ் ஸலாம் 19:2
23 யஹ்யா அலைஹிஸ் ஸலாம் 19:12
24 ஈஸா அலைஹிஸ் ஸலாம் 19:30
25 முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிஸ் ஸலாம் 48:29

சகோ.பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் ஜூனியர் விகடன் பேட்டி..
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோ.பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் ஜூனியர் விகடன் பேட்டி....!!
'இந்து அமைப்பினர் அடுத்தடுத்துக் கொலை செய்யப்படுவதன் பின்னணியில் சில முஸ்லிம்கள் இருப்பதாக பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றனவே?''
''ஒரு மனிதன் கொல்லப்படுவதற்குக் குடும்பப் பகை, பெண் விவகாரம்,தொழில் போட்டி என்று ஏராளமான காரணங்கள் இருக்கலாம். அதைக் கண்டுபிடிக்க வேண்டியதும் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டியதும் காவல் துறையின் வேலை. கொலையானவர் இந்து அமைப்பைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக, அதை முஸ்லிம்கள்தான் செய்திருப்பார்கள் என்று பரப்புவதும், போஸ்டர்கள் ஒட்டுவதும் திட்டமிட்ட சதி. தாடி வைத்தவன், தலையில் குல்லாய் வைத்தவனை எல்லாம் தீவிரவாதி என்று சித்திரித்து, அண்ணன் தம்பிகளாகப் பழகிக் கொண்டிருப்பவருக்கிடையே பிளவை ஏற்படுத்துகிறார்கள். இதன் மூலம் அமைதிப் பூங்காவாகஇருக்கின்ற தமிழகத்தைச் சீர்குலைக்க பி.ஜே.பி. உள்ளிட்ட இந்து அமைப்புகள் முயற்சிக்கின்றன. அந்த வெறுப்பை மக்களிடம் விதைப்பதன் மூலம் தங்கள் இயக்கத்தை வலுப்படுத்த நினைக்கின்றனர்.''
''உங்களுடைய இந்தக் குற்றச்சாட்டுக்கு உங்களிடம்என்ன ஆதாரம் உள்ளது?''
''ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த கோட்சேவால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போதே, காந்தியைக் கொன்றது இஸ்மாயில் என்ற முஸ்லிம்தான் என்று செய்தி பரப்பப்பட்டது. நாடு முழுவதும் முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் அப்போது திருப்பூரில் ஒரு இஸ்லாமியர் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார். அன்றிலிருந்து, மாலேகான் குண்டுவெடிப்புச் சம்பவம், கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் வரை இதுதானே நிலைமை? முதலில் முஸ்லிம்கள் மீது பழிபோடுவதும், கலவரங்களைக் கட்டவிழ்த்துவிடுவதும் பிறகுஇந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்தான் என்று தெரியவரும்போது பாராமுகமாக இருப்பதும்தான் நடக்கிறது.''
''தமிழகத்திலும் அப்படித்தான் நடக்கிறது என்கிறீர்களா?''
''சத்தியமங்கலம், அருகே உள்ள சதுமுகை என்னும் ஊரில் விநாயகர் சிலைக்கு சிலர் செருப்பு மாலை அணிவித்தனர். இதற்குக் காரணம் முஸ்லிம்களும் திராவிடர் கழகத்தினரும்தான் என்று குற்றம்சாட்டி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், போலீஸ் விசாரணையில் அதைச் செய்தவர்கள் இந்து முன்னணியைச் சேர்ந்த செல்வகுமார், மஞ்சுநாதன் ஆகியோர் என்பது தெளிவானது. நெல்லை மாவட்டத்தில் கோயில் தேருக்கு சில விஷமிகள் தீ வைத்தனர். அப்போதும் முஸ்லிம்கள்தான் அதைச்செய்தார்கள் என்று பொய்ப் பிரசாரம் செய்தனர். விசாரணையில், இந்து முன்னணியினர்தான் அதற்கும் காரணம் என்று தெரிந்தது. தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தபோது, முஸ்லிம்கள்தான் இதற்குக் காரணம் என்று கூறி ராமகோபாலன்உள்ளிட்ட இந்துத் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், போலீஸ் விசாரணையில், குண்டு வைத்தவர்கள் இந்து முன்னணியைச் சேர்ந்த ரவி, கே.டி.சி.குமார், லட்சுமி நாராயண சர்மா என்பது நிரூபிக்கப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குண்டு வெடித்தபோதும், 'இஸ்லாமிய தீவிரவாதிகளை கைதுசெய்' என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அப்போது, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி. எதிர்க் கட்சியாக இருந்த அ.தி.மு.கலிவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவர்தான், தி.மு.கலிவுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அதைச் செய்தார் என்பது சி.பி.ஐ. விசாரணையில் தெளிவானது.
தமிழகத்தில் நடந்த கொலைச் சம்பவங்களை எடுத்துக்கொண்டால், கோயம்பேட்டில் கொல்லப்பட்ட பாரதிய ஜனதா பிரமுகர் விட்டல், கந்து வட்டி பிரச்னையால் கொல்லப்பட்டதாக நிரூபிக்கப்பட்டது. பரமக்குடி முருகன் கொலை, பெண் விவகாரத்தால் நடந்தது. ராமேஸ்வரம் குட்ட நம்பு கொலை வழக்கிலும் தனிப்பட்ட விரோதம்தான் காரணம். இப்படி தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்த கொலைகளையும், நிரூபிக்கப்படாத குற்றங்களையும் முஸ்லிம்கள் மீது சுமத்துவதும், அவதூறு பரப்புவதையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.''
''தமிழகத்தில் முஸ்லிம்கள் தீவிரவாத செயல்கள் எதையும் செய்யவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறீர்களா?''
''தமிழகத்தைப் பொறுத்தவரை கோவைகுண்டு வெடிப்பு சம்பவம் ஒரு கரும்புள்ளி. அல் உம்மா இயக்கத்தால் உணர்ச்சிவசப்பட்டு நடத்தப்பட்டது. அதை அப்பாவி முஸ்லிம்கள் யாரும் ஆதரிக்கவில்லை. அதில் இறந்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களில் முஸ்லிம்களும் உள்ளனர். இங்குள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் நாம் சிறுபான்மை சமூகம் என்ற அறிவுஉள்ளது. ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவன், பெரும்பான்மை சமூகத்தை எப்படி கொலை செய்ய முடியும்? நாங்கள் ஒரு கொலைசெய்தால், அவர்கள் பத்து கொலைசெய்வார்கள் என்ற சாதாரணப் புரிதலும் அச்சமும் எங்களுக்கு உள்ளது. இந்தியா வந்து குண்டு வைக்கும் பாகிஸ்தான்காரனை அந்நிய நாட்டுத் தீவிரவாதியாகப் பாருங்கள். அவனையும் இங்குள்ளசகோதார முஸ்லிமையும் ஒன்றாக அடையாளப்படுத்தாதீர்கள்.''

Subscribe to:
Posts (Atom)