அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
மாணவிகளிடம் சில்மிஷன் ஆசிரியர் கைது !!!
சமீப காலமாக செய்தித் தாள்களைப் புரட்டினால் துவக்கப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பாடம் பயிலும் சிறுமிகளின் மீதும் பருவ வயது மாணவிகளின் மீதும் சில ஆசிரியர்கள், பேராசிரியர்கள், முதல்வர்கள் வரம்பு மீறும் பாலியல் வல்லுறவுகள் மனதை பாதிப்பதாக அமைந்துள்ளது.
இதைப் படிக்கும் நமக்கே மனதை வெகுவாக பாதிக்கிறதென்றால் அந்தப் பிள்ளைகளைப் பெற்று நெற்றி முகர்ந்து வளர்த்து எதிர்காலத்தில் கல்விமான்களாகி சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசைப் பட்டு பணத்தையும் மூட்டை, மூட்டையாக கட்டி கல்விப் பயிலப் பள்ளிக்கு அனுப்பிய தாய், தந்தையரின் மனநிலை எப்படி பாதித்திருக்கும் ?
காதல் வலை விரிக்கும் ஆசை வார்த்தைகளும், பணிய வைக்கும் மிரட்டல்களும்.
- வயது முதிர்ந்த வாத்தியாராக இருந்தால் என்னுடைய விருப்பத்திற்கு இணங்க வில்லை என்றால் ஃபைலாக்கி விடுவேன்- இது பணிய வைக்கும் மிரட்டல்.
- இளைய வயது வாத்தியாராக இருந்தால் நானும் சிறு வயதுக் காரண் தான் இன்னும் எனக்கு திருமனம் ஆகவில்லை நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் உன்னையே எனது துனைவியாக்கிக்கொள்ள விரும்புகிறேன்- இது ஆசை வார்த்தை.
மேற்காணும் விதம் பேசி பாலியல் தொடர்பான எதையுமே அறியாத சிறுமிகளை, பருவ வயது பெண்களை ஒழுக்கத்தைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் முதல் டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள், கணினி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக்கொண்டு பிஞ்சு மலர்களை கிள்ளி கசக்கி எறிந்து விடுகின்றனர்.
எதோ ஒரு மாணவியை மட்டும் இந்த ஈனச்செயலில் ஈடுபடுத்தி விட்டு நிருத்திக்கொண்டார்களா என்றால் ? அதுவும் இல்லை ! இந்த வரம்பு மீறும் நிகழ்வுகள் இவர்களால் பல மாணவிகளுடன் தொடர்ந்து கொண்டே தான் செல்கின்றன.
தன்னிடம் கல்வியையும், ஒழுக்கத்தையும் பயில வந்த சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி அவர்களின் எதிர்கால வாழ்வை சிதைத்து சின்னாப்பின்னப்படுத்துகின்ற ஆசிரியப் பெருந்தகை(?)களுக்கு இந்திய குற்றவியல் தண்டனையில் உடலில் வருத்தத்தை ஏற்படுத்தும் அளவுக்கோ, உள்ளத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கோ தண்டனைகள் இல்லை என்பதால் சிறுமிகளையும், பருவ வயதுப் பெண்களையும் வாழைக் குருத்துகளை அடியோடு வெட்டி சாய்ப்பதைப் போல சாய்த்து விடுகின்றனர்.
35 க்கும் மேற்பட்ட மாணவிகளுடன்...
கடந்த 2009ல் கன்யாகுமரி மாவட்டம் விளவங்கொடு தாலுக்கா, இடைக்கோடு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்னகுமார் என்ற 28 வயதையுடைய கணினி ஆசிரியர் தன்னுடைய லேப்டாப்பை பழுது நீக்க ஒரு கம்ப்யூட்டர் டெக்னீஷியனிடம் கொடுததிருந்தார். பழுது நீக்கப்பட்டதும் லேப்டாப் கேலரியை கம்ப்யூட்டர் டெக்னீஷியன் யதார்த்தமாக ஓப்பன் செய்ய திகைத்துப் போய் விட்டார்.
அதில் 35 க்கும் மேற்பட்ட கணினி பயிலும் மாணவிகளுடன் கிருஷ்ணகுமார் உல்லாசமாக இருக்கும் வீடியோ க்ளிப்களைக் கண்டு கொதித்துப்போனவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்து போலீஸாரின் ஆலோசனைப் பிரகாரம் கிருஷ்னகுமாருக்கு போன் செய்து லேப்டாப்பைக் கொடுத்ததும் மறைந்திருந்த போலீசார் அவரை கைது செய்தனர்.
இக்கயவர்கள் இது போன்ற சில்மிஷன்களில் சிக்குவது மிகக்குறைவு சிக்கிக் கொண்டாலும் சிறிது காலம் சுகாதாரமான சிறை வாழ்க்கை, அதன் பிறகு ஜாமீனில் வெளியில் மீண்டும் உல்லாச வாழ்க்கை பழைய படியேத் தொடரும், தொடர்ந்தும் இருக்கிறது.
சினிமா நடிகைகளைப் போல ஆடு...
மத்தியப் பிரதேச மாநிலம் பேதல் மாவட்டத்தில் மகேஷ் மாலவ்யா எனும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் நீண்ட காலமாக தன்னிடம் பாடம் பயிலும் சிறுமிகளை ஏமாற்றி வல்லுறவில் ஈடுபடுத்துவது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.
30-11-2012 அன்று வகுப்பு நடக்கும் பொழுது ஒரு மாணவனை அழைத்து பணம் கொடுத்து சாராயம் வாங்கி வரச்சொல்லி அதை குடித்து விட்டு போதை தலைக்கேறியதும் மாணவிகளை பெஞ்ச் மேல் ஏறி ஆடச்சொல்லி இருக்கிறார் பயந்து கொண்டு ஆடிய மாணவிகளை பிரம்பால் அடித்து சினிமா நடிகைகளைப் போல் வளைந்து நெளிந்து ஆடச்சொல்லி இருக்கிறார் பிரம்படித் தாங்க இயலாமல் சில மாணவிகள் ஜன்னல் வழியாக ஏறிக் குதித்து ஓடிச்சென்று தனது பெற்றோரிடம் கூற பெற்றோர்களும், பொதுமக்களும் பேதல் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் பொர்கரிடம் புகாரளிக்க பள்ளி நிர்வாகத்திலிருந்து அவரை சஸ்பென்ட் மட்டும் செய்யச்சொல்லி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே 2008ல் இதே பள்ளியில் சிறுமிகளிடம் பலாத்காரத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீது பலாத்கார வழக்கு நிலுவையில் இருக்கும் போதே இவரை பள்ளியில் தொடர்ந்து நீடிக்கச் செய்த பள்ளி நிர்வாகிகள் மீது நடிவடிக்கை எடுக்கக்கோரி மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
வரம்பு மீறலுக்கு வயது வரம்பு உண்டோ ?
பிப் 28,2012 அன்று ஊட்டி கீழ்கோத்தகிரி சந்தைப் பகுதியின் முக்கிய சாலையில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் புடை சூழ சுமார் 8 மணி நேரம் போக்கு வரத்தை ஸ்தம்பிக்கச் செய்யும் அளவிற்கான ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்தது. இவ்வளவு நேரம் நீடித்த இந்த ஆர்பாட்டம் மின்வெட்டைக் கண்டித்தோ, விலைவாசி உயர்வைக் கண்டித்தோ அல்ல கஷ்டப்பட்டுப் பெற்று பாசத்தை ஊட்டி வளர்த்தப் பிள்ளைகளின் எதிர்காலத்தை ஞானசூன்யமாக்கி வரும் சார்லஸ் என்ற 45 வயதையுடைய வணிகவியல் பாடம் நடத்தும் காம வாத்தியாரை கைது செய்யக்கோரி நடத்திய ஆர்ப்பாட்டமாகும்.
விரும்பிய மாணவிகளை விரும்பிய நேரத்தில் வல்லுறவில் ஈடுபடுத்துவது இவரது வாடிக்கையாம்(?) பாதிக்கப்பட்ட ஒரு மாணவி சக மாணவியிடம் தனக்கு நேர்ந்த அவலத்தைக் கூற இதைக் கேட்ட மாணவி அதிர்ச்சி மேலீட்டால் அந்தப் பாவி என்னையும் தான் என்றுக் கூற இச்செய்தி கசிந்து கொண்டே செல்ல இச்செய்தி காதுக்கு எட்டிய மாணவிகளில் பலர் என்னையும் தான், என்னையும் தான் என்றுக் கூற இறுதியாக இதற்கு முடிவு கட்ட நாண்கு மாணவிகள் களமிறங்கினர் அவர்கள் தங்கள் பெற்றோரிடம் சம்பவத்தைக் கூற அதனடிப்படையில் நடத்தப்பட்டது தான் மேல்படி உயிரோட்டமுள்ளப் போராட்டம்.
தகவலறிந்த ஆர்.டி.ஓ காந்திமதி அவர்கள் ஒருப் பெண் என்பதால் சம்பவத்தைக் கேட்டுக் கொதித்துப் போனவர் தாசில்தார் ஜோகி, நீலகிரி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் துரை, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேல்படி நான்கு மானவிகளையும் தனித் தனியாக விசாரனை நடத்தி சம்பவத்தை உறுதி படுத்திக் கொண்ட இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அதி விரைவுப் படை வரவழைத்து பால்ராஜ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவர முடியாத அளவு பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.கைது செய்து அழைத்துச் சென்ற பொழுது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் வாத்தியாருக்கு செருப்பு மாலை அணிவித்தனர்.
பட்டப் பகலிலும் கூட...
கைதுகள் தொடர்ந்தாலும் தண்டனைகள் கடுமையானதாக இல்லாதக் காரணத்தால் அவர்களின் வரம்பு மீறல்கள் நின்ற பாடில்லை கடந்த காலங்களில் இலைமறை காய்மறையாக சில காமுக ஆசிரியப் பெருந்தகை(?)களால் நடத்தப்பட்ட வல்லுறவுகள் இன்று பட்டப் பகலிலேயே அதுவும் பெண்களின் தலைவி அம்மா(?) அவர்களின் ஆட்சியில் பகிரங்கமாக நடக்கத்தொடங்கி விட்டது.
தூத்துக்குடி மாவட்டம் உதயநேரி கருங்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தேவசாமித்தியம் என்ற காமுக ஆசரியர் வகுப்பு நடக்கும் பகல் வேலையில் தனக்கு விருப்பப்பட்ட மாணவியை அழைத்து சத்தணவு கூடத்தில் வைத்து வல்லுறவுக்கு உட்படுத்தி விட்டு வெளியில் சொன்னால் ஃபைலாக்கி விடுவேன் என்று மிரட்டி அனுப்புவாராம். இதில் பாதிக்கபட்டு மனசாட்சி உறுத்திய ஜெயமாலா என்ற மாணவி தனது பெற்றொரிடம் சொல்லி அழுததும் செங்கநுல்லூர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் செய்து தேவசாமித்தியம் கைது செய்யப்பட்டு விசாரித்து வருவதாக தகவல் கிடைத்து உள்ளது.
மூன்றாந்தர நாலாந்தர ரவுடிகளை விட மோசமாக...
மேல்படி வரம்பு மீறலில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் பருவ வயது பெண்கள் இந்த அசிங்கத்தை பேற்றோரிடமும், உற்றாரிடமும் சொல்ல முடியாமல் விசையில் சிக்கிய எலிகளைப்போல் காமவெறிப் பிடித்த சில வாத்தியார்களிடம் மாட்டிக்கொண்டு அவர்களின் வாழ்க்கையை நீண்ட காலமாகத் தொலைத்து அல்லல் படும் மாணவிகள் ஏராளம்.
இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் அருண் என்ற 38 வயதையுடைய பேராசிரியரின் கோரப் பிடியில் சிக்கி மீளமுடியாமல் தவித்த ஒரு மாணவியின் துயர சம்பவத்தைப் படிக்கும் எவருடைய கண்களும் கசியாமல் இருக்காது. ஆனால் அந்த கல் நெஞ்சனுக்கு கசிய வில்லை.
அருணிடம் அந்த மாணவி அவருடைய வீட்டிற்கு சென்று டியூசன் படித்து வந்தார் சிறிது நாட்கள் கழிந்ததும் அந்த மாணவியின் மீது காதல் வலையை மெல்ல விரித்து கல்யாணம் செய்து கொள்வதாக வாக்களித்தார் அதை நம்பிய அந்த மாணவி அவருடன் நெருக்கமானார் ஒரு நாள் மயக்க மருந்தை குளிர் பாணத்தில் கலந்து கொடுத்து சீரழித்தார் அதை ரகசியமாக வீடியோவும் எடுத்துக்கொண்டு வீடியோ க்ளிப்பை அப்பெண்ணிடம் காட்டி காதல் வலையை கட் பண்ணி காமவலையில் கவிழ்த்து ஆயுள் அக்ரீமென்ட் செய்து விட்டார்.
இது இடைவிடாமல் தொடர்ந்ததால் என்னை விட்டு விடுங்கள் சார் என்று அப்பெண் அழுது கெஞ்சிக் கேட்டும் விடுவதாகத் தெரியவில்லை இந்நிலையில் அருணுக்கு வேறுப் பெண்ணுடன் திருமனமும் நடந்தது இத்துடன் தப்பித்தோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார் அந்த மாணவி.
ஆனால் அந்த நிம்மதிப் பெருமூச்சு நீடிக்கவில்லை 1-3-2012 அன்று அந்த மாணவிக்கு அருண் போன் செய்து தனது மனைவி வீட்டில் இல்லை உடனடியாக நீ வர வேண்டும் என்று வரவழைத்து அருணும், அவனது நன்பன் ராம்குமாரும் அப்பெண்ணை சீரழித்து அதையும் வீடியோவில் பதிந்து இன்னும் எப்பொழுது அழைத்தாலும் தாமதமின்றி வரவேண்டும் மீறினால் விடியோ க்ளிப்பை இணையத்தில் விட்டு விடுவேன் என்றுக் கூறி மிரட்டி அனுப்பி உள்ளார்.
இனியும் இதை சகிக்க முடியாது என்று முடிவுக்கு வந்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறிக் கதறி அழுதுள்ளார். அவரது பெற்றோர் கோவில்பட்டி மேற்கு காவல்நிலையத்தில் புகாரளித்து அருணையும், ராம்குமாரையும் கைது செய்து அவரது லேப்டாப்பை சோதித்த போது அந்த மாணவியை பலரிடம் ஈடுபடுத்திய காட்சிகள் அடங்கிய வீடியோ க்ளிப்கள் இருந்துள்ளன. இச்சம்வம் மார்ச் 1-3-2012 அன்று செய்தித் தாள்களில் வந்து தமிழ்நாட்டில் பரபப்பை எற்படுத்திய சம்பவமாகும்.
இது போன்ற சம்பவங்களில் மாட்டிக்கொள்ளும் சிறுமிகள் பலர் பயந்துகொண்டு வெளியில் சொல்வதில்லை, பருவ வயதுப் பெண்கள் தங்களுடைய வாழ்க்கை நாசமாகி விடும் எவனும் வாழ வைப்பதற்கு முன் வர மாட்டான் என்றுக்கருதி மறைத்து விடுகின்றனர்.
ஒழுக்க விழுமங்களின் உயர்விடமாக கல்லூரிகள் கருதப்படுவதால் கல்லூரியிலிருந்து வீடு திரும்பும் தன் பிள்ளைகளின் ஒழுக்கம் சார்ந்த விஷயங்களை பற்றி அவ்வளவாக பெற்றோர்கள் விசாரிப்பதில்லை. இது தான் இவர்களை வரம்பு மீறச் செய்தது.
துணிந்து ஒண்றிரன்டு மாணவிகள் புகார் செய்தாலும் சில்மிஷன் வாத்தியார்களுக்கு கிடைப்பது வெறும் சிறிது கால சிறை வாழ்க்கை மட்டும் தான்.
துணிந்து புகார் செய்த இவர்களுக்கோ சொந்த ஊரில் மாப்பிள்ளை கிடைக்காது பக்கத்து ஊரிலும் மாப்பிள்ளை எடுக்க முடியாத அளவுக்கு ஊடகங்களில் செய்தி வெளியாகி விடுகின்றன பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று எழுதினாலும் அவர்கள் இன்னார் தான் என்பது அந்த மாவட்டம் முழுமைக்கும் தெரிந்து விடும்.
- தொடர்ந்து நடந்து வந்த குழந்தை கடத்தலை கோவை மோகன் ராஜூக்கு கொடுக்கப்பட்ட என்கவுண்டருடன் கடந்த அரசு குழந்தை கடத்தலை ஓரளவு முடிவுக்கு கொண்டு வந்தது.
- தொடர்ந்து நடந்து வந்த வங்கி கொள்ளையை அதில் ஈடுபட்ட ஐந்து கொள்ளையர்களுக்கு கொடுக்கப்பட்ட என்கவுண்டருடன் வங்கிக் கொள்ளையை இந்த அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது.
- தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்கிளிலும் பரவலாக ஆசிரியர்களால் நடத்தப்படும் மாணவிகள் மீதான கற்பழிப்புகளை எந்த கவுன்டர் மூலம் அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வர இருக்கிறது ?
எந்த கவுன்டர் கொடுத்தாலும் பொதுமக்கள் முன்னிலையில் கொடுக்க ஏற்பாடு செய்யட்டும் அவ்வாறு செய்தால் மட்டுமே இதுபோன்ற சிறுமிகளின் உயிரையும், மானத்தையும் கழுவிலேற்றும் கொடிய குற்றவாளிகளை முடிவுக்குக் கொண்டு வரமுடியும்.
தண்டனைகள் கடுமையாக்கப்படாத வரை குற்றங்கள் குறையவே குறையாது இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் மனிதாபிமானமற்றது என்று விமர்சித்தோர் தொடர்ந்து விமர்சித்து வருவோர் அதை சற்று மாற்றி இன்று நடைமுறைப்படுத்தி வருவதைப் பார்த்து வருகிறோம்.
பெற்றோர்களே உஷார் !!
இனிவரும் காலங்களில் பெற்றோர்கள் தங்கள் மகள்களை கண்காணிக்க வேண்டும் முடிந்தால் பாடம் பியற்றுவிக்கும் ஆசிரியர்களின் குணநலன்களை வெளிப்படையாக கேட்டறிந்து கொள்ள வேண்டும்.
இதை விடவும் முக்கியமாக பெண் பிள்ளைகளை படிக்க வைக்கும் கல்லூரியின் முதல்வர்கள், பேராசிரியர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று நன்றாக விசாரித்துக் கொண்டு அட்மிஷன் போட வேண்டும்.
இவர்களை கடுமையாக தண்டித்து அதன் பிறகு மீண்டும் இக்குற்றங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு போதுமான தண்டனைச் சட்டங்கள் இந்திய குற்றவியல் சட்டத்தில் இல்லை என்பதால் தான் வங்கி கொள்ளையர்கள் மற்றும் கோவை மோகன் ராஜ் எதிர்த்தார்கள் அதனால் சுட்டோம் என்று போலீசார் பொய் புளுகும் நிலை ஏற்பட்டது.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்