அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
ரிச்சர்ட் டாகின்ஸ் தளம் தொடங்கி பல்வேறு தளங்களில் பரபரப்பை/விவாதத்தை உண்டாக்கியிருக்கின்றது இந்த கட்டுரை.
----------------------
அழைப்பு பணியில் தீவிரமாக செயல்படும் அப்துர் ரஹீம் கிரீன், யூசுப் சேம்பர்ஸ், ஹம்சா அன்ட்ரியஸ் மற்றும் ஆடம் தீன் போன்றவர்களின் நாடான பிரிட்டன் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை தன்னகத்தே கொண்ட நாடு. தி இண்டிபெண்டன்ட் கூறியிருக்கும் இந்த தகவல்களுக்கு பின்னால், இஸ்லாத்தை பற்றிய தவறான கண்ணோட்டங்களை களைய பாடுபடும் அந்த இயக்கங்களுக்கு நிச்சயம் பங்கிருக்கவேண்டும்.
குறிப்பாக ஒரு அமைப்பை பற்றி சொல்லியாக வேண்டும். IERA (Islamic Education and Research Academy) என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு மகத்தான இஸ்லாமிய அழைப்பு பணியை செய்து வருகின்றது. இவர்களுடைய செயல் திட்டம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவை,
மேலே காணும் பிரிவுகளை உற்று நோக்கினால் IERAவின் செயல் திட்டம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதை காணலாம்.
இது, கடந்த சில மாதங்களுக்கு முன் (4th January 2011) பிரிட்டனின் புகழ் பெற்ற நாளிதழான "தி இண்டிபெண்டன்ட்" தனது கட்டுரை ஒன்றிற்கு வைத்த தலைப்பு.
ரிச்சர்ட் டாகின்ஸ் தளம் தொடங்கி பல்வேறு தளங்களில் பரபரப்பை/விவாதத்தை உண்டாக்கியிருக்கின்றது இந்த கட்டுரை.
கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்கும் பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக குறிப்பிடும் அந்த கட்டுரை கீழ்க்காணும் தகவல்களை தெரிவிக்கின்றது.
----------------------
"பிரிட்டனில் எத்தனை மக்கள் இஸ்லாமை தழுவி இருக்கின்றார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட மிக விரிவான மதிப்பீடு முயற்சி, கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக கூறுகின்றது.
இஸ்லாம் குறித்த எதிர்மறையான சித்தரிப்புகள் அதிகமிருந்தாலும், ஆயிரக்கணக்கான பிரிட்டன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமை தழுவுகின்றார்கள்.
பழைய மதிப்பீடுகள், இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை சுமார் 14,000 திலிருந்து 25,000 வரை இருக்கலாமென சொல்லுகின்றன.
ஆனால், Faith Matters அமைப்பின் புதிய ஆய்வு, இந்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் வரை இருக்கலாமென தெரிவிக்கின்றது. (அது மட்டுமல்லாமல்) ஒவ்வொரு வருடமும் சுமார் 5000 பிரிட்டன் மக்கள் இஸ்லாமை தழுவதாகவும் தெரிய வருகின்றது.

ஸ்காட்டிஷ் 2001 மக்கள் தொகை கணக்குப்படி, 2001 ஆம் ஆண்டு வாக்கில், இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை 60,699 என ஆய்வாளர்கள் மதிப்பிட்டிருக்கின்றனர். அடுத்த ஆண்டு வரை புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எதுவும் திட்டமிடப்படவில்லை.
ஒவ்வொரு வருடமும் எத்தனை மக்கள் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக தேர்ந்தெடுக்கின்றனர் என்பதை அறிய விரும்பிய ஆய்வாளர்கள், லண்டனில் உள்ள பள்ளிவாசல்களில் கணக்கெடுப்பு நடத்தினர்.
அப்படி நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் என்ன சொல்கின்றன என்றால், கடந்த பனிரெண்டு மாதங்களில் பிரிட்டனின் தலைநகரில் மட்டும் சுமார் 1,400 பேர் இஸ்லாத்தை தழுவியிருக்கின்றனர். இந்த தொகையை நாடு முழுவதும் கணக்கிட்டு பார்த்தால் சுமார் 5,200 பேர் ஒவ்வொரு வருடமும் தங்களை இஸ்லாமிற்குள் ஐக்கியப்படுத்தி கொள்கின்றனர். இதனை ஜெர்மனி மற்றும் பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வுகளோடு ஒப்பிட்டோமானால், அங்கே சுமார் 4000 மக்கள் ஒவ்வொரு வருடமும் இஸ்லாத்தை தழுவுகின்றனர்.
இஸ்லாமை தழுவியவர்களின் நம்பத்தகுந்த எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடுவது கடினம் என்பதை ஒப்புக்கொண்டுள்ள Faith Matters அமைப்பின் இயக்குனர் பியாஸ் முகல், "மக்கள் தொகை கணக்கெடுப்பு, உள்ளூர் வல்லுனர்களின் தகவல்கள், மசூதிகளில் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பு போன்றவற்றை அடிப்படையாக வைத்து திரட்டப்பட்ட சிறந்த அறிவார்ந்த யூகம் இந்த அறிக்கை"என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், " எப்படி இருப்பினும், கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்றவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்திருப்பதை மிகச் சிலரே சந்தேகம் கொள்வார்கள்".
ஏன் அதிக அளவில் மக்கள் இஸ்லாமை தழுவுகின்றனர் என்று கேட்டதற்கு அவர்,"பொதுவாழ்வில் இஸ்லாமின் முக்கியத்துவத்திற்கும், அதிகரித்து வரும் தழுவல்களுக்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கின்றேன். இஸ்லாம் எதைப்பற்றியது என்பதை அறிய ஆர்வம் காட்டுகினறனர் மக்கள். அவர்கள் அப்படி செய்யும் போது பல்வேறு திசைகளில் சென்று விடுகின்றனர். பலரும் தங்களுடைய சகஜ வாழ்க்கைக்கு திரும்பி விடுகின்றனர். ஆனால் சிலரோ, எது குறித்து அவர்கள் ஆராய ஆரம்பித்தனரோ அதில் தாங்கள் கண்டுபிடித்தவற்றை விரும்ப ஆரம்பித்து அதையே தழுவி விடுகின்றனர்".
இது குறித்து கருத்து தெரிவிக்கும் Muslims4uk தளத்தின் நிறுவனர் இனாயத் பங்லவாலா, "இந்த முடிவுகள் என்ன தெரிவிக்கின்றன என்றால், 600 பிரிட்டன் மக்களில் ஒருவர் இஸ்லாத்தை தழுவுபவராக இருக்கின்றார். இஸ்லாம் ஒரு மிஷனரி மார்க்கம். நிறைய இஸ்லாமிய அமைப்புகள், குறிப்பாக பல்கலைகழக மாணவர் இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாம் குறித்த தவறான கருத்துக்களை களைய தீவிரமாக செயல்பட்டு வருகின்றன" என்று குறிப்பிடுகின்றார்.
இஸ்லாமை தழுவுவதென்பது எளிதான ஒன்று. டெக்னிகலாக, முஸ்லிமாவதற்கு ஒருவர் செய்ய வேண்டியதெல்லாம் ஷஹாதா கூறுவது மட்டும்தான். அதாவது, "இறைவன் ஒருவனே, முஹம்மது (ஸல்) அவர்கள் அவனின் தூதர்" என்று மனப்பூர்வமாக சொல்லுவது மட்டும் முஸ்லிமாவதற்கு போதுமானது. ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை இரண்டு சாட்சிகளுக்கு மத்தியில் சொல்லுவதையே விரும்புகின்றனர்."
----------------------------
நீங்கள் மேலே பார்த்த தகவல்கள் மட்டுமல்லாமல், இஸ்லாமை தழுவிய சில சகோதர/சகோதரிகளின் (கதிஜா ரீபக், ஸ்டுவர்ட் மீ, பால் மார்டின், தாவுத் மீலே, டெனீஸ் ஹோர்ஸ்லி, ஹானா தஜிமா) கருத்துக்களையும் வெளியிட்டிருக்கின்றது தி இண்டிபெண்டன்ட்.
----------------------------
நீங்கள் மேலே பார்த்த தகவல்கள் மட்டுமல்லாமல், இஸ்லாமை தழுவிய சில சகோதர/சகோதரிகளின் (கதிஜா ரீபக், ஸ்டுவர்ட் மீ, பால் மார்டின், தாவுத் மீலே, டெனீஸ் ஹோர்ஸ்லி, ஹானா தஜிமா) கருத்துக்களையும் வெளியிட்டிருக்கின்றது தி இண்டிபெண்டன்ட்.
அழைப்பு பணியில் தீவிரமாக செயல்படும் அப்துர் ரஹீம் கிரீன், யூசுப் சேம்பர்ஸ், ஹம்சா அன்ட்ரியஸ் மற்றும் ஆடம் தீன் போன்றவர்களின் நாடான பிரிட்டன் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை தன்னகத்தே கொண்ட நாடு. தி இண்டிபெண்டன்ட் கூறியிருக்கும் இந்த தகவல்களுக்கு பின்னால், இஸ்லாத்தை பற்றிய தவறான கண்ணோட்டங்களை களைய பாடுபடும் அந்த இயக்கங்களுக்கு நிச்சயம் பங்கிருக்கவேண்டும்.
குறிப்பாக ஒரு அமைப்பை பற்றி சொல்லியாக வேண்டும். IERA (Islamic Education and Research Academy) என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு மகத்தான இஸ்லாமிய அழைப்பு பணியை செய்து வருகின்றது. இவர்களுடைய செயல் திட்டம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவை,
· Mission Dawah - அழைப்பு பணியில் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ ஈடுபடும் முஸ்லிம்களை கொண்ட ஒரு மாபெரும் இயக்கத்தை உருவாக்குவது தான் இந்த பிரிவின் குறிக்கோள்.
· Muslim Now - புதிதாய் இஸ்லாமை தழுவியவர்களுக்கு இஸ்லாமிய கல்வி மற்றும் இதர உதவிகளை செய்யும் பிரிவு.
· One Reason - முஸ்லிமல்லாதவர்களுக்கான இஸ்லா ம் குறித்த தகவல்களை தயாரிக்கும் பிரிவு.
· The Big Debates - முஸ்லிமல்லாத மக்களிடம் ஆரோக்கியமான முறையில் உரையாடுவதே இந்த பிரிவின் குறிக்கோள். இதுவரை பல விவாதங்களை சந்தித்துள்ளது இந்த பிரிவு. இதில் பிரபல நாத்திகர்களும் அடக்கம்.
மேலே காணும் பிரிவுகளை உற்று நோக்கினால் IERAவின் செயல் திட்டம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதை காணலாம்.
அழைப்பு பணியில் IERA போன்ற அமைப்புகள் எந்த அளவு தீவிரமாக செயல்படுகின்றனவோ அது போலவே பிரிட்டனின் இஸ்லாமிய இளைஞர் அமைப்புகளும் செயல்படுகின்றன.
இஸ்லாமிற்கு எதிரான பிரச்சாரங்கள் சிலரால் வரலாறு முழுக்க தீவிரமாக கையாளப்பட்டிருந்தாலும்/கையாளப் பட்டாலும், அந்த பிரச்சாரங்கள் இது வரை வெற்றி பெற்றதில்லை. அதற்கு எதிர்மறையாக, தொடர்ந்து அதிக அளவில் மக்கள் இஸ்லாத்தை தழுவி தான் வருகின்றார்கள். இது வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. இறைவன் நாடினாலன்றி இனி மேலும் அந்த சிலர் வெற்றி பெற போவதில்லை.
இஸ்லாம் தொடர்ந்து முஸ்லிமல்லாத சகோதர/சகோதரிகளின் உள்ளங்களை ஈர்க்கும். சகோதரர் காலித் யாசின் ஒருமுறை குறிப்பிட்டது போல, நாம் தாவாஹ் என்னும் உள்ளங்களை துளைக்கும் குண்டை என்றும் நம்முடன் வைத்திருப்போம். அது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல ஒவ்வொரு முஸ்லிமின் கடமையும் கூட.
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர் --- குரான் 3:104
இறைவன் நம் சமூகத்திற்கு தூய இஸ்லாத்தை எடுத்துரைக்கும் இயக்கங்களையும், அறிஞர்களையும் தொடர்ந்து தந்தருள்வானாக...ஆமீன்.
இஸ்லாமிய இளைஞர்கள் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட வல்ல இறைவன் உதவி புரிவானாக...ஆமீன்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...
Please Note:
மேலே கொடுக்கப்பட்டுள்ள மொழிபெயர்ப்பு முழுமையானது அல்ல. முழுமையாக படிக்க கீழே கொடுக்கப்படுள்ள சுட்டியை சுட்டவும்.
My sincere thanks to:
No comments:
Post a Comment