Saturday, 24 December 2022

உம்ரா செய்வது எப்படி - பயிற்ச்சி வகுப்பு power point presentation program -


உம்ரா செய்வது எப்படி - பயிற்ச்சி வகுப்பு power point presentation program -

இன்ஷா அல்லாஹ் வரும் ஞாயிற்றுகிழமை  28.12.2022
(இரவு 7:40 pm துபாய் நேரம் ) ( இரவு 9:10 pm இந்திய நேரம் )

உம்ரா செய்வது எப்படி - பயிற்ச்சி வகுப்பு power point presentation program - நேரடி நிகழ்ச்சி மற்றும் Tamil Islamic Academy - YouTube live நிகழ்ச்சி

A.S.Ibrahim
M.A(Islamic)

ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சி! 'ஜோரம் வான்' இஸ்லாத்தில் இணைந்தார்!

ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சி!
'ஜோரம் வான்' இஸ்லாத்தில்
இணைந்தார்!

உலகத்தில் இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்கும் எவரையும் புரட்டிப்போட்டு அவர்களை அடிமையாக்கும் விஷயம் குர்ஆனில் எது?

ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சி.

100 வருஷங்களாக நாட்டை பாதித்துக்கொண்டிருக்கும் மனநோயின் பெயர் தான் இஸ்லாம் என்று உரக்க சொன்னவர்,

இஸ்லாத்தை தடை செய்ய வேண்டும் என மிகப்பெரும் மக்கள் திரளை திரட்டியவர்
ஃபர்தாவை தடை செய்ய வேண்டும்
என போராடியவர்,

பள்ளிகளின் மினாராக்கள் இடித்து நொறுக்கப்பட வேண்டும் என்று பார்லிமென்டில் முழங்கியவர்
தற்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.

டச் பார்லிமென்ட் எம்.பியாக
இருந்த ஜோரம் வான் கிளாவரென்.
(Joram van Klaveren - Dutch politician)
தற்போது இஸ்லாத்தை தனது
வாழ்க்கை நெறியாக ஏற்றுள்ளார்.

இஸ்லாத்தை எதிர்ப்பதற்காக புத்தகத்தை எழுத துவங்கியவர், பாதியிலேயே அதை குப்பையில் தூக்கி எறிந்துவிட்டதாக சொல்கிறார். இஸ்லாத்தை படிக்கும் போது
தான் அதன் யதார்த்தத்தை உணர முடிகிறது.

இதுவரை இஸ்லாத்துக்கு எதிராக செயல்பட்டதற்காக வருத்தம் தெரிவித்ததுடன். இஸ்லாம் பற்றி இனி எழுதப் போகிறேன் என்கிறார்.

இறைவன் மிகப் பெரியவன்! ❤☝

25.12.2022

Friday, 23 December 2022

Diploma in Training and Development (DTD)* 👉நீங்கள் சிறந்த பேச்சாளராக வேண்டுமா?

*Diploma in Training and Development (DTD)* 👉நீங்கள் சிறந்த பேச்சாளராக வேண்டுமா? 👉உங்கள் துறையில் உயர வேண்டுமா? 👉உங்கள் வகுப்பை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல வேண்டுமா? 👉நீங்கள் சிறந்த பயிற்சியாளராக வேண்டுமா? *❗யார் கலந்துகொள்ளலாம்?* 🔹பேச்சாளர்கள் 🔸பிள்ளைகளுக்கு பாடம் நடத்த விரும்பும் வீட்டுப் பெண்கள் ◻️ஆசிரியர்கள் ◼️பணியாளர்கள் 👉 வகுப்பு துவங்கும் நாள்: 03.01.2023 🗓காலம்: 3 மாதங்கள். 🕢நேரம்: 5.00pm – 6.30pm IST 🗓நாட்கள்: செவ்வாய் மற்றும் வியாழன் 📜 NCAET அங்கீகாரத்துடன். 🎦 இடம்: நேரடி ஆன்லைன் பயிற்சி - Zoom💻💻 📞அட்மிஷன் பெற தொடர்பு கொள்ள வேண்டிய எண்: https://wa.me/+917397733575 🔊நூற்றுக் கணக்கானோர் பலன்பெற்ற இச்சிறப்பு பயிற்சியைக் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள… https://www.facebook.com/HussainBashaOnline/videos/529574605483177/


முஸ்லிம் நாடுகள் எல்லாம் மதம் சார்ந்த நாடுகளாக இருக்கின்றன

முஸ்லிம் நாடுகள் எல்லாம் மதம் சார்ந்த நாடுகளாக இருக்கின்றன  இந்தியா மட்டும் மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டுமா? என்ற வாதம் பல காலமாக பாஜக சங்கிகளால் வைக்கப்படுகிறது.

ஆனால் உண்மையில் எத்தனை முஸ்லிம் நாடுகள் மதம்சார்பற்ற நாடுகளாக இருக்கின்றன என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

#துருக்கி 96%* இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு ஆனால் இன்றும் 4% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது

#இந்தோனேஷியா 90% இஸ்லாமியர்களை கொண்ட நாடு ஆனால் இன்றும் 10% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது.

#அஜர்பைஜான் 93% இஸ்லாமியர்களை கொண்ட நாடு ஆனால் 7% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது

#கஜகஸ்தான் 70%* இஸ்லாமியர்களை கொண்ட நாடு ஆனால் இன்றும் 30% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது

#அல்பேனிய 58% இஸ்லாமியர்களை கொண்ட நாடு ஆனால் 42% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது

#லெபனான் 54% இஸ்லாமியர்களை கொண்ட அரபு நாடு ஆனால் 46% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது.

#தஜிகிஸ்தான் 98%* இஸ்லாமியர்களை கொண்ட நாடு ஆனால் 2% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது

#துர்க்மெனிஸ்தான் 89%* இஸ்லாமியர்களை கொண்ட நாடு ஆனால் 11% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது .
#கிர்கிஸ்தான் 86% இஸ்லாமியர்களை கொண்ட நாடு ஆனால் 14% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது

#உஸ்பெக்கிஸ்தான் 96% இஸ்லாமியர்களை கொண்ட நாடு ஆனால் 4% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது .

#கொசோவோ 95% இஸ்லாமியர்களை கொண்ட நாடு ஆனால் 5% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது

#டிஜபௌடி 96% இஸ்லாமியர்களை கொண்ட நாடு ஆனால் 4% சிறுபான்மையினருக்காக மத சார்பற்ற நாடாகவே இருக்கிறது .

எகிப்து நாடும் மதசார்பற்ற நாடு என்பது உலகிற்கே தெரியும்

#பங்களாதேஷ் 89%
இஸ்லாமியர்களை கொண்ட மதசார்பற்ற நாடு

மதசார்பற்ற ஜனநாயக நாடுகளாக அறிவித்த இந்த நாடுகளில் எந்த ஒரு மத கலவரங்களும் நடந்ததாக வரலாறு இல்லை

இதை இங்குள்ள மத வெறியர்கள் புரிந்து கொண்டால் நல்லது.

https://youtu.be/cUVVKYDQtAQ

https://youtu.be/cUVVKYDQtAQ
 Tamil islamic academy ( YouTube) online  சர்வதேச அரபி்மொழி தினம் (டிசம்பர் 18)

இறைவன் கொடுத்த அறிவுக்கு ஃபீஸ் எதுக்கு? ரூ.8 லட்சத்தை பள்ளிவாசல் ஜமாத்தாரிடம் கொடுத்த என்ஜினீயர்

இறைவன் கொடுத்த அறிவுக்கு ஃபீஸ் எதுக்கு? ரூ.8 லட்சத்தை பள்ளிவாசல் ஜமாத்தாரிடம் கொடுத்த என்ஜினீயர்


ராமநாதபுரம் மாவட்டம் வழுதூரில் பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட பொறியாளர் பால் பாண்டியன், தனக்கு கொடுக்கப்பட்ட 8 லட்ச ரூபாய் ஃபீஸை மீண்டும் பள்ளிவாசலுக்கே திருப்பிக் கொடுத்திருக்கிறார்.


இறைவன் கொடுத்த அறிவுக்கு இறைவனிடமே கட்டணம் வாங்க மனமில்லாததால் ரூ.8 லட்சத்தை திருப்பிக் கொடுத்ததாக கூறியிருக்கிறார் பொறியாளர் பால் பாண்டியன்.


ராமநாதபுரம் மாவட்டம்

வழுதூரில் புதிய ஜும் ஆ பள்ளிவாசல் நேற்று திறகப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க வளைகுடா நாடுகள் ஸ்டைலில் ஆர்கிடெக்ட் டிசைன் செய்யப்பட்டு வெளிநாட்டு பாணியில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த பள்ளிவாசலை கட்டுவதற்கான போட்டியில் 20க்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங்கள் கலந்துகொண்ட நிலையில், ராமநாதபுரம் ரத்னா பில்டர்ஸ் செய்து கொடுத்த டிசைன் தான் வழுதூர் ஜமாத் நிர்வாகத்தினருக்கும், ஊர் மக்களுக்கும் பிடித்து போயிருக்கிறது.


இதையடுத்து புதிய பள்ளிவாசல் கட்டுமானப் பணிகள் ரத்னா பில்டர்ஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது. சுமார் 5 ஆண்டுகாலம் நடைபெற்ற பள்ளிவாசல் கட்டுமானப் பணி ஒரு வழியாக நிறைவடைந்து நேற்று திறப்புவிழாவும் கண்டுள்ளது. ஓமனில் இருந்து இந்த டிசைனை வாங்கிய பொறியாளர் பால் பாண்டியன், பள்ளிவாசலின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் பொருத்தப்பட்டுள்ள ஆர்கிடெக்ட் டிசைன் பொருட்கள் அனைத்தையும் துபாயிலிருந்து வாங்கியிருக்கிறார்.


*ரூ.8 லட்சம் ஃபீஸ்*


இதனிடையே கட்டுமானப் பணிகளுக்கான தொகை போக டிசைன் செய்து கொடுத்தது, மேற்பார்வையிட்டு ஆலோசனைகள் கூறியது என இதற்காக மட்டும் கடந்த 5ஆண்டுகளில் பொறியாளர் பால் பாண்டியனுக்கு ரூ.8 லட்சம் ஃபீஸ் தரப்பட்டிருக்கிறது. அதனை மீண்டும் பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகத்திடமே திருப்பிக் கொடுத்து கவனம் ஈர்த்திருக்கிறார் பால் பாண்டியன். இறைவன் கொடுத்த அறிவுக்கு இறைவனிடமே கட்டணம் வாங்குவது நியாயமில்லை என்பதால் பணத்தை திருப்பிக் கொடுத்ததாக பேசியிருக்கிறார்.



*வாழ்க்கை அனுபவம்*

*வாழ்க்கை அனுபவம்*


ஒரு தோட்டக்காரர் அவருடைய தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது பறவையின் சிறிய கூடு ஒன்றைக் காண்கிறார்..


அதன் அருகில் போய் அந்த கூட்டில் என்ன இருக்கிறது என்று பார்க்க ஆசைப்பட்ட தோட்டக்காரர் அதன் அருகில் சென்று பார்த்த போது அதில் *பறவையின் சில முட்டைகள் இருப்பதைக் கண்டு அந்த கூட்டைப் பத்திரமாக எடுத்து வைத்துவிட்டுச் செல்கிறார்.*


அடுத்த நாள் வந்து பார்க்கிறார்..அந்த *முட்டைகளில் ஒரு சிறிய வெடிப்பு (cracks) ஏற்பட்டிருப்பதைக் காண்கிறார்.* அப்போது இந்த முட்டைகளிலிருந்து குஞ்சுப் பறவைகள் வெளிவரப்போகிறது என்பதை உணர்ந்த தோட்டக்காரர் சந்தோசத்தில் கூட்டை மேலும் கவனமாகப் பார்த்துக் கொண்டார்.


இப்போது தோட்டக்காரருக்குப் பயிர்களைப் பார்ப்பதைக் காட்டிலும் பறவையின் கூட்டையும் முட்டைகளையும் பார்ப்பதற்காகவே தோட்டத்திற்கு வரத் தொடங்கினார்.


மீண்டும் மீண்டும் வருகிறார்.. முட்டைகளைப் பார்க்கிறார். ஒவ்வொரு முறையும் *அந்த முட்டைகளில் ஏற்பட்ட வெடிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் அதிகமாயிருப்பதை உணர்கிறார்.*


ஒவ்வொரு முறையும் அவர் அவற்றின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே செல்லத் தொடங்கினார்..


வழமை போன்று ஒரு நாள் கூட்டைப் பார்க்கத் தோட்டக்காரர் வந்தபோது முட்டைகள் அசைவதையும் முட்டையினுள்ளே குஞ்சுப் பறவைகளின் இறக்கைகள் விரிய வழியில்லாமல்

முட்டையின் சுவர்களிலே முட்டி மோதுவதையும் கண்டு உடைந்து போனார்..


*பாவம் அந்தப் பறவைக் குஞ்சுகள் கருவிலேயே சிரமப்படுகிறதே என்று உணர்ந்த தோட்டக்காரர் உடனே அந்த முட்டைகளிலிருந்த வெடிப்பை தன் கைகளால் கொஞ்சம் பெரிதாக்கி குஞ்சுகள் வெளிவர* ஏற்றாற்போல் சௌகரியமாக முட்டைகளை வைத்து விட்டு வீடு சென்றார்..


மறு நாள் காலையில் புதிய பறவைகளைக் காண

மிகுந்த ஆசையோடு கூட்டுக்கு அருகில் சென்ற தோட்டக்காரருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.


*முட்டைகளில் ஒரு மாற்றமும் இல்லை...*

சரி நாளை பார்ப்போம் என்று சென்று அடுத்த நாள் வருகிறார்... அன்றும் ஒரு மாற்றமும் இல்லை...


இப்படியோ நாளை நாளை என்று எதிர்பார்ப்புகள் தவணை முறையில் கடந்தன.


*சில நாட்களின் பின்னர் முட்டைகளைச் சூழ எறும்புகள் படை எடுத்தன...* பறவைக் குஞ்சுகள் செத்துப்போய்க் கிடந்தன...


இதைக்கண்ட தோட்டக்காரர் மனசெல்லாம் வலியோடு வாடிப்போனார்..


அப்போது அந்த வழியாக தோட்டக்காரரின் நண்பர் ஒருவர் வந்தார்...


நடந்ததைக் கூறினார்...


"பாவம் உன் அவசரத்தாலும்

*அளவுக்கு மீறிய அன்பாலும் எல்லையற்ற எதிர்பார்ப்பாலும் அந்த பறவைகளை அழித்து விட்டாயே"*

என்று நண்பர் கூறினார்...


"நானா ... "


"நீ தான்..

வேறு யாரு..."


அந்தப் பறவைகள் அந்த முட்டைகளில்

இருந்து வெளிவரும் போது

அதன் இறக்கைகள் மெதுவாக அசையும்,

கால்கள் துடிக்கும்,

முட்டைகளின் சுவர்களில் முட்டி மோதும்..

*இது தானே இயற்கை..*


அதை அப்படியோ விட்டிருந்தால்

இந்நேரம் அழகான பறவைகளாகப் பறந்திருக்கும்...

ஒரு இயல் பிரசவம் நடந்து முடிந்திருக்கும்..

அழித்து விட்டாயே என்று நண்பர் கூறியதும்


தோட்டக்காரர் மீண்டும் உடைந்து போனார்..

சிதறிப்போனார்..


இப்படித்தான் நாமும் *நம் பிள்ளைகளுக்கு சிரமத்தையே காட்டக் கூடாது என்று தாங்கு தாங்கு என்று தாங்குகிறோம்...* வலிக்கவே கூடாது என்று வளர்த்தெடுக்கிறோம்..


உழைப்பின் பெறுமதியை

வியர்வையின் கனதியை

வெற்றியின் தடங்களை

உணரச் செய்யாமலேயே

உருவாக்கி விடுகிறோம்...


நாம் மறந்துவிடக்கூடாது..


கண்டிப்பில்லாத கனிவு

நாளை எங்கேயோ ஓர் இடத்தில்

நம் பிள்ளைகளை

தண்டிக்க வைக்கும்...


*எல்லோரும் பயணிக்கும் பாதையில் நமது பிள்ளைகளையும் பயணிக்கக் கற்றுக்கொடுப்போம்*

பயணத்தைச் சரி செய்யவும் சொல்லிக்கொடுப்போம்


*அவர்களுக்கென்று தனியான ஒரு பாதையை அவர்களாக உருவாக்கட்டும்.*

நாம் தள்ளி நின்று தட்டிக்கொடுப்போம்..


*பிள்ளைக்கு விழவும் தெரிய வேண்டும் அப்போதுதான் எழும்புவது எப்படி என்று தெரிய வரும்..*


உங்கள் சுட்டு விரல்களைப் பிடித்துக்கொண்டே

எத்தனை காலம் தான் இன்னும் அவர்கள் நடை பயில்வது..?


இது ஒரு பறவையின் கதையல்ல..


*நம் பிள்ளைகளின் வாழ்வியல்...


*SMR*



நடிகைகளின் மனமாற்றம்

நடிகைகளின் மனமாற்றம்

முஸ்லிம் பெண்களின் தடுமாற்றம்

___________


வழிகேடுகளின் உச்சகட்டத்தை சந்தித்த பின் கடந்து வந்த பாதை தவறு என்று தாமதமாக உணர்ந்து தவ்பா எனும் பாவமன்னிப்பை தேடி மனம் திருந்தும் நடிகைகள் ஒரு புறம்


கட்டுப்பாடுகளை அடிமைத்தனமாக கருதி கண்ணிய வாழ்வை புறம் தள்ளி கழிசடை பாதைகளை எதிர் நோக்கும் முஸ்லிம் பெண்களோ ஒரு புறம்


வெளித்தோற்ற கவர்சிகளை ஆடம்பரங்களை இனிமையாக கருதி சீரியல்களை சினிமாக்களை நேசிக்கும் முஸ்லிம் பெண்கள்

மனம் திருந்தி வரும் நடிகைகளின் மறுவாழ்வை உற்று நோக்குங்கள்

அதுவே சினிமாவின் அலங்கோலத்தை தோலுரிக்கும் உங்கள் வாழ்வை செவ்வைபடுத்த கூடும்


தற்போதைய செய்தியில் முன்னனி கவர்சி நடிகை மும்தாஜ் அவர்கள் மனம் திருந்தி வருந்தியது ஓர் பாடம்


وَالَّذِيْنَ عَمِلُوا السَّيِّاٰتِ ثُمَّ تَابُوْا مِنْ بَعْدِهَا وَاٰمَنُوْۤا اِنَّ رَبَّكَ مِنْ بَعْدِهَا لَغَفُوْرٌ رَّحِيْمٌ‏


தீய செயல்கள் செய்தவர்கள் மனந்திருந்தி (பாவங்களிலிருந்து விலகி உண்மையாக) நம்பிக்கை கொண்டால்

நிச்சயமாக அதன்பின் உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும்

மிக்க கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்


(அல்குர்ஆன் : 7:153)

Saturday, 17 December 2022

இந்திய சட்டம்

1,  ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)

2,  நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை.  IPC-217

3,  நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம்.  CRPC 404

4,  அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166

5,  எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.

6,  சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம்.  Article 19(1) , CRPC 303,302(2)

7,  வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.

8,  இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ்
எவர் ஒருவரும் பார்வையிடலாம்.

9,  இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43

10,   ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.

11,  காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம்.  செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)

12,  கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 50 லிருந்து 100 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும்.  மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.

13,  தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற செலவு ரூபாய் 25 மட்டுமே. அதற்காக RIOffice-லும் VAO ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.

14,  காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)

15,  அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று Article 21(14)

16. புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் Article 32(8)

17,  பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம்.  

18,  பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.

19,  முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267

20,  அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403

21, குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.

22,  தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96

23,  பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை.  IPC-295

24,  மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295

25,  ஆள்மாராட்டம் செய்து ஏமாற்றுதல்.  3 ஆண்டு சிறை IPC-419

26,  ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. IPC-468.

27,  சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை IPC-484

28,  கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. IPC-494

29,  முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை.  IPC-495

30,  IPC-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட

இதில்
IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும்.
CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம் ஆகும்.