Tuesday, 14 April 2020

யூட்யூப் - வீடியோ ரிப்போர்ட்டிங்.pdf.

யூட்யூப் - வீடியோ ரிப்போர்ட்டிங்.pdf

YouTube Vedio block reporting

ஃபேஸ்புக்- ரிப்போர்ட்டிங்_pagenumber.pdf

ஃபேஸ்புக்- ரிப்போர்ட்டிங்_pagenumber.pdf

Facebook block report

*ஃபேஸ்புக், ட்விட்டர், யூட்யூபில் அதிகரித்து வரும் வெறுப்பு பிரச்சாரத்தை முடக்குவோம்.*

*ஃபேஸ்புக், ட்விட்டர், யூட்யூபில் அதிகரித்து வரும் வெறுப்பு பிரச்சாரத்தை முடக்குவோம்.*

நண்பர்களே,

வெறுப்பு பிரச்சாரத்திற்கு சமூக வலைதளமான ஃபேஸ்புக், ட்விட்டர், யூட்யூபை பெரிதும் பயன்படுத்தி வந்த சங்பரிவார் அமைப்பினர் தற்போது கொரோனா எனும் கொடிய வைரஸ் நோய் பரவி வரும் இந்த நேரத்தில் கூட மனிதாபிமானமின்றி இந்த நோயை முஸ்லிம்கள் பரப்பி வருவதாக தொடர்ந்து பொய் பிரச்சாரம் மற்றும் வெறுப்பு பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.

இதனை முறியடிக்கும் விதமாக ஃபேஸ்புக், ட்விட்டர், யூட்யூபில்
இருக்கும் ரிப்போர்ட் ஆப்ஷனை பயன்படுத்தி இவர்களது பதிவை நீக்க முயற்சிக்கலாம்.

ஒரு பதிவையோ அல்லது தொடர்ந்து வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்ளும் ஒரு நபரின் ப்ரொஃபைலையோ அல்லது ஒரு ஃபேஸ்புக் பக்கத்தையோ ரிப்போர்ட் செய்யும் முறை ஃபேஸ்புக்கில் வெறும் 20 நொடிகள் செலவிட்டு செய்யும் மிக எளிய நடைமுறையே. ஒரு பதிவை அல்லது நபரை 50க்கும் மேற்பட்ட நபர்கள் ரிப்போர்ட் செய்யும்போது நிச்சயம் ஃபேஸ்புக் அந்த பதிவை அல்லது நபரை 30 நாட்கள் வரை தடை செய்யும் வாய்ப்பு அதிகம். இதே போல் தான் ட்விட்டர் மற்றும் யூட்யூபிலும்.

தினமும் சில மணி நேரங்களை ஃபேஸ்புக்கில் செலவிடும் நாம் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 20 பதிவிகளை அல்லது நபர்களை ரிப்போர்ட் செய்யலாம். இதன் மூலம் வெறுப்பு பிரச்சாரத்தினை நிச்சயம் வெகுவாக குறைக்கலாம். தொடர்ந்து சில நாட்களுக்கு செய்வதன் மூலம் நிச்சயம் இந்த வெறுப்பு பிரச்சாரம் ஒழியும்.

ஃபேஸ்புக் மொபைல் ஆப் அல்லது Browserல்

1. ஒரு நபரின் Facebook Idயை ரிப்போர்ட் செய்யும் முறை

2. ஒரு ஃபேஸ்புக் பக்கத்தை (Facebook Page) ரிப்போர்ட் செய்யும் முறை

3. ஒரு ஃபேஸ்புக் பதிவை (Facebook Post) ரிப்போர்ட் செய்யும் முறை

4. ஒரு ட்விட்டர் அக்கவுண்ட் அல்லது ட்வீட்-ஐ ரிப்போர்ட் செய்யும் முறை

5. Mobile Appல் YouTube வீடியோவை ரிப்போர்ட் செய்யும் முறை

ஆகியவை தெளிவாக இந்த PDFகளில் கொடுக்கப்பட்டுள்ளது.

நாமும் ரிப்போர்ட் செய்வோம்..

நமக்கு தெரிந்தவர்களுக்கும் இதை அனுப்பி ரிப்போர்ட் செய்ய வைப்போம்.

*கொரோனாவை ஒழிப்பதோடு இந்த கொடிய சங்பரிவார் வைரஸ்களையும் ஒழித்துக் கட்டுவோம்..*

அனைவருக்கும் ஷேர் செய்யவும்.


உங்கள் நன்பனான AS

Monday, 13 April 2020

Muslims against in all media

டெல்லி தப்லீக்மாநாடு சென்று வந்த பரமக்குடி ஜக்கரியா.ஜமால் கொரான நோய் இல்லை என்று அறிவித்துள்ளனர்

டெல்லி தப்லீக்மாநாடு சென்று வந்த பரமக்குடி ஜக்கரியா.ஜமால் கொரான உறுதி முதலில் அறிவித்தனர்

ஆனால் இன்று சிவகங்கை மருத்துவக்கல்லூரியில் பரிசோதனை செய்துவிட்டு இவர்கள் இருவருக்கும் கொரானா நோய் இல்லை என்று அறிவித்துள்ளனர்

முதலில் முஸ்லிம்கள் டெல்லி சென்று வந்ததால் நோய் வந்ததாக அறிவித்த மருத்துவ துறை இன்று இல்லை என்று அறிவித்துள்ளது
இராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 24 பேர் டெல்லி சென்று வந்தார்கள் இவர்கள் யாருக்கும் தொற்றுநோய் இல்லை

மாவட்ட மக்கள் டெல்லி சென்று வந்தவர்களால் நோய் பரவ வில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்

S சலிமுல்லாஹ்கான்


உங்கள் நன்பனான AS

Sunday, 12 April 2020

வெட்கம்-ஈமானின் ஒரு பகுதி.*

—————————————
*வெட்கம்-ஈமானின் ஒரு பகுதி.*
—————————————-
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஈமான் என்பது அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாகும். *வெட்கம் ஈமானுடைய கிளைகளில் ஒன்றாகும்.*

அறிவிப்பவர்: *அபூஹுரைரா* (ரலி)
நூல்: *புகாரி 9*

அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர் தமது சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்த போது அவ்வழியே நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, *அவரை(க் கண்டிக்காதீர்கள்) விட்டு விடுங்கள். ஏனெனில் நிச்சயமாக வெட்கம் ஈமானின் ஓரம்சம்* என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: *அப்துல்லாஹ் பின் உமர்* (ரலி)
நூல்: *புகாரி 24*

*மார்க்கத்தை அறிய வெட்கப்படக் கூடாது !*
———————————————————
*பெண்களில் அன்சாரிப் பெண்கள் மிகச் சிறந்தவர்கள். (ஏனென்றால்) மார்க்கச் சட்டங்ளை அறிந்து கொள்வதை விட்டும் வெட்கம் அவர்களைத் தடுக்கவில்லை.*

அறிவிப்பவர்: *ஆயிஷா* (ரலி)
நூல்: *முஸ்லிம் 500*

*வெட்கம் தான் ஒரு காரியத்தை அழகாக்கும்*
———————————————————-
கெட்ட வார்த்தை பேசுபவர் வெட்கமில்லாதவர் என்று கூறுகிறது இந்த ஹதீஸ்..

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
*கெட்ட வார்த்தை பேசும் குணம் எதில் இருந்தாலும் அதை அது அசிங்கப்படுத்தாமல் இருப்பதில்லை. வெட்கம் எப்பொருளில் இருந்தாலும் அந்தப் பொருளை அது அழகாக்காமல் இருப்பதில்லை.*

அறிவிப்பவர்: *அனஸ்* (ரலி)
நூல்: *திர்மிதி 1897*

*வெட்கம் நல்லதைத் தவிர வேறெதையும் கொண்டு வராது* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: *இம்ரான் பின் ஹுஸைன்* (ரலி)
நூல்: *புகாரி 6117*

*பெண்களை விடவும் அதிகம் வெட்கப்பட்ட மாமனிதர்*
——————————————————
நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுள்ளவராக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: *அபூசயீத் அல்குத்ரீ* (ரலி)
நூல்: *புகாரி 3562*

*மறைவிடங்களை பேணுதல்*
—————————————
நபி (ஸல்) அவர்கள் மலம் கழிக்கும் இடத்திற்குச் சென்றால் தூரமாகச் சென்று விடுவார்கள்.

அறிவிப்பவர்: *அல்முகீரா பின் ஷுஅபா* (ரலி)
நூல்: *நஸயீ 17*

*உங்களில் யாரேனும் குளித்தால் அவர் மறைப்பை ஏற்படுத்திக் கொள்ளட்டும்* என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: *யஃலா பின் உமய்யா* (ரலி)
நூல்: *நஸயீ 403*

ஒருவரிடம் வெட்க உணர்வு இல்லையென்றால் அதுவே அவனை எதையும் செய்யத் தூண்டும் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
*மக்கள் இறைத்தூதர்களின் சொற்களிலிருந்து அடைந்து கொண்ட (அறிவுரைகளில்) ஒன்று தான் நீ வெட்கப்படவில்லை என்றால் விரும்பியதையெல்லாம்* செய்து கொள் என்பதாகும்.

அறிவிப்பவர்: *உக்பா பின் அம்ர்* (ரலி)
நூல்: *புகாரி 3483*

*ஏகத்துவம்.*


உங்கள் நன்பனான AS

ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழந்து பரிதவித்து நிற்போருக்குத் தன்னார்வலர்கள் உணவு அளிக்க தமிழக அரசு தடை –பட்டினிச் சாவுக்கு வழிவகுக்கும்

ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழந்து பரிதவித்து நிற்போருக்குத் தன்னார்வலர்கள் உணவு அளிக்க தமிழக அரசு தடை –பட்டினிச் சாவுக்கு வழிவகுக்கும்

தமிழக அரசிற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை



கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தால் பொது மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அன்றாட காய்ச்சிகள். பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை அரசு மற்றும் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.



தற்போது கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற காரணம் சொல்லி நிவாரண பொருட்களை விநியோகம் செய்யும் அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை இச்சேவையிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டள்ளது. நிவாரண பொருட்களை மாவட்டங்களில் மாவட்ட ஆட்சி தலைவர் அல்லது உள்ளாட்சி அலுவலர்களிடம் மட்டுமே வழங்க வேண்டும் என்றும் இதனை மீறுபவர்கள் மீது ஊரடங்கு சட்டத்தை மீறியதாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாவட்ட காவல்துறை அலுவலர்களுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே முடங்கிய மக்களில் அன்றாடம் உழைத்தால் தான் உணவு என்ற நிலையில் வாழும் உழைப்பாளிகள். முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளும் அடங்குவர்.

இவர்களுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் செய்யும் உதவியைத் தவிர வேறு உதவியில்லை.

முதியோர்களுக்கு மருந்து பொருட்களும், ஆதரவற்றவர்களுக்கு உணவுப் பொருட்களையும் அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் விநியோகிக்கவில்லை எனில் முதியோர்கள் மற்றும் ஆதரவற்றோரின் உயிர் வாழ்வு என்பது கேள்வி குறியாகிவிடும். அரசு இயந்திரத்தை மட்டும் வைத்து தமிழகத்தில் உள்ள அனைவரின் அத்தியாவசிய தேவையைப் பூர்த்தி செய்வது இயலாத காரியமாகும். இது பட்டினிச் சாவிற்கு கூட வழிவகுத்து விடும்.

அனைவரும் ஒன்று சேர்ந்து கொரோனாவிற்கு எதிரான இந்த யுத்தத்தில் பாடுபட வேண்டும் என்ற நிலையில் அரசியல் மாச்சரியங்களால் தமிழக அரசு இத்தகைய உத்தரவைப் பிறப்பித்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, தமிழக அரசு இந்த அசாதாரண சூழ்நிலையிலும் அரசியல் மாச்சரியங்களைத் தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் உதவிகளை உரியப் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பொதுமக்கள் பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் மக்களுக்கு உதவிட பிறப்பித்துள்ள தடை உத்தரவைத் தமிழக அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.



இப்படிக்கு

எம் எச். ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
தலைமையகம்
7 வடமரைக்காயர் தெரு
சென்னை 600 001
12-04-2020


உங்கள் நன்பனான AS

மருத்துவமனையில் மதத்தை காரணம் காட்டி சிகிச்சை அளிக்க மறுத்தால் புகார் அளிக்கலாம்....

மருத்துவமனையில் மதத்தை காரணம் காட்டி சிகிச்சை அளிக்க மறுத்தால் புகார் அளிக்கலாம்..............................,..,.மக்கள் விழிப்புணர்வு அடைய அதிகமாக ஷேர் செய்யுங்கள்

🦉சிகிச்சை cc மறுக்கப்பட்டால் புகாரளிக்க.

மருத்துவமனைகளில் குறிப்பிட்ட மதம் சார்ந்தவர் என்பதற்காக சிகிச்சை மறுக்கப்பட்டாலோ, மருத்துவரை அணுக விடாமல் தடுக்கப்பட்டாலோ உடனடியாக அதை வீடியோ பதிவு செய்யாமல்.... மருத்துவமனை குறித்த தகவல்களுடன் சுகாதாரத்துறை இணையதளத்தில் கூடுமானவரை நிறைய தடவை புகார் பதிவு செய்யுங்கள். இமெயிலிலும் புகார் நிறப்பலாம்.

அரசு மருத்துவமனைகளை பற்றி இதுபோன்ற புகார் அளிக்க 104 என்கிற எண்ணிற்கு தொடர்புகொண்டு புகாரளிக்கலாம். இது 24 மணிநேர சேவை ஆகும்.

//stopcoronatn.in/ இந்த இணையதளத்தில் --- பத்து தொலைப்பேசி தடங்கள் உண்டு. அவற்றில் உங்களது புகாரினை பதிவு செய்யலாம்.

±044-25671875 இது சுகாதாரத்துறை சென்னை தலைமையகத்தின் தொலைப்பேசி எண். இதிலும் புகார் செய்யலாம்.

Email: hfsec@tn.gov.in --- இது தமிழ்நாடு சுகாதாரத்துறை இமெயில்.

பாதிக்கப்பட்டவர் தான் புகார் செய்ய வேண்டும் என்றில்லை. அவருக்கு சார்பாக யாரும் இங்கு புகாரளிக்கலாம். ஒரே நேரத்தில் நிறைய புகார்கள் பதியப்படும்போது கவன ஈர்ப்பு பெறும்.


உங்கள் நன்பனான AS

கடந்த ரமலானின் விடுபட்ட நோன்புகள்...

கடந்த ரமலானின் விடுபட்ட நோன்புகள்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ரமலானை இன்னும் இரண்டு வாரத்தில் அடைய உள்ளோம். கடந்த ரமலானில் உங்களுக்கு விடுபட்ட நோன்புகள் இருந்தால் அதை நிறைவேற்றுங்கள்.

பரமக்குடி அன்னை ஆயிசா அறக்கட்டளை


உங்கள் நன்பனான AS

Friday, 10 April 2020

உயிர்த் தியாகிகள் ஐவர் ஆவர்:

📍அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் முட்கிளை ஒன்றைக் கண்டு அதை அப்புறப்படுத்தினார். (அவரது இந்த நற்செயலை) அல்லாஹ் பெருமனதுடன் ஏற்று, அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு வழங்கினான்.

*உயிர்த் தியாகிகள் ஐவர் ஆவர்:*

1. கொள்ளை நோயால் இறந்தவர்
2. வயிற்றுப்போக்கால் இறந்தவர்
3. வெள்ளத்தில் மூழ்கி இறந்தவர்
4.இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்
5. அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) உயிர்த் தியாகம் செய்தவர்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 3877.

அத்தியாயம் : 33. ஆட்சியதிகாரம்

உங்கள் நன்பனான AS