Thursday, 27 February 2020

அல்குர்ஆன் கூறும் நற்பன்புகள்

Sheik mufaris

அல்குர்ஆன் கூறும் நற்பன்புகள்

அஸ் ஸித்க் உன்மை

ஸித்தீக் - உன்மையாளர்

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உண்மையாளர்களுடன் ஆகுங்கள்!
[அல்குர்ஆன் 9:119]

2:177
لَيْسَ الْبِرَّ اَنْ تُوَلُّوْا وُجُوْهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَ الْمَغْرِبِ وَلٰـكِنَّ الْبِرَّ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَالْمَلٰٓٮِٕکَةِ وَالْكِتٰبِ وَالنَّبِيّٖنَ‌ۚ وَاٰتَى الْمَالَ عَلٰى حُبِّهٖ ذَوِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنَ وَابْنَ السَّبِيْلِۙ وَالسَّآٮِٕلِيْنَ وَفِى الرِّقَابِ‌ۚ وَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّکٰوةَ ‌ ۚ وَالْمُوْفُوْنَ بِعَهْدِهِمْ اِذَا عٰهَدُوْا ۚ وَالصّٰبِرِيْنَ فِى الْبَاْسَآءِ وَالضَّرَّآءِ وَحِيْنَ الْبَاْسِؕ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ صَدَقُوْا ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ‏ 
புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்).
(அல்குர்ஆன்: 2:177)

உன்மை என்பது நன்மையின் பக்கம் கொன்டுசெல்லும்
புகாரி

முனாபிக் உடைய தன்மை
பேசினால் பொய் பேசுவான்

  1. நீதி மற்றும் நேர்மை

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّا امِيْنَ لِلّٰهِ شُهَدَآءَ بِالْقِسْطِ‌ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ عَلٰٓى اَ لَّا تَعْدِلُوْا‌ ؕ اِعْدِلُوْا هُوَ اَقْرَبُ لِلتَّقْوٰى‌ وَاتَّقُوا اللّٰهَ‌ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ‏ 
முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன்: 5:8)


اِنَّ اللّٰهَ يَاْمُرُكُمْ اَنْ تُؤَدُّوا الْاَمٰنٰتِ اِلٰٓى اَهْلِهَا ۙ وَاِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ اَنْ تَحْكُمُوْا بِالْعَدْلِ‌ ؕ اِنَّ اللّٰهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهٖ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ سَمِيْعًۢا بَصِيْرًا‏ 
நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன்: 4:58)


وَلَا تَقْرَبُوْا مَالَ الْيَتِيْمِ اِلَّا بِالَّتِىْ هِىَ اَحْسَنُ حَتّٰى يَبْلُغَ اَشُدَّهٗ‌ ۚ وَاَوْفُوْا الْكَيْلَ وَالْمِيْزَانَ بِالْقِسْطِ‌ ۚ لَا نُـكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَا‌ ۚ وَاِذَا قُلْتُمْ فَاعْدِلُوْا وَلَوْ كَانَ ذَا قُرْبٰى‌‌ ۚ وَبِعَهْدِ اللّٰهِ اَوْفُوْا‌ ؕ ذٰ لِكُمْ وَصّٰٮكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۙ‏ 
அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை; நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்; அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான்.
(அல்குர்ஆன்: 6:152)


60:8

لَا يَنْهٰٮكُمُ اللّٰهُ عَنِ الَّذِيْنَ لَمْ يُقَاتِلُوْكُمْ فِى الدِّيْنِ وَلَمْ يُخْرِجُوْكُمْ مِّنْ دِيَارِكُمْ اَنْ تَبَرُّوْهُمْ وَ تُقْسِطُوْۤا اِلَيْهِمْ‌ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ‏ 
மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.
(அல்குர்ஆன்: 60:8)

16:90

اِنَّ اللّٰهَ يَاْمُرُ بِالْعَدْلِ وَالْاِحْسَانِ وَاِيْتَآىِٕ ذِى الْقُرْبٰى وَيَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ وَالْبَغْىِ‌ۚ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏ 
நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் - நீங்கள் நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான்.
(அல்குர்ஆன்: 16:90)

நபி(ஸல்) நீதி நேர்மையுடன் செயல்பட்டவர்கள் மற்றும்
தீர்ப்புகள் , குடும்பங்கள் , பொறுப்புகள் சரிவர செயல்பட்டால்
—- மறுமையில் ஓளியாலான மேடை கிடைக்கும்

போர் செய்வது தடை செய்யப்பட்ட மாதங்கள் குறித்து இவ்வசனங்கள் (2:194, 2:217, 5:2, 5:97, 9:5, 9:36) பேசுகின்றன.
9:36 வசனத்தில்
அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு என்று கூறப்படுகிறது. இந்தப் பன்னிரண்டு மாதங்களில் நான்கு மாதங்கள் புனிதமானவை என்றும் கூறப்படுகிறது.

ஆனால் புனிதமான அந்த நான்கு மாதங்கள் எவை என்று திருக்குர்ஆனில் கூறப்படவில்லை. ஆனாலும் இந்த நான்கு மாதங்கள் யாவை என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வானங்களும், பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருபவை. அவை துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜமாதுல் ஆகிர், ஷஅபான் ஆகிய மாதங்களுக்கு இடையிலுள்ள ரஜப் மாதமாகும்.
நூல் : புகாரீ : 3197, 4406, 4662, 5550, 7447  

  1. நம்பிக்கை அல்அமானா

4:58
اِنَّ اللّٰهَ يَاْمُرُكُمْ اَنْ تُؤَدُّوا الْاَمٰنٰتِ اِلٰٓى اَهْلِهَا ۙ وَاِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ اَنْ تَحْكُمُوْا بِالْعَدْلِ‌ ؕ اِنَّ اللّٰهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهٖ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ سَمِيْعًۢا بَصِيْرًا‏ 
நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன்: 4:58)


قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ‏ 
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.
(அல்குர்ஆன்: 23:1)

الَّذِيْنَ هُمْ فِىْ صَلَاتِهِمْ خَاشِعُوْنَ ۙ‏ 
அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.
(அல்குர்ஆன்: 23:2)

وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَۙ‏ 
இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.
(அல்குர்ஆன்: 23:3)

وَالَّذِيْنَ هُمْ لِلزَّكٰوةِ فَاعِلُوْنَۙ‏ 
ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.
(அல்குர்ஆன்: 23:4)

وَالَّذِيْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَۙ‏ 
மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.
(அல்குர்ஆன்: 23:5)

اِلَّا عَلٰٓى اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ فَاِنَّهُمْ غَيْرُ مَلُوْمِيْنَ‌ۚ‏ 
ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.
(அல்குர்ஆன்: 23:6)

فَمَنِ ابْتَغٰى وَرَآءَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْعٰدُوْنَ‌ ۚ‏ 
ஆனால், இதற்கு அப்பால் (வேறு வழிகளை) எவர் நாடுகிறாரோ அ(த்தகைய)வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்.
(அல்குர்ஆன்: 23:7)

وَالَّذِيْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُوْنَ ۙ‏ 
இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்.
(அல்குர்ஆன்: 23:8)

وَالَّذِيْنَ هُمْ عَلٰى صَلَوٰتِهِمْ يُحَافِظُوْنَ‌ۘ‏ 
மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.
(அல்குர்ஆன்: 23:9)

اُولٰٓٮِٕكَ هُمُ الْوَارِثُوْنَ ۙ‏ 
இத்தகையோர் தாம் (சுவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள்.
(அல்குர்ஆன்: 23:10)

الَّذِيْنَ يَرِثُوْنَ الْفِرْدَوْسَؕ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏ 
இவர்கள் ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரங் கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
(அல்குர்ஆன்: 23:11)

6 விசயம் செயதால்

பேசினால் உன்மை பேசுங்கள்
வாக்குறுதி கொடுத்தால்
நம்பிக்கை மாறு செய்யாதீர்கள்
மர்மசானம்
பார்வை தாழ்த்தி
கரங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்

















உங்கள் நன்பனான AS

Monday, 24 February 2020

Sheik mufaris sura yasin

Sheik mufaris sura yasin


Ilm - Al Quran and Sunnah Reg ahmed bin hambal

Al quran -25 kalaikal

Sura Yasin

  1. Entha Hadees sahih illai

சூரா யாஸீன் விளக்கம்


يٰسٓ ۚ‏ 
யாஸீன்.
(அல்குர்ஆன்: 36:1)

وَالْقُرْاٰنِ الْحَكِيْمِ ۙ‏ 
ஞானம் நிரம்பிய இக் குர்ஆன் மீது சத்தியமாக!
(அல்குர்ஆன்: 36:2)

اِنَّكَ لَمِنَ الْمُرْسَلِيْنَۙ‏ 
நிச்சயமாக, நீர் (நம்) தூதர்களில் உள்ளவராவீர்.
(அல்குர்ஆன்: 36:3)

  1. அல்லாஹ் காபிர்களுக்கு சொல்லுகிறான்


عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍؕ‏ 
நேரான பாதை மீது (இருக்கின்றீர்).
(அல்குர்ஆன்: 36:4)
  1. அல்ஹம்து சூரா
  2. நபிமார்கள் வழி

تَنْزِيْلَ الْعَزِيْزِ الرَّحِيْمِ ۙ‏ 
(இது) யாவரையும் மிகைத்தோன், கிருபையுடையவனால் இறக்கி அருளப்பட்டதாகும்.
(அல்குர்ஆன்: 36:5)

لِتُنْذِرَ قَوْمًا مَّاۤ اُنْذِرَ اٰبَآؤُهُمْ فَهُمْ غٰفِلُوْنَ‏ 
எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இ(த்தகைய)வர்களை நீர் எச்சரிப்பதற்காக.
(அல்குர்ஆன்: 36:6)

  1. மூதாதையர்களுக்கு அலட்சியம்
  2. அல்லாஹ் வின் தன்டனை அறியவில்லை

لَقَدْ حَقَّ الْقَوْلُ عَلٰٓى اَكْثَرِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُوْنَ‏ 
இவர்களில் பெரும்பாலோர் மீது (இவர்களுக்கு வரவிருக்கும் வேதனை பற்றிய) வாக்கு நிச்சயமாக உண்மையாகிவிட்டது; ஆகவே இவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.
(அல்குர்ஆன்: 36:7)

  1. மக்கத்து காபிர்களுக்கு தெரியும்
  2. உள்ளத்தில் கெட்ட என்னம்
  3. அவர்கள் மீது அல்லாஹ்வின் வேதனை


اِنَّا جَعَلْنَا فِىْۤ اَعْنَاقِهِمْ اَغْلٰلًا فَهِىَ اِلَى الْاَ ذْقَانِ فَهُمْ مُّقْمَحُوْنَ‏ 
நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க் கட்டைகள் வரையில், அரிகண்டங்களைப் போட்டிருக்கின்றோம், ஆகவே அவர்கள் (குனிய முடியாதவாறு) தலை நிமிர்ந்து விட்டனர்.
(அல்குர்ஆன்: 36:8)

  1. கழுத்தில் விழங்கு அவர்கள் தாடைவரை
  2. தவ்பா

وَجَعَلْنَا مِنْۢ بَيْنِ اَيْدِيْهِمْ سَدًّا وَّمِنْ خَلْفِهِمْ سَدًّا فَاَغْشَيْنٰهُمْ فَهُمْ لَا يُبْصِرُوْنَ‏ 
இன்னும் நாம் அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னே ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்; (இவ்வாறாக) அவர்களை மூடிவிட்டோம் - ஆகையால் அவர்கள் பார்க்க முடியாது.
(அல்குர்ஆன்: 36:9)

  1. முன்னால் ஓரு திறை பின்னால் ஒரு திறை
  2. பத்ரு என்னிக்கை

وَسَوَآءٌ عَلَيْهِمْ ءَاَنْذَرْتَهُمْ اَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا يُؤْمِنُوْنَ‏ 
இன்னும், அவர்களை நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் அல்லது அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் அவர்களுக்கு சமமே தான்; அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
(அல்குர்ஆன்: 36:10)

اِنَّمَا تُنْذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ وَخَشِىَ الرَّحْمٰنَ بِالْغَيْبِۚ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَّاَجْرٍ كَرِيْمٍ‏ 
நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் உபதேசத்தைப் பின்பற்றி யார் மறைவாகவும் அர்ரஹ்மானுக்கு அஞ்சி நடக்கிறார்களோ அவர்களைத் தான்; அ(த்தகைய)வருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டென்று நன்மாராயம் கூறுவீராக.
(அல்குர்ஆன்: 36:11)

اِنَّا نَحْنُ نُحْىِ الْمَوْتٰى وَنَكْتُبُ مَا قَدَّمُوْا وَاٰثَارَهُمْؕؔ وَكُلَّ شَىْءٍ اَحْصَيْنٰهُ فِىْۤ اِمَامٍ مُّبِيْنٍ‏ 
நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.  
(அல்குர்ஆன்: 36:12)


உங்கள் நன்பனான AS



உங்கள் நன்பனான AS

யாஸீன் 1 - 12 வசனம்

يٰسٓ ۚ‏ 
யாஸீன்.
(அல்குர்ஆன்: 36:1)

وَالْقُرْاٰنِ الْحَكِيْمِ ۙ‏ 
ஞானம் நிரம்பிய இக் குர்ஆன் மீது சத்தியமாக!
(அல்குர்ஆன்: 36:2)

اِنَّكَ لَمِنَ الْمُرْسَلِيْنَۙ‏ 
நிச்சயமாக, நீர் (நம்) தூதர்களில் உள்ளவராவீர்.
(அல்குர்ஆன்: 36:3)

عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍؕ‏ 
நேரான பாதை மீது (இருக்கின்றீர்).
(அல்குர்ஆன்: 36:4)

تَنْزِيْلَ الْعَزِيْزِ الرَّحِيْمِ ۙ‏ 
(இது) யாவரையும் மிகைத்தோன், கிருபையுடையவனால் இறக்கி அருளப்பட்டதாகும்.
(அல்குர்ஆன்: 36:5)

لِتُنْذِرَ قَوْمًا مَّاۤ اُنْذِرَ اٰبَآؤُهُمْ فَهُمْ غٰفِلُوْنَ‏ 
எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இ(த்தகைய)வர்களை நீர் எச்சரிப்பதற்காக.
(அல்குர்ஆன்: 36:6)

لَقَدْ حَقَّ الْقَوْلُ عَلٰٓى اَكْثَرِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُوْنَ‏ 
இவர்களில் பெரும்பாலோர் மீது (இவர்களுக்கு வரவிருக்கும் வேதனை பற்றிய) வாக்கு நிச்சயமாக உண்மையாகிவிட்டது; ஆகவே இவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்.
(அல்குர்ஆன்: 36:7)

اِنَّا جَعَلْنَا فِىْۤ اَعْنَاقِهِمْ اَغْلٰلًا فَهِىَ اِلَى الْاَ ذْقَانِ فَهُمْ مُّقْمَحُوْنَ‏ 
நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க் கட்டைகள் வரையில், அரிகண்டங்களைப் போட்டிருக்கின்றோம், ஆகவே அவர்கள் (குனிய முடியாதவாறு) தலை நிமிர்ந்து விட்டனர்.
(அல்குர்ஆன்: 36:8)

وَجَعَلْنَا مِنْۢ بَيْنِ اَيْدِيْهِمْ سَدًّا وَّمِنْ خَلْفِهِمْ سَدًّا فَاَغْشَيْنٰهُمْ فَهُمْ لَا يُبْصِرُوْنَ‏ 
இன்னும் நாம் அவர்களுக்கு முன்னே ஒரு தடுப்பையும் அவர்களுக்குப் பின்னே ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம்; (இவ்வாறாக) அவர்களை மூடிவிட்டோம் - ஆகையால் அவர்கள் பார்க்க முடியாது.
(அல்குர்ஆன்: 36:9)

وَسَوَآءٌ عَلَيْهِمْ ءَاَنْذَرْتَهُمْ اَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا يُؤْمِنُوْنَ‏ 
இன்னும், அவர்களை நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் அல்லது அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் அவர்களுக்கு சமமே தான்; அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
(அல்குர்ஆன்: 36:10)

اِنَّمَا تُنْذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ وَخَشِىَ الرَّحْمٰنَ بِالْغَيْبِۚ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَّاَجْرٍ كَرِيْمٍ‏ 
நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் உபதேசத்தைப் பின்பற்றி யார் மறைவாகவும் அர்ரஹ்மானுக்கு அஞ்சி நடக்கிறார்களோ அவர்களைத் தான்; அ(த்தகைய)வருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டென்று நன்மாராயம் கூறுவீராக.
(அல்குர்ஆன்: 36:11)

اِنَّا نَحْنُ نُحْىِ الْمَوْتٰى وَنَكْتُبُ مَا قَدَّمُوْا وَاٰثَارَهُمْؕؔ وَكُلَّ شَىْءٍ اَحْصَيْنٰهُ فِىْۤ اِمَامٍ مُّبِيْنٍ‏ 
நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.
(அல்குர்ஆன்: 36:12)


உங்கள் நன்பனான AS

சூரா யாஸீன் விளக்கம்

சூரா யாஸீன் விளக்கம் 

சூரா யாஸீன் 83 வசனங்களை கொண்டது. இதில் மூன்று வகையான செய்திகள் கூறப்படுகின்றது.ஒன்று மரணத்திற்கு பின்பு உயிர்பித்தலை ஈமான் கொள்ளுதல் இரண்டாவது ஒரு கிராமவாசிகளின் வரலாற்று செய்திகள் மூன்றாவது இறைவனின் ஏகத்துவத்தை பிரதிபலிக்கும் செய்திகள்.

இந்த அத்தியாயத்தின் வசனம் ஆரம்பிக்கப்படும் போதே இறைவன் குர்ஆன் மீது சத்தியமிட்டு நபியே! நீர் இறைத்தூதர்களில் ஒருவர்தான் என்று கூறுகின்றான். ஏன் இந்த செய்தியை ஆரம்பமாக கூறுகின்றான் என்றால் முஹம்மத் (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பட்டபோது குறிகாரர், சூனியம் செய்பவர் ,பைத்தியக்காரர், என்றும் உன்னை தவிர வேறு நபரை நபியாக அனுப்புவதற்கு வேறு ஆள் கிடைக்கவில்லையா? இப்படி பல்வேறு விமர்சனங்களை மக்கள் முன் வைக்கின்றபோது இதற்கு பதில் கொடுக்கும் விதமாக இறைவன் இப்படி வசனத்தை ஆரம்பிக்கின்றான்.

ஞானம் நிரம்பிய இக் குர்ஆன் மீது சத்தியமாக! நிச்சயமாக நீர் (நம்) தூதர்களில் உள்ளவராவீர்.நேரான பாதை மீது (இருக்கின்றீர்). அல்குர்ஆன் 36 : 2-4

அடுத்த வசனமாக நபியின் முன் வைக்கப்பட்ட விமர்சனம் நீர் அழைக்கும் கொள்கை தவறானது நாங்களும் எங்கள் மூதாதையர்களும் இருக்கின்ற மார்க்கமே சிறந்தது என்று கூறியதற்கு இறைவனின் பதிலடியாகும். உங்களில் மரணித்தவர்களையும் அவர்கள் முற்படுத்தியதையும், விட்டு சென்றதையும் விளக்கமான ஏட்டில் நாம் பதிந்தே வைத்துள்ளோம் என்று இறைவன் கூறுகின்றான். இவ்வுலகில் மனிதன் செய்யும் சிறிய மற்றும் பெரிய விசயங்களும் அந்த ஏட்டில் பதிவு செய்யப்படுகின்றன. பனிரெண்டாம் வசனம் இறங்குவதற்கு இந்த சம்பவமும் ஓர் காரணம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைச் சுற்றி காலி மனைகள் இருந்தன. பனூசலிமா குலத்தார் பள்ளிவாசலுக்கு அருகிலேயே குடியேற விரும்பினர். இந்த விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள் நீங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு அருகில் குடியேறப்போவதாக நான் அறிந்தேனே (அதுஉண்மையா) என்று கேட்டார்கள். அதற்கு பனூசலிமா குலத்தார்  ஆம் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அவ்வாறு விரும்பினோம் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூசலிமா குலத்தாரே! உங்கள் குடியிருப்புகள் அங்கேயே இருக்கட்டும்! உங்கள் காலடிகள் (அளவுக்கு நன்மைகள்) பதிவு செய்யப்படும்;
உங்கள் குடியிருப்புகள் அங்கேயே இருக்கட்டும்! உங்கள் காலடிகள் (அளவுக்கு நன்மைகள்) பதிவு செய்யப்படும் என்று (இரு முறை) கூறினார்கள். நூல் : முஸ்லிம்

பதி மூன்றாம் வசனத்தில் ஓர் கிராமத்ததையும் இந்த கிராமத்திற்கு அனுப்பட்ட மூன்று இறைதூதர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை மக்களுக்கு போதிக்கின்ற போது அதை நிராகரித்து விடுகின்றர். அந்த ஓரை சார்ந்த ஓர் ஏழை மனிதர் இந்த இறைத்தூதார்கள் கொள்கையை ஏற்று கொள்ளுங்கள் என்று கூறியும் அந்த மனிதரை அடித்து கொலை செய்து விட்டனர். ஆனால் அல்லாஹ் அவருக்கு உயரிய சுவனத்தை கொடுத்த அதில் நுழைந்து விடு என்று கூறுகின்றான். இறந்த பிறகும் என் சமூகம் என் இறைவன் வழங்கிய சிறப்புகளை அறிந்துக் கொள்ள வேண்டுமே என்று தன் கவலையை வெளிப்படுத்துகின்றார். எனவே அழைப்பு செய்பவர்களுக்கு இதில் பல்வேறு படிப்பினைகள் உள்ளது. ஐம்பத்தி ஒன்றாம் வசனத்தில் சூர் ஊதபட்ட உடன் அனைவரும் தங்கள் சமாதிகளிலிருந்து எழுந்திருத்து எங்களை எழுப்பியவர்கள் யார்? என்று கேட்பார்கள் . ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் அல்லாஹ் நாடியவர்களைத் தவிர - மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள். அல்குர்ஆன் 39 : 68

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்(உமியோ தவிடோ கலக்காத) சுத்தமான மாவினாலான ரொட்டியைப் போன்று தூய வெண்மையான (சம) தளத்தின் மீது மறுமை நாளில் மனிதர்கள் ஒன்று திரட்டப்படுவார்கள்அந்த பூமியில் (மலை, மடுவு, காடு, வீடு என) எந்த அடையாளமும் யாருக்கும் இருக்காது என்று (கூடுதலாக) அறிவித்தார்கள். நூல் : புகாரி

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒருமுறை மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். (அதில்)  மக்களே! நீங்கள் (மறுமையில்) செருப்பணியாதவர்களாகவும், நிர்வாண மானவர்களாகவும், விருத்தசேதனம் செய்யப்படாதவர்காளகவும் அல்லாஹ்விடம் கொண்டுவரப்படுவீர்கள் என்று கூறிவிட்டுப் பிறகு எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவதைப் போல் நாம் வானத்தைச் சுருட்டும் அந்நாளில் நாம் முதலில் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீண்டும் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) படைப்போம் எனும் (திருக்குர்ஆன் 21:104 வது இறைவசனத்தை இறுதிவரை ஓதினார்கள். பிறகு அறிந்துகொள்ளுங்கள்; மறுமை நாளில் (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படும் முதல் நபர் (இறைத்தூதர்) இப்ராஹீம் அவர்கள் தாம். நூல் : புகாரி

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்(மறுமை நாள் ஏற்படுவதற்கு சற்று முன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி) மக்கள் மூன்று பிரிவினராக ஒன்று திரட்டப்படுவார்கள். (அதில் முதல் பிரிவினர்) அச்சத்துடனும் ஆர்வத்துடனும் செல்வார்கள். (இரண்டாவது பிரிவினர்) (வாகனப் பற்றாக்குறையினால் தாமதித்துப் பின்னர்) ஒரே ஒட்டகத்தின் மீது இரண்டு பேராக ஒரே ஒட்டகத்தின் மீது மூன்று பேராக ஒரே ஒட்டகத்தின் மீது நான்கு பேராக ஒரே ஒட்டகத்தின் மீது பத்துப் போராகச் செல்வார்கள். அவர்களில் எஞ்சியவர்(களே மூன்றாவது பிரிவினராவர். அவர்)களை (பூமியில் ஏற்படும் ஒரு பெரும்) தீ (விபத்து) ஒன்றுதிரட்டும். அவர்கள் மதிய ஓய்வெடுக்கும்போதும் இரவில் ஓய்வெடுக்கும் போதும் காலை நேரத்தை அடையும்போதும் மாலை நேரத்தை அடையும் போதும் (இப்படி எல்லா நேரங்களிலும்) அந்தத் தீ அவர்களுடனேயே இருக்கும். நூல் : புகாரி

இந்த சூராவை இறந்தவர்களுக்கு தான் ஓத வேண்டும் என்று பலர் நினைத்து ஓதுவதை பார்க்கின்றோம் தவறுதலான புரிதலே இதற்கு காரணமாகும்.  (இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனை உண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப் படுத்துகிறது. அல்குர்ஆன் 36 : 70

ஆதாரமற்ற சூரத்துல் யாஸீன் அத்தியாயத்தின் சிறப்புகள்

யாஸீன் அத்தியாயத்திற்கு ஏராளமான சிறப்புகள் உள்ளதாக இடம் பெற்றுள்ளது. அவை அனைத்தும் ஆதாரமற்ற செய்திகளாகவே இடம் பெற்றுள்ளது. இன்று யாஸீன் அத்தியாயம் தொடர்பாக வந்துள்ள இட்டுக்கட்டப்பட்ட பலவீனமான செய்திகளை அடிப்படையாக வைத்துதான் பல அமல்களை செய்துவருகின்றனர். எனவே யாஸீன் தொடர்பாக வந்துள்ள செய்திகளின் தரத்தை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

திருக்குர் ஆனின் இதயம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு இதயம் இருக்கிறது குர்ஆனுடைய இதயம் (சூரா) யாஸீனாகும். யார் யாஸீன் (சூராவை) ஓதுகிறாரோ அதை ஓதியததற்காக அவர் பத்து தடவை குர்ஆனை ஓதிய நன்மையை பதிவு செய்கிறான். நூல்கள் : திர்மிதீ (2812), தாரமி (3282)

இதன் ஹதிஸின் அறிவிப்பாளர் தொடரில் ஹாரூன் அபீ முஹம்மத் என்பவர் இடம் பெறுகிறார், இவர் யாரென்று அறியப்படாதவர். இக்கருத்தை இதை பதிவுசெய்த இமாம் திர்மிதீ அவர்களே அந்த செய்தியின் இறுதியில் இக்கருத்தை குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் தாரமியில் இடம் பெறும் ஹதிஸில், யார் என அறியப்படாத ஹாருன் அபீ முஹம்மத் என்பவரே இடம் பெறுவதால் இதுவும் பலவீனமாதாகும்.

திருக்குர்ஆனின் மிக உயர்ந்த அத்தியாயம்

சூரா பகரா குர்ஆனுடைய திமிழாகும். மேலும் அதில் உயர்வானதுமாகும். சூரத்துல் பகராவின் ஒவ்வொரு ஆயத்துடன் எண்பது மலக்குகள் இறங்கிறார்கள். இன்னும் "அல்லாஹு லாயிலாஹு இல்லாஹுவ அல் ஹய்யுல் கையூம்" என்ற வசனம், அர்ஷின் கீழ் இருந்து எடுக்கப்பட்டு பகரா அத்தியாயத்துடன் இனைக்கப்பட்டுள்ளது. யாஸீன் குர்ஆனுடைய இதயமாகும், யார் அல்லாஹ்வுடைய பொருத்தத்தையும் மறுமையும் நாடி அதை ஓதுகிறரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும் (எனவே) அதை உங்களில் மரணநெருக்கத்தில் உள்ளவர்களுக்கு ஓதுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்கள் : அஹ்மத் (19415), முஸ்னத் ரூயானி பாகம் : 2 பக்கம் : 323, அல்முஃஜமுல் அல்கபீர்லிதப்ரானீ பாகம்:20,

இதன் அறிவிப்பாளர் தொடரில் ஒரு மனிதர் அறிவிக்கிறார் என்றும் அவர் தம் தந்தையிடமிருந்து அறிவிக்கிறார் என்றும் இடம் பெற்றுள்ளது. இதில் ஒரு மனிதர் யார்? அவரின் தந்தை யார்? அவரின் நம்பகத்தன்மை எத்தகையது? என்ற கேள்விகள் எழும். இது போன்ற முகவரி இல்லாதவர்களின் செய்திகளை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்பதில்லை. இதே செய்தி அஹ்தில் (19427), அபூதாவூத் (2714), இப்னு மாஜா (1438), பைஹகி பாகம் : 3 பக்கம் 383,இப்னு ஹிப்பான் பாகம் : 7, பக்கம் : 269 லும் இடம் பெற்றுள்ளது. இவற்றில் ஒருமனிதர் என்ற இடத்தில் அபூஉஸ்மான் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரும் யாரென அறியப்படாதவரே! இவரின் நம்பகத்தன்மையும் உறுதிசெய்யபடாததால் இச்செய்தியும் பலவீனமடைகிறது. இப்படியே யாஸீன் சூரா சம்பந்தபடுத்தி வரும் பல செய்திகள் ஆதாரமற்றதாகவே உள்ளது.

எனவே இந்த அத்தியாயத்தை படித்து அதில் உள்ள படிப்பினைகள உணர்ந்து செயல்படுவோம்..



உங்கள் நன்பனான AS

Sunday, 23 February 2020

RSS IN முஸ்லீம் ராஷ்ட்ரிய மன்ச் அமைப்பின் மானில தலைவா்(இப்ப தெறியுதா இவா் யாா் என்று)

RSS IN முஸ்லீம் ராஷ்ட்ரிய மன்ச் அமைப்பின் மானில தலைவா்(இப்ப தெறியுதா இவா் யாா் என்று)

Saturday, 22 February 2020

அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய பயணமும், நாசமாகப் போகும் 10 கோடி இந்திய விவசாயிகளின் வாழ்க்கையும்:

அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய பயணமும், நாசமாகப் போகும் 10 கோடி இந்திய விவசாயிகளின் வாழ்க்கையும்:

2019 இந்திய தேர்தலை மனதில் வைத்து அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்த மோடிக்கு எப்படி மிகப்பெரிய வரவேற்பை டிரம்ப் கொடுத்தாரோ, அதுபோல வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெறுகிற தேர்தலை ஒட்டி இந்தியாவிற்கு பிப்ரவரி 24-25 ஆகிய தேதிகளில் வருகை தரவிருக்கிற டிரம்புக்கு சுமார் 70 லட்சம் பேர் கலந்து கொள்ளும் அளவிற்கான பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாட்டை இந்திய அரசு செய்ய இருக்கிறது.

அவரின் வருகையின் போது உலகத்திலேயே பெரிய விளையாட்டு மைதானத்தை திறந்துவைத்து மாநாட்டில் பேச போகிறார் என்கிற செய்தி மட்டுமே இந்தியர்களின் காதில் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் முக்கியமாக சொல்லப்பட வேண்டிய விசயமான இந்தியாவின் விவசாய மற்றும் பால் உற்பத்தி துறையில் அமெரிக்காவின் பாராசூர நிறுவனங்களை எந்தவித வரியும் இல்லாமல் அனுமதிக்கும் ஒப்பந்தம் இரு நாடுகளுக்குமிடையே கையெழுத்தாக இருக்கிறது என்பதை சொல்ல மறுக்கிறார்கள்.

கடந்த வருடம் 2019 அக்டோபர் மாதம் பிராந்திய ஆசிய நாடுகளான இந்தியா, சீனா, இலங்கை, ஜப்பான், நீயூசிலாந்து மலேசியா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து விரிவான பிராந்திய பொருளாதார உடன்பாட்டு ஒப்பந்தம் (Regional Comprehensive Economic Partnership -RCEP) என்ற ஒன்றை உருவாக்கினார்கள். இந்த ஒப்பந்தம் இந்திய சந்தையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு திறந்துவிடும் ஏற்பாடு என்று இந்திய விவாயிகள் தொழில் வல்லுநர்கள், தமிழகத்தில் மே 17 இயக்கம் நவம்பர் 02ஆம் தேதி இந்த ஒப்பந்ததில் கையெழுத்திடக்கூடாதென்று பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது.

ஆனால் இதனையெல்லாம் பொருட்படுத்தாத மோடி அரசு, மேற்ச்சொன்ன கூட்டமைப்போடு பல கட்ட பேச்சுவார்த்தையில் அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் ஈடுபட்டது. நவம்பர் 04'2019 அன்று நடந்த கடைசி கூட்டத்தில் நரேந்திர மோடி அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக தீடிரென்று அறிவித்தார். அதற்கு பிஜேபி சொன்ன காரணம் இந்த ஒப்பந்ததில் கையெழுத்திட்டால் இந்தியாவின் உள்நாட்டு தொழில்கள் குறிப்பாக பால் வியாபாரம் மற்றும் துணி உற்பத்தி மிகப்பெரிய பாதிப்படையும் என்றும் மேலும் இதனை நம்பியிருக்கிற தொழிலாளார்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படுமென்றும் சொல்லித்தான் அந்த ஒப்பந்தத்தில் இறுதி நிமிடத்தில் கையெழுத்திடாமல் வெளியேறியது. இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான பேர் சொல்லும்போது கேட்காத மோடி தீடிரென்று விலகியது ஏன் என்பது அப்போது மர்மமாக இருந்தது. அதற்கான விடை தற்போது கிடைத்திருக்கிறது.

அதாவது இந்தியாவின் உள்நாட்டு சந்தையை அமெரிக்காவுக்கு தாரை வார்க்கவே மோடி கடைசி நேரத்தில் அப்போது அந்த கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிருக்கிறார் என்பது தற்போது தெரியவந்திருக்கிறது. இந்தியா உலக அளவில் பால் உற்பத்தியிலும் சரி, பால் பொருட்கள் உற்பத்தியிலும் சரி 19% பூர்த்தி செய்கிறது. இந்த தொழிலில் ஆண்டுக்கு 42ஆயிரம் கோடி ரூபாய் புழங்குகிறது.சுமார் 10கோடி பேர் பலனடைகிறார்கள். இப்படிப்பட்ட மிகப்பெரிய சந்தையை அமெரிக்காவுக்கு எழுதிக்கொடுக்கும் ஒப்பந்ததில் கையெழுத்திடத்தான் டிரம்ப் இந்தியா வருகிறார்.

இது இல்லாமல் இறைச்சி மற்றும் பழங்கள் (ப்ளுபெர்ரி, செர்ரி) சோயபீன் கோதுமை போன்ற அமெரிக்க விவசாய பொருட்களுக்கான வரியை 100%திலிருந்து 10% குறைக்கும் ஒப்பந்தத்திலும் மோடியும் டிரம்பும் கையெழுத்திட இருக்கிறார்கள். அமெரிக்காவின் நலனுக்காக இந்தியாவின் 10கோடிக்கும் அதிகமான பேரை கொல்ல துணிந்திருக்கிறது மோடி அரசு.

எப்போது பார்த்தாலும் தேசபக்தி, தேசம் என்று பிதற்றும் பிஜேபி கும்பலின் தேசபக்தி என்பது இதுதான் என்பதை சாமானியர்கள் இப்போதாவது புரிந்துகொண்டு மோடி டிரம்ப் சந்திப்பை எதிர்க்க வேண்டும். இல்லையேல் மொத்த இந்தியாவையும் அமெரிக்காவுக்கு விற்றுவிட்டு இந்த கூட்டம் குளிர்காயும் இது என்ன மோடி கும்பலின் அப்பன் வீட்டு சொத்தா கவலைப்பட...

குறிப்புகள்:

1.https://www.indiatoday.in/india/story/modi-govt-dairy-chicken-us-elusive-trade-deal-donald-trump-1646320-2020-02-14

2.https://www.livemint.com/politics/policy/india-offers-us-dairy-chicken-access-in-bid-for-a-trade-deal-with-trump-11581650603957.html

3.https://www.dtnext.in/News/Business/2020/02/14234941/1215248/Modi-offers-to-open-up-dairy-poultry-markets-for-Trump.vpf

மே 17 இயக்கம்
9884072010


உங்கள் நன்பனான AS

Dr Monmohan Singh

https://tamil.oneindia.com/news/delhi/bharat-mata-ki-jai-slogan-being-misused-to-construct-militan-manmohan-singh-377819.html


உங்கள் நன்பனான AS

*India Collapsing

*India Collapsing*

*While everyone is busy debating on*
*India-Pakistan*
*370-Kashmir*
*Hindu-Muslim*
*CAA, NRC, NPR, etc*
*shaheen bagh*

*We miss to notice what's happening to INDIA*

*India - Recent data & Situation*

*External Debt of India* *500 + Billion Dollars.*

*Vodafone* is in loss of ₹50,000 Crore.

*Airtel* is in loss of ₹23,000 Crore.

*BSNL* is in loss of ₹14,000 Crore.

*MTNL* is in loss of ₹755 Crore.

*BPCL* is in loss of ₹750 Crore.

*SAIL* is in loss of ₹286 Crore.

*AIR India* is in loss of ₹4600 Crore.

*Spice Jet* is in loss of ₹463 Crore.

*Indigo* is in loss of ₹1062 Crore.

*BHEL* is in loss of ₹219 Crore.

*India Post* is in loss of ₹15,000 Crore.

*GMR Infra* is in loss of ₹561 Crore.

*YES Bank* is in loss of ₹600 Crore.

*Union Bank* is in loss of ₹1190 Crore.

*PNB Bank* is in loss of ₹4750 Crore।

*Axis Bank* is in loss of ₹112 Crore.

*J P Group finished*

*Videocon bankrupt*

*Aircel & Docomo is dead*

*Tata Docomo perished*

*Jet Airways closed*

*Airports Sold*
5 airports sold to Adani.

*Railways are on sale*

*Heritage Renting*
Heritages including Red Fort

*Nationalized Banks Merger*
Many nationalized banks have merged, many branches have literally closed,

*ATM Rooms*
Huge numbers of ATM Rooms are set down,

*All Banks*
incurring huge losses.

*36 largest debtors*
missing from country.

*Few Corporates*
Rs 2.4 lakh crores loan waived off

*BSNL*
54,000 may cut more jobs.

*Auto Industry*
1 million to be laid off

*Maruti*
Largest car maker cuts production.

*Car Inventory*
Rs 55000 crores car inventory lying at factories, with no buyers.

*Houses Unsold*
12.76 lakhs houses unsold in 30 major cities.

*Builders Suicide*
All over stressed. Some committing suicide, no buyers. Construction Stopped due Mat cost rise (GST at 18% to 28%).

*CCD founder*
*V G Siddhartha committed Sucide*
due to huge debt.

*HAL*
No money to pay salary for employees.

*ONGC*
Most profitable company in India is now making losses.

*OFB*
Under corporatization affecting over 1.5 lac employee & families.

*Biscuits Companies*
like Parle-G on the verge of terminating it's employees.

*Unemployment*
Millions unemployed due to Demonetization.

*Highest unemployment in 45 years*

*Domestic Stagflation*
Highest recorded

*Leaving India*
Record HNI individuals leaving India.

*May be many more...*

*Nothing is shown in media. Media is busy debating India Vs Pakistan, and Hindu Vs Muslims who were living peacefully with tranquility till recently.*

*It's our duty to let all others know the real picture.*


உங்கள் நன்பனான AS

CAA act means

சென்னை மைலாப்பூர்ல சத்தியா என்ற ஒரு மாமி இருந்தாங்க,

சென்னை மைலாப்பூர்ல சத்தியா என்ற ஒரு மாமி இருந்தாங்க, அவா சொந்தபந்தமெல்லாம் சங்கி சர்க்கில் தான். சென்னையில் ஒரு கன்ஸ்ட்ரக்சன் கம்பெனிக்கு கிளார்க்கா வேலைக்கு போனாங்க மாமி. கம்பெனி ஓனர் இளையான்குடி பக்கம் புதூரை சேர்ந்த மசூத் அலி. ஏற்கெனவே திருமணமாகி புள்ள குட்டிகளோட இருந்தவர்.

ஷரியத் சட்டப்படி மாமியை ரெண்டாந்தாரமா கல்யாணம் பண்ணிக்கிட்டார். மாமியும் சத்தியா என்ற பெயரை பாத்திமா அலி என்று மாற்றிக் கொண்டார். இதனால் மசூதின் முதல்மனைவி இவரை விட்டு விலகிவிட்டார்.

மாமி வெறும் பெயர் மாற்றம் தான் செஞ்சுட்டார் போல, மனசு முழுக்க பழைய காவிதான். மாமியின் சொந்த பந்தத்தில் உள்ள சங்கிகள்,
முஸ்லிம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் உருவாக்கப்பட்டு பெயர்தாங்கி முஸ்லிம்கள் மூலம் நடத்தப்படும் ''முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச்'' என்ற அமைப்பிற்கு இந்த மைலாப்பூர் மாமியை பொறுப்பாளராக நியமித்து விட்டார்கள்.

மாமிக்கு ஆர்எஸ்எஸ் வட்டாரத்தில் மட்டுமல்ல, ஆளுங்கட்சி வட்டாரத்திலும் அதிகார மட்டத்திலும் செல்வாக்கு அதிகம். சமுதாய வியாபாரம் செய்யும் சில முஸ்லிம் புரோக்கர் பயல்களின் சப்போர்ட்டும் மாமிக்கு உண்டு..

வில்லங்க விவகாரங்களை ஈசியாக முடித்துக் கொடுப்பதால்...
மண்ணடியில் இருந்து, செம்மரம் பவுடர் போன்ற ரெண்டாநம்பர்ல சம்பாரிச்சு இன்னைக்கு ஈசிஆரில் சொகுசு பங்களா கட்டி செட்டிலான பாய்கள டார்கெட் வெச்சு இந்த முஸ்லிம் ராஷ்டிரிய ம்ஞ்சில் சேர்த்திட்டு இருக்காங்க.

இன்றைக்கு ஆளும் பாஜக அரசே முஸ்லிம்களுக்கு எதிராக அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ள சூழலில், முஸ்லிம்களின் சார்பாக பேசுகிறேன் என்ற போர்வையில் ஆர்எஸ்எஸின் குரலாக பேசிவருக்கிறார்.

ஆர்எஸ்எஸ் கும்பலால் திட்டமிட்டு களமிறங்கப்பட்டு, மீடியாக்கள் மூலம் புரமோட் செய்யப்படும் பாத்திமா அலி என்ற பெயரில் வரும் சத்தியா மற்றும் அவர் கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்கவும்..