Saturday, 15 February 2020

மக்களை கொல்லும் Police அதிகாரி

#வடசென்னை_சட்டம்ஒழுங்கு இணை ஆணையர் #கபில்குமார்சரத்கரை உடனே பணி நீக்கம் செய்க .. #கனிமொழி.

#வடசென்னை_சட்டம்ஒழுங்கு இணை ஆணையர் #கபில்குமார்சரத்கரை உடனே பணி நீக்கம் செய்க ..
#கனிமொழி.

சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று #CAA_NRCக்கு_எதிராக நடந்த #போராட்டங்களை உரிய முறையில், சரியாக கையாண்டிருந்தால் மக்கள் மீதான #வன்முறையை தவிர்த்திருக்கலாம். சென்னை வடக்கு இணை ஆணையர் கபில் குமார் சரத்கர், ஐபிஎஸ், நிலைமையை தவறாக கையாண்டதாலேயே, அங்கு வன்முறை வெடித்தது. தூத்துக்குடியில், #ஸ்டர்லைட்_எதிர்ப்பு_போராட்டத்தின்போது நடந்த #துப்பாக்கிச்_சூட்டில் #13உயிர்கள்_பலியானபோது, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜியாக இருந்தவர் #கபில்குமார்.

#தூத்துக்குடி_துப்பாக்கிச்சூடு தொடர்பாக கபில்குமார் மீது சிபிஐ மற்றும் ஒரு நபர் நீதி ஆணைய விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த விசாரணை முடியும் வரை அவர் சட்டம் ஒழுங்கு பணியில் நியமிக்கப்பட்டிருக்கக் கூடாது. ஆனால் அவருக்கு சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் பதவி என்ற பரிசை வழங்கியுள்ளது அதிமுக அரசு. #வண்ணாரப்_பேட்டையில் நேற்று நடந்த வன்முறைக்குக் காரணமான, #கபில்குமார்சரத்கர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். இந்த வன்முறை குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.. #கனிமொழி.

Friday, 14 February 2020

பனையூர் ecr ரோடு போராட்டம்

பனையூர் ecr ரோடு போராட்டம்

தடியடி நடத்தி ஒருவர் பலியாக காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடு !

உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கு !!

கேரளா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டது போன்று CAA NRC NPR எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்று !!!

தமிழகம் தழுவிய தொடர்போராட்டம்

ஒரு இடத்தில் தொட்டதின் விளைவு...

சென்னை வண்ணாரப்பேட்டையில் தடியடி நடத்திய காவல் துறையை கண்டித்து

ஒரு இடத்தில் தொட்டதின் விளைவு...

போராட்டம் தீவிரமடைகிறது

*தமிழகம் முழுவதும் சாலை_மறியல்*

கம்பம்
தேவதானப்பட்டி
வத்தலக்குண்டு
திருப்பூர்தெற்கு
திருப்பூர் வடக்கு
தாராபுரம்
தாம்பரம்
மேலப்பாளையம்
மேலப்பாளையம் சந்தை
இராமநாதபுரம்
கோவை ஆத்துப்பாலம்
ஊட்டி
திண்டுக்கல்
விருதுநகர்
தென்காசி
கொடைக்கானல்
உத்தமபாளையம்
மதுரை நெல்பேட்டை
கடையநல்லூர்
சென்னை ஆலந்தூர்
சென்னை பாரிஸ்
சென்னை ஆசாத் நகர்
கடையநல்லூர்
குமரி குலச்சல்
கோவை மேட்டுப்பாளையம்
திருவண்ணாமலை
வந்தவாசி
சங்கரன்கோவில்
திருச்சி
சென்னை மண்ணடி
சென்னை ECR

வண்ணாரப்பேட்டை காவல்துறையின் அராஜக போக்கை கண்டித்து கண்டித்து மன்னடி எக்ஸலண்ட் ஹோட்டல் முன்பு மரியல் புதுப்பேட்டையில் சாலைமறியல் மயிலாப்பூரில் சாலை மறியல் சோழிங்கநல்லூரில் சாலை மறியல் ஐஸ் ஹவுஸ் பகுதியில் சாலை மறியல் சிட்கோ மக்கள் சாலைமறியல் நோக்கிச்

வண்ணாரப்பேட்டை காவல்துறையின் அராஜக போக்கை கண்டித்து கண்டித்து மன்னடி எக்ஸலண்ட் ஹோட்டல் முன்பு மரியல் புதுப்பேட்டையில் சாலைமறியல் மயிலாப்பூரில் சாலை மறியல் சோழிங்கநல்லூரில் சாலை மறியல் ஐஸ் ஹவுஸ் பகுதியில் சாலை மறியல் சிட்கோ மக்கள் சாலைமறியல் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்

குஜராத்: கல்லூரி நிர்வாகத்தின் #கேவலமான_செயல்

குஜராத்: கல்லூரி நிர்வாகத்தின்
#கேவலமான_செயல்

68 கல்லூரி மாணவிகளை உள்ளாடைகளை அகற்றச் சொல்லி, அவர்களுக்கு மாதவிடாய் இருக்கிறதா..? இல்லையா..? என்று கல்லூரி நிர்வாகம் சோதனை செய்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் ஸ்ரீசஹ்ஜானந்த் இன்ஸ்ட்டியூட் என்ற கல்வி நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. 2012ம் ஆண்டு முதல் இந்த கல்லூரியில் சுமார் 1500 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கல்லூரியின் கட்டுப்பாட்டில் விடுதி ஒன்றும் இயங்கி வருகிறது.

இந்த விடுதியில் 68 மாணவிகள் தங்கியுள்ளனர். இந்த மாணவிகள் அனைவருமே தொலைதூரத்தில் உள்ள குக்கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த நிலையில், விடுதியில் நடந்த ஒரு சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மாதவிடாய் காலத்தில் மாணவிகள் பலரும் சமையலறைக்கு செல்வதாகவும், கல்லூரி வளாகத்தில் உள்ள கோயிலுக்கு சென்று சாமி கும்பிடுவதாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக முதல்வருக்கு விடுதி நிர்வாகம் வழியாக புகாராக அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, விடுதியில் தங்கியிருந்த 68 மாணவிகளையும் கல்லூரி நிர்வாகம் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது.

அதாவது, 68 மாணவிகளில் யார், யார் மாதவிடாய் காலங்களில் இருக்கின்றனர் என்று முதல்வர் மற்றும் விடுதி நிர்வாகி கேள்வி எழுப்பியுள்ளனர். இதனை அடுத்து 2 பேர் ஒதுங்கியிருக்கின்றனர். அதன்பிறகும் நம்பாத கல்லூரி நிர்வாகத்தினர், எஞ்சியிருந்த 66 பேரை கழிவறைக்கு அழைத்துச் சென்று, அவர்களின் உள்ளாடைகளை அகற்றச் செய்து, அவர்களுக்கு மாதவிடாய் இருக்கிறதா இல்லையா என்று சோதனை நடத்தி உள்ளனர்.

கல்லூரி நிர்வாகத்தின் இந்த கேவலமான செயல் தற்போது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொறுப்பு துணைவேந்தர் ஒருவர் விசாரணை குழு ஒன்றை அமைத்துள்ளார். எனினும், மாணவிகளை கல்லூரி நிர்வாகம் நடத்தியவிதம் மனித உரிமை மீறல், இந்த மோசமான செயலைச் செய்த அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.

இந்திய அரசு மக்களின் பணத்தில் இருந்து பெற்ற 6 பெரும் பணக்காரர்களின் கடனை ஒரே உத்தரவில் தள்ளுபடி செய்துள்ளது

இந்திய அரசு மக்களின் பணத்தில் இருந்து பெற்ற 6 பெரும் பணக்காரர்களின் கடனை ஒரே உத்தரவில் தள்ளுபடி செய்துள்ளது. இணைப்பு: அனைத்து இந்திய வங்கி பணியாளர் சங்கம் AIBEA வெளியிட்டுள்ள புள்ளி விவரம்.

NRC க்கு எதிராக இந்து பரிஷத் அமைப்பு போராட்டம் ஏன் என்ன தெரியுமா இஸ்லாமியர்களுக்காக அல்ல..ஊடகங்களில் வராத அரசு இணையதளத்தில் வெளியாகியுள்ள ஆவணங்கள்

சற்று முன்

NRC க்கு எதிராக இந்து பரிஷத் அமைப்பு போராட்டம் ஏன் என்ன தெரியுமா
இஸ்லாமியர்களுக்காக அல்ல..ஊடகங்களில் வராத அரசு இணையதளத்தில் வெளியாகியுள்ள ஆவணங்கள்

Tuesday, 11 February 2020

அரசாணை 189 / மரணமடைந்தால் அக்குழந்தைக்கு வங்கியில் நிரந்தர வைப்புத்தொகையாக ரூ 75,000/-

*அரசு அல்லது அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை மரணமடைந்தால் அக்குழந்தைக்கு வங்கியில் நிரந்தர வைப்புத்தொகையாக ரூ 75,000/- அரசிடம் இருந்து பெற முடியும்*.👆

ஒருகோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, *ஒரு நூலகம் கட்டுவேன்* என்று பதிலளித்தாராம் மகாத்மா...

ஒருகோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது,
*ஒரு நூலகம் கட்டுவேன்* என்று பதிலளித்தாராம் மகாத்மா...

தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் *ஜவஹர்லால் நேரு*...

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் *பெட்ரண்ட் ரஸல்*...

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் *ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்*...

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் *நெல்சன் மண்டேலா*...

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி *லெனின்* கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்...

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் *சார்லிசாப்லின்*...

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் *வின்ஸ்டன் சர்ச்சில்*...

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் *மார்டின் லூதர்கிங்*...

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் *பகத்சிங்*...

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
*ஆபிரகாம் லிங்கன்*...

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி
– *ஜூலியஸ் சீசர்*...

உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..
– *டெஸ்கார்டஸ்*...

போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…#இங்கர்சால்*...

சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
#பிரான்சிஸ்பேக்கன்

புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட
பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
#லெனின்*...

உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
#ஆஸ்கார் வைல்ட்*...

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
#சிக்மண்ட்ஃப்ராய்ட்*...

பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ…
#மாசேதுங்

வாசிக்கும் பழக்கம் ஓர் மனிதனை முழு மனிதனாக மாற்றிவிடும்...

உலகில் வாழ்ந்து மறைந்த மாமனிதர்கள் பலரும் நூல்கள் வழியாகத் தான் வாழ்வின் வெளிச்சத்தை நோக்கி பயணித்தனர்... நன்றி திரு. ஆர்தூர் ஜானி.


உங்கள் நன்பனான AS