Tuesday, 28 January 2020

வழக்கறிஞர் திலகன் அவர்களின் பதிவு:

CAA &NRC வழக்கறிஞர் திலகன் அவர்களின் பதிவு:

கட்டாயம் படியுங்கள்‌ NRC, NPRன் குரூரம் புரிய! 1940 ல் உள்ள பத்திரம் என்னிடம் இருக்கிறது.. ஆனால் எனக்கே இதை படித்து முடிக்கும்போதே பகீரென்றிருக்கிறது..
அப்பாவி மக்களின் நினைத்துப்பாருங்கள்... எவ்வளவு கொடூரமானவர்கள் இவர்கள்..

பொறுமையாக படியுங்கள்;
#அவசியம் #படியுங்கள்...

CAA(CAB) & NRC ...

முடிந்தளவு சுருக்கமாக விவரிக்கிறேன் ...

NRC. சொல்வது என்ன ...

"Simply being born in India or having parents who were born in India is not enough ...The NRC requires you or your parents to have been born before a certain cut -off date and the cut-off date is March 24,1971 ..."

புரிகின்றதா வில்லங்கம் ...

நீங்களோ உங்கள் பெற்றோரோ இந்தியாவில் பிறந்திருப்பதால் மட்டுமே நீங்கள் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் அல்ல ...

நீங்கள் குறிப்பிட்ட கட்ஆப் தேதிக்கு முன்பே இந்தியாவில் உள்ளீர்கள் என்பதை நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும் ...!

பொதுவாக குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி காவல்துறைதான் ஒருவர் குற்றவாளி என்பதை நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் ...

ஆனால் NRC படி நீங்கள் குடிமகன்தான் என்பதை தகுந்த ஆதாரங்களுடன் (Documentary Evidences) ஆவணங்கள் மூலமாக நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும் ...

சரி ...அதற்கு என்ன டாகுமெண்ட்ஸ் தேவை என்பதைப் பார்ப்போம் ...

LIST A மற்றும் LIST B என இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட டாகுமெண்டுகள் உங்களிடம் இருக்க வேண்டும் ...

LIST -A ...

1.Electoral rolls upto March 25,1971
2.NRC of 1951
3.Land and Tenancy Records
4.Citizenship certificate
5.Permanent resident certificate
6.Passport
7.Bank or LIC documents
8.Permanent Residential Certificate
9.Educational certificates and court orders
10.Refugee Registration certificate

LIST -B

1.Land documents
2.Board or university certificates
3.Bank/LIC/Post office records
4.Birth certificate
5.Ration card
6.Electoral rolls
7.Other legally acceptable documents
8.A circle officer or Grama panchayat secretary certificate for married women

விஷயம் என்னவென்றால் LIST - A டாகுமெண்ட்ஸ் கட் ஆப் தேதிக்கு முந்தியதாக இர்ர்க்க வேண்டும் ...அதாவது மார்ச் 25,1971 க்கு முந்தைய டாகுமெண்ட்ஸ்ஸாக அவை இர்ர்க்க வேண்டும் ...!!

வில்லங்கம் புரிகிறதா ...

இந்த LIST -A டாகுமெண்ட்ஸ்ஸுக்கு சப்போர்டிவ்வாக LIST -B டாகுமெண்ட்ஸ்ஸை நீங்கள் காட்ட வேண்டும் ...!!

உங்களில் எத்தனை பேருக்கு இது சாத்தியப்படும் என்பதை நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள் ...

உங்களால் அப்படிக் காட்ட இயலவில்லையென்றால் உடனடியாக நீங்கள் கைது செய்யப்பட்டு Detention Camp ல் அடைக்கப்படுவீர்கள் ...!

அஸ்ஸாமில் உள்ள Detention Camp என்பது அங்குள்ள சிறைச்சாலைகள்தான் ...!

ஆக ...மேற்கூரிய டாகுமெண்டுகள் இல்லையென்றால் நீங்கள் சிறைக்குச் செல்வீர்கள் ...மனைவி,குழந்தைகளுடன் ...!!

மேல்முறையீட்டிற்கு நீங்கள் Foreign Tribunalல் வழக்கு நடத்தலாம் அல்லது Concern High Courtல் வழக்கு நடத்தலாம் ...

அதிலும் ஸ்டே அல்லது ஜாமீன் கிடைத்தால் மட்டுமே நீங்கள் வெளியே வர இயலும் ...!!

அதனால்தான் சொல்கிறேன் பாஜக மக்களுக்கு எதிரான கட்சி என்று ...

இதனால் பெருவாரியாகப் பாதிக்கப்படுவது இந்துக்களே ...!

பல இலட்சம் இந்துக்கள் Detention Campல் சொத்திழந்து,மானம் இழந்து மனைவி குழந்தைகளுடன் சிறையில் உள்ளார்கள் ...!!

இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் பகீர் என்கிறதல்லவா ...

நாடு முழுவதும் இதே NRC கணெக்கெடுப்பு நடத்தப்படும் என பாஜக நேற்று பகிரங்கமாக அறிவித்து விட்டது ...

1951லிருந்து ஆவணங்கள் வைத்திருப்பவர்கள் தாராளமாக மகிழ்ச்சியாக இருங்கள் ...

நான் விசாரித்தவரை பலரும் ரேஷன் கார்டு,ஆதார் கார்டு தவிர ஒன்றுமில்லை என்றே சொல்கிறார்கள் ...

இந்த NRC பயங்கரத்தை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம் ...!

அத்தனை டாகுமெண்ட்டுகள் இருந்தாலும் ஒவ்வொரு அரசு அதிகாரியிடம் நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும் ...

இளம்பெண்களின் கதி என்னாகும் ...

சாதாரண எக்ஸாம் இன்டர்னெல் மார்க் போடவே மாணவிகளை படுக்கைக்கு அழைக்கும் காலம் இது ...!

குடியுரிமை தருவது என்றால் சும்மாவா ...எது வேண்டுமானாலும் நடக்கும் ....

ஒரு வழக்கறிஞராக ...

நான் சொல்வது இந்த CAA வே நமது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு ஆர்ட்டிக்கிள் -14 க்கு எதிரானது ...

என உறுதியாகச் சொல்லுவேன் ...

NRC யைப் பொறுத்த வரை ...

நாங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு ரயிலை விற்போம்,துறைமுகத்தை விற்போம்,நிலத்தை விற்போம்,பொதுத் துறை நிறுவனங்களை விற்போம் ...

மீறிக் கேள்வி கேட்டால் ...

நீ இந்தியனா என்று திருப்பிக் கேட்போம் ...நீ டாக்குமெண்டைத் தூக்கிக் கொண்டு திரிய வேண்டியதுதான் ...

டாகுமெண்ட் இல்லாதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது Detention Camp ...

முடிவு இனி 130 கோடி மக்கள் கைகளில் ...

தட்ஸ் ஆல் ...

தோழமையுடன்
-வழக்கறிஞர் திலகர்

**மூத்த வழக்கறிஞர் #ThilakarSspk அவர்கள் பதிவு...

தமிழர்களே அணி திரளுங்கள் : மனித சங்கிலி போராட்டத்திற்கு பேராசிரியர் அருணன் அழைப்பு

தமிழர்களே அணி திரளுங்கள் : மனித சங்கிலி போராட்டத்திற்கு பேராசிரியர் அருணன் அழைப்பு

https://www.facebook.com/tmmkwebnews/videos/162262601855350/

திருப்பூர் வடக்குமாவட்டம் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மனித சங்கிலி போராட்டம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் தொடங்கி அவினாசி ரோடு SAP தியேட்டர் வரைநடைபெறும்

*மாபெரும் மனித சங்கிலி போராட்டம்*..

*மாபெரும் மனித சங்கிலி போராட்டம்*..


கூத்தாநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களுக்கு ஒர் அன்பு வேண்டுகோள்...

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

எதிர்வரும் 30.01.2020 *வியாழன் மாலை 4.00 மணி முதல் 5.30 மணி வரை*
பாசிச மத்திய அரசு கொண்டு வந்துள்ள CAA, NRC, NPR. சட்டங்களை எதிர்த்து மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக *மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டம்* நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக கூத்தாநல்லூரில் அனைத்து ஜமாத்தார்கள், இயக்கங்கள், அமைப்புகள், கட்சிகள், ஜமாத்துல் உலமா சபை, சகோதர சமுதாய அமைப்புகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் மனித சங்கிலி போராட்டம்...

கூத்தாநல்லூர் ரேடியோ பார்க் தபால் நிலையத்தி விருந்து துவங்கி பெரிய கடைத்தெரு, மேலக்கடைத்தெரு, ARரோடு , தாலுக்கா அலுவலகம், லெட்சுமாங்குடி நஸ்ரின் சர்வீஸ் ஸ்டேசன், போலீஸ் ஸ்டேசன் திருவாரூர் மெயின் ரோடு புது நகராட்சி வழியாக ராவுத்தர் கல்லூரி வரை தொடராக மனித சங்கிலி அமைத்திட முடிவு செய்யப்பட்டுள்ளதால் அனைவரும் ஒன்றிணைந்து கைகோர்த்து கலந்து கொண்டு நமது எதிர்ப்பினை வலிமையாக பதிவு செய்திட அன்போடு அழைக்கின்றோம்.

*குறிப்பு* :

அந்தந்த பகுதியில் உள்ளவர்கள் மேல் குறிப்பிட்டுள்ள பகுதிகளில் இணைந்து கொள்ள அழைக்கிறோம்.

அழைப்பது.....

மக்கள் ஒற்றுமை மேடை &
ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு .
திருவாரூர் மாவட்டம்.
ஒருங்கிணைந்த கூத்தாநல்லூர் ஜமாத் .

முகத்தை மறைக்க தடை ஆனால இன்று

*குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு,

*குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு,*

*தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து மக்களிடையே அச்சமும்,பீதியும் ஏற்பட்டுள்ளது.*

*இச்சட்டங்கள் சம்பந்தமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்*

சென்னை *உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி* விளக்கமளித்துள்ளார்.
வாசகர்கள் இதனைப் படிப்ப
தோடு சமுதாய மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுகிறோம்.
செய்தி ஆசிரியர்
*மணிச்சுடர் நாளிதழ்*

குடியுரிமை திருத்தச் சட்டம் / தேசிய குடிமக்கள் பதிவேடு /
தேசிய மக்கள் தொகை பதிவேடு: ஒரு பார்வை

*மேனாள் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் G.அக்பர் அலி அவர்களின் விளக்கம்*

குடியுரிமை திருத்தச் சட்டம் / தேசிய குடிமக்கள் பதிவேடு /
தேசிய மக்கள் தொகை பதிவேடு ஒரு புரிதல்
மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள
1. குடியுரிமை சட்ட திருத்தம் 2019; சி.ஏ.ஏ.

தலைக்கு மேல் கத்தியாக தொங்கி கொண்டிருக்கும்
2. தேசிய குடிமக்கள் பதிவேடு; என்.ஆர்.சி.

அதனை கொல்லைப்புறமாக கொண்டு வர இருக்கும்
3. தேசிய மக்கள் தொகை பதிவேடு - என்.பி.ஆர்.

இந்த பிரச்சினைகள் இந்தியா முழுவதும் தீயாய் பற்றி
எரிந்து கொண்டு இருக்கும் இந்த சூழலில் ஒட்டு மொத்த
தமிழகம், குறிப்பாக தமிழக முஸ்லிம்கள் வர இருக்கும் 2020-2021
மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு

ஆகியவற்றை
எண்ணி குழப்பத்திலும் மிகுந்த அச்சத்திலும்
இருக்கிறார்கள். குடியுரிமை, தேசிய
குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்
தொகை பதிவேடு பற்றிய புரிதல் முதலில்
அவசியம். அதற்காக வரலாற்றையும் மற்றும்
அடிப்படை சட்டங்களையும் முதலில்
தெரிந்து கொள்வது குடிமக்களாகிய நமது
ஒவ்வொருவரின் கடமை.

1. இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950
ஆகஸ்ட் 15, 1947 நள்ளிரவில் சுதந்திரம்
பெற்றோம். 26 ஜனவரி 1950 அன்று நமது இந்திய அரசியலமைப்பு
சட்டம் நடைமுறைக்கு வந்தது. அரசியல் அமைப்பு சாசனத்தின்
சட்டம் பகுதி 2 மற்றும் பிரிவு 5 குடியுரிமை பற்றி பேசுகிறது.
அதன்படி,
(1) அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த 26-01-1950
அன்று இந்தியாவை தன்னுடைய குடியிருப்பாக ஏற்றுக்கொண்ட
ஒவ்வொருவரும் இந்தியரும் குடிமக்கள்.
(2) இந்திய எல்லைக்குள் பிறந்த ஒவ்வொருவரும் அல்லது
தன் பெற்றோரில் யாராவது ஒருவர் இந்திய எல்லைக்குள் பிறந்
திருந்தால் அவரும் அல்லது இந்திய எல்லைக்குள் 26-01-1950க்கு
5 வருடங்களுக்கு முன்பாக பிறந்த எவரும் இந்திய குடிமக்கள்
ஆவார்கள்.
உதாரணத்திற்கு என்னுடைய தாய் தந்தையர் 26-01-1950க்கு
முன்பாக தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வல்லம்
கிராமத்தில் பிறந்தவர்கள். எனவே, அவர்கள் பிரிவு 5 அரசியல்
அமைப்பு சாசனப்படி இந்திய பிரஜைகள். (குடிமக்கள்)
2. இந்திய குடியுரிமை சட்டம் 1955
1955 இல் இந்திய குடியுரிமை சட்டம் பாராளுமன்றத்தால்
நிறைவேற்றப்பட்டு 30-12-1955 அன்று நடைமுறைக்கு வந்தது.
இதன் பிரிவு 3, பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை பற்றி
கூறுகிறது. அதன்படி, யாரெல்லாம் 26-01-1950க்கு பிறகு இந்திய
எல்லைக்குள் பிறந்தார்களோ அவர்கள்இந்திய பிரஜைகள் என்று
குறிப்பிட்டுள்ளது.
பிரிவு 4 வம்சாவழி குடியுரிமை பற்றி கூறுகிறது. அதன்படி ஒரு
நபர் இந்தியாவுக்கு வெளியே 26-01-1950-க்கு பிறகும், 30-12-1955க்கு
முன்பும் பிறந்து இருந்து ஆனால் அவருடைய தந்தை இந்திய
குடிமகனாக இருந்தால் அவர் வம்சா வழி அடிப்படையில் இந்திய
குடிமகன். முந்தையது பிறப்பின் அடிப்படையிலான பிரஜா
உரிமை (குடியுரிமை) பிந்தையது வம்சா வழி அடிப்படையிலான
பிரஜா உரிமை (குடியுரிமை).
உதாரணமாக நான் 23-11-1952-ல் தமிழ்நாட்டில் தஞ்சாவூர்
மாவட்டத்தில் வல்லம் கிராமத்தில் பிறந்ததால் நானும் இந்திய
குடியுரிமை சட்டம் 1955 பிரிவு 3இன் படி இந்திய குடிமகன். இது
பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமை.
3. பிறப்பு இறப்பு பதிவு சட்டம் 1969
பிறப்பு இறப்பு பதிவு சட்டம், 31-05-1969 அன்று நடைமுறைக்கு
வந்தது. இதன்படி 31-05-1969-க்கு பிறகு பிறக்கும் ஒவ்வொரு
குழந்தையின் பிறப்பும் பதிவு செய்யப்பட வேண்டும். அதற்கான
பிறப்பு சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டும்.
4. இந்திய குடியுரிமை சட்டத்திருத்தங்கள்
அ. குடியுரிமை (திருத்தம்) 1986.
ஆ. குடியுரிமை (திருத்தம்) 1992
இ. குடியுரிமை (திருத்தம்) 2003 (ஆக்ட் 6 ஆப் 2004-3. 12 2004)
ஈ. குடியுரிமை (திருத்தம்) 2005
அ. குடியுரிமை (திருத்தம்) 1986
1. இந்திய குடியுரிமை சட்டம் 1986-ல் திருத்தம் செய்யப்பட்டு,
திருத்தம் 01-07-1987 அன்று நடைமுறைக்கு வந்தது. பிறப்பின்
அடிப்படையில் குடியுரிமை என்ற பிரிவு 3 இல் திருத்தம் செய்யப்
பட்டு, அதன்படி 26-01-1950-க்கு பிறகும் 01-07-1987-க்கு முன்பும்
இந்திய எல்லைக்குள் பிறந்தவர்கள் பிறப்பின் அடிப்படையில்
இந்திய குடிமக்கள்.
உதாரணத்திற்கு எனது மூத்த மகன் 10-11-1980 அன்று
தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வல்லம் கிராமத்தில்
பிறந்ததால் அவனும் இந்திய குடிமகன். இது பிறப்பின்
அடிப்படையில் குடியுரிமை உரிமை. பிறப்பு இறப்பு பதிவு
சட்டம் 1969 படி பிறப்பு பதிவு செய்யப்பட்டு பிறப்பு சான்று
பெறப்பட்டுள்ளது.
2. மேலும் 01-07-1987க்கு பிறகு ஒருவர் பிறந்து அவருடைய
தாய் அல்லது தந்தையில் ஒருவர் இந்திய குடிமகனாக இருந்தால்,
அவரும் இந்திய குடிமகன்.
உதாரணத்திற்கு எனது இரண்டாவது மகன் 29-01-1993ல்
பிறந்தாலும் நானும் என் மனைவியும் ஏற்கனவே இந்திய

பிரஜைகன்
என்பதாலும் எனது இரண்டாவது மகனும் இந்திய

குடிமகன்.
இது வம்சா வழி குடியுரிமை ஆகும். பிறப்பு இறப்பு

பதிவு
சட்டம் 1969-ன் கீழ்பிறப்பு பதிவு செய்யப்பட்டு சான்று

பெறப்பட்டு
உள்ளது.
ஆ. குடியுரிமை (திருத்தம்) 1992
இந்திய குடியுரிமை சட்டம் 1992-ல் திருத்தம் செய்யப்பட்டது.
இதில் ஏற்கனவே ஒரு நபர் இந்தியாவுக்கு வெளியே 26-01-1950க்கு
பிறகும் 30-12-1955-க்கு முன்பு பிறந்தும் இருந்து ஆனால்

அவருடைய
தந்தை இந்திய குடிமகனாக இருந்தால் அவர்

வம்சாவழி
அடிப்படையில் இந்திய குடிமகன் என்றிருந்ததில்,

அவர்
தாய் இந்திய குடிமகளாக இருப்பின் இருந்தால் அவர்

வம்சாவழி
அடிப்படையில் இந்திய குடிமகன். இந்த திருத்தத்தின்

மூலம்
ஏற்கனவே விடப்பட்ட தாய் சேர்க்கப்பட்டாள்.

இ. குடியுரிமை (திருத்தம்) 2003 (ஆக்ட் 6 ஆப் 2004) - 3-12-2004)
1 இதன்படி 2004-க்கு பின்னர் பிறக்கும் குழந்தையின் பெற்றோர்
இருவருமே இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும்.
2. பெற்றோரில் ஒருவர் இந்திய குடிமகனாக இருந்து
மற்றொருவர் சட்ட விரோதமாக குடியேறிவராக இல்லாமல்
இருந்தால் அந்த குழந்தையும் இந்திய பிரஜை. அதாவது
பெற்றோரில் ஒருவர் சட்ட விரோதமாக குடியேறியவராக
இருந்தாலும் அந்த குழந்தை இந்திய பிரஜை ஆகாது.
3. பிரிவு 2 திருத்தம் செய்யப்பட்டு, குடிமகன் அல்லது பிரஜை
யார் என்ற விளக்கம் நீக்கப்பட்டு, பிரிவு 2 (1) (b) சட்ட விரோத
குடியேறி என்பவர், ஆவணங்கள் இல்லாமல், நாட்டிற்குள்
வந்தவர் என்று குறிப்பிட்டது.
4. புதிதாக பிரிவு 14-ஏ சேர்க்கப்பட்டு, தேசிய அடையாள
அட்டை விநியோகம் எனத்தலைப்பிடப்பட்டது.

1. மத்திய அரசு இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரையும்
கட்டாயமாக பதிவு செய்து அவர்களுக்கு தேசிய அடையாள
அட்டை வழங்க வேண்டும்.
2. மத்திய அரசு இதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு ஒன்றை
ஏற்படுத்தி, பராமரிக்க வேண்டும்.
3. குடியுரிமை (திருத்தம்) 2003 (ஆக்ட் 6 ஆப் 20040
நடைமுறைக்கு வந்த 3-12-2004 நாள் முதல், பிறப்பு, இறப்பு பதிவு
சட்டம் 1969 பிரிவு 3 (1)ல் சொல்லப்பட்டுள்ள இந்திய பொது
பதிவாளர், தேசிய குடியுரிமை பதிவாளராக இருப்பார்.
3-12-2004 இல் நடைமுறைக்கு வந்த குடியுரிமை (திருத்தம்)
2003 (ஆக்ட் 6 ஆப் 2004) பிறப்புரிமை மற்றும் வம்சாவழியுரிமை
மற்றும் குடியுரிமை பற்றி கூறுகிறது. இந்த குடியுரிமைகள்
முதலில் பிறப்பின் அடிப்படையிலும் பிறகு பெற்றோரில் ஒருவர்
இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் என்றும், அதன் பிறகு
பெற்றோர் இருவருமே இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும்
அதிலும் குறிப்பாக ஒரு நபர் சட்டவிரோதமாக குடியேறிவராக
இருக்க கூடாது என்ற வம்சாவழி அடிப்படையிலும், நிர்ணயம்
செய்யப்படுகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டம் / தேசிய குடிமக்கள் பதிவேடு /தேசிய மக்கள் தொகை பதிவேடு ஒரு புரிதல்
மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள
1. குடியுரிமை சட்ட திருத்தம் 2019; சி.ஏ.ஏ.

தலைக்கு மேல் கத்தியாக தொங்கி கொண்டிருக்கும்
2. தேசிய குடிமக்கள் பதிவேடு; என்.ஆர்.சி.

அதனை கொல்லைப்புறமாக கொண்டு வர இருக்கும்
3. தேசிய மக்கள் தொகை பதிவேடு - என்.பி.ஆர்.

இந்த பிரச்சினைகள் இந்தியா முழுவதும் தீயாய் பற்றி எரிந்துகொண்டு இருக்கும் இந்த சூழலில் ஒட்டு மொத்த தமிழகம்,குறிப்பாக தமிழக முஸ்லிம்கள் வர இருக்கும் 2020-2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றைஎண்ணி குழப்பத்திலும் மிகுந்த அச்சத்திலும் இருக்கிறார்கள்.குடியுரிமை, தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைபதிவேடு பற்றிய புரிதல் முதலில் அவசியம். அதற்காக வரலாற்றையும்மற்றும்அடிப்படை சட்டங்களையும் முதலில் தெரிந்து கொள்வதுகுடிமக்களாகிய நமது ஒவ்வொருவரின் கடமை.
1. இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950
ஆகஸ்ட் 15, 1947 நள்ளிரவில் சுதந்திரம் பெற்றோம். 26 ஜனவரி
1950 அன்று நமது இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்குவந்தது. அரசியல் அமைப்பு சாசனத்தின் சட்டம் பகுதி 2 மற்றும்பிரிவு 5 குடியுரிமை பற்றி பேசுகிறது.
அதன்படி,
(1) அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த 26-01-1950
அன்று இந்தியாவை தன்னுடைய குடியிருப்பாக ஏற்றுக்கொண்டஒவ்வொருவரும் இந்தியரும் குடிமக்கள்.
(2) இந்திய எல்லைக்குள் பிறந்த ஒவ்வொருவரும் அல்லது தன்பெற்றோரில் யாராவது ஒருவர் இந்திய எல்லைக்குள் பிறந்திருந்தால்அவரும் அல்லது இந்திய எல்லைக்குள் 26-01-1950க்கு 5 வருடங்களுக்குமுன்பாக பிறந்த எவரும் இந்திய குடிமக்கள் ஆவார்கள்.
உதாரணத்திற்கு என்னுடைய தாய் தந்தையர் 26-01-1950க்குமுன்பாக தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வல்லம்கிராமத்தில் பிறந்தவர்கள். எனவே, அவர்கள் பிரிவு 5 அரசியல்அமைப்பு சாசனப்படி இந்திய பிரஜைகள். (குடிமக்கள்)
2. இந்திய குடியுரிமை சட்டம் 1955
1955 இல் இந்திய குடியுரிமை சட்டம் பாராளுமன்றத்தால்
நிறைவேற்றப்பட்டு 30-12-1955 அன்று நடைமுறைக்கு வந்தது.இதன் பிரிவு 3, பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை பற்றிகூறுகிறது. அதன்படி, யாரெல்லாம் 26-01-1950க்கு பிறகு இந்தியஎல்லைக்குள் பிறந்தார்களோ அவர்கள்இந்திய பிரஜைகள் என்றுகுறிப்பிட்டுள்ளது.
பிரிவு 4 வம்சாவழி குடியுரிமை பற்றி கூறுகிறது. அதன்படி ஒருநபர் இந்தியாவுக்கு வெளியே 26-01-1950-க்கு பிறகும், 30-12-1955க்குமுன்பும் பிறந்து இருந்து ஆனால் அவருடைய தந்தை இந்தியகுடிமகனாக இருந்தால் அவர் வம்சா வழி அடிப்படையில் இந்தியகுடிமகன். முந்தையது பிறப்பின் அடிப்படையிலான பிரஜா உரிமை(குடியுரிமை) பிந்தையது வம்சா வழி அடிப்படையிலான பிரஜாஉரிமை (குடியுரிமை).
உதாரணமாக நான் 23-11-1952-ல் தமிழ்நாட்டில் தஞ்சாவூர்மாவட்டத்தில் வல்லம் கிராமத்தில் பிறந்ததால் நானும் இந்தியகுடியுரிமை சட்டம் 1955 பிரிவு 3இன் படி இந்திய குடிமகன். இதுபிறப்பின் அடிப்படையிலான குடியுரிமை.
3. பிறப்பு இறப்பு பதிவு சட்டம் 1969
பிறப்பு இறப்பு பதிவு சட்டம், 31-05-1969 அன்று நடைமுறைக்கு
வந்தது. இதன்படி 31-05-1969-க்கு பிறகு பிறக்கும் ஒவ்வொருகுழந்தையின் பிறப்பும் பதிவு செய்யப்பட வேண்டும். அதற்கானபிறப்பு சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டும்.
4. இந்திய குடியுரிமை சட்டத்திருத்தங்கள்
அ. குடியுரிமை (திருத்தம்) 1986.
ஆ. குடியுரிமை (திருத்தம்) 1992
இ. குடியுரிமை (திருத்தம்) 2003 (ஆக்ட் 6 ஆப் 2004-3. 12 2004)
ஈ. குடியுரிமை (திருத்தம்) 2005
அ. குடியுரிமை (திருத்தம்) 1986
1. இந்திய குடியுரிமை சட்டம் 1986-ல் திருத்தம் செய்யப்பட்டு,
திருத்தம் 01-07-1987 அன்று நடைமுறைக்கு வந்தது. பிறப்பின்அடிப்படையில் குடியுரிமை என்ற பிரிவு 3 இல் திருத்தம்செய்யப்பட்டு, அதன்படி 26-01-1950-க்கு பிறகும் 01-07-1987-க்கு முன்பும்இந்திய எல்லைக்குள் பிறந்தவர்கள் பிறப்பின் அடிப்படையில்இந்திய குடிமக்கள்.
உதாரணத்திற்கு எனது மூத்த மகன் 10-11-1980 அன்றுதமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வல்லம் கிராமத்தில்பிறந்ததால் அவனும் இந்திய குடிமகன். இது பிறப்பின்அடிப்படையில் குடியுரிமை உரிமை. பிறப்பு இறப்பு பதிவுசட்டம் 1969 படி பிறப்பு பதிவு செய்யப்பட்டு பிறப்பு சான்றுபெறப்பட்டுள்ளது.
2. மேலும் 01-07-1987க்கு பிறகு ஒருவர் பிறந்து அவருடைய தாய்அல்லது தந்தையில் ஒருவர் இந்திய குடிமகனாக இருந்தால், அவரும்இந்திய குடிமகன்.
உதாரணத்திற்கு எனது இரண்டாவது மகன் 29-01-1993-ல்பிறந்தாலும் நானும் என் மனைவியும் ஏற்கனவே இந்திய பிரஜைகன்என்பதாலும் எனது இரண்டாவது மகனும் இந்திய குடிமகன். இதுவம்சா வழி குடியுரிமை ஆகும். பிறப்பு இறப்பு பதிவு சட்டம் 1969-ன்கீழ்பிறப்பு பதிவு செய்யப்பட்டு சான்று பெறப்பட்டு உள்ளது.
ஆ. குடியுரிமை (திருத்தம்) 1992
இந்திய குடியுரிமை சட்டம் 1992-ல் திருத்தம் செய்யப்பட்டது.
இதில் ஏற்கனவே ஒரு நபர் இந்தியாவுக்கு வெளியே 26-01-1950-க்குபிறகும் 30-12-1955-க்கு முன்பு பிறந்தும் இருந்து ஆனால் அவருடையதந்தை இந்திய குடிமகனாக இருந்தால் அவர் வம்சாவழி
அடிப்படையில் இந்திய குடிமகன் என்றிருந்ததில், அவர் தாய்இந்திய குடிமகளாக இருப்பின் இருந்தால் அவர் வம்சாவழிஅடிப்படையில் இந்திய குடிமகன். இந்த திருத்தத்தின் மூலம்ஏற்கனவே விடப்பட்ட தாய் சேர்க்கப்பட்டாள்.
இ. குடியுரிமை (திருத்தம்) 2003 (ஆக்ட் 6 ஆப் 2004) - 3-12-2004)
1 இதன்படி 2004-க்கு பின்னர் பிறக்கும் குழந்தையின் பெற்றோர்
இருவருமே இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும்.
2. பெற்றோரில் ஒருவர் இந்திய குடிமகனாக இருந்து
மற்றொருவர் சட்ட விரோதமாக குடியேறிவராக இல்லாமல்இருந்தால் அந்த குழந்தையும் இந்திய பிரஜை. அதாவது பெற்றோரில்ஒருவர் சட்ட விரோதமாக குடியேறியவராக இருந்தாலும் அந்தகுழந்தை இந்திய பிரஜை ஆகாது.
3. பிரிவு 2 திருத்தம் செய்யப்பட்டு, குடிமகன் அல்லது பிரஜையார் என்ற விளக்கம் நீக்கப்பட்டு, பிரிவு 2 (1) (b) சட்ட விரோதகுடியேறி என்பவர், ஆவணங்கள் இல்லாமல், நாட்டிற்குள் வந்தவர்
என்று குறிப்பிட்டது.
4. புதிதாக பிரிவு 14-ஏ சேர்க்கப்பட்டு, தேசிய அடையாள
அட்டை விநியோகம் எனத்தலைப்பிடப்பட்டது.

1. மத்திய அரசு இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரையும்கட்டாயமாக பதிவு செய்து அவர்களுக்கு தேசிய அடையாளஅட்டை வழங்க வேண்டும்.
2. மத்திய அரசு இதற்காக தேசிய குடிமக்கள் பதிவேடு ஒன்றை
ஏற்படுத்தி, பராமரிக்க வேண்டும்.

3. குடியுரிமை (திருத்தம்) 2003 (ஆக்ட் 6 ஆப் 20040 நடைமுறைக்கு
வந்த 3-12-2004 நாள் முதல், பிறப்பு, இறப்பு பதிவு சட்டம் 1969 பிரிவு
3 (1)ல் சொல்லப்பட்டுள்ள இந்திய பொது பதிவாளர், தேசிய
குடியுரிமை பதிவாளராக இருப்பார்.
3-12-2004 இல் நடைமுறைக்கு வந்த குடியுரிமை (திருத்தம்) 2003
(ஆக்ட் 6 ஆப் 2004) பிறப்புரிமை மற்றும் வம்சாவழியுரிமை மற்றும்
குடியுரிமை பற்றி கூறுகிறது. இந்த குடியுரிமைகள் முதலில் பிறப்பின்
அடிப்படையிலும் பிறகு பெற்றோரில் ஒருவர் இந்திய குடிமகனாக
இருக்க வேண்டும் என்றும், அதன் பிறகு பெற்றோர் இருவருமே
இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும் அதிலும் குறிப்பாக ஒரு
நபர் சட்டவிரோதமாக குடியேறிவராக இருக்க கூடாது என்ற
வம்சாவழி அடிப்படையிலும், நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஏற்கனவே கிழக்கு பாகிஸ்தானாக இருந்து, பங்களாதேஷ்
ஆகி இருக்கும் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு குறிப்பாக
அசாம் மற்றும் மேற்கு வங்கத்திற்கு சட்ட விரோதமாக மக்கள்
குடியேறியதால் பெற்றோரில் இருவருமே இந்தியா குடிமக்களாக
இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஒருவர் சட்ட விரோதமாக
குடியேறி இருக்க கூடாது என்று சொல்லப்பட்டது. 1986 திருத்த
சட்ட திருத்தத்தில் அசாமிலிருந்து இந்தியாவிற்குள் வந்த இந்திய
வம்சாவழி மக்களை பொருத்து, பிரிவு 6-ஏ ஏற்படுத்தப்பட்டது.
அசாம் மாணவர்கள் அமைப்பு நடத்திய போராட்டத்திற்கு பிறகு
சட்ட விரோதமாக குடியேறிவர்களை கண்டுபிடித்து வெளியேற்ற
அசாம் உடன்படிக்கை ஏற்பட்டது. குடியுரிமை (திருத்தம்) 2003
(ஆக்ட் 6 ஆப் 2004)-ல் இதற்கு வழி செய்யப்பட்டது.
குடியுரிமை விதிமுறை 2003
குடியுரிமை விதிமுறை 2003, வாஜ்பாய் அரசால் 03-12-2003
கொண்டுவரப்பட்டது. இந்த விதிமுறையின் பெயரே, குடிமக்கள்
(குடியுரிமை பதிவுசெய்தல் மற்றும் தேசிய அடையாள அட்டை
வழங்கல்) விதிமுறை 2003. இந்த குடியுரிமை விதிமுறைதான், தேசிய
குடிமக்கள் பதிவேடு என்.ஆர்.சி., மற்றும் தேசிய மக்கள் தொகை
பதிவேடு என்.பி.ஆர். பற்றி விவரிக்கிறது.
தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி)
தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது, இந்தியாவிலும்,
வெளிநாட்டிலும் வாழும் இந்திய குடிமக்கள் பற்றிய விவரம்
அடங்கிய பதிவேடு என்கிறது.
மக்கள் பதிவேடு
மக்கள் பதிவேடு என்பது, இந்தியாவில், கிராமத்தில்,
கிராமப்பகுதியில், நகரத்தில், நகர்புறத்தில், சாதாரணமாக வசிக்கக்
கூடிய ஒவ்வொரு நபரை பற்றிய விவரம் அடங்கிய பதிவேடு
என்கிறது. அதாவது, அந்த நபர் இந்திய குடிமகனாக இருந்தாலும்
இல்லாவிட்டாலும் தேசிய மக்கள் பதிவேடு என்பதில் பதிவு
செய்யப்பட வேண்டும்.
விதிமுறை 3
பிறப்பு இறப்பு பதிவு 1969-ம் சட்டத்தில், பதிவாளர் தலைவர்
என்று யாரை குறிப்பிட்டுள்ளதோ அவர் குடிமக்கள் பதிவு
பதிவாளர் தலைவராக இருப்பார் என்றும், அவர் தேசிய
குடிமக்கள் பதிவேட்டினை ஏற்படுத்தி, பராமரிப்பார் என்றும்,
அவை தேசிய பதிவேடு, மாநில பதிவேடு, மாவட்ட பதிவேடு,
துணைமாவட்ட பதிவேடு, லோக்கல் பதிவேடு ஆகும் என்றும்
கூறப்பட்டுள்ளது. அந்த பதிவேட்டில் 12 விவரங்கள் இருக்கும்
என்றும் கூறப்பட்டுள்ளது.
உட்பிரிவு 4-ல் மத்திய அரசு, அந்தந்த பகுதியில் சாதாரணமாக
வசிக்கக்கூடிய ஒவ்வொரு நபரை பற்றிய மக்கள் பதிவேடு தயாரிக்க
ஒருநாள் குறித்து உத்தரவிட வேண்டும் என்று கூறுகிறது.
விதிமுறை 4
பிரிவு -4, தேசிய குடிமக்கள் பதிவேடு தயார் செய்யும் முறை
பற்றி கூறுகிறது. உட்பிரிவு 1 வீடு வீடாக சென்று, ஒவ்வொரு
குடும்பம், தனி நபர் பற்றிய தனிப்பட்ட விவரங்களுடன், அவர்கள்
குடியுரிமை நிலை பற்றிய விவரங்களும் சேகரிக்க வேண்டும் என்று
கூறுகிறது. உட்பிரிவு 3 இல், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி)
தயார் செய்ய மக்கள் பதிவேட்டில் (என்.ஆர்.பி) பதிவு செய்துள்ள
விவரங்கள், சரிபார்க்கப்பட வேண்டும் என்கிறது. எனவேதான்
மக்கள் பதிவேடு என்பது தேசிய குடிமக்கள் பதிவேடு தயார் செய்ய
முதல்படி என்றாகிறது.
உட்பிரிவு - 4 இல் அவ்வாறு சரிபார்க்கும் போது, எந்த
நபருடைய குடியுரிமை சந்தேகத்திற்குரியதாக இருக்கிறதோ
அதனை மக்கள் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று
குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது என்.ஆர்.சி. தயார் செய்ய,
எந்த நபருடைய குடியுரிமை சந்தேகத்திற்குரியதாக இருக்கிறதோ
அதனை என்.பி.ஆர்.யிலேயே குறிப்பிட வேண்டும் என்பதுதான்
இதன் பொருள். அந்த நபரின் பெயர் என்.ஆர்.சி.யில் சேர்த்துக்
கொள்ளப்படாது. பிறகு அந்த நபர் 2003 விதிமுறைகளில்
சொல்லப்பட்டுள்ள மற்ற உட்பிரிவுகளில் கண்டுள்ளபடி தன்
குடியுரிமைய நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபித்து வந்தால்தான்
அவர் பெயர் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்கப்படும்.
இல்லையெனில் அவர் சட்டவிரோத குடியேறியாக கருதப்படுவார்.
இந்த விதி சாதி, மதம் வேறுபாடு இல்லாமல் எல்லோருக்குமே இது
பொருந்தும்.
எனவேதான், தேசிய மக்கள் தொகை பதிவேடு, அதன்
அடிப்படையில் தயாரிக்கப்படும தேசிய குடிமக்கள் பதிவேடு,
குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று
தொடர்புடையவை.
குடியுரிமை (திருத்தம்) 2003 (ஆக்ட் 6 ஆப் 2004) பல நல்ல
அம்சங்களை கொண்டிருந்தாலும், பிரிவு 2-ல் யார் சட்ட
விரோத குடியேறி என்ற திருத்தமும், பிரிவு -14 (ஆ) அறிமுகமும்,
பங்களாதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை,
கண்டுபிடித்து வெளியேற்றுவது முக்கிய நோக்கம் அவர்களை
வெளியேற்றுவதற்காக கொண்டு வரப்பட்டது.
2003-ம் ஆம் ஆண்டே இந்த இரண்டு அம்சங்களும்
நடைமுறைக்கு வந்துவிட்டாலும், அசாமில் இந்த அயல்நாட்டினர்
பிரச்சினை அப்படியேதான் இருந்தது. இறுதியாக, என்ஆர்.சி.யை
நடைமுறைப்படுத்த, மூன்று கோடி இருபது லட்சம் மக்களில், 19
லட்சம் பேர்தான் அயல்நாட்டினர் என்று அறியப்பட்டது. அதில்
அதிகமாக இந்துக்கள் இருந்ததால், முஸ்லிம் அல்லாத மற்றவர்
சட்டவிரோத குடியேறியில்லை என்று பிரிவு 2-ல் ஒரு திருத்தமும்,
அவர்கள் குடிமக்களாக அங்கீகரிக்க, பிரிவு 6 பி என்ற திருத்தமும்
கொண்டுவரப்பட்டு சி.ஏ.ஏ. என்று வந்துள்ளது.
தற்போது, என்.பி.ஆர். அதனை அடுத்த என்.ஆர்.சி., நாடு
முழுவதும் அமல்படுத்தப்படும் பட்சத்தில், 135 கோடி மக்களும்
இந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
ஏன் "சி.ஏ.ஏ." எதிர்க்கப்படுகிறது?
ஒரு குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் பிரித்து வைப்பது
அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என்பதும், தற்போதைய
அரசு, மதச்சார்பற்ற நாட்டை, மதத்தின் அடிப்படையில் பிரிக்க
பார்க்கிறது என்ற ஆதார பூர்வமான குற்றச்சாட்டு ஒரு காரணம்.
என்.பி.ஆர். என்ற பெயரில், என்.ஆர்.சியை அமல்படுத்தினால்,
மேலே சொன்னது போல், சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு சமூ
கத்தினரை அல்லது தங்கள் சித்தாங்களுக்கு உடன்படாதவர்களை
என்.ஆர்.சி.யில் சேர்க்காமல் விட்டுவிட்டால், திருத்தப்பட்ட
சி.ஏ.ஏ.படி அரசு நடவடிக்கை எடுக்கலாம்.
ஏன் என்.பி.ஆர் எதிர்க்கப்படுகிறது?
உண்மையில் என்.பி.ஆர். எதிர்க்கப்படவில்லை. என்.பி.ஆர்.
2020-2021 இன் தற்போதைய வடிவம் மற்றும் அதன் நோக்கம் தான்
எதிர்க்கப்படுகிறது.
காரணங்கள்:
1. 2011-ம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட என்.பி.ஆர். படிவம்
பயன்படுத்தப்படாமல், புதிய படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது முழுக்க முழுக்க என்.ஆர்.சி. தயார் செய்யவேண்டிய
விவரங்களை உள்ளிடக்கியது.
2. 2020 படிவம், பெயர், பிறந்ததேதி, பெற்றோர் பிறந்த இடம்,
அவர்கள் பிறந்ததேதி ஆகியவற்றை கேட்பதோடல்லாமல்,
அதற்கான ஆவணச் சான்றுகளையும் சரிபார்க்கச் சொல்கிறது.
3. பிறப்புச்சான்று, பள்ளிச்சான்று, குடும்ப அட்டை, ஆதார்

அட்டை, வாகன ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் அட்டை
ஆகிய சான்றுகளை கணக்கெடுப்பின்போது வைத்திருந்து
சரிபார்க்க கொடுக்க வேண்டும் என்கிறது.
4. விவரங்களை குடும்பத் தலைவர் கொடுக்க வேண்டும்.
மறுத்தால் கிரிமினல் குற்றம் என்கிறது.
5. 2003 விதிமுறைப்படி, என்.பி.ஆர்தான் என்.ஆர்.சிக்கு
அடிப்படை ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படும்.
6. 2003 விதி 4 என்.ஆர்.சி எப்படி தயார் செய்வது என்று
கூறுகிறது. உட்பிரிவு 3 என்.பி.ஆர்., என்.ஆர்.சிக்கு அடிப்படை
ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.
உட்பிரிவு 4 ஒரு நபர் மீது அதிகாரி சந்தேகப்பட்டால், அவருடைய
குடியுரிமை சந்தேகத்திற்குரியது என்று, என்.பி.ஆர்.இல் குறிப்பிட
வேண்டும் என்று கூறுகிறது.
7. ஒரு அதிகாரி யாரைவேண்டுமானாலும் சந்தேகப்படலாம்.
அப்படி சந்தேகத்திற்கு ஆளானநபர் பிறகு தன் குடியுரிமையை
நிரூபிக்க வேண்டும்.
8. என்.பி.ஆர். என்பது அடிப்படையில், மக்கள் கணக்கெடுப்பு
போல், குடிமக்களோ இல்லையோ, இந்திய எல்லையில் குடியிருக்கும்
ஒவ்வொரு மனிதனைப் பற்றிய விவரங்களை சேகரிக்கும் பணி.
அதனால்தான், 2011 என்.பி.ஆர். ஆவணங்கள் அடிப்படையில்
இல்லாமல் பதிவு செய்யப்பட்டது.
9. சுமார் ஏழரை கோடி தமிழக மக்களில், ஏறத்தாழ 50
சதவீத மக்கள் வறுமையிலும், வறுமைக்கோட்டுக்குக் கீழாகவும்
இருப்பவர்கள். இவர்களுக்கு இருப்பிடமும் இல்லை, இவர்களிடம்
பெரும்பாலும் தேவையான ஆவணங்களும் இல்லை.
10. மத்தியஅரசின் திட்டம் சிறுபான்மை இனத்தவர்களுக்கும்
மற்றும் தலித் மக்களுக்கும் மட்டும் அல்லாமல், தமிழர்கள்
அனைவருக்கும் எதிரானது, பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது.
11. ஏனெனில் யாரை வேண்டுமானாலும், பட்டியலில்
இணைக்கலாம் அல்லது நீக்கலாம்.
12. பட்டியல் தயாரிப்பை, தனியாரிடம் ஒப்படைக்க திட்டமும்
உள்ளது

2011 தேசிய மக்கள் பதிவேடு மற்றும் 2020 தேசிய மக்கள்பதிவேடு ஒரு ஒப்பீடு
1. இரண்டும் இந்தியாவில், கிராமத்தில், கிராமப்பகுதியில்,நகரத்தில், நகர்புறத்தில், சாதாரணமாக வசிக்கக்கூடிய ஒவ்வொருநபரை பற்றிய விவரம் அடங்கிய பதிவேடு என்கின்றன. அதாவது,அந்த நபர் இந்திய குடிமகனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும்தேசிய மக்கள் பதிவேடு என்பதில் பதிவு செய்யப்பட வேண்டும்.
2. 2011 பயன்படுத்தப்பட்ட படிவம் அடிப்படை விவரங்களைசேகரித்தது. ஆவணங்கள் சரிபார்க்க கேட்க வேண்டாம் என்றுவிவர சேகரிப்பாளருக்கு அறிவுறுத்தியது.
3. குடிமக்களோ இல்லையோ, ஒருவரையும் விட்டுப்போகாமல்தகவல் சேகரிக்க சொன்னது. அதன் அடிப்படையில்தான்ஆதார் அட்டை வழங்கப்பட்டது. அந்த பதிவு குடிமக்களைஅச்சுறுத்தவில்லை. விடுதல் இல்லாமல் அனைவரையும் சேர்த்துஆவணமாக்கியது.
கவனிக்க: குடியுரிமை (திருத்தம்) 2003 (ஆக்ட் 6 ஆப் 2004) பிரிவு14-(ஆ)தேசிய அட்டை வழங்கல் குறித்து கூறுகிறது. 2003 குடியுரிமைவிதிமுறையின் பெயரே. குடிமக்கள் (குடியுரிமை பதிவு செய்தல்)மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கல்) தேசிய அடையாளஅட்டைக்கு பதிலாக ஆதார் அட்டை வழங்கப்பட்டது.
4. 2020-ல் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்,என்.ஆர்.சி. என்ற தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க தேவையானவிவரங்களை சேகரிக்க அறிவுறுத்துகிறது.
5. கூடுதல் விவரங்களாக, பெற்றோர் பிறந்த இடம், பிறந்த தேதிஆகியவற்றையும், ஆவணங்களை பற்றியும் பதிவு செய்ய வேண்டும்.குறிப்பாக ஆதார் எண் பதிவு செய்யவேண்டும்.
6. 2011 என்.பி.ஆரில், விவரம் பதிவு செய்யப்பட்டதற்கானஒப்புகைச்சீட்டு கொடுக்கப்பட்டது. ஆனால் 2020 படிவத்தில் அதுஇல்லை. விவர சேகரிப்பாளர் படிவத்தில், அல்லது மொபைல்ஸ்க்ரீனில் சம்பந்தப்பட்ட நபரிடம் கையெழுத்து பெறவேண்டும்என்றுள்ளது.
2020 என்.பி.ஆரில் சரிபார்க்கப்பட வேண்டிய ஆவணங்களாககுறிப்பிடப்படும் ஆவணங்கள்:
1. பிறப்புச் சான்றுகள்
2. பள்ளி இறுதி வகுப்பு சான்றுகள்
3. குடும்ப அட்டை
4. வாக்குச்சீட்டு
5. பாஸ்போர்ட்
6. ஓட்டுனர் உரிமம்
7. பான் கார்டு
8. ஆதார் அட்டை
இவை எல்லோரிடமும் இருப்பதற்கான இருக்க வாய்ப்பில்லை.
இந்த ஆவணங்களில் ஏதாவது சந்தேகம் எழுந்தால் என்றால்பிறகு இதர ஆவணங்களை கொண்டு குடிமகன் என்ற அந்தஸ்தைவிதிமுறைகளின்படி நிரூபிக்க வேண்டும்.
என்.பி.ஆர். 2020 புதிய படிவம், 2011இல் இல்லாத புதியகேள்விகள் அதன் உள்அர்த்தம்
கேள்விகள்:
13. (i) தந்தை, தாய், கணவர், மனைவி பெயர்கள், உயிருடன்
இருக்கிறார் அல்லது உயிருடன் இல்லை, பிறந்த தேதி.
13. (ii) தாய்/தந்தை பிறந்த இடம் இந்திய எல்லைக்குள் என்றால்
எந்த மாநிலம், இந்தியாவுக்கு வெளியே என்றால் எந்த நாடு.
இந்த விவரங்கள் இருந்தால் ஒரு நபருடைய வம்சா வழி
குடியுரிமையை அறிந்து கொள்ளலாம்.
ஆவணக் கண்ணோட்டத்தில் 2020 படிவம்
குடியுரிமையை நிரூபிக்க ஆவணங்கள் இருக்கிறதா என்ற
கேள்வியை 2020-இல் வர இருக்கும் தேசிய மக்கள் பதிவேடுபடிவங்கள் எழுப்புகின்றன.
ஏற்கனவே குறிப்பிட்டது போல் 1969 பிறப்பு இறப்பு பதிவுசட்டத்திற்கு பிறகு பிறப்பு கட்டாயமாக பதிவு செய்யப்படவேண்டும்.
உங்கள் பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றுகள் உள்ளன. ஆனால்,உங்களுக்கு பிறப்புச்சான்று இல்லை. உங்கள் பெற்றோருக்கும்இல்லை என்றால் உங்களுடைய பெற்றோர், 1947க்கு முன்பாகஇந்தியாவில் பிறந்து 26-01-1950 அன்று இந்தியாவை தன்வாழ்விடமாக கொண்டவர்கள் என்றும், நீங்கள் 26-01-1950க்குபிறகு இந்தியாவில் பிறந்தவர் என்றும் நிரூபிக்க வேண்டும். இதைகண்டறிய மேலே கண்ட தாய்/தந்தை, கணவன்/மனைவி பிறந்த
தேதி மற்றும் பிறந்த இடம் குறித்த கேள்விகள், இதற்கு சான்றுகள்கேட்டு அது இல்லாமல் போனால் உங்கள் குடியுரிமையும்கேள்விக்குறி, பிறப்புச்சான்று இருந்தும் உங்கள் பிள்ளைகள்குடியுரிமையும் கேள்விக்குறியாகின்றது. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, பிறப்புரிமை வழி குடியுரிமை தற்போது வம்சாவழியுரிமைகுடியுரிமை ஆகிவிட்டது. அதனால்தான் தற்போதைய என்.பி.ஆர்.2020, என்.ஆர்.சி.யின் முன்வடிவு.
எழுப்பப்படும் கேள்விகள்:
1. எழுபது ஆண்டுகளாக தேவைப்படாத பதிவேடுகள்
இப்போது தேவையா?
2. மக்களை அச்சத்தில் வைத்திருப்பதுதான் ஆட்சியாளர்களின்
சித்தாந்தமா?
3. தற்போதைய தேசிய மக்கள் பதிவேடு, அதன் அடிப்படையில்
தயாரிக்கப்படக்கூடிய தேசிய குடிமக்கள் பதிவேடு இரண்டும்
ஒன்றே. அது வேறு இது வேறு என்பது மக்களை ஏமாற்றும்மாபெரும் பொய். ஏன் இந்த பொய்?
4. 2019 குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்புச்சட்டத்திற்கு விரோதமானது என்ற நிலையில் ஏன் ஒரு சமூ
கத்தினரை ஒதுக்க வேண்டும்.
5. தமிழகத்தில் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் நிலைஎன்ன?
6. ஏற்கனவே ஏழ்மையில் வாடிக்கொண்டிருக்கும் மக்களை,
நிரந்தர குடியிருப்புகூட இல்லாத எளியவர்களை ஏன் துன்புறுத்த
வேண்டும்?

7. கோடியில் புரளும்
அதீத பணக்காரர்கள்,
பணக்காரர்கள், ஓரளவு
படித்த நடுத்தர குடும்பத்தினர்,
அதிகாரிகள், அரசியல்வாதிகள்
என்று 35 சதவீதம் முதல்
40 சதவீதம் இந்திய மக்கள்
மட்டுமே ஆவணங்கள்
வைத்திருக்க வாய்ப்புள்ள
நிலையில், வறுமையிலும்,
வறுமைக் கோட்டிற்குக்
கீழாகவும் உள்ள மக்கள்
ஆவணங்களின்றி அலைய
வேண்டுமா?
8. அரசுக்கு சுமார் 15 கோடி இந்திய முஸ்லிம்கள் மீது
காழ்ப்புணர்ச்சி என்றால் ஏன் 120 கோடி மக்களை அக்னி
பரீட்சையில் இறக்க வேண்டும்?
9. சப் கா சாத், சப் கா விகாஸ், சப் கா விஸ்வாஸ் (எல்லோரும்
ஒன்றாக, எல்லோருக்குமாக, எல்லோருடைய நம்பிக்கையுடன்)
என்பது இதுதானா?
எழும் கோரிக்கைகள்:
மத்திய அரசு
1. 2019 குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும்.
2. தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தும் திட்டத்தை
கைவிட வேண்டும்.
3. அதற்கு முன்னோடியான தேசிய மக்கள் பதிவேடு
அமல்படுத்தும் திட்டத்தையும் கைவிட வேண்டும்.
4. இந்திய மக்களை அமைதியாக வாழவிடவேண்டும்.
சந்தேகங்கள் மற்றும் அடிக்கடி எழும் கேள்விகள்(குஹணு):
கேள்வி: என்.பி.ஆர்.-ஐ புறக்கணிக்குமாறு அதாவது சிவில்
டிஸொபிடியன்ஸ் செய்ய சொல்கிறார்களே என்ன செய்வது?
பதில்: என்பி.ஆர்.-ஐ அமல்படுத்தமாட்டோம் என்று பல
மாநிலங்கள் கூறியுள்ளன. மாநிலங்களில் அரசு அதிகாரிகளை
வைத்துத்தான் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மத்திய அரசு
பதிவு செய்வதை தனியார் வசம் ஒப்படைக்க வாய்ப்புள்ளது.
ஒத்துழையாமை செய்தால், ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டும் தனித்து
விடப்படக்கூடிய ஆபத்து உள்ளது. மாநில அளவில், தேசிய
அளவில் அனைவரும் ஒத்துழையாமை செய்தால் மத்திய அரசு தன்
கொள்கையை மாற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது.
2003 விதிகளில் குடும்பத்தலைவர் விவரங்களை தரவேண்டும்
என்றுள்ளது. விதிகளின்படி நடக்காவிட்டால் குற்றம் என்றும்,
அதற்கான தண்டனையும் சொல்லப்பட்டுள்ளது.
ஆவணங்களை காட்ட வேண்டிய அவசியமில்லை என்றும்,
2021 என்.பி.ஆர். கேட்கப்பட்டுள்ள கூடுதல் விவரங்களை கொடுக்க
வேண்டிய அவசியமில்லை என்றும் அரசு ஆதாரப்பூர்வமாக
அறிக்கை வெளியிட்டால் சாதி, மத பேதமில்லாமல் தமிழக
மக்கள் அனைவர் விவரங்களும், ஒருவர்கூட விடுபடாமல் பதிவு
செய்யப்படவேண்டும்.
கேள்வி 2: கேட்கப்படக்கூடிய ஆவணங்கள் யாவை?
1. பிறப்புச் சான்றுகள்
2. பள்ளி இறுதி வகுப்பு சான்றுகள்
3. குடும்ப அட்டை
4. வாக்குச்சீட்டு
5. பாஸ்போர்ட்
6. ஓட்டுனர் உரிமம்
7. பான் கார்டு
8. ஆதார் அட்டை
கேள்வி 3: ஆவணங்கள் இல்லை என்றால் என்ன செய்வது?
பதில்: மேலே குறிப்பிட்ட ஆவணங்களை வைத்திருப்பது
நல்லது. இல்லாவிட்டால் தயார் செய்து கொள்வது நல்லது.
ஆவணங்கள் இல்லாதவர் நீங்கள் மட்டும் இல்லை, சமுதாயத்தினர்
பலரிடமும் ஆவணங்கள் இருப்பதற்கான வாய்ப்பில்லை.
சமீபத்தில் டெல்லியில் நடந்த உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில்
ஆவணங்களைக் காட்ட வேண்டிய அவசியமில்லை என்று
கூறப்பட்டது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிக்கை இல்லை.
கேள்வி: பதிவேடு தயார் செய்ய வரும் அரசு அதிகாரிகளிடம்,
இங்கு வராதீர்கள் ஜமாஅத்திடம் போய் கேட்டுக் கொள்ளுங்கள்
என்று சொல்லலாமா?
பதில்: ஜமாஅத் தலைவர்கள் உங்கள் நலனுக்காக
போராடுபவர்கள். ஒட்டுமொத்த சமுதாயம் என்ன முடிவெடுக்குமோ
அதனை செயல்படுத்துவார்கள். ஒத்துழையாமை என்பது
குறித்து ஏற்கனவே கேள்வி ஒன்றில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
பதிவேடு தயார் செய்ய வரும் அரசு அதிகாரிகள் வீடு வீடாக
சென்று விவரங்களை திரட்ட வேண்டும். அவர்களை தடுப்பது
அவமரியாதை செய்வது என்பது குற்றமாகிவிடும். நீங்கள்
விவரங்கள் கொடுத்தால் பதிவு செய்வார்கள். இல்லாவிட்டால்
சென்று விடுவார்கள்.
2020 வழிகாட்டு நெறிமுறையில் அரசு விவர சேகரிப்பாளர்களை,
அரசு அதிகாரிகள் படிப்படியாக செய்ய வேண்டிய செயல்முறைகள்
என்ன?
1. மத்திய அரசு என்.பி.ஆர்.-2020-2021-ஐ மேம்படுத்த இருப்பதை
கெஜட் அறிக்கையாக வெளியிட வேண்டும். அரசு அதனை 31-072019
தேதியிட்ட அரசாணை மூலம் அறிவித்துவிட்டது.
2.
விவர சேகரிப்பாளர்களையும், அதிகாரிகளையும் நியமனம்

செய்ய
வேண்டும். மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், தாசில்தார்,

பள்ளி
ஆசிரியர்கள், கார்ப்பெரேசன் அதிகாரிகள், அலுவலர்கள்

இந்த
வேலைகளை பார்ப்பார்கள். விவர சேகரிப்பாளர்கள் அரசு

அலுவலர்களாகத்தான்
இருப்பார்கள்.
3,
வீடு வீடாக சென்று விவரம் சரிபார்க்க சேகரிக்க வேண்டும்

என்பதால்,
வீடுகள் தொகுப்பு விவரம் செய்ய வேண்டும்.

உதாரணமாக,
வார்டுகள், தெருக்கள், வீடுகள் என்று பிரித்து, ஒரு

விவர
சேகரிப்பாளருக்கு இத்தனை வார்டு, தெரு, வீடுகள் என்று

பிரித்து
கொடுக்கப்படும்.
34.
மாநில நிலை, மாவட்ட நிலை, தாலுகா நிலை, கிராம நிலை,

வார்டு
நிலை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, ஏற்கனவே

2011-இல்
எடுக்கப்பட்ட பதிவு புத்தகம் கொடுக்கப்படும். இதனை

இவர்கள்
தங்கள் ஆன்ட்ராயிட் மொபைல் போனிலும் பதிவிறக்கம்

செய்து கொள்ளலாம்.
5. வழிகாட்டு நெறிமுறை 1.17-ன் படி விவர சேகரிப்பாளர், வீடு
வீடாகச் சென்று, ஏற்கனவே உள்ள விவரங்களை சரிபார்க்க
வேண்டும். புதிதாக கோரப்பட்டுள்ளது விவரங்களையும், வாக்காளர்
அட்டை எண், ஆதார் எண், கைபேசி எண், பாஸ்போர்ட் எண்,
ஓட்டுனர் உரிம எண், பான் அட்டை எண் ஆகியவற்றை சேகரித்து
குறிக்க வேண்டும்.
6. வழிகாட்டு நெறிமுறை பிரிவு 2-1-ன் படி, விவர சேகரிப்பாளர்
தன் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். அவர் தன்
வேலையை ஆரம்பிப்பதற்கு முன்பாக, தனக்கு ஒதுக்கப்பட்ட
பகுதிக்குச் சென்று, தன்னை அறிமுகம் செய்துகொண்டு பகுதியின்
முக்கிய பிரமுகர்கள், ஊர் தலைவர்கள், பஞ்சாயத்து உறுப்பினர்,
பஞ்சாயத்து தலைவர் ஆகியோரை சந்தித்து தனக்கிடப்பட்ட
பணியை விளக்க வேண்டும்.
7. மாவட்ட ஆட்சியர், மாவட்ட பதிவாளர், வழிகாட்டு
நெறிமுறை 2.2.2-ன் படி தகவல் சேகரிப்பு பற்றி விரிவாக விளம்பரம்
செய்ய வேண்டும். அவருக்கு அடுத்த அதிகாரி, 2.23-ன் படி மக்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்த விளம்பரம் செய்ய வேண்டும். குறிப்பாக
மேலே கண்ட ஆவணங்களின் எண்களை தயார் நிலையில்
வைத்திருக்க விளம்பரம் செய்ய வேண்டும்.
8. என்.பி.ஆர். 2020 மேம்படுத்தல் என்றால், ஏற்கனவே 2011-
இல் சேகரிக்கப்பட்ட தகவல்கள், விவர சேகரிப்பாளரிடம்
புத்தகமாகவோ, ஆன்ட்ராய்ட் பதிவிறக்கமாகவே இருக்கும்.
உதாரணமாக அவர் கதவிலக்கம் 32, மூன்றாம் குறுக்குத் தெரு
10வது வார்டுக்கு செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
அவர் அந்த வீட்டை அடைந்ததும், வீடு திறந்திருந்து, குடும்பத்
தலைவர் இருந்தால், தன்னிடம் ஏற்கனவே உள்ள பதிவேட்டில்
உள்ள விவரங்கள் சரிதானா என்றும், அதில் கண்டுள்ள நபர்கள்
இருக்கிறார்களா என்றும் சரிபார்த்து, பெயர், பிறந்த தேதிகளை,
ஆவணங்கள்அடிப்படையில் சரிபார்ப்பார். புதிதாக யாரையும்
சேர்க்க வேண்டும் என்றாலோ, இறந்தவர் பெயரை நீக்க வேண்டும்
என்றாலோ அதன்படி சரி செய்வார்.
9. வீடு பூட்டி இருந்தால் அல்லது அங்கிருந்தவர்கள் புலம்
பெயர்ந்து விட்டார்கள் என்றால் அவ்வாறே குறித்துக் கொள்வார்.
10. 2011என்.பி.ஆர். படிவத்தில் இல்லாத 2020 படிவத்தில் உள்ள
கூடுதல் விவரங்களை குறிப்பாக மேலே சொன்ன ஆவணங்கள்
சரிபார்த்தால், ஆதார் எண் போன்றவற்றை குறித்தல் ஆகியவற்றை
புதிய படிவத்தில் குறித்துக் கொள்வார்.
11. நீங்கள் 2011-இல் ஒரு வீட்டில் இருந்து விட்டு, 2020-இல்
வேறொரு ஊரில், வேறு வீட்டில் வசிப்பவராக இருந்தால், பழைய
வீட்டு விவரம், "புலம் பெயர்ந்து விட்டார்கள்" என்று அந்த பகுதி
அலுவலரால் குறிக்கப்படும். புதிய முகவரியில் புதிய படிவத்தில்
அந்த பகுதி அலுவலர் அனைத்து விவரங்களையும் குறிக்க
வேண்டும். ஏற்கனவே உள்ள தகவல் என்ன ஆகும் என்பது குறித்து
வழிகாட்டு நெறிமுறையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
12. விவர சேகரிப்பாளர் ஒரு வீடு கூட விடுபடாமல் விவரம்
சேகரிக்க வேண்டும். வீடு பூட்டியிருந்தால் மீண்டும் சென்று விவரம்
சேகரிக்க வேண்டும் என்றுள்ளது.
2020 என்.பி.ஆர். படிவத்தில் கேட்கப்போகும் விவரங்களில்
விவரங்கள்: கேள்விகள்
1. பெயர் 2. குடும்பத்தலைவருடனான உறவு
3. பாலினம் (ஆண்/பெண்/மூன்றாம் இனம்)
4. திருமணம் ஆனவரா/இல்லையா
5. பிறந்த தேதி (ஆங்கில வருடத்தில்)
6. பிறந்த இடம் இந்திய எல்லைக்குள் என்றால் எந்த மாநிலம்.
இந்தியாவுக்கு வெளியே என்றால் எந்த நாடு (2011இல்) இல்லாத
புதிய கேள்வி)
7. சூயவiடியேடவைல யள னநஉடயசநன எந்த தேசத்தவர் (அந்த நபர் சொன்னவாறு)
8. கல்வித்தகுதி 9. செய்யும் வேலை /அலுவல்
10. தாய்மொழி 11. நிரந்தர முகவரி
12. தற்போது குடியிருக்கும் வீட்டில் பிறந்தது முதல் வசிப்பவரா
அல்லது எவ்வளவு காலமாக வசிக்கிறார்.
(2011 இல் இல்லாத புதிய கேள்விகள்)
13. (i) தந்தை, தாய், கணவர், மனைவி பெயர்கள் உயிருடன்
இருக்கிறார் அல்லது உயிருடன் இல்லை, பிறந்த தேதி.
13. (iஐ) தாய்/தந்தை பிறந்த இடம் இந்திய எல்லைக்குள் என்றால்
எந்த மாநிலம், இந்தியாவுக்கு வெளியே என்றால் எந்த நாடு.
14. ஆதார் எண், கைபேசி எண், வாக்காளர் அட்டை எண்,
ஓட்டுனர் உரிமம் எண்.
பின் குறிப்பு: எந்த தேசத்தவர் என்பது அந்த நபர் சொன்னவாறு
குறிக்கப்படுகிறது. எனவே, அது இந்திய குடிமக்கள் என்ற
உரிமையைத் தராது.
குடும்பத் தலைவர் தான் சொல்லிய விவரங்கள் உண்மை என்று
பிரகடனம் செய்து கையொப்பம் செய்ய வேண்டும்.
மேலே கண்டுள்ள கேள்விகள் 6,13,14 என்.பி.ஆர் 2020இல்
புதிதாய் சேர்க்கப்பட்டுள்ளவை.
2020 புதிய படிவ நகல் இணைக்கப்பட்டுள்ளது.
பயப்படாதீர்கள்! பயப்படாதீர்கள்! பயப்படாதீர்கள்!
சி.ஏ.ஏ. தேவையில்லை! என்.ஆர்.சி. தேவையில்லை!
என்.பி.ஆர். தேவையில்லை என்பது சரிதான். அதனை அமைதி
மற்றும் அறவழியில் ஆட்சியாளருக்கு சொல்வது ஜனநாயக உரிமை.
ஆனால் அச்சம் தேவையில்லை.
அச்சமில்லை! அச்சமில்லை!
அச்சமென்பதில்லையே! உச்சி மீது வானிடிந்து
வீழுகின்ற போதிலும் அச்சமென்பதில்லையே!

உ.பி.யில் 14 வயது பள்ளி சிறுவனுக்கு இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இந்த வீடியோ

உ.பி.யில் 14 வயது பள்ளி சிறுவனுக்கு இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இந்த வீடியோவை சர்வதேச சமூகத்திற்கு பரப்புங்கள்👇

Monday, 27 January 2020

பாஜாக வினால் தேசிய கொடிக்கு அவமானம்

பாஜக வினால் இந்திய தேசிய கொடிக்கு அவமானம்

இந்திய தேசியகொடியை எப்படி கையாலவேண்டும் என்பதே தெரியவில்லை

இவர்களின் நாட்டுபற்று

உன்மையில் பாஜக ுள்ளவரகளுக்கு தேசபற்று எல்லாம் இல்லை என்பது உறுதியாகிறது

தயவுசெய்து பாஜக நிர்வாகிகளுக்கு இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டம் என்றால் என்ன, இந்தியாவின் சட்ட திட்டங்கள் , இந்தியாவின் சமத்துவம் போன்றவற்றை கற்றுகொள்ளுங்கள்

அலச்சியம் காட்டாமல் இந்துக்களே கேட்கவும்

👆முக்கிய செய்தி அலச்சியம் காட்டாமல் முஸ்லீம்கள் கேட்கவும்

அத்வானிக்கு அகதிகள் முகாம் பாஜாக சூழ்ச்சி

வாழ்க்கையே வணக்கம் தான்!?*

*வாழ்க்கையே வணக்கம் தான்!?*

நம்மில் அனேகமானவர்களின் எண்ணங்களில் வெறும்
தொழுகை,
நோன்பு,
ஜகாத்,
ஹஜ்
போன்றவை மட்டுமே வணக்கம் என்பதான ஒரு பிம்பம் தோன்றும்.

கூடவே *இவற்றை மட்டும் செய்வதற்காகவா நம்மை அல்லாஹ் படைத்தான்?*
என்ற சந்தேகமும் எழும்.

உண்மையில் 24 மணி நேரத்தில் 5% மட்டுமே தொழுகைக்காக ஒதுக்கப்படுகிறது.
எனில் மீதி நேரம்..?

வருடத்தின் மாதங்களைக் கணக்கிட்டால் 8.5% மட்டுமே நோன்புக்காக ஒதுக்கப்படுகிறது.
எனில் மீதி நேரம்...?

ஜகாத் என்பதோ வருடத்தில் ஒருமுறை மட்டுமே.
எனில் மீதி நேரம்..?

ஹஜ் என்பது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே.
எனில் மீதி நேரம்..?

*எனவே வணக்கம் என்பது வெறும் தொழுகையும் நோன்பும் மட்டுமல்ல...*

மாறாக....

ஓர் ஏழைக்கு உணவளிக்கும்போது,
*நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...*

மத வேறுபாடு பார்க்காமல் மனிதனின் கண்ணீர் துடைக்கும்போது,
*நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...*

அமானிதம் பேணி அடுத்தவர் உரிமையில் கை வைக்காமல் இருக்கும்போது,
*நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...*

உன் நாவால் பிறரை மன வேதனைக்கு உள்ளாக்காமல் இருக்கும்போது,
*நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...*

மலர்ந்த முகத்துடன் மக்களைச் சந்திக்கும்போது,
*நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...*

கோபத்தையும் ஆத்திரத்தையும் அடக்கும்போது,
*நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...*

லஞ்சம் வாங்க மறுக்கும் லட்சியவாதியாக மாறும்போது,
*நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...*

உண்மையை உரக்கச் சொல்லும்போது,
*நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...*

வியாபாரத்தில், கொடுக்கல் வாங்கலின்போது விட்டுக்கொடுக்கும் மனோபாவத்துடன் நேர்மையாக நடந்துகொள்ளும்போது,
*நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...*

உனது வேலையில் பொறுப்புடன் நடந்துகொள்ளும்போது,
*நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...*

இஸ்லாத்தின் பார்வையில் வணக்கம் இப்படித்தான் பட்டியலிடப்படுகிறதே தவிர..
வெறும் தொழுகையும் நோன்பும் மட்டுமல்ல!

இந்த வணக்கங்கள்தான் மற்றவர்களை இஸ்லாத்தின்பால் கவர்ந்திழுக்கும்.

வெறும் பரப்புரைகளும்..
பயான்களும் மட்டும் போதாது.

அல்லாஹ் கூறுகிறான்,

"நான் ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்க வேண்டும் என்பதற்காகவேயன்றி,
வேறு எதற்கும் படைக்கவில்லை"
அல்குர்ஆன் 51:56

*ஆக நமது வாழ்க்கையை இஸ்லாமிய அடிப்படையில் வாழ்ந்து நமது முழு வாழ்க்கையையுமே வணக்கமாக ஆக்குவோமாக. ஆமீன்.*


Sent from my iPhone