Sunday, 26 January 2020

வேதங்கள் பட்டியல்

On 26 Jan 1950 Constitution of India came into force. And we became a Republic. Happy Republic Day.

On 26 Jan 1950 Constitution of India came into force.
And we became a Republic.
Happy Republic Day.

*தேவைதானா இந்தத் தலைகுனிவு இந்தியாவிற்க்கு

*தேவைதானா இந்தத் தலைகுனிவு..?*
====================

*சர்வதேச மனித உரிமை ஒப்பந்தங்களில் (UDHR, ICCPR) கையெழுத்திட்டுள்ள இந்தியா, CAA NRC NPR சட்டங்களை இங்கு அமுல்படுத்தினால் அது மேற்படி ஒப்பந்தங்களின் விதிகளை மீறியதாகக் கருதப்படும்.*

*இதனால் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவு ஏற்படும்* என்று அன்றே நாம் எச்சரித்தோம். 👇🏼

https://youtu.be/DHkkRTXfOOo

இன்று 71-வது குடியரசு தினத்தை நாம் கொண்டாடும் வேளையில், மேற்கண்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி *ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட வல்லுனர்கள் சபை, மத்திய பாஜக அரசின் CAA NRC சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளதைப் பார்க்கிறோம்..*👇🏼

_The proposed resolution not only describes the CAA as *"discriminatory and dangerously divisive"* but also a *violation of India's "international obligations" under the International Covenant on Civil and Political Rights (ICCPR) and other Human Rights treaties to which New Delhi is a signatory.*_

https://www.nationalheraldindia.com/india/154-european-union-lawmakers-draft-stunning-anti-caa-resolution

மக்கள் விரோத கருப்புச் சட்டங்களால் நமது நாட்டிற்கு சர்வதேச அரங்கில் ஏற்பட்டுவரும் அழுத்தங்களை சர்வதேச ஊடகங்கள் தொடர் செய்தியாக வெளியிட்டு வருகின்றன. *தேவைதானா இந்தத் தலைகுனிவு..?* என்றே கேட்கத் தோனுகிறது.


Sent from my iPhone

Saturday, 25 January 2020

*கிராமசபைக் கூட்டம்* - கேள்வி பதில்கள்

*கிராமசபைக் கூட்டம்* - கேள்வி பதில்கள்
*1. எந்தெந்த தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் ?*
1. ஜனவரி 26 (குடியரசு தினம்)
2. மே 1 (உழைப்பாளர் தினம்)
3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்)
4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி)
*2. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில் கிராம சபை கூட்டம் நடைபெறுமா?*
ஆம். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில்தான் கிராம சபை கூட்டம் நடைபெறும்.
*3. கிராம சபை கூட்டம் எந்த இடத்தில் நடக்கும்?*
உங்கள் கிராம பஞ்சாயத்திற்கு உட்படப் பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும்.
பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, வேறு ஒரு பொது இடத்திலோ கிராம சபை கூட்டம் நடைபெறும்.
*4. கிராம சபையில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?*
கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் கிராம சபையில் கலந்துகொள்ளலாம். ஆண்கள், பெண்கள், முதியவர்கள், பட்டியல் பிரிவினர் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.
*5. கிராம சபையின் தலைவர் யார்?*
கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவர்.
தலைவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார்.
துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் கிராம சபையின் தலைவராக செயல்படலாம்.
இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார்.
*6. கிராம சபையில் குறைந்தபட்சம் எத்தனைப் பேர் கலந்துகொள்ள வேண்டும்?*
உங்கள் கிராம பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 பேர் என்றால், குறைந்தபட்சம் 50 பேர் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் கிராம சபை ஏற்றுக்கொட்டப்படும்.
அதேபோல, உங்கள் கிராமத்தின் மக்கள் தொகை 501 முதல் 3000 வரை என்றால் 100 பேர் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும்.
3001 முதல் 10,000 பேர் கொண்ட கிராமத்தில் 200 பேரும் , 10,000 க்கு மேல் மக்கள் தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை.
[அரசாணை நிலை எண் 130 ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை நாள் 25.09.2006 ]
*7. தேவையான குறைவெண் வரம்பு இல்லாதபோது கிராம சபையின் நிலை என்ன?*
அரசாணையில் குறிப்பிட்டுள்ள குறைவெண் வரம்பு இல்லாதபோது கிராம சபை கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.
*8. கிராம சபை தீர்மானம் எங்கெல்லாம் செல்லுபடி ஆகும்?*
சட்ட மன்ற நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராம சபை தீர்மானத்திற்கு உண்டு.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட தீர்மானங்களை கொண்ட எந்த ஒரு கிராம சபை தீர்மானமும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும்.
அரசு அலுவலகங்களிலும் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
*9. எந்தெந்த விசயங்களுக்காகக் கிராம சபையில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றலாம்?*
உங்கள் கிராமத்திற்கு சம்மந்தப்பட்ட எந்த ஒரு விசயத்திற்கும், தேவைக்கும் கிராம சபை தீர்மானம் நிறைவேற்றலாம்.
பக்கத்துக்குக் கிராமத்தின் பிரச்சனையைத் தீர்க்கவோ அல்லது மாநில அளவில் சில கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்றோ உங்கள் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுவது பயனளிக்காது.
உதாரணமாக, உங்கள் கிராமத்தில் இருக்கும் மதுக்கடையை மூடத் தீர்மானம் கொண்டுவரலாம்.
ஆனால், தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றுவது பயனளிக்காது.
மேலும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதாக உங்கள் கிராம சபை தீர்மானம் இருக்க வேண்டும்.
அதாவது மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம், தனி நபர் உரிமை போன்ற விசயங்களை மீறுவதாக உங்கள் கிராம சபை தீர்மானம் இருக்கக் கூடாது.
*10. தீர்மானம் இந்த வடிவில்தான் இருக்க வேண்டும் என வரைவு ஏதும் உள்ளதா?*
இல்லை. இயல்பான வாக்கியங்களைக் கொண்டே கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றலாம்.
இந்த வடிவில்தான் இருக்கவேண்டும் என எந்த நிபந்தனையும் இல்லை.
*11. மக்கள் முன்மொழியும் தீர்மானத்தை பஞ்சாயத்துத் தலைவரோ அதிகாரிகளோ நிராகரிக்க முடியுமா?*
முடியாது.
கிராம சபை மக்களுக்கான சபை. பஞ்சாயத்துத் தலைவரோ, அதிகாரிகளோ மக்களின் கோரிக்கையை நிராகரிக்க முடியாது.
கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சரி அல்லது தவறு என முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது.
*12. கிராம சபை தீர்மானத்தின் நகலைக் கிராம மக்கள் பெறமுடியுமா?அதற்குக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டுமா?*
கிராம சபை தீர்மானத்தின் நகலைக் கிராம மக்கள் நிச்சயம் பெறமுடியும்.
அதற்குக் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
*13. கிராம சபையில் எத்தனைத் தீர்மானங்கள் நிறைவேற்றலாம்?*
இத்தனை தீர்மானங்கள்தான் நிறைவேற்ற வேண்டும் என்ற வரையறை ஏதும் இல்லை. எண்ணிக்கை வரம்பு இல்லை என்ற காரணத்தால் எண்ணற்ற தீர்மானங்கள் நிறைவேற்றுவதில் பயனில்லை.
முக்கியமான மற்றும் குறிப்பிட்ட தீர்மானங்களை நிறைவேற்றி அதை நடைமுறைப்படுத்தி பயன்பெற வேண்டும்.
*14. கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப் படுத்த வேண்டிய பொறுப்பு யாருடையது?*
பஞ்சாயத்துத் தலைவர், துணைத்தலைவர் , வார்டு உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகளே கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப் படுத்த வேண்டிய பொறுப்புடையவர்கள்.
கிராம இளைஞர்கள் , தன்னார்வலர்கள் முயற்சி எடுத்து, அரசு அதிகாரிகளுக்கு மற்றும் தலைவர் உட்படப் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு நினைவூட்டல் அனுப்பி கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்தலாம்.
*15. கிராம சபை தீர்மானம் எத்தனை நாட்களுக்குச் செல்லுபடி ஆகும்?*
கிராம சபை தீர்மானம் காலாவதியே ஆகாது. ஒருமுறை சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, சூழலின் தன்மை கருதி விவாதித்து [மறுபரிசீலனை செய்தோ, மாற்றம் செய்தோ அல்லது மறுத்தோ] வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் முந்தைய தீர்மானம் செயல் இழக்கக் கூடும்
*16. சிறப்பு கிராம சபை என்றால் என்ன?*
தமிழகத்தில் நான்கு நாட்கள் கிராம சபை கூட்டம் கட்டாயம் நடைபெறும்.
1. ஜனவரி 26 (குடியரசு தினம்)
2. மே 1 (உழைப்பாளர் தினம்)
3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்)
4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி)
இந்தக் கிராம சபைகளையும் தாண்டி கூடுதலாகக் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மக்கள் நினைத்தால் கிராம சபை கூட்டத்தை நடத்தலாம்.
அவ்வாறு கூட்டப்படும் கிராம சபை, சிறப்பு கிராம சபை என்று அழைக்கப்படும்.
*17. சிறப்பு கிராம சபையைக் கூட்ட பஞ்சாயத்துத் தலைவர் முன்வராவிட்டால் என்ன செய்வது?*
சிறப்பு கிராம சபை கூட்டத்தை கூட்டப் பஞ்சாயத்து தலைவர் மறுத்தால், மக்கள் தங்களுக்குள் ஒரு தலைவரை நியமித்துக் கொண்டு [சிறப்பு கிராம சபைக்கு மட்டும் அவர் தலைவராக இருப்பர்] சிறப்பு கிராம சபையைக் கூட்ட மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கலாம்.
*18. கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்த என்ன செய்ய வேண்டும்?*
கிராம இளைஞர்கள் , தன்னார்வலர்கள் முயற்சி எடுத்து, அரசு அதிகாரிகளுக்கு மற்றும் தலைவர் உட்படப் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு நினைவூட்டல் அனுப்பித் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்தலாம்.
*19. முன்னுதாரண கிராம சபையில் காணப்படும் முக்கிய விசயங்கள் என்னென்ன?*
* மக்கள் சொல்வதை தலைவர் மற்றும் அதிகாரிகள் கவனமாக கேட்பது
* மக்களின் சந்தேகங்களுக்கு முறையாகப் பதில் அளிப்பது
* மகளிர் மற்றும் பட்டியல் பிரிவினருக்கு உரிய அங்கீகாரம் வழங்குதல்
* பஞ்சாயத்தின் வரவு செலவு கணக்கை மக்கள் முன் வாசித்துக் காட்டுதல்
* கிராம வளர்ச்சிக்காக விவாதிப்பது
*20. கிராம சபையில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டுமா?* அதிகாரிகள் வந்தால் நாற்காலியில் அமரலாமா?
அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். முதலமைச்சரே வந்தாலும் கிராம சபையில் தரையில்தான் அமரவேண்டும்.
*21. பக்கத்து ஊர் கிராம சபையில் நான் கலந்து கொள்ளலாமா?*
கலந்துகொள்ளலாம்.
ஆனால், உங்களின் வாக்கு எந்தப் பஞ்சாயத்தில் உள்ளதோ அந்தக் கிராம பஞ்சாயத்தின் கிராம சபைக்கு மட்டுமே நீங்கள் உறுப்பினர்.
மற்றோரு கிராமத்தின் கிராம சபையில் நீங்கள் பார்வையாளராக இருக்கலாம்.
*22. இவர் கிராம சபையில் கலந்துகொள்ள கூடாது என யாரையாவது ஒதுக்கி வைக்க முடியுமா?*
முடியாது. உங்கள் கிராம பஞ்சாயத்தின் வாக்காளர் அனைவரும் உங்கள் கிராம சபையின் உறுப்பினர் ஆவார்கள்.
எனவே, அவர்கள் அனைவரும் கிராமசபையில் கலந்துகொள்ள உரிமை படைத்தவர்கள்
உள்ளாட்சி அமைப்புகள்:
அடிப்படை கேள்விகள்
*1. ஏன் இதை புதிய பஞ்சாயத்து என அழைக்கிறோம்?*
1993 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பஞ்சாயத்துச் சட்டம், இதற்கு முன்பு இருந்த பஞ்சாயத்து சட்டத்தில் இல்லாத பல புதிய சரத்துக்களை கொண்டிருந்தது.
அதில் குறிப்பாக; மாநில நிதி ஆணையம், மாநில தேர்தல் ஆணையம், கிராம சபை, மகளிர் மற்றும் பட்டியல் பிரிவினருக்கு இடஒதுக்கீடு போன்ற முக்கிய சரத்துக்களை கொண்டு இருந்தன.
எனவே இப்புதிய பஞ்சாயத்துச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகள் என்பதால் இவற்றை புதிய பஞ்சாயத்து அமைப்புகள் என அழைக்கிறோம்.
*2. பஞ்சாயத்து நிர்வாகம் எத்தனை அடுக்குகளைக் கொண்டது?*
மூன்று அடுக்குகளைக் கொண்டது. 1. கிராம பஞ்சாயத்து, 2. பஞ்சாயத்து ஒன்றியம், 3. மாவட்ட பஞ்சாயத்து
*3. தமிழகத்தில் மொத்தம் எத்தனைக் கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன?*
தமிழகத்தில் மொத்தம் 12,524 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன
*4. நகர உள்ளாட்சி அமைப்புகள் என்னென்ன?*
பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகியவை நகர உள்ளாட்சி அமைப்புகள் ஆகும்
*5. ஒரு கிராம பஞ்சாயத்து எத்தனை உட்கிராமங்களை கொண்டிருக்கும்?*
இது ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திற்கும் மாறுபடும். ஒரே ஒரு உட்கிராமம் உள்ள பஞ்சாயத்தும் உள்ளது , பல உட்கிராமங்கள் உள்ள கிராம பஞ்சாயத்தும் தமிழகத்தில் உள்ளது.
சராசரியாக ஏழு முதல் எட்டு உட்கிராமங்களை கொண்டிருக்கும் ஒரு கிராம பஞ்சாயத்து..

*மக்களுக்கு உரிமைகளை அறியச்செய்வோம்! மக்களை உரிமைக்காக செயல்படச் செய்வோம்! மறுக்கப்பட்டால் போராட செய்வோம்!*

இன்று நான்... நாளை நீ..

இன்று நான்... நாளை நீ..
---------------------------------------
குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA)
தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR)
தேசிய குடிமக்கள் பதிவேடு (NCR)

இவை வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு காரணத்துக்கானவை எனக் கூறி கொண்டு வரப்பட்டாலும் இந்த மூன்றுமே ஒரே செயலுக்கான மூன்று படிநிலைகள்.

தேசிய குடிமக்கள் பதிவேடு
---------------------------------------------
நம் நாடு பிரிக்கப்பட்டு இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாக்கப்பட்டு, இந்தியா தனி நாடான பின் 1951-ல் இந்த பதிவேடு துவங்கப்பட்டு பதிவுகள் செய்யப்பட்டன. அதன்பின் அதற்கான தேவை இருக்கவில்லை.

மீண்டும் 2013-ல் அஸ்ஸாம் மாநிலத்தில் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி வந்திறங்கும் பங்களாதேஷ் குடிமக்களைக் கட்டுப்படுத்தி முறைப்படுத்துவதற்காக உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க அஸ்ஸாமுக்காக மட்டுமே தொடங்கப்பட்டது.

இலட்சக் கணக்கான பங்களாதேஷ் அகதிகளின் வருகையால் அஸ்ஸாம் மாநில மக்கள் சந்தித்த பொருளாதார, கலாச்சார பாதிப்புகள் கனிசமானது. மேலும் அவர்கள் பல பத்து ஆண்டுகளாக அஸ்ஸாமில் வசிப்பதால் வாக்காளர் பட்டியலிலும் இடம் பெற்று அரசியலிலும் தீர்மானகரமான சக்திகளாக மாறியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாம் மக்கள் நடத்திய போராட்டங்களில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில்தான் காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அரசுக்கும், அஸ்ஸாமின் போராட்டக் குழுக்களுக்கும் இடையே 1985-ல் "அஸ்ஸாம் ஒப்பந்தம்" ஏற்படுத்தப்பட்டு மீண்டும் மாநிலத்தில் அமைதி திரும்பியது.

இந்த ஒப்பந்தத்தின்படி 25.03.1971-க்குப் பின் அஸ்ஸாமுக்குள் குடியேறியுள்ள பங்களாதேஷ் அகதிகள் அனைவரையும் அடையாளம் கண்டறிந்து அவர்களை வெளியேற்ற மத்திய அரசு ஒப்புக் கொண்டது. ஆனாலும் ஒப்பந்தத்தின்படி எந்த பணியும் முன்னெடுக்கப்படவில்லை. அதனால் ஒப்பந்தத்தின்படி அஸ்ஸாமில் இந்திய குடிமக்கள் பதிவு நடத்தப்பட வேண்டுமென பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கலானது. பின்னர் 2013-ல் உச்ச நீதிமன்ற ஆணையின் பேரில் அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் பதிவுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஆனால் இப்பதிவேடு நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் என்ற இந்துத்துவவாத ஆட்சியின் அறிவிப்புதான் நாம் எதிர் கொள்ளவிருக்கும் பயங்கரத்தை அறிவிக்கிறது.

குடியுரிமை திருத்த சட்டம்
------------------------------------------
கடந்த ஆண்டில் 31.08.2019-ல் வெளியிடப்பட்ட அஸ்ஸாம் மாநிலத்தின் தேசிய குடிமக்கள் பதிவேட்டின்படி 19,06,657 பேர் தங்களின் இந்தியக் குடியுரிமையை நிருபிக்க முடியாமல் பதிவேட்டில் இடம் பெற முடியாமல் போனவர்களாகும். இதில் 5 இலட்சம் பேர் வங்காள இந்துக்கள், 7 இலட்சம் பேர் முஸ்லிம்கள் மீதமுள்ள 7 இலட்சம் பேர் வட இந்திய இந்துக்கள். ஆக தங்களின் இந்தியக் குடியுரிமையை நிருபிக்கத் தவறிய 19 இலட்சம் பேரில் 12 இலட்சம் பேர் இந்துக்கள்.

இதுவரை பங்களாதேஷிலிருந்து சட்டவிரோதமாக வந்து குடியேறிய முஸ்லிம் அகதிகளால்தான் அஸ்ஸாம் மாநிலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டதாக பிரச்சாரம் செய்து வந்த சங்கிகளுக்கு இந்த புள்ளி விவரம் மிகப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது.

அஸ்ஸாம் ஒப்பந்தத்தில் 25.03.1971-க்கு பின்னர் அஸ்ஸாமில் குடியேறிய குடியுரிமை அற்ற அனைவரையுமே வெளியேற்றுவதாக கூறப்பட்டுள்ளதே ஒழிய முஸ்லிம்களை மட்டும் வெளியேற்றுவதாக கூறப்படவில்லை. எனவே குடியுரிமை அற்ற 12 இலட்சம் இந்துக்களைக் காப்பாற்ற இந்துத்துவ அரசால் கொண்டு வரப்பட்டதுதான் குடியுரிமை திருத்த சட்டம். அதிலும் அஸ்ஸாம் ஒப்பந்த விதிகளுக்கு முரணாக 1971 என்ற ஆண்டுக் கணக்கை 2014-வரை என இச்சட்டத் திருத்தம் மாற்றி 7 இலட்சம் முஸ்லிம்களை மட்டும் தவிர்த்து விட்டு மீதமுள்ள 12 இலட்சம் பேருக்கு குடியுரிமை அளிக்க வகை செய்கிறது.

ஆக அஸ்ஸாம் மக்களின் ஏற்கப்பட்ட கோரிக்கையான 1971-க்கு பிறகு அஸ்ஸாமுக்குள் குடியேறிய இந்தியக் குடியுரிமையற்ற அனைவரையும் வெளியேற்றுவோம் என்ற மத்திய அரசின் உடன்படிக்கையும், அதை அமுல்படுத்தக் கோரும் உச்ச நீதி மன்றத்தின் உத்தரவும் கூட அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் தொகை பதிவேடு
---------------------------------------------------------------
இது வழக்கமாக பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கணக்கெடுப்பு. இம்முறை ஏன் இத்தனை விமர்சனங்களுக்கு உள்ளாகிறதெனில் அதன் உள் நோக்கம் விசமத்தனமானது என்பதால்தான். இதுவரை சேகரித்த விவரங்களோடு கூடுதலாக பெற்றோரின் பிறந்த இடம் உள்ளிட்ட இன்னும் பல விவரங்களை சேகரிப்பதன் உள்நோக்கம் வெளிப்படையாகவே தெரிகிறது.

நச்சுத் திட்டம்
----------------------
முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். பின்னர் அதில் கூடுதலாக கேட்கப்பட்டு, சேகரிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் தேசிய குடியுரிமைப் பதிவேட்டுக்கான தகுதியற்றவர்கள் என குடிமக்களில் ஒரு பிரிவினர் ஒதுக்கப்படுவார்கள். அப்படி ஒதுக்கப்பட்டவர்களில் முஸ்லிம்கள் தவிர மற்றவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தின் உதவியோடு குடியுரிமை பெற வாய்ப்பு பெறுவார்கள். அதுவும் அரசின் விருப்பத்துக்கு உட்பட்டதாக இருக்கும். குறிப்பாக பெருவாரியான முஸ்லிம்கள் தங்களின் குடியுரிமையை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்படுவார்கள்.

இது பாசிச அரசின் திட்டம். இது அவர்களின் எழுபதாண்டு கனவுத் திட்டம்.

இது மேம்போக்காகப் பார்க்கும் போது முஸ்லிம்களுக்கு எதிரான அரசியல் திட்டமாகத் தெரிகிறது. ஆனால் இதன் நுண்ணரசியலை நோக்கினால் இது முஸ்லிம்களுகெதிரானது மட்டுமல்ல, இந்துத்துவ அரசியலுக்கு எதிராக நிற்கும் அனைத்துத் தரப்பினருக்குமே எதிரானது என்பதை உணரலாம்.

உதாரணத்துக்கு "குண்டர் தடுப்பு சட்டம்" அமுல்படுத்தப்பட்ட போது இது கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் குண்டர்களை தடுப்புக் காவலில் வைப்பதற்கான சட்டம் என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால் அரசு நடத்தும் சாராயக் கடைகளை மூட வேண்டும் எனப் பிரச்சாரம் செய்த சட்டக் கல்லூரி மாணவி "குண்டர்" என இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார் என்பதை நாம் மறந்து விட முடியாது.

ஆதார் அட்டை அனைத்து பரிவர்த்தனைக்கும் கட்டாயமாக்கப்பட்டது போல் இனி தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் பதிவு கட்டாயமாக்கப்படும்.

தேசிய குடியுரிமைப் பதிவேட்டில் பதிவு செய்யும் அதிகாரிகள் ஒருவரின் ஆவணங்களை அரசியல் காரணங்களுக்காக நிராகரிக்கும் பட்சத்திலும் அவர் குடியுரிமை மறுக்கப்பட்ட அகதியாகக் கருதப்பட்டு தடுப்பு முகாமுக்குத்தான் அனுப்பப்படுவார். அவரின் மேல் முறையீட்டை தீர்ப்பாயம் விசாரித்து தீர்ப்பளிக்க பல ஆண்டுகள் ஆகும். அதுவரை அந்நபர் தடுப்பு முகாமில்தான் இருக்க வேண்டும்.

அரசு அதிகார நிர்வாகமும், தீர்ப்பாயமும் அரசுக்கு விசுவாசமானதே ஒழிய மக்களின் சேவைக்கானது அல்ல. எனவே எந்த ஒரு குடிமகனும் அரசியல் காரணங்களுக்காகவே குடியுரிமை மறுக்கப்பட்டு தடுப்பு முகாமில் சிறைப்படுத்தப்படும் அபாயம் உள்ளது.

தீப்பிடித்து எரிவது பக்கத்து வீடுதானே என்று சுகமாக உங்கள் பஞ்சணையில் உறங்கி வழியாதீர்கள். அடுத்து உங்கள் வீடுதான். எரிந்த சாம்பலில் தெரியப் போவதில்லை உங்கள் மத அடையாளம்.

இன்று நான்... நாளை நீ...

வழக்கறிஞர்
ஜீவ கிரிதரன்.

Telangana Cheif Minister Sri.K.ChandraShekar Rao has announced to pass a resolution in the coming Assembly session opposing CAA, NPR & NRC

https://www.google.co.in/amp/s/www.news18.com/amp/news/india/kcr-says-telangana-will-soon-pass-resolution-against-unconstitutional-amended-citizenship-act-2473237.html

Thursday, 23 January 2020

கொனாரோ வைரஸ் - இஸ்லாமிய பார்வை

கொனாரோ வைரஸ் இன்று உலகையே அச்சுருத்துகிறது குறிப்பாக சீனா மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது இந்த வைரஸ் பாம்புகளில் இருந்து மனிதக்கு பரவியுள்ளது, இது மட்டமல்ல சார்ஸ்,பன்றிகாச்சல் போன்ற மிக ஆபத்தான வைரஸ் நோய்கள் எல்லாம் இஸ்லாம் தடைசெய்த காட்டுவிலங்குகளை உண்பதன் மூலமே முதலில் மனிதனுக்கு பரவுகின்றது பின்பு மனிதனில் இருந்து மனிதனுக்கு இதன் மூலம் அல்லாஹ் ஹலால் ஆக்கிய விலங்குகளை மட்டுமே அதுவும் ஹலால் முறைபடி அறுக்கப்பட்ட விலங்குகளே ஆரோக்கியமானது மனிதனுக்கு உகந்தது என்பதை உலகம் உணர்ந்து கொண்டால் சரி

பன்றி இறைச்சி - இஸ்லாமிய பார்வை 

இவ்வசனங்களில் (2:1735:36:14516:115) பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று இறைவன் தடை செய்கிறான்.

இதற்கான காரணத்தை திருக்குர்ஆனும் கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறவில்லை.

பன்றிகள் மலத்தை உண்பதாலும், சாக்கடையில் புரள்வதாலும் பன்றி தடை செய்யப்பட்டுள்ளது என்று சிலர் கூறுகின்றனர்.

இதுதான் காரணம் என்றால் மலத்தை உண்ணும் மாடு, கோழி போன்ற எத்தனையோ உயிரினங்கள் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தடை செய்யப்படவில்லை.

பன்றிகள் மலத்தை உண்பது தான் தடை செய்வதற்குக் காரணம் என்றால் சாக்கடையில் புரளாமல் பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றி அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். எந்தப் பன்றியும் உண்ண அனுமதிக்கப்படவில்லை.

எனவே பன்றியின் மாமிசம் தடுக்கப்பட்டதற்கு இவை காரணமாக இருக்க முடியாது. ஆயினும், பன்றியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்பதற்கு வேறு பல காரணங்கள் உள்ளன.

பொதுவாக உணவுகளில் அதிகமான கொழுப்பு இருக்கும்போது அது மனித உடலுக்குக் கேடு செய்கிறது. குறிப்பாக இதய நோயாளிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதய நோயாளிகள் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி ஆகியவற்றைக் கூட உண்ண வேண்டாம் என்கின்றனர்.

100 கிராம் ஆட்டிறைச்சியில் 17 கிராம் கொழுப்பு உள்ளது. 100 கிராம் மாட்டு இறைச்சியில் 5 கிராம் கொழுப்பு உள்ளது. ஆனால் 100 கிராம் பன்றி இறைச்சியில் 50 கிராம் கொழுப்பு உள்ளது.

சரி பாதி கொழுப்பு உள்ள பன்றியின் இறைச்சி நிச்சயம் நல்ல உணவாக இருக்க முடியாது.

மேலும் எல்லாக் கால்நடைகளுக்கும் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. உடல் அதிகமாகச் சூடாகும்போது வியர்வை சுரந்து, உடல் சூட்டைத் தணிப்பதுடன் உடலிலுள்ள கெட்ட நீரும் இதன் மூலம் வெளியேறுகின்றது.

ஆனால் பன்றிக்கு வியர்வைச் சுரப்பி கிடையாது. மனிதர்கள் சாதாரணமாக 40 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தைத் தாங்கிக் கொள்கிறார்கள். மற்ற கால்நடைகள் இதை விட அதிகமான வெப்பத்தைத் தாங்கிக் கொள்கின்றன. ஆனால் பன்றியினால் 29 டிகிரி வெப்பத்துக்கு மேல் தாங்கிக் கொள்ள முடியாது. வியர்வைச் சுரப்பிகள் இல்லாததே இதற்குக் காரணம்.

இதனால் தான் 29 டிகிரியை விட வெப்பம் அதிகமாகும்போது சாக்கடையில் புரண்டு, வெப்பத்தைத் தணித்துக் கொள்கிறது.

பன்றியின் இறைச்சியில் மனிதனுக்குக் கேடு செய்கின்ற நாடாப் புழுக்கள் என்ற நுண்கிருமிகள் உள்ளன. எவ்வளவு உச்ச வெப்பத்திலும் இந்தப் புழுக்கள் சாவதில்லை. மூளைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், இதய வீக்கம் உள்ளிட்ட 66 நோய்கள் பன்றி இறைச்சியை உண்பதால் ஏற்படுவதை மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது.

பன்றி உணவு சாப்பிடாத இஸ்லாமிய நாடுகளில் இதய வீக்கம் என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களை விட, பன்றியை உணவாகக் கொள்ளும் ஐரோப்பாவில் இதய வீக்கம் உள்ளவர்கள் ஐந்து மடங்கு அதிகமாக உள்ளனர்.

இது போன்ற காரணங்களால், வருமுன் காக்கும் நோக்கில் பன்றி உண்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது.

நன்றி தமிழ் குர்ஆன் 

Passport last page - citizen

உங்கள் கடவுச் ( pass port) சீட்டின் கடைசி பக்கம் சொல்கிறது நீங்கள் இந்தியாவின் குடிமகன் என்று! (படம் 2)

உங்கள் கடவுச் சீட்டை அங்கீகாரம் செய்கிறவர் யாரெனில் இந்தியக் குடியரசுத் தலைவர். அவரின் கட்டளையின் பெயரில் தான் உங்கள் கடவுச் சீட்டு வழங்கப்படுகிறது. (படம்1)

ஆக நான் ஏற்கனவே இந்தியக் குடியரசுத் தலைவரின் கட்டளையின் பெயரில் வழங்கப்படும் கடவுச் சீட்டில் இந்தியக் குடிமகன் என அங்கீகாரம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆன பின் எவனும் என்னை இந்தியக் குடிமகன் இல்லை எனக் கூற இயலாது!.

ஹெச்.ராஜா மீதான வழக்கில் 2 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல்

ஹெச்.ராஜா மீதான வழக்கில் 2 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

விவரம்: http://bit.ly/2GfE3Zh | #HRaja | #HighCourt | #BJP