Monday, 18 November 2019

சிறுவனின் செயல்

மாஷா அல்லாஹ் இந்த சிறுவனின் செயல் என் மனதை ஈர்த்தது அல்ஹம்துலில்லாஹ் .


 யா அல்லாஹ்! யார் எனக்கு உன்வளித்தாரோ அவருக்கு நீ உணவளித்திடுவாயாக! யார் எனக்கு பானம் புகட்டினாரோ அவருக்கு நீ பானம் புகட்டிடுவாயாக!.


ஆதாரம் : முஸ்லிம்



பால் எங்கே உற்பத்தியாகிறது?_*

*_பால் எங்கே உற்பத்தியாகிறது?_*

*_விஞ்ஞானத்தை மிஞ்சும் திருகுர்ஆன்!_*

கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை உள்ளது. அதன் வயிறுகளில் உள்ள *செரிக்கப்பட்ட உணவுக்கும், இரத்தத்திற்கும் இடைப்பட்ட நிலையில் தூய்மையான பாலை உங்களுக்குப் புகட்டுகிறோம்.* அருந்துவோருக்கு அது இனிமையானது.

*(திருக்குர்ஆன் 16:66)*

:- 21 ஆம் நூற்றாண்டு விஞ்ஞானியை விட சிறப்பாக பேசும் இறைவேதம் திருக்குர்ஆன்!

சொர்க்க வாசல்களின் பெயர்கள்

சொர்க்க வாசல்களின் பெயர்கள் :
1. சலா ( ஸஹிஹீல் புகாரி # 1897
2. ஜிஹாத் ( ஸஹிஹீல் புகாரி # 1897
3. ஸதகா ( ஸஹிஹீல் புகாரி # 1897
4. ரய்யான் ( ஸஹிஹீல் புகாரி # 1897
5. ஹஜ்
6. கஸ்மன்
7. ஈமான்
8. திக்ரு

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் 'ரய்யான்' என்றழைக்கப்படும் வாசலொன்று உள்ளது. அதில் நோன்பாளிகளைத் தவிர வேறெவரும் நுழைய மாட்டார்கள்.
என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 3257.
அத்தியாயம் : 59.


Sent from my iPhone

Ilm 2019 துபையில் மாநாடு

Sunday, 17 November 2019

யாருக்கு வேண்டும் இந்த 5 ஏக்கர்.. =

யாருக்கு வேண்டும் இந்த 5 ஏக்கர்..
=============================

இந்திய சுதந்திரத்திற்காக
தங்களையே கொடுத்தவர்கள் முஸ்லீம்கள்.
ஜதராபாத் நிஜாம் கொடுத்தாரே
5000கிலோ தங்கம், அதற்கு ஈடாகுமா இந்த 5 ஏக்கர்?
.
கப்பல்வாங்க வா உ சி க்கு பல கோடி
கொடுத்துஉதவினார்களே...முஸ்லீம்கள்
அதற்கு ஈடாகுமா இந்த 5 ஏக்கர்?

சுதந்திரம் வாங்க வீர மரணம்
அடைந்த அதிகமானோர் முஸ்லீம்கள்,
அதற்கு ஈடாகுமா இந்த 5 ஏக்கர்?

டெல்லியில் உள்ள
இந்தியா கேட் முகப்பில் 69500 பேர் முஸ்லீம்கள் என பொறிக்கப்பட்டுள்ளது
அதற்கு ஈடாகுமா இந்த 5 ஏக்கர்?

நீதி சொன்ன நீதி மன்றம் ...
முஸ்லீம்களால் உருவாக்கப்பட்டது.
டெல்லி ஜனாதிபதி மாளிகை
முஸ்லீம்களால் உருவாக்கப்பட்டது.
நாடாளுமன்றம்...
முஸ்லீம்களால் உருவாக்கப்பட்டது.
தாஜ்மகால், குதுப்மினார்,ரேட் போர்ட்..
முஸ்லீம்களால் உருவாக்கப்பட்டது.
டெல்லி செங்கோட்டை
முஸ்லீம்களால் உருவாக்கப்பட்டது.
அதற்கு ஈடாகுமா இந்த 5 ஏக்கர்?

முஸ்லீம்களின்
ஆயிரமாயிரம் தியாக
வரலாறுகள் இந்தியாவின் வழியெங்கும்
கொட்டிக்கிடக்கிறது சங்கிகளே!
அதற்கு ஈடாகுமா இந்த 5 ஏக்கர்?

இந்தியாவின் சுதந்திரத்திற்காக
தங்களின் சக்திக்கு மீறி
தியாகம் செய்த பரம்பரையினர்
முஸ்லீம்கள் என்று வரலாறு எழுதி
வைத்துள்ளதை அறிவீரா சங்கிகளே?
அதற்கு ஈடாகுமா இந்த 5 ஏக்கர்?

இன்னும் ஆயிரமாயிரம் தியாகத்திற்கும்,
உழைப்புக்கும், நீதிக்கும், நேர்மைக்கும்
பெருமைக்கும் உரியவர்கள் முஸ்லீம்கள்...

குருவாயூரில் உள்ள கோவிலுக்கு
669 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்த
நன்கொடை நாயகன்
மாவீரன் திப்பு சுல்தான்...
இன்னும் இதுபோல கோயில்களுக்கு
நஞ்சைகளையும், புஞ்சைகளையும் வாரி வாரி தானமாக கொடுத்தவர்கள் முகலாய மன்னர்கள் என்று வரலாறு சொல்லும்.
அதற்கு ஈடாகுமா இந்த 5 ஏக்கர்?

திருவல்லிக்கேணி திரு வெற்றீசுவரன் கோவில் கட்ட ஆற்காடு நவாப்தான் இடம் கொடுத்துள்ளார். கோவிலின் பராமரிப்புக்காக பல்வேறு மானியங்களும் கொடுத்துள்ளார்கள்.
அதற்கு ஈடாகுமா இந்த 5 ஏக்கர்?

ஆற்காடு நவாப்புகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளை 16 நூற்றாண்டில் இருந்து 19 நூற்றாண்டு தொடக்கம் வரை ஆட்சி செய்தனர். அப்போது தமிழ்நாட்டின் பல பகுதிகளிலுள்ள கோவில்களுக்கு பல தானதர்மங்களை செய்துள்ளனர்.
அதற்கு ஈடாகுமா இந்த 5 ஏக்கர்?

உலகத்தின் வரலாற்றை புரட்டிப்பார்.
இஸ்லாமியர்களின் வீரதீர தியாகங்கள் புரியும்.

முஸ்லீம்கள்...
விட்டு கொடுப்பவர்கள். அதனால் என்றுமே கெட்டு போகமாட்டார்கள்...

கெட்டு போகிறவன் விட்டு
கொடுக்க மாட்டான்....

1947ல் நாடு விடுதலை பெற்றபோது, முஸ்லிம்களுக்காக பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்கப்பட்டது. பெரும்பான்மையான முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு சென்றபோதிலும், லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்தியா தங்கள் தாயகம் என்ற எண்ணத்திலும், இந்துக்களின் மேல் இருந்த நம்பிக்கையாலும் பிறந்த இடத்திலேயே இருந்துவிட்டார்கள்.

சம்ராஜ்யங்கள் சரியலாம்....
சரித்திரங்கள் சரியாது.....

சங்கிளுக்கு இந்திய முஸ்லீம்களை
பிடிக்காது. ஆனால்
அரபுநாட்டு ஷேக்களும்,
அவர்களின் முதலீடுகளும்
அவர்களின் விருந்தும்,
அவர்களின் பெட்ரோல் ஊற்றும் பிடிக்கும்.

அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்ட
50 ஏக்கர் நிலம் வாங்கித் தாருங்கள் என்று முஸ்லீம்களிடம் கேட்டிருந்தால், முஸ்லீம் என்றோ வாங்கித் தந்திருப்பார்களே.

ராமருக்கு ஆலயம் கட்ட
எங்கள் இறை ஆலயத்தையே
வார்த்து தந்திருக்கிறோம்.
இதுதான் உண்மை.

யாருக்கு வேண்டும் இந்த 5 ஏக்கர்..

ஹாபிழ்
M,S, முஹம்மது ரபீக், மிஸ்பாஹி.

Thursday, 14 November 2019

முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக

اَلتَّاۤٮِٕبُوْنَ الْعٰبِدُوْنَ الْحٰمِدُوْنَ السّاۤٮِٕحُوْنَ الرّٰكِعُوْنَ السّٰجِدُوْنَ الْاٰمِرُوْنَ بِالْمَعْرُوْفِ وَالنَّاهُوْنَ عَنِ الْمُنْكَرِ وَالْحٰــفِظُوْنَ لِحُدُوْدِ اللّٰه ِ‌ؕ وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ‏ 
மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டுவிலக்குபவர்கள். அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய (உண்மை) முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!
(அல்குர்ஆன்: 9:112)

அவனோ மிகுந்த வல்லமையுடையவனாக இருக்கின்றான்

لَهٗ مُعَقِّبٰتٌ مِّنْۢ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهٖ يَحْفَظُوْنَهٗ مِنْ اَمْرِ اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتّٰى يُغَيِّرُوْا مَا بِاَنْفُسِهِمْ‌ؕ وَاِذَاۤ اَرَادَ اللّٰهُ بِقَوْمٍ سُوْۤءًا فَلَا مَرَدَّ لَهٗ‌ۚ وَمَا لَهُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّالٍ‏ 
மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்; எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.
(அல்குர்ஆன்: 13:11)

هُوَ الَّذِىْ يُرِيْكُمُ الْبَرْقَ خَوْفًا وَّطَمَعًا وَّيُنْشِئُ السَّحَابَ الثِّقَالَ‌ۚ‏ 
அவன் எத்தகையவெனின், அச்சத்தையும் (அதே நேரத்தில் மழைக்குரிய) ஆதரவையும் தரக்கூடிய நிலையில் மின்னலை அவன்தான் உங்களுக்குக் காட்டுகிறான்; கனத்த மேகத்தையும் அவனே உண்டாக்குகிறான்.
(அல்குர்ஆன்: 13:12)

‌وَيُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهٖ وَالْمَلٰۤـٮِٕكَةُ مِنْ خِيْفَتِهٖ ‌ۚ وَيُرْسِلُ الصَّوَاعِقَ فَيُصِيْبُ بِهَا مَنْ يَّشَآءُ وَهُمْ يُجَادِلُوْنَ فِى اللّٰه‌ۚ ِ وَهُوَ شَدِيْدُ الْمِحَالِؕ‏ 
மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்; (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ மிகுந்த வல்லமையுடையவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன்: 13:13)


Sent from my iPhone

என் இறைவன் தவறுவதுமில்லை; மறப்பதுமில்லை

قَالَ رَبُّنَا الَّذِىْۤ اَعْطٰـى كُلَّ شَىْءٍ خَلْقَهٗ ثُمَّ هَدٰى‏ 
"ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான அமைப்பை வழங்கி பின்னர் வழிகாட்டியிருக்கிறானே அவன்தான் எங்கள் இறைவன்" என்று கூறினார்.
(அல்குர்ஆன்: 20:50)

قَالَ عِلْمُهَا عِنْدَ رَبِّىْ فِىْ كِتٰبٍ‌‌ۚ لَا يَضِلُّ رَبِّىْ وَلَا يَنْسَى‏ 
"இது பற்றிய அறிவு என்னுடைய இறைவனிடம் (பதிவுப்) புத்தகத்தில் இருக்கிறது; என் இறைவன் தவறுவதுமில்லை; மறப்பதுமில்லை" என்று (மூஸா பதில்) சொன்னார்.
(அல்குர்ஆன்: 20:52)


Sent from my iPhone