Thursday, 31 October 2019

அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; பிழை பொறுப்பவன்


ذٰ لِكَ‌ۚ وَمَنْ عَاقَبَ بِمِثْلِ مَا عُوْقِبَ بِهٖ ثُمَّ بُغِىَ عَلَيْهِ لَيَنْصُرَنَّهُ اللّٰهُ ‌ؕ اِنَّ اللّٰهَ لَعَفُوٌّ غَفُوْرٌ‏ 
அது (அப்படியே ஆகும்) எவன் தான் துன்புறுத்தப்படும் அளவே (துன்புறுத்தியவனை) தண்டித்து அதன் பின் அவன் மீது கொடுமை செய்யப்படுமானால் நிச்சயமாக அல்லாஹ் அவனுக்கு உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; பிழை பொறுப்பவன்.
(அல்குர்ஆன்: 22:60)

ஸூரத்துன் லுக்மான்

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
(அல்குர்ஆன்: 0:0)

الٓمّٓ ‌ۚ‏ 
அலிஃப், லாம், மீம்.
(அல்குர்ஆன்: 31:1)

تِلْكَ اٰيٰتُ الْكِتٰبِ الْحَكِيْمِۙ‏ 
இவை ஞானம் நிறைந்த வேதத்தின் வசனங்களாகும்.
(அல்குர்ஆன்: 31:2)

هُدًى وَّرَحْمَةً لِّلْمُحْسِنِيْنَۙ‏ 
(இது) நன்மை செய்வோருக்கு நேர் வழி காட்டியாகவும் ரஹ்மத்தாகவும் இருக்கிறது.
(அல்குர்ஆன்: 31:3)

الَّذِيْنَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَؕ‏ 
அவர்கள் (எத்தகையோரென்றால்) தொழுகையை நிலை நாட்டுவார்கள்; ஜகாத்தும் கொடுத்து வருவார்கள்; இன்னும் அவர்கள் ஆகிரத்தை (மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.
(அல்குர்ஆன்: 31:4)

اُولٰٓٮِٕكَ عَلٰى هُدًى مِّنْ رَّبِّهِمْ‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏ 
இவர்கள் தாம் தம் இறைவனின் நேர் வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.
(அல்குர்ஆன்: 31:5)

وَمِنَ النَّاسِ مَنْ يَّشْتَرِىْ لَهْوَ الْحَدِيْثِ لِيُضِلَّ عَنْ سَبِيْلِ اللّٰهِ بِغَيْرِ عِلْمٍ‌ۖ وَّيَتَّخِذَهَا هُزُوًا ‌ؕ اُولٰٓٮِٕكَ لَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ‏ 
(இவர்கள் தவிர) மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் - அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்) இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு.
(அல்குர்ஆன்: 31:6)

وَاِذَا تُتْلٰى عَلَيْهِ اٰيٰتُنَا وَلّٰى مُسْتَكْبِرًا كَاَنْ لَّمْ يَسْمَعْهَا كَاَنَّ فِىْۤ اُذُنَيْهِ وَقْرًا‌ۚ فَبَشِّرْهُ بِعَذَابٍ اَلِيْمٍ‏ 
அ(த்தகைய)வனுக்கு நம்முடைய வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவன் அவற்றைக் கேட்காதவனைப் போல் - அவன் இரு காதுகளிலும் செவிட்டுத் தனம் இருப்பது போல், பெருமை கொண்டவனாகத் திரும்பி விடுகிறான்; ஆகவே அவனுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டென்று (நபியே!) நீர் நற் செய்தி கூறுவீராக.
(அல்குர்ஆன்: 31:7)

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوا وَعَمِلُوْا الصّٰلِحٰتِ لَهُمْ جَنّٰتُ النَّعِيْمِۙ‏ 
நிச்சயமாக, ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்பவர்களுக்குப் பாக்கியமுள்ள சுவனபதிகள் உண்டு.
(அல்குர்ஆன்: 31:8)

خٰلِدِيْنَ فِيْهَا ؕ وَعْدَ اللّٰهِ حَقًّا ‌ؕ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏ 
அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள் - அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; அவன் (யாவற்றையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.
(அல்குர்ஆன்: 31:9)

خَلَقَ السَّمٰوٰتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا‌ وَاَ لْقٰى فِى الْاَرْضِ رَوَاسِىَ اَنْ تَمِيْدَ بِكُمْ وَبَثَّ فِيْهَا مِنْ كُلِّ دَآ بَّةٍ‌ ؕ وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً فَاَنْۢبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِيْمٍ‏ 
அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும் பார்க்கிறீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான்; மேலும் அதன் மீது எல்லா விதமான பிராணிகளையும் அவன் பரவவிட்டிருக்கின்றான்; இன்னும் நாமே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அதில் சங்கையான, வகை வகையான (மரம், செடி, கொடி ஆகியவற்றை) ஜோடி ஜோடியாக முளைப்பித்திருக்கின்றோம்.
(அல்குர்ஆன்: 31:10)

هٰذَا خَلْقُ اللّٰهِ فَاَرُوْنِىْ مَاذَا خَلَقَ الَّذِيْنَ مِنْ دُوْنِهٖ‌ؕ بَلِ الظّٰلِمُوْنَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ‏ 
"இவை(யாவும்) அல்லாஹ்வின் படைப்பாகும் - அவனன்றி உள்ளவர்கள் எதைப் படைத்திருக்கின்றனர் என்பதை எனக்குக் காண்பியுங்கள்" (என்று அவர்களிடம் நபியே! நீர் கூறும்.) அவ்வாறல்ல; அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர்.
(அல்குர்ஆன்: 31:11)

وَلَقَدْ اٰتَيْنَا لُقْمٰنَ الْحِكْمَةَ اَنِ اشْكُرْ لِلّٰهِ‌ؕ وَمَنْ يَّشْكُرْ فَاِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهٖ‌ۚ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ حَمِيْدٌ‏ 
இன்னும், நாம் லுஃக்மானுக்கு நிச்சயமாக ஞானத்தைக் கொடுத்தோம். "அல்லாஹ்வுக்கு நீர் நன்றி செலுத்தும்; ஏனென்றால் எவன் நன்றி செலுத்துகிறானோ அவன் தன(து நன்மை)க்காவே நன்றி செலுத்துகிறான்; இன்னும் எவன் நிராகரிக்கிறானோ (அவன் தன்னையே நட்டப்படுத்திக் கொள்கிறான்) - நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்திருந்தும்) தேவையில்லாதவன்; புகழப்படுபவன்".
(அல்குர்ஆன்: 31:12)

وَاِذْ قَالَ لُقْمٰنُ لِا بْنِهٖ وَهُوَ يَعِظُهٗ يٰبُنَىَّ لَا تُشْرِكْ بِاللّٰهِ ؔؕ اِنَّ الشِّرْكَ لَـظُلْمٌ عَظِيْمٌ‏ 
இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு: "என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்," என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக).
(அல்குர்ஆன்: 31:13)

وَوَصَّيْنَا الْاِنْسٰنَ بِوَالِدَيْهِ‌ۚ حَمَلَتْهُ اُمُّهٗ وَهْنًا عَلٰى وَهْنٍ وَّفِصٰلُهٗ فِىْ عَامَيْنِ اَنِ اشْكُرْ لِىْ وَلِـوَالِدَيْكَؕ اِلَىَّ الْمَصِيْرُ‏ 
நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே "நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது."
(அல்குர்ஆன்: 31:14)

وَاِنْ جَاهَدٰكَ عَلٰٓى اَنْ تُشْرِكَ بِىْ مَا لَيْسَ لَكَ بِهٖ عِلْمٌ ۙ فَلَا تُطِعْهُمَا‌ وَصَاحِبْهُمَا فِى الدُّنْيَا مَعْرُوْفًا‌ وَّاتَّبِعْ سَبِيْلَ مَنْ اَنَابَ اِلَىَّ ‌ۚ ثُمَّ اِلَىَّ مَرْجِعُكُمْ فَاُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏ 
ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேண்டாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்."
(அல்குர்ஆன்: 31:15)

يٰبُنَىَّ اِنَّهَاۤ اِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ فَتَكُنْ فِىْ صَخْرَةٍ اَوْ فِى السَّمٰوٰتِ اَوْ فِى الْاَرْضِ يَاْتِ بِهَا اللّٰهُ ‌ؕ اِنَّ اللّٰهَ لَطِيْفٌ خَبِيْرٌ‏ 
(லுஃக்மான் தம் புதல்வரிடம்) என் அருமை மகனே! (நன்மையோ, தீமையோ) அது ஒரு கடுகின் வித்து அளவே எடையுள்ளது ஆயினும்; அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்; நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன்; (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன்.
(அல்குர்ஆன்: 31:16)

يٰبُنَىَّ اَقِمِ الصَّلٰوةَ وَاْمُرْ بِالْمَعْرُوْفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلٰى مَاۤ اَصَابَكَ‌ؕ اِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ‌ۚ ‏ 
"என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக; நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக; உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக; நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்.
(அல்குர்ஆன்: 31:17)

وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًا ‌ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرٍۚ‏ 
"(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
(அல்குர்ஆன்: 31:18)

وَاقْصِدْ فِىْ مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ‌ؕ اِنَّ اَنْكَرَ الْاَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيْرِ‏ 
"உன் நடையில் (மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல்) நடுத்தரத்தை மேற்கொள்; உன் குரலையும் தாழ்த்திக் கொள்; குரல்களிலெல்லாம் வெறுக்கத்தக்கது நிச்சயமாக கழுதையின் குரலேயாகும்.
(அல்குர்ஆன்: 31:19)

اَلَمْ تَرَوْا اَنَّ اللّٰهَ سَخَّرَ لَكُمْ مَّا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ وَاَسْبَغَ عَلَيْكُمْ نِعَمَهٗ ظَاهِرَةً وَّبَاطِنَةً ‌ؕ وَمِنَ النَّاسِ مَنْ يُّجَادِلُ فِى اللّٰهِ بِغَيْرِ عِلْمٍ وَّلَا هُدًى وَّلَا كِتٰبٍ مُّنِيْرٍ‏ 
நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும், உங்களுக்கு வசப்படுத்தி இருக்கிறான் என்பதையும்; இன்னும் தன் அருட் கொடைகளை உங்கள் மீது புறத்திலும், அகத்திலும் நிரம்பச் செய்திருக்கிறான் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆயினும், மக்களில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் போதிய கல்வியறிவில்லாமலும்; நேர்வழி இல்லாமலும், ஒளிமிக்க வேதமில்லாமலும் அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்கின்றனர்.
(அல்குர்ஆன்: 31:20)

وَ اِذَا قِيْلَ لَهُمُ اتَّبِعُوْا مَآ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَـتَّـبِـعُ مَا وَجَدْنَا عَلَيْهِ اٰبَآءَنَا ؕ اَوَلَوْ كَانَ الشَّيْطٰنُ يَدْعُوْهُمْ اِلٰى عَذَابِ السَّعِيْرِ‏ 
"அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்" என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் "(அப்படியல்ல)! நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்" என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்?)
(அல்குர்ஆன்: 31:21)

وَمَنْ يُّسْلِمْ وَجْهَهٗۤ اِلَى اللّٰهِ وَهُوَ مُحْسِنٌ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقٰى‌ؕ وَاِلَى اللّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ‏ 
எவன் தன் முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கமே திருப்பி, நன்மை செய்து கொண்டிருக்கிறானோ, அவன் நிச்சயமாக உறுதியான கயிற்றை பலமாக பற்றிப் பிடித்துக் கொண்டான். இன்னும் காரியங்களின் முடிவெல்லாம் அல்லாஹ்விடமேயுள்ளது.
(அல்குர்ஆன்: 31:22)

وَمَنْ كَفَرَ فَلَا يَحْزُنْكَ كُفْرُهٗ ؕ اِلَيْنَا مَرْجِعُهُمْ فَنُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا ‌ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ‏ 
(நபியே!) எவன் நிராகரிப்பானோ அவனுடைய குஃப்ரு - நிராகரிப்பு உம்மை விசனப்படுத்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடத்தில்தான் இருக்கிறது; அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை அப்பொழுது நாம் அவர்களுக்கு அறிவிப்போம் - நிச்சயமாக அல்லாஹ் இருதயங்களில் உள்ளவற்றை நன்கறிபவன்.
(அல்குர்ஆன்: 31:23)

نُمَتّـِعُهُمْ قَلِيْلًا ثُمَّ نَضْطَرُّهُمْ اِلٰى عَذَابٍ غَلِيْظٍ‏ 
அவர்களை நாம் சிறிது சுகிக்கச் செய்வோம்; பின்னர் நாம் அவர்களை மிகவும் கடுமையான வேதனையில் (புகுமாறு) நிர்ப்பந்திப்போம்.
(அல்குர்ஆன்: 31:24)

وَلَٮِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ لَيَـقُوْلُنَّ اللّٰهُ‌ ؕ قُلِ الْحَمْدُ لِلّٰهِ‌ ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَ‏ 
"வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்பீராயின் அவர்கள், "அல்லாஹ்" என்றே நிச்சயமாக சொல்லுவார்கள்; அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே" என்று நீர் கூறுவீராக; எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள்.
(அல்குர்ஆன்: 31:25)

لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ اِنَّ اللّٰهَ هُوَ الْغَنِىُّ الْحَمِيْدُ‏ 
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் (யாவும்) அல்லாஹ்வுக்கே உரியன. நிச்சயமாக, அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன்; புகழப்படுபவன்.
(அல்குர்ஆன்: 31:26)

وَلَوْ اَنَّ مَا فِى الْاَرْضِ مِنْ شَجَرَةٍ اَقْلَامٌ وَّالْبَحْرُ يَمُدُّهٗ مِنْۢ بَعْدِهٖ سَبْعَةُ اَبْحُرٍ مَّا نَفِدَتْ كَلِمٰتُ اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ‏ 
மேலும், நிச்சயமாக இப்பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுது கோல்களாகவும், கடல் (நீர் முழுதும்) அதனுடன் கூட மற்றும் ஏழு கடல்கள் அதிகமாக்கப்பட்டு (மையாக) இருந்த போதிலும், அல்லாஹ்வின் (புகழ்) வார்த்தைகள் முடிவுறா; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.
(அல்குர்ஆன்: 31:27)

مَا خَلْقُكُمْ وَلَا بَعْثُكُمْ اِلَّا كَنَفْسٍ وَّاحِدَةٍ‌ ؕ اِنَّ اللّٰهَ سَمِيْعٌۢ بَصِيْرٌ‏ 
(மனிதர்களே!) உங்களை படைப்பதும், (நீங்கள் மரித்த பின்) உங்களை (உயிர்ப்பித்து) எழுப்புவதும் ஒருவரைப் (படைத்து, அவர் மரித்தபின் உயிர் கொடுத்து எழுப்புவது) போலன்றி வேறில்லை; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; உற்று நோக்குபவன்.
(அல்குர்ஆன்: 31:28)

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَيُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَّجْرِىْۤ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى وَّاَنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏ 
"நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான்; இன்னும் சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தினான்" என்பதை நீர் பார்க்கவில்லையா? ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை செல்கின்றன; அன்றியும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன்.
(அல்குர்ஆன்: 31:29)

ذٰ لِكَ بِاَنَّ اللّٰهَ هُوَ الْحَقُّ وَاَنَّ مَا يَدْعُوْنَ مِنْ دُوْنِهِ الْبَاطِلُ ۙ وَاَنَّ اللّٰهَ هُوَ الْعَلِىُّ الْكَبِيْرُ‏ 
எதனாலென்றால் நிச்சயமாக அல்லாஹ்வே மெய்யான (இறை)வனாவான்; அவனை அன்றி அவர்கள் பிரார்த்திப்பவையாவும் அசத்தியமானவை; மேலும் நிச்சயமாக அல்லாஹ்வே உன்னத மிக்கவன்; மகாப் பெரியவன்.
(அல்குர்ஆன்: 31:30)

اَلَمْ تَرَ اَنَّ الْفُلْكَ تَجْرِىْ فِى الْبَحْرِ بِنِعْمَتِ اللّٰهِ لِيُرِيَكُمْ مِّنْ اٰيٰتِهٖؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ‏ 
தன்னுடைய அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிப்பதற்காக வேண்டி, அல்லாஹ்வுடைய அருள் கொடையைக் கொண்டு நிச்சயமாகக் கப்பல் கடலில் (மிதந்து) செல்வதை நீர் காணவில்லையா? நிச்சயமாக இதில் பொறுமை மிக்க - நன்றியறிதலுடைய ஒவ்வொருவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.
(அல்குர்ஆன்: 31:31)

وَاِذَا غَشِيَهُمْ مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللّٰهَ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ ۙ فَلَمَّا نَجّٰٮهُمْ اِلَى الْبَـرِّ فَمِنْهُمْ مُّقْتَصِدٌ ‌ؕ وَمَا يَجْحَدُ بِاٰيٰتِنَاۤ اِلَّا كُلُّ خَتَّارٍ كَفُوْرٍ‏ 
(கப்பலில் செல்லும்) அவர்களை, மலைமுகடுகளைப் போன்ற அலை சூழ்ந்து கொள்ளுமானால், அல்லாஹ்வுக்கே வழிபட்டு அந்தரங்க சுத்தியுடன் அவனிடம் பிரார்த்திக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களைக் காப்பாற்றிக்கரைசேர்த்து விட்டால், அவர்களில் சிலர் நடுநிலையாக நடந்து கொள்கிறார்கள் - எனினும் மிகவும் நன்றி கெட்ட, பெருந்துரோகிகளைத் தவிர வேறு எவரும் நம் அத்தாட்சிகளை நிராகரிப்பதில்லை.
(அல்குர்ஆன்: 31:32)

يٰۤاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمْ وَاخْشَوْا يَوْمًا لَّا يَجْزِىْ وَالِدٌ عَنْ وَّلَدِهٖ وَلَا مَوْلُوْدٌ هُوَ جَازٍ عَنْ وَّالِدِهٖ شَيْئًا‌ ؕ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ‌ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيٰوةُ الدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُمْ بِاللّٰهِ الْغَرُوْرُ‏ 
மனிதர்களே! உங்கள் இறைவனையஞ்சி (நடந்து) கொள்ளுங்கள்; இன்னும் அந்த (கியாமத்) நாளைக்குறித்துப் பயந்து கொள்ளுங்கள்; (அந்நாளில்) தந்தை தன் மகனுக்கு பலனளிக்க மாட்டார்; (அதே போன்று) பிள்ளையும் தன் தந்தைக்கு எதையும் நிறைவேற்றி வைக்க இயலாது; நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே இவ்வுலக வாழ்க்கை உங்களை மருட்டி ஏமாற்றிவிட வேண்டாம்; மருட்டி ஏமாற்றுபவ(னாகிய ஷைத்தா)னும் அல்லாஹ்வைக் குறித்து உங்களை மருட்டி ஏமாற்றாதிருக்கட்டும்.
(அல்குர்ஆன்: 31:33)

اِنَّ اللّٰهَ عِنْدَهٗ عِلْمُ السَّاعَةِ‌ ۚ وَيُنَزِّلُ الْغَيْثَ‌ ۚ وَيَعْلَمُ مَا فِى الْاَرْحَامِ‌ ؕ وَمَا تَدْرِىْ نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا‌ ؕ وَّمَا تَدْرِىْ نَـفْسٌۢ بِاَىِّ اَرْضٍ تَمُوْتُ ‌ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ ‏ 
நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.
(அல்குர்ஆன்: 31:34)


Sent from my iPhone

அல்லாஹ் அவன் நுட்பமானவன்; தெளிவான

لَا تُدْرِكُهُ الْاَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْاَبْصَارَ‌ۚ وَهُوَ اللَّطِيْفُ الْخَبِيْرُ‏ 
பார்வைகள் அவனை அடைய முடியா; ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.
(அல்குர்ஆன்: 6:103)

அல்லாஹ்தான் நன்கறிபவன்;

وَيَقُوْلُ الَّذِيْنَ كَفَرُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَيْهِ اٰيَةٌ مِّنْ رَّبِّهٖؕ اِنَّمَاۤ اَنْتَ مُنْذِرٌ‌ وَّ لِكُلِّ قَوْمٍ هَادٍ‏ 
இன்னும் (நபியே! உம்மைப்பற்றி இந் நிராகரிப்போர் "அவருக்கு அவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பும்) அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?" என்று கூறுகிறார்கள்; நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே ஆவீர், மேலும், ஒவ்வொரு சமூகத்தவருக்கும் ஒரு நேர்வழி காட்டியுண்டு.
(அல்குர்ஆன்: 13:7)

اَللّٰهُ يَعْلَمُ مَا تَحْمِلُ كُلُّ اُنْثٰى وَمَا تَغِيْضُ الْاَرْحَامُ وَمَا تَزْدَادُ ‌ؕ وَكُلُّ شَىْءٍ عِنْدَهٗ بِمِقْدَارٍ‏ 
ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சுருங்கி குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்; ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது.
(அல்குர்ஆன்: 13:8)

عٰلِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْكَبِيْرُ الْمُتَعَالِ‏ 
(எல்லாவற்றின்) இரகசியத்தையும், பரகசியத்தையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகவும் பெரியவன்; மிகவும் உயர்ந்தவன்.
(அல்குர்ஆன்: 13:9)


Sent from my iPhone

அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்

اِنَّ اللّٰهَ عِنْدَهٗ عِلْمُ السَّاعَةِ‌ ۚ وَيُنَزِّلُ الْغَيْثَ‌ ۚ وَيَعْلَمُ مَا فِى الْاَرْحَامِ‌ ؕ وَمَا تَدْرِىْ نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا‌ ؕ وَّمَا تَدْرِىْ نَـفْسٌۢ بِاَىِّ اَرْضٍ تَمُوْتُ ‌ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ ‏ 
நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.
(அல்குர்ஆன்: 31:34)


Sent from my iPhone

அல்லாஹ் சூழ்ந்து அறிகிறவன்

اِنْ تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْ وَاِنْ تُصِبْكُمْ سَيِّئَةٌ يَّفْرَحُوْا بِهَا ‌ۚ وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا ؕ اِنَّ اللّٰهَ بِمَا يَعْمَلُوْنَ مُحِيْطٌ‏ 
ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது; உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்.
(அல்குர்ஆன்: 3:120)


Sent from my iPhone

அல்லாஹ் பார்ப்பவன்

اِنَّ اللّٰهَ يَاْمُرُكُمْ اَنْ تُؤَدُّوا الْاَمٰنٰتِ اِلٰٓى اَهْلِهَا ۙ وَاِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ اَنْ تَحْكُمُوْا بِالْعَدْلِ‌ ؕ اِنَّ اللّٰهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهٖ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ سَمِيْعًۢا بَصِيْرًا‏ 
நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன்: 4:58)

مَنْ كَانَ يُرِيْدُ ثَوَابَ الدُّنْيَا فَعِنْدَ اللّٰهِ ثَوَابُ الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌ ؕ وَكَانَ اللّٰهُ سَمِيْعًاۢ بَصِيْرًا‏ 
எவரேனும் இவ்வுலகின் பலனை(மட்டும்) அடைய விரும்பினால், "அல்லாஹ்விடம் இவ்வுலகப்பலனும், மறுவுலகப்பலனும் உள்ளன. அல்லாஹ் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்."
(அல்குர்ஆன்: 4:134)

اِنَّ رَبَّكَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُ‌ؕ اِنَّهٗ كَانَ بِعِبَادِهٖ خَبِيْرًۢا بَصِيْرًا‏ 
நிச்சயமாக உம்முடைய இறைவன் தான் நாடியவருக்கு விசாலமாக உணவு (சம்பத்து)களை வழங்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவாகவும் கொடுக்கிறான் - நிச்சயமாக அவன் தன் அடியார்(களின் இரகசிய பரகசியங்)களை நன்கு அறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன்: 17:30)

قُلْ كَفٰى بِاللّٰهِ شَهِيْدًۢا بَيْنِىْ وَبَيْنَكُمْ‌ؕ اِنَّهٗ كَانَ بِعِبَادِهٖ خَبِيْرًۢا بَصِيْرًا‏ 
"எனக்கிடையிலும், உங்களுக்கிடையிலும் சாட்சியாக இருக்க அல்லாஹ்வே போதுமானவன்; நிச்சயமாக அவன் தன் அடியார்களைப் பற்றி நன்கு அறிந்தவனாகவும், (யாவற்றையும்) பார்ப்பவனாகவும் இருக்கின்றான்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(அல்குர்ஆன்: 17:96)

قَالَ لَا تَخَافَآ‌ اِنَّنِىْ مَعَكُمَاۤ اَسْمَعُ وَاَرٰى‏ 
(அதற்கு அல்லாஹ்) "நீங்களிருவரும் அஞ்ச வேண்டாம்; நிச்சயமாக நான் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், பார்ப்பவனாகவும் உங்களிருவருடனும் இருக்கிறேன்" என்று கூறினான்.
(அல்குர்ஆன்: 20:46)

ذٰ لِكَ بِاَنَّ اللّٰهَ يُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَيُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ وَاَنَّ اللّٰهَ سَمِيْعٌۢ بَصِيْرٌ‏ 
அது(ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான்; இன்னும்: நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன்: 22:61)

وَاللّٰهُ يَقْضِىْ بِالْحَقِّؕ وَالَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا يَقْضُوْنَ بِشَىْءٍؕ اِنَّ اللّٰهَ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ‏ 
மேலும், அல்லாஹ் உண்மையைக் கொண்டே தீர்ப்பளிப்பவன். அன்றியும், அவனையன்றி அவர்கள் (வேறு) எவர்களை அழைத்(துப் பிரார்த்தித்)தார்களோ, அவர்கள் யாதொரு விஷயத்தைப் பற்றியும் தீர்ப்புச் செய்ய மாட்டார்கள் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், தீர்க்கமாகப் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன்: 40:20)

اِنَّا خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ نُّطْفَةٍ اَمْشَاجٍۖ نَّبْتَلِيْهِ فَجَعَلْنٰهُ سَمِيْعًۢا بَصِيْرًا‏ 
(பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.
(அல்குர்ஆன்: 76:2)


Sent from my iPhone

Tuesday, 29 October 2019

*#மழை_காலங்களில்_மின்விபத்துகளைதடுக்கும்_வழிமுறைகள்*

*👺👺👺எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு_பதிவு👺👺👺*


*#மழை_காலங்களில்_மின்விபத்துகளைதடுக்கும்_வழிமுறைகள்*



மழை காலங்களில் மின்விபத்துகளை தடுக்க பொதுமக்கள் கீழ்கண்ட பாதுகாப்பு அறிவுரைகளை பின்பற்றுமாறு நெல்லை மண்டல தலைமை பொறியாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

மழை காலங்களில் மின்விபத்துகளை தடுக்க பொதுமக்கள் கீழ்கண்ட பாதுகாப்பு அறிவுரைகளை பின்பற்றுமாறு நெல்லை மண்டல தலைமை பொறியாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

* காற்று மற்றும் மழைக்காலங்களில் மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகே செல்லக்கூடாது.

* மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ அதனை தொட முயற்சிப்பதோ கூடாது. அதுகுறித்து அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிப்பதோடு மின்வாரிய அலுவலர்கள் வரும் வரை வேறு யாரேனும் அந்த மின்கம்பிகளை தொடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* இடி, மின்னலின்போது வெட்ட வெளியிலோ, மரங்களின் அடியிலோ, மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் அடியிலோ தஞ்சம் புகாதீர்கள். காங்கிரீட் கூரையிலான கட்டிடங்களில் தஞ்சமடையுங்கள். பாதுகாப்பான கட்டிடங்கள் இல்லாத பட்சத்தில் தாழ்வான பகுதியில் தஞ்சமடையுங்கள்.

* இடி, மின்னலின்போது டி.வி., மிக்ஸி, கிரைண்டர், கணினி, கைபேசி, தொலைபேசியை பயன்படுத்தக்கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக்கூடாது.

* மின்மாற்றிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் மின்கம்பங்கள் அருகே தண்ணீர் தேங்கியிருக்கும்போது அதன் அருகே செல்லக்கூடாது. அதுகுறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

* மழையின்போது வீடுகளில் உள்ள சுவர்களில் தண்ணீர் கசிவு இருக்குமாயின் அந்த பகுதியில் மின்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

* மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரிய அலுவலர்களை அணுக வேண்டும். பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை உடையதால் மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டும்போது மரக்கிளைகளை மின்கம்பியில் பட்டு மரம் வெட்டும் நபருக்கு மின்விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

* மின்கம்பத்திற்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயர்களில் ஆடு, மாடுகளை கட்டுவதோ, மின்கம்பிகளுக்கு அடியில் கால்நடைகளை கிடை அமர்த்துவதோ, மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தப்படுவதோ, மின்கம்பங்கள், ஸ்டே வயர்கள், மற்றும் சர்வீஸ் பைப்புகளில் கொடிகள் கட்டி துணிகளை காயப்போடுவதோ கூடாது.

* வீடுகள், மின்கம்பங்கள், மற்றும் மின்மாற்றிகளில் ஏற்படும் மின்பழுதுகளை பொதுமக்கள் தாமாக சரிசெய்ய முயற்சிக்க கூடாது. மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

* மின் நுகர்வோர் இருப்பிடத்தில் ஏற்படும் மின்விபத்துகளை தவிர்க்க அனைத்து கட்டிடங்களிலும் மின்கசிவு தடுப்பான் கருவியை மின் இணைப்பிற்கான சர்வீஸ் மெயின் அருகில் பொருத்த வேண்டும். மின்கசிவு தடுப்பான் கருவியானது பழுதான மின்சாதனங்களை இயக்கும் போது ஏற்படும் மின் கசிவினை கண்டறிந்து மின் வினியோகத்தை உடனடியாக நிறுத்தி மின் விபத்துகளை தவிர்த்திட ஏதுவாக இருக்கும்.

* மின்சார கம்பிகளுக்கு அடியில் கட்டிடங்கள் கட்டுவதை அறவே தவிர்க்க வேண்டும். மின்கம்பிகளுக்கு பக்கவாட்டில் கட்டிடங்கள் கட்டும்போது போதுமான பாதுகாப்பு இடைவெளி உள்ளதா? என மின்வாரிய அலுவலரை தொடர்பு கொண்டு தெளிவடைந்த பின்னரே கட்டுமான பணியை தொடங்க வேண்டும். மேலும் மின்கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்கள் கட்டும்போது சென்ட்ரிங் கம்பிகள் மற்றும் பலகைகளை கையாளும்போது அதிக கவனம் தேவை.

* வீடுகள் மற்றும் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மோட்டார்களுக்கு தரமான ஒட்டு இல்லாத ஒயர்களை பயன்படுத்த வேண்டும்.

* வீடுகளில் பயன்பாட்டில் உள்ள குளிர்சாதன பெட்டி, கிரைண்டர் மற்றும் மின்மோட்டார்களுக்கு நில இணைப்புடன் கூடிய மூன்று பின் உள்ள பிளக்குகளை பயன்படுத்துவதோடு ஐ.எஸ்.ஐ. முத்திரை பொறிக்கப்பட்ட தரமான மின்சார ஒயர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் மின்சார பிளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும்.

* குறுகலான தெருக்களிலும், வளைவுகளிலும் அமைந்துள்ள வீடுகளுக்கு மின்இணைப்பு ஒயர்களை கொண்டு செல்ல இருப்பு சப்போர்ட் பைப் அமைக்கும் பட்சத்தில் அதனை சுற்றி சுமார் 8 அடி உயரத்திற்கு தரமான பி.வி.சி. பைப்புகளை காப்பாக அமைக்க வேண்டும்.

* கனரக வாகனங்களை மின் கம்பிகளுக்கு அடியில் நிறுத்தி பொருட்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ கூடாது.

* கேபிள் டி.வி. வயர்களை மின்கம்பங்களில் கட்டுவதோ, மின்கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லவோ கூடாது. பச்சை மரங்களிலும், இரும்பு கிரில்களிலும் அலங்கார சீரியல் விளக்குகள் கட்டுவதை தவிர்க்க வேண்டும்.

* விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைப்பது சட்டப்படி குற்றமான செயலாகும். மேலும் மின்சார வேலி அமைப்பதனால் மனிதர்களும், கால்நடைகளும் மின்விபத்தினால் உயிரிழக்க நேரிடும்.

மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் பாதுகாப்பின்றி இருக்கும் பழுதான மின்கம்பங்கள், தாழ்வாக இருக்கும் மின்கம்பிகள் மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் மின் பகிர்வு பெட்டிகள் போன்றவற்றை படத்துடன் முழு முகவரியை குறிப்பிட்டு *+918903331912* என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு குறுஞ்செய்தியாக தகவல் தெரிவிக்கலாம்.

*இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

மவ்லூது குறித்த மடமைகளுக்கு, ஏகத்துவத்தின் பதிலடி!

*மவ்லூது குறித்த மடமைகளுக்கு, ஏகத்துவத்தின் பதிலடி!*

1980 களுக்கு முன்னால் தமிழ்பேசும் முஸ்லிம்களின் அறியாமையை பயன்படுத்தி மவ்லிது எனும் இணைவைப்பு பாடலை பாடி பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தது ஒரு கூட்டம்.

அப்போது சுடர் விட்ட ஏகத்துவ தொடர் பிரச்சாரத்தின் விளைவால் இந்த பித்தலாட்டங்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டது.

*மவ்லிது என்பது அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் காட்டித்தந்த வணக்கம் அல்ல.*

அது இஸ்லாத்தை அழித்தொழிக்கும் இணைவைப்பு பாடல் என்பதை மக்கள் அறிந்துக் கொண்டனர். அதிலிருந்து விலகத் தொடங்கினர்

*மவ்லிது வியாபாரம் சரிந்தது*

தற்போது, விழிப்புடன் இருக்கும் மக்களிடத்தில் மவ்லிதின் மகத்துவத்தை(?) கொண்டு சேர்க்க பல முயற்சிகளை கையாண்டு வருகின்றனர்.

அதில், ஒன்று ஸஹாபாக்களின் பெயராலும், முந்தைய அறிஞர்களின் பெயராலும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை மக்களிடத்தில் உண்மை போல் கொண்டு செல்கின்றனர்.

நபி(ஸல்) அவர்களின் மவ்லிதை ஒதுவதற்காக யார் ஒரு திர்ஹத்தை செலவிடுகிறாரோ அவர் சுவனத்தில் எனது தோழராக இருப்பார் என்று அபூபக்ர்(ரலி) அவர்கள் கூறினார்கள்.

யார் நபி(ஸல்) அவர்களின் மவ்லிதை கண்ணியப்படுத்துகிறாரோ அவரே இஸ்லாத்தை உயிர்ப்பித்தவர் ஆவார் என்று உமர்(ரலி) கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்களின் மவ்லிதை ஒதுவதற்காக யார் ஒரு திர்ஹத்தை செலவிடுகிறாரோ அவர் பத்ரு மற்றும் ஹுனைன் யுத்தங்களில் கலந்துக் கொண்டவர் போலாவார் என உஸ்மான்(ரலி) கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்களின் மவ்லிதை கன்னியப்படுத்தியவரும், அது ஒதப்படுவதற்கு காரணமாக திகழ்ந்தவரும் ஈமானுடனே மரணிப்பார். மேலும் விசாரணை எதுவுமின்றி சுவனத்தில் நுழைவார் என்று அலீ(ரலி) அவர்கள் கூறினார்கள்.

இவ்வாறு நான்கு கலீஃபாக்கள் மவ்லிதை பற்றி கூறிவிட்டார்கள் என்று தற்போது மவ்லிதை தூக்கி பிடிப்பவர்கள் பரப்பிவருகின்றனர்.

இந்த செய்திகளின் தரத்தைப் பற்றி பார்ப்பதற்கு முன்னால், இமாம் கதீப் மற்றும் கஸ்ஸாலி காலத்தில் எழுதப்பட்டது என்று சொல்லப்படும் மவ்லிது எவ்வாறு ஸஹாபாக்கள் காலத்திற்கு சென்றது என்று கேட்க விரும்புகிறோம்.

மேலும், சுவனத்திற்கு நற்சான்று வழங்க நபித்தோழர்களுக்கு அதிகாரம் இருக்கிறதா?

அது அல்லாஹ்விற்கு மட்டும் இருக்ககூடிய அதிகாரம். அதில் ஸஹாபாக்களை கூட்டாக்குகின்றனர்.

ஒரு இணைவைப்பை நியாயப்படுத்த இன்னொரு இணைவைப்பை அறிமுகப்படுத்துகின்றனர்.

மேலும், இந்த செய்திகளை உண்மையில் ஸஹாபாக்கள்தான் கூறினார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை.

இப்னு ஹஜர் அல்ஹைதமீ (இவர் இப்னு ஹஜர் அஸ்கலானீ இல்லை) என்பவர் தனது அந்நிஃமத்துல் குப்ரா எனும் புத்தகத்தில் (பக்கம் 6 ல்) இந்த செய்திகளை கொண்டு வந்துள்ளார்.

இவர் ஹிஜ்ரி 909 ல் பிறந்து 974 ல் மரணித்தவர். எல்லா அனாச்சாரங்களையும் நியாயப்படுத்தி பரேலவிச கொள்கைக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் இவரே.

பிற்காலத்தில் வாழ்ந்த் ஒருவர் முற்காலத்தில் வாழ்ந்தவர்களின் செய்தியை கொண்டு வருகிறார் எனில் அது எந்த மூல நூலிலிருந்து எடுக்கப்பட்டது என்று தெளிவுப்படுத்த வேண்டும். அல்லது அதற்கான அறிவிப்பாளர் தொடரை கொண்டு வர வேண்டும்.

அவ்வாறு எதுவும் செய்யாமல் வெறுமனே இந்த செய்திகளை மாத்திரம் கொண்டு வந்துள்ளார்.

இந்த நூல் அல்லாத வேறு எந்த மூல ஹதீஸ் நூல்களிலும் இந்த செய்தி இடம்பெறவில்லை.

ஸஹாபாக்கள் காலத்திற்கு பல நூறாண்டிற்கு பிறகு வந்தவருககு எப்படி இந்த செய்தி கிடைத்தது என்று எந்த சான்றும் இல்லை.

இவ்வாறு அறிவிப்பாளர் தொடரும், ஆதாரமும் இல்லாத முழுக்க முழுக்க புனையப்பட்ட இட்டுக்கட்டப்பட்ட செய்திகளாகவே இவை உள்ளது.

ஸஹாபாக்களை நஜாத்காரர்கள் அவமதிக்கிறார்கள். நாங்கள்தான் அவர்களை பெரிதும் மதிக்கின்றோம் என்று மவ்லிது ஆதரவாளர்கள் சொல்லிக்கொண்டு ஸஹாபாக்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட செய்தியை பிரச்சாரம் செய்து தங்களின் மதிப்பை(?) வெளிப்படுத்துகின்றனர்.

இமாம்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை பாருங்கள்.

உஹது மலை அளவுக்கு தங்கம் என்னிடம் இருந்தால் அதை நபி(ஸல்) அவர்களின் மவ்லிதை ஒதுவதற்காக செலவிட ஆசைபடுகிறேன் என்று ஹஸன் அல்பஸரீ அவர்கள் கூறினார்கள்.

யார் மவ்லிது ஓதி, அதை மகத்துவப்படுத்தவதற்காக உணவை தயார்செய்து, தன் சகாக்களை ஒன்றினைத்து, விளக்கேற்றி, புத்தாடை அணிகிறாரோ அவரை அல்லாஹ் மறுமை நாளில் முதல் பிரிவினரான நபிமார்களுடன் சேர்ப்பான். மேலும் உயர் பதவிகளிலும் அவர் இருப்பார் என்று மஃரூஃப் அல்கர்கீ அவர்கள் கூறினார்கள்.

யார் நபியவர்களின் மவ்லிதை ஓதுவதற்காக தன் சகாக்களை ஒன்றினைத்து, உணவை தயாரித்து, தனிமையில் நற்காரியம் புரிகின்றாரோ அவரை அல்லாஹ் மறுமைநாளில் உண்மையாளர்கள், உயிர்தியாகிகள், நல்லோர் ஆகியோருடன் எழுப்புவான். அவர் இன்பமயமான சுவனத்தில் இருப்பார் என்று இமாம் ஷாஃபீ கூறினார்கள்.

ஒருவர் மவ்லிது ஓதுவதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்கிறார் எனில் அவர் சுவனத்தின் தோட்டத்தின் தேர்வு செய்தவராவார். ஏனெனில், அவர் நபி மீதுள்ள பிரியத்தினாலே அந்த இடத்தை தேர்வு செய்தார் என்று ஸிர்ரியுஸ் ஸிக்த்தி என்பவர் கூறினார்.

மவ்லிது ஓதப்படும் இடத்தினை வானவர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். அவ்விடத்தில் உள்ளவர்கள் மீது ஸலாவாத் கூறுகின்றனர். அல்லாஹ் தனது திருப்பொருத்தம் மற்றும் அருளைக் கொண்டு அவ்விடத்தை சூழ்ந்துகொள்கின்றான். மேலும், எந்த முஸ்லிமின் இல்லத்தில் மௌலிது ஓதப்படுகிறதோ அந்த இல்லத்தை தீயால் எரிதல் மற்றும் அனைத்து வகை சோதனைகள் கஷ்டங்களை விட்டும் அல்லாஹ் பாதுகாக்கிறான். அவ்வீட்டில் உள்ளவர்கள் மரணமடைந்தால் கூட அவர்களின் கப்ரு விசாரணை லேசாக்கப்படும் என்று இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தீ கூறினார்.

ஒருவர் உணவு பதார்த்தங்களை வைத்து மவ்லிது ஒதுகிறார் எனில் அந்த உணவிலும் அனைத்து பொருளிலும் பரக்கத் ஏற்படும். அதை யார் உண்ணுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மன்னப்பு வழங்குகிறான். தண்ணீர் வைத்து மவ்லிது ஒதப்பட்டு யார் அந்த தண்ணீரை பருகிறாரோ அவரின் உள்ளத்தில் ஆயிரம் வகையான ஒளியும் அருளும் நுழைகிறது. மேலும் ஆயிரம் வகையான நோய் அவரைவிட்டு வெளியேறுகிறது. தங்கம் அல்லது வெள்ளியினாலான நாணயத்தின் மீது மவ்லிது ஒதி அந்நாணயத்தை மற்ற நாணங்களுடன் கலந்து வைத்தால் நபியினுடைய பரக்கத் அதில் இறங்குகிறது. வறுமை அவரை அணுகாது என்று இமாம் ஃபக்ருத்தீன் ராஸீ கூறினார்.

இவையும் அந்த அந்நிஃமத்துல் குப்ரா எனும் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் செய்திகளாகும்.

நபி மீது இட்டுகட்டி நபித்தோழர்கள் மீது இட்டுக்கட்டியவர்கள் சாதாரண அறிஞர்கள் மீது இட்டுக்கட்ட தயங்குவார்களா என்ன?

இவை அனைத்தும் அவர்களின் மீது இட்டுக்கட்டப்பட்ட பெரும் பொய்களாகவே உள்ளது.

ஏனெனில், இந்த செய்திகளை தனது புத்தகத்தில் கொண்டு வந்திருக்கும் இமாம் இப்னு ஹஜர் ஹைதமீ அவர்கள் மிகவும் பிற்காலத்தில் வாழ்ந்தவர்.

ஆனால் இவர் குறிப்பிட்டிருக்கும் இமாம்களில் நான்கு பேர் இவரை விட பல நூற்றாண்டுகள் முந்தி வாழ்ந்துள்ளனர்.

1. இமாம் ஹஸன் அல்பஸரீ ஹிஜ்ரி 110 ல் மரணித்தார்.

2. இமாம் மஃரூஃப் அல்கர்கீ ஹிஜ்ரி 200 ல் மரணித்தார்.

3. இமாம் ஷாஃபீ ஹிஜ்ரி 204 ல் மரணித்தார்.

4. இமாம் ஸிர்ரியுஸ் ஸிக்த்தீ ஹிஜ்ரி 251 ல் மரணித்தார்.

5. இமாம் ஃபக்ருத்தீன் ராஸீ ஹிஜ்ரி 606 ல் மரணித்தார்

6. இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தீ ஹிஜ்ரி 911 ல் மரணித்தார்

இவர் குறிப்பிட்ட அனைத்து இமாம்களுமே இவரை விட பல ஆண்டுகள் முந்தியவர்கள்.

இமாம் சுயூத்தீயினுடைய மரணம் இவருடைய வாழ்வுக்கு ஓரளவு நெருக்கமாக இருப்பது போன்று தெரிந்தாலும் இவர் இரண்டு வயதாக இருக்கும்போதே அவர் மரணித்துவிட்டார்.

இவர் அவர் சொன்ன கருத்தை குழந்தை பருவத்திலேயே கேட்டு புத்தகத்தில் பதிவு செய்துக்கொண்டார்(!) என்று சொன்னாலும் சொல்வார்கள் இந்த மவ்லிது பக்தர்கள்!

நாம் ஏற்கனவே கேட்டது போல் இவரை விட பல்லாண்டுகள் முந்தி வாழ்ந்த இமாம்களின் கருத்தை இவர் எங்கிருந்து பெற்றார்?

அதற்கான சான்று என்ன?

இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பல நூல்கள் எழுதியுள்ளார்கள். அத்தகைய எந்த புத்தகத்திலும் அவர்கள் இந்த கருத்தினை பதிவுசெய்யவில்லையே!

அவர்கள் பதிவு செய்யாத கருத்து பல நூற்றாண்டுகள் கழித்து இவருக்கு எங்கிருந்து கிடைத்தது?

இப்படி எந்த குறிப்பும் இல்லாமல் இந்த செய்திகள் புனையப்பட்ட ஜோடிக்கப்பட்ட செய்திகளாகவே உள்ளது.

ஒரு கருத்தை பிந்திவந்தவர்கள் சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள். எனவே, மக்கள் பெரிதும் நேசிக்கும் ஸஹாபாக்களின் பெயராலும், மக்களுக்கு மத்தியில் அதிகம் பிரபல்யமாக இருக்கும் இமாம்களின் பெயராலும் சொன்னால் ஓரளவு மக்கள் கேட்பார்கள் என்பதற்காகவே இந்த செய்திகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செய்திகளின் தரம் என்னவென்று தெரிந்தும் மக்களை மடையர்களாக்கும் நோக்கில் சுன்னத் ஜமாஅத் என்ற பெயரால் இயங்குபவர்கள் பரப்பி வருகின்றனர்.

ஆதாரமற்ற தங்களின் கருத்தை மக்களுக்கு மத்தியில் திணிக்க வேண்டும் என்பதற்காக ஸஹாபாக்கள் மீதும், இமாம்களின் மீதும், ஏன் நபியின் மீதும் கூட இட்டுக்கட்ட இவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதற்கும் இட்டுகட்டபட்ட செய்திகளை பரப்பி அவர்களை அவமதிக்கவும் தயங்க மாட்டார்கள் என்பதற்குமான பல சான்றுகளில் இதுவும் ஒரு சான்றாகும்.

"என்மீது யார் பொய்சொல்வாரோ அவர் நரகத்தில் தமது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்.

அறிவிப்பவர் ஜூபைர் ரலி
நூல் : புகாரி 107

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நான் கூறாத ஒன்றை நான் கூறியதாக
யார் கூறுவாரோ அவர் நரகத்தில் தன் இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும்.
இதை சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 109

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம்

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
_என்றும் இறைப்பணியில்..._
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்*
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

உலகத்தில் மழை பெய்யாத ஒரு கிராம்ம்

உலகத்தில் மழை பெய்யாத ஒரு கிராம்ம் மேகங்களுக்கு மேலே உள்ளது
ஹரஸ் என்ற பகுதியில் ஃல்ஹூதைப் என்ற இடத்தில் உள்ளது
எமன் நாட்டின் ஸனா நகருக்கு மேற்கு பகுதியில்உள் ளது
நீங்கள் இந்த ரம்மியமயமான காட்சியையும் மேகங்கள் கீழே உள்ளதையும்

ஊர் மேலே உள்ளதையும் காணலாம்