Wednesday, 5 June 2019

Neet result 2019

என் இனிய ஆண்ட பரம்பரைகளா,

நீட் தேர்வில் தேர்வானவர்கள் எண்ணிக்கையை பார்த்தாச்சா?

SC/ST - 20,009
OBC - 63,749
Others - 7,04,335

அதாவது மொத்தமே 83758 பிற்படுத்தப்பட்ட & தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தேர்வான நிலையில் முன்னேறிய வகுப்பினர் மட்டும் 7 லட்சம் பேர் தேர்வாகியுள்ளனர்.

தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு அமுலில் இருக்கிறது.
அகில இந்திய அளவில் 49.5% இடஒதுக்கீடு இருக்கிறது.

ஆனால் இந்த தேர்வு முடிவுகள் அடிப்படையில் தேர்வானவர்கள் சதவிகிதம் என்ன தெரியுமா?
12% தான்.

நீட் தேர்வு எதற்காக வலுக்கட்டாயமாக நுழைக்கப்பட்டதோ அந்த இலக்கை நோக்கி சரியாக பயணிக்கிறது.

பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் எதிரெதிர் கட்சியில் இருந்தாலும், சமத்துவத்துக்கும் சமவாய்ப்புக்குமான அடிப்படை கட்டமைப்பை 60 ஆண்டுகளில் ஒவ்வொரு செங்கலாக கட்டி எழுப்பினர்.

அதை மூன்றே ஆண்டுகளில் உடைத்தெறிந்துவிட்டது சனாதானம்.

இனி உரக்க சொல்லுங்கள்:

திராவிடத்தால் வீழ்ந்தோம்
இந்துக்களாக இணைவோம்
இந்தி சமஸ்கிருதம் கற்போம்
எங்கள் அடுத்த தலைமுறையை கால் வயித்து கஞ்சுக்கு கோயில் வாசலில் நிற்க வைப்போம்!

#TNAgainstNEET ந முகுந்தன்

Sunday, 2 June 2019

பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளை - பித்ரா 2019

June
2019
பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளை - பித்ரா 2019
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்பணிகள் பல செய்துகொண்டு இருக்கிறது.

மேலும் பரமக்குடி நகரில் அன்னை ஆயிஷா அறக்கட்டளை மூலமாக முஸ்லிம்களுக்கு பித்ரா கடந்த 15 வருடங்களாக விநியோகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. ரமலான் 27 அன்று 02-06-2019 பித்ரா 200 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு விநியோகிக்கபட்டது

Wednesday, 29 May 2019

Poor Muslims son death at hospital

#Racism_7 : May 28, 2019 , உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஷாஜஹான்பூரில் உள்ள மருத்துவமனைக்கு தனது மகன் அஃப்ரோஸை அவனது தாயார் கடுமையான காய்ச்சல் காரணமாக அட்மிட் செய்ய வந்தபொழுது , மருத்துவர்கள் அந்த மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லையென்றும், லக்னோவில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் பரிந்துரைத்திருக்கின்றார்கள்.

"கையில் உள்ள பணத்தை எல்லாம் தருகிறேன் என் மகனை காப்பாற்றுங்கள் என்று கதறினோம். ஆனால் அங்கு 3 ஆம்புலன்சுகள் இருந்தும் அவர்கள் ஆம்புலன்ஸ் தர மறுத்துவிட்டார்கள். என்ன காரணமென்று தெரியவில்லை. நாங்கள் எங்களது மகனை சுமந்துகொண்டே செல்கின்ற வழியில் , எனது மடியிலேயே அவன் இறந்துவிட்டான்" என்று அப்ரோஸின் தாயார் கதறியபடி கூறினார்.

வயிற்றில் பிறப்பு, தோளில் மரணம் என்ன பாவம் செய்தார்கள் இந்தியாவில் முஸ்லிமாய் பிறந்ததைத் தவிர?

ஏழைத்தாயின் மகன் என்று சொல்லித் திரிகிற மோடிக்கு, இது நிச்சயமாய் தெரிந்திருக்கும்," ஏன் இந்த ஏழைத்தாயின் மகன் அஃப்ரோசுக்கு ஆம்புலன்ஸ்கள் மறுக்கப்பட்டன" என்று.

மருத்துவர்கள் அலட்சியமாய் கூறுகின்றார்கள் "அவர்கள் 8.10 க்கு வந்தார்கள் நாங்கள் பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லச் சொல்லிவிட்டோம். அவர்கள் நாங்கள் எங்களது பையனை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்வோம் என்று ஏளனமாய் கூறிவிட்டுச் சென்றார்கள் ஆனால் பையன் இறந்து விட்டான் அவர்கள் திரும்பி வரவேயில்லை"
எவ்வளவு அலட்சியம்? அரசாங்கத்திற்கு சேவை செய்வதாய் சொல்லிக்கொண்டு மனித உயிரோடு எப்படி விளையாடி இருக்கின்றார்கள் ?

வடநாட்டு மக்களை வளர்ச்சி என்று எப்படி ஏமாற்றியிருக்கின்றது இந்த பாஜக அரசு. ஒரு காய்ச்சலுக்கு கூட சரியான சிகிச்சை அளிக்க முடியாத மருத்துவமனை எதற்காக? உயரமான சிலைகளுக்கும் மாடுகளுக்கும், மக்கள் பணத்தை செலவழித்துவிட்டு, மக்களின் உயிரோடும் அறிவின்மையோடும், போலியான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது இந்த பாசிச அரசு.

அந்த குடும்பம் இஸ்லாமியக்குடும்பம் என்பதாலா? அவர்கள் இந்த மண்ணில் மற்ற மனிதர்களைப் போல வாழ முடியாதா?

இதே உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஷாஜஹான்பூரில்தான் , இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த ,அஸ்பகுல்லா கான் என்கிற சுதந்திரப்போராட்ட வீரர், 1925 ஆகஸ்ட் 9ம் தேதி இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆயுதம் வாங்குவதற்காக , லக்னோவுக்கு அருகே சென்று கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இரயிலை மறித்து, அதிலுள்ள பணத்தை எடுத்து, சுதந்திரப் போரட்டத்தின் செலவுகளுக்காக கொடுத்து, சுதந்திரப் போரட்டத்திற்குண்டான விதையை இதே ஷாஜஹான்பூரில் இருந்துதான் துவங்கியிருக்கின்றார்.

1927 டிசம்பர் 19ம் தேதி பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை, இதோ முஸ்லிம் என்பதற்காக ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்ட இதே மண்ணில்தான்,
அந்த முஸ்லிம் அஸ்பகுல்லா கானை தூக்கிலிட்டுள்ளார்கள். ஆனால் முஸ்லிம் என்பதற்காக தூக்கிடப்படவில்லை. இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவன் என்பதால் தூக்கிலிடப்பட்டிருக்கின்றான்.

இப்படி தேசத்திற்காக போராடி , செத்துப்போனவர்களின் மண்ணில் ஏன் இந்த பிரிவினைவாதம்? தூக்கிலிடப்படுவதற்கு முன் அஸ்பகுல்லா கான் நினைத்திருப்பான், அந்த உயிர் எல்லாருக்குமான விடுதலை வேட்கை என்று. இந்த தேசம் எல்லாருக்குமானதாயிருக்குமென்றுதானே அவன் செத்துப் போயிருப்பான்?

Ref: https://caravandaily.com/poor-muslim-boy-dies-in-up-allegedly-after-hospital-denies-ambulance/
https://en.wikipedia.org/wiki/Ashfaqulla_Khan

#Modi20 #NewIndia #Modi2019_2024 #HindutvaTerroists

Rajinikanth & BJP

இந்தியா முழுவதும் பாஜ வெற்றி பெற்றாலும் தமிழகத்தில் அக்கட்சியால் பலமான கூட்டணி அமைத்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதுதான் தமிழர்களின் மனநிலை. அந்த உணர்வுக்கு மதிப்பு கொடுக்காமல், அதைப்பற்றி துளியும் கவலைப்படாமல், தமிழக மக்கள் முழுமையாக எதிர்க்கும் ஒரு கட்சிக்கு முதல் ஆளாக முந்திக்கொண்டு வாழ்த்து தெரிவிக்கிறார் ரஜினி. எவ்வளவு பெரிய சந்தர்ப்பவாதி, சுயநலவாதியை தமிழகம் சூப்பர் ஸ்டார் ஆக்கி அழகு பார்த்துள்ளது. இனியாவது இவரை மக்கள் புரிந்துகொண்டால் சரி....

RSS & BJP

இதில் சில கருத்துக்களை
நிச்சயம் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்

முஸ்லீம்களுக்கு ரவீஷ் குமாரின் உணர்ச்சிகரமான வேண்டுக்கோள்:*_

_புது தில்லிا:_
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒன்றில் *தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ரவீஷ் குமார்* முஸ்லீம்களிடம் ஒரு உணர்ச்சிகரமான கோரிக்கையை வைத்தார். *_அவரது பொன்னெழுத்து வார்த்தைகள் பின்வருமாறுا :_*

1. BJP மற்றும் RSS-ஐ விமர்சிப்பதை நிறுத்துங்கள்.

2. உங்களது எதிர்ப்பே அவர்களது பலம். ஜம்மு காஷ்மீரைத் தவிர்த்து நீங்கள் இங்கு எங்கும் முதல்வராகவோ, பிரதமராகவோ ஆகவே முடியாதுا.

3. நாற்காலியை அபகரிக்க விரும்புகிறவர்கள்தான் BJP & RSS-ஐ எதிர்த்து போட்டியிடுவார்கள். உங்களது எதிர்ப்புகளால் 18% முஸ்லீம்களின் பயம் ஹிந்துக்களிடத்தில் ஏற்படுத்துவதால் அவர்கள் 80% ஹிந்துக்களின் வாக்குகளை பெற்று விடுகிறார்கள். உண்மையில் இந்த நாடகத்தின் இயக்குநர் வெறும் 3% தான்.

4. நீங்கள் விரும்புகிற எந்தக் கட்சிக்கும் வாக்களியுங்கள், ஆனால் BJP, RSS அல்லது மோடியை எதிர்க்காதீர்கள்.

5. RSS என்ற இயக்கம் இருப்பதை மறந்துவிடுங்கள்.

6. BJP என்ற கட்சி ஒன்றிருப்பதை மறந்து விடுங்கள்ر

7. மோடி என்றொரு தலைவர் இருப்பதையும் மறந்து விடுங்கள்.

8. நீங்கள் இப்போது செய்வதை தொடர்ந்தால் விரைவில் அரசியல் தீண்டாமைக்கு உட்படுவீர்கள். உங்களை காங்கிரஸோ, JP, SP, BSP என எந்த கட்சியும் கண்டுக்கொள்ளாதுا

9. MIM-க்கோ உவைஸி-க்கோ கண்மூடித்தனமாக ஆதரவளித்தால் (ஓட்டுச் சிதறலில்) பாஜக-விற்கு ஆதாயம் கிடைக்கும் வரை அவர்களை போட்டியிட அனுமதிப்பார்கள். பாஜக-விற்கு பாதகம் ஏற்படும்பட்சத்தில் 30, 40 வருடங்களுக்கு முன் செய்தது போல் MIM-ஐ தடை செய்து விடுவார்கள். நீங்கள் நவீன தொழில்நுட்பங்களிலும், கல்வியிலும் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்களைப் பெற்று இட ஒதுக்கீட்டை எதிர்ப்பார்க்காமல் அரசாங்க வேலைகளை பெற முயற்சியுங்கள்.

10. சுதந்திரத்திற்கு முன் முஸ்லீம்கள் 35% இருந்தனர், 35% அரசாங்க வேலைகளும் பெற்றனர். அப்போது இட ஒதுக்கீடு இல்லை. அவ்வளவு வேலை வாய்ப்பையும் அவர்களது சொந்த முயற்சியால் பெற்றனர். உங்கள் மத நிறுவனங்களுக்கு கொடுக்கும் ஜzகாத், ஸதகா°-களை கல்விக்காகவும், வேலைவாய்ப்பிற்கும் பாடுபடும் நிறுவனங்களுக்கு வழங்கவேண்டும். அந்த மாதிரி நிறுவனங்கள் இல்லையெனில் அந்த நிதியைக் கொண்டு தொடங்கவும்ر

11. *நினைவில் கொள்ளுங்கள்:* இது போட்டிகள் மிகுந்த காலம். நீங்கள் அனைத்து தளங்களிலும் மிகவும் பின்தங்கியுள்ளீர்கள். அரசாங்க உதவி எதிர்ப்பார்க்காதீர்கள், *உங்கள் சொந்த முயற்சிகளைக் கொண்டு நீங்கள் விரும்பியதை செய்யுங்கள். _இறைவன் மற்றதை செய்வான்ا_*
_தமிழில் : -அமீன், ஆம்பூர்_
Sent from my iPhone

Saturday, 25 May 2019

பேச்சாளர் பயிற்சி வகுப்பு நிறைவு விழா

*அபுதாபி மண்டல தமுமுக சார்பில் நிர்வாகிகளுக்காக நடத்தப்பட்ட இப்தார் நிகழ்ச்சி*

இறைவனின் மாபெரும் கிருபையால் அபுதாபி மண்டல தமுமுக சார்பில் மண்டல மற்றும் கிளை நிர்வாகிகளுக்கான இப்தார் நிகழ்ச்சி 25/05/2019 சனிக்கிழமையன்று மண்டலத் தலைவர் அபுல்ஹசன் தலைமையில் முஸாபா மேஜிக் செப் ரெஸ்டாரண்டில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சியின் துவக்கமாக அமீரக தமுமுக - மமக தலைவர் அப்துல் ஹாதி அவர்களின் மகனார் ஈஷா கிராஅத் ஓதினார்.
முஹம்மது பின் ஜாயித் சிட்டி கிளை தமுமுக - மமக தலைவர் முஹம்மது தெளஃபிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அல்டப்ரா கேம்ப் கிளை தமுமுக- மமக தலைவர் தலைவர் எமனை சர்புதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

அமீரகத் தமுமுக - மமக தலைவர் அப்துல் ஹாதி அவர்களும், அமீரகத் தமுமுக - மமக துணைத் தலைவர் A.S. இப்ராஹிம் ஆகியோர் சிறப்பு மார்க்க சொற்பொழிவை நிகழ்த்தினர்.

சனையா கிளை செயற்குழு உறுப்பினர் சித்திக் அவர்கள் என்னைக்கவர்ந்த தமுமுக என்ற தலைப்பில் தமுமுகவில் இணைந்ததால் மார்க்க விசயங்களை அறிந்து அதன் வழி நடக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்த விசயத்தை நெகிழ்ச்சியோடு நிகழ்ச்சியில் வெளிப்படுத்தி பேசினார்.

கடந்த டிசம்பர் மாதம் முதல் அபுதாபி மண்டல தமுமுகவின் சார்பில் பேச்சாளர் பயிற்சி முகாம் அமீரகத் தமுமுக- மமக துணைத்தலைவர் A.S. இப்ராஹிம் அவர்களால் பத்து வகுப்புகள் நடைப்பெற்றது. இப்பயிற்சி முகாமில் கலந்துக்கொண்டு பேச்சாளர்களாக உருவான சகோதரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பேச்சாளர் பயிற்சி முகாம் பயிற்சியாளர் A.S. இப்ராஹிம் அவர்களுக்கு பயிற்சிப்பெற்ற சகோதரர்கள் சார்பில் நினைவுப்பரிசு வழங்கி சிறப்பித்தனர்.

அபுதாபி மண்டல இஸ்லாமிய பிரச்சாரப்பேரவை IPP பொறுப்பாளர் தாஜிதீன் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி முடிவுற்றது.

இந்த இப்தார் நிகழ்ச்சிக்கு அபுதாபி மண்டல அனைத்து கிளை மற்றும் மண்டல நிர்வாகிகள் பங்குக்கொண்டு சிறப்பித்தனர்.

இப்படிக்கு
தமுமுக ஊடகப்பிரிவு
அபுதாபி மண்டலம்.

Saturday, 13 April 2019

Indian law




1,  ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)  2,  நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை.  IPC-217  3,  நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம்.  CRPC 404  4,  அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166  5,  எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.   6,  சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம்.  Article 19(1) , CRPC 303,302(2)  7,  வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.  8,  இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ் எவர் ஒருவரும் பார்வையிடலாம்.  9,  இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43  10,   ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல்



Thursday, 4 April 2019

Father respect is must

தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்...

பொதுவாக தந்தைகளின் இறுதிக் காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்குரியது.

இதனால்தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர் மரணித்துவிட வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.

குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடான பின்னர் அவரை கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும். மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி, மூன்று வேளையும் சாப்பிட்டுவிட்டு பேசாமல் கிடந்தால் போதும் என்ற மனப்பான்மையுடன் தான் பல பிள்ளைகள் தந்தைமாரை நடத்தி வருகின்றனர்.

வயதான தந்தை தன் குடும்பத்தினரிடமிருந்து மிகக் கொஞ்சமாகத்தான் கேட்பார். ஏனெனில் கேட்டுப் பழகாத குடும்பத் தலைவராக இருந்தவர். கொடுக்க மட்டுமே தெரிந்து வைத்திருந்தவர். எனவே வயதான காலத்தில் வாய்திறந்து கேட்கமாட்டார். குடும்பத்தினர் தான் அவரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைக்க வேண்டும்.

வாசிக்கும் பழக்கம் உள்ளவரானால் குறைந்த பட்சம் வாரப் பத்திரிகையாவது வாங்கிக் கொடுங்கள்.

சில்லறைச் செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் கொடுங்கள்.

மூலையில் அமர்த்தாமல் சிறிய வேலைகளைக் கொடுங்கள்
.
பேரன் பேத்திகளை அவரிடமிருந்து பிரிக்காதீர்கள். அவர்கள் தந்தையால் கொண்டாடப்படும் செல்வங்கள்

குடும்பத் தேவைகளைப் பார்த்து பார்த்து செய்தவருக்கு, இப்போது உங்கள் காலம், பார்த்துப் பார்த்துச் செய்வதற்கு.

ஒருவர் மறைந்த பின்னர், அதைச் செய்யவில்லையே, இதைச் செய்திருக்கலாமே என்று எண்ணிப் புலம்புவதைவிட அவர் உயிருடன் இருக்கும்போதே தந்தையின் இறுதி காலம் அமைதியாகக் கழிவதற்கு வழி செய்யுங்கள்.

வயதானவர்களுக்கு தனிமை மிகக் கொடுமையானது.
ஒரு சிறிய வானொலியை வாங்கிக் கொடுங்கள். முடிந்தால் தனி டி.வி இல்லையேல் உங்களுடன் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க விடுங்கள்.

தன் மனைவியை இழந்த தந்தையின் தனிமை மிகமிகக் கொடுமையானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

பெண் ஒரு கணவனை இழந்தால் அவரால் அதை ஜீரணித்து தன் பிள்ளைகளுடன் போய்ச் சேர்ந்து கொள்வாள். பெண் சூழலுக்கு ஏற்றாற்போல வளைந்து கொடுப்பாள்.

குடும்பத் தலைவன், அதிகாரம் செலுத்தியவன், சம்பாதித்தவன், பிறர் மதிப்புக்கு உரியவன் என்றெல்லாம் வாழ்ந்து விட்ட தந்தை, தன் அதிகாரமும், அன்பும், நெருக்கமும், காட்டக் கூடிய மற்றும் என வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளக் கூடிய மனைவியை இழந்தபின் கையறு நிலைக்கு ஆளாகி விடுகிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இவற்றை உணர்ந்து தந்தைக்கு மரியாதை செய்யுங்கள். அவர் கௌரவிக்கப்பட வேண்டியவர்!

*ஒவ்வொரு மகனும் , மகளும் படித்து உணர வேண்டிய பதிவு*.

--படித்து மனம் கலங்கியது.