Saturday, 17 October 2015

இருண்ட காலத்தை நோக்கிச் செல்கிறதா இந்தியா?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பாஜக ஆட்சியில் நிலைபெறும் அச்சுறுத்தல்கள் நீண்டகால விளைவுகளைக் கொண்டவை
இந்து மதத்தின் உருவ வழிபாடு குறித்து வெளிப்படையாக விமர்சித்துவந்த 77 வயதான எம்.எம். கல்புர்கி, கடந்த அகஸ்ட் மாதம் தனது வீட்டு வாசலிலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். பிப்ரவரி மாதம், மும்பை அருகே கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கோவிந்த பன்ஸாரே கொல்லப்பட்டார். 2013-ல், மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த சமூக ஆர்வலர் நரேந்திர தபோல்கர் கொலைசெய்யப்பட்டார். இந்தப் படுகொலைகள், மிகப் பெரிய அபாயத்தின் அறிகுறிகள்தான். மதச்சார்பற்ற குரல்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன; பிற அபாயங்கள் தொடரப்போகின்றன.
பேச்சுரிமைக்கு எதிரான தாக்குதல்கள் இந்தியாவில் அவ்வப்போது நடப்பவைதான் என்றாலும், இந்த முறை விஷயம் வேறு மாதிரியானது. இச்சம்பவங்கள் தொடர்பான செய்திகள் முதல் பக்கத்தில் இடம்பெறுகின்றன. ஆனால், அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறது அரசு. இவ்விஷயங்கள் தொடர்பான பிரதமர் மோடியின் மவுனம், அவற்றை மறைமுகமாக ஆதரிப்பதைக் காட்டுகிறது என்றே பலர் கருதுகிறார்கள். ஏனெனில், 2014-ல் அவர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுபோன்ற தாக்குதல்கள் வலுப்பெற்றிருக்கின்றன.
இந்து பாகிஸ்தான்?
அண்டை நாடுகளை ஒப்பிடும்போது சுதந்திரமான ஜனநாயக நாடாகவும், உயர்ந்த எண்ணங்களை ஆதரிக்கும் நாடாகவும் பெருமிதம் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு இது மிக முக்கியமான தருணம். 2011-ல் பாகிஸ்தான் தாராளவாத அரசியல் தலைவர் சல்மான் தஸீர் படுகொலை செய்யப்பட்டபோது, இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் எம்.ஜே. அக்பர் (தற்போது பாஜக செய்தித் தொடர்பாளராக இருக்கிறார்) இவ்வாறு சொன்னார்: “சல்மான் தஸீர் மட்டும் இந்திய முஸ்லிமாக இருந்திருந்தால், இந்நேரம் அவர் உயிருடன் இருந்திருப்பார்.” வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின்போது, அந்நாட்டின் ஜனநாயக அமைப்பின் எதிர்காலம் குறித்து இந்தியா கவலை தெரிவித்திருந்தது.
மாறாக, நாம் இந்தியாவில் நடக்கும் விஷயங்களைப் பற்றித்தான் கவலைப்பட வேண்டும். இந்தியா விமர்சிக்கும் அதன் அண்டை நாடுகளின் பாதையில் இந்தியாவும் சென்றுவிடலாம் என்பதையும் நாம் உணர வேண்டும். மும்பையைச் சேர்ந்தவரும் புகழ்பெற்ற பத்திரிகையாளருமான நிகில் வேகில் என்னிடம் சொன்னார், “மதச்சார்பின்மை இல்லையெனில், இந்தியா ஒருஇந்து பாகிஸ்தானாக இருக்கும்.”
இந்தியாவில் நடந்திருக்கும் இந்தப் படுகொலைகளுக்கும் இந்த ஆண்டு வங்கதேசத்தில் வலைப்பூ எழுத்தாளர்கள் 4 பேர் கொல்லப்பட்டதற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. ஆனால், வங்கதேசத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக உலகளாவிய விமர்சனங்கள் எழுகிறபோது, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு எனும் அங்கீகாரப் பூச்சுக்குப் பின்னே மறைந்துகொள்கிறது இந்தியா.
நீடிக்கும் அச்சுறுத்தல்கள்
கொலைகள் மற்றும் அச்சுறுத்தல்களின் விளைவாக, சுய தணிக்கையும், பயமும் கொண்ட சூழல் உருவாகி யிருக்கிறது.
கொலையாளிகளில் சிலர் இன்னமும் பிடிபடவில்லை. ஒரு கையில் துப்பாக்கியைச் சுமந்துசெல்லும் கொலையாளிகள் மறு கையில் பெயர்ப் பட்டியலை வைத்திருக்கிறார்கள். செப்டம்பர் 20-ல் சில தொலைபேசி அழைப்புகளை இடைமறித்துக் கேட்டவர்கள் மூலம் ஒரு முக்கியமான தகவலை, பத்திரிகையாளர் வாக்லே தெரிந்துகொண்டார். மற்றொரு வலதுசாரி அமைப்பானசனாதன் சன்ஸ்தாஅடுத்து தன்னைக் குறிவைத்திருப்பதாக அவருக்குத் தெரியவந்தது. கல்புர்கியின் மரணத்தைக் கொண்டாடிய வலதுசாரித் தீவிரவாதிகள் பகிரங்கமாகவே பேசினர். இந்து மதத்தின் சாதி அமைப்பை விமர்சித்துவருபவரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான கே.எஸ். பகவான்தான் அடுத்த குறி என்று ட்விட்டரில் மிரட்டல் விடுத்தனர்.
மதச்சார்பற்ற நாடான இந்தியாவை, ‘இந்து தேசமாக மாற்றும் நோக்கம்தான் இக்கொலைகளுக்குக் காரணமாக இருக்கும் என்று தெரிகிறது. அரசியல் தலைவர்களின் மவுனம் மட்டுமல்லாமல், ஆளும் கட்சியான பாஜகவின் இந்து தேசியக் கொள்கைகளும் இந்நோக்கத்துக்குத் துணைபுரிகின்றன.
இந்துத்வா எனும் தகுதி
கடந்த சில மாதங்களாக, நேஷனல் புக் ட்ரஸ்ட் மற்றும் நாளந்தா பல்கலைக்கழகம் போன்ற முக்கிய நிறுவனங்களில் ஒலித்துக்கொண்டிருந்த மதச்சார்பற்ற குரல்களை ஒழித்துக்கட்டியிருக்கிறது இந்திய அரசு. ஏதோ சராசரியான ஆட்களைத் தூக்கியடிக்கவில்லை அரசு. நாளந்தா பல்கலைக்கழக வேந்தராகப் பதவி வகித்தவர் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென். புகழ்பெற்ற ஆளுமைகளின் பதவியிடங்கள், இந்துத்வா கொள்கை மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை மட்டுமே தகுதியாகக் கொண்டவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டன.
இந்தியா எனும் மதச்சார்பற்ற நாட்டுக்கு அடித்தள மிட்டவரும் இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவாகர் லால் நேருவின் பாரம்பரியத்தைக் குறிவைப்பதுதான், இந்த அரசின் இலக்குகளில் மிக முக்கியமானது. கடந்த மாதம், புது டெல்லியில் உள்ளநேரு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் இயக்குநரை வெளியேற்றிய அரசு, தற்போது அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றத் திட்டமிட்டிருப்பதாக அறிவித்ததுடன், பிரதமர் மோடியின் சாதனைகளை விளக்கும் பணிகளைச் செய்யவும் திட்ட மிட்டிருக்கிறது. வாஷிங்டன் நினைவிடத்தை, ஒபாமா அருங்காட்சியகமாக மாற்றுவதற்கு ஒப்பானது இது!
சுதந்திரச் சிந்தனை கொண்ட தலைவர்களின் பங்களிப்புகளை இருட்டடிப்புச் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருப்பதுடன், மூர்க்கமான இந்து தேசியத் தலைவர்களை முன்னிறுத்துவதிலும் முனைப்புடன் இருக்கிறார்கள் பாஜக தலைவர்கள். மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த நாதுராம் கோட்ஸே வைத்தேசபக்தர்என்று விளித்தார் பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ். பின்னர், தனது கருத்தை அவர் திரும்பப் பெற்றுக்கொண்டாலும், அவரது கருத்தை பாஜக தலைவர்கள் பலர் ஆதரித்தார்கள். காந்தியைப் படுகொலை செய்த கோட்ஸே, ஆயுதம் தாங்கிய இந்து அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.ஸின் முன்னாள் உறுப்பினர். அந்த அமைப்புடன் தனது 8-வது வயதிலிருந்தே தொடர்பில் இருப்பவர் மோடி. இந்து தேசியவாத அரசின் நிழலில் தாங்கள் பலம் பெற்றிருப்பதாக இந்து அடிப்படைவாதிகள் கருதுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
நசுக்கப்படும் பேச்சுரிமை
2010-ல் வெளியான தனது நாவலால் ஆத்திரமடைந்த இந்து அமைப்புகளிடமிருந்து தனக்கு மிரட்டல்கள் வந்ததாக, புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகன், கடந்த டிசம்பர் மாதம் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தார். அவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் வலியுறுத்தின. எங்காவது கண்காணாமல் போய்விடுவது நல்லது என்று போலீஸார் அவருக்கு அறிவுறுத்தினர். தனித்துவிடப்பட்டவராக உணர்ந்த பெருமாள் முருகன், தனது ஒட்டுமொத்த இலக்கிய வாழ்க்கையைவிட்டே விலகுவதாக ஜனவரி மாதம் அறிவித்தார். தனது குடும்பத்தின் பாதுகாப்பைக் கருதி, எழுதுவதையே கைவிடுவதாக ஃபேஸ்புக்கில் அறிவித்தார்.
இந்த அச்சுறுத்தல்கள் பாஜக ஆட்சியில் இருக்கும் வரைதான் தொடரும் என்றுகூட நினைக்கலாம். ஆனால், இந்தியாவின் கட்டுமானத்திலேயே நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த மாற்றம், நீண்டகால விளைவு களை ஏற்படுத்திவிடும் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். இந்தியாவில் நடக்கும் இந்தத் தாக்குதல்களை, ஏதோ மதச்சார்பற்ற எழுத்தாளர்கள் அல்லது சுதந்திரச் சிந்தனையாளர்களுக்கு மட்டும் நடக்கும் பிரச்சினையாகப் பார்க்க முடியாது. ஜனநாயகத்தைக் கட்டமைக்கும் அமைப்பின் - இதயத்தின் - மீதான தாக்குதல் இது. இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக இந்தியர்கள் போராட வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டுமென்று வலியுறுத்த வேண்டும். நமது சொந்தக் குரலை இழப்பதற்கு முன்னர், அனைவரின் குரல்களைக் காக்க முன்வர வேண்டும்!
- சோனியா ஃபெலீரோ,
rss_2581692f

Sunday, 4 October 2015

பாலைவனத்தில் 5 ஆயிரம் ஆண்டுகளாக குடிநீர் வழங்கும் ஜம்ஜம் கிணறு!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

சவூதி அரேபியாவில் மெக்காவின் கஃபாவுக்கு அருகே அமைந்துள்ளது ஜம் ஜம் கிணறு 5 ஆயிரம் வருட வரலாறு கொண்ட இக்கிணற்றின் நீரை, உலகில் உள்ள பெரும்பாலான‌ முஸ்லிம்கள் அருந்தியிருப்பார்கள். மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொள்ள உலகில் பல தேசங்களில் இருந்து வரும் முஸ்லிம்கள் இந்த புனித கிணற்று நீரை குறைந்தது 20 லிட்டராவது எடுத்து தங்களது நாட்டிற்கு செல்வார்கள். ஒரு முறை ஜரோப்பா மருத்துவர்கள், சுகாதாரத்திற்காக இந்த கிணற்றினை சுத்தப்படுத்த வேண்டும் என்று சவூதி அரசுக்கு ஆலோசனை கூறினார்கள். இதை ஏற்றுக்கொண்ட சவுதி அரசு 8 அதி நவின ராட்சத பம்பு செட்டுளை கொண்டு தொடர்ந்து இரவும், பகலுமாக 15 நாட்கள் இந்த நீரை இறைத்தது. ஆனால் நீரின் அளவு குறையவில்லை. மாறாக நீரின் மட்டம் ஒரு அங்குலம் உயர்ந்து இருந்தது. ஒரு வினாடிக்கு 8 ஆயிரம் லிட்டர் என்ற அளவில், தினமும் 691.2 மில்லியன் லிட்டர் தண்ணீரை தொடர்ச்சியாக ராட்சத மோட்டார்கள் மூலம் இந்த கிணற்றுத்தண்ணீர் உறிஞ்சப்படுகிறது.
நல்ல நீர் வளம் உள்ள ஒரு பெரிய கிணற்றில் உள்ள நீரை ஒரு வருடம் எடுக்கும் அளவு நீரை, ஒரே நாளில் ‘ஜம் ஜம்’ கிணற்றில் இருந்து எடுக்கபடுவது மிகப்பெரிய அதிசயம், அதை விட அதிசயம் மில்லியன் கணக்கில் நீரை தினமும் எடுத்தும், அப்போதும் இதன் அளவு குறைவதில்லை. சுவையும் மாறியதில்லை.ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் உலகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் அங்கே குழுமுகிறார்கள். அனைவருக்கும் இந்தக் கிணற்றில் இருந்து தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
குறைந்த அளவே ஆழம் உள்ள இந்தக் கிணறு, பாலைவனத்தில் அமைந்துள்ள இந்தக் கிணறு, அருகில் ஏரிகளோ கண்மாய்களோ குளம் குட்டைகளோ இல்லாத அந்தக் கிணற்றில் இருந்து  லட்சோப லட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என்பது ஆச்சரியப்படவைக்கிறது.  பெரும்பாலான‌ நீர் ஊற்றுகள் சில வருடங்களிலோ பல வருடங்களிலோ செயலிழந்து போய் விடும். ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது அற்புதமாகும். ஜம் ஜம் கிண்று அருகே எந்த தாவரமும் வளருவதில்லை.எந்த ஒரு நீர் நிலையாக இருந்தாலும் பாசி படிந்து போவதும் கிருமிகள் உற்பத்தியவதும் இயற்கை. இதனால் தான் குளோரின் போன்ற மருந்துகள் நீர் நிலைகளில் கலக்கப்படுகின்றன. ஆனால் ஜம்ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருந்துகள் மூலமும் அது பாதுக்காக்கப்படாமல் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வது.
மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது என்பது அறிவியலின் முடிவாகும். ஆனால் இந்தத் தண்ணீர் 1971 ஆம் ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதித்துப் பார்க்கப்பட்ட போது இது குடிப்பதற்கு மிகவும் ஏற்ற நீர் என்று நிருபிக்கப்பட்டது .பூமியிலுள்ள நீரில் மிகச்சிறந்தது ‘ஜம் ஜம்’ நீர் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள். பொதுவாக மற்ற நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர் வேறுபட்டுள்ளதும் சோதனையில் தெரிய வந்துள்ளது. கால்ஷியம் மற்றும் மேக்னீஷியம் எனும் உப்பு மற்ற வகை தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக உள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உப்புக்கள் புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை என இத்தண்ணீரை பருகியவர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் இந்தத் தண்ணீரில் ஃபுளோரைடு உள்ளது  இது கிருமிகளை அழிக்க வல்லது. உலகம் முழுவதும் ஏராளமான ஆச்சரியங்களும் அற்புதங்களும் நிகழ்ந்து வந்தாலும் தினசரி லட்சக்கணக்கான‌ மக்களுக்கு அந்தத் தண்ணீர் குடி நீராகப் பயன்படுவதும் அதுவும் பாலைவனத்தில் இந்த அதிசயம் பல்லாயிரம் ஆண்டுகள் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
TamilDailyNews_1054455041886

ஜிமெயிலில் புதிய வசதி!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ஜிமெயிலில் சின்னதாகப் பல வசதிகள் உண்டு. இவற்றில் பலவற்றை நீங்கள் கவனிக்காமல் கூட இருக்கலாம். இப்போது இந்தப் பட்டியலில் புதிதாக ஒரு அம்சம் அறிமுகமாகி இருக்கிறது. அது இமெயில்களை பிளாக் செய்யும் வசதி.
ஏதேனும் ஒரு காரணத்திற்காக குறிப்பிட்ட ஒருவரிடமிருந்து நீங்கள் இமெயில் பெற விரும்பாவிட்டால், அவரின் மெயிலை வரும் முன் தடுத்துவிடலாம்.
இதற்காக மெயிலின் வலப்பக்கத்தில் பதில் அளிக்கும் வசதி அருகே உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கிளிக் செய்தால் வரிசையாக பல அம்சங்களின் பட்டியல் வரும். அதில் உள்ள, பிளாக் செய்யவும் வசதியை தேர்வு செய்தால் இனி அந்த நபரின் இமெயில் உங்கள் இன்பாக்ஸுக்கு வராது. அதற்கு முன்னரே தடுக்கப்பட்டு ஸ்பேம் ஃபோல்டருக்குள் அனுப்பி வைக்கப்படும். விளம்பர மெயில் போன்ற தொல்லைகளில் இருந்து தப்பிக்க இந்த வசதி கைகொடுக்கும்.
இதற்கு முன்னரும் கூட ஜிமெயிலில் உள்ள வடிகட்டல் வசதியைப் பயன்படுத்தி வேண்டாத மெயில்களைத் தடுக்கலாம். ஆனால் இதை மிக எளிதாக செய்யக்கூடிய வகையில் புதிய அம்சம் அமைந்துள்ளது.
ஆனால் பழைய மெயில்களுக்கு இது பொருந்தாது. புதிதாக வரும் மெயில்களில் இந்த வசதியைத் தேர்வு செய்து இயக்கினால் மட்டுமே பிளாக் செய்வது சாத்தியம். இதே போல ஆண்ட்ராய்டுக்கான ஜிமெயில் செயலியில் இமெயில் சந்தாக்களில் இருந்து விலகிக்கொள்ளும் அம்சமும் அறிமுகமாயிருக்கிறது.
gmail_2569250f

ஒரு நிமிடம் கூகுள்.காம் உரிமையாளராக இருந்த இந்தியர்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இயக்குனர் ஷங்கரின் ஒரு நாள் முதல்வர் போல முன்னாள் கூகுள் ஊழியர் ஒருவர் கூகுள்.காம் இணைய முகவரியின் ஒரு நிமிட உரிமையாளராக இருந்திருக்கிறார். இதை நம்புவதற்கு கடினமாக இருந்தாலும், இணைய உலகிலேயே அதிக போக்குவரத்தை கொண்ட கூகுள்.காம் இணையதளத்தின் முகவரி அமெரிக்க இந்தியரான அந்த நபருக்கு சொந்தமாகி ஒரு நிமிடத்தில் கைவிட்டு போயிருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த சான்மே அஸ்வின் வேத் என்பவர் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர். தற்போது எம்பிஏ படித்து வரும் சான்மே இணைய முகவரிகளை வாங்கும் பழக்கம் கொண்டவர். பொதுவாக கூகுளின் இணைய முகவரி விற்பனை சேவையான கூகுள் டொமைன்ஸ் மூலம் தான் இணையதள முகவரிகளை வாங்குவது வழக்கம்.
சமீபத்தில் அவர் கூகுள் டொமைன்ஸ் இணையதளத்தில் விளையாட்டாக கூகுள்.காம் இணையதள
முகவரியை டைப் செய்திருக்கிறார். வழக்கமாக ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இணையதளம் என்றால் மன்னிக்கவும் இந்த இணைய முகவரி விற்பனைக்கு இல்லை எனும் செய்தி தோன்றும்.
ஆனால்,கூகுள்.காம் இணையதள முகவரியை டைப் செய்த பிறகு இது போன்ற செய்தி தோன்றுவதற்கு மாறாக இந்த முகவரியை வாங்கலாம் என்னும் செய்தி தோன்றியிருக்கிறது. இதை சான்மேவால் நம்பவே முடியவைல்லை.
இணைய உலகிலேயே அதிகமானவர்களால் விஜயம் செய்யப்படும் கூகுள்.காம் முகவரி விற்பனைக்கு உள்ளதா என்னும் மலைப்புடன் அவர் அதை வாங்குவதற்காக கிளிக் செய்து கிரிடிட் கார்டு விவரத்தை சமர்பித்தார். இப்போது கூட அவருக்கு நம்பிக்கை இல்லை, தனது கிரிடிட் கார்டு விவரம் நிராகரிக்கப்படும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் ஆச்சர்யப்படும் வகையில் அவர் கிரிடிட் கார்டு ஏற்கப்பட்டு அந்த முகவரிக்கான 12 டாலர் பிடித்துக்கொள்ளப்பட்டது. ஆக அவர் கூகுள்.காம் இணைய முகவரியின் புதிய உரிமையாளராகி இருந்தார்.
ஆனால் ஒரு நிமிடம் கழித்து கூகுள் டொமைன்சிடம் இருந்து அவருக்கு வந்த இ-மெயில் அவரது ஆர்டர் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தது. அந்த முகவரி ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஒரு நிமிடத்தில் கைநழுவிப்போனாலும், அந்த ஒரு நிமிடம் அவர் கூகுள்.காம் இணைய முகவரியின் உரிமையாளராக இருந்திருக்கிறார்.’
இந்த விநோதம் பற்றி சான்மே வேத் தன்னுடைய லிங்குடு. இன் பக்கத்தில் விரிவாக எழுதியிருக்கிறார். இது எப்படி நிகழ்ந்தது என்று தமக்குத்தெரியவில்லை என்றும், இதற்கு ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருந்திருக்கலாம் அல்லது கூகுள் முகவரியை புதுப்பிக்க தவறியிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

google_vc2

தேனியில் பிச்சை எடுத்த சிறுமிக்கு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிச்சை எடுத்த ஒரு சிறுமிக்கு, மருத்துவக்கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் ரஷ்யா சென்றடைந்தார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்த விவரம் வருமாறு:–
பிச்சை எடுத்த சிறுமிகள்
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தனது 2 மகள்களுடன் தேனி பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தார். பின்னர் அந்த பெண்ணை பழனிசெட்டிபட்டியில் உள்ள அவருடைய உறவினர்கள் அழைத்துச் சென்றனர். அவருடைய மகள்களான கார்த்திகா, சர்மிளா ஆகிய 2 பேரும் தேனி அருகே கோடாங்கிபட்டியில் உள்ள ஒரு ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
பின்னர் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், கார்த்திகா 8–ம் வகுப்பிலும், சர்மிளா 6–ம் வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர். கார்த்திகா எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 454 மதிப்பெண்கள் எடுத்தார். கடந்த கல்வி ஆண்டில் பிளஸ்–2 அரசு பொதுத்தேர்வு எழுதிய இவர் 892 மதிப்பெண்கள் எடுத்தார்.
50 சதவீத கட்டணம்
சென்னையை சேர்ந்த ஒரு கல்வி அமைப்பு ரஷ்யாவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் படிக்க ஆண்டு தோறும் 200 மாணவிகளை தேர்வு செய்து அனுப்புகிறது. அவர்களில் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தை சேர்ந்த ஒரு மாணவியும் தேர்வு செய்யப்படுவார். அந்த மாணவி 50 சதவீத கல்விக்கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். அதன்படி இந்த ஆண்டு அன்று பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்த சிறுமி ரஷ்ய மருத்துவக்கல்லூரியில் படிக்க தேர்வானார்.
இதன்படி அடுத்த மாதம் முதல் வாரத்தில் ரஷ்யா செல்ல இருந்தார். இதற்கிடையே அவசர அழைப்பு காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேனியில் இருந்து புறப்பட்ட கார்த்திகா நேற்று ரஷ்யா சென்றடைந்தார். இந்த வாய்ப்பு குறித்து கார்த்திகா கூறியதாவது:–
நான் சங்கரன்கோவிலில் 4–ம் வகுப்பு வரை படித்தேன். பின்னர் அம்மாவுடன் சேர்ந்து நானும், என் தங்கையும் பிச்சை எடுத்தேம். பின்னர் நாங்கள் 2 பேரும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டோம். மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த எங்கள் தாயாரை, உறவினர் வீட்டில் சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர். எனது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியான மறுநாள் எங்கள் தாயார் இறந்து விட்டார்.
கலெக்டர் ஆக வேண்டும்
எனக்கு ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது கடவுளின் அருள்தான். அவர் மனித உருவில் வந்து உதவுகிறார். என்னிடம் அணிந்து செல்ல நல்ல ஆடைகள் கூட கிடையாது. எனக்கு புதிய ஆடைகள், செருப்பு, பைகள் என பலரும் வாங்கிக் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். நான் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்து அங்கிருந்து ரஷ்யா சென்றடைந்தேன்.
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் பலர் மருத்துவப் படிப்புக்கு தேவையான புத்தகங்களை வாங்கிக் கொடுத்தனர். எனக்கு கலெக்டர் ஆக வேண்டும் என்று ஆசை உள்ளது. ஏனெனில் நான் பணியாற்றும் இடங்களில் பிச்சைக்காரர்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதே என் லட்சியம். என்னை போலவே வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் சிறுவர், சிறுமிகளை மீட்டு அவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது லட்சியம். இவ்வாறு மாணவி கார்த்திகா தெரிவித்தார். வருடைய தங்கை சர்மிளா தற்போது பிளஸ்–1 படித்து வருகிறார். இவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 488 மதிப்பெண்கள் எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
201509300231245464_Begged-the-girlThe-possibility-of-studying-in-medical_SECVPF

‘புலி’க்கு வரிச்சலுகை மறுப்பு ஏன்?- அதிகாரிகள் கூறும் காரணங்கள்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘புலி’ படத்துக்கு வரிச்சலுகை மறுப்பு ஏன் என்பதற்கான காரணங்களை அதிகாரிகள் வெளியிட்டு இருக்கிறார்கள்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, சுதீப், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் அக்டோபர் 1ம் தேதி வெளியாகி இருக்கும் படம் ‘புலி’. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் வெளியாகி இருக்கும் இப்படத்தை பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்துக்கு வரிச்சலுகை அளிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள். அதற்கான காரணம் என்ன என்பது வெளியாகாமல் இருந்தது.
‘புலி’ படத்துக்கான வரிச்சலுகைக்கான காட்சியை சி.பழனி, ம.சி.தியாகராஜன், முனைவர் கா.மு.சேகர், டி.ஐ.மகாராஜன், ஏ.ஐ.ராகவன் மற்றும் எம்.என்.ராஜம் ஆகியோர் பார்த்திருக்கிறார்கள். ஏன் வரிச்சலுகை அளிக்கவில்லை என்பதற்காக அவர்கள் கூறியிருக்கும் காரணங்கள்.
* திரைப்படத்தில் மூட நம்பிக்கைகளை உண்மையாக காட்டப்படும் காட்சிகள் தமிழ் பண்பாட்டிற்கு உகந்ததாக இல்லை. திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் உள்ளன.
* படத்தின் பாடல் காட்சியில் மகளிரின் ஆடைகள் ஆபாச காட்சிகளாக சில இடங்களில் அமைந்துள்ளன.
* படத்தில் குழந்தையின் கழுத்து அறுபடுவது, சண்டைக் காட்சியில் வன்முறை, கொலைக்காட்சிகள் நேரிடையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
* மனித உயிர்களுக்கு மதிப்பளிக்கவில்லை. குழந்தைகளையும், பெண்களையும் வெட்டிக் கொல்லுவது ஏற்புடையதாக இல்லை. அதிகமான வன்முறை காட்சிகள் உள்ளது.
* திரைப்படம் முழுக்க வன்முறை அதிகரித்துள்ளது. ஆரம்பித்திலே இரட்டை அர்த்த வசனங்கள், 12 வயது குழந்தை கழுத்து வெட்டப்படுவதாக காட்டப்படுகிறது. மேலும், படம் முழுவதும் மூட நம்பிக்கைக்கு உயிர் ஊட்ட முளைத்திருப்பதால் வரி விலக்கிற்கு தகுதியானது அல்ல.
இவ்வாறு வரிச்சலுகை அதிகாரிகள் அனைவருமே ஆபாசம் மற்றும் வன்முறைக் காட்சிகளை மேற்கோள்காட்டி படத்துக்கு வரிவிலக்கு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
puli___5__2498825f

உ.பி. சம்பவம்: அறிக்கை கோருகிறது உள்துறை அமைச்சகம்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

உ.பி.யில் பக்ரீத் பண்டிகைக்காக பசுவை பலி கொடுத்ததாக கிளம்பிய வதந்தியால் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அறிக்கை அளிக்குமாறு அம்மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லிக்கு மிக அருகில் இருக்கும், உ.பி.யின் கவுதம புத்தர் மாவட்டத்தின் தாத்ரியில் உள்ள கிராமம் பிசோதா. இங்கு 58 வயதான இக்லாக் என்பவர் வீட்டில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பசு பலி கொடுக்கப்பட்டதாக கடந்த திங்கள்கிழமை இரவு வதந்தி கிளம்பியது.
இதைதொடர்ந்து பிசோதா மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் இக்லாக் வீட்டில் திடீர் என புகுந்து அவரையும் அவரது குடும்பத்தினரையும் கடுமையாகத் தாக்கினர். இதில் இக்லாக் அதே இடத்தில் உயிரிழந்தார். அவரது தாய் அஸ்கரி (70), மனைவி இக்ராமன் (52), இளைய மகன் தானிஷ் (21), மகள் ஷாஹிஸ்தா(16) ஆகியோர் காயம் அடைந்தனர். இதில் தானிஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மாநிலத்தில் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது.