அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
சென்னை விமான நிலையத்தில் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ''பல கோடி மதிப்புள்ள நூற்றுக்கணக்கான அறிவிப்புகளை 110 விதியை பயன்படுத்தி தொடர்ந்து சட்டமன்றத்திலே முதல்வர் படித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இது குறித்து என்னென்ன பணிகளை நடத்தி முடித்திருக்கிறோம்.கருத்துக் கணிப்பு என்பது பல கட்சிகளுக்கு, ஏன் எங்களுக்கே பல நேரங்களில் பாதகமாக வந்திருக்கிறது. சாதகமாக வந்திருக்கிறது. எனவே அதை வைத்து நாங்கள் இன்றைக்கு அரசியல் நடத்துவதில்லை' என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.
என்னென்ன பணிகள் என்ன சூழ்நிலைகளில் இருக்கிறது என்பதையெல்லாம் விளக்கி வெள்ளை அறிக்கை ஒன்றை சட்டமன்றத்தில் வைக்க வேண்டுமென்று சொல்லி பல முறை திமுக மட்டுமல்ல பல்வேறு கட்சியினுடைய தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறார்கள்.
ஆனால், இதுவரைக்கும் எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை. ஆகவே மக்களை ஏமாற்றிட, மக்களை திசைதிருப்புகிற நிலையில் தான் முதல்வர் 110 அறிக்கையை வெளியிடப்படுகிறார்.
சமீபத்தில் வெளியான ஒரு கருத்து கணிப்பைப் பற்றி பலரும் கேட்கிறார்கள். அதாவது கருத்து கணிப்பு என்பது பல கட்சிகளுக்கு ஏன் எங்களுக்கே பல நேரங்களில் பாதகமாக வந்திருக்கிறது. சாதகமாக வந்திருக்கிறது. எனவே அதை வைத்து நாங்கள் இன்றைக்கு அரசியல் நடத்துவதில்லை. எனவே எங்களை பொறுத்தவரையில் கட்சிப் பணி, மக்களை சந்திக்கிற பணி தொடர்ந்து கொண்டே இருக்கிறோம். ஆகையால் உங்கள் மற்ற யூகத்துக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல இயலாது.
தற்போது சட்டமன்றம் என்பது ஜெயலலிதாவினுடைய புகழ் பாடுகிற, அர்ச்சனை செய்கிற மன்றமாக தான் நடந்து கொண்டிருக்கிறது'' என்று ஸ்டாலின் பேசினார்.