Tuesday, 1 September 2015

பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தமிழில் பதில் அளிக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தமிழில் பதில் அளிக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு

“தமிழ் நாட்டின் ஆட்சி மொழி தமிழ். ஆனால்முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு தமிழில் அனுப்பப்படும் கோரிக்கைகளுக்கும், புகார்களுக்கும் அதிகமான நேரங்களில் ஆங்கிலத்தில் பதில் வருகின்றது. பல்வேறு துறைகளும், மாவட்ட நிர்வாகமும் ஆங்கிலத்தை பயன்படுத்தியே பதில் தருகின்றனர். தேவைப்படும்போது ஆங்கிலத்தை பயன்படுத்துவதில் தவறில்லை. எப்போதும் என்றால் பாமர மக்கள் இதை எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? ஆகவே,மான்புமிகு முதல்வர் அவர்கள் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற கொள்கை முழக்கத்திற்கேற்ப அனைத்து துறைகளிலும் இயன்றளவு தமிழை பயன்படுத்த உத்தரவிட வேண்டும்” என நான் தமிழக அரசுக்கு கோரிக்கை (கோரிக்கை எண்: 2015/834893QU, தேதி: 12/07/2015) விடுத்தேன்
நான் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு “மனுதாரின் கோரிக்கை சம்மந்தமாக அனைத்து துறை அலுவலா்களுக்கும் வாராந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மாவட்ட ஆட்சியரின் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தல் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தமிழில் பதில் அளிக்க நடவடிக்கை எடுக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இனிவரும் காலங்களில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தமிழில் பதில் அளிக்கப்படும் எனவும் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது (ந.க.எண்.ஐ2-1000-15 நாள்.16.7.2015)” என பதில் அளித்துள்ளது.

No comments:

Post a Comment