அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
ர்களின் தலைமையில் நடைப்பெற்ற இஜ்திமாவின் ஆரம்பபாக சகோதரர் அப்துல் ஹமீத் அவர்கள் குர்ஆன் வசனம் ஓதி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார், முதல் உரையாக சகோதரர் அமீர் சுல்தான் அவர்கள் சகோதரத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார், தனது உரையில் இஸ்லாம் கூறும் சகோதரத்துவ பிணைப்புகளையும் நமது நிலையையும் எடுத்துரைத்தார், அமீர் சுல்தான் பேசிக் கொண்டிருக்கும்போது மழை குறுக்கிட்டது உடனே சோனாப்பூர் கிளையின் சகோதரர்கள் திறந்த வெளிமைதானத்தில் நடந்துக் கொண்டிருந்த இஜ்திமா நிகழ்ச்சியை விவேகத்துடன் செயல்பட்டு உள் அரங்கிற்கு மாற்றினர்,
அமைதியை நோக்கிய இஸ்லாமிய இஜ்திமா
=========================================
அல்லாஹ்வின் கிருபையால் தமுமுக துபை மண்டலத்தின் சார்பாக 27-03-2015 வெள்ளியன்று சோனாப்பூர் பலுதியா கேம்பில் அஷர் முதல் இஷா தொழுகை வரை இஜ்திமா நிகழ்ச்சி நடைப்பெற்றது,

மண்டல ஒருங்கிணைப்பாளர் சகோதரர் மதுக்கூர் ஹாஜா அவ
ர்களின் தலைமையில் நடைப்பெற்ற இஜ்திமாவின் ஆரம்பபாக சகோதரர் அப்துல் ஹமீத் அவர்கள் குர்ஆன் வசனம் ஓதி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார், முதல் உரையாக சகோதரர் அமீர் சுல்தான் அவர்கள் சகோதரத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார், தனது உரையில் இஸ்லாம் கூறும் சகோதரத்துவ பிணைப்புகளையும் நமது நிலையையும் எடுத்துரைத்தார், அமீர் சுல்தான் பேசிக் கொண்டிருக்கும்போது மழை குறுக்கிட்டது உடனே சோனாப்பூர் கிளையின் சகோதரர்கள் திறந்த வெளிமைதானத்தில் நடந்துக் கொண்டிருந்த இஜ்திமா நிகழ்ச்சியை விவேகத்துடன் செயல்பட்டு உள் அரங்கிற்கு மாற்றினர்,
இரண்டாவதாக உரையாற்ற மண்டலத்தின் தலைவர் சகோதரர் இப்ராஹீம் அவர்கள் அழைக்கப்பட்டு சோதனையின் போது முஸ்லிமின் நிலை எப்படி இருக்கவேண்டும் என்பதை பற்றி எடுத்துரைத்தார்,தனது உணர்ச்சி பூர்வமான உரையில் அல்லாஹ்வின் தூதரும், நபித் தோழர்களும் தங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளை அணுகிய விதங்களை நினைவு கூர்ந்தார், முஸ்லிமிற்கு சோதனை ஏற்பட்டால் முழுமையாக இறைவனை சார்ந்திருக்க வேண்டுமெனவும் , பொறுமையை கொண்டும் தொழுகையை கொண்டும் அல்லாஹ்விடம் உதவியை தேட வேண்டுமென்று அறிவுரை கூறினார், சகோதரர் இப்ராஹீம் அவர்களின் உரைக்கு பிறகு மஹ்ரிப் தொழுகைக்கான இடைவெளி விடப்பட்டது,
மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு சகோதரர் நாசர் அலிகான் அவர்கள் உரையாற்ற அழைக்கப்பட்டு உள்ளம் அமைதிப் பெற நாம் கடைபிடிக்கவேண்டிய அணுகுமுறைகளை எடுத்துரைத்தார், இறைவனை நினைவுக் கூர்ந்தால் தான் நமது உள்ளம் அமைதிபெறும் என்பதை விளக்கி எல்லா நேரத்திலும் அல்லாஹ்வை நினைவுக் கூர்வோம் நமது உள்ளம் அமைதிப்பெற என்று கூறி தனது உரையை முடித்துக் கொண்டார், இறுதியாக மண்டலத்தின் செயலாளர் சகோதரர் அதிரை அப்துல் ஹமீத் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது,
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சோனாப்பூர் கிளையின் சகோதரர்கள் கடைய நல்லூரை சேர்ந்த முஹம்மது, அப்துல் ஹமீத், செய்யத் அலி, பாஷா மற்றும் மேலப்பாளையம் காஜா, திருச்சி பிலால் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர், எல்லாப் புகழும் இறைவனுக்கே!