Friday, 20 March 2015

துபாய் கிளை சார்பாக அகமும் புறமும் ( கணவன் மனைவி வாழ்க்கை முறை )

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,










அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்பணிகள்பல செய்துகொண்டு இருக்கிறது.
இதில் துபாய் கிளை சார்பாக அகமும் புறமும் ( கணவன் மனைவி வாழ்க்கை முறை ) நேற்று 20.03.2015 மாலை 5.00 மணிக்கு ஆரம்பித்து இரவு 10.00 மணிவரை நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.  அல்லாஹ்வின் மார்க்கத்தை அறிந்து மற்றவர்களுக்கும் சொல்லும் பழக்கம் நம்மிடம் இருக்க வேண்டிய பண்பு.

மண்டல தலைவர் சகோ.A.S.இபுராஹிம் தலைமையில் மாலை சரியாக 05:00 மணியளவில் ஆரம்பிக்க பட்டது. இதில் சகோதரர் அக்மல் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள், இதில் சகோதரர் ஹுசைன் பாசா  அவர்கள் கலந்து கொண்டு அனைவருக்கும் சிறப்பான முறையில் பயிர்ச்சி அளித்தார்கள். இதில் ஆர்வமுடன் 120க்கும் மேற்ப்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டார்கள். இதில் பெண்களின் இயற்கை குணதிசயங்கள் பற்றி விளக்கினார்கள், மனைவியிடம் கணவன் கையாளும் முறை, கணவனிடம் மனைவி நடந்து கொள்ளும் முறை போன்ற வற்றை சிறப்பான முறையில் எடுத்து கூறினார்கள்.  
இந்த பயிற்சி வகுப்பில் மேலாளர் அஹ்மது அபுறார், பட்ஸ் ஸ்கூல் தலைமை ஆசிரியர் கலிபுல்லாஹ், சங்கமம் டிவி டைரக்டர் கலையன்பன், தொழிலதிபர் ஜாவித் , அபுதாபியில் இருந்து வருகை தந்து இருக்கும் சகோதரர். முஹமது லாபிர், சீனி பாவா பஹுருதீன், பேட்டை தாதா பீர் முகம்மது அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். 
மேலும் சகோதர் A.S.இப்ராகிம் அவர்கள் அன்னை ஆய்ஷா அறக்கட்டளை கடந்த வருடம் செய்யத பணிகளை மக்களிடம் விளக்கி எடுத்து கூறினார்கள்.
மேலும் கலந்து கெண்ட சகோதர்கள் இது மாதிரியான பயிர்ச்சி வகுப்பு யு எ  இ அனைத்து இடத்திலும் நடத்த வேண்டும் என அறிவுரை கூறினார்கள். 

இறுதியாக சகோதரர் A.S.இபுராகிம்  அவர்கள் நன்றியுரை மற்றும் துவாவுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது .அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment