Saturday, 21 March 2015

அமைதியை நோக்கி...சோனாப்பூரில் பிப்ரவரி 27 மாபெரும் இஸ்லாமிய இஜ்திமா,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அமைதியை நோக்கி...
====================
இன்ஷா அல்லாஹ் துபாய் சோனாப்பூரில் பிப்ரவரி 27 மாபெரும் இஸ்லாமிய இஜ்திமா,
அமைதியை நோக்கி... அனைவரும் வாரீர்


துபாயில் திரையிடப்பட்ட கடல் கடந்த பறவைகள் - ஆவணப்படம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

துபாயில் திரையிடப்பட்ட கடல் கடந்த பறவைகள் - ஆவணப்படம்
ஆண்டாண்டு காலமாக இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் தங்களுடைய வாழ்வாதாரங்களை வளர்த்துக்கொள்ள அயல்நாடுகளுக்கு பயணம் செய்கிறார்கள். அயல்நாடுகளில் பணியாற்றும்போது அவர்களுக்கு ஏற்படும் துயரங்கள் என்ன? வாழ்வாதாரத்தை பெருக்க வந்தவர்கள் தங்கள் ஆயள் முழுவதையும் அங்கேயே கழிக்கக்கூடிய அவலம் ஏன் ஏற்படுகிறது? அவர்களுடைய வாழ்க்கையை வசந்தமாக்க செய்யவேண்டியது என்ன? என்பதைக் குறித்து விளக்கும் கடல் கடந்த பறவைகள் எனும் ஆவணப்படம் துபாயிலுள்ள பட்ஸ் பப்ளிக் பள்ளியில் 20.03.2015, வெள்ளிக்கிழமை இரவு 08 மணிக்கு திரையிடப்பட்டது.
அயல்நாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் கண்ணீர் மிகுந்த நேர்காணல்கள், சமூக ஆர்வலர்களின் 
A.S.Ibrahim 
Kalaiyannban - Director Sangamam TV

Hussain Basha


கொள்ளுமேடு ரிபாயி


மருத்துவர் அப்துல் ஹமீது

கல்வியாளர் கலிபுல்லாஹ்


இஸ்மத் இனூன்
கருத்துரைகள், நேர்த்தியான காட்சியமைப்புகள் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமைந்துள்ள இந்த ஆவணப்படத்தை பார்த்துவிட்டு பலரும் பாராட்டினார். சமூக ஆர்வலர் இஸ்மத் இனூன், ஊடகவியளாலர் கொள்ளுமேடு ரிபாயி, மருத்துவர் அப்துல் ஹமீது, கல்வியாளர் கலிபுல்லாஹ், சங்கமம் டிவியின் இயக்குநர் கலையன்பன் ஆகியோர் ஆவணப்படத்தைக் குறித்து கருத்துரையாற்றினார்.

A.S. இபுராஹிம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சாதிக் அக்மல் வரவேற்புரையாற்றினார். ஆவணப்படத்தை உருவாக்கிய விதம் அதன் அவசியத்தைக் குறித்து கடல் கடந்த பறவைகள் ஆவணப்படத்தில் கருத்தாக்கம் வழங்கிய ஹூசைன் பாஷா எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளையும், அல் அமான் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து செய்திருந்தது.

Friday, 20 March 2015

துபாய் கிளை சார்பாக அகமும் புறமும் ( கணவன் மனைவி வாழ்க்கை முறை )

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,










அன்னை ஆயிஷா டிரஸ்ட் - பரமக்குடி. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நற்பணிகள்பல செய்துகொண்டு இருக்கிறது.
இதில் துபாய் கிளை சார்பாக அகமும் புறமும் ( கணவன் மனைவி வாழ்க்கை முறை ) நேற்று 20.03.2015 மாலை 5.00 மணிக்கு ஆரம்பித்து இரவு 10.00 மணிவரை நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.  அல்லாஹ்வின் மார்க்கத்தை அறிந்து மற்றவர்களுக்கும் சொல்லும் பழக்கம் நம்மிடம் இருக்க வேண்டிய பண்பு.

மண்டல தலைவர் சகோ.A.S.இபுராஹிம் தலைமையில் மாலை சரியாக 05:00 மணியளவில் ஆரம்பிக்க பட்டது. இதில் சகோதரர் அக்மல் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள், இதில் சகோதரர் ஹுசைன் பாசா  அவர்கள் கலந்து கொண்டு அனைவருக்கும் சிறப்பான முறையில் பயிர்ச்சி அளித்தார்கள். இதில் ஆர்வமுடன் 120க்கும் மேற்ப்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டார்கள். இதில் பெண்களின் இயற்கை குணதிசயங்கள் பற்றி விளக்கினார்கள், மனைவியிடம் கணவன் கையாளும் முறை, கணவனிடம் மனைவி நடந்து கொள்ளும் முறை போன்ற வற்றை சிறப்பான முறையில் எடுத்து கூறினார்கள்.  
இந்த பயிற்சி வகுப்பில் மேலாளர் அஹ்மது அபுறார், பட்ஸ் ஸ்கூல் தலைமை ஆசிரியர் கலிபுல்லாஹ், சங்கமம் டிவி டைரக்டர் கலையன்பன், தொழிலதிபர் ஜாவித் , அபுதாபியில் இருந்து வருகை தந்து இருக்கும் சகோதரர். முஹமது லாபிர், சீனி பாவா பஹுருதீன், பேட்டை தாதா பீர் முகம்மது அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். 
மேலும் சகோதர் A.S.இப்ராகிம் அவர்கள் அன்னை ஆய்ஷா அறக்கட்டளை கடந்த வருடம் செய்யத பணிகளை மக்களிடம் விளக்கி எடுத்து கூறினார்கள்.
மேலும் கலந்து கெண்ட சகோதர்கள் இது மாதிரியான பயிர்ச்சி வகுப்பு யு எ  இ அனைத்து இடத்திலும் நடத்த வேண்டும் என அறிவுரை கூறினார்கள். 

இறுதியாக சகோதரர் A.S.இபுராகிம்  அவர்கள் நன்றியுரை மற்றும் துவாவுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது .அல்ஹம்துலில்லாஹ். 

Wednesday, 11 March 2015

அல்ஹம்துலில்லாஹ்! வெங்கடேசன் மனம் மாறினார்!!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ்! வெங்கடேசன் மனம் மாறினார்!!
====================================================
கடந்த 30-01-2015 வெள்ளியன்று சோனாப்பூர் பலுதியா கேம்பிற்கு மார்க்க நிகழ்ச்சிக்காக தமுமுக துபை மண்டல தலைவர் சகோதரர் இப்ராஹீம் அவர்கள் சென்றார்கள் அந்நிகழ்ச்சியில் பங்குகொண்ட சகோதரர் ஒருவர் தான் தங்கி இருக்கும் அறையில் மாற்றுமத நண்பர் ஒருவர் உள்ளார் அவரிடத்தில் இஸ்லாமிய அழைப்பு கொடுக்க வேண்டும் என்று கூற அதன் அடிப்படையில் பிப்ரவரி 1 ஞாயிறு அன்று மண்டல தலைவர் இப்ராஹீம், செயலாளர் அதிரை அப்துல் ஹமீத் மற்றும் முஹைதீன் ஆகிய நான் ஆகியோர் துபையில் தொழிலாளர்கள் நிறைந்து வாழக்கூடிய சோனாப்பூரில் வசிக்கும் சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த வெங்கடேசன் என்ற சகோதரரை சந்தித்தோம்,
தனது குடும்பத்தார்களை பற்றி சிறிதுநேரம் எங்களிடம் உரையாடினார் தனது குடும்பம் நாயக்கர் சாதியை சேர்ந்தவர்கள் என்றும் தந்தையும் மூத்த சகோதரர்களும் ஏற்கெனவே இஸ்லாத்தை தங்களின் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்கள் என பேசத் தொடங்கினார்,தனது குடும்பத்தார்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட போது தான் கோபம் கொண்டதாகவும் கூறினார்,தனக்கு திருமணம் முடிந்து மனைவியும் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருப்பதாகவும் கூறினார்,நாங்களும் எங்களைப்பற்றிய அறிமுகத்தை கூறி பேசத்தொடங்கினோம் சரியாக இரவு 9:10 மணிக்கு ஆரம்பித்த எங்களின் உரையாடல் இறைவன் என்பவன் யார்? என்பதில் இருந்து தொடங்கி இறுதியில் மறுமை வாழ்க்கை வரை சென்று சரியாக இரவு 11:00மணிவரை நீடித்தது, மண்டல தலைவர் இப்ராஹீம் அவர்களும் செயலாளர் அப்துல் ஹமீத் அவர்களும் நானும் எங்களுக்கு தெரிந்த இஸ்லாமிய வாழ்க்கை முறைகளை எடுத்துக் கூறினோம்,
வெங்கடேசன் அவர்களும் தான் சில மார்க்க அறிஞர்களின் உரைகளை தனது அலைப்பேசியில் கேட்டு வருவதாகவும் கூறினார்,இப்படியாக பேசிக்கொண்டிருக்கும்போதே தான் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்க விரும்புவதாக கருத்தை கூறி, வரும் வெள்ளியன்று தனது மூத்த சகோதரர் வருவார் அன்றே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறி முடித்தார்,உடனே நாங்கள் மூவரும் நல்ல காரியத்தை செய்ய காலம் கடத்தாதீர், மனிதன் மரணிக்க கூடியவன் மரணம் நமக்கு வரும் முன் நாம் நல்ல காரியத்தை செய்யவேண்டும் இப்போதே நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளலாமே என்றுக் கூற அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் உடனடியாக ஒளுச் செய்து சத்திய ஏகத்துவ உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு மனம் மாறினார் சகோதரர் வெங்கேடசன், உமராக.
மனம் மாறிய சகோதரர் உமர் அடுத்தக் கட்டமாக தனது மனைவியையும் மக்களையும் இஸ்லாமிய வாழ்க்கை நெறியின் பக்கம் அழைப்புக் கொடுக்க தயாராகிவிட்டார் அவரின் நோக்கம் நிறைவேற சகோதரர்கள் அனைவரும் ஏக இறைவனிடம் பிரார்த்திப்போம், எல்லாப் புகழும் இறைவனுக்கே
அன்புடன்
முஹைதீன்

அபுதாபி பனியாசில் 27-02-2015

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அபுதாபியில்....
அபுதாபி பனியாசில் 27-02-2015 வெள்ளியன்று மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகுநடைப்பெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சியில்  சகோதரர் A .S. இப்ராஹீம் அவர்கள் கலந்துக் கொண்டு ஈமானின் பலமும் பலவினமும் என்ற தலைப்பில் என்ற தலைப்பில் உரையாற்றினார் எல்லாப் புகழும் இறைவனுக்கே!

திருக்குர்ஆன் தப்ஸீர் நிகழ்ச்சியில்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

..திருக்குர்ஆன் தப்ஸீர் நிகழ்ச்சியில்.
===============================
துபை தமுமுக தேரா மர்கசில் 5-03-2015 வியாழன் இரவு நடைப்பெற்ற திருக்குர்ஆன் தப்ஸீர் நிகழ்ச்சியில் தமுமுக துபை மண்டல தலைவர் சகோதரர் இப்ராஹீம் அவர்கள் கலந்துக் கொண்டு வகுப்பெடுத்தார், குர்ஆனில் 2:285 வது வசனத்திற்கு விளக்கமளித்தார் எல்லாப் புகழும் இறைவனுக்கே!

Dubai Bayan

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


துபாயில் நடந்தேறிய "தோப்புத்துறை சகோதரர்கள் ஒருங்கிணைப்பு"

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ்... நேற்று 05.12.2014 வெள்ளி மாலை துபாயில் நடந்தேறிய "தோப்புத்துறை சகோதரர்கள் ஒருங்கிணைப்பு" கூட்டத்தில் "பெண்கள் மீதான ஆண்களின் கடமை!" என்ற தலைப்பில் சகோ. பரமக்குடி  A.S. இப்ராஹிம் MBA உரை நிகழ்த்தினார்கள். 

இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைபடுத்தும் சவுதியை விமர்ச்சித்துள்ள சுவீடனுக்கு,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைபடுத்தும் சவுதியை விமர்ச்சித்துள்ள சுவீடனுக்கு, இஸ்லாத்திர்கு நாங்கள் யாரிடம் இருந்தும் இருந்தும் நன்னடத்தை சான்றிதழை எதிபார்க்க வில்லை என சவுதி பதிலடி தனது துதரையும் திரும்ப அழைத்து கொண்டது
==========================================
இஸ்லாத்தையும் நபிகள் நாயகத்தையும் இணைய தளத்தில் விமர்ச்சித்த சவுதியை சார்ந்த பதவி என்பவனுக்கு சவுதியின் இஸ்லாமிய நீதி மன்றம் கடுமையான தண்டனையை வழங்கியுள்ளது
இந்த தண்டனை மனித உரிமைகளை தகர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது என்றும் .இஸ்லாமிய மார்க்க சட்டங்களை அரசியல் சாசனமாகவே சவுதி அரேபியா வைத்திருப்பது ஏர்க தகுந்த விசயம் இல்லை என்றும் சுவீடன் அண்மையில் கருத்து கூறியிருந்ததோடு 2005 ஆண்டில் சவுதி அரேபியா உடன் செய்து கொள்ள பட்ட இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் காலவதியாகும் நிலையில் இருக்கிறது அதை புதிப்பிக்க போவதில்லை என்றும் சுவீடன் அறிவித்திருந்தது
சுவீடனின் இந்த நிலைபாட்டிர்கு சவுதி அரேபியா கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறது
எங்களிடம் இஸ்லாம் இருக்கிறது இஸ்லாத்திர்கு நாங்கள் யாரிடம் இருந்தும் இருந்தும் நன்னடத்தை சான்றிதழை எதிபார்க்க வில்லை இஸ்லாம் எங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது எங்கள் நாட்டில் இஸ்லாமிய சட்டங்களை நடைமுறை படுத்துவதை விமர்ச்சிக்க எவனுக்கும் உரிமை இல்லை என்று சவுதி அரேபியா கூறியிருப்பதோடு எங்களது உள்விவகாரத்தில் தலையை நுழைத்துள்ள சுவீடனை கடுமையாக கண்டிக்கும் விதத்தில் சுவீடனில் இருந்து சவுதி துதரை திரும் அழைத்து கொள்வதாகவும் சவுதி அறிவித்து சுவீடுனில் இருந்து தனது துதரையும் திரும்ப அழைத்து விட்டது
சவுதி அரேபியாவின் உறுதியான இந்த நிலைபாடு இஸ்லாமிய எதிரிகள் பலரையும் அதிர வைத்திருக்கிறது

Saturday, 6 December 2014

"தோப்புத்துறை சகோதரர்கள் ஒருங்கிணைப்பு" கூட்டத்தில்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ்... நேற்று 05.12.2014 வெள்ளி மாலை துபாயில் நடந்தேறிய

"தோப்புத்துறை சகோதரர்கள் ஒருங்கிணைப்பு" கூட்டத்தில் "பெண்கள் மீதான ஆண்களின் கடமை!" என்ற தலைப்பில் சகோ. பரமக்குடி  A.S. இப்ராஹிம் MBA உரை நிகழ்த்தினார்கள்.

அதில் கணவன் திருமணத்திற்குப் பிறகு தம் மனைவியுடன் பழகுவதிலும் அவளை நடத்துவதிலும் இஸ்லாம் கற்பிக்கும் நெறி முறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டியமனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள்அவளுடன் அழகிய முறையில் பழகுவதுஅவளைக் கண்ணியமாக நடத்துவது ஆகியவை குறித்து இஸ்லாம்போதிக்கும் நல்உபதேசங்கள் போன்றவற்ரை எடுத்து கூறினார்கள்