Wednesday, 11 March 2015

அல்ஹம்துலில்லாஹ்! வெங்கடேசன் மனம் மாறினார்!!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ்! வெங்கடேசன் மனம் மாறினார்!!
====================================================
கடந்த 30-01-2015 வெள்ளியன்று சோனாப்பூர் பலுதியா கேம்பிற்கு மார்க்க நிகழ்ச்சிக்காக தமுமுக துபை மண்டல தலைவர் சகோதரர் இப்ராஹீம் அவர்கள் சென்றார்கள் அந்நிகழ்ச்சியில் பங்குகொண்ட சகோதரர் ஒருவர் தான் தங்கி இருக்கும் அறையில் மாற்றுமத நண்பர் ஒருவர் உள்ளார் அவரிடத்தில் இஸ்லாமிய அழைப்பு கொடுக்க வேண்டும் என்று கூற அதன் அடிப்படையில் பிப்ரவரி 1 ஞாயிறு அன்று மண்டல தலைவர் இப்ராஹீம், செயலாளர் அதிரை அப்துல் ஹமீத் மற்றும் முஹைதீன் ஆகிய நான் ஆகியோர் துபையில் தொழிலாளர்கள் நிறைந்து வாழக்கூடிய சோனாப்பூரில் வசிக்கும் சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த வெங்கடேசன் என்ற சகோதரரை சந்தித்தோம்,
தனது குடும்பத்தார்களை பற்றி சிறிதுநேரம் எங்களிடம் உரையாடினார் தனது குடும்பம் நாயக்கர் சாதியை சேர்ந்தவர்கள் என்றும் தந்தையும் மூத்த சகோதரர்களும் ஏற்கெனவே இஸ்லாத்தை தங்களின் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்கள் என பேசத் தொடங்கினார்,தனது குடும்பத்தார்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட போது தான் கோபம் கொண்டதாகவும் கூறினார்,தனக்கு திருமணம் முடிந்து மனைவியும் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருப்பதாகவும் கூறினார்,நாங்களும் எங்களைப்பற்றிய அறிமுகத்தை கூறி பேசத்தொடங்கினோம் சரியாக இரவு 9:10 மணிக்கு ஆரம்பித்த எங்களின் உரையாடல் இறைவன் என்பவன் யார்? என்பதில் இருந்து தொடங்கி இறுதியில் மறுமை வாழ்க்கை வரை சென்று சரியாக இரவு 11:00மணிவரை நீடித்தது, மண்டல தலைவர் இப்ராஹீம் அவர்களும் செயலாளர் அப்துல் ஹமீத் அவர்களும் நானும் எங்களுக்கு தெரிந்த இஸ்லாமிய வாழ்க்கை முறைகளை எடுத்துக் கூறினோம்,
வெங்கடேசன் அவர்களும் தான் சில மார்க்க அறிஞர்களின் உரைகளை தனது அலைப்பேசியில் கேட்டு வருவதாகவும் கூறினார்,இப்படியாக பேசிக்கொண்டிருக்கும்போதே தான் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்க விரும்புவதாக கருத்தை கூறி, வரும் வெள்ளியன்று தனது மூத்த சகோதரர் வருவார் அன்றே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறி முடித்தார்,உடனே நாங்கள் மூவரும் நல்ல காரியத்தை செய்ய காலம் கடத்தாதீர், மனிதன் மரணிக்க கூடியவன் மரணம் நமக்கு வரும் முன் நாம் நல்ல காரியத்தை செய்யவேண்டும் இப்போதே நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளலாமே என்றுக் கூற அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் உடனடியாக ஒளுச் செய்து சத்திய ஏகத்துவ உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு மனம் மாறினார் சகோதரர் வெங்கேடசன், உமராக.
மனம் மாறிய சகோதரர் உமர் அடுத்தக் கட்டமாக தனது மனைவியையும் மக்களையும் இஸ்லாமிய வாழ்க்கை நெறியின் பக்கம் அழைப்புக் கொடுக்க தயாராகிவிட்டார் அவரின் நோக்கம் நிறைவேற சகோதரர்கள் அனைவரும் ஏக இறைவனிடம் பிரார்த்திப்போம், எல்லாப் புகழும் இறைவனுக்கே
அன்புடன்
முஹைதீன்

அபுதாபி பனியாசில் 27-02-2015

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அபுதாபியில்....
அபுதாபி பனியாசில் 27-02-2015 வெள்ளியன்று மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகுநடைப்பெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சியில்  சகோதரர் A .S. இப்ராஹீம் அவர்கள் கலந்துக் கொண்டு ஈமானின் பலமும் பலவினமும் என்ற தலைப்பில் என்ற தலைப்பில் உரையாற்றினார் எல்லாப் புகழும் இறைவனுக்கே!

திருக்குர்ஆன் தப்ஸீர் நிகழ்ச்சியில்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

..திருக்குர்ஆன் தப்ஸீர் நிகழ்ச்சியில்.
===============================
துபை தமுமுக தேரா மர்கசில் 5-03-2015 வியாழன் இரவு நடைப்பெற்ற திருக்குர்ஆன் தப்ஸீர் நிகழ்ச்சியில் தமுமுக துபை மண்டல தலைவர் சகோதரர் இப்ராஹீம் அவர்கள் கலந்துக் கொண்டு வகுப்பெடுத்தார், குர்ஆனில் 2:285 வது வசனத்திற்கு விளக்கமளித்தார் எல்லாப் புகழும் இறைவனுக்கே!

Dubai Bayan

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


துபாயில் நடந்தேறிய "தோப்புத்துறை சகோதரர்கள் ஒருங்கிணைப்பு"

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ்... நேற்று 05.12.2014 வெள்ளி மாலை துபாயில் நடந்தேறிய "தோப்புத்துறை சகோதரர்கள் ஒருங்கிணைப்பு" கூட்டத்தில் "பெண்கள் மீதான ஆண்களின் கடமை!" என்ற தலைப்பில் சகோ. பரமக்குடி  A.S. இப்ராஹிம் MBA உரை நிகழ்த்தினார்கள். 

இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைபடுத்தும் சவுதியை விமர்ச்சித்துள்ள சுவீடனுக்கு,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைபடுத்தும் சவுதியை விமர்ச்சித்துள்ள சுவீடனுக்கு, இஸ்லாத்திர்கு நாங்கள் யாரிடம் இருந்தும் இருந்தும் நன்னடத்தை சான்றிதழை எதிபார்க்க வில்லை என சவுதி பதிலடி தனது துதரையும் திரும்ப அழைத்து கொண்டது
==========================================
இஸ்லாத்தையும் நபிகள் நாயகத்தையும் இணைய தளத்தில் விமர்ச்சித்த சவுதியை சார்ந்த பதவி என்பவனுக்கு சவுதியின் இஸ்லாமிய நீதி மன்றம் கடுமையான தண்டனையை வழங்கியுள்ளது
இந்த தண்டனை மனித உரிமைகளை தகர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது என்றும் .இஸ்லாமிய மார்க்க சட்டங்களை அரசியல் சாசனமாகவே சவுதி அரேபியா வைத்திருப்பது ஏர்க தகுந்த விசயம் இல்லை என்றும் சுவீடன் அண்மையில் கருத்து கூறியிருந்ததோடு 2005 ஆண்டில் சவுதி அரேபியா உடன் செய்து கொள்ள பட்ட இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் காலவதியாகும் நிலையில் இருக்கிறது அதை புதிப்பிக்க போவதில்லை என்றும் சுவீடன் அறிவித்திருந்தது
சுவீடனின் இந்த நிலைபாட்டிர்கு சவுதி அரேபியா கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறது
எங்களிடம் இஸ்லாம் இருக்கிறது இஸ்லாத்திர்கு நாங்கள் யாரிடம் இருந்தும் இருந்தும் நன்னடத்தை சான்றிதழை எதிபார்க்க வில்லை இஸ்லாம் எங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது எங்கள் நாட்டில் இஸ்லாமிய சட்டங்களை நடைமுறை படுத்துவதை விமர்ச்சிக்க எவனுக்கும் உரிமை இல்லை என்று சவுதி அரேபியா கூறியிருப்பதோடு எங்களது உள்விவகாரத்தில் தலையை நுழைத்துள்ள சுவீடனை கடுமையாக கண்டிக்கும் விதத்தில் சுவீடனில் இருந்து சவுதி துதரை திரும் அழைத்து கொள்வதாகவும் சவுதி அறிவித்து சுவீடுனில் இருந்து தனது துதரையும் திரும்ப அழைத்து விட்டது
சவுதி அரேபியாவின் உறுதியான இந்த நிலைபாடு இஸ்லாமிய எதிரிகள் பலரையும் அதிர வைத்திருக்கிறது

Saturday, 6 December 2014

"தோப்புத்துறை சகோதரர்கள் ஒருங்கிணைப்பு" கூட்டத்தில்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அல்ஹம்துலில்லாஹ்... நேற்று 05.12.2014 வெள்ளி மாலை துபாயில் நடந்தேறிய

"தோப்புத்துறை சகோதரர்கள் ஒருங்கிணைப்பு" கூட்டத்தில் "பெண்கள் மீதான ஆண்களின் கடமை!" என்ற தலைப்பில் சகோ. பரமக்குடி  A.S. இப்ராஹிம் MBA உரை நிகழ்த்தினார்கள்.

அதில் கணவன் திருமணத்திற்குப் பிறகு தம் மனைவியுடன் பழகுவதிலும் அவளை நடத்துவதிலும் இஸ்லாம் கற்பிக்கும் நெறி முறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டியமனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள்அவளுடன் அழகிய முறையில் பழகுவதுஅவளைக் கண்ணியமாக நடத்துவது ஆகியவை குறித்து இஸ்லாம்போதிக்கும் நல்உபதேசங்கள் போன்றவற்ரை எடுத்து கூறினார்கள் 


Tuesday, 18 November 2014

முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:

நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828

thks Sulthan 

12 ஆண்டுகளுக்குப் பின்னர் குஜராத் கலவர இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது நானாவதி கமிஷன்!!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அகமதாபாத்: 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரங்கள் தொடர்பான இறுதி விசாரணை அறிக்கையை மாநில முதல்வர் ஆனந்திபென் படேலிடம் நீதிபதி நானாவதி கமிஷன் இன்று சமர்பித்தது.
2008-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி நானாவதி தலைமையிலான விசாரணைக் கமிஷன், கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பான தங்களது விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில் அந்த எரிப்புச் சம்பவம் திட்டமிடப்பட்ட சதி என்று கூறியிருந்தது.
இந்த விசாரணைக்கு 24 முறை காலநீட்டிப்பு அளிக்கப்பட்டது. அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி, அவரது அமைச்சரவை சகாக்கள், மூத்த அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள், மற்றும் சில இந்து இயக்கங்களின் பங்கு என்னவென்பது பற்றி இந்த கமிஷன் விசாரணை மேற்கொண்டது.
இறுதி அறிக்கை தயாராகி விட்டதால் விசாரணைக்கு காலநீட்டிப்பு தேவையில்லை என்று நீதிபதி நானாவதி கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நீதிபதி நானாவதி, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அக்‌ஷய் மேத்தா ஆகியோர் குஜராத் முதல்வர் வீட்டிற்கு இன்று சென்று அறிக்ககையை அளித்தனர்.
"2000 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளோம்." என்று நீதிபதி நானாவதி தெரிவித்தார். ஆனால் அதன் உள்ளடக்கங்கள் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.
Thanks tamiloneindia 

மனிதர்களை நேசியுங்கள்... யாசிக்கும் குஜராத் கலவரத்தின் முகங்கள்...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மனிதர்களை நேசியுங்கள்... யாசிக்கும் குஜராத் கலவரத்தின் முகங்கள்...

Posted by: 
Updated: Thursday, March 6, 2014, 11:06 [IST]
கண்ணணூர்: குஜராத்தில் 2002ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின் போது உயிர்பிச்சைக் கேட்டு கூப்பிய கைகளுக்கும், மிரட்சி மிகுந்த கண்களுக்கும் சொந்தக்காரரான குத்புதீன் அன்ஸாரியும், தலையில் காவி ரிப்பனும், இடதுகையில் வாளும் ஏந்தி ஆக்ரோஷமாக வெறிக் கூச்சலிடும் கலவரக்காரரும் நேரடி காட்சியாக ஊடகங்களில் நிறைந்து காணப்பட்ட அசோக் மோச்சியும் கேரளாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ஒரே மேடையில் பங்கேற்றனர்.
பல்வேறு இடதுசாரி அமைப்புகளின் கூட்டமைப்பு கேரள மாநிலம் தளிப்பரம்பில் உள்ள சிரவக்கில் என்ற இடத்தில் 'இனப்படுகொலையின் 12 ஆண்டுகள்' என்ற பெயரில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது.
இந்த கருத்தரங்கில் குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தின் நேரடி காட்சியாக மக்கள் மனங்களில் நிறைந்த இரண்டு பேர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மேடையில் தோன்றினார்கள்.
மனிதர்களை நேசியுங்கள்... யாசிக்கும் குஜராத் கலவரத்தின் முகங்கள்...
அந்த பிப்ரவரி 28
2002ம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று மாலை நெருங்கிய போது காலனியில் ஒரே பரபரப்பு. கோத்ராவில் ஒரு ரயில் பெட்டி எரிந்து அயோத்தியிலிருந்து வந்த நிறையப் பேர் இறந்துவிட்டார்கள் என்று யாரோ சொன்னார்கள். பல இடங்களிலும் ஒலிபெருக்கிகள் அலறுகின்றன. இந்த மாதிரி நேரங்களில் ஆட்கள் குடும்பத்தை இழுத்துக்கொண்டு எங்கெல்லாமோ ஓடுவார்கள் என்று அவர் கேள்விப்பட்டிருக்கிறார். விஷமிகள் வாசலை அடைவது வரை காத்துக்கொண்டிருப்பது முட்டாள்தனம். பலரும் அங்குமிங்கும் ஓடுவதைப் பார்த்தார் அன்சாரி.
விடிய விடிய கூக்குரல்
வீட்டை அடைந்தபோது அம்மா மற்றும் மனைவியின் முகங்கள் பயத்தால் இருளடைந்திருப்பதைப் பார்த்தார். நேரம் மூன்று மணியாகியிருக்கும் யாரும் உறங்கவில்லை. அலறல்களும் ஆவேசக் கூக்குரல்களும் அழுகைச் சத்தங்களும் கேட்கத் துவங்கின. வேண்டாதது எதுவோ நடக்கப்போகிறது என்று எதிர்பார்த்துத்தான் அன்சாரி வீட்டின் மேல் மாடியில் போய் நின்று காப்பாற்ற யாராவது வருவார்களா என்று தேடினார்.
கைகூப்பிய அன்சாரி
அப்போது அன்சாரி வீடுகளுடன் பற்றி எரிகிற மனிதர்களையும் பார்த்தார். ‘வெறியர்களுடன் கூடவே அவர்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் போலீசையும் கண்ட அன்சாரி உயிரைக் காப்பாற்றுங்கள் என்று கூவியபடி அன்சாரி அவர்களை நோக்கிக் கைகூப்பினார். அப்போது அதிரடிப் படையின் கூடவேயிருந்த ராய்ட்டர்ஸின் அர்கோ தத்தா என்னும் புகைப்படக்காரரின் கேமரா பலமுறை மின்னியதை அன்சாரி பார்க்கவில்லை. அதிரடிப் படை வெறியர்களை விரட்டியடிப்பதைப் பார்த்தார்.
மனிதர்களை நேசியுங்கள்... யாசிக்கும் குஜராத் கலவரத்தின் முகங்கள்...
கலவரத்தின் முகமான அன்சாரி
சொந்தமாக இருந்த ஒற்றையறை வீடு, டிவி, தையல் இயந்திரம் எல்லாம் இழந்தாகிவிட்டது. உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு ஷாஹெயாத் அகதிகள் முகாமுக்குச் சென்றார் அன்சாரி.
அகதிகள் முகாமில் பனிரெண்டு நாட்கள் கழிந்தபோதுதான் தன் படம் பத்திரிகையில் பிரசுரமான தகவலை யாரோ சொன்னார்கள். எவ்வளவோ பேரின் படம் பத்திரிகையில் வருவதுதானே என்றுதான் அன்சாரி அப்போது நினைத்தார். ஆனால் அதுதான் குஜராத் கலவரத்தின் முகமாகிப் போனது.
விவாதப் பொருளான அன்சாரி
இந்தியாவிலுள்ள பத்திரிகை நிறுவனங்கள் அனைத்துமே குஜராத் கலவரத்தைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமென்றால் முதலில் வைக்க வேண்டிய படமாக அந்தப் புகைப்படத்தை தனியே எடுத்து வைத்திருந்தன. அது அன்சாரிக்குத் தெரிந்திருக்கவில்லை. அப்படியே தெரிந்திருந்தாலும் அவரால் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. ஊடகங்கள் மூலமாகவும் இணையம் மூலமாகவும் அவருடைய படம் எல்லா இடங்களையும் சென்று அடைந்துவிட்டிருந்தது. அந்தப் படத்தைப் பற்றிய விரிவான விவாதங்கள் பல இடங்களிலும் நடந்தன.
வாளேந்திய கலவரக்கார்
குஜராத் கலவரத்தை துல்லியமாக அடையாளப்படுத்துவதில் இரண்டு புகைப்படங்கள் முக்கிய பங்கு வகித்தன. ஒன்று அன்சாரியின் புகைப்படம். இன்னொன்று, தலையில் இறுக்கிக் கட்டிய துணியுடன் வாளை உயர்த்தி வீரமுழக்கம் இடுகின்ற ஒருரின் புகைப்படம். இந்த இருவரும் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே மேடையில் சந்தித்து கலந்துரையாடினர்.
ரோஜாவை வழங்கி மோச்சி
கலவரத்தின் போது கைகளில் வாளை ஏந்திய அசோக் மோச்சி, அன்ஸாரிக்கு, சுகந்தம் மிகுந்த ரோஜாப்பூவை வழங்கினார். அன்றும், இன்றும் செருப்பு தைக்கும் தொழிலாளியாக வாழ்ந்து வரும் மோச்சி, செலவுகள் தாங்க முடியாததால் திருமணம் கூட செய்யாமல் இருக்கிறார்.
மறைந்து போன கொடூரம்
அவருடைய முகத்தில் பழைய கொடூரம் இன்று இல்லை. புன்சிரிப்புடன் காணப்பட்டார். மோச்சியின் வார்த்தைகளில் அன்பு கலந்திருந்தது. மனிதநேயத்தை விளக்க எந்த மொழியும் தடையில்லை என்று கூறி அன்ஸாரியை கட்டி அணைத்து மோச்சி கூறினார்.
வெறுப்பின் அரசியல்
குஜராத் கலவரத்தில் வேட்டைக்காரனுடைய முகமாக உயர்த்திக் காட்டப்பட்ட தலித் இளைஞனான அசோக் மோச்சி முதல்முறையாக மேடையில் தோன்றி பேசினார். அப்போது அவர், 'இனி மேலாவது நாம் வெறுப்பின் அரசியலை நிறுத்தியே தீரவேண்டும் என்றார்.
யாருக்கும் வாக்களிக்கவில்லை
இனப்படுகொலை ஏற்படுத்திய வேதனையால் விழிப்புணர்வு பெற்ற நான் அதன் பிறகு யாருக்கும் வாக்கு அளிக்கவில்லை. எனது மனதில் உள்ள எதிர்ப்பைநான் தெரிவித்தேன். இனியாவது எனக்கு அதில் இருந்து விடுதலை வேண்டும் என்றார் ' மோச்சி உணர்ச்சி மேலிட.
மாற்றத்தின் அடையாளம்
இது ஒரு மாற்றத்தின் துவக்கமாக அமையட்டும் என்றார் குத்புதீன் அன்ஸாரி. கேரளாவின் அன்பு தாங்க முடியாமல் தவிக்கிறேன் என்றார்.
அன்சாரியின் சுயசரிதை
இந்நிகழ்ச்சியில் ஸஈத் ரூமி எழுதிய 'நான் குத்புதீன் அன்ஸாரி' என்ற சுயசரிதை நூல் வெளியிடப்பட்டது. பல்வேறு இடதுசாரி ஆர்வலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வெறுப்பு அரசியலை வளர்த்தும் சங்க்பரிவாரத்தின் தந்திரங்களை குறித்து இருவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கும் அபூர்வமான காட்சியை காண ஏராளமானோர் நிகழ்ச்சியில் திரண்டிருந்தனர்.
thanks Tamiloneindia