Saturday, 24 August 2013

போதை மருந்து மூலம் மாணவியை சீரழித்த கும்பல் - பாஜக பொருக்கி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

போதை மருந்து மூலம் மாணவியை சீரழித்த கும்பல் - பாஜக பிரமுகர்கள் மூன்று பேர் கைது - பழைய செய்திதான்

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை கோவணம் அவிழ்ந்து கொண்டே இருக்கிறது...!!!

இது ஒரு கட்சி... அதுக்கு ஒரு கொடி... த்தூ...!!!


ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க வசதி google வழங்குகிறது

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதரர்களே சகோதரிகளே !... அநேகமாக நம் எல்லோரது வீட்டிலும் லேப்டாப் இருக்கிறது இதனை நாம் ,மனைவி பிள்ளைகள் என எல்லோரும் தினசரி உபயோகப் படுத்துகிறோம் . பல தகவல்களை Google ல் நாம் தேடும் போது யதேச்சையாகவோ அல்லது தவறான ஸ்பெல்லிங் ஏற்படும் போதோ ஆபாசமான தகவல்கள், மற்றும் படங்கள் என வந்து மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது என்பது உண்மையே , இதனை சீர் செய்ய இந்த பதிவு மிகுந்த உபயோகமாக இருக்கிறது , எனவே முடிந்தவரை பலருக்கும் இதை SHARE செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்
ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?

நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .

...முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.

பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.

அல்லது

http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்..

Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள் ,


அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.

Locking Process நடைபெறும்


பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.

அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.

இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .

நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்.

google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள் ....

Setting போய் பாத்துட்டு அட ஆமா இருக்கு'ல ன்னு சும்மா இருக்காம... setting correct'ah பண்ணுங்க...

நண்பர்களிடமும் share பண்ணுங்க...

நன்றி:களஞ்சியம்

Friday, 23 August 2013

ஒரு தமிழ் நிறுவனத்தின் சாதனையைப் பார்த்து இன்று சில அந்நிய நிறுவனங்கள் பயப்படுகிறது...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ஒரு தமிழ் நிறுவனத்தின் சாதனையைப் பார்த்து இன்று சில அந்நிய நிறுவனங்கள் பயப்படுகிறது...

தென்மாவட்டத்தை சேர்ந்த (திருநெல்வேலி அல்லது விருதுநகர்) சேர்ந்த காளிமார்க் நிறுவனம் தயாரிக்கும் குளிர்பானம் தான் ”BOVONTO”.1916 ஆம் ஆண்டு பழனியப்பன் என்பவரால் தொடங்கப்பட்டது

தமிழகத்தில் உலகமயமாக்கலுக்கு முன்பு கொடி கட்டி பறந்த கலர்,சோடா போன்ற தமிழக தயாரிப்பு நிறுவனங்களுக்கு பல மாநிலங்களில் நல்ல வரவேற்பு இருந்த...ு வந்தது. ஆங்கிலேயர் அட்சிக்காலத்தில் ”செபென்சர்ஸ்” என்ற ஆங்கிலேய நிறுவனத்தின் கடும் போட்டியை மீறி தனது பயணத்தை தொடங்கியது. உலகமயமாக்கலுக்கு பிறகு அமெரிக்க நிறுவனங்களான PEPSI,COCA COLA தனது நிறுவனங்களின் சந்தையை விரிவாக்க ஏற்கெனவே உள்ள உள்ளூர் தமிழக நிறுவனங்களை ஒழித்து கட்டும் முயற்சியில் ஈடுபட்டன. அதில் வெற்றியும் கண்டன.ஆனால் இந்த சந்தைக்கான போரில் சில தமிழக நிறுவனங்கள் தப்பி பிழைத்தன.அதில் இன்று வரை உறுதியோடு பணம் கொழிக்கும் அந்நிய நிறுவனங்களின் போட்டியை மீறி தனது தரமான தயாரிப்பின் மூலம் மக்களிடம் நிலைத்து நிற்பது திருநெல்வேலியை சேர்ந்த BOVONTO நிறுவனம் தான்.

அந்நிய மோகத்தில் சில காலம் இந்த பெப்ஸி,கோகோ கோலாவை அதன் கண்கவரும் விளம்பரங்களால் விரும்பி வாங்கிய மக்கள், பெப்ஸி கோக்கில் பூச்சி மருந்து கலந்துள்ளதை அறிந்து அதனை வாங்குவதை குறைத்துக்கொண்டனர். அதனை மீறி இன்று மக்களுக்கு ஆபத்தான குளிர்பானத்தை தங்கள் விளம்பரத்தில் நடிகர்களை நடிக்க வைத்து பணத்தை கோடி கோடியாக கொட்டி தங்கள் விற்பனையை தொடர்ந்து நடத்தி வருகின்றன.இதனை மக்களும் ஏமாந்து குடித்து வருகின்றனர்.

ஆனால் ஆரம்ப காலகட்டங்களில் தங்களின் வியாபார நுணக்கங்களை மீறி தனது தரமான தயாரிப்புக்காக வாடிக்கையாளர்களிடம் `BOVONTO' அதிகளவில் விற்பனையாவதை கண்டு pepsi, coca cola போன்ற பூச்சி மருந்து வியாபாரிகள் பயந்து நடுங்கினர்..

குளிர்பான சந்தையில் நடந்த நிகழ்வுகளை பார்த்தால் தமிழ்க நிறூவனங்களை ஒழித்துகட்ட செயற்பட்ட இந்த கார்ப்பரேட் நிறுவங்களின் சூழ்ச்சி புரியும். பெப்ஸி , கோலாவை விட பொவெண்டோ விரைவில் விற்பனையாவது கண்டு முழு வேகத்தில் தங்கள் கார்ப்பரேட் மூளை கசக்கி பிழிந்து ஒரு திட்டத்தை தீட்டின. அதன் முதல் கட்டமாக ஆரம்பத்தில் கண்ணாடி பாட்டில்களில் விற்பனையான BOVONTO வின் காலி பாட்டில்களை கடைகடையாக ஏறி வாங்கி குவித்தனர். அந்த பாட்டிலின் விலையை(ரு.12) விட அதிக அளவு நம் வியாபாரிகளுக்கு கொடுத்து அவற்றை பெற்றனர்.மொத்தமாக வாங்கிய பாட்டில்களை உடைத்துவிட்டனர்.

இந்த சதியால் BOVONTO நிறுவனத்தால் புதிய பாட்டில்களை உடனே தயாரிக்கவும் முடியவில்லை. தனது குளிர்பான வியாபாரத்தை தொடரமுடியாமல் போனபோது மக்கள் விளம்பரங்களில் பார்த்த பெப்ஸி கோக் போன்ற குளிர்பானங்களை வாங்கி குடித்தனர். உள்ளூர் 
வியாபாரிகளிடம் தங்கள் குளிர்பானத்தை விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி தங்கள் நிறுவன தயாரிப்புகளை மட்டும் வாங்கிகுவிக்க வைத்தன.


இந்த நிறுவனங்களின் சதியை உணர்ந்து கொண்ட BOVONTO நிறுவனம் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களின் மூலம் தனது தரமான தயாரிப்புக்கு உள்ள வாடிக்கையாளர்களிடம் தான் பெற்ற நன்மதிப்பை கொண்டு தனது சந்தையை தக்க வைத்துக்கொண்டது. பின்பு தனக்கென ஒரு பாட்டில் தயாரிக்கும் தொழிற்சாலையையும் அமைத்துக் கொண்டு முன்னேறியது.இன்றளவிலும் குளிர்பான சந்தையில் நிலைத்து நிற்கும் ஒரே தமிழக நிறுவனம் காளிமார்க் தான்.

( கர்நாடகாவில் சில விவசாயிகள் பூச்சி மருந்துக்கு பதிலாக கோக்-கை பயன்படுத்தியதால் அமோக விளைச்சல் பெற்ற செய்தியை அறிந்தும், பெப்ஸியில் கரப்பான் பூச்சிகளை கண்டெடுத்த பின்பும் அதனை நம் மக்கள் வாங்கி குடிப்பது இன்றும் தொடர்கிறது)

ஆனால் ,இன்றளவிலும் தனது தரத்தில் சிறு குறையில்லாமல் தொடர்ந்து தனது தயாரிப்புகளை வழங்கி வருகிறது காளிமார்க் நிறுவனம். மாற்றாக ஒரே ஒரு முறை நம்மூர் தயாரிப்பான `BOVONTO'வை குடித்துப்பாருங்கள்.அப்புறம் பெப்ஸி, கோக் (பூச்சி மருந்துகளை) வாங்கவே மாட்டிர்கள்.

கார்ப்பரேட்டின் சூழ்ச்சியை முறியடித்த ஒரு நிறுவனத்தின் தயாரிப்பை குடிப்பதால் ஒரு நிறுவனத்திற்கு ஊக்கமளிக்கும் வகையிலும், ஒரு தரமான உள்ளூர் தயாரிப்புக்கு நம் பணத்தை செலவளித்த வகையிலும் நமக்கும் ஒரு பெருமை உண்டு.அதே போல் நமது செலவாணியும் உள்ளூர் வியாபாரியிடமே இருக்கும்.

ஆனால் PEPSI,COKE க்கு செலவளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் அமெரிக்க நிறுவனத்திடம் சென்று விடும்.
மேலும் தரமற்ற பொருட்களால் நம் உடலுக்கும் கேடு விளைவிக்க கூடியவை.

பூச்சி கொல்லி மருந்துகளான PEPSI, கோக், போன்றவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும்

கோலாவின் அற்புத பயன்கள்??

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

Photo: Pls share it ....

நோயாளியிடம் நலம் விசாரித்தல்...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

நோயாளியிடம் நலம் விசாரித்தல்...

உண்மை முஸ்லிம் நோயாளிகளை நலம் விசாரிக்கச் செல்ல வேண்டுமென இந்நேரிய மார்க்கம் மிகவும் வலியுறுத்துகிறது. எனவே நோய் விசாரிக்கச் செல்வது கடமையாகும். நோயாளியிடம் சென்று ஆறுதல் கூறும்போது நபி (ஸல்) அவர்களின் கட்டளையை நிறை வேற்றுகிறோம் என்று மனம் நிறைவடைய வேண்டும்.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளிகளை நலம் விசாரியுங்கள்; கைதிகளை விடுவியுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி)

பராஃ இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நோயாளிகளை நலம் விசாரிக்குமாறும், ஜனாஸாவை பின் தொடரவும், தும்மியவருக்கு பதிலளிக்கவும், சத்தியம் செய்தவருக்கு உபகாரம் செய்யவும், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவி செய்யவும், அழைப்பை ஏற்று பதிலளிக்கவும், ஸலாமைப் பரப்புமாறும் நபி (ஸல்) அவர்கள் எங்களை ஏவினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களின் போதனைகள் இஸ்லாமிய சமூகத்தில் வெகு ஆழமாக ஊன்றப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் வாழ்வில் தான் நோய்வாய்ப்பட்டால் தனது சகோதரன் தன்னை நலம் விசாரிக்க வர வேண்டும், அது அவனது கடமைஎன்று எண்ணுமளவு இப்பண்பு வலுப்பெற்றுள்ளது. அதை மறந்துவிட்டால் அல்லது அதில் குறை ஏதும் செய்துவிட்டால் அவன் தனது சகோதரனின் கடமையை மறந்தவன். அல்லது சகோதரனின் கடமைகளில் குறை செய்தவனாகிறான். அவன் இஸ்லாமின் மேலான பார்வையில் தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்ட பாவியாகிறான்.

நபி (ஸல்) அவர்கள், ”முஸ்லிமின் மீது ஒரு முஸ்லிமுக்குரிய கடமைகள் ஐந்துஎன கூறியபோது நபி (ஸல்) அவர்களிடம் அது என்ன? என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ”அவரை நீ சந்தித்தால் ஸலாம் கூறு, அவர் உன்னை அழைத்தால் ஏற்றுக்கொள், உன்னிடம் அவர் நல்லுபதேசத்தை எதிர்பார்த்தால் அவருக்கு உபதேசம் செய், அவர் தும்மி அல்ஹம்துலில்லாஹ் என்று கூறினால் (யர்ஹமுக்கல்லாஹ் என்று) பதில் கூறு, நோய்வாய்ப்பட்டால் நலம் விசாரி, அவர் மரணித்தால் (ஜனாஸா) உடன் செல்.” (ஸஹீஹுல் புகாரி)
ஒரு முஸ்லிம் தனது சகோதரனை நோய் விசாரித்தால் அவர் ஏதோவொரு கடமையைச் செய்து முடித்தோம் என்று எண்ணிவிடக் கூடாது. மாறாக, தனது செயலுக்காக அவர் ஆனந்தமடைய வேண்டும். பின்வரும் நபிமொழியின் கருத்தைக் கவனிக்கும்போது நலம் விசாரிப்பதன் மேன்மையை அறிந்துக் கொள்ளலாம்.

நபி (ஸல்) கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் மறுமை நாளில் ஆதமின் மகனே! நான் நோய்வாய்ப்பட்டேன். நீ நலம் விசாரிக்க வரவில்லைஎன்று கூறுவான். மனிதன், எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். நான் எப்படி உன்னை நலம் விசாரிக்க முடியும் என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ”உனக்குத் தெரியுமா? எனது இன்ன அடியான் நோயுற்றான். நீ நலம் விசாரிக்கச் செல்லவில்லை. உனக்குத் தெரியுமா? நீ அவரை நலம் விசாரிக்கச் சென்றிருந்தால் அந்த இடத்தில் என்னை பெற்றிருப்பாய்என்று கூறுவான்.

ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். நீ எனக்கு உணவளிக்கவில்லைஎன்று அல்லாஹ் கூறுவான். மனிதன் எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கெப்படி நான் உணவளிக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ”நீ அறிவாயா? எனது இன்ன அடியான் உன்னிடம் உணவளிக்கக் கேட்டான். நீ உணவளிக்கவில்லை. உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு உணவளித்திருந்தால் அதன் நன்மையை என்னிடத்தில் பெற்றிருப்பாய்என்று கூறுவான்.

ஆதமின் மகனே! நான் உன்னிடம் தண்ணீர் கேட்டேன். நீ எனக்கு தண்ணீர் புகட்டவில்லைஎன்று கூறுவான். அம்மனிதன் எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கு நான் எப்படி நீர் புகட்ட முடியும்? என்று கேட்பான். அல்லாஹ் எனது இன்ன அடியான் உன்னிடம் தண்ணீர் புகட்டுமாறு கேட்டான். உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு தண்ணீர் புகட்டியிருந்தால் அதன் நன்மையை என்னிடம் பெற்றிருப்பாய்என்று கூறுவான். (ஸஹீஹ் முஸ்லிம்)

நோயாளியை நலம் விசாரிப்பது எவ்வளவு பரக்கத் பொருந்திய நற்செயல்! பலவீனப்பட்ட நோயாளியான தமது சகோதரனின் விருப்பத்தை நிறைவு செய்வது எவ்வளவு உயர்ந்தது! நலம் விசாரிப்பவன் அந்த சந்தர்ப்பத்தில் மகத்துவமிக்க தனது இரட்சகனிடம் நிற்கிறான். அல்லாஹ் அவனது நற்செயலுக்கு சாட்சியாகி மாபெரும் கொடையை வாரி வழங்குகிறான். இதன்மூலம் நலம் விசாரிப்பதை பரக்கத்தானதாகவும் மிக உயர்ந்த செயலாகவும் அல்லாஹ் நிர்ணயித்து அதனை செய்யத் தூண்டுகிறான். இவ்வாறு நலம் விசாரிக்காதவன் எவ்வளவு பெரிய நஷ்டவாளி, மாபெரும் இழிவும் வேதனையும் அவனை மறுமையில் சூழ்ந்து கொள்கிறது.

உலகப் படைப்புகள் அனைத்தின் முன்னிலையில் அவனிடம் ஆதமின் மகனே! நான் நோயுற்றபோது நலம் விசாரிக்க ஏன் வரவில்லை? எனது இன்ன அடியான் நோயுற்றபோது நீ நலம் விசாரிக்கவில்லை. அவனை நலம் விசாரித்திருந்தால் அங்கு என்னை நீ பெற்றிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?” என்று அல்லாஹ் கூறுவது அவனுக்கு மாபெரும் கேவலமாகும். தனது சகோதரனை நலம் விசாரிக்காமல் தவறிழைத்த மனிதன் அடையப்போகும் சஞ்சலம், கைசேதம் பற்றி இப்போதே சிந்திப்போம். ஏனெனில் மறுமை நாள் வந்தபின் உலகிற்கு மீண்டு வரமுடியுமா?

இஸ்லாமிய சமூகத்தில் நோயாளி என்பவன் தனது துன்பத்திலும் சிரமத்திலும் உழன்று கொண்டிருக்கும் நிலையிலும் தான் ஆதரவற்ற அனாதையல்ல, தன்னை இந்தச் சிரமத்திலிருந்து மீட்பதற்கு அல்லாஹ்வின் துணையுடன் உதவியாளர்களும் நண்பர்களும் இருக்கிறார்கள்என்ற உணர்வு அவனது உள்ளத்தில் தோன்ற வேண்டும். இது மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் இஸ்லாமின் உன்னதப் பண்பாகும்.

இது முஸ்லிம்களிடையே தவிர வேறெங்கும் காணமுடியாத அற்புதப் பண்பாகும். மேற்கத்திய நாடுகளில் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளும், திறமையான மருத்துவர்களும், உயர்ந்த மருந்துகளும் உள்ளன. எனினும் உறவினர்கள், நண்பர்களின் கனிவான அணுகுமுறை, ஆறுதலான வார்த்தைகள், மலர்ந்த புன்னகை, தூய்மையான பிரார்த்தனைகள் என்பது அந்த நேயாளிகளுக்கு மிகக் குறைவாகவே கிட்டுகின்றன. பொருளியலை அடிப்படையாகக் கொண்ட சிந்தனை மேற்கத்தியரை ஏமாற்றிவிட்டதுதான் இதற்குக் காரணமாகும். அது மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் அழித்து உலகில் பலன் கிடைக்காத நற்செயல்கள் செய்வதிலிருந்து அவர்களைத் தடுத்துவிட்டது.

மனிதன் நோயாளியை சந்தித்து ஆறுதல் சொல்வதால் விளையும் நன்மைகளை உணரமாட்டான். ஒருவரை தான் சந்தித்து, அவருக்கு ஆறுதலாக இருக்க வேண்டுமெனில் அவரிடமிருந்து தனக்கு உடனடியாகவோ, பிற்காலத்திலோ ஏதேனும் பலன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில்தான் அவனது அணுகுமுறை அமைந்திருக்கும். ஆனால் ஒரு முஸ்லிமுக்கு நோயாளியை சந்தித்து, ஆறுதல் கூற தூண்டுகோலாக அமைவதெல்லாம் இந்த நேரிய பாதையில் செல்பவர்களுக்கென அல்லாஹ் தயார் செய்துள்ள நன்மைகள்தான். இதற்கான சான்றுகள் ஏராளமானவை. இவை சகோதரத்துவ உணர்வை வளர்த்து நோயாளியை சந்திக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக ஒரு முஸ்லிம், தனது முஸ்லிம் சகோதரரை நோய் விசாரிக்கச் சென்று திரும்பும்வரை சுவனத்தின் கனிகளை பறித்துக் கொண்டிருக்கிறார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம், சகோதர முஸ்லிமை நலம் விசாரிக்க காலையில் செல்வாரேயானால் எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக மாலைவரை துஆச் செய்வார்கள். அவர் மாலையில் நலம் விசாரிக்கச் சென்றால் காலைவரை எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக துஆச் செய்வார்கள். அவருக்கென சுவனத்தின் கனிகள் தயாராக வைக்கப்படும்.” (ஸுனனுத் திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள், நோய் விசாரிப்பதால் நோயாளியின் மனதிலும் அவரது குடும்பத்தினரிடையேயும் மனிதநேயச் சிந்தனைகள் வளர்வதை அறிந்திருந்தார்கள். இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் நோயாளிகளின் நலம் விசாரிப்பதில் ஒருபோதும் சடைந்ததில்லை. அவர்கள் நோயாளிகளுக்கு ஆறுதல் கூறி பிரார்த்தனையும் செய்து வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தனக்கு பணிவிடை செய்து வந்த யூதச் சிறுவனைக் கூட நலம் விசாரிக்கச் சென்றதிலிருந்து நபி (ஸல்) அவர்களின் மேலான வழிமுறையை அறிந்து கொள்ளலாம்.

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த யூதச்சிறுவன் உடல்நலம் குன்றியபோது நபி (ஸல்) அவர்கள் அவனிடம் நலம் விசாரிக்கச் சென்று அவனது தலைமாட்டில் அமர்ந்தார்கள். பின்பு அச்சிறுவனிடம் நீ இஸ்லாமை ஏற்றுக்கொள்என்று கூறினார்கள். அச்சிறுவன் அருகிலிருந்த தனது தந்தையைப் பார்த்தான். அவர் நீ அபுல் காஸிமுக்கு கட்டுப்படு!என்று கூறினார். அச்சிறுவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். நபி (ஸல்) அவர்கள், ”இச்சிறுவரை நரக நெருப்பிலிருந்து காத்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்என்று கூறியவர்களாக வீட்டை விட்டு வெளியேறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவரை நோய் விசாரிக்கச் சென்ற சந்தர்ப்பத்திலும் அவரை இஸ்லாமின்பால் அழைக்கத் தவறவில்லை. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவரை நோய் விசாரிக்கச் சென்றது, அச்சிறுவர் மனதிலும் அவரது தந்தையின் மனதிலும் நபி (ஸல்) அவர்களின் கருணையையும், மேன்மையையும் ஆழப்பதியச் செய்தது. எனவே அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு அடிபணிந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் வருகை அவர்களுக்கு நேர்வழியை அருளியது. நபி (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறும்போது அவர்கள் அச்சிறுவரை நரகிலிருந்து விடுவித்த அல்லாஹ்வுக்கு நன்றி சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் தான் எத்தகு மகத்தான மனிதர்! அவர்களது இறையழைப்புதான் எவ்வளவு விவேகமானது!

நபி (ஸல்) அவர்கள் நோயாளிகளை நலம் விசாரிப்பதற்கு மிகுந்த முக்கியத்துவமளித்ததுடன் அது விஷயத்தில் தங்களது தோழர்களுக்கு சில அடிப்படைகளையும் கற்றுக் கொடுத்தார்கள். அதில் ஒன்றுதான் நோயாளியின் தலைமாட்டில் அமர்ந்து நலம் விசாரிப்பதும்.

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் எவரையேனும் நோய் விசாரிக்கச் சென்றால் அவரது தலைமாட்டில் அமர்ந்து கொண்டு ஏழுமுறை பின்வரும் துஆவைக் கூறுவார்கள்: உமக்கு ஷிஃபா அளிக்க வேண்டுமென மகத்தான அர்ஷின் இரட்சகனான, மகத்தான அல்லாஹ்விடம் நான் கேட்கிறேன்.” (அல் அதபுல் முஃப்ரத்)
நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த ஒழுக்கங்களில் ஒன்றுதான் தங்களது வலது கரத்தால் நோயாளியை தடவிக் கொடுத்து, அவருக்காக துஆச் செய்வதும்.

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவரை நலம் விசாரிக்கச் சென்றால் தமது வலது கரத்தால் அவரை தடவிக் கொடுத்து அல்லாஹ்¤ம்ம ரப்பன்னாஸ், அத்ஹ¢பில் பஃஸ, இஷ்ஃபி, அன்த்தஷ்ஷாஃபீ, லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக, ஷிஃபாஅன் லாயுஃகாதிரு ஸகமாஎன்று பிரார்த்திப்பார்கள். அதன் பொருள், ”யா அல்லாஹ்! மனிதர்களின் இரட்சகனே! நோயைப் நீக்குவாயாக! அறவே நோயில்லாமல் குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு கிராமவாசியை நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் நலம் விசாரிக்கச் சென்றால் கவலைப்பட வேண்டாம்! இறைவன் நாடினால் இது (உங்கள் பாவத்தைக் கழுவி உங்களைத்) தூய்மைப்படுத்திவிடும்என்று கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரி)

நோயாளிகளை நலம் விசாரிப்பதில் முஸ்லிம்கள், தலைமுறை தலைமுறையாக இப்புகழுக்குரிய நபிவழியைப் பின்பற்றி வருகிறார்கள். ஒருவருக்கொருவர் கருணையிலும் அன்பிலும் உதவி செய்து கொள்வதிலும் எடுத்துக்காட்டாகத் திகழும் இப்பண்பு முஸ்லிம்களின் தனித் தன்மையான அடையாளமாகவே நிலைபெற்றுத் திகழ்கிறது. இப்பண்பு வாழ்க்கை சுமையால் அழுந்திப்போன முதுகை நிமிர்த்துகிறது; கவலையில் வீழ்ந்தவனின் கண்ணீரைத் துடைக்கிறது; துன்பங்களால் சூழப்பட்டவனை விடுவிக்கிறது; நிராசையடைந்தவனுக்கு நம்பிக்கையை துளிர்க்கச் செய்கிறது; சகோதரத்துவ அன்பை உறுதிப்படுத்துகிறது; வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வலிமையைத் தருகிறது.

Say ALLAHUMMASSFI NAME OF PERSON

நோய் விசாரிக்கச் செல்வதற்கு இஸ்லாம் அதிக அவதானத்தையும் ஊக்கத்தையும் வழங்குகின்றது. நபி(ஸல்) கூறினார்கள்: ஒரு முஸ்லிம் தம் சகோதரரை காலையில் உடல் நலம் விசாரித்தால், அன்று மாலை வரை அவருக்காக எழுபதாயிரம் மலக்குகள் துஆச் செய்வார்கள். அவரை மாலையில் உடல் நலம் விசாரித்தால், மறுநாள் காலை வரை எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக துஆச் செய்வார்கள். 
அறிவிப்பாளர் : அலி(ரலி) ஆதாரம் : திர்மிதி



six-day holiday for Eid Al Adha in October.- UAE

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

Eid in October: UAE government staff to enjoy 6 days holidays
Holidays begin on October 14

The government and federal institutions in the UAE are likely to enjoy a six-day holiday for Eid Al Adha in October.

Eid holidays will begin from October 14, Monday, until Saturday the 19th, according to a calendar prepared by Islamic Affairs and Charitable Activities Department in Dubai (Iacad).

The holiday includes the day of Waqfat Arafat - the day before Eid Al Adha which will fall on (Monday) - followed by three days of Eid and a Friday-Saturday weekend.

Thus, government and federal institution staff can look forward to a six-day holiday in October. They will return to work on October 20.

Source: Emirates 24|7

Tuesday, 25 June 2013

அழிவுப் பாதையில் தொலைக்காட்சி சேனல்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மக்களின் பொழுதுபோக்குக்காக ஏற்படுத்தப்பட்ட சாதனங்களில் முதன்மையானதாக தொ(ல்)லைக்காட்சி விளங்குகிறது ஆனால் அதன் மூலம் செய்திகள் உள்ளிட்ட உலக அறிவியல் அரசியல் விஷயங்களும் அறிந்து கொள்ளலாம் என்றும், மக்கள் மனங்களை பண்படுத்தும் இது என்று வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். அந்த அடிப்படையில்தான் தண்டனைக்காக அனுப்பப்பட்டு சிறையில் இருக்கும்போது கைதிகள் கூட T.V. பார்க்கலாம் என்று கருத்து கூறப்பட்டு அது ஆட்சியாளர்களால் அனுமதிக்கப்பட்டும் வருகிறது.
ஆனால் இன்று நடைமுறையில் இந்த தொலைக்காட்சி சேனல்களில் மக்கள் எந்த நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கிறார்கள்? எந்த சேனல்கள் பெரும்பாலும் ரசித்து மகிழ்கிறார்கள் என்று பார்த்தால், அறிவியல் அரசியல் கூடிய செய்திகளை விடவும் நாடகங்கள் எனப்படும் மெகா சீரியல்களும் திரைப்படங்களும் ஆடல் பாடல் கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் தான் முன்னணி வகிக்கின்றன. யுக முடிவுக் காலம் வருவதை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் உலகம் அதை எந்தளவுக்கு வரவேற்றுக் கொண்டிருக்கிறது என்று யாரும் பெரிய ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டியதில்லை.
ஆம்! இந்த தொலைக்காட்சிகளின் ஜீவ நாடி திரைப்பட உலகம் இதன்மூலம் உருவாக்கப்படும் படங்கள் நடிகர்கள் நடிகைகளின் வாழ்க்கை மக்களை எந்தளவுக்கு அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்றுக் கொண்டிருக்கிறது? தினமும் செய்தித்தாள்களை புரட்டினால் காதல் ஜோடி ஓட்டம் காதல் ஜோடி தற்கொலை, கள்ளக்காதலர்களின் காமக் களியாட்டங்கள் வயது வரம்பு தாண்டி காம வெறிக்கு பலியாகும் மாணவர் இளைஞர்கள்; பணம் செலவுக்கில்லையென்றால் கொலை கொள்ளை இதுவெல்லாம் யார் கற்றுத் தந்த பாடம்? சினிமா தவிர வேறு யார் இதை இவ்வளவு (கேவலமாக) வேகமாக கற்றுத் தரமுடியும்.
காசிற்காக சினிமாவில் நடிக்கும் இவர்கள் நிஜமாக வாழ்பவர்களுக்கு எதைக் கற்றுத் தரமுடியும்? இதைத்தான் நிஜத்தில் மூட்டை தூக்குபவர்களுக்கு கூலி பத்து ரூபாய் என்றால் மூட்டை தூக்குபவதைப் போல் நடிப்பவர்களுக்கு கூலி கோடி ரூபாய். இவர்களை இனம் காட்ட இவர்களின் வாழ்க்கை குடும்பத்தைப் பாருங்கள். விரல்விட்டு எண்ணிப் பாருங்கள். எத்தனை நடிகர் நடிகை கைப்பிடித்த ஒரே கணவன் மனைவியாக வாழ்ந்திருக்கிறார்கள். எத்தனை நடிகர் நடிகைகள் லஞ்ச லாவண்யம் பற்றி பேசுபவர்கள் அதைத் தவறு என்று கூப்பாடு போடுவார்கள் வெறுமனே தாங்கள் நடிப்பதற்காக லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் பணம் வாங்குகிறார்களே? அதில் எத்தனை பேர் சரியாக வரிகட்டுகிறார்கள். ஊருக்கு உபதேசம் செய்யும் உத்தமர்கள்(?) கறுப்பு பணம் வாங்காமல் மது அருந்தாமல் விபச்சாரம் செய்யாமல் இருப்பவர்கள் யார்? யார்? ஆக அழிவுப் பாதையின் திறவுகோலாக அவதரித்துள்ள ஒவ்வொரு மொழியின் நாட்டின் திரையுலகில் இப்படித்தான் என்பதை யாராவது மறுப்பவர்கள் உண்டா?
திரையுலகம் இப்படி என்றால் சின்னத்திரையுலகம் அழிவுப் பாதையில் ஊன்றுகோளாக உருவெடுத்து விட்டது. ஆபாசங்களை அருவெறுப்பாக கருதாமல் அதை அரங்கேற்றுவதில் ஒவ்வொரு சேனல்களும் நீயா நானா? என்று போட்டியில் உள்ளன. எத்தனைப் போர்க்குரல்கள் எழுப்பப்பட்டாலும் அதனைக்கண்டு அஞ்சும் நிலையில் எந்த T.V. சேனலும் இல்லை. இதனைக் கட்டுப்படுத்தவேண்டிய அரசாங்கம் தமிழில் பேர் வை; உனக்கு வரிச்சலுகை என்கிறது. ஒரே ஒரு பாடல் காட்சிக்கும் ஒரே ஒரு சண்டை காட்சிக்கும் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைக்கும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வரி வெறும் ஊறுகாய் மாதிரிதான்.
அரை குறை ஆடையுடன் என்ன? அதுவும் இல்லாமல் காட்சி தர நான் ரெடி: படம் பிடிக்க ஒளிபரப்ப யார் ரெடி? என்று சினிமா விபச்சாரிகள் கேட்கின்றனர். சினிமாத் துறையையும் சின்னத்திரை எனப்படும் T.V.   சேனல்களையும் தாண்டி மக்களை அழிவின் பக்கம் அடைப்பவர்கள் செய்தித்தாள்கள் மூலம் T.V.   க்கு விளம்பரம்; T.V. யை ஒரு முறை பார்ப்பதைவிட செய்தித்தாளை பத்திரப்படுத்தி எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்வார்களே! அதற்காக பெரும்பாலான நிறுவனங்கள் இரண்டையும் ஒருங்கேப் பெற்றுள்ளன. அதன் மூலம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் தனித்தனி செய்தியாளர்கள் தேவையில்லை. தனித்தனி செய்தியாளர்கள் தேவையில்லை. அப்புறமென்ன தேசிய வார இதழ்- நாளிதழ் குடும்ப, வார இதழ் என்று A சர்டிபிகேட் இல்லாமல் கவர்ச்சிப் படங்களை சென்சார் செய்யாமல் வெளியிடும் தைரியம் இந்த குடும்ப(?) இதழ்களுக்குச் சாரும். ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வரும் தினப்பத்திரிகைகளை பார்ப்பவர்களுக்குத் தெரியும். கூச்சப்பட வேண்டி நம்மை நெகிழச் செய்யும் படங்கள்  செய்திகள் தான் எத்தனை எத்தனை? யார் கொடுத்தது இந்த குடும்ப  தேசிய சர்டிபிகேட்,
சீர்கெடுக்கும் சேனல்களுக்கு பண மழை பெய்ய வறட்சி ஏதும் இல்லை. பணம் வெள்ளமும் பணப் புயலும் நல்ல அமோக விளைச்சல். அதை சாகுபடி செய்ய மடையர்களாய் மக்கள். T.V. யில் வியாபாரம் இல்லாத எந்தப் பொருளையும் யாரும் வாங்காத நிலை அளவுக்கு தயிர் சாதத்திலிருந்து ஊறுகாய், பால், பவுடர், ஷேம்பு, சோப்பு, பிளேடு, அரிசி எண்ணை மாவு முதலி இரு சக்கர வாகனங்களிலிருந்து 4 சக்கர வாகனங்கள் வரை எந்த விளம்பரத்தை யார்தான் விட்டு வைத்தார்கள்? – சலூன் கடைக்கு மட்டும்தான் விளம்பரம் இல்லை.
அடுத்ததாய் மக்களை அழிவின்பால் அறைகூவல் விடுவதாக செல்போன்கள் தயாராகிவிட்டன. பாமரர்களையும் விட்டுவைக்காமல் இந்த செல்போன் சூறாவளி செல் நிறுவனங்களால் சலுகை மலிவு என்ற கோரப்பிடியில் மக்கள் ஆட்படுத்தப்படுத்தப்படுகின்றனர்.  கம்பியூட்டருக்குப்பின் தயாரித்தது தான் செல்போன். எல்லா தரப்பினரையும் பதம்பார்த்து அழிவின் அடித்தளமாக செல்போன்கள் விளங்குவதை யாரும் மறுக்க இயலாத பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் நீலப்படங்களைக் கூட இதில் பார்க்கும் வசதியும் உண்டு. ஆச்சரியப்பட வேண்டிய விஞ்ஞான விஷயங்கள் ஆபாச அரங்கேற்றங்களால் கைச்சேதப்பட வைக்கின்றன.
அடுத்தபடியாக காமக் களியாட்டங்கள் அரங்கேறும் இடங்களாக சுற்றலாத்தளங்கள். பார்க்குகள் பீச்சுகள் இடம் பெறுகின்றன. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதாரண சுற்றுலாத் தளங்களில் எங்கேயாவது ஒரு காதல் ஜோடியை பார்ப்பது அதிசயம்; அதுவும் ஆள் அரவமற்ற ஒதுக்குப் புறங்களில் பயந்து பயந்து பேசிக் கொள்வதை நாம் கண்டோம். ஆனால் இன்றோ சர்வசாதாரணமாக பஸ்களில் பஸ் நிறுத்தங்களில் ஆரம்பித்து பார்க் பீச்சுகளில் மற்றும் பொது இடங்களிலும் கூட காதல் காம லீலைகள ஒருவர் மடியில் ஒருவர் சாய்ந்து என்று ஆரம்பித்து எழுதக் கூசும் அசிங்கங்கள் நடக்கின்றன. இப்போது நடுநிலையாளர்கள் ஆள் அரவமற்ற இடங்களில் ஒதுங்கிக் கொள்ளும் அவலம் உள்ளது. எனவே இது போன்ற எல்லா அசிங்கங்களுக்கும் மூலகாரணம் சாட்சாத் இந்த சின்னத் திரையும் திரை உலகமும் தான். இதனைத் தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை. வீடு தேடி வரும் இந்த சேலை இந்த அழிவை எதிர்பார்க்கும் உலகத்திற்குத் தேவையா? என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
பொழுது போக்கும் நிகழ்ச்சிகள் என்ற பெயரில் உலாவரும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுவதை விட நம்மை நாமே பழுது பார்த்துக் கொள்ள ஒவ்வொரு நொடித் துளியையும் பயன்படுத்திக்கொண்டு பண்படுவோம். அதன் மூலம் இன்புறுவோம். உலகில் எல்லாவற்றையும் துறந்து விடச்சொல்லி இறைவன் சொல்லவில்லை. குடும்பம் வீடு வாசல் தர்மம் ஆட்சி அதிகாரம் அனைத்திலும் என்னதான் விஞ்ஞானங்கள் வந்தாலும் மெய்ஞானத்தால் இஸ்லாம் கூறும் வழிமுறைகளை அறிந்துணர்ந்து நடப்போமானல் எந்த விபரீதங்களையும் இறைவன் அருளால் எதிர்கொள்ள முடியும். இறைவன் போதுமானவன்.
அன்புடன் 

அஷ்ரப்

பரமக்குடி, இஸ்லாமிய சமூக நல அறக்கட்டளையின் பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

பரமக்குடி, இஸ்லாமிய சமூக நல அறக்கட்டளையின்
சார்பில்
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 400 மற்றும் 1000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற இஸ்லாமிய மாணவ மாணவியர்களுக்கு 

பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா
நாள்  29.06.2013
நேரம் காலை 9.30 மணி
இடம் ராஜா திருமண மகால், பரமக்குடி
           இன்ஷா அல்லாஹ் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
--
ISLAMIC SOCIAL WELFARE TURST
9/175 KODIKAL KARAR STREET,
PARAMAKUDI TK
RAMANATHAPURAM DIST
PIN : 623 707
Cell : 9597418904, 9443190755
__._,_.___

1.jpg
2.jpg
3.jpg

4.jpg

எதை மறக்க சொல்கிறாய்.- குஜராத்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

முஸ்லிம்கள் குஜராத் கலவரத்தை மறந்துவிடவேண்டும்...!!!  - பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்க்.

எதை மறக்க சொல்கிறாய்...???
 
அண்ணன் தம்பியாக பழகிய மக்களை மதத்தின் பெயரால்
பிரித்தெடுத்து பதம் பார்த்தீர்களே அதையா..?? 
 
சகோதரனின் கண்முன் சகோதரியை
கணவனின் கண்முன் மனைவியை
மகனின் கண்முன் பெற்ற தாயை
நிர்வாணமாக்கி கூட்டாக வன்புனர்ந்தீர்களே அதையா...??

கருவுற்ற தாயின் அடிவயிற்றை கிழித்து
உலகை பார்த்திராத பச்சிளம் சிசுவை
கூர்வாளால் வெட்டி வீசியதே
காவி கொலைவெறி கூட்டம் அதையா..???

வெளியே சென்றால் பாதுகாப்பு இல்லை
எனக்கருதி வீட்டினுள் கூட்டாக அடைந்திருந்த
மக்களை தயவு தாட்சண்யம் இன்றி
வீட்டோடு தீவைத்து கொளுத்திநீர்களே அதையா...???

பாராளுமன்ற MP இஹ்சான் ஜாப்ரி, அவர் வீடு பாதுகாப்பாய்
இருக்குமென நம்பி ஒரு ஊரே அந்த வீட்டினுள்
தஞ்சம் புகுந்தபோது அதன் கதவுகளை உடைத்து
அவரை தர தரவென இழுத்து அம்மணமாக்கி
கண்டம் துண்டமாக வெட்டி கொன்றீர்களே அதையா...???

தண்ணீரால் நிரம்பியிருக்க வேண்டிய குஜார்த்தின் குளங்கள்... முஸ்லிம்களின் செந்நீரால் நிரம்பி வழிந்ததே அதையா...???

மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனும் மறக்கவே மாட்டான்...நீங்கள் செய்த மாபெரும் கொடுமைகளை...!!!

கருத்தாக்கம் அபு ரயான் !


Novshath
G-Tex,
Dammam
.

ஸ்பைடர் மேனை மிஞ்சும் மோடி

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

ஸ்பைடர் மேனை மிஞ்சும் மோடி (!!!!!!)

பத்திரிகைச் செய்தி! எந்த பத்திரிகைன்னு
உங்களுக்கே தெரியும்..

கேக்குரன் கேணயனா இருந்தா.. இப்படித்தான் சொல்வார்கள்...

இன்னோவா 80x7 =560பேர்
விமானம் 4x320= 1280பேர்
சொகுசு பஸ் 25x50=1250பேர்
 
எப்படி பார்த்தாலும் அதிக பட்சம் 5000 தான் தேறும்.
அதுவும் ராணுவ உதவியிடன், பாவம் ராணுவ வீரர்கள்
குஜராத் மக்களை மட்டும் கண்டி பிடுத்து காப்பாற்றினார்கள், அதுவும் மோடியின் தலைமையில்..
அப்ப ராணுவ கமெண்டர்கள் என்ன ஆனார்கள்?
இப்படி ஆயிரம் கேள்விகள்...

மீட்க வேண்டியவர்கள் இன்னும் 10 ஆயிரமா?
அல்லது 30 ஆயிரமா?

ஆமா இவ்வளவு செய்ததை யாரும்
ஒரு வீடியோ கூடவா எடுக்கல்ல...!!!

நன்றி : முஹம்மத் சைனுதீன் B
ஸ்பைடர் மேனை மிஞ்சும் மோடி ( ! )

பத்திரிகைச் செய்தி! எந்த பத்திரிகைன்னு 
உங்களுக்கே தெரியும்..

கேக்குரன் கேணயனா இருந்தா.. இப்படித்தான் சொல்வார்கள்...

இன்னோவா 80x7 =560பேர்
விமானம் 4x320= 1280பேர்
சொகுசு பஸ் 25x50=1250பேர்

எப்படி பார்த்தாலும் அதிக பட்சம் 5000 தான் தேறும். 
அதுவும் ராணுவ உதவியிடன், பாவம் ராணுவ
 வீரர்கள் 
குஜராத் மக்களை மட்டும் கண்டி பிடுத்து காப்பாற்றினார்கள், அதுவும் மோடியின் தலைமையில்.. 
அப்ப ராணுவ கமெண்டர்கள் என்ன ஆனார்கள்? 
இப்படி ஆயிரம் கேள்விகள்...

மீட்க வேண்டியவர்கள் இன்னும் 10 ஆயிரமா? 
அல்லது 30 ஆயிரமா?

ஆமா இவ்வளவு செய்ததை யாரும் 
ஒரு வீடியோ கூடவா எடுக்கல்ல...!!!

நன்றி : முஹம்மத் சைனுதீன் B