Wednesday, 29 February 2012

இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன். The islamification of Britain

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இது, கடந்த சில மாதங்களுக்கு முன் (4th January 2011) பிரிட்டனின் புகழ் பெற்ற நாளிதழான "தி இண்டிபெண்டன்ட்" தனது கட்டுரை ஒன்றிற்கு வைத்த தலைப்பு.   

ரிச்சர்ட் டாகின்ஸ் தளம் தொடங்கி பல்வேறு தளங்களில் பரபரப்பை/விவாதத்தை உண்டாக்கியிருக்கின்றது இந்த கட்டுரை.
கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்கும் பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக குறிப்பிடும் அந்த கட்டுரை கீழ்க்காணும் தகவல்களை தெரிவிக்கின்றது.

----------------------
"பிரிட்டனில் எத்தனை மக்கள் இஸ்லாமை தழுவி இருக்கின்றார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட மிக விரிவான மதிப்பீடு முயற்சி, கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக கூறுகின்றது.
இஸ்லாம் குறித்த எதிர்மறையான சித்தரிப்புகள் அதிகமிருந்தாலும், ஆயிரக்கணக்கான பிரிட்டன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமை தழுவுகின்றார்கள்.
பழைய மதிப்பீடுகள், இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை சுமார் 14,000 திலிருந்து 25,000 வரை இருக்கலாமென சொல்லுகின்றன. 
ஆனால், Faith Matters அமைப்பின் புதிய ஆய்வு, இந்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் வரை இருக்கலாமென தெரிவிக்கின்றது. (அது மட்டுமல்லாமல்) ஒவ்வொரு வருடமும் சுமார் 5000 பிரிட்டன் மக்கள் இஸ்லாமை தழுவதாகவும் தெரிய வருகின்றது.  
ஸ்காட்டிஷ் 2001 மக்கள் தொகை கணக்குப்படி, 2001 ஆம் ஆண்டு வாக்கில், இஸ்லாத்தை தழுவிய பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை 60,699 என ஆய்வாளர்கள் மதிப்பிட்டிருக்கின்றனர். அடுத்த ஆண்டு வரை புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எதுவும் திட்டமிடப்படவில்லை. 

ஒவ்வொரு வருடமும் எத்தனை மக்கள் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக தேர்ந்தெடுக்கின்றனர் என்பதை அறிய விரும்பிய ஆய்வாளர்கள், லண்டனில் உள்ள பள்ளிவாசல்களில் கணக்கெடுப்பு நடத்தினர்.  

அப்படி நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் என்ன சொல்கின்றன என்றால், கடந்த பனிரெண்டு மாதங்களில் பிரிட்டனின் தலைநகரில் மட்டும் சுமார் 1,400 பேர் இஸ்லாத்தை தழுவியிருக்கின்றனர். இந்த தொகையை நாடு முழுவதும் கணக்கிட்டு பார்த்தால் சுமார் 5,200 பேர் ஒவ்வொரு வருடமும் தங்களை இஸ்லாமிற்குள் ஐக்கியப்படுத்தி கொள்கின்றனர். இதனை ஜெர்மனி மற்றும் பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வுகளோடு ஒப்பிட்டோமானால், அங்கே சுமார் 4000 மக்கள் ஒவ்வொரு வருடமும் இஸ்லாத்தை தழுவுகின்றனர். 

இஸ்லாமை தழுவியவர்களின் நம்பத்தகுந்த எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிடுவது கடினம் என்பதை ஒப்புக்கொண்டுள்ள Faith Matters அமைப்பின் இயக்குனர் பியாஸ் முகல்"மக்கள் தொகை கணக்கெடுப்பு, உள்ளூர் வல்லுனர்களின் தகவல்கள், மசூதிகளில் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பு போன்றவற்றை அடிப்படையாக வைத்து திரட்டப்பட்ட சிறந்த அறிவார்ந்த யூகம் இந்த அறிக்கை"என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், " எப்படி இருப்பினும், கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்றவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்திருப்பதை மிகச் சிலரே சந்தேகம் கொள்வார்கள்".

ஏன் அதிக அளவில் மக்கள் இஸ்லாமை தழுவுகின்றனர் என்று கேட்டதற்கு அவர்,"பொதுவாழ்வில் இஸ்லாமின் முக்கியத்துவத்திற்கும், அதிகரித்து வரும் தழுவல்களுக்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கின்றேன். இஸ்லாம் எதைப்பற்றியது என்பதை அறிய ஆர்வம் காட்டுகினறனர் மக்கள். அவர்கள் அப்படி செய்யும் போது பல்வேறு திசைகளில் சென்று விடுகின்றனர். பலரும் தங்களுடைய சகஜ வாழ்க்கைக்கு திரும்பி விடுகின்றனர். ஆனால் சிலரோ, எது குறித்து அவர்கள் ஆராய ஆரம்பித்தனரோ அதில் தாங்கள் கண்டுபிடித்தவற்றை விரும்ப ஆரம்பித்து அதையே தழுவி விடுகின்றனர்"

இது குறித்து கருத்து தெரிவிக்கும் Muslims4uk தளத்தின் நிறுவனர் இனாயத் பங்லவாலா"இந்த முடிவுகள் என்ன தெரிவிக்கின்றன என்றால், 600 பிரிட்டன் மக்களில் ஒருவர் இஸ்லாத்தை தழுவுபவராக இருக்கின்றார். இஸ்லாம் ஒரு மிஷனரி மார்க்கம். நிறைய இஸ்லாமிய அமைப்புகள், குறிப்பாக பல்கலைகழக மாணவர் இஸ்லாமிய அமைப்புகள், இஸ்லாம் குறித்த தவறான கருத்துக்களை களைய தீவிரமாக செயல்பட்டு வருகின்றன" என்று குறிப்பிடுகின்றார். 
இஸ்லாமை தழுவுவதென்பது எளிதான ஒன்று. டெக்னிகலாக, முஸ்லிமாவதற்கு ஒருவர் செய்ய வேண்டியதெல்லாம் ஷஹாதா கூறுவது மட்டும்தான். அதாவது"இறைவன் ஒருவனே, முஹம்மது (ஸல்) அவர்கள் அவனின் தூதர்" என்று மனப்பூர்வமாக சொல்லுவது மட்டும் முஸ்லிமாவதற்கு போதுமானது. ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை இரண்டு சாட்சிகளுக்கு மத்தியில் சொல்லுவதையே விரும்புகின்றனர்."
----------------------------
நீங்கள் மேலே பார்த்த தகவல்கள் மட்டுமல்லாமல், இஸ்லாமை தழுவிய சில சகோதர/சகோதரிகளின் (கதிஜா ரீபக், ஸ்டுவர்ட் மீ, பால் மார்டின், தாவுத் மீலே, டெனீஸ் ஹோர்ஸ்லி, ஹானா தஜிமா) கருத்துக்களையும் வெளியிட்டிருக்கின்றது தி இண்டிபெண்டன்ட்.

அழைப்பு பணியில் தீவிரமாக செயல்படும் அப்துர் ரஹீம் கிரீன், யூசுப் சேம்பர்ஸ், ஹம்சா அன்ட்ரியஸ் மற்றும் ஆடம் தீன் போன்றவர்களின் நாடான பிரிட்டன் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை தன்னகத்தே கொண்ட நாடு. தி இண்டிபெண்டன்ட் கூறியிருக்கும் இந்த தகவல்களுக்கு பின்னால், இஸ்லாத்தை பற்றிய தவறான கண்ணோட்டங்களை களைய பாடுபடும் அந்த இயக்கங்களுக்கு நிச்சயம் பங்கிருக்கவேண்டும்.
குறிப்பாக ஒரு அமைப்பை பற்றி சொல்லியாக வேண்டும். IERA (Islamic Education and Research Academy) என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு மகத்தான இஸ்லாமிய அழைப்பு பணியை செய்து வருகின்றது. இவர்களுடைய செயல் திட்டம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவை,
·                     Mission Dawah - அழைப்பு பணியில் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ ஈடுபடும் முஸ்லிம்களை கொண்ட ஒரு மாபெரும் இயக்கத்தை உருவாக்குவது தான் இந்த பிரிவின் குறிக்கோள். 
·                     Muslim Now - புதிதாய் இஸ்லாமை தழுவியவர்களுக்கு இஸ்லாமிய கல்வி மற்றும் இதர உதவிகளை செய்யும் பிரிவு. 
·                     One Reason  - முஸ்லிமல்லாதவர்களுக்கான இஸ்லா ம் குறித்த தகவல்களை தயாரிக்கும் பிரிவு. 
·                     The Big Debates - முஸ்லிமல்லாத மக்களிடம் ஆரோக்கியமான முறையில் உரையாடுவதே இந்த பிரிவின் குறிக்கோள். இதுவரை பல விவாதங்களை சந்தித்துள்ளது இந்த பிரிவு. இதில் பிரபல நாத்திகர்களும் அடக்கம். 

மேலே காணும் பிரிவுகளை உற்று நோக்கினால் IERAவின் செயல் திட்டம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதை காணலாம்.
அழைப்பு பணியில் IERA போன்ற அமைப்புகள் எந்த அளவு தீவிரமாக செயல்படுகின்றனவோ அது போலவே பிரிட்டனின் இஸ்லாமிய இளைஞர் அமைப்புகளும் செயல்படுகின்றன. 

இஸ்லாமிற்கு எதிரான பிரச்சாரங்கள் சிலரால் வரலாறு முழுக்க தீவிரமாக கையாளப்பட்டிருந்தாலும்/கையாளப் பட்டாலும், அந்த பிரச்சாரங்கள் இது வரை வெற்றி பெற்றதில்லை. அதற்கு எதிர்மறையாக, தொடர்ந்து அதிக அளவில் மக்கள் இஸ்லாத்தை தழுவி தான் வருகின்றார்கள். இது வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. இறைவன் நாடினாலன்றி இனி மேலும் அந்த சிலர் வெற்றி பெற போவதில்லை.

இஸ்லாம் தொடர்ந்து முஸ்லிமல்லாத சகோதர/சகோதரிகளின் உள்ளங்களை ஈர்க்கும். சகோதரர் காலித் யாசின் ஒருமுறை குறிப்பிட்டது போல, நாம் தாவாஹ் என்னும் உள்ளங்களை துளைக்கும் குண்டை என்றும் நம்முடன் வைத்திருப்போம். அது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல ஒவ்வொரு முஸ்லிமின் கடமையும் கூட.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர் --- குரான் 3:104 

இறைவன் நம் சமூகத்திற்கு தூய இஸ்லாத்தை எடுத்துரைக்கும் இயக்கங்களையும், அறிஞர்களையும் தொடர்ந்து தந்தருள்வானாக...ஆமீன்.

இஸ்லாமிய இளைஞர்கள் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட வல்ல இறைவன் உதவி புரிவானாக...ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

Please Note: 
மேலே கொடுக்கப்பட்டுள்ள மொழிபெயர்ப்பு முழுமையானது அல்ல. முழுமையாக படிக்க கீழே கொடுக்கப்படுள்ள சுட்டியை சுட்டவும்.

My sincere thanks to:
1. "The Independent" daily.

References:
1. The Islamification of Britain: record numbers embrace Muslim faith - Jerome Taylor and Sarah Morrison, The Independent, dated 4th January 2011. link
2. Islamic Education and Research Academy. link  
3. Federation of Student Islamic Societies. link


Sulthan

Tuesday, 28 February 2012

குடும்ப அட்டை (Family Card) பெறுவது எப்படி !?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையோர் யார் ?

தனிக் குடும்பமாக உள்ள இந்திய குடிமக்கள்கள் அனைவர்களும் தகுதியுடையோர் ஆவார்கள்.

குடும்ப அட்டை பெற விண்ணப்பம் படிவம் எங்கு கிடைக்கும் ?

தமிழக அரசு விண்ணப்ப படிவங்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்னையித்துள்ளது. இவை அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும் மற்றும் ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளிலும் கிடைக்கும். மேலும் http://www.tn.gov.in/tamiltngov/appforms/ration_t.pdf என்ற அரசு இணை தளத்திலும் தரைஇறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்ப படிவத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும் ?

அந்தந்த தாலுக்கா அலுவலங்களில் உள்ள வட்ட உணவுப் பொருள் வழங்கல் அதிகாரி ( TSO ) அவர்களிடம் தாக்கல் செய்யவேண்டும்.

விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் எவை ?

விண்ணப்ப படிவத்தில் அதில் கோரப்பட்ட விவரங்கள் அனைத்தையும் பூர்த்திசெய்து கையொப்பம் இட வேண்டும். முழுமையற்ற படிவம் நிராகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

தேவையான ஆவணங்கள் :

1.  இருப்பிடச் சான்று
2.  தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை
3. வீட்டு வரி செலுத்திய / மின்சார கட்டணம் செலுத்திய / தொலைப்பேசி கட்டணம் செலுத்திய போன்றவைகளின் ஏதாவது ஒரு ரசீதுகள் / வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் / பாஸ்போர்ட் நகல் ( இதில் ஏதாவது ஓன்று மட்டும் போதுமானவை )
4. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கு அதிகாரியிடம் ( TSO )  பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.
5. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் அதற்கான குடும்ப அட்டை இல்லா சான்று.
6. எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர்.
7. விண்ணப்பதாரரின் தனது விண்ணப்பம் குறித்த தகவல்கள் பெற இலகுவாக தங்களின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யவும். அல்லது சுய முகவரியிட்ட தபால் தலையுடன் கூடிய தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை இணைக்கலாம்.

மனுதாரர் தனது விண்ணப்பத்தின் முடிவினை அறிந்து கொள்ள முடியுமா ?

1.       தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தின் பேரில் 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க அல்லது மனுவின் முடிவை தெரிவிக்க கால நிர்ணயம் செய்துள்ளது.
2.       வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து மனு பெறப்பட்ட நாளிலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் தணிக்கை அதிகாரிகளால் மனுதாரரின் விண்ணப்பத்தின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள மனுதாரரின் வீட்டிற்க்கே வந்து ஆய்வு செய்வார்கள்.
3.       விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகை சீட்டினை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

புதிய குடும்ப அட்டை பெற கட்டணம் உள்ளதா ?

அரசால் ரூ 5 /- கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை உணவு வட்ட வழங்கல் அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும்.

அணுக வேண்டிய முகவரி : ( தஞ்சை மாவட்டதாரர்களுக்கு )

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் :-
மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி ( DSO )
Tel :  04362   231336
Mobile :             9445000286      
E-mail : dso.tnj@tn.gov.in மற்றும் dso.tntnj@nic.in

பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகம் :-
வட்ட உணவு வழங்கல் அதிகாரி ( TSO )
Tel : 04373  235049
Mobile :              9445000293      

குறிப்பு : சகோதரர்களே, புதிய குடும்ப அட்டை பெற வேண்டி தரகர்களிடம் செல்வதை தவிர்த்து கொள்ளுங்கள். மேலும் கையூட்டு கொடுப்பது என்பது இந்திய சட்டப்படி குற்றமாகும்.
-சேக்கனா M.நிஜாம்

First Khaleefah of islamic governannce Abu Bakr's very powerfulInaugural Speech - worth reading for all

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

The whole of the First President (Khaleefah) of the Islamic Governance - Abu Bakr's inaugural speech fits in a paragraph. But, it was a classical / moving speech. It touched upon several critical elements, including Governance, Justice, relationships between the ruler and citizens, external & domestic affairs. It was an uncomplicated speech.
Previous Post: The Untold History of the Khaleefas: Introduction
Background: The Prophet had just died and was not even buried yet. Muslims were in a state of shock. They convened in the courtyard of Banu Saa’idah to choose a leader. They didn’t want the state that was built over a period of 10 years to collapse. They chose Abu Bakr as the Khaleefa.
The Speech: “O people, I have been appointed over you, though I am not the best among you. If I do well, then help me; and if I act wrongly, then correct me. Truthfulness is synonymous with fulfilling the trust, and lying is equivalent to treachery. The weak among you is deemed strong by me, until I return to them that which is rightfully theirs, insha Allah. And the strong among you is deemed weak by me, until I take from them what is rightfully (someone else’s), insha Allah. No group of people abandons military/armed struggle (even against fellow muslims) in the path of Allah (ie., only for good causes), except that Allah makes them suffer humiliation. And evil / mischief does not become widespread among a people, except that Allah inflicts them with widespread calamity. Obey me so long as I obey Allah and His Messenger. And if I disobey Allah and His Messenger, then I have no right to your obedience. Stand up now to pray, may Allah have mercy on you” [Al-Bidaayah wan-Nihaayah (6/305,306)]
1. The right of citizens to scrutinize their leader & to hold him accountable
When Abu Bakr said "If I do well, then help me; and if I act wrongly, then correct me", he affirms the right of citizens to hold their leaders accountable for their actions. Also, this makes it clear that the era of prophetic infallibility was over. From now on, the leaders are susceptible to make mistakes.
These days, even in the western nations, the freedom of expression against the rulers is at best tolerated. In the Islamic caliphate of Abu Bakr, the citizens are expected (not just allowed) to correct their leaders
2. Truthfulness should be the basis of all dealings between a leader and his people
Truthfulness is synonymous with fulfilling the trust, and lying is tantamount to treachery”. Abu Bakr announced that truthfulness should be the basis of all dealings between a leader and his people. This needs to be the case if the people are to develop a sense of trust in their leader.
3. Establishing the principle of Justice and Equality
Abu Bakr said, "The weak among you is deemed strong by me, until I return to them that which is rightfully theirs, insha Allah. And the strong among you is deemed weak by me, until I take from them what is rightfully (someone else’s), insha Allah".
The most important foundations of a truly Muslim country are justice and equality for all. Applying justice is not a "nice" thing. Fakhr al-Razee says, "the scholars of this nation unanimously agree that it is obligatory for a ruler to establish justice in his realm" [Tafseer al-Razee (10/141)]
The justice of Abu Bakr and other early caliphs won the hearts of many people, including enemies, and made them to embrace Islam.
4. Virtue of armed resistance / military expeditions
Abu Bakr said, "No group of people abandons military/armed struggle in the path of Allah, except that Allah makes them suffer humiliation". Though Muslims had controlled the entire Arabian Peninsula at the time of Prophet's death, there were internal and external enemies who threatened the Muslim nation. The importance of military ability, if not the supremacy, was not lost on Abu Bakr.
5. War against wickedness and shameful acts
Abu Bakr said, "And wickedness does not become widespread among a people, except that Allah inflicts them with widespread calamity". He understood that the material well-being of his nation depended upon its spiritual well-being.
Prophet (pbuh) said, "Wickedness does not appear among a people, to the point that they perform wicked deeds openly, except that plagues and diseases become rampant among them - plagues and diseases that did not exist during the lifetimes of their ancestors..." [Ibn Maajah (4019), Saheeh al-Albanee (2/370)]
Also, please see Qur'an 17:16
6. Sources of legislation & a declaration that the leader is not above the law
He said, "Obey me so long as I obey Allah and His Messenger. And if I disobey Allah and His Messenger, then I have no right to your obedience". This made it clear he is going to follow only the Qur'an and Sunnah, and that obeying the leader is contingent upon the leader following Qur'an and Sunnah
Prophet said, "There is no obedience when it comes to sinning; obedience is restricted to al-Ma'roof (good, noble and acceptable in Islam)..." [Bukharee (7140)]
Also, Please see Qur'an 4:105

Primary Source for this email: The Biography of Abu Bakr by Dr. Ali Muhammad As-Sallabee