Thursday, 7 April 2011

இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது?

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ்நாட்டின் தேர்தல் தலை விதியை நிர்ணயிப்பதே இலவசங்கள்தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அரிசி இலவசம், மாவு அரைக்கும் இயந்திரம், மிக்சி என்று தொடங்கி, மடிக்கணினி வரை தி.மு.க. தேர்தல் அறிக்கை முழங்க, உன்னை விட நான் விஞ்சுகிறேன் பார் என்ற ரீதியில் ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் எதிர்க்கட்சியின் தேர்தல் அறிக்கையில், ஆடு, மாடு எல்லாம் கூட இலவசம் என்று அறிவித்துள்ளது.
FILE

ஒரு பக்கம் இதையெல்லாம் பார்த்து விவரம் தெரிந்த வாக்காளர்கள் சிரிக்க, மற்றொரு பக்கமோ என்னைப் பார்த்து நீ காப்பியடிக்கிறாய், உன்னால் என்னைப்போல் தர முடியாது என்று இன்னாள் முதல்வர் கூட்டத்திற்குக் கூட்டம் முழங்குகிறார். பெரிதாக அறிவித்தாலும், அதை மையப்படுத்தாமல், தி.மு.க.விற்கு எங்கு வலிக்குமோ அங்கே பார்த்து குத்துகிறார் முன்னாள் முதல்வர். 2ஜி ஊழல், குடும்ப ஆட்சி, அரசியல், சினிமாத்துறை ஆக்கிரமிப்பு ஆகியனதான் இத்தேர்தல் முடிவை நிர்ணயிக்கப் போகின்றன என்கிறார் ஜெயலலிதா.

ஆனால், தி.மு.க. கூட்டணியின் இரண்டாவது பெரிய பிரச்சார பீரங்கியான துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், செய்ததைச் சொல்லி கலைஞர் வாக்கு கேட்கிறார், செய்ய முடியாததைச் சொல்லி ஜெயலலிதா வாக்கு கேட்கிறார் என்று பேசி வருகிறார்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டது மட்டுமல்ல, சொல்லாமல் இன்னும் எத்தனையோ செய்ய கலைஞர் திட்டம் வைத்துள்ளார் என்று போகிற இடமெல்லாம் முழங்குகின்றனர் தி.மு.க. முன்னணித் தலைவர்கள்.

இலவசங்களை வழங்குவது உள்ளபடியே ஒரு ஆட்சியின் சாதனைதானா? என்கிற வினாவிற்கு விடை காண முற்பட்டபோது, இதற்கான நிதி எங்கிருந்து வருகிறது என்பதை விடைகாண புறப்பட்டபோது, இலவசங்களுக்கான செலவீனங்களுக்கு நிதி ஆதாரம் எது என்பதை அறிந்தபோது, ‘கொடுப்பவர்கள் மறைந்திருக்க, தருபவர் பெருமை கொள்கிறாரேஎன்றே சொல்லத் தோன்றுகிறது.

எடுத்துக்காட்டாக இந்த ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் தேதி தமிழக நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் சமர்ப்பித்த 2011-12ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில், தமிழக அரசு நடைமுறைப்படுத்திவரும் இலவச மற்றும் நல்வாழ்வுத் திட்டங்களையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் பார்ப்போம்.

1.
ரூ.1க்கு வழங்கப்படும் அரிசித் திட்டத்திற்கு - ரூ.3,750 கோடி.

2.
விவசாயத்திற்கு இலவச மின்சாரம் - ரூ.295 கோடி

3.
கலைஞர் மருத்துவ காப்பீடு திட்டம் - ரூ.750 கோடி

4.
இலவச மருத்துவ ஊர்த்திச் சேவை - ரூ.75 கோடி

5.
வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்க - ரூ.500 கோடி

6.
கலைஞர் வீட்டு வசதித் திட்டம் - ரூ.262.50 கோடி

7.
நிரந்தர வீடு கட்டித்தரும் திட்டம் - ரூ.1,800 கோடி    8. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் - ரூ.508 கோடி

9.
ஊரக குடி நீர் திட்டங்களுக்கு - ரூ.1,183 கோடி

10.
ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (மாநில அரசின் பங்கு) - ரூ.250 கோடி பெரியார் சமத்துவ புரம் திட்டம் - ரூ.75 கோடி

11.
வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் - ரூ.184 கோடி

12.
திருமண நிதியுதவித் திட்டம் - ரூ.300 கோடி

13.
கருவுற்றத் தாய்மார்கள் உதவித் தொகை வழங்கும் திட்டம் - ரூ.360 கோடி

14.
சமையல் எரிவாயு அடுப்பு வழங்க - ரூ.140 கோடி

15.
சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்க - ரூ.124 கோடி

16.
குழந்தை வளர்ச்சித் திட்டம் - ரூ.891 கோடி

17.
எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் - ரூ.924 கோடி

18.
முதியோர், ஆதரவற்றோர் உதவித் தொகைக்கு - ரூ.1,002 கோடி

19.
பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலன் - ரூ.459 கோடி

20.
தாழ்த்தப்பட்டோர் கல்வி உதவி நிதித் திட்டம்-ரூ.198 கோடி

21.
ஆதி திராவிடர் நல வாழ்வுத் திட்டங்களுக்கு - ரூ.894 கோடி

22.
நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க - ரூ.78 கோடி

23.
அமைப்பு சாரா தொழிலாளர் நலன் - ரூ.50 கோடி

24.
வேலையற்றோர் உதவி நிதித் திட்டம் - ரூ.60 கோடி

25.
ஈழத் தமிழர் மறுவாழ்விற்கு - ரூ.100 கோடி.

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் மக்கள் நலத் திட்டங்கள் என்று கூறப்பட்ட திட்டங்களே மேற்கூறப்பட்டுள்ளவையாகும். இவற்றிற்கான நிதி ஒதுக்கீடு அனைத்தையுன் கூட்டிப் பார்த்தால் அது ரூ.15,110.50 கோடி வருகிறது. இது மேற்கண்ட திட்டங்களுக்கு வரும் நிதியாண்டில், அதாவது 2011-12இல் செலவிட ஒதுக்கப்பட்ட நிதிகளாகும்.

இவ்வளவு பெரிய நிதிச் செலவை எங்கிருந்து பெற்று தமிழக அரசு ஈடுகட்டுகிறது? தமிழக அரசின் ஒட்டுமொத்த வரி வருவாய் இந்த நிதியாண்டில், அதாவது 2010-11 நிதியாண்டில் ரூ.63,091.74 கோடியாகும். இதில் டாஸ்மாக் மது விற்பனை மூலம் கிடைத்த வருவாய் உத்தேசமாக - ஆண்டு முடிவிற்கு இன்னமும் 5 நாட்கள் உள்ளதால் சரியான புள்ளி விவரம் வெளியாகவில்லை - ரூ.14,600 கோடி!   இலவசம, மக்கள் நல் வாழ்வு, மருத்துவம், கலர் டி.வி., சமையல் எரிவாயு இணைப்பு, இலவச அரிசி ஆகியன மட்டுமின்றி, தி.மு.க. அரசின் அனைத்து சமூக நலத் திட்டங்களுக்குமான நிதியை அது டாஸ்மாக் மது விற்பனை மூலம் பெற்றுவிடுகிறது என்பதே உண்மை.

FILE 2010-11 ஆம் ஆண்டில், மது உற்பத்தியின் மூலம் தமிழக அரசிற்கு கிடைத்த வருவாய் (Excise Duty) ரூ.6,733.90 கோடி. மது விற்பனையில் கிடைத்த விற்பனை வரி (Sales Tax) ரூ.5,757.63 கோடி. ஆக மொத்தம் அரசிற்கு மதுவின் மூலம் கிடைத்த மொத்த வருவாய் ரூ.12,491.53 கோடி.

2002 -2003
நிதியாண்டில் இருந்து (அதாவது ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இருந்து) 2010-11ஆம் நிதியாண்டு வரை மது விற்பனை மூலம் தமிழக அரசு பெற்றுள்ள மொத்த வருவாய் ரூ.56,639 கோடி! இதோடு நடப்பு நிதியாண்டில் வரும் வருவாயையும் சேர்த்தால் ரூ.71,000 கோடி ஆகும்!. மது விற்பனை மூலம் இந்த 9 ஆண்டுகளில் கிடைத்துவரும் இந்த வருவாயைக் கொண்டுதான் சத்துணவு முதல் கலர் டி.வி. வரை வழங்கப்படு்கிறது.

ஆ‌ண்டு வா‌ரியாக மது ‌வி‌ற்பனை வருவா‌ய் ‌விவர‌ம் :

2002 - 2003 ‌
நி‌தியா‌ண்டி‌ல் ரூ.2,828.09 கோடி -
2003 - 2004 ‌
நி‌தியா‌ண்டி‌ல் ரூ.3,639.00 கோடி - 28.67 ‌விழு‌க்காடு உய‌ர்வு
2004 - 2005 ‌
நி‌தியா‌ண்டி‌ல் ரூ.4,872.00 கோடி - 33.88 ‌விழு‌க்காடு உய‌ர்வு
2005 - 2006 ‌
நி‌தியா‌ண்டி‌ல் ரூ.6,086.95 கோடி - 24.94 ‌விழு‌க்காடு உய‌ர்வு
2006 - 2007 ‌
நி‌தியா‌ண்டி‌ல் ரூ.7,300.00 கோடி - 19.95 ‌விழு‌க்காடு உய‌ர்வு
2007 - 2008 ‌
நி‌தியா‌ண்டி‌ல் ரூ.8,822.00 கோடி - 20.85 ‌விழு‌க்காடு உய‌ர்வு
2008 - 2009 ‌
நி‌தியா‌ண்டி‌ல் ரூ.10,601.50 கோடி - 20.17 ‌விழு‌க்காடு உய‌ர்வு
2009 - 2010 ‌
நி‌தியா‌ண்டி‌ல் ரூ.12,491.00 கோடி - 17.82 ‌விழு‌க்காடு உய‌ர்வு
2010 - 2011 ‌
நி‌தியாண‌்டி‌ல் ரூ.14,033.00 கோடி - உ‌த்தேசமாக

இப்போது அறிவிக்கப்பட்ட கூடுதல் இலவசங்களால் இந்த செலவீனம் கொஞ்சம் அதிகரிக்கும். அதற்கேற்றாற்போல் மது விற்பனையும் (ஆண்டுக்கு 20 விழுக்காடு) அதிகரிக்கும் அல்லவா? அந்த வரி வருவாய் இந்தச் செலவு உயர்வை சரிக‌ட்டிவிடும்.

2006
ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலின்போது தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ரூ.2க்கு ஒரு கிலோ அரிசி ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான நிதியை எங்கிருந்து பெறுவீர்கள் என்று எதிர்க்கட்சித் தலைவி கேள்வி எழுப்பிய போது, அயல்நாட்டு மதுபான உற்பத்தியின் மீது விதிக்கப்படும் தீர்வையின் மீது (Excise Duty) ரூ.1,800 கோடி வருவாயைக் கொண்டு ரூ.2 அரிசி திட்டத்திற்கு ஆகும் செலவை ஈடுகட்டுவேன் என்று கூறினார்.

இது, கடந்த தேர்தலின் போது புரசைவாக்கம் தொகுதியில் கருணாநிதி பேசியது. அப்போதும் மதுபான விற்பனைதான், இப்போதும் மதுபான விற்பனைதான். ஆக இலவசங்கள் அனைத்திற்குமான ஆதாரம், மதுபான உற்பத்தியில் இருந்து கிடைக்கும் தீர்வை வருவாயும், அதனால் விற்பனை கிடைக்கும் விற்பனை வரியும்தான்.

ஆக இலவசம் என்பது ஆட்சிகளின் சாதனையல்ல, அது மது அருந்துவோர் அளிக்கும் மறைமுக கொடையால்வழங்கப்படுகிறது. எனவே, இதற்கான பெருமை குடிமக்களையே சாரும். ஆட்சியாளர்களையல்ல!   
--
Thanks and Regards,
Shanmugam Ramaswamy

Sunday, 3 April 2011

NEPAL ACTRESS ACCEPTED ISLAM - TAMIL & ENGLISH - ALLAH GREAT நேபாளத்தின் புகழ்பெற்ற நடிகை பூஜாலாமா

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

28 வயதுடைய நேபாளத்தின் புகழ்பெற்ற நடிகை பூஜாலாமா, இஸ்லாத்தை படித்த பிறகு அதில் ஈர்க்கப்பட்டு, இதுநாள் வரை தான் செய்ததெல்லாம் தவறு என்று உணர்ந்து நடிப்பதையும்,மாடல் செய்வதையும்,மியூசிக் ஆல்பம் தயாரித்து வெளியிடுவதையும் விட்டுவிடார். இஸ்லாத்தை ஏற்ற அவர் இப்போது உடல் முழுவதையும் மறைக்கும் புர்கா அணிந்து வெளியே வருகிறார்.
புத்த மதத்தைச் சேர்ந்த, மூன்று திருமணம் செய்து விவாகரத்து பெற்ற அப்பெண்மனி தனது கடந்த கால வாழ்வு பற்றி..... நான் காரிருளில் வாழ்ந்து வந்தேன். தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றேன். இஸ்லாம் என் வாழ்வில் ஒளி ஏற்றியுள்ளது. நான் இப்பொழுது ஆபாசம், மது, புகை, அசுத்தமான உணவுகள் உண்பது அனைத்தையும் விட்டுவிட்டேன். இஸ்லாத்தை பற்றி உலகம் கூறுவது அனைத்தும் அவதூறு என்பதை உணர்ந்து கொண்டேன். என்று சொல்கிறார்.







10 foods that help prevent acne

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,


Olive oil lotion absorbs into skin without clogging pores, allowing skin to breathe which in turn help prevent acne.

Lemon juice helps in eliminating acid waste and cleansing the liver with citric acid and building up enzymes to eliminate blood toxins. It also flushes out pores and keeps your skin feeling fresh and bright.

Watermelon is very useful for removing blemishes on the skin. It is rich in vitamins A, B and C and keeps the skin fresh, radiant and hydrated. It also prevents eruption of acne and remove scars and marks of acne.

Eating a balanced diet is the best way to have a healthy skin. Low-fat dairy product consists of vitamin A, which is one of the most important components of healthy skin.

Raspberries are a healthy as they are loaded with vitamins, antioxidants and fiber. These are rich in phytochemicals that are protective of skin.

Yogurt has antifungal and antibacterial qualities, so it is useful for cleansing the skin and unblocking clogged pores.

Eating walnuts regularly help to improve the smoothness and softness of the skin. Walnuts oils contain linoleic acid, which helps to maintain the skin's structure, keeping it watertight and well hydrated.

Dietary selenium comes from nuts, cereals etc. Some studies show that even skin damaged by the sun may suffer fewer consequences if selenium levels are high.

Apples contain lots of pectin and it is the enemy of the acne. So, remember to eat the skin too as pectin is mostly concentrated there.

Water carries nutrition and oxygen to your internal body, keeping organs nourished, vital, and fit to fight acne.
 Feedback and your thought  for the day are most welcome to  asibrahim32@gmailcom


எஸ்பிஐ சேவையில் அதிருப்தியா... ஒரு எஸ்எம்எஸ் போதும்!!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

மும்பை: நாட்டின் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சேவையில் உங்களுக்குத் திருப்தி இல்லையா.. ஒரு எஸ்எம்எஸ் போதும். அடுத்த 48 மணி நேரத்தில் உங்கள் அதிருப்திக்கான காரணத்தைத் தெரிந்து கொண்டு சரி செய்வார்கள் அதிகாரிகள் என அறிவித்துள்ளது அந்த வங்கி.

13
கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் மிகப் பெரிய அரசு வங்கியாகத் திகழும எஸ்பிஐ அறிமுகப்படுத்தியுள்ள புதிய சேவை இது. இனி புகார் செய்ய பேப்பர், பேனா என்றெல்லாம் தேடிக் கொண்டிருக்க வேண்டாம்.
குறிப்பிட கிளையில் உங்களுக்கு திருப்தியான சேவை கிடைக்கவில்லை என்றால், உடனே உங்கள் மொபைலௌ எடுத்து Unhappy என்று டைப் செய்து 8008202020 என்ற எண்ணுக்கு அனுப்பினால் போதும். அடுத்த 48 மணி நேரத்துக்குள் உங்கள் பிரச்சினை சரி செய்யப்பட்டுவிடுமாம்.
கடந்த அக்டோபர் மாதம் இந்த சேவை சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் திருப்தி ஏற்பட்டதால், இப்போது நாடு முழுவதும் அறிமுகமாகிறது.

http://thatstamil.oneindia.in/news/2011/03/22/message-unhappy-resolve-complaint-with-sbi-aid0091.html
__._,_.___

பிரார்தனைகளுடன்...
Mohamed

ரயிலில் தவறவிட்ட 30 ஆயிரம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தார்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

கீழக்கரை இளைஞருக்கு பாராட்டு!!

கீழக்கரை பிப்.14. கீழக்கரை பச்சிலை தெருவை சேர்ந்தவர் சித்தீக் ரஹ்மான்(வயது 34) இவர் ரயிலில் சென்னையிலிருந்து குடும்பத்துடன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார் . ரயில் பரமக்குடியை கடந்த சிறிது நேரத்தில், ரயிலின் நடைபாதையில் பர்ஸ் ஒன்று அநாதையாக கிடந்தது. பர்சை கண்டெடுத்த சித்தீக் ரஹ்மான் அதில் ரூ. 30 ஆயிரம்பணமும் , ஓட்டுநர் உரிமமும் இருப்பதை அறிந்தார். உடனடியாக அதில் உள்ள முகவரி மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.பின்னர் அது இளையாங்குடியை சேர்ந்த கருப்பசாமி(வயது 33) என்பவரின் பர்ஸ் என்பதும்,அவர் சென்னையில் இருந்து பரமக்குடியில் இறங்கும் போது பர்சை தவற விட்டதாகவும்தெரிய வந்தது .

அன்றே கீழக்கரைக்கு தனது உறவினருடன் வந்த கருப்பசாமி சித்தீக் ரஹ்மான் வீட்டிற்க்கு சென்று கண்ணீர் மல்க பணத்தை பெற்றுக் கொண்டார்.
பரமக்குடி ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரை கருப்பசாமி வாபஸ் பெற்றார்.
சித்திக்கிற்க்கு நன்றி தெரிவித்த கருப்பசாமி கூறியதாவது, நேர்மை தவறாதவர்கள் வாழந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் ஊர் கீழக்கரை என்பதில் சந்தேகமில்லை என்பதை சித்தீக் ரஹ்மான் நிரூபித்து விட்டார்.அவரின் நேர்மை என்னை கண் கலங்க செய்து விட்ட்து என்றார்.


பொதுமக்கள் சித்திக் ரஹ்மானின் நேர்மையான் செயலை பாரட்டினர்

Saturday, 2 April 2011

ஜிமெயில் மோஸன் என்ற புதிய வகை தகவல் தொடர்பு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
நேற்று முதல் ஜிமெயில் மோஸன் என்ற புதிய வகை தகவல் தொடர்பு அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.
வீடியோ கேமரா பொருத்தப்பட்ட கம்பியுட்டரிலிருந்து சைகையின் மூலம் தகவல் அனுப்பி அதை ஜமெயிலில் உங்கள் பணிகளை தொடரலாம்.
உதராணத்திற்கு ஜிமெயிலில் புதிய இமெயில் அனுப்ப வேண்டும் என்றால் ஒரு கையை எல் வடிவில் காட்டியும் மற்ற கையை தொல்பட்டையிலிருந்து நீட்டி காட்டினால் போதும் கீபோர்டை உபயோகம் செய்யாமல் புதிய மெயில் செய்ய பாக்ஸ் திறந்து கொடுக்கும். இதை போல் நிறைய உள்ளது. வாய்பேச முடியாதவர்கள் பயன்படுத்தும் பொதுவான சைகை பயன்பாடுகளும் இதில் உபயோகம் செய்யலாம். அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் சைன் லாங்க்வேஜ் சைகைகளும் இந்த ஜிமெயில் மோஸன் புரிந்து கொண்டு தேவைகளை செய்து கொடுக்கும்.
முயற்சி செய்து பாருங்கள். மேலும் விபரங்களுக்கு..
http://www.google.com/mail/help/motion.html#utm_source=en-et-na-us&utm_medium=new-features-link&utm_campaign=en

அன்புடன் தோப்புத்துறை அ.முஹம்மது நூர்தீன்

weekend Islamic learning program for children - Dubai

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,