அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
CMN Saleem
உலகில் வேறு எந்த நாட்டிற்கும் இல்லாத பல சிறப்புகள் நம் நாட்டிற்கு உண்டு. இன, மொழி, பிராந்திய, மத ரீதியான மக்கள் கூட்டம் கடந்த 63 வருடங்களாக ஒரு நாடாக ஒன்றிணைந்து வாழ்ந்து வரும் காட்சியை வேறு எங்கும் காண இயலாது. மக்களாட்சி நடைபெற்று வரும் நம் நாட்டில் அரசியல் அதிகாரம், நாட்டின் வளம் போன்ற அனைத்தும் நாட்டில் வாழும் அனைத்துத் தரப்பட்ட மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
இன, மத, மொழி ரீதியாக எவ்வித பாரபட்சமும் காட்டக்கூடாது என்று ஆட்சியாளர்களுக்கும் அரசு நிர்வாகத்திற்கும் அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக வழிகாட்டுகிறது. இதன் அடிப்படையில் அரசுப்பணிகளில் எல்லாத் தரப்பட்ட மக்களுக்கும் அவரவர் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது தான் ஜனநாயக மரபு. அதுதான் சமூக நீதி.
விடுதலை இந்தியாவில் இந்திய சிறுபான்மை மக்களில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம் சமூகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது என்பது நாம் போற்றி பெருமைப்படும் ஜனநாயக மக்களாட்சி தத்துவத்திற்கு ஊறு விளைவிப்பதாகும்.
அதுவும் குறிப்பாக பாதுகாப்புத் துறைகளில் எல்லா சமூகமும் இடம் பெற்றால்தான் அந்தந்தச் சமூகம் அடக்குமுறைகளில் இருந்தும் ஆதிக்க வெறிகளில் இருந்தும் பாதுகாக்கப்படும். சாதி ரீதியாக, மத ரீதியாக பல்வேறு துவேச சிந்தனைகள் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் பரப்பப்பட்டு வரும் இன்றைய சூழ்நிலையில் நாட்டின் பாதுகாப்புத் துறைகளில் முஸ்லிம் சமூகம் உட்பட சிறுபான்மை சமூகங்கள் உரிய பங்கு வகிக்கவில்லையென்றால் அந்த பாதுகாப்பு நிறுவனங்களின் மூலமாக பல விபரீதங்களை சந்திக்கவேண்டிய சூழ்நிலைகள் வரும். அத்தகைய காட்சிகள் தற்போது பரவலாக நாட்டில் நடைபெற்று வருவதை பார்த்து வருகின்றோம். பாதுகாப்புத் துறைகளில் பங்களிப்புச் செய்வதில் முஸ்லிம் சமூகம் மிக மிக மெத்தனத்தைக் கடைபிடித்து வருவதுதான் மிகவும் வருந்தத்தக்கதாக இருக்கிறது. ஆட்சிப்பணியில், காவல்துறையில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு அரசு வழங்கியுள்ள 3.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை முழுமையாக பயன்படுத்தி நமது பங்களிப்பை அதிகப்படுத்திட வேண்டும். இதனை ஊக்கப்படுத்திட வேண்டி, முஸ்லிம் சமூகம் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக தமிழக காவல்துறையில் துறை வாரியாக மொத்தமுள்ள இடங்களில் முஸ்லிம்களின் பங்களிப்பு என்ன, எத்தனை பேர் இடம் பெற்றுள்ளனர் என்கிற முழுமையான விபரம் இங்கே தரப்பட்டுள்ளது.
RegardsCMN Saleem