உலகத்தின் பெண்சுதந்திரம் உலகமும், இந்தியாவும் கண்ட பெண் சுதந்திரம் என்ன சுதந்திரமாம்? கண்ணும் , மனதும் கூசும் பள்ளியிலே ஆரம்பிக்கிறது பெண் குழந்தைகளின் சுதந்திரம், அருவருப்பான பாடலுக்கு ஒரு ஆட்டம் கேட்டால் பள்ளி இறுதி கொண்டாட்டம்! மாநிலத்தில் அழகி போட்டி! உலகளவில் ஒரு அழகி போட்டி! பெண்ணின் அங்கங்களை அளந்து ஒரு பூனை நடை! ஒரு எலி நடை! பெண்களின் உடலை மதிப்பிட்டு மதிப்பெண் அளித்து தேர்ந்தெடுக்க வக்கிரம் கொண்ட ஆண்கள் புடை சூழ - தாராளமாக வந்த பெண்ணிற்கு உலக அழகி (அருவருப்பு)பட்டம்! உலக சந்தையின் பணம் (பிணம்) திண்ணும் கழுகுகளுக்கு கிடைத்ததோ ஒரு அழகி(அருவருப்பு)போட்டி! அரைகுறை உடையுடன் நடக்க வைத்து பண முதலைகளின் பொருள்களை விற்க பெண்களை சந்தைப்படுத்தி உலக அழகி (சுதந்திர) அடிமை பட்டம்! கார் விளம்பரமா? ஆண்கள் பயன்படுத்தும் பொருள்களின் விளம்பரமா? இழுத்து வா பெண்ணை அரைகுறை ஆடையுடன் நிற்க வை! ஆணுடன்! கல்லூரியா? ஆணுடன் பெண்ணையும் கலந்து படிக்க வை! பாய் - பிரண்ட் கேர்ள் - பிரண்ட் இரண்டும் இல்லையென்றால் நீ ஒரு பைத்தியம் இந்த உலகில்! சிவப்பு விளக்கு என்ற ஒரு தெரு! அரசே அங்கீகாரம் கொடுத்து நடத்தும் அசிங்கங்கள்! அசிங்கத்திற்கே மரியாதை கொடுக்கும் உலகத்தின் அரசாங்கங்கள்! வக்கிரம் படைத்தவர்களுக்கு பெண் என்றால் எல்லாவற்றையும் துறந்து அலைய வேண்டும்! வேஷ்டியோடு அலையும் ஊரில் பேண்ட் போட்டுக்கொண்டு நடந்தால் ஆச்சர்யம்! தலைவிரி கோலத்துடன் செய்தி வாசிக்கும் பெண்! ஐந்துவயது பெண் குழந்தையின் ஆடையுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடத்தும் பெண்! இறுக்கமான ஆடை அணிந்து ஹாய், பாய் - காலேஜ் பெண்! பெண்ணையே திருமணம் செய்து கொள்ளும் பெண்! யாரோடும் வாழ்வேன் - யாரும் என் சுதந்திரத்தில் தலையிடாதே நவீன நரகல் பெண்கள்! இப்படிப்பட்ட கண்ணியமற்ற சுதந்திரம்(?) பெண்களுக்கு வேண்டுமாம்! உலகத்தில் உள்ள வக்கிரம் படைத்தவர்கள் கதறுகிறார்கள்!!! நாங்கள் கொடுத்த சுதந்திரம் ஏன் இஸ்லாத்தில் இல்லை? எரிச்சலில் - அவதூறு இஸ்லாத்தில் பெண் சுதந்திரம் இல்லையாம்! இஸ்லாம் வழங்கிய சுதந்திரத்தை பார்த்து எங்கள் பெண்கள் போல் நீங்களும் வந்தால்தான் நாங்கள் பார்க்கமுடியும்! இப்படி புர்க்காவோடு வந்தால் எப்படி? - பற்றி எறிகிறது அவர்களின் வயிறு! அந்த கலக்கத்தில் கீழ்ப்பாக்கத்தில் இருப்பதற்கு தகுதி படைத்த உலக அறிவிலிகள் கதறுகிறார்கள்! இஸ்லாத்தில் பெண் சுதந்திரம் இல்லை என்று! 1432 வருடத்திற்கு முன்பே இஸ்லாம் வழங்கிய சுதந்திரம்! வாழ்வதற்கே சுதந்திரம் பிற மதங்களில் இல்லை! ஆனால் இஸ்லாத்தில் வாழ, பேச, படிக்க வியாபாரம் செய்ய சொத்துக்களை தன் பெயரில் வைத்துக்கொள்ள சுதந்திரம்! பிடித்த மணமகனை தேர்வு செய்ய சுதந்திரம்! கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற தத்துவத்தை உடைத்தெறிந்து பிடிக்கவில்லை என்றால் நீ புல்லுதான்! என்று விவாகரத்து செய்ய சுதந்திரம்! திருமணத்தில் மஹர் என்ற உரிமை! தந்தை சொத்தில் உரிமை! கணவன் சொத்தில் உரிமை! மகன் சொத்தில் உரிமை! இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள சுதந்திரம் ஏராளம்! உலகில் பெண்ணுக்கு மனிதன் வழங்கிய சுதந்திரம் கண்ணியமற்ற அலங்கோலம்! உலகை படைத்த அல்லாஹ் வழங்கிய பெண் சுதந்திரம் கண்ணியமிக்க அந்தஸ்து! நபியே! உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் : 33:59) தமது பார்வைகளத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் : 24:31) ... தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்! (அல்குர்ஆன் : 24:31) |
முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்! 3:200
Monday, 7 March 2011
சுதந்திரமா, பெண்ணுக்கா?
ஃபத்வா’ ஓர் விளக்கம்
இஸ்லாம் என்பது ஒரு வாழ்க்கைத் திட்டமாகும். எனவே ஒரு முஸ்லிமின் முழு வாழ்வும் மார்க்க வழிகாட்டலுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அவனது இபாதத்(வணக்கம்), இல்லற வாழ்வு, பொருளீட்டல் அனைத்தையும் அவன் மார்க்க அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செயற்படும் போது அலை அலையாகக் கேள்விக் கணைகள் எழுவது இயல்பே! எனவே மார்க்க அறிஞர்களிடம் அவற்றுக்கான தெளிவைப் பெறுதல் அவசியமாகின்றது. இந்த வகையில் ‘ஃபத்வா’ என்பது மிக முக்கியமான ஒரு அம்சமாகத் திகழ்கின்றது.
‘(நபியே!) உம்மிடம் அவர்கள் (‘கலாலா” பற்றி) மார்க்கத் தீர்ப்புக் கோருகின்றனர்..” (4:176)
‘(நபியே!) பெண்கள் விஷயத்தில் அவர்கள் உம்மிடம் மார்க்கத் தீர்ப்புக் கோருகின்றனர்..” (4:127)
‘(நபியே!) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கின்றனர்..” (2:189)
‘(நபியே!) புனித மாதத்தில் போர் புரிவது பற்றி உம்மிடம் கேட்கின்றனர்..” (2:217)
(மேலும் பார்க்க: 2:215, 217, 219, 5:4, 8:179:42)
மேற்படி வசனங்களில் மக்கள் கேட்கும் கேள்விகளைக் குறிப்பிடும் அல்லாஹ், அவற்றுக்கான பதில்களையும் கூறியிருப்பது மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு மார்க்கத் தீர்ப்பு வழங்குவது முக்கியமான ஒரு பணி என்பதை உணர்த்துகின்றது. அடுத்து, மக்களுக்கு மார்க்கத் தீர்ப்பு வழங்குவதை அல்லாஹ் நபி(ஸல்) அவர்களின் பணிகளில் ஒன்றாகத் திருமறைக் குர்ஆனில் குறிப்பிடுகின்றான். இதன் மூலம் ஃபத்வா என்பது உயர்தரமான பணி என்பதை அறியலாம்.
‘ஃபத்வா’ என்பது அல்லாஹ்வுடைய மற்றும், அவனது தூதருடைய கூற்றுகளில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மார்க்கத் தீர்ப்புக் கூறுகின்ற முக்கிய பணி என்பதால் இந்தப் பணியில் தகுதியற்றவர்கள் ஈடுபடக் கூடாது. மார்க்க அறிவும், ஷரீஆவின் இலட்சியங்களையும், மார்க்கச் சட்ட விதிகளையும் அறியாதவர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டால் அது சமூகத்தில் மிகப்பெரிய பிரச்சினைகளை உண்டு பண்ணி விடும்.
எனவேதான் மார்க்கத் தீர்ப்புகளை வேண்டி நிற்பவர்கள் அந்தத் தீர்ப்புகளை மார்க்க அறிஞர்களிடம் தான் கேட்க வேண்டும். முற்காலத்தில் 99 கொலைகள் செய்த ஒருவன் தனக்கு மன்னிப்பு உண்டா என ஒரு வணக்கவாளியிடத்தில் வேண்டுகின்றான். அவர் இல்லையென்கின்றார். அவன் அவரையும் கொலை செய்து விடுகின்றான். பின்னர் ஒரு அறிஞரிடம் கேட்ட போது அவர் மன்னிப்பு உண்டெனக் கூறியதுடன் அவனுக்குத் திருந்தி வாழ்வதற்கான வழியையும் காட்டினாரென ஹதீஸ் கூறுகின்றது.
தகுதியள்ளவர்கள் இந்த பணியில் ஈடுபடும்போது தேவையற்ற பிரச்சினைகள் அதிகரிக்கும் என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது. கேள்வி கேட்பவர்களைப் பார்த்து அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது;
‘..நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (வேத) அறிவுள்ளோரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.” (16:43)
அதாவது, நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் மார்க்க அறிஞர்களிடம் கேட்டு அறிந்துகொள்ளுங்கள் எனக் கூறுவதன் மூலம் மார்க்க அறிவோ, அடிப்படைகளோ தெரியாதவர்களிடம் ஃபத்வா கேட்கக் கூடாது என்பது தெளிவுபடுத்தப்படுகின்றது. இதே வேளை, ஃபத்வா வழங்குபவர்களைப் பார்த்து;
‘நீங்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுவதற்காக இது தடை செய்யப்பட்டது, இது ஆகுமானது எனப் பொய்யாக உங்கள் நாவுகள் வர்ணிப்பதையெல்லாம் கூறாதீர்கள். நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றி பெறமாட்டார்கள்” (16:116)
என்றும், அல்குர்ஆன் கூறுவதன் மூலம் மார்க்கத்துக்கு முரணாக ஃபத்வா வழங்குபவர்கள் அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுகின்றனர் என்றும் அல்குர்ஆன் கண்டிக்கின்றது.
ஃபத்வாவுக்கான அடிப்படைகள்:
ஒரு ஃபத்வாவில் நான்கு அம்சங்கள் இருக்கும்:
- ஃபத்வாக் கேட்பவர்.
- ஃபத்வா வழங்குபவர்.
- மார்க்கக் கேள்வி.
- மார்க்கத் தீர்ப்பு.
இவர்தான் மார்க்கத்தின் சட்டத்தை எடுத்துக் கூறுபவர். இவர் மார்க்க அறிவு உள்ளவராக இருப்பது முக்கிய நிபந்தனையாகும்.
‘உமக்கு எது பற்றி அறிவில்லையோ, அதை நீர் பின்பற்ற வேண்டாம். நிச்சயமாக செவிப் புலன், பார்வை, இதயம் ஆகிய இவை ஒவ்வொன்றும் விசாரிக்கப்படக் கூடியதாக இருக்கின்றது.” (17:36)
அறிவற்ற விஷயத்தில் தலையிடக் கூடாது என அல்குர்ஆன் கண்டிக்கின்றது. மார்க்க அறிவு அற்றோர் மார்க்கத் தீர்ப்பு வழங்கும் பணியில் ஈடுபடக் கூடாது.
‘மானக்கேடானவற்றில் பகிரங்கமானவற்றையும், மறைவானவற்றையும், பாவத்தையும், உரிமையின்றி வரம்பு மீறுவதையும், எவ்வித ஆதாரத்தையும் அல்லாஹ் இறக்காமல் இருக்கும் போது அவனுக்கு இணை வைப்பதையும், அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாதவற்றைக் கூறுவதையுமே எனது இரட்சகன் தடை செய்துள்ளான் என (நபியே!) நீர் கூறுவீராக!” (7:33)
இந்த வசனம் அல்லாஹ்வின் விஷயத்தில் அறியாதவற்றைப் பேசலாகாது எனத் தடுக்கின்றது. இந்த வகையில் மார்க்க அறிவு உள்ளவர்கள்தான் மார்க்கத் தீர்ப்பு அளிக்க வேண்டும். அறிவு எனும் போது குர்ஆன், ஹதீஸுடைய அறிவுடன் உஸூலுல் குர்ஆன், உஸூலுல் ஹதீஸ், இஸ்லாமிய ஷரீஆவின் நோக்கங்கள் என்பவற்றையும் அறிந்திருக்க வேண்டும். இதே வேளை உலக நடைமுறை, மக்கள் நிலவரம் என்பவற்றையும் அறிந்திருக்க வேண்டும்.
இது குறித்து இமாம் இப்னுல் கைய்யூம்(ரஹ்) அவர்கள் பேசும் போது பின்வருமாறு கூறினார்கள்; ‘ஃபத்வா வழங்குபவர் மக்களின் நிலைமைகளையும், அவர்களது சதிகள் பற்றியும் அறிந்து இருப்பது அவசியமாகும்! அப்படியில்லை எனில் அவரும் தடம் புரண்டு விடுவார்! மற்றவர்களையும் தடம் புரழச் செய்து விடுவார்!”
அடுத்து, ஃபத்வா வழங்குபவர் தனது அறிவுக்கு ஏற்ப அமல் செய்பவராக இருக்கவும் வேண்டும்.
‘நீங்கள் வேதத்தைப் படித்துக் கொண்டே, உங்களை மறந்து விட்டுப் (பிற) மனிதர்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் விளங்கிக்கொள்ள மாட்டீர்களா?” (2:44)
‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் செய்யாத வற்றை ஏன் கூறுகிறீர்கள்? நீங்கள் செய்யாதவற்றைக் கூறுவது அல்லாஹ்விடம் கோபத்தால் பெரிதாகிவிட்டது.” (61:2-3)
2. தீர்ப்புக் கேட்பவர்:
தீர்ப்புக் கேட்பவர், தான் கேட்கும் கேள்விக்குக் குர்ஆன் – ஸுன்னாவின் தீர்வை எதிர்பார்த்தே கேட்க வேண்டும். சிலர் தமக்குள் ஒரு முடிவை வைத்துக்கொண்டு அந்த முடிவுதான் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் கேட்பர். அல்லது அந்த முடிவு கிடைப்பதற்கு ஏற்றாற்போல் கேள்வியையும், அதற்குத் தேவையான சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் உருவாக்கிக்கொள்வர். இது தவறாகும். ஸுன்னாவிலிருந்து தீர்ப்புக் கூறப்பட்டால் அதைத் திருப்தியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
‘(நபியே!) உமது இரட்சகன் மீது சத்தியமாக அவர்கள் தமக்கிடையில் ஏற்பட்ட சர்ச்சையில் உம்மை நீதிபதியாக்கி, பின்னர் நீர் வழங்கும் தீர்ப்பை தம் மனங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாது ஏற்று, அதற்கு முற்றிலும் கட்டுப்படும் வரை நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்.” (4:65)
கேள்வி கேட்பதில் வெட்கப்படவும் கூடாது. அல்லது தனது அறிவையும், ஆற்றலையும் வெளிப்படுத்துவதற்காகக் கேட்கவும் கூடாது. சிலர் ஆலிம்களைப் பரீட்சிப்பதற்காகவும், மற்றும் சிலர் தனக்கும் தெரியும் என்று காட்டிக்கொள்வதற்காகவும் கேள்வி கேட்பர். இவற்றையும் தவிர்க்க வேண்டும்.
3. கேட்கப்படும் கேள்வி:
கேட்கப்படும் கேள்வி நடைமுறையில் உள்ளதாகவும், விளக்கம் தேவையானதாகவும் இருக்க வேண்டும். அப்படி நடந்தால் என்ன செய்வது? இப்படி நடந்தால் என்ன செய்வது? என்று கற்பனையில் உதிப்பதை எல்லாம் கேள்வியாக்கக் கூடாது. இப்படி சிந்தித்த சிலர், நாயும் முஸ்லிம் பெண்ணும் அல்லது பன்றியும் முஸ்லிம் பெண்ணும் உறவு கொண்டு மனிதப் பிள்ளை பிறந்தால் அந்தப் பிள்ளை சுத்தமா? அசுத்தமா? என்றெல்லாம் கற்பனை செய்து இஸ்லாத்தின் ஃபிக்ஹ் எனும் துறையையே அசிங்கப்படுத்தினர்.
மற்றும் சிலர் மனிதனுக்குப் பன்றி இதயம் பொருத்தலாமா? இல்லையா? என இல்லாத பிரச்சினைக்குத் தீர்வு கூறி தஃவா களத்தைக் களங்கப்படுத்தினர். எனவே ஃபத்வாக் கேட்கப்படும் கேள்வி நடைமுறை வாழ்வுக்குத் தேவையானதாக இருக்க வேண்டும்.
4. மார்க்கத் தீர்ப்பு:
இது குர்ஆன் – ஸுன்னாவில் இருந்து பெறப்பட்டதாக இருப்பது அவசியமாகும். அப்போதுதான் அது மார்க்கத் தீர்ப்பாக இருக்கும்
(1) ஃபத்வாவின் தீர்ப்பு குர்ஆன் – ஸுன்னாவின் ஆதாரத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். குர்ஆன் – ஸுன்னாவுக்கு முன்சென்ற நல்லோர்கள் அளித்த ஏகோபித்த விளக்கங்களினடிப்படையில் அந்தத் தீர்ப்பு அமைய வேண்டும். அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதமிருந்தால் அவற்றில் மிகச் சரியானதையும், வலுவானதையும் உள்ளடங்கியதாக ஃபத்வா அமைய வேண்டும்.
(2) ஃபத்வா காலத்தை உணர்ந்ததாகவும் இருக்க வேண்டும். இலகுபடுத்த வேண்டிய இடத்தில் கடுமையையோ, இறுக்கமாக இருக்க வேண்டிய இடத்தில் தளர்வையோ வழங்காததாகவும் அது அமைய வேண்டும்.
(3) ஃபத்வாவின் வாசகங்கள் மாற்றுக் கருத்துகள் வழங்கக் கூடிய விதத்திலோ, வார்த்தைகளை வைத்து விளையாடும் வண்ணமோ இருக்காமல் நேரிடையாகவும், தெளிவாகவும் அமைந்திருத்தல் வேண்டும்.
(4) ஃபத்வா கேட்பவர்களிடம் கேள்வியையும், பிரச்சினை என்ன என்பதையும் மிகத் தெளிவாகக் கேட்டறிந்து ஃபத்வா வழங்கப்படல் வேண்டும்.
(5) கேள்வி கேட்பவர் கேட்ட கேள்விக்கு மட்டுமன்றி அவருக்கு மேலதிக விளக்கமும் தேவை என்றிருந்தால் அதையும் தெளிவுபடுத்தும் விதத்தில் ஃபத்வா அமைந்திருத்தல் வேண்டும். ‘கடற்பயணம் செய்வோர் கடல் நீரில் உழூச் செய்யலாமா?” எனக் கேட்ட போது நபி(ஸல்) அவர்கள் அந்தக் கேள்விக்கு
மட்டும் பதில் சொல்லாமல் ‘கடல் நீர் சுத்தமானது! அதில் வாழும் உயிரினங்கள் இறந்தாலும் ஆகுமானவை!” என்று மேலதிக விளக்கத்தையும் அளித்தார்கள். இந்த அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்விக்கும், அதனுடன் தொடர்புபட்ட கேட்கப்படாத கேள்விகளுக்கும் கூட தீர்வாக அமையும் விதத்தில் மார்க்கத் தீர்ப்பு அமைதல் வேண்டும்.
(6) பயனற்ற கேள்விகளுக்கு ஃபத்வா வழங்குவதைத் தவிர்த்துவிட்டு பயனளிக்கும் கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்க வேண்டும்.
இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் ‘கேட்கப்படும் கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிப்பவன் பைத்தியக்காரனாகத்தான் இருப்பான்!” என்று கூறியுள்ளார்கள்.
இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்ட போது நீண்ட நேரம் மௌனமாக இருந்தார்கள். இது குறித்துக் கேட்ட போது இதற்கு பதிலளிப்பதை விட பதிலளிக்காமல் மௌனமாக இருப்பது சிறந்ததா? என்று தீர்மானித்துத்தான் பதிலளிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்கள். சில கேள்விகளுக்கு மௌனமே சிறந்த பதிலாகவும், சில கேள்விகளுக்கு புறக்கணிப்பே சிறந்த பதிலாகவும் அமையலாம்.
2:189 வசனத்தில் ‘அவர்கள் பிறை தொடர்பாகக் கேட்கின்றனர்’ என்று கூறும் அல்லாஹ், பிறை தொடர்பாக அவர்கள் கேட்ட கேள்வியை விடுத்து அவர்களுக்கு பயனளிக்கும் பதிலை மட்டுமே அளிக்கின்றான். இந்த வகையில் பயனற்ற, ஃபித்னாவை உண்டு பண்ணக் கூடிய தீய உள்நோக்கங்களுடன் கேட்கப்படக் கூடிய கேள்விகளைப் புறக்கணித்தல் வேண்டும்.
(7) பதிலளிப்பதில் அவசரத் தன்மையைத் தவிர்க்க வேண்டும். சிலர் கேள்வி முடிவதற்கு முன்னரே பதிலளிக்க முந்தி விடுவர். கேள்வி இதுதான் என்பதும், அதற்கு உரிய பதில் என்ன என்பதும் முன் கூட்டியே தெரிந்திருந்தால் பிரச்சினை இல்லை. அப்படியில்லை என்றால் தீர்ப்புக் கூறுவதில் தீவிரம் காட்டலாகாது.
(8) தெரியாத விஷயம் குறித்துக் கேட்டால் அதற்குத் தெரியாது என்று தெளிவாகக் கூறுபவராக முஃப்தி இருக்க வேண்டும். இமாம் மாலிக்(ரஹ்), ஷாஃபீ(ரஹ்) போன்ற பெரும் பெரும் இமாம்கள் எல்லாம் தம்மிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்குத் ‘தெரியாது!” என்பதையே பதிலாக அளித்துள்ளனர். இதை அவர்கள் கௌரவப் பிரச்சினையாகவோ, தம்முடைய ஆளுமையைக் குறைத்து விடக் கூடியதாகவோ கருதவில்லை.
(9) கோபம், பசி, கவலை, தூக்கம், களைப்பு, சுகவீனம் போன்ற நிலைகளில் ஃபத்வா வழங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
(10) ‘ஃபத்வா’ எனும் மார்க்கத் தீர்ப்புக்கும், ‘அல்கழா’ என்ற நீதிமன்றத் தீர்ப்புக்கும் இடையிலுள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும். ஃபத்வா என்பது கோர்ட் தீர்ப்பு அல்ல. அதை யாரும் யாருக்கும் திணிக்கவும் முடியாது. நீதிபதிகள் தீர்க்க வேண்டிய விஷயங்களில் தலையிடும் விதத்தில் முஃப்திகள் செயற்பட முடியாது.
(11) இஜ்திஹாதுக்கு உரிய விஷயமொன்றில் கருத்து வேறுபாடு எழுந்தால் ஃபத்வா வழங்கும் முஃப்தி நடுநிலையாகவும், தாராளத் தன்மையுடனும் தீர்ப்பு வழங்க வேண்டும்.
இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்களிடம் ‘இஜ்திஹாதுக்கு உரிய மஸ்அலாவில் உலமாக்களை தக்லீது செய்வோர் கண்டிக்கப்படுவார்களா?” எனக் கேட்கப்பட்ட போது, ‘இஜ்திஹாதுக்கு உரிய மஸ்அலாவில் சில உலமாக்களின் கருத்துப் படி செயற்படுவோர் மறுக்கப்படவும் மாட்டார்கள்! வெறுக்கப்படவும் மாட்டார்கள்! இரண்டு கருத்துகளில் எந்தக் கருத்தின் அடிப்படையில் செயற்பட்டவர்களும் எதிர்க்கப்படவும் மாட்டார்கள்!..” என்று குறிப்பிடுகின்றார்கள். எனவே மஸ்அலா இஜ்திஹாதியா விஷயத்தில் நிதானமாகத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.
(12) ஃபத்வாக்கள் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் கவனம் தேவை. எதிரும் புதிருமான ஃபத்வாக்கள் வெளியாகி பொது மக்கள் திணரும் நிலை ஏற்படக் கூடாது. இதைத் தவிர்ப்பதற்காக தகுதியற்றவர்கள் ஃபத்வா வழங்கும் நிலையைத் தவிர்க்க வேண்டும். ஒரு அறிஞர் குறிப்பிடும் போது ‘திருடர்களை விட ஃபத்வா வழங்கும் சிலர் சிறையில் இருக்கத் தகுதியானவர்கள்!” என்று குறிப்பிடுகின்றார்.
எனவே மருத்துவச் சான்றிதழ் பெறாதவர் மருத்துவம் செய்தால் தண்டிக்கப்படுவது போன்று அறிவு இல்லாமல் மார்க்கத் தீர்ப்பு வழங்கி சமூகத்துக்கு மத்தியில் ஃபித்னாவை ஏற்படுத்துவோர் இஸ்லாமிய சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும்.
இஸ்லாமிய அரச அமைப்பு இல்லாதபட்சத்தில் ஃபத்வா வழங்க முன்வருவோர் இறை அச்சத்துடன் நான் இதற்குத் தகுதியானவன் தானா? என்பதை நிதானமாகச் சிந்தித்து முடிவு செய்ய வேண்டும். அடுத்து, தனி நபர் ஃபத்வாவாக இல்லாமல் மார்க்க விஷயங்களைக் கூட்டு முயற்சியில் ஆராய்ந்து தீர்ப்புக் கூறும் வழிமுறையை ஜமாஅத்துகள் முன்னெடுக்கலாம்.
சமுதாயத்தில் இல்லாத புதுக் கருத்து ஒன்றை மக்கள் மன்றத்துக்கு முன்வைப்பதற்கு முன்னர் அந்த ஆய்வை ஏனைய அறிஞர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்று, அவர்களது அபிப்பிராயங்களையும் உள்வாங்கி வெளியிடும் பக்குவத்தை தீர்ப்பு வழங்குவோர் கடைப்பிடிப்பதன் மூலமும் இந்த ஃபத்வா குழப்பங்களைத் தவிர்க்கலாம்.
ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள் ஃபத்வா விஷயத்தில் கடைப்பிடித்த பேணுதலும், அச்ச உணர்வும், அடுத்தவரை மதித்த போக்கும் இன்றைய உலமாக்களிடமும் இடம்பெறும் என்றால் ஃபத்வாக்களால் ஏற்படும் ஃபித்னாக்களை ஒழிக்க முடியும்.
உங்களில் ஒருவரிடத்தில் ஒரு கேள்வி வந்தால் உடனேயே நீங்கள் ஃபத்வா வழங்கி விடுகின்றீர்கள். இதே போன்ற கேள்வி உமர்(ரலி) அவர்களிடம் வந்தால் தீர்ப்புப் பெறுவதற்காக அவர்கள் மற்ற ஸஹாபாக்களை ஒன்றுதிரட்டியிருப்பார்கள் என அபூ ஹுஸைன்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.
கலீஃபாக்கள் ஃபத்வா விஷயத்தில் கடைப்பிடித்த பேணுதலையும், அக்கறையையுமே இது எடுத்துக் காட்டுகின்றது. இது போன்ற ஒழுங்குகள் பேணப்பட்டால் அவசியமற்ற பல ஃபத்வா பித்னாக்களை தவிர்க்க முடியும்.
எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலஃபி
Friday, 4 March 2011
முதுகு வலி, மூட்டு வலி தொல்லை... ஏன்? தீர்வு என்ன?
முன்பெல்லாம் முப்பத்தைந்து வயதுக்கு மேல்தான் இடுப்பு வலி, மூட்டு வலி என்று அவதிப்பட்டார்கள். ஆனால், இப்போது சிறு வயதிலேயே 'இடுப்பு வலிக்குது' என்று புலம்புகிறார்கள்.அதற்குக் காரணமே சிறு வயதிலேயே டூ வீலர், கார் ஓட்டுதல், அதிக வெயிட் தூக்குதல், உடல் உழைப்பு இல்லாதது, சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் முறையாக உட்காராமல் இருப்பது போன்றவைதான்.
முதுகுத் தண்டுவடத்தில் எலும்புகள் மணி கோர்த்தது போன்று இருக்கும். வாகனங்களில் இருக்கும் ஷாக் அப்ஸார்பர் போல தண்டுவட எலும்புகளுக்கும் நடுவில் டிஸ்க் (வட்டுகள்)கள் இருக்கும்.மேற்கண்ட ஏதோ ஒரு காரணத்தினால் டிஸ்க்குகள் வலுவிழந்து பக்கத்திலிருக்கும் நரம்புகளை நசுக்குவதால்தான் முதுகுவலி ஏற்படுகிறது.
அதுவும் முக்கிய நரம்பான ‘Sciatica’ எனப்படும் நரம்பு நசுங்கினால் கால் குடைச்சல், கால் மரத்து விடுதல், முதுகு வலி, கால் பலமிழந்து போதல் என வேதனைகள் புகுந்து இம்சிக்கும். இதைச் சிலர் `கேஸ் ப்ராப்ளமா இருக்கும்' என்று அலட்சியமாக விட்டு விடுவார்கள். இது தவறு.
வலி, பிடிப்பு இருந்தால் ‘ஆரம்பநிலை'யில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதற்கு ரெஸ்ட் எடுத்தாலே போதும்.
ஆனால், ரெஸ்ட் எடுத்தும் திரும்பத் திரும்ப வலி, பிடிப்புகள் ஏற்பட்டால் ‘இரண்டாவது நிலை'.
இதற்கு வலி மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ளலாம். இதில் கால் குடைச்சலும் சேர்ந்து கொண்டு உங்களைக் கதி கலங்க வைத்து விடும். திரும்பத் திரும்ப மாத்திரைகள் சாப்பிட வேண்டிய சூழல் ஏற்படும்.
மூன்றாவது நிலை, தான் கொஞ்சம் அபாயகரமான நிலை. அதாவது தண்டுவடத்திலுள்ள ‘டிஸ்க்'கானது வலுவிழந்து அருகில் செல்லும் முக்கிய நரம்பை அதிகமாக அழுத்தினால் தாங்கவே முடியாத வலி ஏற்படும்.
கால் குடைச்சல், மரத்துப் போதல், நின்றால் நடந்தால் என வலியும் ஜாஸ்தியாகிக் கொண்டே இருக்கும். வலி மாத்திரைகள் ம்ஹூம்... சாப்பிட்டாலும் அப்படியேதான் இருக்கும்.
ஆக, இரண்டாவது நிலை, மூன்றாவது நிலையிலுள்ளவர்கள் ஃபிஸியோதெரபி சிகிச்சை செய்துகொள்வது நல்லது.
இதற்கு ஃபிஸியோதெரபியில் எப்படி ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படுகிறது என்கிறீர்களா?
முதலில் ரெஸ்ட், அப்புறம் எலக்ட்ரோதெரபி மின்னியல் சிகிச்சை செய்யப்படும். இதில் பிரச்னைக்கேற்ப அல்ட்ராசானிக், ஐ.எஃப்.டி. (நடுத்தர மின்னோட்டம்), ஐ.ஆர்.ஆர். (அகச் சிவப்புக் கதிர்கள்) என சிகிச்சை செய்து இறுகிப்போன தசைகளை லூஸாக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்தால்தான் வலி குறைய ஆரம்பிக்கும்.
இரண்டாவதாக, நரம்பு நசுங்கியிருந்தால் நரம்பை ரிலீஸ் பண்ண Traction (இழு கிசிச்சை) ட்ரீட்மெண்ட் ஒரு பத்துப் பதினைந்து முறை என இரண்டு வாரம் செய்தால் போதும். வலி படிப்படியாகக் குறையும்.
மூன்றாவதாக, ஸ்ட்ரென்த்தனிங் எக்ஸர்ஸைஸ். இதில் வீட்டிலேயே செய்யக்கூடிய ஹோம் எக்ஸர்ஸைஸ், கருவிகளைக் கொண்டு செய்யப்படும் ஃபிட்னஸ் எக்ஸர்ஸைஸ் என இரு வகை உண்டு.
சிகிச்சையெல்லாம் ஆர்வத்தோடு எடுத்துக்கொள்ளும் நோயாளிகள் பலர் இந்த உடற்பயிற்சி முறைகளை மட்டும் சரியாகக் கடைப்பிடிப்பதில்லை. என்னதான் மருந்து, மாத்திரைகள், சிகிச்சைகள் என்று செய்தாலும் அதற்கேற்ற உடற்பயிற்சியும் முக்கியம்.
அதோடு கார்போஹைட்ரேட், கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்து விட்டு புரோட்டின், விட்டமின், மினரல்ஸ், பருப்பு, தானிய வகைகள், கீரை, காய்கறி, பழங்கள் கொண்ட உணவுகளைச் சாப்பிட்டால்தான் முன்பிருந்த பலத்தைத் திரும்பப் பெற முடியும். இல்லையென்றால் சிகிச்சையின் முழு பலனைப் பெற முடியாது.
மேலும் டூ வீலர், கார்களில் செல்லும்போது கவனமாகச் செல்ல வேண்டும். குறிப்பாக டயரில் காற்று குறைந்திருப்பது, தேய்ந்து போன டயர், ஷாக் அப்ஸார்பரில் குறைபாடு, குஷன் மற்றும் சீட், ஹேன்ட் பார்கள் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும். உடலமைப்புக்கேற்ற வண்டியாகவும் இருக்க வேண்டும்.
இன்றைய வேலைவாய்ப்பே கம்ப்யூட்டரில்தான் இருக்கிறது. ஆக, கம்ப்யூட்டரில் அமர்ந்து பணிபுரிபவர்கள் ஒரு மணி நேரத்துக்கொருமுறை எழுந்து சென்று ஐந்து நிமிடம் ரெஸ்ட் எடுத்துக் கொண்ட பிறகு சரியான பொஸிஷனில் வந்து அமர வேண்டும்.
உட்காரக்கூடிய சேர் முதுகுப் பகுதிக்கு முழுவதுமாக சப்போர்ட்டாக இருக்க வேண்டும்.
லைட் வெளிச்சமானது நமது பின்புறத்தில் இருப்பது நல்லது. என்னதான் வாழ்க்கையில் பிஸியாக இருந்தாலும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி சிம்பிளான வாக்கிங்+உடற்பயிற்சிகள்; அதோடு அரைமணி நேரம் அவுட்டோர் கேம்ஸ் விளையாடுவது என வழக்கப்படுத்திக் கொண்டால் முதுகு வலி, மூட்டு வலி பிரச்னைகள் உங்களை நெருங்க யோசிக்கும்.
Wednesday, 2 March 2011
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்கும் Register with the Embassy of India
U.A.E அமீரகத்தில் வாழும் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்கும், அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி துவங்கி உள்ளது.
இதன் ஒரு கட்டமாக அமீரகத்தில் வாழும் இந்திய மக்கள் அங்குள்ள தூதரக இணையதளத்தில் விண்ணபித்து கொள்ள வேண்டும்.
அதில் அவர்களது விசா எண், முடிவடையும் காலம், பாஸ்போர்ட் எண்ணும், அது முடிவடையும் தேதி, முகவரி, செல்பேசி எண், இந்திய முகவரி போன்ற சில தகவல்கள் கொடுக்க வேண்டும்.
பின்னர் மின்னஞ்சலுக்கு மற்ற விவரங்கள் வரும்.
அடையாள அட்டை இந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதுவரை இதில் பதிவு செய்யாதவர்கள் உடனே இதை பயன்படுத்தி கொள்ளவும்
Tuesday, 1 March 2011
IAS, IPS படிக்க Civil Services தேர்வு
IAS, IPS படிக்க Civil Services தேர்வு
கனவை நினைவாக்க களம் இறங்குங்கள் மாணவர்களே!
கனவை நினைவாக்க களம் இறங்குங்கள் மாணவர்களே!
இந்தியாவை நிர்வகிக்கும் முக்கிய பதிவிகளுக்குக்கான நுழைவு தேர்வை
மத்திய அரசின் UPSC வருட வருடம் நடத்தி வருகின்றது. மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்), சுங்கத்துறை, வெளியுறவு துறை உட்பட 24 அரசு உயர் பதவிகளுக்கான (IAS, IPS, IFS etc...) முதல் கட்ட நுழைவு தேர்வு Civil Services Preliminary Examination 2011 விண்ணப்பம் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகின்றன. தேர்வை பற்றிய முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் UPSC வருட வருடம் நடத்தி வருகின்றது. மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்), சுங்கத்துறை, வெளியுறவு துறை உட்பட 24 அரசு உயர் பதவிகளுக்கான (IAS, IPS, IFS etc...) முதல் கட்ட நுழைவு தேர்வு Civil Services Preliminary Examination 2011 விண்ணப்பம் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகின்றன. தேர்வை பற்றிய முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவையே நிர்வகிக்கும் முக்கிய அரசு பதவிகளுக்கான தேர்வு என்றும் இதை சொல்லலாம். முஸ்லீம்கள் ஒடுக்கப்படுவதற்க்கும், உரிமைகள் நசுக்கப்படுவதர்க்கும் இது போன்ற மாவட்ட ஆட்சியர், காவல் துறை ஆணையர், கண்கானிப்பாளர் போன்ற பணிகளில் முஸ்லீம்கள் இல்லாததே (அல்லது மிக குறைவாக இருப்பதே) காரணம். இந்த
தேர்வை எழுதி வெற்றி பெறுவதன் மூலம் நாமும் மாவட்ட ஆட்சியராகவும், காவல் துறை ஆணையராகவும், உள்துறை, உளவுத்துறை என இந்தியாவின் முக்கிய அதிகார பொருப்புகளில் அமர முடியும். இந்த தேர்விற்க்கான கட்டணம் வெரும் ரூ.70 தான். இப்படி அதி முக்கியதுவம் வாய்ந்த இந்த தேர்வை எழுதும் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக குறைவு.
முஸ்லீம் சமூகத்தை பாதுகாக்க களம் இறங்குங்கள் மாணவர்களே!தேர்வை எழுதி வெற்றி பெறுவதன் மூலம் நாமும் மாவட்ட ஆட்சியராகவும், காவல் துறை ஆணையராகவும், உள்துறை, உளவுத்துறை என இந்தியாவின் முக்கிய அதிகார பொருப்புகளில் அமர முடியும். இந்த தேர்விற்க்கான கட்டணம் வெரும் ரூ.70 தான். இப்படி அதி முக்கியதுவம் வாய்ந்த இந்த தேர்வை எழுதும் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக குறைவு.
இது வெறும் தேர்வு அல்லது வேலை மட்டும் அல்ல, இந்த பணிகளில் நாம் சேர்ந்தால்தான் நமது சமுதாயத்திற்க்கு பாதுகாப்பு அளிக்க முடியும்,
குஜராத்திலும், கோவையிலும் இன்னும் இந்தியாவின் பல்வேறு பகுதியிலும் முஸ்லீம்களுக்கு எதிரான கோர தாக்குதலுக்கு இந்த துறைகளில் நாம் இல்லாததே (அல்லது மிக குறைவாக இருப்பதே) காரணம். சமுதாய முன்னேற்றத்திற்க்கும், பாதுகாப்பிற்க்கும் இது போன்ற தேர்வுகளில் நமது சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் தேர்சி பெற வேண்டும், தேர்சி பெற்று இது போன்ற பதவிகளில் அமருவதின் மூலமே நமது பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இன்னும் எத்தனை காலம் தான் நாம் ஆர்பட்டம் போராட்டம் என்று வாழ்வது, நமது உரிமையை மீட்க,
சமுதாயாத்திற்க்கு பாதுகாப்பு வழங்க நாமும் மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்), காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்) ஆகுவோம் வாருங்கள்.
இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்த தேர்வுகள் கடினமில்லை. இது போன்ற தேர்வுகளை எழுதி உயர்பதிகளில் இருப்பவர்கள் உயர் சாதியினர் என்று தங்களை சொல்லிகொள்பவர்கள், இதற்க்கு அவர்கள் செய்யும் முதல் வேலை, IAS,IPS தேர்வு மிக மிக கடினம், சாதாரண மக்கள் இந்த தேர்வுகள் எழுத முடியாது என்று ஒரு கருதாக்கத்தை சமுதாயத்தில் பரவவிட்டிருப்பது, இதனால் தேர்வு எழுத துணியும் மற்ற சமுதாய மாணவர்களின் தன் நம்பிக்கையை தகர்பதும், பிறறை இந்த தேர்வுகளை எழுதவிடாமல் தடுப்பதும் ஆகும்.
இதை மாற்ற நாமும் UPSC (IAS,IPS) தேர்வு எழுதி தேர்சி பெற வேண்டும்,
தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.
இந்த தேர்விற்க்கு எப்படி தயாராவது?
இந்த தலைப்பிலே பல புத்தகங்கள் புத்த கடையில் கிடைக்கும். அந்த அளவிற்க்கு இந்த தேர்வுகள் பிரபலம். பொதுவாக பயிற்சி நிறுவங்களில் சென்று பயிற்சி பெறுவதன் மூலம் எளிதில் இந்த தேர்வுகளில் வெற்றி பெறலாம். தமிழகத்தில் சென்னை சைதாபேட்டையில் உள்ள மனித நேர அறகட்டளை நடத்து பயிற்சி மையம் இது போன்ற தேர்வுகளுக்கு பிரசித்தி பெற்றது. பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவசமாகவும் பயிற்சி அளிக்கின்றனர்.
முஸ்லீம்களில் சிலர் Civil Services Examination பயிற்சி மையங்களை நடத்தி வருகின்றனர். சிலர் துவங்க இருகின்றனர். குறிப்பாக சென்னையில் கிரசென்ட் கல்லூரியில் ஒரு பயிற்சி மையமும், சகோ.M.F. கான் அவர்கள் நடத்தும் ஒரு பயிற்சி மையமும் உள்ளது. கள்ளகுறிச்சியில் சகோ. ரஹ்மதுல்லாஹ் நடத்தும் பயிற்சி மையம் உள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய முஸ்லீம் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுவதாக கள்ள குறிச்சி ரஹ்மதுல்லாஹ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
எப்போது நாம் இதில் தேர்சி பெறுவது?
பயிற்சி மையங்களுக்கு பஞ்சமில்லை, பணமும் ஒரு பிரச்சனை இல்லை ( இலவச பயிற்சிகள் பல நடத்தப்படுகின்றன). வேறு என்ன குறை? தகுதி உள்ள முஸ்லீம் மாணவர்கள்தான் குறை. முஸ்லீம் மாணவர்களிடம் இதில் தேர்சி பெரும் அளவிற்க்கு அறிவு இருகின்றது ஆனால் தன்னம்பிக்கைதான் இல்லை, பொருமையும் இல்லை. முஸ்லீம்களில் படிப்பவர்களே குறைவு, படித்துவிட்டு அதற்க்கு தகுந்த வேலை பார்ப்பவர்கள் மிக குறைவும். ஏதோ உணவு உன்ன வேலைகிடைத்தால் போதும் என்ற நிலையிலேயே முஸ்லீம் சமுதாயம் உள்ளது. இதை மாற்ற வேண்டும். முஸ்லீம் மாணவர்களுக்கு தன் நம்பிக்கையை ஊட்ட வேண்டும். பொருமையை போதிக்க வேண்டும். விடா முயற்சியை விதைக்க வேண்டும். நாம் சாப்பிட பிறந்தவர்கள் இல்லை, சாதிக்க பிறந்தவர்கள் என்ற உணர்வை சிறுவயதிலேயே விதைக்க வேண்டும். உணவு, இருப்பிடம் என்பது வாழ்கையின் ஒரு பகுதிதானே தவிற வாழ்கையே அதுவல்ல, முஸ்லீம்களின் இந்த குறுகிய சிந்தனையைவிட்டு அவர்களை வெளிகொண்டு வர வேண்டும். அதற்க்கு தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் முஸ்லீம் மாணவர்களுக்கு விழிபுணர்வும், ஊக்கமும், வழிகாட்டலும், பயிற்சியும் அளிக்க வேண்டும்.
தேர்வை பற்றிய முழு விபரங்களும் ஆங்கிலத்தில் அட்டாச் செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்கள் அறியவும் தேர்விற்க்கு தயாரவாதற்க்கான வழிமுறைகள் பற்றி அறியவும் Sithiqu.mtech@gmail.com என்ற E - மெயிலில் தொடர்பு கொள்ளவும்.S.சித்தீக்.M.Tech
Civil Services Examination - 2011 தேர்வை பற்றிய விபரம்.
இது 3 கட்டங்களாக நடைபெறும் தேர்வு. முதக் கட்ட தேர்வு, இரண்டாம் கட்ட தேர்வும் எழுத்து தேர்வாகும், மூன்றாம் கட்ட தேர்வு நேர்முக தேர்வாகும். முதல் கட்ட தேர்வு தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறும்.விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி : 21/03/11 இன்ஷா அல்லாஹ்
விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் : அனைத்து தபால் அழுவலகங்கள்
கட்டணம் : விண்ணப்பத்தின் விலை ரூ.20 மற்றும் தேர்வு கட்டணம் ரூ.50.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : Secretary,
Union Public Service Commission, Dholpur House, Shahjahan Road, New
Delhi - 110069
தேர்வு நடைபெறும் தேதி : 12/06/11 இன்ஷா அல்லாஹ்
வயது வரம்பு : 33 வயது (முஸ்லீம்கள் உட்பட) பிற்படுத்தபட்ட
வகுப்பினர்களுக்கு. பொது பிரிவினருக்கு 30 வயது
தேர்வு எழுத தகுதி : ஏதாவது ஒரு பட்ட படிப்பு படித்து இருக்க வேண்டும், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
Subscribe to:
Posts (Atom)