“மலேகான் நகரில் முஸ்லிம்கள் 80 சதவீதத்தினராக இருப்பதால், எங்களது முதலாவது குண்டுவெடிப்பை மலேகானில் நடத்தினோம்… இதற்காக 2006-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரக்யா சிங், சுனில் ஜோஷி, பாரத் ரித்தேஷ்வர் ஆகியோருடன் சேர்ந்து நான் திட்டமிட்டேன்… அஜ்மீர் தர்காவுக்கு இந்துக்களும் அதிக அளவில் வழிபாட்டுக்கு வருவதால், அதனைத் தடுக்கவும் இந்துக்களை அச்சுறுத்தவும் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது… சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டுவெடிப்பை சுனில்ஜோஷி பொறுப்பேற்று நடத்தினான்…” - ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம். ***கடந்த 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ஆம் நாள் மகாராஷ்டிரா மாநிலம் மலேகான் நகரின் முஸ்லிம்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் நான்கு குண்டுகள் வெடித்தன. 2007 நவம்பர் 11-ஆம் தேதியன்று ராஜஸ்தானின் அஜ்மீர் தர்காவில் ரம்ஜான் நோன்பு காலத்தில் குண்டுகள் வெடித்தன. 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் டெல்லிக்கும் பாகிஸ்தானின் லாகூருக்குமிடையே ஓடும் சம்ஜவ்தா விரைவு வண்டியில், அரியானா மாநிலத்தின் பானிபட் அருகே குண்டு வெடித்தது. அதைத் தொடர்ந்து மே மாதத்தில் ஆந்திராவின் தலைநகர் ஐதராபாத்தின் மெக்கா மசூதியில் குண்டு வெடித்தது. மலேகான் நகரில் 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதியன்று மீண்டும் குண்டுகள் வெடித்தன. இக்குண்டு வெடிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோரமாகக் கொல்லப்பட்டார்கள். பலர் படுகாயமடைந்தார்கள். இப்படி ஒவ்வொரு முறையும் குண்டுகள் வெடிக்கும் போதெல்லாம், பார்ப்பன – முதலாளித்துவ ஊடகங்கள் இதற்கு முஸ்லிம் தீவிரவாதிகள்தான் காரணம் என்று எவ்வித விசாரணையுமின்றி குற்றம் சாட்டின. 2007-ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷித் கசூரி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வந்திருந்த போது, சம்ஜவ்தா விரைவு வண்டியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்தியா-பாகிஸ்தானிடையே நல்லுறவு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் இஸ்லாமியத் தீவிரவாதிகள் இக்குண்டு வெடிப்பை நடத்தியதாக பார்ப்பன – முதலாளித்துவ ஊடகங்கள் சகட்டு மேனிக்குக் குற்றம் சாட்டின. இது ஹூஜி மற்றும் லஸ்கர்-இ-தொய்பா ஆகிய இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களின் சதி என்று அமெரிக்காவும் கூறியது. இக்குண்டு வெடிப்புகள் குறித்து ஆரம்ப விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே போலீசையும் துணை ராணுவப் படைகளையும் ஏவி முஸ்லிம் குடியிருப்புகளை அரசு சுற்றி வளைத்தது. சட்டப்படியும் சட்டவிரோதமாகவும் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கொடிய சித்திரவதைக்கு ஆளாயினர். அவர்களது இளமையும் எதிர்காலமும் நொறுங்கிப் போயின. பயங்கரவாதி என்ற அவமானத்தோடு, அவர்களது குடும்பங்கள் அலைக்கழிக்கப்பட்டு கையறு நிலையில் தவித்தன. குண்டு வெடிப்புகளில் கொல்லப்பட்டோரின் குடும்பங்களைப் போலவே, குண்டு வெடிப்பில் ஈடுபட்டதாகப் பொய்க்குற்றம் சாட்டி கைது செய்யப்பட்ட அப்பாவிகளின் குடும்பங்களும் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. ***கடந்த 2006-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தின் நான்டெட் நகரில் வெடிகுண்டுகள் தயாரித்தபோது விபத்து நடந்து ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் இருவர் மாண்டனர். ஐந்துபேர் படுகாயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பார்ப்பன பயங்கரவாதிகள் 21 பேரை மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்பு அதிரடி போலீசு அடுத்தடுத்து கைது செய்து ஔரங்காபாத் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராகக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இருப்பினும், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி நீதிமன்றம் அவர்களுள் 11 பேரை விடுவிக்க எத்தணித்தது. இதை எதிர்த்து உள்ளூர் முஸ்லிம்கள் போராடியதோடு, சி.பி.ஐ. விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நீண்ட இழுபறிக்குப் பிறகே, சி.பி.ஐ.யின் விசாரணை தொடங்கியது. சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ். ரகத்தைச் சேர்ந்த வெடிபொருளை முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோகித் கள்ளத்தனமாக ஜம்முவிலிருந்து வாங்கிக் கொடுத்ததற்கான அறிகுறிகள் கிடைத்தன. மலேகான் குண்டு வெடிப்பிலும் ஆர்.டி.எக்ஸ். ரக வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருந்தது. இக்குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் சேசிஸ் எண்ணைக் கொண்டு, அது அகில பாரத வித்யார்த்தி பரிசத் எனும் மாணவர் அமைப்பின் தலைவராக இருந்து, பின்னர் அபிநவ் பாரத் எனும் அமைப்பின் பெண் சாமியாரான சாத்வி பிரக்யா சிங்கினுடையது என்பதை மகாராஷ்டிர தீவிரவாத எதிர்ப்பு சிறப்புப் போலீசுப்படைத் தலைவரான ஹேமந்த் கார்கரே கண்டறிந்தார். கடந்த 2008-ஆம் ஆண்டில் பிரக்யா சிங் கைது செய்யப்பட்டாள். அவளைத் தொடர்ந்து முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோகித், ஜம்முவில் சாரதா பீடம் என்ற பெயரில் ஆசிரம் நடத்தி வந்த தயானந்த் பாண்டே மற்றும் மலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட 11 பேரை ஹேமந்த் கார்கரே கைது செய்தார். பிரக்யா சிங்கை விசாரணை செய்த போது, ம.பி.யைச் சேர்ந்த சுனில்ஜோஷி, ராமச்சந்திர கல்சங்கரா, சந்தீப் டாங்கே, அசீமானந்தா, பாரத் ரித்தேஷ்வர் முதலானோர் முக்கிய சதிகாரர்கள் என்பது தெரிய வந்தது. விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே 2008, நவம்பர் 26 அன்று மும்பையில் நடந்த இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலில் கார்கரே பலியானார். இதற்கிடையே சுனில்ஜோஷி இந்துவெறி பயங்கரவாதிகளாலேயே கொல்லப்பட்டான். மற்றவர்கள் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர். மலேகான் மற்றும் சம்ஜவ்தா எக்ஸ்பிரசில் வெடித்த குண்டுகள் ஆர்.டி.எக்ஸ். ரகத்தைச் சேர்ந்தவையாக இருந்ததால், இக்குண்டு வெடிப்புகளில் இந்துவெறி பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் சி.பி.ஐ. விசாரணையை மேற்கொண்டது. தயானந்த் பாண்டேயின் கணினியிலிருந்து கிடைத்த 37 உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டன. இவையனைத்தும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இவர்கள் திட்டமிட்டதை நிரூபித்துக் காட்டின. இதனடிப்படையில், கடந்த 2010-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ்.-இன் முழுநேர ஊழியரான சுவாமி அசீமானந்தா எனப்படும் நாப குமார் சர்க்கார் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டான். ஒரு மாதம் கழித்து டிசம்பர் 18-ஆம் தேதியன்று டெல்லி வழக்கு மன்றத்துக்கு விசாரணைக்குக் கொண்டுவரப்பட்ட அசீமானந்தா, இக்குண்டுவைப்புகளில் ஈடுபட்டது நாங்கள்தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். போலீசாரின் முன்னிலையில் பெறப்படும் வாக்குமூலங்களை விட, நீதிபதி முன்னிலையில் அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள் சட்டப்படி உறுதியான ஆதாரங்களாகியுள்ளதால், குண்டுவைப்பு பயங்கரவாதச் செயல்களில் இந்துவெறி ஆர்.எஸ்.எஸ். ஈடுபட்டிருப்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது. மே.வங்கத்தைச் சேர்ந்த நாப குமார் எனப்படும் அசீமானந்தா, 1977-இல் ஆர்.எஸ்.எஸ்-இன் முழுநேர ஊழியனாகி மே.வங்கத்திலும் பின்னர் அந்தமானிலும் ஆர்.எஸ்.எஸ்.-இன் பரிவாரங்களில் ஒன்றான வனவாசி கல்யாண் ஆசிரமத் தலைவராகப் பணியாற்றியுள்ளான். பின்னர் 1997-இல், இவன் குஜராத்தின் டாங் மாவட்டத்தில் ஷப்ரிதாம் என்னும் ஆசிரமத்தை நிறுவிக் கொண்டு சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் கிறித்துவர்களுக்கும் எதிராக ஆத்திரமூட்டும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தான். இவன் குஜராத் முதல்வர் மோடி, ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சௌகான், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களான சுதர்சன், மோகன் பாகவத் ஆகியோருக்கு நெருக்கமானவன். பயங்கரவாதிகளின் சித்தாந்த குருவான இவன்தான் அஜ்மீர், ஐதராபாத், மலேகான் முதலான இடங்களில் குண்டுவைக்க இலக்குகளைத் தீர்மானித்து வழிகாட்டியுள்ளான். 2008-இல் பெண் சாமியாரான பிரக்யா சிங் கைது செய்யப்பட்ட பிறகு, அசீமானந்தா தப்பியோடி தலைமறைவாகிவிட்டான். கடந்த 2010 நவம்பர் 19-ஆம் தேதியன்று அரித்துவாரில் பதுங்கியிருந்தபோது சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டான். தன்னோடு இக்குண்டுவைப்பு சதியில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ். மத்தியக் கமிட்டி உறுப்பினர் இந்திரேஷ் குமார், மத்தியப் பிரதேச ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான (பிரச்சாரக்) சுனில் ஜோஷி, இந்தூர் மாநகர ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான சந்தீப் டாங்கே, மூத்த ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரான ராம்ஜி, தேவேந்திர குப்தா, மேல்மட்ட உறுப்பினரான சிவம் தாக்கத், முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோஹித், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரான யோகி ஆதித்யானந்த், குஜராத்தின் விவேகானந்தா சேவா கேந்திரத்தின் பாரத் பாய், அந்த அமைப்பின் மாநில அமைப்பாளரான டாக்டர் அசோக், முக்கிய பிரமுகர்களான லோகேஷ் சர்மா, ராஜேஷ் மிஸ்ரா, ஜம்முவைச் சேர்ந்த சாரதா பீட சாமியார் தயானந்த் பாண்டே ஆகியோரின் பெயர்களையும் அவன் வாக்குமூலமாக அறிவித்துள்ளான். “யாருடைய தூண்டுதலோ, நிர்ப்பந்தமோ இல்லாமல், எவ்வித அச்சமுமின்றி சுய நினைவோடு” தான் இந்த வாக்குமூலத்தை அளிப்பதாகவும் அவன் தெரிவித்துள்ளான். ஐதராபாத்தின் சன்சல்குடா சிறையில் அசீமானந்தா அடைக்கப்பட்டபோது, அந்தச் சிறைக் கொட்டடியில் அவனுடன் இருந்த கைதியான கலீம் என்ற இளைஞர், வயதில் மூத்தவரான அவனுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, உணவு எடுத்து வந்து கொடுப்பது முதலான பல உதவிகளைச் செய்துள்ளார். ஐதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பையொட்டி கைது செய்து சிறையிடப்பட்ட அப்பாவி இளைஞர்தான் கலீம். குண்டு வைத்த அசீமானந்தா, தன்னால் ஒரு அப்பாவி முஸ்லிம் இளைஞன் சிறையில் வதைபடுவதைக் கண்டு வருந்தியதாகவும், மனசாட்சி உலுக்கியதாகவும், அதற்குப் பிராயச்சித்தம் தேடும் வகையில் உண்மைகளை வாக்குமூலமாக அளிப்பதாகவும் தெரிவித்துள்ளான். இப்பயங்கரவாதச் சதித் திட்டத்தில் முக்கியமானவனாகிய சுனில் ஜோஷி, கடந்த 2007-ஆம் ஆண்டு டிசம்பரில் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களாலேயே கொல்லப்பட்டான். இக்குண்டுவெடிப்பு வழக்கில் மேலிருந்து கீழ்மட்டம் வரை சங்கிலித் தொடர்போல பலர் கைதாகி வருவதால், ஆர்.எஸ்.எஸ். தலைமை தனது விசுவாச ஊழியனையே கொன்றொழிக்க உத்தரவு பிறப்பித்திருக்க வாய்ப்புள்ளது. இதேபோன்ற நிலைமை தனக்கும் ஏற்படும் என்பதாலும், முஸ்லிம் இளைஞரால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியும் சேர்ந்துதான் அசீமானந்தாவை ஒப்புதல் வாக்குமூலத்துக்குத் தள்ளியிருக்க வேண்டும். கடந்த டிசம்பர் 20-ஆம் தேதியிட்டு அசீமானந்தா, இந்திய அரசுத் தலைவிக்கும் பாகிஸ்தான் அதிபருக்கும் பாவமன்னிப்பு கோரி கடிதம் எழுதியுள்ளான். அதில், அஜ்மீர், மலேகான், ஐதராபாத், சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்புகளைத் திட்டமிட்டு நடத்தியவர்களில் நானும் ஒருவன் எனக் குறிப்பிட்டுள்ளான். ஐதராபாத்தின் சஞ்சலகுடா சிறையிலிருந்து அவன் எழுதிய இக்கடிதங்கள் இப்போது ஊடகங்களில் பகிரங்கமாகியுள்ளது. ***பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும் அசீமானந்தாவைச் சித்திரவதை செய்து கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெறப்பட்டதாகவும், இந்துத்துவப் பயங்கரவாதம் என்ற அவதூறு கிளப்பப்படுவதாகவும் வழக்கம் போலவே கூச்சலிடுகின்றன. ஆனால் அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமின்றி, வலுவான தடயவியல் ஆதாரங்களும் சி.பி.ஐ. விசாரணையில் கிடைத்துள்ளன. புதுப்புது அமைப்புகளை திட்டமிட்டு உருவாக்கி, இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளை அத்தகைய அமைப்புகளின் பெயரால் நடத்தி வருவதை ஆர்.எஸ்.எஸ். ஒரு உத்தியாகக் கொண்டு இயங்கி வருவதும் இப்போது நிரூபணமாகியுள்ளது. ஐதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட நோக்கியா செல்போனும் அதிலுள்ள வோடபோன் சிம் கார்டும் குண்டு வைக்கப்பட்ட இடத்தில் கிடைத்துள்ளன. இது, குறிப்பிட்ட நேரத்தில் அலாரம் அடிக்குமாறு செய்து அதன் மூலம் மின் இணைப்பு பெற்று குண்டுகளை வெடிக்கச் செய்யும் அதிநவீன தொழில்நுட்ப முறையாகும். இதேபோன்ற செல்போன் மூலமாக குண்டுகளை வெடிக்கச் செய்யும் முறையில்தான் சம்ஜவ்தா விரைவு வண்டியிலும் குண்டு வெடித்துள்ளது. மெக்கா மசூதியில் 6.53 வாட்ஸ் திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டது. அதே வகையான பேட்டரிகள்தான் சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. குண்டுக்கான வார்ப்பு இரும்பு உலோகமும் ஒரே மாதிரியாக இருந்துள்ளன. இத்தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில்தான் இக்குண்டுவெடிப்புகள் அனைத்திலும் ஒரு இந்துவெறி பயங்கரவாத கும்பல் ஈடுபட்டுள்ளதென புலனாவுத் துறையினர் அறுதியிட்டனர். செல்போன்கள் வாங்கப்பட்ட இடமும், வாங்கிய நபரின் பெயர் பாபுலால் யாதவ் என்பதும், போலியான ஆவணங்களைக் கொடுத்து இதேபெயரில் 11 சிம் கார்டுகள் வாங்கப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தன. பாபுலால் யாதவ் வாங்கிய செல்போன்களின் குறியீட்டு எண்ணை வைத்து அவற்றில் நான்கு செல்போன்களை ராஜஸ்தானிலுள்ள ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர்கள் பயன்படுத்தி வருவதை வைத்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூலமாக பாரத் ரித்தேஷ்வர் உள்ளிட்ட இதர சதிகாரர்கள் சிக்கினர். இவர்கள் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் முதலான பிற மாநிலங்களிலிருந்தும் இப்பயங்கரவாதச் செயல்களுக்கு ஆட்களைத் திரட்டியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். மட்டுமின்றி அதன் பரிவாரத்தைச் சேர்ந்த பஜ்ரங்தள், விசுவ இந்து பரிஷத், அபிநவ் பாரத், ஜெ வந்தேமாதரம், வனவாசி கல்யாண் ஆசிரமம் முதலானவற்றிலிருந்தும் ஆட்களைப் பொறுக்கியெடுத்து மூன்று குழுக்களை உருவாக்கினர். இதன்படி, ஒரு குழு நிதி ஏற்பாடுகளையும் வாகன ஏற்பாடுகளையும் செய்யும். அடுத்த குழு, வெடிகுண்டுகளையும் தேவையான சாதனங்களையும் ஏற்பாடு செய்யும். கடைசியாக உள்ள குழு, குண்டு வைப்புகளில் ஈடுபடும். ஒரு குழுவினருக்கு மற்ற குழுவினர் பற்றித் தெரியாது. இதனால் ஒருவர் கைது செய்யப்பட்டாலும் மற்ற குழுவினர் பற்றித் தெரியாது. இந்தச் சதித் திட்டத்துடன்தான் இப்பயங்கரவாதக் கும்பல் இயங்கியது என்பதும் இப்போது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி, 2002-இல் குஜராத் பயங்கரவாதப் படுகொலைகளைத் தொடங்கிவைத்த கோத்ரா எம்.எல்.ஏ.வான ஹரேஷ் பட்டுக்குச் சொந்தமான பட்டாசுத் தொழிற்சாலையில், டீசல் வெடிகுண்டுகளும் பைப் வெடிகுண்டுகளும் தயாரிக்கப்பட்டு குஜராத் பயங்கரவாதப் படுகொலையின்போது இந்துவெறி பயங்கரவாதிகளுக்கு விநியோகிக்கப்பட்டன என்பதும், சபர்கந்தா மாவட்ட விசுவ இந்து பரிசத்தின் தலைவரான தவால் ஜெயந்தி பட்டேலின் கல்குவாரியில் ஆர்.டி.எக்ஸ். ரக வெடிகுண்டுகள் ஏராளமாகத் தயாரிக்கப்பட்டு வெளியிடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்பதும் ஏற்கெனவே ஆதாரங்களுடன் நிரூபணமாகியுள்ளது. மேலும், கடந்த 2007-ஆம் ஆண்டில் “தெகல்கா” வார இதழ் குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பார்ப்பன பாசிச பயங்கரவாதிகள் நடத்திய கொலைவெறியாட்டத்தையும், இந்துவெறி பயங்கரவாதிகளிடையே ஊடுருவி அந்தக் கொடூரங்களை அரங்கேற்றியவர்களின் வாயிலிருந்தே மறுக்க முடியாத ஒப்புதல் வாக்குமூலங்களையும் ஆதாரங்களுடன் வெளியிட்டது. கடந்த 2007-ஆம் ஆண்டு தென்காசியில் நடந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் இந்து முன்னணி கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் என்பதும் நிரூபணமாகியுள்ளது. உண்மைகள் அம்பலமானபோதிலும், ம.பி.யில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்ததால் இந்துவெறி பயங்கரவாதிகள் கைது செய்யப்படவில்லை. நெருக்கடிகள் அதிகரித்த பின்னரே ம.பி. போலீசு வேறு வழியின்றி இந்துவெறி பயங்கரவாதிகளில் சிலரைக் கைது செய்தது. அஜ்மீர், மெக்கா மசூதி விசாரணைகளில் உண்மைகள் வெளிவந்துள்ள போதிலும், ராஜஸ்தான் மற்றும் ஆந்திரப் போலீசார் குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆந்திராவிலும் ராஜஸ்தானிலும் அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் வதைக்கப்பட்ட பின்னர், அவர்கள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பாகிய போதிலும், வேறொரு பொய்வழக்கு சோடித்து அவர்களை மீண்டும் சிறையிலடைத்து வதைத்தது, இம்மாநிலங்களின் போலீசு. இந்துவெறி ஆர்.எஸ்.எஸ்.-இன் பயங்கரவாதம் அடுத்தடுத்து வெளியான போதிலும், ஒருசில ஆங்கில ஊடகங்கள் மட்டுமே இவற்றை வெளியிட்டுள்ளனவே தவிர, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் அவை திட்டமிட்டே மறைக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், தீவிரவாதிகள் என்றாலே முஸ்லிம்களும் நக்சல்பாரிகளும்தான் என்ற கருத்து ஊடகங்களால் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இந்த அடிப்படையிலேயே போலீசும் அதிகார வர்க்கமும் ஒருதலைப்பட்சமாக அணுகுகின்றன. மதச்சார்பற்றவர்களாகக் கூறிக்கொள்ளும் “இந்து’’க்களே கூட ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் இரகசிய குண்டுவைப்புகள் மூலம் அப்பாவி பொதுமக்களைக் கொல்லும் பயங்கரவாதச் செயல்களில் இறங்க மாட்டார்கள் என்றே இன்னமும் கருதுகின்றனர். ஆர்.எஸ்.எஸ். ஒரு பயங்கரவாத அமைப்பு என்பது நிரூபிக்கப்பட்டுள்ள போதிலும், பல்வேறு சாட்சியங்கள், தடயவியல் ஆதாரங்கள், ஒப்புதல் வாக்குமூலங்கள் வாயிலாக தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இந்துவெறி பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். பரிவாரம் சட்டபூர்வமாகத் தடை செய்யப்படவில்லை. தண்டிக்கப்படவும் இல்லை. உண்மைகள் அடுத்தடுத்து வெளிவந்துள்ள போதிலும், எந்த ஓட்டுக் கட்சியும் இதுகுறித்து வாய்திறப்பதுமில்லை. இந்துக்கள் பெரும்பான்மையாக இருப்பதாலும், இந்நாட்டின் அரசியலமைப்பு முறையின் பிரிக்கமுடியாத அங்கமாக இந்துத்துவம் கோலோச்சுவதாலும் அரசும் ஓட்டுக்கட்சிகளும் ஊமையாகி நிற்கின்றன. ஆர்.எஸ்.எஸ். ஒரு பயங்கரவாத அமைப்பு என்று நிரூபணமாகியிருப்பது மட்டுமல்ல; நாட்டுக்கும் மக்களுக்கும் பேரபாயமாகிவிட்ட இப்பயங்கரவாத கும்பலை கடுமையான நடவடிக்கைகள் மூலமாகவோ, சட்டரீதியாகவோ, ஓட்டுக்கட்சிகளின் தேர்தல் வெற்றிகள் மூலமாகவோ வீழ்த்திட முடியாது என்பதும் இப்போது நிரூபணமாகியுள்ளது. பார்ப்பனியத்தால் இந்து எனும் பெயரில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஒன்றிணைத்துப் போராடுவதும், இக்கொடிய பயங்கரவாத மிருகங்களை அம்பலப்படுத்தி மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவதும், நேருக்குநேராக நின்று எதிர்த்து முறியடிப்பதும் மதச்சார்பற்ற-ஜனநாயக சக்திகளின் அவசர அவசியக் கடமையாகியுள்ளது. _______________________________________தனபால், புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2011 _______________________________________ |
முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் வெற்றியடைவீர்கள்! 3:200
Tuesday, 15 February 2011
இந்து பயங்கரவாதத்தின் நிரூபணங்கள் : மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா குண்டு வெடிப்புகள்
இங்கிலாந்தில் இஸ்லாமைத் தழுவுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆண்டிற்கு 5000 பேர் மாறுகிறார்கள்
லண்டன்: கடந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஏராளமானோர் இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளனர். ஆண்டுக்கு 5000 பேர் வீதம் இஸ்லாமு மாறி வருகின்றனராம்.
இங்கிலாந்தில் 14 ஆயிரம் முதல் 25,000 பேர் வரை இஸ்லாத்திற்கு வந்துள்ளனர் என்று முந்தைய கணக்கெடுப்பில் தெரிய வந்தது. ஆனால் பெய்த் மேட்டர்ஸ் நடத்திய ஆய்வு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 ஆயிரம் பேர் இஸ்லாம் மதத்தில் சேர்வதால் மதம் மாறியவர்களின் எண்ணிக்கை 1 லட்சம் இருக்கும் என்று கூறுகிறது.
http://thatstamil.oneindia.in/art-culture/essays/2011/14-uk-islam-conversion.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+oneindia-thatstamil-all+%28Oneindia+-+thatsTamil%29
இங்கிலாந்தில் 14 ஆயிரம் முதல் 25,000 பேர் வரை இஸ்லாத்திற்கு வந்துள்ளனர் என்று முந்தைய கணக்கெடுப்பில் தெரிய வந்தது. ஆனால் பெய்த் மேட்டர்ஸ் நடத்திய ஆய்வு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 ஆயிரம் பேர் இஸ்லாம் மதத்தில் சேர்வதால் மதம் மாறியவர்களின் எண்ணிக்கை 1 லட்சம் இருக்கும் என்று கூறுகிறது.
http://thatstamil.oneindia.in/art-culture/essays/2011/14-uk-islam-conversion.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+oneindia-thatstamil-all+%28Oneindia+-+thatsTamil%29
குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி: கன்னியாஸ்திரி பரபரப்பு குற்றச்சாட்டு
திருச்சி : ""கற்பழிப்பு வழக்கு குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றவாளிகள் பெயர்களை நீக்க முயற்சிக்கும் மாஜிஸ்திரேட் மீதும், போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் முதல்வராக இருந்த பாதிரியார் ராஜரத்தினம் மீது அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்துள்ள தஞ்சாவூரான் சாவடியை சேர்ந்த கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி (32), கடந்தாண்டு அக்டோபரில், கோட்டை மகளிர் போலீசில் கற்பழிப்பு புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கற்பழிப்பு புகாருக்கு உள்ளான பாதிரியார் ராஜரத்தினம், முதல்வர் பதவியை துறந்து, மதுரை ஐகோர்ட் கிளையில் முன்ஜாமீன் பெற்றார். கோட்டை மகளிர் போலீசார் முன்னிலையில், விசாரணைக்கும் ஆஜரானார். மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி, கடந்த 29ம் தேதி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். அதில், பாதிரியார் ராஜரத்தினம், சேசு சபை தலைவர் தேவதாஸ், பாதிரியார்கள் ஜோ சேவியர், சேவியர், டாக்டர் சுசித்ரா ஆகியோர், குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது.
கடந்த 3ம் தேதி, ப்ளாரன்ஸ் மேரி குற்றப்பத்திரிகை நகல் கேட்டு, திருச்சி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு நகல் வழங்காமல், அன்றே குற்றப்பத்திரிகையை ஜே.எம்.1 நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஆப்ரகாம் லிங்கன், கோட்டை போலீசாருக்கு திருப்பி அனுப்பினார். தகவலறிந்த கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரியும், அவரது வக்கீல் இருதயசாமியும், நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்துக்கு வந்தனர். அப்போது, ப்ளாரன்ஸ் மேரி தயாராக கொண்டு வந்திருந்த மனுவை, குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் அளித்தார். கற்பழிப்பு வழக்கில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றவாளிகளின் பெயர்களை நீக்கவும், ஆவணங்களை மறைக்கவும் முயற்சி நடக்கிறது. அதற்கு போலீஸ் அதிகாரிகளும், ஜே.எம்.1 நீதிமன்ற மாஜிஸ்திரேட்டும் உடந்தையாக உள்ளனர். குற்றவாளிகள் தப்பிக்க விடாமலும், அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என, அப்புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து ப்ளாரன்ஸ் மேரி கூறியதாவது: புகாருக்கு உள்ளாகியுள்ள பாதிரியார்கள், நாங்கள் பணபலம், அரசியல் பலம் மிக்கவர்கள். எங்கள் கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள், உயர் பதவியில் இருக்கின்றனர். எங்களை ஒன்றும் செய்ய முடியாது என ஏற்கனவே மிரட்டினர். தற்போது, குற்றப்பத்திரிகை திரும்ப பெற்றதிலிருந்து, மிரட்டியதை செயல்படுத்த ஆரம்பித்துள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது. குற்றவாளிகளை காப்பாற்றும் வகையில், குற்றப்பத்திரிகை திரும்ப அனுப்பப்பட்டதில், போலீஸ் கமிஷனரும், ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் ஆப்ரகாம் லிங்கனும் உடந்தையாக உள்ளனர். பல அரசியல்வாதிகளும் உடந்தையாக இருக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளேன். நீதி கிடைக்கும் வரை என்னுடைய போராட்டம் தொடரும். இவ்வாறு ப்ளாரன்ஸ் மேரி கூறினார்.
ப்ளாரன்ஸ் மேரியின் வக்கீல் இருதயசாமி கூறியதாவது: கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக அனைத்து தரப்பினரும் உள்ளதால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க வேண்டும் என, வரும் 15ம் தேதி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவுள்ளோம். பாதிரியார் ராஜரத்தினத்தின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்ய கோரிய முறையீட்டு மனுவும், அன்று விசாரணைக்கு வருகிறது. போலீஸ் கமிஷனர் சொல்லியே ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் ஆப்ரகாம் லிங்கன் குற்றப்பத்திரிகையை திருப்பி அனுப்பியதாக, அவரே என்னிடம் தெரிவித்தார். இவ்வாறு இருதயசாமி கூறினார்.
பாதிரியார் 21 ஆயிரம் - செக்ஸ் தொடர்பான புகார்கள் கூறப்பட்டன.
பாதிரியார் 21 ஆயிரம்... ?
ஸ்பெயின் நாட்டில் உள்ள விலா பேம்ஸ் நகரைசேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் மீது செக்ஸ் தொடர்பான புகார்கள் கூறப்பட்டன.
இதையடுத்துஅந்த பாதிரியார் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அவர் வைத்திருந்தகம்ப்யூட்டரில் ஏராளமான செக்ஸ் வீடியோ காட்சிகள் பதிவு செய்து வைத்து இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது.
கம்ப்யூட்டர் கோப்பில் 21 ஆயிரம் செக்ஸ் வீடியோக்கள் இருந்தன. இவற்றில் பெரும்பாலானவைகுழந்தைகள் தொடர்பான செக்ஸ் வீடியோ காட்சிகள் ஆகும்.
இதையடுத்து பாதிரியாரை போலீசார் கைது செய்தனர்.செக்ஸ் வீடியோ படம் எடுத்ததற்கும் இவருக்கும் சம்பந்தம் உண்டா? என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செக்ஸ் புகாரில் சிக்கியதை அடுத்து பாதிரியாரைசபையில் இருந்து நீக்க கிறிஸ்தவ டயோசிசன் முடிவு செய்திருக்கிறது.
இதையடுத்து பாதிரியாரை போலீசார் கைது செய்தனர்.செக்ஸ் வீடியோ படம் எடுத்ததற்கும் இவருக்கும் சம்பந்தம் உண்டா? என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செக்ஸ் புகாரில் சிக்கியதை அடுத்து பாதிரியாரைசபையில் இருந்து நீக்க கிறிஸ்தவ டயோசிசன் முடிவு செய்திருக்கிறது.
Monday, 14 February 2011
குடும்ப உறவு
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
இஸ்லாம் வலியுறுத்தும் சமூக உறவுடன் சம்பந்தப்பட்ட இபாதத்துக்களில் குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானதாகும். சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும். இவ் வகையில் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை ஏற்படுத்த வேண்டும்.துரதிஷ்டவசமாக மார்க்க ஈடுபாடு உள்ள பலரிடம் கூட இன்றைய சமூக சூழல் இரத்த உறவை விட நட்பையும் இடையில் ஒட்டிக்கொண்ட உறவையும் முக்கியத்துப் படுத்தும் நிலை இன்று தோன்றியுள்ளது. நட்புக்காகவும், இன்னும் பல தொடர்புகளுக்காகவும் நேரத்தையும், பணத்தையும் செலவிடத் தயாராகவுள்ள பலர் குடும்ப உறவுக்காக சில நிமிடங்களைக் கூட துறக்கத் துணிவதில்லை.
நட்பும் ஏனைய உறவுகளும், நாமாகத் தெரிவு செய்பவையாகும். இரத்த உறவு அல்லாஹ்வின் தெரிவாகும். இவன் உன் வாப்பா, இவன் உன் சாச்சா, இவன் மாமா, இவன் உன் சகோதரன் என்பது அல்லாஹ் செய்த தெரிவாகும். இந்தத் தெரிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மார்க்கக் கடமையாகும்.
ஈமானுடன் சம்பந்தப்பட்டது:
இரத்த உறவைப்பேணுவது வெறும் சமூகக் கட்டமைப்பிற்காக மட்டும் அவசிய மானதல்ல. இஸ்லாமிய நோக்கில் இது ஈமானின் அம்சங்களில் ஒன்றாகும்.
“யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் ஒரு முஸ்லிம் கொண்டுள்ள ஈமானின் வெளிப்பாடுகளில் ஒன்றாகக் குடும்ப உறவைப் பேணி நடத்தலும் அமைந்துள்ளது. எனவே, குடும்ப உறவைப் பேண உறுதி பூணுவோமாக.
அல்லாஹ்வுடன் தொடர்பு :
ஏற்கனவே இரத்த உறவு என்பது அல்லாஹ்வின் தெரிவு என்று கூறினோம். இந்தத் தெரிவை ஏற்று மதிப்பதன் மூலமாக எமக்கு அல்லாஹ்வுடன் தொடர்பு உண்டாகின்றது.
அல்லாஹுதஆலா இரத்த உறவைப் பார்த்து “யார் உன்னைச் சேர்ந்து நடக்கிறானோ நான் அவனைச் சேர்த்துக் கொள்வேன். யார் உறவைத் துண்டித்துக் கொள்கின்றானோ நான் அவனுடன் தொடர்பைத் துண்டித்து விடுவேன்” என்று கூறினான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
ஆதாரம் : புகாரி
என்ற அறிவிப்பின் மூலம் குடும்ப உறவைப் பேணுவது அல்லாஹ்வுடனான உறவைப் பேணுவதற்குச் சமமாக்கப் படுவதையும் நாம் காணலாம்.
“இரத்த உறவு அர்ஷில் கொழுகப் பட்டுள்ளது. அது யார் என்னைச் சேர்ந்து நடக்கிறானோ அல்லாஹ் அவனைச் சேர்ந்து கொள்வான். யார் என்னைத் துண்டித்து நடக்கின்றானோ, அல்லாஹ் அவனைத் துண்டித்து விடுவான்” எனக் கூறும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
இந்த அறிவிப்பும் குடும்ப உறவைப் பேணுவதன் அவசியத்தை வலியுறுத்தும் அதேவேளை, இதற்கு மாறாகச் செயல் படுவோரைக் கண்டிக்கவும் செய்வது கவனிக்கத் தக்கதாகும்.
சுவனத்தில் நுழைவிக்கும்:
இரத்த உறவுகளுடன் இங்கிதமாகவும், இதமாகவும் நடந்து கொள்வதும் சுவனத்தில் நுழைவிக்கத்தக்க சிறந்த செயற்பாடாகப் போற்றப்படுகின்றது.
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சுவனத்தில் நுழைவித்து நரகத்தை விட்டும் தூரமாக்கக் கூடிய ஒரு அமலை எனக்குச் சொல்லித் தாருங்கள் என்றார் அதற்கு நபி(ஸல்) அவர்கள்,
“நீ அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணைவைத்து விடாதே! தொழுகையை நிலை நிறுத்து, ஸகாத்தும் கொடுத்துவா, குடும்ப உறவைப் பேணிக்கொள்” என்றார்கள்.
அறிவிப்பவர் : ஹாலித் இப்னு ஸைத் அல் அன்ஸாரி(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
சுவனம் செல்ல விரும்புபவர்கள் மேற்குறித்த நோக்கில் செயல்பட்டு குடும்ப உறவைப்பேண முன்வர வேண்டும்.
இரண விஸ்தீரனம் :
இரத்த உறவைப் பேணுவதால், மறுமைப் பேறுகள் மட்டுமன்றி இம்மையிலும் இனிய பயன்களுள்ளதாக இஸ்லாம் கூறுகின்றது.
“யார் தனக்கு றிஸ்கில் விஸ்தீரணத்தையும் நீண்ட ஆயுளையும் விரும்புகின்றாரோ அவர் அவர் இரத்த உறவைப் பேணிக்கொள்ளட்டும்.
அறிவிப்பவர் : அனஸ்(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
எதுவரை சேர்ந்து நடப்பது :
சிலர் எவ்வாறுதான் நல்ல முறையில் நடந்து கொண்டாலும், குறைகண்டு கொண்டே இருப்பர், குத்திப் பேசிக்கொண்டே இருப்பர், இப்பகைவர்களுடனும் இணைந்து நடப்பதே சரியான இரத்த உறவைப் பேணும் முறையாகும்.
“தன்னுடன் இணைந்து இருப்போருடன் சேர்ந்து நடப்பவன் இரத்த உறவைப் பேணுபவனல்ல. உண்மையில் தன்னுடன் உறவைத் துண்டித்தாலும் உறவு பேணுவதே இரத்த உறவைச் சேர்ந்து நடப்பவனாவான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ்(ரலி), ஆதாரம் : புகாரி
இதே நிலையை ஒரு தோழர் நபி(ஸல்) அவர்களிடம் இவ்வாறு முறையிட்டார்.
“எனக்கு சில உறவினர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் ஒட்டி நடந்தால் அவர்கள் வெட்டிச் செல்கின்றனர். நான் அவர் களுக்கு நன்மை செய்கின்றேன். அவர்களோ எனக்குத் தீமை செய்கின்றனர். நான் அவர்களுடன் கருணையுடன் நடந்து கொள்கின்றேன். அவர்கள் என்னுடன் கடுமையாக நடந்து கொள்கின்றனர் என்றார். அதற்கு நபியவாகள், நீ கூறுவது போல் நீ நடந்து கொண்டால் அல்லாஹ்விடமிருந்து ஒரு உதவியாளர் உனக்கு நியமிக்கப்பட்டிருப்பார்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
ஆதாரம் : முஸ்லிம்
எனவே, முடிந்தவரை அனைவரையும் நாம் அணுசரித்து, விட்டுக்கொடுத்து இணங்கிச் செல்ல முயல வேண்டும். இதுவே, உண்மை யான இரத்த பந்தமாகும்.
காஃபிரான உறவு :
எமக்கு காஃபிரான இரத்த உறவு இருந்தாலும் அவர்களுக்குரிய அந்தஸ்த்தைக் கொடுக்க நாம் தயங்கக் கூடாது. இதில் இஸ்லாம் எவ்வளவு தூரம் விசாலமாகச் சிந்திக்கின்றது என்பதைப் பின்வரும் அறிவிப்பு உணர்த்துகின்றது.
“நீங்கள் நிச்சயமாக எகிப்தைக் கைப்பற்றுவீர்கள் அப்போது அவர்களுடன் மிக இங்கிதமாக நடந்து கொள்ளுங்கள். ஏனெனில், உங்களுக்கு அவர்களுடன் குடும்ப உறவும் – திருமண உறவும் உள்ளது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர்(ரலி)
ஆதாரம் : முஸ்லிம்
இஸ்மாயில்(அலை) அவர்களின் தாயார் அன்னை ஹாஜரா அவர்கள் கிப்தி இனத்தவராவார். அவ்வாறே நபி(ஸல்) அவர்களின் மகன் இப்றாஹிமின் தாய் மரியதுல் கிப்தியாவும் இந்த இனத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். இதனையே நபி(ஸல்) அவர்கள் மேற்குறித்த நபிமொழியில் குறிப்பிட்டார்கள். தனக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஹாஜரா அவர்களின் குடும்ப உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எதிர்காலத்தில் நடந்து கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்றால் எமது உடன் பிறப்புக்கள், எமது பெற்றோரின் உடன் பிறப்புக்கள், அவர்களுடைய குழந்தைகளுடன் நாம் எவ்வளவு இங்கிதமாக நடந்துகொள்ளப் பணிக்கப்பட்டுள்ளோம் என்பதை எண்ணிப்பார்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம். அத்துடன் நபி(ஸல்) அவர்கள் இதனைக் கூறும் போது அந்த கிப்தி இனத்தவர் கிறிஸ்தவர்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
எனவே, காபிர்களாக இருந்தால் கூட இரத்த உறவுகளுக்கு நாம் முக்கியத்துவம் வழங்கத் தவறக் கூடாது.
இஸ்லாத்திற்கு எதிராக இரத்த உறவு:
இரத்த உறவு இஸ்லாத்திற்கு எதிராக கிளர்ந்து வருமென்றால் அப்போது இரத்த உறவை விட கொள்கை உறவே முதன்மை பெறும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் எதிராகச் செயல்படுவோர் மீது உண்மையான பாசத்தையும் நேசத்தையும் சொரிய முடியாது. இதனைப் பின்வரும் வசனம் மூலம் அறியலாம்.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும், நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும், தங்கள் சகோதரர்களாயினும், தங்கள் குடும்பத்தினராயினும் சரியே; (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான்; மேலும், தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கின்றான்; சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள்; அவர்கள் தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள். (59:22)
இந்த வசனத்தின் படி நபித் தோழர்கள் தமது தந்தை, சகோதரர்கள் நெருங்கிய உறவினர்கள் என்ற பாகுபாடின்றி போர்க் களங்களில் எதிர்த் தரப்பில்; இருந்த பலரைக் கொன்றுள்ளனர். இரத்த உறவைக் காரணம் காட்டி சத்தியத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு உதவ முடியாது.
அல்லாஹ்வை மிஞ்சி இரத்த உறவு ஓங்கலாகாது
இரத்த உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால், அது எல்லை மீறிச் சென்று விடக் கூடாது. அல்லாஹ்வையும், அவனது தூதரையும்விட பெற்றோரையோ, மற்ற உறவினர்களையோ ஒரு முஃமின் நேசிக்க முடியாது. இதனைப் பின்வரும் வசனம் இப்படி விபரிக்கின்றது.
“(நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத் தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம்(எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்குப் பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பாத்து இருங்கள்- அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை”. (9:24)
நபி (ஸல்) அவர்களும், “உங்களில் எவருக்கும் நான் அவரது தாய், தந்தை பிள்ளைகள் மீது மனித சமூகத்தை விடவும் விருப்பத்திற்குரியவனாக ஆகாதவரையில் நீங்கள் ஈமான் கொண்டவர்களாக முடியாது. (ஆதாரம் :முஸ்லிம்) என்ற நபிமொழி மூலம் நவின்றுள்ளார்கள். எனவே, பெற்றோர்கள் மீதோ, குடும்பத்தினர் மீதோ பாசம் வைக்கும் போது அந்தப் பாசம் எல்லை மீறிச் சென்று விடாவண்ணம் அவதானித்துக் கொள்ள வேண்டும்.
எனவே, குடும்ப உறவைப் பேணி நடந்து அல்லாஹ்வின் அருளையும் அன்பையும் பெறுவதுடன் “குடும்ப உறவைத் துண்டித்தவன் சுவனம் நுழைய மாட்டான்” அறிவிப்பவர் : ஜுபைர் இப்னு முத்இம்(ரலி), (ஆதாரம்: முஸ்லிம், புகாரி) என்ற அண்ணலாரின் எச்சரிக்கைக்கு அப்பாற்பட்ட கூட்டத்தில் இணைந்து கொள்வோமாக!
நன்றி- ரீட் இஸ்லாம்.நெட்
விக்கிலீக்ஸ்:ஈராக்கில் தலையிடாதீர்கள் என அமெரிக்காவிடம் ஹுஸ்னி முபாரக் தெரிவித்தார்
ஈராக் விவகாரத்தில் தலையிடாதீர்கள் என ஹுஸ்னி முபாரக் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
ஈராக்கில் தலையிட்டால் அங்கிருந்து அமெரிக்காவால் தப்பிக்க வியலாது என ஹுஸ்னி முபாரக் தெரிவித்ததாக அமெரிக்க தூதரக செய்திகளை மேற்கோள்காட்டி விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
சதாம் ஹுசைனை பதவியிலிருந்து இறக்காதீர்கள் எனவும் முபாரக் தெரிவித்திருந்தார். முன்னாள் அமெரிக்க துணை அதிபர் டிக்செனியிடம் மூன்று அல்லது நான்கு தடவை முபாரக் இதனை தெரிவித்திருந்தார். ஆனால், அமெரிக்க வட்டாரங்கள் முபாரக்கின் எச்சரிக்கையை நிராகரித்தன.
இச்செய்தியை விக்கிலீக்ஸை மேற்கோள்காட்டி டெய்லி டெலிகிராஃப் செய்தி வெளியிட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு கெய்ரோவில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அளித்த விருந்து நிகழ்ச்சியில் முபாரக் தனது கருத்தை தெரிவித்துள்ளார் என டெய்லி டெலிகிராஃப் கூறுகிறது.
ஜார்ஜ் புஷ் சீனியர் எனது பேச்சைக் கேட்பார், ஆனால் அவரது மகனோ அவ்வாறல்ல என முபாரக் தெரிவித்துள்ளார். 2009 ஜனவரி 14-ஆம் தேதி அமெரிக்க தூதரக ஆவணங்களை மேற்கோள்காட்டி விக்கிலீக்ஸ் இதனை வெளியிட்டுள்ளது.
மாத்யமம்
Thursday, 10 February 2011
Subscribe to:
Posts (Atom)