Wednesday 5 July 2023

கண்டறிய இயலவில்லைச் சான்று !

கண்டறிய இயலவில்லைச் சான்று !

[ Not Traceable Certificate ]


ஆவணங்கள் காணவில்லை எனச் சான்று பெற அல்லல்பட்டதற்கு விடிவு, சென்னை உயர்நீதிமன்ற மனு CRL.O.P.No.3307/2022 - ன் மூலம் கிடைத்துள்ளது.


அதில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறை வழிகாட்டுதல்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.


1. ஆவணங்கள் காணவில்லை என காவல் நிலையத்தில் விண்ணப்பிப்போர், அந்த ஆவணங்களின் சொத்துரிமையாளராகவோ அல்லது அவரின் அதிகாரம் பெற்ற முகவராகவோ இருக்க வேண்டும்.


2. விண்ணப்பதாரர் விண்ணப்பத்தோடு கீழ்க்கண்ட ஆவணங்களை இணைக்க வேண்டும் :


(i). தொலைந்துபோன ஆவணத்தின் சார்பதிவாளர் அலுவலகத்தின் ( விண்ணப்பம் தாக்கல் செய்வதற்கு ஒரு மாதத்திற்குள் பெறப்பட்டிருக்க வேண்டும்) சான்றிட்ட இரண்டு நகல்கள்.


(ii ). விண்ணப்பதாரரின் அல்லது அவரது முகவரின் அன்றையக் காலத்திய நிழற்படம்.


(iii ). ஆதார் அட்டை (அ) வாக்காளர் அடையாள அட்டை (அ) கடவுச்சீட்டின் நகல் ( பிற சான்றுகள் ஏற்கப்படமாட்டாது ).


(iv ). பத்தி 6 - ல் குறிப்பிட்டவாறு மெய்ப்படிவ செய்தித்தாள் விளம்பரங்கள்.


( v ). பத்தி 7,8 - களில் குறிப்பிட்டவாறு விண்ணப்பதாரரின் பொறுப்பேற்பு மெய்யுறுதி வாக்குமூலம்.


3. தொலைந்து போன சொத்தாவண உரிமையாளர் இறந்திருப்பின், அவரது வாரிசுகள் கீழ்க்கண்ட ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.


(அ). அங்கீகரிக்கப்பட்டத் துறையால் வழங்கப்பட்ட, ஆவணத்திற்குரிய இறந்தவரின் இறப்புச் சான்று.


( ஆ ). அங்கீகரிக்கப்பட்டத் துறையால் வழங்கப்பட்ட, ஆவணத்திற்குரிய இறந்தவரின் வாரிசுச் சான்று.


4. ஆவணத்திற்குரிய இறந்தவருக்குப் பல வாரிசுகளிருப்பின், விண்ணப்பிக்கும் வாரிசுதாரர், பிற வாரிசுகளிடம் பெற்ற மறுப்பின்மைச் சான்று இணைக்க வேண்டும்.


5. தொலைந்துபோன ஆவணத்திற்குரிய வில்லங்கச் சான்று, விண்ணப்பம் தாக்கலான நாளுக்கு முந்தைய 20 ஆண்டுகளுக்கோ அல்லது ஆவணம் பதிவான நாளிலிருந்தோ, அதில் எது அதிகமானக் காலமோ அதற்குரியக் கணினி அல்லது கையாலெழுதப்பட்டச் சான்று சார்-பதிவாளர் அலுவலக அங்கீகாரம் பெற்றதை இணைக்க வேண்டும்.


6. பிரபலமான ஆங்கில மற்றும் மக்களிடம் பரவலானத் தமிழ் நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டு அதன் மெயப் படிவங்கள் இணைக்க வேண்டும். ( கீழ்க்கண்டவாறு விளம்பரங்கள் இருக்க வேண்டும் ).


7. தொலைந்துபோன ஆவணம் உரிமையியல் பிரச்சினைக்குட்பட்டோ, அடமானத்திலோ நீதிமன்றத்திலோ, நிதி நிறுவனத்திலோ நிலுவையில் இல்லை என விண்ணப்பதாரரின் பொறுப்பேற்பு ஆவணம் இணைக்க வேண்டும்.


8. விண்ணப்பதாரரால் கொடுக்கப்பட்டத் தகவல்கள் மெய்யற்றவையாக இருப்பின், அதற்கானக் குற்றவியல் நடவடிக்கைக்குக் கட்டுப்படுவதற்கு பொறுப்பேற்பு ஆவணம் இணைக்க வேண்டும். தொலைந்துபோன ஆவணம் பின்னாளில் கிடைக்க நேரிடின், ஒப்படைப்பேன் எனப் பொறுப்பேற்பு ஆவணம் இணைக்க வேண்டும். அந்தத் தகவலை நிலைய அலுவலர் உரிய சார்-பதிவாளர் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்.


9. நிலைய அலுவலரால் விண்ணப்பம் பெற்றவுடன் மனு இரசீது வழங்கப்பட வேண்டும்.


10. மேற்கண்ட மனு இரசீது நிலைய அலுவலரால் மட்டுமே வழங்கப்பட வேண்டும்; பிறரால் கூடாது.


11. பத்தி 2 - ல் குறிப்பிட்ட ஆவணங்கள் விடுபட்டிருப்பின், அதனை விண்ணப்பதாரருக்கு உடனடியாக நிலைய அலுவலர் எழுத்து மூலமாகத் தெரிவிக்க வேண்டும்.


இன்னும் 12 முதல் 19 வரை, அலுவலக நடைமுறை வழிகாட்டுதல்கள் உள்ளன....




No comments:

Post a Comment