அஸ்ஸலாமு அலைக்கும்
நம் நெஞ்சம் நிறைந்த நபிகள்நாயகம் ﷺஅவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு கற்றுத் தந்த துஆ:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ تَوْفِيقَ أَهْلِ الْهُدَى ، وَأَعْمَالَ أَهْلِ الْيَقِينِ ، وَمُنَاصَحَةَ أَهْلِ التَّوْبَةِ ، وَعَزْمَ أَهْلِ الصَّبْرِ ، وَجِدَّ أَهْلِ الْحِسْبَةِ ، وَطَلَبَ أَهْلِ الرَّغْبَةِ ، وَتَعَبُّدَ أَهْلِ الْوَرَعِ ، وعِرْفَانَ أَهْلِ الْعِلْمِ حَتَّى أَخَافَكَ ، اللَّهُمَّ أَسْأَلُكَ مَخَافَةً تَحْجِزُنِي عَنْ مَعَاصِيكَ ، حَتَّى أَعْمَلَ بِطَاعَتِكَ عَمَلًا أَسْتَحِقُّ بِهِ رِضَاكَ ، وَحَتَّى أُنَاصِحَكَ فِي التَّوْبَةِ خَوْفًا مِنْكَ ، وَحَتَّى أُخْلِصَ لَكَ النَّصِيحَةَ حُبًّا لَكَ ، وَحَتَّى أَتَوَكَّلَ عَلَيْكَ فِي الْأُمُورِ حُسْنَ ظَنٍّ بِكَ
அல்லாஹ்வே!நிச்சயமாக நான் நல்வழி பெற்றோரின் தவ்பீக்-நல்லுதவியை
,ஈமான் உறுதியுடையோரின் நல்லமல்களை,
தவ்பா செய்தோரின் தூய எண்ணத்தை
பொறுமையாளரின் அசையாத உறுதியை,
அச்சம்கொண்டோரின் முயற்சியை,
ஆசைகொண்டோரின் தேடலை,
பேணி நடப்போரின் வணக்கத்தை,
கல்வியாளரின் ஆத்ம ஞானத்தை,
உன்னை நான் சந்திக்கும் வரை
பெற்றிருக்க உன்னிடம் கேட்கிறேன்.
எங்கள் அல்லாஹ்வே!
உனக்கு கீழ்படியாமையை வெறுக்கச்செய்யும் அச்சத்தை உன்னிடம் கேட்கிறேன்.
அந்த அச்சம் உன் திருப்பொருத்தத்தை பெற என்னைத் தகுதி பெறச்செய்யும் நல்லமல்களை நான் செய்யத் தூண்டும் அளவு வேண்டும்.
அந்த அச்சம ,உனக்கு பயந்து தூய்மையான தவ்பா செய்யும் அளவு வேண்டும்
,அந்த அச்சம் உனக்காக வெட்கமடைந்து மனத்தூய்மையை உனக்காகவே ஆக்கும் அளவு வேண்டும்
எல்லா காரியங்களிலும் உன் மீதே நம்பிக்கையை ஏற்படுத்துகின்ற
உன் மீதே நல்லெண்ணம் ஏற்படுத்துகின்ற
உனக்கு மாறு செய்வதைத்
தடுக்கின்ற இறை அச்சத்தைக் கேட்கிறேன்,
------(தப்ரானி)
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ؕ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ ، وَتُبْ عَلَيْنَا ۚ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ
"எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து இந்த துஆவை ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்". எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்." 2:127-128
رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ
"ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!" 2:201
No comments:
Post a Comment