Sunday, 14 February 2016

சிறந்த காண்காட்சியாக நாக்கு - இராண்டாவது பரிசாக தேர்ந்தெடுக்கபட்டு எனக்கு சான்றிதழ்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்லாஹ்வின் கிருபையால் துபை அல்மனார் சென்டர் அல்கூஸ் தமிழ் தாவா பிரிவின் மூலமாக அல்குர்ஆன் மாநாடு பிப்ரவரி 4, 5, 6, -2016 மூன்று நாள் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கண்காட்சிகள் (Exhibition) நடை பெற்றது.
இதில் சிறந்த காண்காட்சியாக நாக்கு என்ற தலைப்பின் கீழ் வைக்கபெற்ற என்னுடைய கண்காட்சி இராண்டாவது பரிசாக தேர்ந்தெடுக்கபட்டு எனக்கு சான்றிதழ் வழங்கபட்டது
அமீரகம் தழுவிய நடைபெற்ற இந்த கண்காட்சிகளில் என்னை இராண்டாவதாக தேர்ந்தெடுத்து துபை அவ்காப் மூலமாக முபாரக் மதனி, முப்தி உமர் காஸிம், காயல்பட்டிணம் ஆயிஷா சித்திகா கல்லூரியின் முதல்வர் அப்துல் மஜித் மஹ்லரி, மெளலவி அப்துல் பாசித் புகாரி, அல்ம னார் தமிழ் தாவா குழுவின் தலைவரரும் துபை இஸ்லாமிய வங்கியின் வைஸ் சேர்மானுமாகிய அமீர் ஜாபர் ஆகியோர்களின் முன்னிலையில் சிறந்த இராண்டாவது அமீரகம் தழுவிய கண்காட்சிக்கான சான்றிதழ் எனக்கு வழங்கபட்டது.
எல்லாப்புகழும் இறைவனுக்கே! Regards A.S.Ibrahim Dubai

பெரும்பாலானோருக்கு பொழுது போக்கே

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்றைய உலகில் பெரும்பாலானோருக்கு பொழுது போக்கே மற்றவர்களை பற்றி புறம், அவதூறு பேசுவதுதான்..
அதுவும் வாட்ஸ் அப், முகநூல் போன்ற சமூகவலைதளங்கள் மூலம் அவர்களுடைய வேலை எளிதாகிவிட்டது என்றே கூறலாம்.
ஆனால் இது போன்று புறம்பேசும் செயலை இஸ்லாம் தடுத்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.."மற்றவர்களின் குறைகளை ஆராயாதீர்கள், யார் மற்றவர்களுடைய குறையை தேடி திரிகிறார்களோ, அவர்களுடைய குறையை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிப்பான், பின்னர் அவர்கள் தமது வீட்டில் செய்யும் குறைகளை பகிரங்கமாக்கி அவர்களை இழிவுப்படுத்திவிடுவான் -நூல்:அஹ்மத்.
இந்த கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் சகோதரர் Khaja Mydeenபுறம் என்னும் குறும்படத்தை அருமை சகோதரர்.Hussain Bashaவை வைத்து இயக்கியுள்ளார். ஐந்து நிமிடங்கள் ஓடும் இக்குறும்படம், புறம் பேசுவது பற்றி இஸ்லாம் கூறும் தகவல்களை நமக்கு தருகிறது.
கோவையில் நடந்த வெளியீட்டு விழாவில் அனைவரின் பாராட்டையும் பெற்றது.
இதற்காக உழைத்த
இக்குறும்படக்குழுவினருக்கும், தயாரிக்க உதவிய AS Ibrahim Mbaஅவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்...
காட்சிகளும்,வசனங்களும் குறைவாக இருந்தாலும், மற்றவர்களை பற்றி புறம் பேச என்னும் போது அந்த‌" அறை" மட்டும், ஒவ்வொரு முறையும் மனதில் தோன்றும் என்பதில் ஐயமில்லை...


புறம்' குறும்படம் (Must Watch & Share) சமாதானக் கலைவிழாவில் திரையிடப்பட்டு மக்களின் பாராட்டுதலைப் பெற்ற குறும்படம்
YOUTU.BE

புறம் என்ற குறும்படம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த புறம் என்ற குறும்படம் மக்களுடைய விழிப்புணர்வுக்காக, பரமக்குடி அன்னை ஆயிஷா டிரஸ்டின் தயாரிப்பில் முதன் முதலாக வெளியிடபட்ட குறும்படம்.இன்ஷா அல்லாஹ் இதனைபார்த்து அனைவரும் பயன் பெறவும்.புறம் என்ற மோசமான பாவத்தை சமூகத்தில் இருந்து ஒழிப்பதே இதனுடைய நோக்கமாக இருக்கிறது.
புறம்' குறும்படம் (Must Watch & Share) சமாதானக் கலைவிழாவில் திரையிடப்பட்டு மக்களின் பாராட்டுதலைப் பெற்ற குறும்படம்
YOUTU.BE