அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
|
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களின் முழு விவரங்களையும் இணையதளத்தில் வெளியிடும் வகையில், புதிய வலைதளம் ஒன்றை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
நாட்டின் 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு `தேசப் பாது காப்புக்கு மேற்கொள்ளப்பட்டி ருக்கும் நடவடிக்கைகள்' என்ற தலைப்பில், அவர் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களின் முழு விவரங்களை யும் இணையத்தில் பதிவேற்ற உள்ளோம். அதற்காக `க்ரைம்ஸ் அண்ட் கிரிமினல்ஸ் டிராக்கிங் நெட் வொர்க் சிஸ்டம்ஸ் (சிசிடிஎன்எஸ்) பிராஜெக்ட்' திட்டத்தின் கீழ் புதிய வலைதளம் ஒன்றை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
இதில் நாடு முழுவதும் உள்ள பாலியல் குற்றவாளிகளின் விவரங் கள் வெளியிடப்படும். அதனை வைத்து பெண்களின் பெற்றோர், வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் போன்றவர்கள், ஒரு நபரின் நடத்தையைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும்.
தவிர, இந்த வலைதளத்தில் தீவிரமாகத் தேடப்படும் குற்ற வாளிகள், காணாமல் போனவர் கள், ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் ஆகியோர் பற்றியும் தகவல்கள் பதிவு செய்யப்படும்.
மேலும், உள்துறை அமைச்சகத் தின் `சென்ட்ரல் சிட்டிசன் போர்ட்டல்' வலைதளத்தின் மூல மாக புகார் அளித்தல், பாஸ்போர்ட் சரிபார்த்தல் மற்றும் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண நிதி பெறுதல் போன்ற சேவைகளும் வழங்கப்பட உள்ளன.
பெண்களின் பாதுகாப்புதான் எனது முன்னுரிமை. இந்த ஆண்டு ஜனவரி மாதம் டெல்லி போலீஸ் `ஹிம்மத்' என்ற செயலியை (ஆப்) அறிமுகப்படுத்தியது. அதனை தன் கைப்பேசியில் தரவிறக்கம் செய்துகொண்டு ஒரு பெண், ஆபத்தான சூழ்நிலையில் இருக் கும்போது அதனைப் பயன்படுத் தினால் உடனே அந்த இடத்துக்கு 5 அல்லது 7 நிமிடங்களுக்குள் போலீ ஸார் உதவிக்கு வருவர்.இதே போல தேசிய அளவிலான ஒரு திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளன. இதற்காக தொலைத் தொடர்பு துறை ஏற்கெனவே `112' என்ற எண்ணை வழங்கியுள்ளது.
இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தவுடன் இந்த எண்ணுக்கு லேண்ட்லைன், கைப்பேசி, குறுஞ் செய்தி, மின்னஞ்சல், வாட்ஸ் ஆப் எனப் பல வழிகளிலும் தொடர்பு கொள்ள முடியும். உடனே பாதுகாப் புக்கு போலீஸார் வருவர்.
ஒரு நாளில் சுமார் 10 லட்சம் அழைப்புகளை ஏற்றுக்கொள்ளும் அளவில் இந்தத் திட்டம் வடி வமைக்கப்பட்டுள்ளது. அவற்றை நிர்வகிக்க 3,500 ஊழியர்கள் நிய மிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.