அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
அஸ்ஸலாமு அலைக்கும்,
காமராஜரைக் கொல்ல முயற்சி என்ற தலைப்பில் திருவாளர் கே.சி. லட்சுமிநாராயண அய்யர் துக்ளக் இதழில் (27.7.2011) கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
இதனை நினைத்தால் விலா நோக சிரிப்புதான் வந்து தொலைக்கிறது.
இதே காமராசரை, அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின்தலைவராக இருந்த பச்சைத் தமிழரை பசுவதைத் தடுப்பு என்ற பெயரால் இந்தியாவின் தலை நகரமான டில்லியில் (7.11.1966) உயிரோடு கொளுத்தி அவர் உயிரை ஏப்பம் விடலாம் என்று கருதிய கொலைகாரக் கூட்டமா இந்தக் குற்றச்சாற்றை முன் வைப்பது?
ஆர்.எஸ்.எஸ். குண்டர்களும் ஜனசங்கப் பேர் வழிகளும், நிர்வாண சாமியார்களும், சங்கராச்சாரியார்களும் (பூரி சங்கராச்சாரியார், ஜோசிமடத்து சங்கராச்சாரியர்) லட்சக்கணக்கில் திரண்டு நின்று காட்டு விலங்காண்டித் தனமாக வெறியாட்டம் போட வில்லையா?
நரகத்தின் வேட்டை நாய்கள் கட்டவிழ்த்து விடப்பட்டனவோ வென்று பிளட்ஸ் எழுதியது. டில்லியில் சாதுக்கள் நடத்திய போர்க்களத்தை விரைந்து சென்று பார்த்த பத்திரிகை யாளர்களுக்கு நரகத்தின் வேட்டை நாய்கள் கட்டவிழ்த்து விடப்பட் டனவோ என்று எண்ணும் வகையில் வளைந்து உடைந்த திரிசூலங்களும், தீஜ்வாலைகளும், ஏராளமான மலைப் பிஞ்சுகளும், எரிந்த கட்டடங்களையும் கார்களையும் ஏன், மனிதர்களையும்கூட கொளுத்திய காட்சிகளே பார்லி மென்டிற்கு முன்பும், அதன் அருகாமை யிலும் தென்பட்டன என்று பிளிட்ஸ் எழுதியது. திட்டமிட்ட தாக்குதல் என்று இந்துவின் டில்லி நிருபர் எழுதினார்.
பார்ப்பன ஃபாசிஸ்டுகளின் கோரக் கூத்து! என்று லிங்க் படம் பிடித்துக் காட்டியது.
வங்கிகளும், மருத்துவமனைகளும் கூட தாக்குதலுக்குத் தப்பிப் பிழைக்க வில்லை.
வெளியூர்களிலிருந்து திரண்டு வந்த மக்கள் வெள்ளத்தால் எங்கே டில்லி நகரமே அடித்துச் செல்லப்பட்டு விடுமோ என்பதுபோல் தோன்றியது கோமாதாக்கி ஜெ என்று இரண்டரை லட்சம் மக்கள் தெருக்களில் ஊர்வல மாக முழங்கிக் கொண்டே சென்றனர் என்கிறது பம்பாயின் கரண்ட் இதழ்.
இந்தக் கொலை வெறி வன் முறையைக் கண்டித்து மக்கள் மத்தியில் ஆரோக்கியமான மனித உணர்வை அந்தக் கால கட்டத்தில் வளர்த்தது திராவிடர் கழகமும் தந்தை பெரியாரும் தான்.
காமராஜர் கொலை முயற்சி சரித்திரம் என்ற நூலை வெளியிட்டு, வன்முறைக் கும்பலின் முகத்திரையைக் கிழித்த எங்களைப் பார்த்தா வன் முறையாளர்கள் என்று சொல்லுவது, வெட்கம்! வெட்கம்!! மகா வெட்கம்!!!
தமிழ்நாட்டில் ஒரு கறுப்புக் காக்கை இருக்கிறது. அதைக் கல்லால் அடிக்க வேண்டும் என்று காமராஜரை ஜாடை காட்டி ஆச்சாரியார் ராஜாஜி சென்னை கடற்கரையில் முழங்கினாரே - என்ன அர்த்தம்?
வன்முறை என்பது துக்ளக் உள்ளிட்ட இந்துத்துவா கும்பலுக்கு உடன் பிறந்த நோயாயிற்றே! கீதையின் சுலோகத்தை எடுத் துக்காட்டி தானே நாதுராம் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பான் அகிம்சைவாதியான காந்தியாரையே சுட்டுக் கொன்றான்.
- கலி.பூங்குன்றன் நன்றி - விடுதலை நாளிதழ்

No comments:
Post a Comment