அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
ஆமதா பாத்தில் உண்ணா விரதம் இருந்த இந்துத்துவா சக்தி களின் சின்னம் நரேந்திர மோடிக்கு அ.தி.மு.க. எம்.பி.க் கள் மாலை அணி வித்தனர். அந்தப் புனிதரின் மூன்று நாள் உண்ணா விரதத்திலும் பங்கு கொண்டு வாழ்த்தினர். அய்யாவின் பெய ரைச் சொல்லாது அண் ணாவின் நாமத்தை உச்ச ரிக்காது இங்கே திராவிட இயக்க அரசியல் நடத்த முடியாது. ஆகவே வெண்தாடி வேந்தனின் சிலைக்கு ஒரு மாலை. அதே சமயத்தில் இன்றைய அ.தி.மு.க. என் பது இந்துத்துவாக்களின் மெய்யான நேச சக்தி என்பதனை இந்தியாவிற்கு எடுத்துக்காட்ட ஆமதா பாத் உண்ணாவிரதத்தில் பங்கேற்பு. நேசிப்பை வைத்து அரசியல் நடத்த முடியாது. வெறுப்பை விதைத்து தான் இந்துத்துவா அர சியலை வெற்றிகரமாக நடத்த முடியும் என்ப தற்கு எடுத்துக்காட்டு நரேந்திர மோடிதான். 2002-ஆம் ஆண்டு அவ ருடைய ஆசியோடு சிறுபான்மை இன மக்கள் மூவாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். ரொட்டி சுட விறகை எரிப்பதற்குப் பதிலாக இஸ்லாமிய இளைஞர்கள் பத்து பேர்களைக் கட்டி பேக்கரி அடுப்பில் போட்டு எரித்தனர். தாய்மையுற்ற இஸ்லாமிய சகோதரிகளின் வயிறுகள் கிழிக்கப்பட்டன. கண் திறக்காத பிஞ்சுக் குழந்தைகளை எடுத்து சூலாயுதத்தில் குத்தி இந்துத்துவா சக்திகள் வெறியாட்டம் ஆடின. நூற்றுக்கணக்கான இஸ்லாமியக் குடியிருப்புகள் லங்கா தகனம் செய்யப்பட்டன. உங்கள் விருப்பம்போல சிறுபான்மை இன மக்களை வேட்டையாடிக்கொள்ளுங்கள் என்று இந்துத்துவா சக்திகளுக்கு நரேந்திர மோடி ஒருநாள் சுதந்திரம் அளித்தார். அந்த அநீதி அக்கிரமங்கள் அனைத்தும் விசாரணையில் அம்பலத்திற்கு வந்தன. இன்றைக்கும் அங்கே சிறுபான்மை மக்கள் அச்சத்தில்தான் வாழ்கிறார்கள். 2002-ஆம் ஆண்டு இந்துத்துவா சக்திகள் நடத்திய மனிதப் படுகொலைகள் முதல்வர் நரேந்திர மோடியின் ஆசிர்வாதத்தோடுதான் அரங்கேறின என்பதனை காவல்துறை அதிகாரி ஸ்ரீகுமார் அம்பலப் படுத்தினார். அதனால் அவர் தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதனை எதிர்த்து இப்போது அவர் நீதிமன்றத்தில் போராடிக்கொண்டிருக் கிறார். காவித் தீவிரவாதிகள் எப்படியெல்லாம் சிறுபான்மை மக்களைப் பலி கொண்டார்கள்- அதனைத் தடுக்க முடியாமல் எப்படியெல்லாம் தங்கள் கரங்கள் கட்டப்பட்டன என்பதனை சஞ்சீவ் பட், ராகுல் சர்மா, ராஜ்னிஷ்ராஜ் ஆகிய ஐ.பி.எஸ். காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் அரசுக்கு எதிராகச் செயல்படுகிறவர்கள் என்று சித்தரிக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார்கள். இப்படி ரத்தக்குளியல் நடத்திய நரேந்திர மோடி இன்றைக்குக் குற்றமற்றவராக ஆகிவிட் டாராம். அதனால் அவருக்கு அத்வானி முதல் அனைத்து பி.ஜே.பி. தலைவர்களும் வாழ்த்துக் கூறினர். அவர்களோடு அ.தி.மு.க., அகாலிதள நேச சக்தித் தலைவர்களும் மலர்க்கிரீடம் அணிவித்தனர். ஆமாம்! இன்றைக்கும் மனித வாடை வீசும் மோடி எப்படி புனிதரானாராம்? 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடத்தப்பட்ட இந்துத்துவா வெறியாட்டத்தின்போது நாடாளு மன்ற காங்கிரஸ் உறுப்பினர் இஹ்சான் ஜாப்ரி உயிரோடு கொளுத்தப்பட்டார். டயரைக் கொளுத்தி அதனை அவருடைய கழுத்தில் மாட்டிக் கொடூர மாகக் கொலை செய்தார்கள். நரேந்திர மோடி ஆட்சியில் நரவேட்டை எத்தகைய உச்சத்தை எட்டியது என்பதற்கு இந்த மாபாதகச் செயலே எடுத்துக்காட் டாகும். அந்த அளவிற்கு நரேந்திர மோடியின் ஆட்சி அசுரத்தனமான ஆட்சியாக இருந்தது. தனது கணவரின் படுகொலைக்கு குஜராத்தில் நீதி கிடைக்காது என்று உயிரோடு எரிக்கப்பட்ட இஹ்சான் ஜாப்ரியின் துணைவியார் டெல்லி உச்சநீதிமன்றத்தை நாடினார். அந்த நீதிமன்றம் என்ன சொன்னது? நரேந்திர மோடி தும்பைப் பூப்போன்று தூய்மையானவர் என்றா தீர்ப்பளித்தது? அல்லது அவர் ரத்தவாடை காணாத சன்மார்க்க சொரூபி என்றா தீர்ப்பளித்தது? இல்லை. "அம்மா, நாங்கள் கீழ் நீதிமன்றத்தின் உரிமை யை எடுத்துக்கொள்ள முடியாது. ஆகவே முதலில் ஆமதாபாத் விசாரணை நீதிமன்றத்தில் வழக்குத் தொடருங்கள். அதன் பின்னர் அவசியம் என்றால் உச்சநீதிமன்றத்தை நாடுங்கள்' என்றுதான் தீர்ப் பளித்தது. இதனைத்தான் நரேந்திரமோடிக்கு வெற்றி வெற்றி என்று பி.ஜே.பி. பெரும் டமாரம் அடித்தது. செய்திப் பஞ்சத்தில் அடிபட்டிருக்கும் தொலைக் காட்சிகளும் ஏடுகளும் ஆடம்பர அமர்க்களமாக அந்தச் செய்தியைத்தான் சீவி சிங்காரித்து வெளியிட்டன. விடிந்தால் எத்தனை கோழிகள் கிடைக்கும் என்று உறக்கத்தில் நரி எண்ணிக்கொண்டி ருக்குமாம். அதேபோல டெல்லி அரியணையில் அமர இன்னும் எவ்வளவு காலம் என்று நரேந்திர மோடி எண்ணிக்கொண்டிருக்கிறார். அதே சமயத்தில் அவர் உண்ணாவிரதம் இருந்த குளுகுளு மண்டபத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் 2002-ஆம் ஆண்டு கலவரத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். "அன்றைய கலவரங் களில் சொத்து சுகங்களை இழந்த எங்களுக்கு இன்றுவரை எந்த விடிவும் ஏற்படவில்லை. இந்த நிலையில் குஜராத்தில் அமைதி காக்க உண்ணாவிரதம் என்று நரேந்திர மோடி நாடகம் ஆட வேண்டாம்' என்று அவர்கள் முழக்க மிட்டனர். பாதிக்கப்பட்டு பரிதவித்த மக்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்களை நரேந்திர மோடி எப்படியெல்லாம் விலை கொடுத்து வாங்க முயற்சித்தார் என்பதனை சமூக ஆர்வலர்கள் அம்பலப்படுத்தினர். அவர்கள் கைது செய்யப் பட்டனர். உயிரோடு கொளுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் துணைவியார் ஏன் உச்சநீதி மன்றத்தை நாடினார்? நரேந்திர மோடிக்கு எதிராக பி.ஜே.பி.யி லேயே உருவான இன்னொரு தலைவர் ஹரேன் பாண்டியா. நியாயமாக அவர்தான் குஜராத் முதல்வராக முடி சூடியிருக்க வேண்டும். ஆனாலும் அவர் மோடி அமைச்சரவையில் உள்துறை அமைச்சரானார். நடைபயிற்சிக்குக் காலையில் சென்ற அவர் பட்டப்பகலிலேயே படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலைக்குக் காரணம் நரேந்திர மோடிதான் என்று இன்றைக்கும் ஹரேன் பாண்டியாவின் துணைவியார் பகிரங்கமாகக் குற்றம்சாட்டுகிறார். ஹரேன் பாண்டியா படுகொலை வழக்கு ஆமதாபாத் விசாரணை மன்றத்தில் நடை பெற்றது. குற்றச்சாட்டு மெய்ப்பிக்கப்படவில்லை என்று அனைவரும் விடுதலை செய்யப் பட்டனர். உள்துறை அமைச்சரின் படுகொலைக்குத் தண்டனை வாங்கித் தரமுடியாத மோடியிடம் தாங்கள் எப்படி நியாயத்தை எதிர்பார்க்க முடியும் என்று கொலையுண்ட நாடாளுமன்ற உறுப்பினரின் துணைவியார் கேட்கிறார். அதனால்தான் அன்றே அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார். தற்போது மோடி நடத்திய உண்ணாவிரத நாடகத்தில் பங்கேற்க ஹரேன் பாண்டியாவின் துணைவியாரை அழைத்தனர். அவர் மறுத்துவிட்டார். தான் நிரபராதி என்பதனை நிரூபிக்க இப்படி நரேந்திர மோடி படாதபாடு படுகிறார். ஆனால் நியாயங்கள் அவருக்கு கை கொடுக்க மறுக்கின்றன. செல்வி ஜெயலலிதா ஒளிவு மறைவற்ற அரசியல் தலைவர். தனக்குச் சரி என்று பட்டதைத் துணிச்சலாகச் சொல்லுவார். அவருடைய அரசியல் பயணத்தை அறிந்தவர்கள் அந்த உண்மையை அறிவார்கள். பாபர் மசூதி இடிக்கப்பட்டதை வரவேற்று தேசிய ஒருமைப்பாட்டுக் குழு கூட்டத்திலேயே முழங்கியவர் செல்வி ஜெயலலிதா. எங்களால்கூட இடிப்பிற்கு ஆதரவாக இவ்வளவு வலிமையாக வாதாட முடியாது என்று அத்வானி பாராட்டினார். அப்போதே அ.தி.மு.கழகம் தங்கள் நேச சக்தி என்பதனை இந்துத்துவா சக்திகள் அறிந்துகொண்டன. அம்மாவின் ஆட்சிக்கு ஆர்.எஸ்.எஸ். தலைமை ஆசிர்வாதம் வழங்கியது. ராமருக்கு எங்கே கோயில் கட்டுவது என்று விவாதம் எழுந்தபோதும் செல்வி ஜெயலலிதா தமது கருத்தை தெளிவாகச் சொன்னார். இடிக்கப்பட்ட பாபர் மசூதி அருகே ராமருக்கு கோயில் கட்டாமல் இத்தாலியிலா கட்டுவார்கள் என்று கேட்டார். பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களே கொண்டுவரத் தயங்கிய ஒரு சட்டத்தை அவர் அவசர சட்டமாகவே கொண்டுவந்தார். அதுதான் மதமாற்றத் தடைச் சட்டமாகும். அந்தச் சட்டத்தினை உடனடியாக பி.ஜே.பி. சங்பரிவாரங்கள் ஆகிய அனைத்து அமைப்புகளும் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு வரவேற்றன. அப்போது தேவாலயங்களைக் கொளுத்துவது, பாதிரியார்களை உயிரோடு எரிப்பது போன்ற காரியங் களில் அந்தப் பரிவாரங்கள் ஆனந்தமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தன. இந்து ஆலயங்களில் அன்னதான திட்டத்தை அப்போதே அவர் துவக்கினார். இப்போது அந்த திட்டத்தை விரிவுபடுத்தி நிறைவு செய்துகொண்டிருக்கிறார். சிறுபான்மை இன மக்கள் மூவாயிரம் பேர்களை பலிகொண்டு அதன்பின்னர் நரேந்திர மோடி முதல்வராக முடி சூட்டிக்கொண்டார். அவருடைய முடிசூட்டு விழாவில் செல்வி ஜெயலலிதா கலந்து கொண்டார். இப்போது செல்வி ஜெயலலிதாவின் முடிசூட்டு விழா விற்கு நரேந்திர மோடி வருகை தந்ததும் பசுமையாக இருக்கும். இவைகளெல்லாம் தற்செயலான நட்புறவான நடவடிக்கைகள் அல்ல, இந்துத்துவா சித்தாந்த அடிப்படையில் உருவாகிற அரசியல் உறவுகளாகும். சுருங்கச் சொன்னால் அமரர் எம்.ஜி. ஆருக்குப் பின்னர் திராவிட இயக்க அரசியல் என்பது தீய்ந்து போய் விட்டது. அதன்பின்னர் அ.தி.மு.கழகம் என்பது இந்துத்துவா அடித்தளத்திலிருந்துதான் பரிணாம வளர்ச்சி பெற்று வருகிறது. எனவே செல்வி ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில் தமது அரசியல் நிலையில் எப்போதும் தெளிவாகவும் இருக்கிறார். உறுதி யாகவும் இருக்கிறார். அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் பி.ஜே.பி. ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உருவானால் அதற்கு ஆதரவு தேவைப்பட்டால் அதற்கு அ.தி.மு.க. துணை நிற்கும். ஏற்கனவே வாஜ்பாய் தலைமையில் பி.ஜே.பி. ஆட்சி அமைந்தபோது அதன் அமைச்சரவையிலேயே அ.தி. மு.க. அங்கம் பெற்றது. இந்தியாவின் பிரதமராக சோனியாவோ, ராகுலோ அரியணை ஏறுவதை இந்துத்துவா சக்திகள் விரும் பாது. அதனைவிட அ.தி.மு.க. விரும் பாது. எனவே அகில இந்திய அரசிய லில் இந்துத்துவா சக்திகள்தான் அ.தி.மு.க.வின் நேச சக்தியாக இயல் பாய் இருக்க முடியும். |
No comments:
Post a Comment