Sunday, 19 June 2011

ஏமன் நாட்டை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்கள் கவனத்திற்கு!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,



அரேபியா வளைகுடாவின் தென்கோடியில் உள்ள ஏமன் நாட்டில் தற்போது உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்தியர்கள் உட்பட பல நாட்டவர் ஏமனில் பணிபுரிந்து வருகின்றனர்.
ஏமன் நாட்டு அதிபர் தற்போது சவுதி அரேபியா நாட்டிற்கு சென்றுவிட்டதால் , தெளிவற்ற சூழல் நிலவி வருகிறது. ஆகவே முன் எச்சரிக்கையாக ஏமன் நாட்டை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்கள் ஜூன் 18 க்குள் ஏமன் நாட்டு தலைநகர் சனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறு பதிவு செய்வோரை இந்திய அழைத்துவரும் பொறுப்பை இந்திய தூதரகம் மற்றும் இந்திய வெளிநாட்டு அமைச்சகம் ஏற்றுக்கொள்ளும்.
ஏமன் நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு உதவுவதற்கு என கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது.
புது டில்லியில்...

Ministry of External Affairs,
(Timing 1000 to 1800 hrs daily),
Email: controlroom@mea.gov.in
Tel: +91 11 2301 5300 & +91 11 2301 2113
Fax: +91 11 2301 8158
சனாவில்...

Embassy of India, Sana’a, Yemen
Landline: + 967 1425 308
Cell: +967 734 000 657

No comments:

Post a Comment