தாமரை மலர்
வாய் மலரச் சிரித்தாள்
பூவுக்கு மட்டுமா அழகு இதழுண்டு
இந்தப் பூவைக்கும் அவையுண்டு
இவள் கண் அழகு
கன்னக் குழியழகு
இவள் என்னே அழகு
ஆடையிற் பட்டால் சீ என அருவருக்கும்
அற்ப இந்திரியத்திலிருந்து அழகான மனிதனை
நாம் படைக்கிறோம் என்ற இறைவனின்
வசனத்திற்கு இவளோர் சாட்சி
அழுக்கிலிருந்து அழகைப் படைக்கும் இறைவனவன்
விந்தையை சிந்தனைச் செய்ய இவளோர் காட்சி
மகள் இல்லா வீடு மலரில்லாக் காடு
எத்தனைப் பெண் குழந்தையென்றாலும் இனிமையன்றோ
அத்தனையும் ஆணென்றால் வீடு வெறுமையன்றோ
மூன்று பெண் குழந்தைகளிலிருந்து அவர்களை
முஸ்லிமாய் முறையாய் வளர்த்தவரும்
இரண்டு பெண் குழந்தைகளிலிருந்து
அவர்களை இஸ்லாத்தில் வளர்த்தவரும்
என்னோடு இவ்வாறு சொர்கத்தில் இருப்பார் என
இரு விரலை இணைத்து காட்டிய இறுதி நபியின்
வார்த்தைகளை நினைவில் இருத்துவோம்
பெண் மக்களை இஸ்லாத்தில் செலுத்துவோம்
பெற்றோரைப் பெருமானாரோடு சொர்கத்தில் சேர்க்கும்
கிருபை படைத்தவள் பெண் ம(க்)கள்
பெண் மகள் இம்மையில் சொர்க்கம்
மறுமையில் சொர்க்கம் சேர்க்கும்
ஆண் குழந்தை வாரிசு – சொர்க்கம் செல்ல
பெண் குழந்தை சிபாரிசு
சாரல் சுமக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின்
ஈர்க்கும் தென்றல் மென்மையோடு இவள்
பார்க்கும் பார்வையில் புன்முறுவலில்
எனைத் தொலைத்ததால் எழுந்த எண்ணத்தூறல்கள் இவை
-கமால்-
No comments:
Post a Comment