Sunday, 14 March 2021

அதிமுக-பாஜக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும். ஏன்?

அதிமுக-பாஜக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும். ஏன்?

1. பல மாநிலங்களிலும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக பயன்படுத்தப்படும்  பணம் யாருடையது?

2. ரபேல் ஆவணங்கள் அனைத்தும்
ஏன் மாயமாகின?

3. பாஜகவை கேள்வி கேட்கும் நீதிபதிகள் மீது மட்டுமே பாலியல் பலாத்காரப் புகார்களும், கொலை மிரட்டல்களும் வருவதும், கொலை செய்யப்படுவதும் ஏன்?

3. மோடியை முன்னிறுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 10,000 கோடி பணம் யாருடையது?

4.பத்தாயிரம் கோடிகளை ஒரு கட்சிக்கு வாரி வழங்க முன்வந்த பணக்காரர்கள் தேவை என்ன?

5. அத்தனை ஊழல்வாதிகளும் பாஜகவில் இணைந்தவுடன் பரிசுத்தமாவது எப்படி?

6. எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டுக் கூறியவுடன், பாஜக மீது குற்றம் கூறியவர்கள் மீது மட்டும் வருமான வரித்துறை அமலாக்கத்துறை சோதனைகள் பாய்ந்து பாய்ந்து நடப்பது ஏன்? 

7.குற்றச்சாட்டுகள் கூறியவர் அமைதியானவுடன் அந்த வழக்குகளும் அமைதியாவது எப்படி?

8 பாஜக ஆட்சிக்கு வருவதற்கு மிக முக்கியமான காரணமான 2ஜி வழக்கு ஏன் மேல் முறயீடு செய்யப்படவில்லை? அதை ஜோடித்த வினோத் ராய்க்கு ஓய்வு பெற்ற பின்னர் பாஜக அரசிலேயே பதவி வழங்கியது ஏன்?

9. வெளிநாடுகளில் பதுக்கியதாகச் சொல்லப்பட்ட பல லட்சம் கோடி கருப்பு பணத்தில் இதுவரை ஏன் ஒரு பைசா கூட மீட்கப்படவில்லை?

10. குறைந்த பட்சம் கருப்புப் பணம் பதுக்கியவர் பட்டியலைக் கூட வெளியிட முடியவில்லையே ஏன்? 

11. பாஜக ஆட்சிக்கு வரும்வரை கருப்புப் பணமாக இருந்தவை, பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டுப் பணமாக மாறும் மர்மம் என்ன? 

12 ஏன் நாட்டின் பாதுகாப்புத் துறை உட்பட அத்தனை துறைகளும் தனியாருக்கு விற்கப்படுகின்றன? ராணுவம் என்பது தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டது இல்லையா ? 

13. கடந்த தேர்தலில் கைப்பற்றபட்ட 3 கண்டெய்னர் பணம் யாருடையது என்பதை ஏன் வெளிப்படையாக இதுவரை அறிவிக்க முடியவில்லை? 

14.பத்திரிக்கைகளில் இவ்வளவு வெட்டவெளிச்சமான கண்டெயினர்களின் கதியே இதுவென்றால் தெரியாமல் கைமாறிய கண்டெயினர்களின் எண்ணிக்கை என்ன?

15. மோடி பல்லாயிரம் கோடி அரசுப் பணத்தை செலவழித்து வெளிநாடுகளுக்குச் செல்வது முதலீடுகளை ஈர்க்கத்தான் என்றால், ஏன் இதுவரை ஒரு பைசா கூட வெளிநாட்டு முதலீடு இந்தியாவிற்கு வரவில்லை?

16. மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் அவரோடு செல்லும் தொழிலதிபர்கள் மட்டும் வெளிநாடுகளில் பல லட்சம் கோடிகள் முதலீடு செய்வது எப்படி?

17. மோடியின் வெளிநாட்டுப் பணம் இந்தியாவிற்கு முதலீடுகளைக் கொண்டு வரவா? அல்லது அவரது நண்பர்கள் மட்டும் வெளிநாடுகளில் முதலீடு செய்ய முகவராகச் செல்கிறாரா? அவரது நண்பர்கள் உள்நாட்டு இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடிகள் வாங்கி வெளிநாடுகளில் முதல் செய்து, கடனை அடைக்காமல் கைவிட்டு, அதை மோடி அரசு தள்ளுபடி செய்தது எப்படி ? 

18 இந்தியாவின் முக்கிய ஊழல்வாதியாக கூறப்பட்டு தண்டனை அனுபவிக்கும் லாலுவின் காலத்தில் நல்ல லாபத்தில் இயங்கிய ரயில்வே, தனியாருக்கு விற்கும் அளவிற்கு நஷ்டம் அடைந்து எப்படி? இன்று ரிலையன்ஸூக்கும், அதானிக்கும் விற்கப்படுவது எப்படி ? அரசு ஏர்ப்போர்ட்டுகளும், துறைமுகங்களும் இன்று அதானி ஏர்ப்போர்ட்டுகளும், துறைமுகங்களுமாக மாறியது எப்படி ?

19. பெட்ரோல் மீதான 300 சதவீத இலாபம் அரசுக்கு மட்டுமே என்றால், இன்னமும் 50 சதவீதத்திற்கு மேலான பெட்ரோல் தனியார் வசம் இருப்பது ஏன்? அந்த லாபங்கள் மக்களுக்கு என்னவாக செலவிடப்பட்டிருக்கின்றன ?

20. தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து 15 ஆண்டுகள் கடந்த பின்னரும் டோல் கட்டணம் வசூலிக்க தனியாருக்கு தொடர்ந்து அனுமதி வழங்குவது ஏன்? இந்த ஆண்டு கட்டணத்தை உயர்த்தவும் செய்திருக்கிறார்கள். பாஸ்டேக் என்று ஆன்லைன் கொள்ளையடிப்பதை கட்டாயமாக்கியிருக்கிறார்கள். யாரிடம் அனுமதி கேட்டார்கள் ?

21. யாரிடமும் கொடுக்காமல் மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளிக்கப்பட்டு பெறப்பட்ட ஆதார் தகவல்கள் ரிலையன்சின் ஜியோ நிறுவனத்திற்கு முழுவதுமாக வழங்கப்பட்ட காரணம் என்ன?

22. ஏழை விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படாத கடன்கள், பெருநிறுவனங்களுக்கு மட்டும் பல்லாயிரக் கணக்கான கோடிகள் தள்ளுபடி செய்யப்படுவதன் மர்மம் என்ன?

23. பல்லாயிரம் கோடிகள் உபரிபணம் இருக்கும் எல்ஐசி பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் காரணம் என்ன? எல்ஐசியில் எந்த விதமான நஷ்டம் ஏற்பட்டது? இதேபோல பல்லாயிரம் கோடி மதிப்புள்ள பொதுத்துறை நிறுவனங்கள் சில நூறு கோடி ரூபாய்களுக்கு தனியாரிடம் விற்கப்படும் மர்மம் என்ன ? இதன் பின்னுள்ள பொருளாதார அறிவு என்ன ?

24. மாநிலங்களின் GST பங்குகள் எங்கே மாயமானது? ஏன் தர மறுக்கிறீர்கள்?

25. கொள்ளையர்கள், ரவுடிகள் தொடர்ந்து பாஜகவில் இணைந்து வருகிறார்களே ஏன் ?ரவுடிகளின், கற்பழிப்பு காவாளிகளின் கடைசி புகலிடம் பாஜகதானா?

பாஜக ஆறு ஆண்டு ஆட்சியின் அவலங்களின் தொகுப்பு

1-பெட்ரோல் / டீசல் வரி 300% உயர்வு
2-மருந்து பொருள் விலை உயர்வு
3-ரயில் கட்டண விலை உயர்வு
4-கேஸ் விலை உயர்வு
5-புதிய வரிகள்
6-பெரு முதலாளிகளின் வாராக்கடன்
7-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்
8-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்
9-ரூபாயின் மதிப்பு
10- மோடி வெளிநாட்டு பயணங்கள்

11- வெளியுறவு கொள்கை
12- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்
13- உதய் மின்திட்டம்
14- தமிழ்நாடு வறட்சி நிவாரணம்
15- தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம்
16- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு
17- அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு
18- ராணுவத்திற்காண உணவில் முறைகேடு
19- சீனபட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு
20- பலுசிஸ்தான் தலையீடு

21- இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள்
22- பென்சன் வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள்
23- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்
24-ஜி.டி.பி குளறுபடி
25-புதிய வங்கி கட்டணங்கள்
-ஆதார்
26-அந்நிய நேரடி முதலீடு
27-தூய்மை இந்தியா திட்டம்
28-மேக் இன் இந்தியா
29-டிஜிட்டல் இந்திய திட்டம்
30-அணு உலை

31-புல்லட் ரயில்
31-நில கையகப்படுத்தும் மசோதா
33-ஸ்மார்ட் சிட்டி
34-ஹிந்தி திணிப்பு
35-காவேரி நீர்மேலாண்மை ஆணையம்
36-நீதிபதிகள் நியமனம் தாமதம்
37-ஜி.எஸ்.டி
38-சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்
39-IT ஊழியர்கள் பணி நீக்கம் 
40-காஷ்மீர் தொடர் கிளர்ச்சி - பெல்லட் குண்டு

41-கல்புர்கி கொலை
42-ரோஹித் வெமுலா
43-ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் சர்ச்சைகள்
44-வருண் காந்தி - ராணுவ ராணுவ ரகசியங்கள்
45-ரகுராம் ராஜன் மாற்றம்
46-ஜல்லிக்கட்டு
47-உத்திரகாண்ட் சீனா ஊடுருவல்
48-எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா ? தொடர் ராணுவ வீரர்கள் பலி
49-ஜியோ சிம் விளம்பரம்
50-லலித் மோடி

51-வியாபம் ஊழல்-தொடர் மர்ம மரணங்கள்
52-கிரண் ரிஜ்ஜு 450 கோடி ஊழல்
53-சுரங்க ஊழல் - மகாராஷ்டிரா & கர்நாடகா
54-தனி விமானம் 8000 கோடி
55-பிரான்ஸ் - பழைய போர் விமானம் அதிக விலை
56-15 லட்சம் ஆடை
57-பாகிஸ்தான் திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள்
58-பள்ளி பாட புத்தகங்கள் வரலாறு திரிப்பு
59-முக்கிய பிரச்சனைகளில் மௌனம்
60-பல்வேறு பா.ஜ.க உறுப்பினர்களின் வெடி தயாரிப்பு செயல்பாடுகள்

61-ஓரினச்சேர்க்கை, பலாத்காரம், பெண் பற்றி கலாச்சாரத்திற்கு முரணான கருத்துக்கள்.
62-சஹாரா நிறுவன லஞ்சம் - மோடி முதலமைச்சராக இருந்த போது
62-தனியார் நிறுவன விளம்பரம் - JIO & PAYTM
64-குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்
65-பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் - மோடி கல்வி தகுதி
66-மத்திய மந்திரி நடிகையுமான ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி சர்ச்சை
67-தேச பக்தி நாடகங்கள்
68-மேகாலயா கவர்னர் காம லீலை
69-ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி
70-பாபா ராம்தேவ் - நில ஒதுக்கீடு

71-சமஸ்கிருதம் திணிப்பு
72-புதிய கல்வி கொள்கை
73-பொது சிவில் சட்டம்
74-கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் - 20,000 கோடி வீண்
75-மாட்டு கறி தடை
76-மாட்டு கறி கொலைகள் - அக்லாக், உனா(குஜராத்)
77-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு - பசுமை தீர்ப்பாயம் அபராதம்
78-அயோத்தி ராமர் கோவில்
79-அமைச்சர்களின் வெறுப்பு பேச்சு
80-கட்டாய சூரிய வணக்கம் / யோகா

81-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை
82-டெல்லி விவசாயிகள் நிர்வான போராட்டம்
83-அதானிக்கு மட்டும் 72,000 கோடி கடன்
84-SBI மினிமம் பேலன்ஸ் 5000
85- சிறுபான்மையினர் விரோத போக்கு
86-மாட்டு அரசியல் 
87- சிறுபான்மையினரும் தலித்துகளும் சங் பரிவாரங்களால் உயிருடன் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள்
88-நீட் தேர்வு
89-ரேஷன் மானியம் நிறுத்தம் .
90 ஆதார் அட்டை குழா்படிகள்-

91 காவிரி நதி நீர் ஆணையத்தின் அதிகாரத்தை குறைத்தது 
92 கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தோல்வி.
93 CAA NRC CAB 
94 68000 கோடி மார்வாடிகளுக்கு தள்ளுபடி.
95 ஊடகங்களை மிரட்டி தன்கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தது
96 உன்னா ரேப். உபியில் எம்எல்ஏ பாலியல் கொடுமை செய்த பெண்ணின் மொத்த குடும்பத்தையும் கொன்று அந்த பெண்னை உயிருடன் கொழுத்தி கொன்றது.  
97 பின்வாசல் வழியாக பல மாநிலங்களில் ஆட்சியை மிரட்டி பறித்தது
98 மாநிலங்களின் ஜிஎஸ்டி யை தர மறுப்பது
99 PM care ஊழல்..கணக்கு காட்ட முடியாது 
100 மாநிலங்களில் வாங்கிய ரேபிட் கிட்டை மத்திய அரசு பறித்தது.

இவையெல்லாம் தேசநலனா?
பதில் கிடைக்குமா?

- Surya Xavier
--
Thanks & Regards

Monday, 8 March 2021

பாஜக இந்து மக்களுக்காக என்ன செய்தது ?

*பாஜக இந்து மக்களுக்காக என்ன செய்தது ?.*

ஒன்றுமே செய்யவில்லை என்பது தான் கசப்பான உண்மை !!!.

மசூதியை இடித்து கோவில்கட்டுவதால்  இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.

முத்தலாக் தடை சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.

மாடுகளை உணவுக்காக கொல்வதை தடை செய்ததால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.

காஷ்மீரின் தனி அந்தஸ்து நீக்கத்தினால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.

CAA, NRC சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.

இனியும் இடிப்போம் என கூறும் மசூதிகள் இடிக்கப்படுவதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.

மதக்கலவரங்களை உருவாக்கி சிறுபான்மையினரை கொன்றொழிப்பதால்  இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.

7 வருடமாக ஆட்சியில் இருந்தும் ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை கூட வழங்காத வக்கற்ற அரசால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.

*பாஜக இந்துக்களுக்கு செய்த ஒரு நன்மையையாவது  கூற முடியுமா?  உங்களால் முடியாது இருந்தும் ஆதரிக்கிறீர்கள் என்றால் அதுக்கு காரணம் என்ன ?.

நமக்கு ''கரண்டு பில்'' 1000ரூபாய் அதிகம் வந்ததை கண்டு வருத்தப்படாமல் பக்கத்துவீட்டு கரண்டுபில்லில் 5000 ரூபாய் கூடுதல் வந்ததை அறிந்து குதூகலிப்பது போன்ற  ஒருவித மனநோய் தான் அது,

அதாவது நமக்கு நன்மையில்லாவியிட்டாலும்  முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும்  நிம்மதி  இழக்கிறார்களே என்கிற சந்தோச  மனோவியாதிதான் அது!    முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும்  கொன்றொழிக்கபாடுவதில் சுகம் காணும் மனோவியாதிதான் அது!  முஸ்லிம்கள் மற்றும்   கிறிஸ்தவர்களுக்கு அரசியல் சாசனம் வழங்கிய   உரிமைகளை  பறிக்கப்படுவதை பார்த்து பரவசம் கொள்ளும் மனோவியாதிதான் அது !!!.

பாஜக முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நரேந்திர மோடியின் ஆட்சி குறித்து கூறியது போல், ஒரு தனி மனிதனுக்குப் பைத்தியம் எனில் புரிந்து கொள்ள முடிகிறது !!!. *ஒரு நாட்டிற்கே பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும் ?.*
ஆம் !!!. ஒரு தனிமனிதனுக்குப் பைத்தியம் பிடித்தால் குணப்படுத்திவிடலாம் ஆனால் ஒரு நாட்டிற்கே பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும் ?.

*இது பாஜகவை ஆதரிக்கும் மனநோயாளிகளுக்கான பதிவு !!!.* *மதவெறியற்ற இந்துக்களுக்கானது அல்ல !!!.*

Saturday, 6 March 2021

பூத் ஏஜென்ட் பணிகள் என்ன...?

பூத் ஏஜென்ட் பணிகள் என்ன...?

1. வாக்கு போட ஆரம்பிக்கும் முன் வாக்களிக்கும் மெஷினில் வாக்குகள் எதும் இல்லை என உறுதிபடுத்த வேண்டும்.

2. மூன்று முறையாவது டம்மியாக வாக்களித்து வாக்குகள் சரியான நபருக்கு விழுகிறதா என சரிபார்க்க வேண்டும்.

3. சரியான வாக்காளர் தான் வாக்களிக்கிறாரா என்பதை கண்காணிக்க வேண்டும்.

4. தவறான நபர் வாக்களிக்க வந்தால் அவரை தடுத்து நிறுத்த வேண்டும்.

5. வாக்களிப்பு முடிந்ததும் முறையாக சீல் வைக்கப்பட்டதா என்பதை உறுதிபடுத்த வேண்டும்.

6. வாக்கு இயந்திரங்கள் எத்தனை என எண்ணிக் கொள்ள வேண்டும். அந்த இயந்திரங்கள் தான் வண்டியில் ஏற்றப்படுகிறதா, இறக்கப்படுகிறதா என்பதை கவணிக்க வேண்டும்.

பூத் ஏஜெண்டுகள் எண்ணிக்கை :-

1. ஒரு வாக்களிக்கும் பூத்திற்கு உள்ளே அமர ஒருவரும், அவரை மாற்றுவதற்க்கு இரண்டு பேர் என மொத்தம் மூன்று பேர் அமைக்கலாம். அல்லது இரண்டு பேர் கூட போதும்.

2. மூன்று பேர் இருந்தாலும். உள்ளே ஒருவர் தான் உட்கார முடியும்.

பூத் ஏஜெண்டை அமர்த்தும் முறை :-

1. வேட்பாளர் அல்லது வேட்பாளாரல் நியமிக்கப்பட்ட ஏஜெண்ட் மட்டுமே பூத் ஏஜென்டை நியமிக்க முடியும்.

2. விண்ணப்ப படிவம் எண் 10 - நியமண கடிதம் நிரப்பப்பட்டு, வேட்பாளர்/ஏஜென்ட் கையெழுத்திட்ட கடிதம். (இணைக்கப்பட்டுள்ளது)

3. வேட்பாளர்/ஏஜென்ட் முன்னிலையில் பூத் ஏஜென்ட் கையெழுத்திட வேண்டும்.

4. தேர்தல் அதிகாரியிடம் கடிதத்தை கொடுக்கும் போது, பூத் ஏஜெண்ட் கையெழுத்திட வேண்டும். கடிதத்தில் உள்ள கையெழுத்தும், அங்கே போடும் கையெழுத்தும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பூத் ஏஜென்ட் நிராகாரிக்கப் படுவார்.

5. போஸ்டல் வாக்கு அளிப்பவராக இருந்தால் 10 நாட்களுக்கு முன்பே கடிதம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தல் நடக்கும் அன்று கடிதத்துடன் போனால் போதுமானது.

பூத் ஏஜென்ட் தகுதிகள் :-

1. எழுத படிக்க தெரியவேண்டும்.

2. தமிழகத்தில் எந்த பகுதியிலாவது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருத்தல் அவசியம்.

3. அந்த வாக்குச் சாவடியில் வாக்களிப்பவராக, அதிலும் அவர் அமரும் அறையிலேயே வாக்களிப்பவராக இருந்தால் மிகவும் நல்லது.

4. அரசாங்க ஊழியர் பூத் ஏஜென்டாக அமரக் கூடாது. கண்டுபிடிக்கப்பட்டால், சிறைதண்டனை. அல்லது அபராதம், அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

5. தேர்தல் மற்றும் வாக்கு இயந்திரங்களைப் பற்றிய அடிப்படை அறிவு இருப்பது நலம்.

பூத் ஏஜென்ட் செல்லும் நேரம் :-

1. தேர்தல் நாளன்று, தேர்தல் ஆரம்பி்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அங்கே இருக்க வேண்டும்.

2. விண்ணப்பம் எண் 10, வேட்பாளர்/ஏஜென்ட் கையெழுத்திட்ட நியமன கடிதம் கொண்டு செல்ல வேண்டும்.

3. அதை அந்த பூத் அதிகாரியிடம் கொடுத்து பூத் ஏஜென்டாக பதிவு செய்து கொண்டு, நியமண அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும். பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

4. அரசு அதிகாரிகள் கேட்டால் அதை காண்பிக்க வேண்டும். தவறினால் வெளியேற்றப்படுவார்கள்.

5. மாற்று ஏஜென்டும் காலையிலேயே சென்று நியமண அட்டை பெற வேண்டும். பிறகு அவர் அங்கிருந்து வெளியேற வேண்டும். மாற்றும் போது மட்டும் உள்ளே வரவேண்டும்.

6. உள்ளே உட்காருபவர்கள் தான் முக்கிய ஏஜென்ட். மற்றவர்கள் மாற்று தான்.

7. கைபேசி கொண்டு போக கூடாது

8. புகை பிடிக்கவோ, மது அருந்தவோ கூடாது.

பூத் ஏஜென்ட் வாக்குபதிவு அறைக்குள் கொண்டு செல்ல வேண்டியவை :-

1. எந்த பூத்தில் அமர்கிறோரோ, அந்த பூத்தின் மொத்த வாக்காளர் பட்டியல் புத்தகம். அதை நாம் முன்பே தயாராக வாங்கி வைத்திருக்க வேண்டும். அங்கே கொடுக்க மாட்டார்கள்.

2. பேனா, பெண்சில், ஏ4 வெள்ளை காகிதம், இயந்திரத்தை சீல் வைக்க சீல் ஆகியவை வைத்திருக்க வேண்டும்.

3. வாக்குபதிவு மாலையில் முடியும் வரை எதையும் வெளியே எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.

வாக்குபதிவு அறைக்குள் செய்யவேண்டியவை :-

1. எந்த நாற்காலியில் அல்லது இடத்தில் அமர்கிறாரோ கடைசி வரை அங்கேயே தான் அமர வேண்டும்.

2. வாக்களிப்பவர் சரியானவர் தானா என்பதை கண்காணிக்க வேண்டும்.

3. எத்தனை வாக்குகள் பதிவாகிறது என்பதை நோட் செய்ய வேண்டும்.

4. உங்கள் கணக்கு, தேர்தல் அதிகாரி கணக்கு, இயந்திர கணக்கு ஆகியவை சரியாக இருக்க வேண்டும்.

5. வாக்கு சீல் வைத்து கையெழுத்து வாங்கியவுடன், சரியாக வாகணத்தில் ஏற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்.

இவைகள் தான் பூத் ஏஜென்டுகான பணிகள்.

விழிப்போடு இருந்து, தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Thursday, 25 February 2021

https://youtu.be/peezjuwYJZM The Names of 25 Prophets Mentioned in the Quran

https://youtu.be/peezjuwYJZM  


1. Adam as (Adam)آدم

2. Idris as (Enoch) إدر يس

3. Noah as (Nuh) نوح

4. Hud as (Hud) هود

5. Shaleh as (Saleh) صالح

6. Ibrahim as (Abraham) إبراهيم

7. Lut as (Lot) لوط

8. Ismail as (Ishmael) إسماعيل

9. Ishaq as (Issac) إسحاق

10. Yaqub as (Jacob) يعقوب

11. Yusuf as (Joseph) يوسف

12. Ayyub as (Job) أيوب

13. Shu'aib as (Jethro) شعيب

14. Musa as (Moses) موسى

15. Harun as (Aaron)هارون

16. Dzulkifli as (Ezekiel) ذو الكفل

17. Dawud as (David) داود

18. Sulaiman as (Soloman) سليمان

19. Ilyas as (Elijah) إلياس

20. Alyas'a as (Elisha) اليسع

21. Yunus as (Jonah) يونس

22. Zakaria as (Zachariah) زكريا

23. Yahya as (John) يحيى

24. Isa as (Jesus) عيسى

25. Muhammad saw محمد


Thanks & Regards

Monday, 22 February 2021

கோழையான #சிவாஜியை

என் அன்பு முகநூல் நண்பர்களே,

கோழையான #சிவாஜியை

வீர சிவாஜி என கட்டுக்கதைகளை சொல்லிவரும் பாசிச பாஜாகாவிற்க்கு தக்க பதிலடி கொடுப்பதற்காக இந்த பதிவை பதிகிறேன்,,


முகலாயர்களை கலங்கடித்த மராட்டிய

சிங்கம்!!

வீரத்தின் பிறப்பிடம்!!

அப்சல்கானை எதிர்கோண்டு வீழ்த்தனார் என்று தம்பட்டம் அடிக்கும்,——–

சங்கிகளின் கதாநாயகனான சக்ரவர்த்தி!

மராட்டிய வழிப்பறி குண்டன் சிவாஜியை

பற்றி சங்கபரிவார்கள் புளுகுவதுதான்

நீங்கள் மேலே படித்த வரிகள்…


உண்மையை சொல்லப்போனால்

சிவாஜியை விட ஒரு கோழை,

நம்பிக்கை துரோகி,

ஏமாற்றுக்காரன்,

நயவஞ்சகன்,

கேடி மொள்ளமாறி பேமானி பக்கா

பிராடு இந்திய வரலாற்றில் வேறு

யாருமே இல்லை என நிச்சயமாக

கூறலாம்…


இதோ சில ஆதாரப்பூர்வமான வரலாற்று

சிதறல்கள்—


*1636ல் தன் அண்ணன் சாம்பாஜி மற்றும் தந்தை

ஷாகாஜியை துணைக்கு

வைத்துக்கொண்டு முகலாய

சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக கலகத்தில்

இறங்கி அண்ணனை இழந்து தந்தையை

கைதியாக்கி தானும் தலைமறைவானார்

சிவாஜி…


பிறகு "எந்த மாதிரியான போர்

நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டேன்,என்

தந்தையை விடுதலை செய்யுங்கள்,

அவருக்கான பழைய பொறுப்புகளை வழங்கி

கருணை புரியுங்கள்" என பேரரசர்

அவுரங்கசீப்புக்கு மன்னிப்பு கடிதம் எழுதி

மாமன்னரின் கருணையை பெற்றார் வீர

(???) சிவாஜி…😡😡😡


*1656ல் மீண்டும் வீரத்தில்(???)இறங்கினார்

சிவாஜி.

புனேவுக்கு தெற்கில்முகலாய

சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இருந்த ஜாவ்லியின்

மன்னர் சந்திரா ராவிடம் தனது இரண்டு

ஆட்களை மரியாதை நிமித்தமாக சந்திக்க

வந்துள்ளோம் என அனுப்பி,மன்னர்

அயர்ந்தபோது அந்த இருவரும் மன்னரை

கொன்று அங்கிருந்து ஓட்டமெடுத்தனர்,

அந்த இருவரும் தகவலோடு வந்து

சேர்ந்ததும் மறைந்திருந்த சிவாஜி உடனே

ஜாவ்லியை தாக்கி வெற்றி கொண்டார்…


*ஜாவ்லியை அடுத்து அஹமத் நகரை

தாக்கினார் சிவாஜி,ஆனால் முகலாய

படைகளிடம் வசமாக சிக்கிய சிவாஜி

தப்பியோடி தலைமறைவானார்…

"ஏதோ தெரியாமல் நடந்து விட்டது,இனி

முகலாய அரசின் எல்லைகளை காக்கும்

விசுவாசியாக இருப்பேன்,

எனக்கு உயிர் பிச்சை தாருங்கள்" என

மன்றாடியவராக மாமன்னர் அவுரங்கசீபுக்கு

மன்னிப்பு கடிதம் எழுதி உயிர் பிழைத்தார்

வீர???சிவாஜி…


*பிறகு அவுரங்கசீப் ஆக்ராவுக்கு சென்ற

சமயம் பார்த்து அஹமத் நகரை தாக்கி

கைப்பற்றினார் சிவாஜி…


*இரண்டாம் ஆதில்ஷா சிவாஜியை அடக்க

பிஜப்பூரின் தளபதி அப்சல்கானை

அனுப்பினார்…

அப்சல்கான் படைகொண்டு வருவதை அறிந்த

சிவாஜி பிரதாப்கடு கோட்டைக்கு

சென்று பதுங்கி கொண்டார்…


*நான் அமைதியாக இருந்து தங்களிடம்

அடங்கிப்போக விரும்புகிறேன்" என

அப்சல்கானுக்கு கடிதம் எழுதினார்

சிவாஜி…


*ஆனால் அப்சல்கான் இதை நம்பவில்லை,

தகவலை உண்மைதானா என

அறிந்துகொண்டு வர கோபிநாத் எனும்

தளபதியை சிவாஜியிடம் தூதுவராக

அனுப்பினார்…


*தன்னை சந்திக்க வந்த கோபிநாத்திடம் "நான்

நம் நம் மதத்தை காப்பாற்ற வந்தவன்,

அப்சல்கானோ அழிக்கப்பட வேண்டியவன்…

என் லட்சியத்தை நிறைவேற்றிட

தாங்கள்தான் எனக்கு உதவி

புரியவேண்டும்" எனக்கூறி

கோபிநாத்துக்கு ஏகப்பட்ட பரிசு

பொருட்களை கொடுத்து மூளைச்சலவை

செய்து அப்சல்கானை நம்பவைத்தார்!


*அப்சல்கான் கோபிநாத்தின் வார்த்தைகளை

அப்படியே நம்பினார்…

சந்திப்புக்கான அழைப்பு சிவாஜிக்கு

சென்றது…

1659 நவம்பர் 20 ஜாவ்லியின்

காட்டுப்பகுதியில் சிவாஜியும்

அப்சல்கானும் சந்திக்க ஏற்பாடு நடந்தது…


சந்திப்புக்கு முதல்நாள் இரவே மராத்திய

வீரர்கள் காட்டுப்பகுதியில் பதுங்கி

கொண்டனர்…

அப்சல்கான் தன்னோடு வந்திருந்த 1500

குதிரை வீரர்களை அஹமத் நகரிலேயே

நிறுத்தி விட்டு தன் ஆயுதங்களையும்

எடுத்துக்கொள்ளாமல்,

கவசமும் அணியாமல்,

இடைவாளையும் சயீத்பாண்டா என்னும்

வீரனையும் வைத்துக்கொண்டு

முகாமுக்கு வந்து சேர்ந்தார்…


*ஆனால் இங்கே சிவாஜி உடைக்குள்

கவசத்தையும் தலைப்பாகைக்குள்

தலைக்கவசத்தையும் அணிந்து கொண்டார்…

வலதுகையுரையில் ஒரு மறைக்கப்பட்ட

பிச்சுவாக்கத்தி,

இடது கைவிரல் மோதிரங்களில் மறைத்து

அமைக்கப்பட்ட இரும்பாலான

மிகக்கூர்மையான புலிநகங்கள்,

ஆனால் பார்வைக்கு

நிராயுதபாணியாகவே தெரிந்தார்

சிவாஜி…


*கூடாரத்திற்குள் நுழைந்த சிவாஜியை

கட்டித்தழுவி வரவேற்றார் அப்சல்கான்…

அப்சல்கானை நான்கைந்து முறை

குனிந்து குனிந்து வணங்கிய சிவாஜி,

திடீரென புலிநகங்களால் அப்சல்கானின்

வயிற்றை கிழித்தார்.

இதைக்கண்ட சயீத்பாண்டா சிவாஜி மீது பாய,

மறைந்திருந்த மராத்திய வீரர்கள்

சயீத்பாண்டாவை குத்திக்கிழித்தனர்…


வலியால் துடித்த அப்சல்கான்

சிவாஜியோடு மல்லுக்கு நின்றார்.

ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில்

பின்புறமாக இரண்டு வீரர்கள் அப்சல்கானை

வெட்டி சாய்த்தனர்.


அப்சல்கானின் தலையை கொய்துகொண்ட

சிவாஜி அங்கிருந்து ஓட்டமெடுத்தார்.

அப்சல்கானை கொன்றவுடன் பிஜப்பூர்

பன்ஹாலா ஆகிய இரண்டு

கோட்டைகளையும் பிடித்தார் சிவாஜி…


ஆனால் சுல்தான் இரண்டாம் ஆதில்ஷா

நாலா திசையில் இருந்தும் பிஜப்பூர்

பன்ஹாலாவை சூழ்ந்து தாக்க

தொடங்கியவுடன் அஹமத் நகருக்கு சாக்கு

கந்தலுக்குள் மறைந்து தப்பியோடினார்

சிவாஜி…


*சிவாஜியை அடக்க 1660ல் தக்காணத்திற்கு

ஷாயிஸ்தாகானை தளபதியாக நியமித்தார்

அவுரங்கசீப்…

புனேவில் உள்ள சிங்கார் கோட்டையில்

அமர்ந்தார் ஷாயிஸ்தாகான்…


பிறகு மூன்று ஆண்டுகள் வரை

அமைதியாக இருந்த சிவாஜிக்கு

ஷாயிஸ்தாகானை தாக்க தக்க சந்தர்ப்பம்

ஒன்று கிடைத்தது…

அது 1663ம் ஆண்டு ரமலான் மாதம்.

பகலெல்லாம் நோன்பு இருக்கும் முகலாய

வீரர்கள் இரவு முழுவதும்

பிரார்த்தனையிலும் களைத்தும் இருப்பர்…


அப்போது மராத்தியர்கள் யாரும்

புனேவுக்கு நுழையாத வண்ணம்

பாதுகாப்பு பலமாகவே இருந்தது..

200 மராத்தியர்கள் வெவ்வேறு

வேடங்களிட்டு புனேவுக்குள்

நுழைந்தனர்.


கல்யாண ஊர்வலம் போன்று செட்டப் செய்து

அதில் மணப்பெண் வேடத்தில்

புனேவுக்குள் நுழைந்தார் சிவாஜி..,

அப்போது சில மராத்தியர்களோடு

சமையல்றை வாயிலாக கோட்டைக்குள்

நுழைந்த சிவாஜி அங்கே இருந்த சுமார் 38

பெண்களை கொன்றுகுவித்து

முன்னேறினார்…


பிறகு ஷாயிஸ்தாகானின் அறையில்

நுழைந்து தொழுகையில் இருந்த

ஷாயிஸ்தாகானை தாக்கியபோது அவரின்

மகன் அபுல்ஆலம் கான் சிவாஜியை

தாக்கினார்…


உடனே மராத்திய வீரர்கள் அபுல்ஆலம் கானை

கொன்றனர்…

ஷாயிஸ்தாகானின் மூன்று விரல்கள்

துண்டானது,

ஷாயிஸ்தாகான் சுதாரித்துக்கொண்டு

பலமாக சிவாஜியை தாக்கினார்,


உடனே சிவாஜியும் மற்ற மராத்தியர்களும்

ஓட்டம் பிடித்து காடுகளுக்குள் ஒளிந்து

மறைந்தனர்.

(மூன்று விரல் இழந்தும் எதிர்த்து அடித்து

துரத்தியவன் வீரனா? ஓடியவன் வீரனா?)


*நோன்பு மாதத்தில் சூரத் நகரில்

முகலாய வீரர்கள் அயர்ந்திருந்தபோது

கொள்ளையடித்து கொண்டு தப்பினார் இந்த

"வீர" சிவாஜி.


*உடனே அம்பர் ராஜா ஜெய்சிங்

தலைமையில் திலாவர்கானை தளபதியாக

நியமனம் செய்து பெரும் படை ஒன்றை

தக்காணத்திலிருந்து அனுப்பினார்

அவுரங்கசீப் …


ஆண்டு 1665 ஜனவரி.

பெரும் படை வந்துகொண்டிருக்கும்

தகவலை கேட்ட சிவாஜி தன்வசமிருந்த 19

கோட்டைகளையும் காலி செய்து

கொண்டு ராய்கருக்கு தப்பியோடினார்…


திலாவர்கான் சிவாஜிக்கு "ராய்கர்

கோட்டையில் உயிரை விடப்போகிறாயா

அல்லது ஒழுங்கு மரியாதையோடு

அஹமத் நகர் வந்து சரணடைகிறாயா" என ஒரு

கடிதம் எழுதினார்…


இதனை படித்து பதறிப்போன சிவாஜி

உடனே நிராயுதபாணியாக அஹமத் நகரில்

உள்ள கோட்டையில் வந்து சரணடைந்து

"சரணடையத்தான் வந்துள்ளேன்…

மரணமோ மன்னிப்போ அல்லது சிறையோ

ஏதுவேண்டுமானாலும் தாருங்கள்"

எனக்கூறியபடி மண்டியிட்டு அமர்ந்து

கொண்டார்…


*பிறகு "இதுவரை நான் பிடித்த 25

கோட்டைகளையும் தந்து விடுகிறேன்…

ஒவ்வொரு ஆண்டும் முகலாய பேரரசுக்கு

2,00000 பொற்க்காசுகளை கப்பம்

கட்டுகிறேன்…

2000 யானைகளை தருகிறேன்…

அடுத்த 7 ஆண்டுகள் வாளை ஏந்த மாட்டேன்…

தக்காணம் முதல் கோல்கோண்டா வரை

முகலாய பேரரசின் எல்லைகளை காப்பேன்…

பிஜப்பூருக்கு இனி செல்லவே மாட்டேன்…

உங்களின் சேவகனாக என்றும் இருப்பேன்" என

மாமன்னர் அவுரங்கசீபுக்கு 23 பக்கத்தில்

மன்னிப்பு கடிதம் ஒன்றை அனுப்பினார்

சிவாஜி.!!!!


ஆதார நூல்கள்:

The mughals by Chop singh verma,prakash books

2004,

the fall of the mughal empire of hindustan by Hg

Keene.

oxford 1887,

the maraathas 16001818,series: the new cambridge

History of india,

by stewart gordon. university of michigan ann arbor.



Thursday, 4 February 2021

இணையவழி சூரா ஓதும் பரிசுப் போட்டி



இணையவழி சூரா ஓதும் பரிசுப் போட்டி🏆🎁 | முதல் போட்டியாளர் | Adirai idhaz media

ADIRAI IDHAZ MEDIA | ADIRAI SAGODHARARGAL இணைந்து வழங்கும் மாபெரும் இணையவழி சூரா ஓதும் பரிசுப்போட்டியில் கலந்து கொண்ட குழந்தைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் என்றென்றும் அருள் புரிவானாக... 

போட்டியின் விதிமுறைகள் :- 

🏆🎁மாபெரும் இணையவழி சூரா ஓதும் பரிசுப்போட்டி🎁🏆

உங்கள் குழந்தைகளுக்கு ₹.20000 பரிசுகள் காத்துக் கொண்டிருக்கிறது. 

அதிரை இதழ் மீடியா யூடியூப் சேனல் வழியாக உங்கள் குழந்தைகள் ஓதிய வீடியோக்கள் பதிவிடப்படுகிறது. 

இதில் மிக சிறப்பாக ஓதிய 3 குழந்தைகள் ஆலீம் அவர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

அப்படி தேர்ந்தெடுக்கப்படும் 3 குழந்தைகளுக்கு, 

முதல் பரிசு ₹.5000/= 

இரண்டாம் பரிசு 3000 

மூன்றாம் பரிசு ₹.2,000 வழங்கப்படும்.  

மேலும் அதிக பார்வையாளர்கள் கொண்ட வீடியோக்களில் 10 வீடியோக்கள் தேர்வு செய்யப்படும். 

அப்படி தேர்வு செய்யப்படும் 10 வீடியோக்களின் குழந்தைகளுக்கு தலா ₹.1000/= பரிசாக வழங்கப்படும். 

இந்த மாபெரும் பரிசுப் போட்டியில் உங்கள் குழந்தைகள் கூட பரிசுகளை பெறலாம். 

நமது அதிரை இதழ் மீடியா யூடியூப் சேனலில் பதிவிடப்படும் உங்கள் குழந்தைகளின் வீடியோக்கள் பதிவிடப்பட்ட நாளில் இருந்து 20 நாட்கள் காலக்கெடு தரப்படும். 

தவறாமல் அனைவருக்கும் பகிருங்கள், 

நமது அதிரை இதழ் மீடியா யூடியூப் சேனலை மறக்காமல் SUBSCRIBE செய்து கொள்ளுங்கள். 

இப் போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளும் சாலிஹானவர்களாகவும்,  ஆலிம்களாகவும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக 

ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.........
--
Thanks & Regards

நபிகள் நாயகத்தை அவதூராக பேசிய கல்யாணராமனை கண்டித்து அரபியில். . . இதனை அரபு நாடுகளில் உள்ளவர்கள் அங்கு பகிரலாம்.

நபிகள் நாயகத்தை அவதூராக பேசிய கல்யாணராமனை கண்டித்து அரபியில். . .

இதனை அரபு நாடுகளில் உள்ளவர்கள் அங்கு பகிரலாம்.

Wednesday, 3 February 2021

*15 ஆண்டுகள் பழைய வாகனங்கள் நீக்கம்

*15 ஆண்டுகள் பழைய வாகனங்கள் நீக்கம்,
இதில் வாகனங்கள் மட்டுமல்ல*
1) சாலையோர மெக்கானிக்குகள்,
2) சாலையோர பஞ்சர் கடைகள்,
3) சாலையோர Spare parts கடைகள்,
4) spare parts-ஐ உற்பத்தி செய்யும் சிறு தொழில் நிறுவனங்கள்,
5) சாலையோரத்தில் Grease அடிப்பவன்,
6) லேத் பட்டரைகள்,
7) ஆண்டுக்கு ஒரு முறை FC செய்யவேண்டி வண்டியை புதுப்பிக்கும் தொழிலில் ஈடுபடும் பாடி கட்டுவோர்,
8) பெயிண்டர்,
9) வெல்டர்,
10) Auto electrician
11) Radiator சரிபார்ப்பவர்,
12) Side sticker ஒட்டுபவர்,
13) seat தைக்கும் Liner,
14) Water service செய்பவர்,
15) Spring சரிபார்ப்பவர்,
*இத்தனைக்கும் மேலே
இந்த 15 ஆண்டுகால வண்டியை
10 ஆண்டுகளாக Finance கட்டி அலுத்து போய் இனிமேலாவது நிம்மதியாக இருக்கலாம் என நினைக்கும் அந்த வண்டியின் உரிமையாளர்கள்,...
இத்தனை பேரும் வேலையை இழக்கின்றனர்*...

*15 ஆண்டுகள் பழைய வாகனங்கள் நீக்கம்,
இதில் வாகனங்கள் மட்டுமல்ல*
1) சாலையோர மெக்கானிக்குகள்,
2) சாலையோர பஞ்சர் கடைகள்,
3) சாலையோர Spare parts கடைகள்,
4) spare parts-ஐ உற்பத்தி செய்யும் சிறு தொழில் நிறுவனங்கள்,
5) சாலையோரத்தில் Grease அடிப்பவன்,
6) லேத் பட்டரைகள்,
7) ஆண்டுக்கு ஒரு முறை FC செய்யவேண்டி வண்டியை புதுப்பிக்கும் தொழிலில் ஈடுபடும் பாடி கட்டுவோர்,
8) பெயிண்டர்,
9) வெல்டர்,
10) Auto electrician
11) Radiator சரிபார்ப்பவர்,
12) Side sticker ஒட்டுபவர்,
13) seat தைக்கும் Liner,
14) Water service செய்பவர்,
15) Spring சரிபார்ப்பவர்,
*இத்தனைக்கும் மேலே
இந்த 15 ஆண்டுகால வண்டியை
10 ஆண்டுகளாக Finance கட்டி அலுத்து போய் இனிமேலாவது நிம்மதியாக இருக்கலாம் என நினைக்கும் அந்த வண்டியின் உரிமையாளர்கள்,...
இத்தனை பேரும் வேலையை இழக்கின்றனர்*...