Wednesday, 23 May 2012

யார் யாருக்கு… என்னென்ன படிப்பு ? – எஸ்.கே. நிலா

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

 
அடுத்த கட்டம் பற்றிய ஓர் அலசல் !

ப்ளஸ் டூ முடித்த பிறகு, என்ன படிக்கலாம்? இப்போது எந்த படிப்புக்கு நல்ல மவுசு? இன்றைக்கு மவுசுள்ள அந்தப் படிப்பை முடிக்கும்போது நாளைக்கு வேலைக்கான வாய்ப்பு எப்படி இருக்கும்?

.-
ப்ளஸ் டூ தேர்வை எழுதவிருப்பவர்கள், அவர்களின் பெற்றோர், அக்கம் பக்கத்தினர், நண்பர்கள் என்று எல்லோரையும் சுற்றிச் சுற்றி எப்போதுமே எழும் கேள்விகள்தான் இவை.

.
கேள்விகள் பழையதென்றாலும், பதில்களைப் புதுசாக்குகிறது காலம்!

.”
ப்ளஸ் டூ-வுக்குப் பின் மேற்படிப்பை தொடர்வோரின் தற்போதைய நிலவரம், 40 சதவிகிதம். இதில் 10 சதவிகிதத்தினர் மட்டுமே அதிக மதிப்பெண்களோடும், பொருளாதாரத்தில் தேறியவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த 10 சதவிகிதத்தினர்தான் பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளைப் பற்றி யோசிக்கத் தலைபடுகிறார்கள். மீதமுள்ள 30 சதவிகிதத்தினர், ‘ஏதோவொரு படிப்பில் சேர்வோம். அதை முடித்த பிறகு கிடைக்கும் ஏதோ ஒரு வேலையில் தொற்றிக்கொண்டு வாழ்வை செலுத்துவோம்என்ற முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

.
உண்மையில்குறைந்த செலவில், அதிக காலவிரயமின்றி படிப்பை முடித்ததுமே கையில் வேலையைக் கொடுக்கும் கோர்ஸ்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றைத் தெரிந்து கொள்வது அந்த 30 சதவிகிதத்தினருக்கு மட்டுமல்லமேற்படிப்பை பற்றியே யோசிக்காத மீதமுள்ள 60 சதவிகிதத்தினரில் கணிசமானவர்களுக்கும் பயன்படக்கூடும். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்என்று அந்தப் பெரும்பான்மை சதவிகித மாணவர்களுக்கான வேலை வாய்ப்புள்ள கோர்ஸ்கள் பற்றி பட்டியலிட்டார் திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவரும் இயக்குநருமான டாக்டர் மணிமேகலை.

.”
நம் நாட்டில் விவசாயத்தை அடுத்து, அதிகப்படி வேலை வாய்ப்புகள் டெக்ஸ்டைல்ஸ்துறையை முன்னிறுத்தி வளர்கின்றன. அப்பேரெல் பிராண்டிங்’ (Apparel Branding) எனப்படும் ஆயத்த ஆடைப் பயிற்சியின் கீழ், விற்பனை (Apparel Merchandising), ஆயத்த ஆடைகளில் மேம்பாடு (Apparel Product Development), தர உத்தரவாதம் (Apparel Quality Assurance)என சுவாரஸ்யமான தலைப்புகளில் ஏராளமான சான்றிதழ் படிப்புகள் இருக்கின்றன. மத்திய ஜவுளித்துறையின் கீழ் வரும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி முன்னேற்றக் குழுமம் (AEPL-Apparel Export Promotion Council)நிதியுதவியுடன் இதற்கான பயிற்சிகள், வேலை வாய்ப்பு உத்தரவாதத்துடன் கிடைக்கின்றன.

.
இதற்கடுத்து எலெக்ட்ரானிக்ஸ், வெல்டிங் படிப்புகளில் ஐ.டி.ஐ. முடிக்கும் பெண்களுக்கு நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. புரொடக்டிவிடிக்காக இந்தப் பணிகளில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து பல தொழில் நிறுவனங்கள் புதுமை செய்கின்றன. அதேபோல, பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்களில் தொழில் சார்ந்த படிப்புகளைப் பெறுபவர்களுக்கும் உத்தரவாதமுள்ள எதிர்காலம் இருக்கிறது.

.
பள்ளிப் படிப்பை ஆங்கிலம் வழியாக முடித்தவர்கள் மற்றும் ஆங்கில மொழித்திறன் ஈடுபாடு கொண்டவர்கள் பி.பி.ஓ. (BPO-Business Process Outsourcing), கே.பி.ஓ. (KPO -Knowledge Process Outsourcing), எல்.பி.ஓ. (LPO -Legal Process Outsourcing) போன்ற பயிற்சிகளைப் பெற்றால், உடனடி வேலைவாய்ப்பை பெறலாம். தொழில் முனைவோர் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Institute of Entrepreneurship and Career Development) மேற்கண்ட பயிற்சிகளை அதிக செலவில்லாமல் பெற உதவுகிறது.

.
உணவு மற்றும் உபசரிப்பில் தனிப் படிப்புகளும் சமீப ஆண்டுகளாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. உள்நாட்டில் மட்டுமல்ல, உலகமெங்கும் வேலை வாய்ப்போடு காத்திருப்பது இந்த உணவு மற்றும் உபசரிப்புத் தொடர்பான படிப்புகள்தான்என்ற மணிமேகலைஅதிகம் அறியப்படாத, அதேசமயம் அமோக வேலைவாய்ப்புக்கான சில படிப்புகளையும் சொன்னார்.

.”
பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் (Bio Informatics) எனப்படும் உயிர்த் தகவலியல் படிப்புக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. மாலிக்குலர் பயாலஜி துறையில் (Molecular Biology) புள்ளியியல் (Statistics) மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பயன்பாடுகளை செலுத்தும் இந்தப் படிப்பானதுசென்னை, அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழக கல்லூரிகளில் தரப்படுகின்றன.

.
இதேபோன்ற அதிக கவனம் பெறாத இன்னொரு படிப்பு… (GPS-Geographical Information System). இணைய வசதி எல்லோருக்கும் சாதாரணமாக கிட்டும் இந்தக் காலத்தில், அதன் மூலம் புவியமைப்புகளை மேப்களாக தரும் தொழில்நுட்பம் பிரபலமாகி வருகிறது. இதைக் கற்றுக்கொடுக்கும் இந்தப் படிப்பை முடிப்பவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு இருக்கிறது.

.
இன்ஷூரன்ஸ், முதலீட்டுத்துறை, பணிபுரிபவர் மற்றும் ஓய்வுபெறுபவர் நிதி நல விவகாரங்கள் போன்றவற்றை மையமாகக் கொண்டு உலகம் முழுமைக்கும் வேலைவாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் அவற்றுக்கு வழி செய்யும் (Actuarial Science) படிப்புகளை மேற்கொள்வதும் சிறப்புஎன்ற மணிமேகலை,

.”
இந்த டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளை நேரடியாகவும் படிக்கலாம். அல்லது ஏதாவதொரு அடிப்படை டிகிரி படிப்பை முடித்துவிட்டு, அல்லது அதனுடன் இணையாக இவற்றையும் மேற்கொள்வது புத்திசாலித்தனமானது!என்று வழிகாட்டினார்.

.’
அடிப்படை கல்விக்குப் பின் விரும்பிய சிறப்புத் துறையில் படிப்புஎன்ற மணிமேகலையின் கருத்தை, மாணவர்களின் ஹாட் சாய்ஸாக இருக்கும் பொறியியல் படிப்பிலும் முன் வைத்தார்வல்லம், பெரியார்-மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் டாக்டர் சுகுமாரன்.

.”
பொறியியல் படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டிருப்பதும், நுழைவுக்கான நடைமுறைகள் தளர்த்தப்பட்டிருப்பதும் ஆவரேஜ், பிலோ ஆவரேஜ் மாணவர்களுக்குகூட இன்ஜினீயரிங் ஸீட் கிடைக்கும் வாய்ப்பை உறுதிப்படுத்தியிருக்கிறது. ஆனால், அவர்கள் கல்லூரியில் நுழைந்ததும் பாடச் சுமையால் திணறிப் போகிறார்கள். அப்படிப்பட்ட மாணவர்கள், ஏதாவதொரு அடிப்படை அறிவியல் பாடத்தை இளநிலை படிப்பாக முடித்துவிட்டு, பிறகு அதே படிப்பையட்டிய பொறியியல் பாடத்தை தேர்ந்தெடுத்து படித்தால்அதிசயிக்கும் வகையில் சீக்கிரமே பிக்-அப் ஆகிறார்கள் (உதாரணமாக, பி.எஸ்சி. கெமிஸ்ட்ரி முடித்து, கெமிக்கல் இன்ஜினீயரிங் சேர்வது). இவர்களுக்கு நேரடியாக இரண்டாமாண்டில் அட்மிஷன் கிடைத்துவிடும். பொறியியல் படிக்க விரும்பும் ஆவரேஜ் மாணவர்கள் இம்மாதிரியான ஐடியாவை பின்பற்றினால், கல்லூரியில் சேர்ந்தது முதல் அரியர்களை சேர்த்துக் கொண்டே வராமல் நிறைவான, நிதானமான தேர்ச்சிகளைப் பெற முடியும்என்று தேவையான ஆலோசனை பகிர்ந்தவர்,

.”
பொறியியலில் சிவில், மெக்கானிக், இ.சி.இ., இ.இ.இ, பி-ஆர்க் போன்ற படிப்புகள் என்றும் நிலையான வேலைவாய்ப்புக்குரியவை. ஏனெனில்நாட்டின் பொருளாதாரமும், உள்கட்டமைப்பு வசதிகளும் தொலைநோக்கு இலக்கில் சீராக பயணிப்பதால்என்றும் இந்தத் துறைகள் பசுமையாக இருப்பதுதான். சமீப ஆண்டுகளில் ஏற்பட்ட தொய்விலிருந்து மீண்டிருக்கிறது ஐ.டி. எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறை. அவரவர் தனி ஆர்வத்தைப் பொறுத்து இப்படிப்பைத் தேர்ந்தெடுத்து படிக்கலாம்.

.
தற்போது இந்திய ஆட்சிப்பணிக்கு தேர்வாகின்றவர்களில் கணிசமானோர் பி.இ., எம்.பி.பி.எஸ். முடித்திருப்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். வரவேற்புக்குரிய இந்த மாற்றத்துக்காக தொழிற்கல்வி படிப்போர் துவக்க வருடத்தில்இருந்தே ஐ.ஏ.எஸ். தயாரிப்பையும் சேர்த்துக் கொள்ளலாம்என்ற சுகுமாரன்,

.”
மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி போன்ற படிப்புகளை பொறியியலில் படிப்பதைவிட, கலை அறிவியல் கல்லூரி மூலம் பெறுவதே நல்லதென சில நடைமுறை உதாரணங்கள் காட்டுகின்றன. பிரபல பயோகான்நிறுவனத்தின் கிரண் மஜூம்தர் ஷாவின் கருத்தும் இதுவே. இவர் தனது நிறுவனத்துக்கான வேலை வாய்ப்பில் கலை அறிவியல் கல்லூரிகளில் பயோடெக் பட்டம் பெற்றவர்களுக்கே முன்னுரிமை தந்திருக்கிறார்.

.
இந்த பயோடெக் படிப்பை இளநிலை, முதுநிலை எனத் தனித்தனியாக படிப்பதற்கு பதில் ஒருங்கிணைந்த முதுநிலை படிப்பாக (Integrated Course) பெறலாம். ஒரே வீச்சில் படிக்கும்போது, மாணவருக்கு கிடைக்கும் தெளிவும் சிறப்பாக அமையும்என்ற சுகுமாரன்,

.”
புதுமையையும், சவால்களையும் விரும்பும் புத்திசாலி மாணவர்களுக்கு ஏரோநாட்டிக்ஸ் (Aeronantics), ஸ்பேஸ் டெக்னாலஜி (Space technology) படிப்புகள் காத்திருக்கின்றன. இப்படிப்புகளை ஏதோ ஒரு நிறுவனத்துக்கு பதில் ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம் போன்ற தரமான கல்வி நிறுவனங்களில் பயில்வதுவேலை வாய்ப்பை வரவேற்புடன் வசப்படுத்தும்என்று வாழ்த்துக்கள் சொன்னார்.

.
பிலோ ஆவரேஜ், ஆவரேஜ், டாப் ஸ்கோரர்ஸ் என்று எல்லா தரப்பினருக்குமான இத்தகவல்களை குறிப்பெடுத்துக் கொண்டீர்கள்தானே!
நன்றி:- எஸ்.கே.நிலா
நன்றி:- அ.வி

வேலை வழங்கும் பல்வேறு துறைகள்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,

வேலைகள் பல்வேறு துறைகளில் உள்ளன. பிளஸ் 2 முடித்த மாணவரிகள் முதலில் அந்தத்துறைகளை கண்டுகொள்ள வேண்டும். அந்தத்துறை பற்றிய விரிவான தகவல்களை சேகரிக்க வேண்டும். சேகரித்த தகவல்கள் சரியானது தானா? ஏன தகுந்த கல்வியாளரிகளிடம் அல்லது கல்வி வல்லுனர்களிடம் கலந்துரையாடி தெரிந்துகொள்ள வேண்டும். தனக்கு ஏற்ற துறையை தேர்ந்தெடுத்த பின்பு அதற்குத் தகுந்த படிப்பில் சேர முயற்சி செய்வதே சிறந்த செயலாகும்.
 
வேலைகள் வழங்கும் பல்வேறு துறைகள் விவரம்.

1.
விண்வெளி பொறியியல் (Aerospace Engineering)
 2.
வங்கி மற்றும் காப்பீடு (Banking and Insurance)
 3.
பயோ டெக்னாலஜி (Bio Technology)
 4.
பி-பார்ம் (B – Pharmacy.)
 5.
பி.பி.ஓ இன்டஸ்ட்ரி (BPO   Industry.)
 6.
கணினி மற்றும் மென்பொருள் (Computer / Software).
 7.
நிகழ்ச்சி மேலாண்மை (Event Management)
 8.
பேசன் மேனேஜ்மென்ட் (Fashion Management).
 9.
மனித உரிமைகள் (Human Rights.)
 10.
விருந்தோம்பல் மேலாண்மை (Hospitality Management.)
 11.
உடல்நலம் மற்றும் மருத்துவ தொழில்நுட்பம் (Health Care/ Medical Tech.,)
 12.
தகவல்துறைத் தொழில்நுட்பம் (Information Technology.)
 13.
தொழிற்ச்சாலை உறவுகள் (Industrial Relations)
 14.
பன்னாட்டு வாணிபம் (International Trade.)
 15.
மேலாண்மை மற்றும் வணிக நிர்வாகம் (Management/Business Administration.)
 16.
ஊடகம் மற்றும் இதழியல் (Media / Journalism.)
 17.
பொருள் மேலாண்மை (Material Management.)
 18.
உற்பத்தி மேலாண்மை (Production Management)
 19.
பணியாளர் மேலாண்மை (Personnel Management.)
 20.
கிராம மேலாண்மை (Rural Management.)
 21.
போக்குவரத்து மற்றும் சுற்றுலா (Travel / Tourism.)
 22.
சில்லறை வியாபார மேலாண்மை (Retail Management.)
 23.
செலவு மற்றும் மேலாண்மை கணக்குப்பதிவு (Cost and Management Accountancy)
 24.
மண்ணியல் (Geology.)
 25.
தோட்டக்கலை (Horticulture.)
 26.
விளம்பர மேலாண்மை (Advertising Management).
 
மாணவரிகள் தங்களின் உயர்நிலைக் கல்வியை தேர்வுசெய்ய உதவும் வகையில் உயர்நிலைக் கல்வி பல வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை

I
கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவு எடுத்து படித்த மாணவரிகளுக்கான உயரி படிப்புகள்.

II இயற்பியல், வேதியியல், உயிரியல் பிரிவு எடுத்து படித்த மாணவரிகளுக்கான உயர் படிப்புகள்.

III பொருளாதாரம், கணக்குப்பதிவு, வணிகவியல, செயலாளரிபயிற்சி, கணிதம் மற்றும் கணினி அறிவியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயரி படிப்புகள்.

IV உயர்நிலைக்கல்விக்கு பின்னர் அனைத்து பிரிவு மாணவருக்கும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கு தேர்ந்தெடுக்கக்கூடிய பாடங்கள்:

V போட்டித் தேர்வுகள்
 
இவை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்
 
I கணிதம், இயற்பியல், வேதியியல் பிரிவு எடுத்து படித்த மாணவரிகளுக்கான உயரி படிப்புகள்.
 இந்தப் பிரிவை
1) நுழைவுத் தேரிவுகள்
2)
பட்டபப்டிப்புகள்
3)
டிப்ளமோ படிப்புகள்
4)
சான்றிதழ் படிப்புகள்
என 4 பிரிவுகளாகப் பிரித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.
 
1) நுழைவுத் தேர்வுகள்

1.
ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாமினேசன் (ஐ.ஐ.டி) (IIT)
 2.
ஆல் இந்தியா என்ஜினியரிங் எக்ஸாமினேசன் (AIEE)
 3.
ஐ.ஐ.டி. இந்திய தகவல்துறைத் தொழில்நுட்பத்திறன் நுழைவுத் தேர்வு
 4.
கம்பைண்டு என்ட்ரன்ஸ் என்ஸாமினேசன் (நேவிகேசன் கோர்ஸ்)
 5.
இந்திய மாநிலங்களில் நடத்தப்படும் பலவிதமான நுழைவுத்தேர்வுகள்
 6.
என்.ஐ.டி. நுழைவுத்தேர்வு ( நேஷ்னல் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி)
 7.
பி.டெக். இன்டெஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி நுழைவுத் தேர்வு
 8.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு
 9.
சென்ட்ரல் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசசுச் இன்ஸ்ட்டியூட் (பி.டெக் எலக்ட்ரோ கெமிக்கல் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி)
 
2) பட்டபடிப்புகள் பி.இ.பி.டெக். படிப்பகள்

1.
வான்ஊர்திப் பொறியியல் (Aeronautical  Engineering)
 2.
கட்டிடக்கலை (Architecture)
 3.
தான்னியங்கிப் பொறியியல் (Automobile Engineering)
 4.
பயோ இன்பரிமேட்டிக்ஸ் (Bio – Informatics)
 5.
பயோ மெடிக்கல் இன்ஸ்ட்ரூமென்டேசன் என்ஜினியரிங் (Bio – Medical Instrumentation        Engineering)
 6.
பயோ டெக்னாலஜி (Bio Technology)
 7.
கட்டிடக்கலைப் பொறியியல் (Civil engineering)
 8.
வேதிப் பொறியியல் (Chemical Engineering)
 9.
தீயணைப்பு பொறியியல் (Fire Engineering)
 10.
கணினி அறிவியல் பொறியியல் (Computer Science Engineering)
 11.
கம்ட்டரி சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் (Computer Software & Hardware)
 12.
மின்னியல் மற்றும் மின்னனு வேதியியல் (Electrical and Electroics Chemical)
 13.
மின்னியல் மற்றும் தகவல்தொடர்பு (Electronics and Communication)
 14.
மின்னியல் மற்றும் கருவியியல் (Electronics and Instrumentation)
 15.
தொழிற்ச்சாலைப் பொறியியல் (Industrial Engineering)
 16.
சுற்றுப்புற பொறியியல் புவித்தகவல்கள் (Environment Engineering – Geo – Informatics)
 17.
தகவல்துறைத் தொழில்நுட்பம் (Information Technology)
 18.
கருவியியல் பொறியியல் (Instrumentation Engineering)
 19.
தோல்ப்பொருள் தொழில்நுட்பம் (Leather Technology)
 20.
உற்பத்திப் பொறியியல் (ManufacturingEngineering)
 21.
மெரைன் இன்ஜினியங் (Marine Engineering)
 22.
மெக்கட்ரானிக்ஸ் (Mechatronics)
 23.
மெட்டலர்ஜிக்கல் என்ஜினியரிங் (Mettallurgical Engineering)
 24.
சுரங்கப் பொறியியல் (Mining Engineering)
 25.
எரிபொருள் வேதிப்பொறியில் (Petro – Chemical Technology)
 26.
பாலிமர் என்ஜினியரிங் (Polymer Engineering)
 27.
உற்பத்திப் பொறியியல் (Production Engineering)
 28.
அச்சுப்பொறியியல் (Printing Technology)
 29.
ரப்பர் டெக்னாலஜி (Rubber Technology)
 30.
டெக்ஸ்டைல் என்ஜினியரிங் (Textile Engineering)

3)
டிப்ளமோ படிப்புகள்

1.
கட்டிடப் பொறியியல்
 2.
மின்சாரப் பொறியியல்
 3.
மின்னணுப் பொறியியல்
 4.
எந்திரவியல் பொறியியல்
 5.
உற்பத்திப் பொறியியல்
 6.
வேளாண்மைப் பொறியியல்
 7.
கணினி அறிவியல் பொறியியல்
 8.
மின்னணு மற்றும் தொலைத்தொடரிபு
 9.
கட்டிக்கலை மற்றும் கிராமப்புற பொறியியல்
 10.
வேதிப்பொறியியல்
 11.
தோல்ப்பொருள் தொழில்நுட்பம்
 12.
வேதித்தொழில்நுட்பம்
 13.
பாலிமர் தொழில்நுட்பம்
 14.
பல்ப் பேப்பர் தொழில்நுட்பம்
 15.
மென்;பொருள் தொழில்நுட்பம்
 16.
மீன்வளத் தொழில்நுட்பம்
 17.
கைத்தறி; தொழில்நுட்பம்
 18.
அச்சுத்தொழில்நுட்பம்
 19.
பிளாஸ்டிக் டெக்னாலஜி
 20.
சரிக்கரைத் தொழில்நுட்பம்
 21.
டெக்ஸ்டைல் டெக்னாலஜி
 22.
கணினித் தொழில்நுட்பம்
 23.
கார்மெண்ட் டெக்னாலஜி
 24.
மரத் தொழில்நுட்பம்
 25.
வனத்துறைத் தொழில்நுட்பம்
 26.
காலணிகள்த் தொழில்நுட்பம்
 27.
போர்மேன் டெக்னாலஜி
 28.
ஆடை வடிவமைப்பு மற்றும் ஆடை உருவாக்குதல்
 29.
ரெப்ரிஜ்ரேசன் மற்றம் ஏலீ; கப்டி`னிங்
 30.
விற்பனைத் துறை
 31.
காஸ்மெட்டாலஜி

4)
சான்றிதழ் படிப்புகள்

1.
பிளாக்ஸ்மித்
 2.
தச்சுத்தொழில்
 3.
மோல்டர்
 4.
பெயிண்டர்
 5. `
டீட் மெட்டல் ஒலீ;க்கர்
 6.
கட்டடம் கட்டுபவர்
 7.
பேட்டரின் மேக்கர்
 8.
மெக்கானிக் டீசல்
 9.
பிளம்பர்
 10.
மெக்கானிக் கிரெய்ண்டர்
 11.
மெக்கானிக் மோட்டார்
 12.
கடிகாரம் மற்றும் கைக்கடிகாரம் உருவாக்கல்
 13.
வெல்டரி கேஸ் மற்றும் மின்சாரம்
 14.
மெக்கானிக் மோட்டார் வாகனங்கள்
 15.
ஒயர்மேன்
 16.
டர்னர்
 17;
மெக்கானிஸ்ட்
 18.
பிட்டசு
 19.
எலக்ட்ரோ பிளேட்டர்
 20.
ஒயர்லெஸ் ஆப்பரேட்டர்
 21.
சர்வேயர்
 22.
இன்ட்ரூமென்ட் மெக்கானிக்
 23.
எலக்ட்ரீ சியன்
 24.
மெக்கானிக் ரெப்ரிஜ்ரே`ன் மற்றும் ஏர் கண்டிசனிங்
 25.
கருவி வடிவமைப்பாளர்
 26.
டிராட்ஸ்மேன் சிவில்
 27.
டிராட்ஸ்மேன் மெக்கானிக்
 28.
மெக்கானிக் ரேடியோ மற்றும் தொலைக்காட்சி
 29.
மெக்கானிக் ஜெனரல்
 30.
பிழைத்திருத்தல்
 31.
சுருக்கெழுத்து ஆங்கிலம்
 32.
ஹேண்ட் ஒயரிங் ஆப் பேண்சி அண்ட் பர்னிஸ்சிங் பேப்ரிக்ஸ்
 33.
எம்பர்யாடரி அன்ட் டெய்லரிங்
 34.
கட்டிங் அண்ட் டெய்லரிங்
 35.
காலணிகள் உருவாக்குதல்
 36.
சூட்கேஸ் மற்றும் லெதர் பொருள் உற்பத்தி
 
II இயற்பியல், வேதியியல், உயிரியல் பிரிவு எடுத்து படித்த மாணவர்களுக்கான உயர் படிப்புகள்.
 
இந்த பிரிவை 
1) மருத்துவ நுழைவுத்தேர்வுகள்
 2)
மருத்துவம் பட்டப்படிப்பு ஃடிப்ளமோஃ சான்றிதழ் தகுதி
 3)
வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல்
 4)
உயிரியல் அறிவியல் மற்றம் துணைப்பாடம்
 5)
மனை அறிவியல்
 6)
பொதுப்பாடங்கள்
 
என 6 பிரிவுகளாகப் பிரித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.
 
1) மருத்துவ நுழைவுத்தேர்வு

1.
ஆர்ம்டு போர்ஸஸ் மெடிக்கல் காலேஜ் பூனே
 2.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உ.பி
 3.
ஆல் இந்தியா பிரிமெடிக்கல் ஃ பிரிடெண்டல் என்ட்ரன்ஸ் எக்சாமினேசன் கண்டெக்டட் பை சென்ட்ரல் போர்டு ஆப் செகரட்ரி எஜூகேசன்
 4.
ஜவஹர்லால் மருத்துவம் மற்றும் ஆய்வுப்பிரிவின் பட்டமேற்படிப்புக்கான நிறுவனம் புதுச்சேரி
 5.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் உ.பி
 6.
கிரிஸ்ட்டியன் மருத்துவக் கல்லூரி வெள்ளுர்
 7.
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் – (புதுடெல்லி)
 
மருத்துவம் பட்டப்படிப்பு = டிப்ளமோ / சான்றிதழ் தகுதி
 
பட்டப்படிப்புக்கான மருத்துவ பாடங்கள்
 1. எம்.பி.பி.எஸ்.
 2.
பி.டி.எஸ்.
 3.
பி.ஹெச்.எம்.எஸ்
 4.
பி.ஏ.எம்.எஸ்
 5.
பி.எஸ்.எம்.எஸ்
 6.
பி.பார்ம்
 7.
பி.பி.டி.
 8.
பி.எஸ்.சி (நர்சிங்)
 9.
பி.ஒ.டி.
 
மருத்துவப்பாடங்கள் = டிப்ளமோ / சான்றிதழ்த்தகுதி

1.
மருத்துவத் தொழில்நுட்பம்
 2.
லெப்ரோசி இன்ஸ்பெக்டர் கோர்ஸ்
 3.
லேப் டெக்னீசியன்
 4.
இ.சி.ஜி டெக்னீசியன்
 5.
டெண்டல் மெகனிக்
 6.
ஆண்தால்மிக் அசிஸ்டெண்ட் கோர்ஸ்
 7.
ஹெல்த் வொர்க்கரி டிரெய்னிங்
 8.
கோர்ஸ் இன் ஆண்டோமெட்ரி
 9.
ஆர்தோபிஸ்ட் கோர்ஸ்
 10.
மெடிக்கல் ரேடியேசன் டெக்னாலஜி
 11.
டிப்ளமோ இன் டயாலிசிஸ்
 12.
மருத்துவமனை நிர்வாகத்தில் டிப்ளமோ
 13.
மருத்துவ நுன்னுயிறியல்
 14.
டிப்ளமோ இன் புரோஸ்தெடிக்ஸ் அன்ட் ஆர்தோட்டிக்ஸ்
 15.
பெரிபுயூசன் டெக்னாலஜி
 16.
பிசியோதெரபி
 17.
ஸ்பீச் தெரபி
 18.
நர்சிங்
 
வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல்

1.
வேளாண்மை அறிவியல் பி.எஸ்.சி. அக்ரி
 2.
பால்ப்பொருள் அறிவியல் பி.எஸ்.சி (டி.டி)
 3.
கால்நடை அறிவியல் பி.வி.எஸ். ஏ. ஹெச்
 
உயிரியல் அறிவியல் மற்றம் துணைப்பாடம்

1.
விலங்கியல் பி.எஸ்.சி
 2.
மீன்வளம் பி.எஸ்.சி
 3.
எம்.எஸ்.சி. மரெயின் சயின்ஸ் மற்றும் உயிரியல்
 4.
எம்.எஸ்.சி. மரெயின் பயோடெக்
 5.
அக்குவாடிக் பயோலஜி மற்றும் மீன்வளம் எம்.எஸ்.சி
 6.
நுன்னுயிரியல் பி.எஸ்.சி எம்.எஸ்.சி
 
மனை அறிவியல்

1.
மனை மேலாண்மை
 2.
உணவு மற்றும் ஊட்டச்சத்து
 3.
குழந்தை வளர்ச்சி
 4.
ஆடை மற்றும் டெக்ஸ்டைல்ஸ்
 5.
உணவு சேவை மேலாண்மை
 6.
டெக்ஸ்டைல்ஸ் வடிவமைப்பு
 7.
டெக்ஸ்டைல்ஸ் கிராண்ட்
 8.
உணவுத்தொழில்நுட்பம்
 9.
மனித ஊட்டச்சத்து
 10.
உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து
 11.
உணவு உற்பத்தி
 12.
பயண்பாடு மற்றும் கழிவுப்பொருள் மறுசுழற்சி
 
பொதுப்பாடம்

1.
இயற்பியல்
 2.
வேதியியல்
 3.
தாவரவியல்
 4.
விலங்கியல்
 5.
பயன்பாட்டு புள்ளியல்
 6.
பயன்பாட்டு கணிதம்

III
பொருளாதாரம், கணக்குப்பதிவு, வணிகவியல், செயலாளர்பயிற்சி, கணிதம் மற்றும் கணினி அறிவியல் மாணவர்களுக்கான உயர் படிப்புகள்.

1.
சாட்டர்டு அக்கவுண்டன்சி
 2.
வங்கியியல்
 3.
சட்டப்படிப்பு பி.எல்
 4.
மேலாண்மை பி.பி.ஏ
 5.
பொருளாதாரம் பி.ஏ
 6.
வணிகவியல்
 7.
டீச்சிங்
 8.
உலக அறிவியல்
 9.
உளவியல்
 10.
வரலாறு
 11.
புவியியல்
 12.
ஆங்கிலம்
 13.
மொழி
 14.
இசை
 15.
நிதி
 16.
ஊடகம்
 17.
தகவல் தொடர்பு
 18.
காஸ்ட்அக்கவுண்டன்சி

IV
உயர்நிலைக்கல்விக்கு பின்னர் அனைத்து பிரிவு மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடங்கள்:

1.
உடற்கல்வி
 2.
சட்டப்படிப்பு
 3.
ஏவியேசன் விமானப்பணிண்பெண்
 4.
பாஸ்மெட்டாலஜி
 5.
பேஷன் டெக்னாலஜி
 6.
காப்பீடு
 7.
கடல்சாரபடிப்பு
 8.
போக்குவரத்து மற்றும் சுற்றுலா
 9.
புகைப்படம் பற்றிய படிப்பு
 10.
கலை/பயன்பாட்டுக் கலை
 11.
நகை வடிவமைப்பு
 12.
பேஷன் மாடலிங்
 14.
இதழியல் மற்றும் அச்சு ஊடகம்
 15.
பிலிம் மற்றும் பிராட்காஸ்டிங் (டி.வி/ரேடியோ)
 16.
கலையரங்கம் மற்றும் நடிப்பு
 17.
விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு
 18.
நடிப்பு
 19.
ஆடியோ மற்றும் வீடியோ உற்பத்தி
 20
சின்மாட்மோகிராபி
 21.
இயக்கம்
 22.
டைரக்சன் சுரரி பிளே ரைட்டிங்
 23.
வீடியோகிராபி
 24.
பிலிம் எடிட்டிங்
 25.
நாடகக்கலை
 26.
பிலிம் டைரக்டிங்
 27.
சினிமா நடிப்பு
 28.
ஆடியோகிராபி மற்றும் எடிட்டிங்
 29.
பிலிம் எடிட்டிங்
 30.
படத் தயாரிப்பு
 31.
பிலிம் பிராசசிங்
 32.
பிலிம் ஸ்டடிஸ்
 33.
கலையரங்கம் மற்றும் டி.வி. தொழில்நுட்பம்
 34.
பிரிஹேன்ட் அணிமே`ன்
 35.
பப்டமென்டல் அன்ட் ஆடியோ விசூவல் எஜூகேசன்
 36.
மோசன் பிக்சரி போட்டோகிராபி
 37.
நிகழ்ச்சி மேலாண்மை
 38.
விசூவல் கம்யூனிகேசன்
 39.
புத்தக பதிப்பு
 40.
அரசியல் அறிவியல்
 41.
குற்றவியல்
 42.
விக்டிமாலஜி
 43.
நடனம்
 44.
ஜெம்மாலஜி
 45.
தொழிற்ச்சாலை வடிவமைப்பு
 46.
பூமி பற்றிய அறிவியல்
 47.
நகரத் திட்டமிடல்
 48.
மண்ணியல்
 49.
சமூகவியல்

V
போட்டித் தேர்வுகள்
 புடிப்பை முடித்த பின்னர் போட்டித்தேர்வுகள் எழுதுவதன்மூலம் பலருக்கு வேலைகள் எளிதில் கிடைக்கும். தகுதியான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும்பலவகையான போட்டித்தேர்வுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 
போட்டித்தேர்வுகளை 1. அறிவியல் மற்றும் கணிதப்பிரிவு படித்தவரிகளுக்கான போட்டித்தேர்வுகள்.
 2.
வணிகவியல் பிரிவு படித்தவரிகளுக்கான போட்டித்தேர்வுகள் என இருவகையாகப் பிரிக்கலாம்.
 
1.அறிவியல் மற்றும் கணிதம் பிரிவு படித்தவரிகளுக்கான போட்டித்தேர்வுகள்:

1.
பொறியியல்த்துறைத் தேர்வுகள்
 2.
வங்கித் தேர்வுகள்
 3.
இந்திய வனத்துறைத் தேர்வகள்
 4.
மண்ணியல்த்துறைத் தேர்வுகள்
 5.
கம்பைண்டு மருத்துவத்துறை தேர்வுகள்
 6.
இந்திய பொருளாதாரம் புள்ளியல் துறை தேர்வுகள்
 7.
சிவில் சரிவீஸஸ் தேர்வு
 8.
எஸ்.எஸ்.சி நடத்தும் தேர்வுகள்
 9.
ரெயில்வே வேலைவாய்ப்புத்துறை நடத்தும் தேர்வுகள்

2.
வணிகவியல் பிரிவு படித்தவர்களுக்கான போட்டித்தேர்வுகள்

1.
சிவில் சரிவீஸஸ் தேர்வுகள்
 2.
வருமானத்துறைத் தேரிவகள்
 3.
எஃசைஸ் மற்றும் வருமானவரித்துறைத் தேர்வுகள்
 4.
இந்திய பொருளாதாரத்துறைத்தேர்வு
 5.
இந்திய ராணுவம் விமானத்துறைத் தேர்வு
 6.
இந்திய புள்ளியல்துறைத் தேர்வு
 7.
கம்பைன்டு டிபன்ஸ் சர்வீஸஸ்
 
வேலைவாய்ப்பு பற்றிய பட்டியல் இத்துடன் முடியவில்லை இது ஒரு முன்னோட்டம் தான் ஒவ்வொரு நபரும் தனது ஆளுமைத்தன்மைக்கு தகுந்தத் துறையைத் தேர்வு செய்து திட்டமிட வேண்டும். ஒரு தொழிலைத் தேர்வுசெய்வது வாழ்க்கைத் தொழில் செயல்பாடுகளில் ஒன்றாகும். ஒரு வேலையைப் பெறுவது அந்த வேலையில் வளர்வது, வாழ்க்கைத்தொழிலை மாற்றுவது, ஓய்வு பெறுவது என வாழ்நாள் முழுவதும் வரும் செயல்கள் ஆகும். வாழ்க்கையின் இலக்கு நிர்ணயம் செய்வது முதல் வாழ்க்கைத்தொழில்மாற்றம் செய்வதுவரை பல வகைகளில் வாழ்க்கைத்தொழில் திட்டமிடல்உதவும். வாழ்க்கைத்தொழிலை ஒருவர்சரியாக திட்டமிடுவது மூலம் ஒருவர் தனது வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெறலாம்.
 
தற்போதைய வாழ்க்கைத்தொழில் ஒரு தொடர் செயல்பாடாக கருதப்படுகின்றது. ஏனெனில் வேலையைப் பெறுவது மட்டும் அல்லாமல், முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள், வாழ்க்கைத்தொழிலை மாற்றுதல், ஓய்வு பெரும் வாய்ப்புகள் ஆகியவை இதில் அடங்கிஉள்ளது. குறிப்பிட்ட சில இடைவெளிகளில் வாழ்க்கையில்தொழில் வளரிச்சியினை பற்றி திட்டமிடல் நல்ல பயனளிக்கும் அதுவே வெற்றிகரமான
 
வாழ்க்கைகு வழிவகுக்கும்.

- Dr.
எஸ். நாராயணராஜன் M.B.A. Ph.D., (நெல்லை கவிநேசன்) ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர்
 
நன்றி:-தினத்தந்தி