அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்,
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
நபிகள் நாயகம் வருவதற்குமுன் வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களைத்தான் இங்கு வேதக்காரர்கள் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
இறுதியாக இஸ்லாத்திற்குப் புறம்பாக பெயர்தாங்கி முஸ்லிம்களுக்கு சில வார்த்தைகள்.... நீங்கள் உங்களுக்கு இறைவன் அளித்த அருட்கொடையாம் இஸ்லாத்தின் அருமையை உணராது இன்னும் உங்கள் தவறான போக்கைத் தொடர்வீர்களானால் இறைவன் உங்களை தனது தண்டனைகள் மூலம் அழித்துவிட்டு உங்களின் இடத்தில் இஸ்லாத்தின் அருமைகளை உணர்நது உறுதியாகப் பின்பற்றும் மக்களை உங்கள் இடத்தில் குடியமர்த்துவான் என்று திருமறை எச்சரிக்கிறது.
(AlQuran47:38) ......எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள்.
(திருக்குர்ஆன் நற்செய்தி மலர் – மே இதழில் இருந்து....)
ஒரே ரயிலைத் தவறவிடுவீர்களா?
Can you afford to miss the only train ?
ரமேஷ் ஒரு இளைஞன்.... தனது பட்டப் படிப்புக்குப் பிறகு ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர விண்ணப்பித்திருந்தான். அவன் படித்த படிப்புக்கு அந்தக் கம்பெனியில் மட்டும்தான் வேலை கிடைக்கும் நாளை காலைப் பத்து மணிக்கு அவனுக்கு சென்னையில் இன்டர்வ்யூ. தனது ஊரில் இருந்து சென்னை செல்ல ஒரே ட்ரெயின் தான் உள்ளது. அதுவும் இன்று இரவு பத்து மணிக்குப் புறப்படுகிறது.... இதோ இன்னும் சில நிமிடங்களே உள்ளன வண்டி புறப்படுவதற்கு...... ரயில் நிலையத்தை அப்போதுதான் அடைந்தான் ரமேஷ்... ஆனால் அங்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது அவனுக்கு... தூக்கிவாரிப்போட்டது அவனுக்கு... அவனது பரமவிரோதிகளான சொக்கலிங்கமும் நடராஜனும் அவன் முன்பதிவு செய்திருந்த அதே கம்பார்ட்மெண்ட்டில் அவனது இருக்கைக்கு அருகில் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். ரமேஷுக்கு அவர்களை அறவே பிடிக்காது.... வெறுப்பென்றால் அவ்வளவு வெறுப்பு... இவர்களோடு அமர்ந்து நான் பயணம் செல்வதா?..... முடியவே முடியாது..... ஏறிய அதேவேகத்தில் ரயிலில் இருந்து இறங்கியும் விட்டான் ரமேஷ்!
தூர நின்று யோசித்தான் ரமேஷ். ஆனால் நாளை எனக்கு நடக்க இருப்பதோ அவ்வளவு முக்கியமான இன்டர்வ்யூ! இந்த வண்டியை விட்டு விட்டால் வேறு வழியே கிடையாது. இவ்வாய்ப்பை தவற விட்டால் எனது எதிர்காலமே கேள்விக்குறிதான்! எனக்கு வாழ்வா அல்லது சாவா என்பதைத் தீர்மானிப்பது நாளைய இன்டர்வ்யூ...... என்ன செய்ய? இவர்களுக்காக எனது எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குவதா?
இல்லை இல்லை எனக்கு என் வேலை முக்கியம்! நோக்கம் முக்கியம்!.எதிர்காலம் முக்கியம்!... வருவதை சந்திப்போம்!.... ஒரு தீர்மானத்தோடு கம்பார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்தான் ரமேஷ்!
இங்கு ரமேஷின் நிலையில் புத்தியுள்ள யாராக இருந்தாலும் அவ்வாறுதானே தீர்மானிப்பார்கள்! .....ஏன் இந்த உதாரணம் சொல்லப் படுகிறது தெரியுமா?
இன்று பல மாற்று மத அன்பர்கள் இஸ்லாம்தான் உண்மையான இறைமார்க்கம் என்பதை உணர்கிறார்கள்.
Ø இதில் மூடநம்பிக்கைகள் இல்லை.
Ø வீண் சடங்கு சம்பிரதாயங்கள் இல்லை.
Ø புரோகிதர்கள் இல்லை,
Ø மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்டுதல் இல்லை.
Ø தீண்டாமை இல்லை, சாதிக் கொடுமைகள் இல்லை .
Ø வழிபாட்டில் வேற்றுமை பாராட்டுதல் இல்லை
Ø பகுத்தறிவுக்கு ஒவ்வாத போதனைகள் இல்லை.
Ø பெற்றோரைப் புறக்கணித்தல், வரதட்சனை, பெண்சிசுக் கொலை, போன்ற வன்கொடுமைகள் இல்லை.
இன்னும் இவைபோன்ற எண்ணற்ற இஸ்லாத்தின் சிறப்புகளால் கவரப்பட்ட பலர், “எல்லாம் சரி, ஆனால் முஸ்லிம்கள் சிலரின் அல்லது பலரின் நடவடிக்கைகள் இஸ்லாத்திற்கு புறம்பாக இருக்கிறதே!” என்று கூறி இந்த இறைமார்க்கத்தைப் புறக்கணித்து நிற்கிறார்கள். இவர்கள் சிந்திப்பதற்காகத்தான் மேற்படி உதாரணம் சொல்லப்பட்டது. இப்படிப்பட்ட சகோதர சகோதரிகள் சிந்திக்க வேண்டிய விடயம் இதுதான்......
நாம் அனைவரும் ஒரே மனிதகுலத்தின் அல்லது குடும்பத்தின் அங்கத்தினர்களே.. நமது இறைவனும் ஒரே ஒருவனே. நாம் வாழும் இடமும் ஒன்றுதான்.. நாம் வாழும் காலகட்டமும் ஒன்றுதான். நமக்கு நேர்வழிகாட்டுவதற்காக இறைவன் அருளிய மார்க்கமும் ஒன்றாகத்தானே இருக்க முடியும்? நமக்கு மட்டுமல்ல, நம் மூதாதையர்களுக்கும் இறைவன் ஒரே மார்க்கத்தைத் தான் அருளியிருந்தான். அதுதான் இறைவனுக்குக் கீழ்படிதல் என்ற மார்க்கம். அதுவே அரபு மொழியில் இஸ்லாம் என்று இன்று அறியப்படுகிறது. இதைப் பின்பற்றினால் நாளை மறுமையில் நாம் சொர்க்கத்தை அடையலாம் இல்லையேல் நாம் சென்றடைவது நரகத்திற்குத்தான்!
ஆக, இன்று சொர்க்கம் செல்ல இஸ்லாம் என்ற ஒரு வாகனம்தான் எஞ்சியுள்ளது. இவ்வாகனத்தில் சில விரோதிகள் ஏறிவிட்டார்கள் என்ற காரணத்துக்காக உங்கள் நீண்ட எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்வீர்களா?
மறுமையோடு ஒப்பிடும்போது இவ்வுலக வாழ்க்கை என்பது கடல் நீரில் நம் விரலை முக்கி எடுத்தால் விரல் நுனியில் காணும் அரை சொட்டு நீரளவுதான் என்பது நபிகளாரின் கூற்று.. மறுமை என்பதோ முடிவில்லாதது. அங்கு நமது இருப்பிடம் ஒன்று சொர்கத்திலோ அல்லது நரகத்திலோதான் அமையும். மூன்றாவதாக ஒரு இருப்பிடம் கிடையாது. நாளைய நமது மறுமை இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்து செயல்பட வேண்டிய தேர்வுக் களம் இதுவே.
இவ்வுலகு என்பது ஒரு பரீட்சைக் கூடம் போன்றது. இங்கு நாம் காணும் யாவருமே பரீட்சைக்கு உட்படுத்தப்படுகிறோம். அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, அல்லாதவர்களாக இருந்தாலும் சரி, வெறும் முஸ்லிம் பெயர்தாங்கிகளாக இருந்தாலும் சரியே. தனது எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகிற ஒரு பரீட்சையை எழுதிக்கொண்டு இருக்கும் ஒரு பொறுப்புணர்வுள்ள மாணவன் தனது சக மாணவன் பரீட்சைக்கூடத்தில் அமர்ந்து கொண்டு சேட்டைகள் செய்துகொண்டும், வேடிக்கை பார்த்துக்கொண்டும் இருக்கிறான் என்பதற்காக தனது இலட்சியங்களை வீணடிக்க மாட்டான். வாய்ப்பு கிடைத்தால் சகமாணவனுக்கு நினைவூட்டலாம் அல்லது எச்சரிக்கலாம். பின்விளைவுகளை எடுத்துரைத்து அவனை திருத்த முயற்சிக்கலாம். ஆனால் தனது குறிக்கோளைத் தவற விடமாட்டான். அதுபோலத்தான் இவ்வுலகிலும் நாம் செயல்படவேண்டும்.
ஆக, நாம் ஒவ்வொருவரும் நமக்கு மோட்சம் கிடைக்க வேண்டும் என்று விரும்பினால் இறைவன் நமது காலட்டதிற்க்காக அனுப்பியுள்ள தூதர் மூலமாக அனுப்பபட்ட இந்த இஸ்லாம் என்ற மார்க்கத்தை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்பது தெளிவு. மாறாக முன்னோர்களின் வழி என்றும் முன்னாள் இறைத்தூதர்களின் வழி என்றெல்லாம் சொல்லி எதைப் பின்பற்றினாலும் மோட்சத்தை அடைய முடியாது. இறைவன் தனது திருமறையில் தெளிவாக எச்சரிப்பதைப் பாருங்கள்.
(AlQuran 3:19) நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான். (அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
நபிகள் நாயகம் வருவதற்குமுன் வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களைத்தான் இங்கு வேதக்காரர்கள் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
இறுதியாக இஸ்லாத்திற்குப் புறம்பாக பெயர்தாங்கி முஸ்லிம்களுக்கு சில வார்த்தைகள்.... நீங்கள் உங்களுக்கு இறைவன் அளித்த அருட்கொடையாம் இஸ்லாத்தின் அருமையை உணராது இன்னும் உங்கள் தவறான போக்கைத் தொடர்வீர்களானால் இறைவன் உங்களை தனது தண்டனைகள் மூலம் அழித்துவிட்டு உங்களின் இடத்தில் இஸ்லாத்தின் அருமைகளை உணர்நது உறுதியாகப் பின்பற்றும் மக்களை உங்கள் இடத்தில் குடியமர்த்துவான் என்று திருமறை எச்சரிக்கிறது.
(AlQuran47:38) ......எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள்.
(திருக்குர்ஆன் நற்செய்தி மலர் – மே இதழில் இருந்து....)