Tuesday, 26 October 2010

china Bus 'ஸ்ட்ரட்லிங் பஸ்' - special

போக்குவரத்து நெரிசல் என்பது வளர்ச்சியடைந்த நாடுகள் தற்போது எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாகும்.

வீதிப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் பயணிகள் மற்றும் வாகனங்களின் வசதி கருதியும் நவீன பயணிகள் பஸ் ஒன்றினை சீனா அடுத்த வருடமளவில் பரீட்சார்த்தமாக வெள்ளோட்டமிடவுள்ளது.

சீனாவின் தலைநகரான சனத்தொகை நெரிசல் மிக்க பீஜிங் நகரிலேயே இது பரீட்சிக்கப்படவுள்ளது.

மேற்படி பஸ்ஸின் கீழ்ப்பாகம் அகன்று விரிந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதற்கு கீழாகவுள்ள இடைவெளியில் கார்கள் மற்றும் 1.55 முதல் 1.6 மீற்றர் வரை உயரம் கொண்ட வாகனங்கள் பயணிக்க முடியும்.

இது 'ஸ்ட்ரட்லிங் பஸ்' என அழைக்கப்படுகின்றது. 

இந்நவீன பஸ், கடந்த மே மாதம் சீனாவில் இடம்பெற்ற சர்வதேச 'ஐ-டெக் எக்ஸ்போ' கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. 

சூரிய சக்தி மற்றும் மின்சாரத்தின் மூலம் இது இயங்குகின்றது. இதற்கான விசேட உபகரணங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. 

இதன் மேற்பாகத்தில் சுமார் 1200 முதல் 1400 பேர் வரை பயணிக்கலாம்.

மேலும் இதனுள் சூரிய ஒளி அதிகளவில் உட்புகுவதால் பயணிகள் தங்கள் மன உளைச்சலில் இருந்தும் விடுபட முடியுமென தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்தொன்று ஏற்படின் அதிலிருந்து தப்புவதற்காக விமானங்களில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறையே இதிலும் பின்பற்றப்படவுள்ளது.

பெரிய அளவிலான வாகனங்கள் இதன் கீழ் பகுதியினுள் நுழையாமல் தடுப்பதற்காக விசேட சமிக்ஞைகளும் பொருத்தப்பட்டுள்ளன. 

இது பாவனைக்கு வருமிடத்து, வீதி நெரிசல் பெருமளவில் குறையுமென சீன போக்குவரத்து அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.




AL Quran 6 : 1

Right Way - AL Quran

(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.  AL Quran 1 : 4
"நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான விழியாகும்."  AL Quran 3 : 51 
இவர்கள் யாவரையும் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தினான்; ஆதலால், இவர்களுடைய நேர்வழியையே நீரும் பின்பற்றுவீராக "இதற்காக நாம் உங்களிடம் எவ்வித பிரதிபலனையும் கேட்கவில்லை இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை" என்றுங் கூறுவீராக. AL Quran 6 : 90