ஒரு ஆணின் வாழ்க்கையில் "சாராயம்"தான் முக்கியம் என்றால், அவன் மூன்று விசியங்களுக்கு முக்கியம் இல்லாத ஆணாக மாறுகிறான்!
1, அன்பான மனைவியை ரசிக்க தெரியாத குருடனாக?
2, அழாகன குழந்தைகளின் பாசத்தை உனராத முரடனாக!
3, இச்சமுகத்தில் கௌரவமாக வாழ தகுதியற்ற மனிதனாக!
*மது அவன் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கிறது... ஆனால்? தண்டனையை இந்த சமுகம் அவன் மனைவியை பணத்திற்காக வேசியாக்கும், அல்லது விதவையாக்கும்...
இவன் பெற்ற பிள்ளைகளை இச்சமூகம் குடிகாரனுக்கு பிறந்தவன்தானே என்றும் ஏசும்...
*நாட்டில் நடக்கும் 99% குற்றத்திற்கு குடி பழக்கம்தான் முக்கிய காரணமாம்,
1)மது போதையில் வாகனம் ஓட்டி உயிர் பலியை ஏற்படுத்துதல்,
2)மது போதையில் கற்பழித்தல்,
3)மது போதையில் திருடுதல்,
4)மது போதையில் கொலை செய்தல்,
*குடி பழக்கம் உங்களுடைய ரகசியங்களை வெளிக்கொண்டு உங்களை அசிங்கப்படுத்திவிடும், அவமானப்படுத்திவிடும்,
*அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் உங்களுடைய வம்சத்தையே அழித்துவிடும்,
உங்களால் உங்கள் மனைவிக்கு உடலாலும். மனதாலும் எந்த பிரயோஜனமும் இல்லை,
உங்கனின் சொல்லிற்கு மதிப்பிற்காது.
கூட்டத்தில் உங்களை கண்டுகொள்ள மாட்டார்கள்,
உங்கள் பேச்சு எங்கும் எடுபடாது,
உங்களை கண்டு உங்கள் குடும்பத்தினரே அஞ்சிக்கொள்வர்,
குடி தான் வாழ்க்கை என்றால்?
*எதற்காக திருமணம் செய்துகொள்ள வேண்டும் ?
எதற்காக மனைவி வேண்டும் ?
எதற்காக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் ?
*காலம் கடந்து வெகு காலம் ஆச்சு தன்னுடைய இன்பம்தான் தனக்கு முக்கியம் என்று வாழும் சுயநல ஆண்களை எல்லாம் போடா பொட்ட கண்ணா என்று உதறியெறி பல பெண்கள் தற்போது துணிந்துவிட்டனர், செய்திகளாக நாம் பல கேட்டதும் உண்டு, நிஜமாக பார்த்ததும் உண்டு,
*தற்போது காலகட்டத்தில் பெண்களின் கண்ணீர் துடைக்க நிறைய ஆண்கள் வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை...
*கணவனிடத்தில் கிடைக்காத இன்பம் வேறொருவனிடம் கிடைக்குமே எனில் நிச்சயம் பெண்கள் தடம் மாறத்தான் செய்வார்கள்,
*ஏன் மதுவிற்கு "குடி" என்ற பெயர் வந்தது? தெரியுமா??
மது மட்டுமே உயிரையும், வாழ்க்கையையும், மகிழ்ச்சியையும் சேர்த்து குடிப்பதால்... அதாவது மகிழ்ச்சியில் தொடங்கி துன்பத்தில் முடிவதால்...
*இந்த 2022ம் நூற்றாண்டில் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு குடிகாரனிடம் வாழ எந்த பெண்ணிற்கும் ஆசையில்லை, விருப்பமும் இல்லை, இருந்தாலும் மானம், கௌரவம், கலாச்சாரம், என்று சொல்லி வளர்த்ததன் காரணமே... சில "தீர்க்கத்தரசிகள்" பிள்ளைகளுக்கு ஒரு அப்பன் வேண்டுமே என்ற கட்டாயத்தில்தான் வாழ்கின்றனர்...
காரணம் இச்சமூகம்...
நமது தாய்/தந்தையினர் வாழ்ந்த வாழ்க்கை முறையே...
அவர்களின் ஒவ்வொரு சொட்டு கண்ணீற்கும் எதிர் வினை உண்டு...
இறுதியில் நீங்கள் அவர்களிடமே சென்று தஞ்சமடைவீர்கள்...
காலம் கண்டிப்பாக அதை உங்களுக்கு உணர்த்திவிடும்.
#மது #வீட்டிற்கும் #உயிருக்கும் #எதிர்கால #தலைமுறையினருக்கும் #மிகப்பெரிய #தீங்கு.