Friday, 23 December 2022

நடிகைகளின் மனமாற்றம்

நடிகைகளின் மனமாற்றம்

முஸ்லிம் பெண்களின் தடுமாற்றம்

___________


வழிகேடுகளின் உச்சகட்டத்தை சந்தித்த பின் கடந்து வந்த பாதை தவறு என்று தாமதமாக உணர்ந்து தவ்பா எனும் பாவமன்னிப்பை தேடி மனம் திருந்தும் நடிகைகள் ஒரு புறம்


கட்டுப்பாடுகளை அடிமைத்தனமாக கருதி கண்ணிய வாழ்வை புறம் தள்ளி கழிசடை பாதைகளை எதிர் நோக்கும் முஸ்லிம் பெண்களோ ஒரு புறம்


வெளித்தோற்ற கவர்சிகளை ஆடம்பரங்களை இனிமையாக கருதி சீரியல்களை சினிமாக்களை நேசிக்கும் முஸ்லிம் பெண்கள்

மனம் திருந்தி வரும் நடிகைகளின் மறுவாழ்வை உற்று நோக்குங்கள்

அதுவே சினிமாவின் அலங்கோலத்தை தோலுரிக்கும் உங்கள் வாழ்வை செவ்வைபடுத்த கூடும்


தற்போதைய செய்தியில் முன்னனி கவர்சி நடிகை மும்தாஜ் அவர்கள் மனம் திருந்தி வருந்தியது ஓர் பாடம்


وَالَّذِيْنَ عَمِلُوا السَّيِّاٰتِ ثُمَّ تَابُوْا مِنْ بَعْدِهَا وَاٰمَنُوْۤا اِنَّ رَبَّكَ مِنْ بَعْدِهَا لَغَفُوْرٌ رَّحِيْمٌ‏


தீய செயல்கள் செய்தவர்கள் மனந்திருந்தி (பாவங்களிலிருந்து விலகி உண்மையாக) நம்பிக்கை கொண்டால்

நிச்சயமாக அதன்பின் உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும்

மிக்க கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்


(அல்குர்ஆன் : 7:153)

Saturday, 17 December 2022

இந்திய சட்டம்

1,  ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)

2,  நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை.  IPC-217

3,  நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம்.  CRPC 404

4,  அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166

5,  எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.

6,  சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம்.  Article 19(1) , CRPC 303,302(2)

7,  வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.

8,  இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ்
எவர் ஒருவரும் பார்வையிடலாம்.

9,  இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43

10,   ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.

11,  காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம்.  செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)

12,  கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 50 லிருந்து 100 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும்.  மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.

13,  தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற செலவு ரூபாய் 25 மட்டுமே. அதற்காக RIOffice-லும் VAO ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.

14,  காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)

15,  அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று Article 21(14)

16. புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் Article 32(8)

17,  பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம்.  

18,  பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.

19,  முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267

20,  அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403

21, குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.

22,  தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96

23,  பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை.  IPC-295

24,  மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295

25,  ஆள்மாராட்டம் செய்து ஏமாற்றுதல்.  3 ஆண்டு சிறை IPC-419

26,  ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. IPC-468.

27,  சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை IPC-484

28,  கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. IPC-494

29,  முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை.  IPC-495

30,  IPC-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட

இதில்
IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும்.
CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம் ஆகும்.

Wednesday, 26 October 2022

🐅 ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே..

🐅 ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே..


🐅26.09.2014 இல் டெல்லி உயிரியல் பூங்காவில் ஒரு வெண்மை நிற புலி இளைஞனை கொன்றது.


🐅கற்றலினால் ஆன பயன் என்ன?


🐅ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக் கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டேயிருக்கும் பொழுது அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வயாளர்கள் யாருக்கும் நம் கல்வி முறை நமக்கு கற்றுக்கொடுக்கவேயில்லையே..


🐅ஆனால் பார்வையாளர்கள் மேலிருந்து கல்லெறிந்த உடன்..அது சினம் கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது.


🐅பார்வையாளர்கள் விடவில்லை. தொடர்ந்து கல்லெறிகிறார்கள்..

கூச்சலிடுகிறார்கள்...


🐅அதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து அவனுடைய கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது.


🐅இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.


🐅காரணம்..அறிவின்மை..


🐅என்ன செய்வது என்கிற அறிவின்மை.


🐅மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால் நெருப்பிற்கு பயப்படும்.


🐅கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில் யாராவது ஒருவர், தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பு வைத்து, அதை அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால் புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும்.


🐅இந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல்..


🐅(a+b)2 =a2 + 2ab + b2


என்று கற்றுக் கொண்ட வெற்றுத் தேற்றத்தினால் எனக்கு என்ன பயன்?


🐅ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை..மிருகமோ தன்னிலும் பலத்த உருவம்..


🐅அது முதலையாக இருக்கலாம்..சிங்கமாக இருக்கலாம்.. அல்லது.. யானையாக இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால் எனக்கென்ன பயன் ????


🐅அந்த விலங்குகளின் கண்களை நம் கை முஷ்டியினால் பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தாக்கினால் அவை நிலை குலைந்து ஓடி விடும். நாமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.


🐅அல்லது சிறு மண் துகள்களை அள்ளி அதன் கண்களில் தூவினால் போதும் அவை அந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்லத்தான் முயற்சிக்கும்.


🐅இந்த அறிவைக்கூடக் கற்றுக்கொடுக்காமல்.. பட்டங்கள் என்ன.. சட்டங்கள் என்ன.. பல்கலைக் கழகங்கள் என்ன ???


🐅தென்னாப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் என்ன தோண்டியெடுக்கிறார்கள் என்பதை கற்றுக்கொடுப்பதை விட.. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள்.


🐅மற்றவர்களை மதிப்பது எப்படி..?


🐅மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி?


🐅சாலை விதிகள் என்ன?


🐅ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்?


🐅அடிப்படைச் சட்டங்கள் என்ன?


🐅நமக்கான உரிமைகள் என்ன?


🐅காவல் நிலையங்களை எப்படி அணுகுவது?


🐅விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது?


🐅விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது?


🐅மாரடைப்பு வந்தால் என்ன செய்வது?


🐅நோய்களை எவ்வாறு கண்டறிவது?


🐅எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை..பின் விளைவுகள் உள்ளவை?


🐅மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது?


🐅கணவனிடம் எப்படி நடந்து கொள்வது?


🐅மற்றவர்களை நேசிப்பது எப்படி?


🐅நேர்மையாய் இருப்பது எப்படி?


🐅இவை எதையுமே கற்றுக் கொடுக்காத கல்வியினால் ஆன பயன் தான் என்ன?


🐅இது எதையுமே தெரிந்து கொள்ளாமல்..


🐅இனித் தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பில்லாமல் துடி துடித்து மரித்துப் போன இந்திய இளைஞனே..


🐅ஒரு வெண் புலி, உன் வாழ்க்கையை இருளாக்கிவிட்டது


இந்த பதிவு ரொம்ப பிடித்தது பதிவு செய்து இருக்கேன்.



Tuesday, 4 October 2022

பெற்றோர்களை நேசியுங்கள்,

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ


பெற்றோர்களை நேசியுங்கள்,

அவர்களை கடைசி காலத்தில்

தனியே விட்டு விடாதீர்கள்.

ஏனெனில்,


''தாயின் காலடியில் #சொர்க்கம் இருக்கிறது.


தந்தையின் பொருத்தத்தில் இறைவனின் பொருத்தம் இருக்கிறது.'' (நபிமொழி)


ஒரு தாய்/தந்தை தன்னுடைய மகன்/மகளுக்கு எழுதும் மிகவும் உருக்கமான கடிதம்...


என் அன்பான மகனே/மகளே...


நான் முதுமை ஆன பின், நீ என்னை புரிந்து கொண்டும் கனிவாக இருப்பாய் என்று நம்புகிறேன்.


நான் தெரியாமல் கண்ணாடியை போட்டு உடைத்து விட்டாலோ, அல்லது எதையேனும் கீழேபோட்டு விட்டாலோ,

நான் பார்வை குறைவதால் தான் செய்கிறேன். நீ என்னை புரிந்து கொண்டு திட்ட மாட்டாய் என்று நினைகிறேன்.


முதியவர்கள் மிகவும் இளகிய மனம் படைத்தவர்கள் அதனால் திட்டும்போதும் கொஞ்சம் கனிவோடு திட்டு.


என்னுடைய கேட்கும் திறன் குறைத்து விட்டால் என்னால் நீ கூறுவதை கேட்க முடியாது, அப்பொழுது நீ என்னை செவிடன் என்று சொல்ல மாட்டாய் என்று நம்புகிறேன். நீ என்ன சொல் வந்தாயோ அதை திரும்ப சொல்! இல்லை என்றால் எழுதி தெரியபடுத்து.


என்னை மன்னித்து விடு, எனக்கு வயது ஆகிக்கொன்டே இருகின்றது.


என்னுடைய முழங்கால்கள் பலவீனமாகி கொண்டே இருகின்றது.

நான் எழுந்து நிற்பதற்கு நீ பொறுமையாக எனக்கு உதவி செய்வாய் என்று நம்புகிறேன். எப்படி நீ குழந்தையாக இருக்கும் பொழுது நான் உனக்கு உதவி செய்தேனோ அப்படி நீயும் செய்வாய் என்று நம்புகிறேன்.


நான் ஏதேனும் சொன்னதையே திரும்ப திரும்ப பழைய ரெகார்ட் போல் பேசி வந்தாலும்; நீ! நான் சொல்லுவதை கேட்பாய் என்றும் என்னை கேலி செய்ய மாட்டாய் என்றும் அல்லது சலிப்படைய மாட்டாய் என்றும் நம்புகிறேன்.


உனக்கு ஞாபகம் இருகின்றதா,

குழந்தையாக இருக்கும் பொழுது பலூன் வாங்கி தரும்வரை நீ அடம் பிடித்து பலூன் வாங்கியது...


என் மேல் இருந்து வரும் ஒரு விதமான நாற்றதிற்கும் என்னை மன்னிக்க வேண்டும். என்னை தினமும் குளிக்க சொல்லி வற்புறுத்தாதே ஏனென்றால் என்னுடைய உடம்பு மிகவும் பலவீனமாக இருகின்றது.


நான் ஏதேனும் புலம்பிக் கொண்டு இருந்தால் நீ பொறுமையாக இருப்பாய் என்று நம்புகிறேன். இது வயதானவர்கள் செய்யும் செயல். நீயும் வயதானவுடன் அதை தெரிந்து கொள்வாய்.


உன்னால் எனக்காக ஒரு ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கி என்னுடன் நட்புடன் பேசுவாயா? உனக்கு வேலை அதிகம் என்று தெரியும் இருத்தாலும் நான் சொல்லும் கதைகளை உன்னை கேட்குமாறு கேட்டு கொள்கிறேன் அதற்காக எனக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கு.


எப்பொழுது என்னுடைய நேரம் நெருங்குகிறதோ அப்பொழுது நான் படுத்த படுகையாக இருப்பேன்,

அப்பொழுது நீ என்னை கனிவோடு கவனிப்பாய் என்று நம்புகிறேன். தெரியாமல் நான் படுக்கையை நனைத்து விட்டால் என்னை மன்னித்துவிடு.


என்னுடைய கடைசி காலத்தில் நீ என்னை மிகவும் கவனமாகவும்,

அக்கறையோடும் பார்த்து கொள்வாய் என்று எனக்கு தெரியும், என்னுடைய நேரம் நெருங்கும் பொழுது நான் நீண்ட நாட்கள் உனக்கு தொல்லை தர மாட்டேன். நீ எனக்காக என்னுடன் கை கோர்த்து சாவை எதிர் கொள்ளும் மன தைரியத்தை தருவாய் என்று நம்புகிறேன்.


கவலைப் படாதே, இறைவனை நான் பார்க்கும் பொழுது அவனிடம் உன் மீது அருள் மழைப் பொழியச்சொல்கிறேன், ஏனென்றால் நீ உனது தாய் தந்தையை மிகவும் நேசித்தாய் என்று. நீ எங்களை மிகவும் கனிவோடு கவனித்ததற்கு மிக்க நன்றி..


என்றும் அன்புடன்,


அப்பா/அம்மா


நினைவு படுத்துகிறோம் .


பெற்றோர்களை நேசியுங்கள், அவர்களை கடைசி காலத்தில் தனியே விட்டு விடாதீர்கள்.


ஏனெனில்,


தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது.....



Friday, 26 August 2022

*_நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய; ஏன் - இந்தியர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில வரலாற்று உண்மைகள் ..._*

*_நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய; ஏன் - இந்தியர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில வரலாற்று உண்மைகள் ..._*


*"ஜெய் ஹிந்த்"* _என்ற மாபெரும் முழக்கம் கொண்ட இந்த வார்த்தையை உருவாக்கியவர்_ *1941ல் "ஆபித் ஹசன் சப்ரானி"* _எனும் இஸ்லாமியர் ..._


*"இங்குலாப் ஜிந்தாபாத்"* _எனும் சொல்லை உருவாக்கியவர்_ *"ஹஸ்ரத் மொஹானி"* _எனும் இஸ்லாமியர் ..._


*"மா தேரே வதன் பாரத் மாத்தா கி ஜெய்" எனும்* _மாபெரும் எழுச்சிமிகு வார்த்தையை முதன் முதலில் உச்சரித்தவர்_ *"அஸீமுல்லா கான்"* _எனும் இஸ்லாமியர் ..._


_மகாத்மா காந்தியின் பெயரில் சொல்லப்படும்_ *(QUIT INDIA) "குய்ட் இந்தியா"* _எனும் தலைப்பை உருவாக்கியவர் சுதந்திர போராட்ட வீரரும்,_ *1942ல்* _பம்பாய் மேயராகயிருந்த_ *"யூசுப் மெஹர் அலி"* _எனும் இஸ்லாமியர் ..._


*"சாரே ஜஹான்சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா"* _எனும் தேசப்பற்று மந்திரத்தை நமக்கு எழுதித்தந்தவர்_ *"முஹம்மது இக்பால்"* _எனும் இஸ்லாமியர் ..._


_சுதந்திர போராட்ட வீரர்களை உற்சாகத்தின் எல்லை வரை கொண்டு சென்ற பாடலை, இன்றும் கேட்கும்போது நம்மை இந்தியனென்று கர்வம் கொள்ளச்செய்யும்_ *"சர்பரோஷ் கி தமன்னா"* _என்கிற தேசபக்தி பாடலை_ *1921ல்* _எழுதியது உருது கவிஞர்_ *"பிஸ்மில் அஸ்மாதி"* _எனும் இஸ்லாமியர் ..._


_இந்திய முழுவதும் சுதந்திர போராட்டத்தில் வீர மரணமடைந்த சுதந்திர போராட்ட தியாகிகள் *95300* பேரின் பெயர்கள் *"இந்தியா கேட்டில்"* செதுக்கி வைக்கப்பட்டுள்ளது..._


*இஸ்லாமியர்கள் :* *_61,395 பேர்._*

*இந்துக்கள் :*

*_25,895 பேர்._*

*சீக்கியர்கள் :*

*_8,050 பேர்._*


*இனி சொல்லுங்கள் யாரிடம் தேசபற்றிற்கான சான்றிதழ் வாங்க வேண்டும் ?*



Sunday, 21 August 2022

பார்ப்பனர்கள் நல்லவர்களாம்.

பார்ப்பனர்கள் நல்லவர்களாம்.

சொல்வது யார்?

குஜராத் பாஜக எம்.எல்.ஏ.


பில்கிஸ் பானு பாலியல் வன்மத்தில் விடுதலையான 11 பேரை, விடுதலை செய்தது சரியா என ஆய்வு செய்யும் குழுவின் தலைவனாம் இவன்.

குற்றவாளிகள் 11 பேரும் பார்ப்பனர்கள் என்பதால், அவர்கள் நல்லவர்கள் என்கிறான்.


* மொகஞ்சதாரோ, ஹரப்பா அழிந்தது எப்படி?

அம்மக்கள் கட்டியிருந்த அணையை உடைத்து அழித்த பார்ப்பனர்களால் தானே?


* இமயமலையை ஒட்டி லிங்கத்தை வழிபட்ட இனக்குழு மக்களைக் கொன்று, அதன் தலைவன் சம்பரனை அரக்கன் என்று புராணத்தில் எழுதியது யார்?

பார்ப்பனர்கள் தானே?


* புத்த பிட்சுகளின் தலையை வெட்டியும், சமண முனிவர்களைக் கழுவில் ஏற்றிக் கொன்றது யார்?

பார்ப்பன உத்தரவு தானே?


* கி.மு. 184-151 தம் ஆட்சிக் காலத்தில் வடதிசையில் ஜலந்தர் வரை சென்று புத்த மடாலயங்களை அழித்து, ஒவ்வொரு புத்த துறவியின் தலைக்கு விலையாக 100 பொற்காசுகள் வீதம் தருவதாக அறிவித்த புஷ்யமித்ரன் யார்?

பார்ப்பனர் தானே?


* அரசனுக்கு இணையாக சத்திரத்தில் ஆசனம் போட்டு சோறு போடு என்று சொன்னதை நிராகரித்த, சூத்திர நந்த வம்ச ஆட்சியை வீழ்த்த சபதம் போட்டு, வீழ்த்துவதற்கு அலெக்சாண்டரை அழைத்தது யார்?

சாணக்யன் என்ற பார்ப்பான் தானே?


* ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?

ரவிதாசன் உள்ளிட்ட 4 பார்ப்பனர்கள் தானே?


* இடங்கை 96 சாதி, வலங்கை 96 சாதி எனப் பிரித்து, மோதல்களை நடத்தி, சோழர்கள் ஆட்சி முற்றிலும் வீழ்வதற்கு காரணமானவர்கள் யார்?

பார்ப்பனர்கள் தானே?


* திராவிடர்கள் வழிபட்ட கடவுள்களையெல்லாம், தனக்குள் உள்ளிழுத்து, மன்னர்களின் துணையோடு கருவறைக்குள் நுழைந்து, பெரும்பான்மை மக்களை கோவிலுக்கு வெளியே நிறுத்தியது யார்?

பார்ப்பனர்கள் தானே?


* இங்குள்ள மக்கள் வழிபட்ட தெய்வங்களையெல்லாம், இழிவான கதைகள் எழுதி, அதை புனித புராணங்கள் என்று நிலைநிறுத்தியது யார்?

பார்ப்பனர்கள் தானே?


* பார்ப்பன படையெடுப்புக்கு முன்பு, சமூகத்திற்கு அறம் உரைத்த (பறை+ஐயர்) பறையர்களை, அவர்கள் புத்தரின் போதனைகளைப் பின்பற்றியதால், சமூகத்தில் இழிவானவர்களாக ஆக்கி, அவ்விடத்தைக் கைப்பற்றியது யார்?

பார்ப்பனர்கள் தானே?


* பார்ப்பானுக்கு மூப்பு பறையர், கேட்பார் இல்லாமல் கீழ் சாதியானார் என்ற வழக்கு உருவானதற்கு காரணம் யார்?

பார்ப்பனர்கள் தானே?


* பார்ப்பனர்களை வேரறுத்த களப்பிரர் ஆட்சியை, இருண்ட ஆட்சி என்று சொன்னது யார்?

பார்ப்பனர்கள் தானே?


* சூத்திரர் மற்றும் பட்டியல் பிரிவினருக்கு, கல்வி வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என காங்கிரஸ் மாநாடுகளில் பெரியார் தீர்மானம் கொண்டு வந்த போதெல்லாம் அதை தடுத்து, பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறக் காரணமானவர்கள் யார்?

பார்ப்பனர்கள் தானே?


* பார்ப்பனர் அல்லாதோர் இயக்கம் என்ற ஒன்று உருவாகி, தமிழக ஆட்சியையே கைப்பற்ற காரணமானவர்கள் யார்?

பார்ப்பனர்கள் தானே?


* விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடாமல், வெள்ளையனிடம் மன்னிப்பு கேட்டு, வெள்ளையனிடம் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று, வெள்ளையனுக்கு ஆதரவாகப் படை நடத்தியது யார்?

சவர்க்கார் எனும் பார்ப்பனர் தானே?


* 1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்ட, மத்தியப் பிரதேச மாநிலம், பட்டேஸ்வர் கிராமத்து மக்களை, நீதிமன்றத்தில் காட்டிக் கொடுத்து, அந்த ஊரே அழியக் காரணமானது யார்?

அடல் பிஹாரி வாஜ்பாய் எனும் பார்ப்பனர் தானே?


* சுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் படுகொலையான, காந்தியை சுட்டுக் கொன்றது யார்?

நாதுராம் விநாயக் கோட்சே எனும் பார்ப்பான் தானே?


* சுதந்திர இந்தியாவின் முதல் ஊழலான முந்திரா ஊழலில் ஈடுபட்டு, பதவியை ராஜினாமா செய்தது யார்?

டி.டி. கிருஷ்ணமாச்சாரி எனும் பார்ப்பனர் தானே?


* கருவறையில் கசமுசாவில் ஈடுபடுவது யார்?

பார்ப்பனர்கள் தானே?


* பூஜை அறையில் "கரசேவை" நடத்தியது யார்?

கே.டி.ராகவன் எனும் பார்ப்பனர் தானே?


* சிலைகளைக் கடத்திவிட்டு,

சிலை குறைப்போர் எனப் பெயர் பெறுபவர்கள் யார்?

பார்ப்பனர்கள் தானே?


* மூளையே இல்லாமல் பேசிவிட்டு,

மூளை வலிமை சாஸ்தி எனப் புழுகுவது யார்?

பார்ப்பனர்கள் தானே?


* ஐம்பது வீடுகள் உள்ள ஒரு தெருவில், ஒரு வீட்டில் மட்டும் "இது பத்தினி வீடு" என்று பலகை மாட்டினால், பிற வீடுகளுக்கு என்ன பொருள்? அது போல் தான் பிராமணாள் கபே எனப் பெயர் வைப்பதும் என்றார் தந்தை பெரியார்.


இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியத் துணைக்கண்டம் சின்னா பின்னமாக கிடப்பதற்கு காரணம் யார்?

பார்ப்பனியம் தானே?


காலம் முழுவதும்

கொலைகளைச் செய்து கொண்டே

கொல்லாமை பேசிப் பயணப்படுகிறது பார்ப்பனியம். அதன் அடிவடிருகளின் பேச்சுகள் இப்படித்தான் இருக்கும்.



Sunday, 7 August 2022

தாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு

தாய் மகனுக்கு
எழுதிய டைரி குறிப்பு

தலைக்கு மேல் /*
நான் தூக்கி கொஞ்சிய /*
என் தங்க மகன்/*
என் தலைக்கு மேல் /*
வளர்ந்து நிற்கிறான் /*
ஒரு பயம் எனக்கு /*
எப்போதாவது ஒருநாள் /*
என் விசயத்தில் தலையிடாதே /*
என்று சொல்லிவிடுவானோ என்று /*
மகனே மறந்தும்/*
அப்படி சொல்லிவிடாதே /*
மரணித்து போய்விடுவேன் /*
சின்ன வயதில்/*
நீ அடிக்கடி கேள்விகேட்ப்பாய் /*
நான் சலிக்காமல் பதில் சொல்வேன் /*
என் வயதான காலத்தில்/*
நானும் உன்னிடம் குழந்தை போல்/*
வினா எழுப்பக்கூடும் /*
கத்தாதே வாயை மூடு /*
என்று சொல்லிவிடாதே /*
வலி தாங்க முடியாத பாவி நான் /*
வீடெல்லாம் நீ இறைத்து வைத்த /*
சோற்றுப் பருக்கையை /*
என் விரல்களால் கூட்டி அள்ளுவேன்
என் முதிர் வயதில் /*
என் வாய்க்கொண்டு செல்லும்/*
உணவு தட்டி தரையில் விழக்கூடும் /*
தவறியும் என்னை திட்டாதே /*
தாங்க முடியாது என்னால் /*
என் சிறுநீர் பை /*
பலம் இழந்திருக்கக்கூடும் /*
சில இடங்களில் /*
சிறுநீர் சிந்தியிருக்க கூடும் /*
இச்.......சீ என்று முகம் சுழிக்காதே /*
என் முந்தானையில் /*
உன் சிறுநீர் வாசம் /*
இன்னும் மறையவேயில்லை/*
மயானம் நடந்து போக/*
திராணி இருக்கும்போதே/*
நான் இறந்துவிடவேண்டும் /*
மறந்தும் முதியோர் இல்லத்தில் /*
என்னை மூழ்கடித்துவிடாதே /*
ஒரு வருடம் /*
உனக்கு ரத்ததானம் செய்தவள் நான்
என் ரத்தத்தை/*
பாலாக்கி பருக செய்தவள் நான்/*
பரதேசியாய்
என்னை பரிதவிக்க விட்டுவிடாதே /*
நான் இறப்பதற்குள் /*
ஒரு முறையாவது /*
உன் மடியில் என்னை உறங்க வை /*
என் உயிர் பிரியும் நேரம் /*
நீ என் பக்கத்தில் இரு /*
கரம் கூப்பி கேட்கிறேன் /
***_இதை நான் எழுதுவது ஏன் தெரியுமா ?
இதை படித்து என் எண்ணம் அறிவாய் /
என்னை அறிவாய்/
என்னை நேசிப்பாய் /
என்ற நம்பிக்கையில் அல்ல*
ஒவ்வொரு தாயின்/*
உணர்வும் இதுதான்_ /***
என்பதை நீ உணர வேண்டும் /*
பெண்மையை நீ மதிக்க வேண்டும்/*
இதை படித்து நீ அழுவாய் /*
என்று எனக்குத் தெரியும் /*
அழாதே பெண்மையை மதி /*
அதுபோதும் நன்றி மகனே/*

கணவன்

#கணவன் 😢😢😢

கணவன் இறந்த பின் பெண்கள்
எப்படியோ தான் பெற்ற மக்களை
அனுசரித்து வாழ்ந்து விடுகின்றனர்.
ஆனால் மனைவி போன பின் கணவன்
படும் துயர் இருக்கிறதே

* 😴😴😴கொடுமை 😴😴😴*

தானாகவே காப்பி கூட போடத்
தெரியாத கணவன், தண்ணீரைக்
கூடத் தானே மொண்டு குடிக்காத
கணவன் மனைவியின் மறைவுக்குப்
பின் ஏனென்று கேட்க ஆளில்லால்
போகிறான்.

ஒரு ஆணுக்கு நன்றாகவே சமைக்கத்
தெரிந்தாலும் கூட மருமகளோ, மகளோ
சமைலறையில் ஆளும் போது அங்கே
இந்த ஆணால் தன்னிச்சையாக
நுழைய முடியாது.

வேண்டுவனவற்றை தானே சமைத்துக்
கொள்ளவோ எடுத்துக் கொள்ளவோ
கூசுகிறார்கள்.

என்ன கொடுத்தார்களோ எப்போது
கொடுத்தார்களோ கொடுத்ததை
கொடுத்த போது சாப்பிட்டுக்
கொள்ளணும்.

ரெண்டாவது காபி கூட கேட்க
முடியாது.

தலைவலியில் ஆரம்பித்து எப்பேர்ப்பப்ட்ட
சுகக்கேடு வந்தாலும் ஆதரவாகப்
பேசக் கூட ஆளிருக்காது.

இதெல்லாம் என் உறவுக்குள்ளே, நட்பு
வட்டத்திற்குள்ளே கண்ட உண்மை.
துளியும் அதிகப்படியில்லை.

என் கணவர் காலை எட்டரை மணிப் போல
சும்மா கிச்சனில் வந்து எதானும் பேச
ஆரம்பித்தால் காபி வேணும்னு அர்த்தம்.
காபி குடித்தால் காலை உணவின் அளவு
அவருக்குக் குறைவதால் கொடுக்க
யோசிப்பார்கள்.

இப்போதெல்லாம் காலையில் என்
கணவர் கேட்காமலேயே ரெண்டாவது
காபி கொடுத்துடுவேன்.

எனக்குப் பின் அவருக்கு யார்
கொடுப்பாங்க?

இந்த நினைவு வந்தால் மனசு ரொம்ப
பாரமாகிடுது.

மனைவி இல்லாத கணவன் உயிரற்ற
உடல் போலே!!

சகோதரிகளே!!
யாருக்கு விதி எப்போன்னு தெரியாது!
உங்கள் கணவர் உங்களுக்குப் பின்
வாயில்லாப் பூச்சிதான்!

முடிந்தவரை கணவனிடம்
அனுசரணையாக இருங்கள்!!

ஒரு குடும்பத்தலைவியின் ஆதங்கம்.

Monday, 11 July 2022

மெக்காவின் பெரிய மசூதியைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் - அல் ஹராம்

மெக்காவின் பெரிய மசூதியைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் - அல் ஹராம்

100 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்ட பூமியில் உள்ள மிக விலையுயர்ந்த கட்டிடங்களின் பட்டியலில் மெக்காவின் கிராண்ட் மசூதி முதலிடத்தில் உள்ளது.

அளவு: ஒரு மில்லியன் (1,000,000) சதுர மீட்டர்
திறன்: இரண்டு (2) மில்லியன் மக்களுக்கு இடமளிக்க முடியும்
ஆண்டுக்கு இருபது (20) மில்லியன் பார்வையாளர்களைப் பெறுகிறது
இருபத்தி நான்கு (24) மணிநேரம் திறந்திருக்கும்.
இது 1400 ஆண்டுகளுக்கும் மேலாக முழுமையாக மூடப்படவில்லை
1800 துப்புரவு பணியாளர்கள் உள்ளனர்
40 எலக்ட்ரிக் சானிட்டரி கிளீனர் கார்கள் உள்ளன
திறந்தவெளி முற்றங்களை சுத்தம் செய்ய 60 மின்சார சானிட்டரி இயந்திரங்கள் உள்ளன
வளாகம் முழுவதும் 2000 சானிட்டரி தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன
தரையானது 40000 கம்பளங்களால் மூடப்பட்டுள்ளது (ஜித்தாவிற்கும் மக்காவிற்கும் இடையிலான தூரத்தை விட நீளமானது(79 கிமீ))

13000 கழிவறைகள், தினசரி நான்கு(4) முறை/6 மணிநேரம் சுத்தம் செய்யப்படுகிறது
25000 நீர் விநியோகிகள் (உலகின் மிகப்பெரிய நீர் விநியோக அமைப்புகளில் ஒன்று)
தினமும் 100 சீரற்ற குடிநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன
ஜம்ஜாம் கிணற்றில் இருந்து அதிகப்படியான நீர் 1,700,000 (1.7 மில்லியன்), தண்ணீர் பாட்டில்கள் (10 லிட்டர் கொள்ளளவு) கொள்ளளவு கொண்ட சேமிப்பு தொட்டியில் சேமிக்கப்படுகிறது.
ஹரமைன் ஓதுதல் சேவைகள்: புனித குர்ஆன் ஓதுதல்; 24/7; குர்ஆனின் அனைத்து பத்து (10) அங்கீகரிக்கப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி ஓதுதல்; 180 நாடுகளில் 500,000 (அரை மில்லியன்) எபிசோடுகள் மூன்று (3) ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வைப்பு பெட்டிகள் (தனிப்பட்ட பொருட்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக)
மசூதிக்குள் நூற்றுக்கணக்கான குளிரூட்டும் அலகுகள் (குளிர்ச்சிக்காக) சிதறிக்கிடக்கின்றன.
மசூதியின் தளம் ஒளி மற்றும் வெப்பத்தை பிரதிபலிக்கிறது, இதனால் வளாகத்திற்குள் வெப்ப ஒழுங்குமுறை அதிகரிக்கிறது.
மசூதியின் எந்தப் பகுதியின் இருப்பிடத்தையும் காட்டக்கூடிய மின்னணு சுற்றுலா வழிகாட்டி பயன்பாடு.

விரிவான மற்றும் மிகவும் திறமையான ஆடியோ அமைப்பு:
கிராண்ட் மசூதியில் உள்ள ஒலி அமைப்பு உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் விரிவான ஒலி அமைப்புகளில் ஒன்றாகும்.
ஆடியோ அமைப்பின் பிழையின் விளிம்பு: 0%
6000 ஒலிபெருக்கிகள்
நான்கு (4) வெவ்வேறு ஆடியோ அமைப்புகள்
ஐம்பது(50) ஒலி-பொறியியல் ஊழியர்கள்
குரானின் பிரதிகள் 65 வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை பிரசங்கமும் ஐந்து (5) வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு

ஊனமுற்றோர் சேவைகள்/வசதிகள்

10,000 சாதாரண சக்கர நாற்காலிகள் இலவசமாக பயன்படுத்தப்படுகின்றன
400 மின்னணு வழிகாட்டி சக்கர நாற்காலிகள் உள்ளன
தானியங்கி சக்கர நாற்காலிகள்
(2-சக்கரங்கள் மற்றும் 3-சக்கரங்கள்)

ரமலான் சிறப்பு சேவைகள்

ரமலான் மாதத்தில் நோன்பு திறப்பதற்கு 4 மில்லியன் இலவச உணவு
ரமலான் மாதத்தில் மசூதி வளாகத்திற்குள் தினமும் 5,000,000 பேரீச்சம்பழத் துண்டுகள் (விதைகள் அகற்றப்பட்டன) விநியோகிக்கப்படுகின்றன.
நோன்பு துறந்த பிறகு, மக்ரிப் தொழுகையை (ஸலாஹ்) நிறைவேற்றுவதற்கான இடத்தை சுத்தம் செய்வதற்காக உணவுப் பொருட்கள் மற்றும் பாத்திரங்களை அகற்றுவது இரண்டு (2) நிமிடங்களில் நிறைவேற்றப்படுகிறது.
சுபஹானல்லாஹ Jobs Bahrain jabs by PHOENX MAN POWER AGENCY MINAR education study worad Abroad Achieve your Dr eam Rmd MIANAR EDUCATIONAL CONSULTANT STUDY MBBS UZBEKISTAN ok thanks 9486573014


A.s.ibrahim
0555814268

Good news